Thursday, August 16, 2012

தஞ்சை தலையாட்டி பொம்மை: எப்படி தயார் ஆகுது - பேட்டி


 ஞ்சை பல விஷயங்களுக்கும் புகழ் பெற்றது. அதில் மறக்க முடியாத, அனைவரும் அறிந்த ஒன்று - தஞ்சை தலையாட்டி பொம்மை !

தஞ்சையில் பெரிய கோவிலுக்கு வெளியிலும் பேருந்து நிலையம் அருகே சில கடைகளிலும் இத்தகைய தலையாட்டி பொம்மை கிடைக்கும்.

இந்த பொம்மையில் தான் எத்தனை எத்தனை வகை ! பல முறை கீழே தள்ளினாலும், எழுந்து கொள்கிறது ஒரு பொம்மை. கழுத்துக்கு மேலே, தலையை மட்டும் காற்றில் ஆட்டியவாறு நடனம் புரிகிறது இன்னொரு பொம்மை. வெவ்வேறு வண்ணங்களில், வடிவங்களில் கண்ணை கவர்கின்றன இந்த பொம்மைகள் !

பெரிய கோவிலுக்கு அருகே தலையாட்டி பொம்மை விற்கும் பெரியவருடன் பேசும்போது அவர் தலையாட்டி பொம்மை குறித்த சில தகவல்களை கூறினார். அவர் கூறியது இதோ:

தலையாட்டி பொம்மை தஞ்சைக்கு அருகே உள்ள மாரியம்மன் கோவில் என்கிற ஊரில் தான் தயாரிக்கப்படுகிறது. பரம்பரை பரம்பரையாக சில குடும்பங்கள் மட்டுமே இந்த தொழிலில் ஈடுபடுகின்றன.

இந்த பொம்மை மூன்று வித சைஸ்களில் வருகிறது. சைஸை பொறுத்து விலை ரூ 30, ரூ 60. அல்லது ரூ 80 ரூபாய்க்கு கிடைக்கிறது (வெளி நாட்டு சுற்றலா பயணிகளுக்கு ரேட்டே வேறு !)

பொம்மையின் கீழ் பாகம் சற்று வெயிட்டான களிமண்ணால் செய்ய பட்டது. மேற்பாகம் காகித கூழால் ஆனதால், எடை மிக குறைவு. இதனால் தான் மேல்பாகம் வளைந்து கீழே விழுந்தாலும், கீழே உள்ள அதிக எடை காரணமாக உடன் மேலே வந்து விடுகிறது.

இப்படி காகிதம் மற்றும் களிமண்ணால் பொம்மையை செய்தபின் அழகான வண்ணம் பூசுகின்றனர். வெவ்வேறு நிறங்களில் தயாராகி தஞ்சை வந்து சேர்கிறது பொம்மைகள்.

எவ்வளவோ சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தஞ்சை கோயில் வெளியில், இந்த தலை ஆட்டி பொம்மைகளுடன் பல வருடங்களாக தன் வாழ்க்கையை கழிப்பதாக சொன்னார் பெரியவர்.

கொலு நேரத்தில் மட்டுமே இந்த பொம்மைகள் நிறைய விற்பனை ஆகும் என்றும் மற்ற நேரங்களில் இதை விரும்பி வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் வருந்தினார் பெரியவர்.

நிறைய பேர் பொம்மையை பார்த்து விட்டு விலை கேட்டு விட்டு சென்று விடுகின்றனர். பொம்மையை பார்ப்போரில், வாங்குவோர் குறைந்த சதவீதமே ! இருப்பினும் தஞ்சை தலை ஆட்டி பொம்மையை மிக விரும்பி, ரசித்து பார்த்து வாங்கி போவோரும் ஒரு சிலர் இருக்கவே செய்கிறார்கள்.

இந்த பெரியவர் நம்முடன் பேசியதை இந்த வீடியோவில் காணலாம் :
தலையாட்டி பொம்மை என்றாலே ஆணைத் தான் சொல்வதாக பொதுவாக நினைப்போம். மனைவி சொல்லை கேட்கும் கணவர்களை தலை ஆட்டி பொம்மை என சொல்வது வழக்கம் ! (எல்லா வீட்டிலும் இதே கதை தானே?) நிஜத்தில் பெண் தலையாட்டி பொம்மையும் கூட இருக்கிறது ! பெரியவரின் நினைவாக ஆண் மற்றும் பெண் தலையாட்டி பொம்மை வாங்கி கொண்டு விடை பெற்றோம்.

****
கட்டுரை தமிழ் பேப்பர் ஜூலை 30, 2012 இதழில் வெளியானது

48 comments:

 1. விளக்கமான பதிவிற்கும், பதிவாக்கித் தந்தமைக்கும் நன்றி...(TM 2)

  ReplyDelete
 2. இதே மாதிரி பொம்மை ப்ளாஸ்டிக்கிலே செஞ்சது மகள் குழந்தையா இருந்தபோது சிங்கையில் வாங்கினோம்.

  கீழே விழுந்து எழுந்து உட்காரும்போது மணிகள் குலுங்கும் சப்தம் கேக்கும்.

  அந்தத் தலையாட்டும் பொம்மைகள் கொள்ளை அழகு.

  நல்லவேலை ஞாபகப்படுத்தினீங்க..... இந்த வருச கொலுக் கலெக்‌ஷனை ஆரம்பிக்கணும்:-))))

  பெரியவருக்கு எங்கள் பாராட்டுகள்.

  ReplyDelete
 3. // மனைவி சொல்லை கேட்கும் கணவர்களை தலை ஆட்டி பொம்மை என சொல்வது வழக்கம் //
  ஆமாம்...ஆமாம் ...

  ReplyDelete
 4. நல்ல பதிவு.

  மேலே முதல் படத்தில் உள்ளது தான் ஆரம்ப காலங்களில் செய்யப்பட்ட களிமண் உருண்டை பொம்மைகள்.

  தற்பொழுது மூன்று அல்லது நான்கு பாகங்கள் கொண்ட கம்பியில் பொறுத்தி ஆடும் பொம்மைகள் (நடன மாந்தர்கள்) வகையிலும் வந்துவிட்டன.

  ReplyDelete
 5. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் பற்றிய தகவல்கள் மற்றும் வீடியோ நன்று.

  ReplyDelete
 6. //(வெளி நாட்டு சுற்றலா பயணிகளுக்கு ரேட்டே வேறு !)//

  சாதாரண மக்களை விடுங்கள், மாமல்லபுரத்தில் வெளிநாட்டினருக்கு தனிக் கட்டணம் வசூலிக்கப்படுவது அறிந்த பொழுதுதான், அரசும் இப்படியா? என்று அதிர்ந்தேன்.

  ReplyDelete
 7. தலையாட்டி பொம்மையை என் தங்கை வீட்டீல் பார்த்துள்ளேன்! சிறப்பான தகவல்கள்! சிறப்பான பகிர்வு!

  இன்று என் தளத்தில்
  பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
  நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
  http://thalirssb.blogspot.in/2012/08/17.html

  ReplyDelete
 8. தலையாட்டி பொம்மை பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு உங்களின் பகிர்வு!

  ReplyDelete
 9. இப்போ டில்லியில் கூட ஒரு தலையாட்டி பொம்மை தயாரித்திருக்கிறார்களே.
  அதற்கு பெயர் ஜனாதிபதி.

  சகாதேவன்

  ReplyDelete
 10. //இப்போ டில்லியில் கூட ஒரு தலையாட்டி பொம்மை தயாரித்திருக்கிறார்களே.
  அதற்கு பெயர் ஜனாதிபதி.//

  குடியரசுத் தலைவர் - Chronic தலையாட்டி பொம்மை.
  ஆனால, கடந்த 7-8 வருடங்களாக பிரதமரே தலையாட்டி பொம்மையாகத் தானே இருக்கிறார். ஆக இது relatively recent phenomenon.

  ReplyDelete
 11. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 12. போன வருஷம் நான் தஞ்சை பெரிய கோவில் போய் இருந்த போது மண்ணால் ஆன பொம்மைகள் அதிகம் இல்லை.எல்லாம் பிளாஸ்டிக் பொம்மைகளாக இருந்தது.ஆனால் அடிப்புறத்தில் கொஞ்சம் களிமண் வைத்து இருந்தனர். இப்போ லேட்டஸ்ட் டெக்னாலஜி ..மாற்று கண்டுபிடிப்பு..அதனால் பிளாஸ்டிக்...இதனால் பாதிக்கபட்டது நம்ம வருங்காலம்..அப்புறம் இந்த தொழிலையே நம்பிகிட்டு இருக்கிற தொழிலாளிகள்...

  ReplyDelete
 13. நடனமாடும் தலையாட்டி பொம்மை இந்தியத் தயாரிப்புத்தான். சிறுவயதிலிருந்து எனது பிறந்த வீட்டில் இருக்கின்றது.

  சிறுகைத்தொழில் செய்பவர்களின் பொருட்களை வாங்கி அவர்களை ஊக்கப்படுத்துவது நல்லது.

  ReplyDelete
 14. தஞ்சை என்றால் உடன் ஞாபகம் வருவது
  தலையாட்டி பொம்மைதான்
  அத்ன் செய்முறை குறித்து அறிய
  மிக்க மகிழ்ச்சி கொண்டேன்
  பயனுள்ள அருமையான பதிவனைத் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 15. Anonymous7:25:00 PM

  >>மனைவி சொல்லை கேட்கும் கணவர்களை தலை ஆட்டி பொம்மை என சொல்வது வழக்கம் ! (எல்லா வீட்டிலும் இதே கதை தானே?) நிஜத்தில் பெண் தலையாட்டி பொம்மையும் கூட இருக்கிறது !

  சூப்பர்... (த.ம.9)

  நிறைய புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது... நன்றி..

  ReplyDelete
 16. //மனைவி சொல்லை கேட்கும் கணவர்களை தலை ஆட்டி பொம்மை என சொல்வது வழக்கம் ! //

  மனைவி சொல்லை கேட்காதவர்கள் இருக்கிறார்களா என்ன?

  பட், உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு :)

  ReplyDelete
 17. எங்கள் சிறுபிராயத்தில் வந்த பொம்மைகள் கல்லுக் குண்டாக வர்ணம் போகாமல் நெடு நாட்கள் இருக்கும்.
  இப்பொழுது எங்க பேரனுக்கு வாங்கும்போது அவ்வளவு கனம் இல்லை.
  பொம்மையாரும் சிறுத்துவிட்டார்.
  விடாமுயற்சியுடன் இந்தத் தொழிலில் இருக்கும் பெரியவருக்கு வாழ்த்துகள். இதற்காக மெனக்கெட்டு பேட்டியும் எடுத்துப் பதிவு செய்த உங்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 18. தனபாலன் : நன்றி சார்

  ReplyDelete
 19. துளசி மேடம்: நியூசியிலும் கொலு வைக்கிறீங்களா? செம சூப்பர் மேடம் !

  ReplyDelete
 20. ராஜசேகர்: வக்கீல்கள் கூட வீட்டில் இப்படி தான் இருக்கோம் :)

  ReplyDelete
 21. சீனி //தற்பொழுது மூன்று அல்லது நான்கு பாகங்கள் கொண்ட கம்பியில் பொறுத்தி ஆடும் பொம்மைகள் (நடன மாந்தர்கள்) வகையிலும் வந்துவிட்டன. //

  ஆம். வேறு சில படங்களில் அந்த வகை பொம்மைகள் உள்ளன

  ReplyDelete
 22. அமைதி அப்பா: வெளிநாட்டு பயணிகளுக்கு பல இடங்களில் நுழைவு டிக்கெட் அதிகம் தான். ஆனால் அவர்கள் கரன்சியில் பார்த்தால் அது பெரிய பணமாக அவர்களுக்கு தெரியாது என நினைக்கிறேன்

  ReplyDelete

 23. சகாதேவன்: ஹா ஹா எப்பவும் அந்த பதவி அப்படித்தானே?

  ReplyDelete
 24. இராஜராஜேஸ்வரி: நன்றி மேடம்

  ReplyDelete

 25. கோவை நேரம் : நன்றி நண்பா இந்த படம் / வீடியோ எடுத்து சில மாதம் தான் ஆகுது. நான் அங்கிருந்த இரு கடைகளில் ஏதும் பிளாஸ்டிக் பொம்மை பார்க்கலை நண்பா

  ReplyDelete
 26. ரமணி சார்: மிக மகிழ்ச்சி நன்றி

  ReplyDelete
 27. balhanuman said...

  >>மனைவி சொல்லை கேட்கும் கணவர்களை தலை ஆட்டி பொம்மை என சொல்வது வழக்கம் ! (எல்லா வீட்டிலும் இதே கதை தானே?)

  நிறைய புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது... நன்றி..

  சார் ; அய்யாசாமி எப்பவும் இப்படித்தான். அதில் புது தகவல் ஏதும் இல்லையே :)

  ReplyDelete
 28. மாதேவி
  //சிறுகைத்தொழில் செய்பவர்களின் பொருட்களை வாங்கி அவர்களை ஊக்கப்படுத்துவது நல்லது.//

  அருமையா சொன்னீங்க நன்றி !

  ReplyDelete
 29. ர‌கு said...

  மனைவி சொல்லை கேட்காதவர்கள் இருக்கிறார்களா என்ன?

  ********
  வாங்க சார். வாங்க. சீக்கிரமே Welcome to the club :)

  ReplyDelete
 30. ஸ்ரீராம் ஆமாங்கோ

  ReplyDelete
 31. வல்லியம்மா: உங்கள் வார்த்தைகள் மிக மகிழ்ச்சி தந்தது

  ReplyDelete
 32. எங்கூட்லயும் நடனமாடும் பெண் இருக்காள், தவறாமல் கொலுவுக்கு வைப்பதுண்டு.

  ReplyDelete
 33. பெண் தலையாட்டி பொம்மையில் அபிநயம் பிடிக்கும் நாட்டியப் பெண் பார்த்திருக்கிறேன். உட்கார்ந்து திருவை சுற்றுகிற பெண்மணி பொம்மை இப்போதுதான் அறிமுகம். அறியாத பல தகவல்கள். தொழில் மேலான நேசத்தால் சிரமங்களுக்கு நடுவிலும் விடாமல் தொடருகிறவர்கள் வரிசையில் பெரியவர் பாராட்டுக்குரியவர். நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் பாரம்பரிய மிகுந்த தஞ்சாவூர் பெண்மையின் சிறப்பம்சங்களை விளக்கியதற்கு நன்றி

   Delete
 34. //துளசி மேடம்: நியூசியிலும் கொலு வைக்கிறீங்களா? செம சூப்பர் மேடம் ! //

  பிரமாதமா இல்லைன்னாலும் தெரிஞ்ச அளவில் சின்னதா ஒரு கொலு வைப்பதுண்டு.
  பதிவரானபின் வைத்த கொலுக்களின் வரிசை இது. நேரம் இருந்தால் பார்க்கவும்.

  http://thulasidhalam.blogspot.com/2005/10/blog-post_05.html

  http://thulasidhalam.blogspot.com/2006/09/blog-post_22.html

  http://thulasidhalam.blogspot.com/2007/10/blog-post_12.html

  http://thulasidhalam.blogspot.com/2008/09/blog-post_5623.html

  http://thulasidhalam.blogspot.com/2009/09/blog-post_20.html

  http://thulasidhalam.blogspot.com/2010/10/blog-post_08.html

  http://thulasidhalam.blogspot.com/2011/09/blog-post_28.html


  ReplyDelete
 35. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் போலவே, மிகவும் அழகான பதிவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 36. //வெளிநாட்டு பயணிகளுக்கு பல இடங்களில் நுழைவு டிக்கெட் அதிகம் தான். ஆனால் அவர்கள் கரன்சியில் பார்த்தால் அது பெரிய பணமாக அவர்களுக்கு தெரியாது என நினைக்கிறேன்//

  வெளிநாட்டினர் என்றால், அரசு முதல் ஆட்டோக்காரர் வரை அதிகப்படியாக வசூலிக்கிறார்கள் என்பதே என் கருத்து! சுற்றுலாத்துறையினர், மற்றவர்களைக குறிப்பாக ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்களை குற்றம் சொல்வதைத்தான் அப்படி சுட்டிக்காட்டிருந்தேன்.

  ReplyDelete
 37. அமைதி சாரல்: அப்படியா ? நன்றி

  ReplyDelete

 38. ராமலக்ஷ்மி said...


  தொழில் மேலான நேசத்தால் சிரமங்களுக்கு நடுவிலும் விடாமல் தொடருகிறவர்கள் வரிசையில் பெரியவர் பாராட்டுக்குரியவர்.
  ***
  உண்மை தான் மேடம் நன்றி

  ReplyDelete
 39. துளசி மேடம்: பார்த்தேன் வியந்தேன்

  ReplyDelete

 40. வை. கோ சார் மிக நன்றி

  ReplyDelete
 41. நன்றி அமைதி அப்பா

  ReplyDelete
 42. நல்ல பகிர்வு.

  தில்லியில் ஒரு டால்ஸ் மியூசியம் இருக்கு. அங்கே தலையாட்டி பொம்மைகளுக்கென்றே ஒரு பிரிவு இருக்கு மோகன்....

  ReplyDelete
 43. சொல்றதுக்கெல்லாம் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் போலத்தான் தலையாட்டுவார்கள் என்பார்கள். ஆனால், இந்த பொம்மையை எப்படி கீழே தள்ளினாலும் எழுந்து நிற்கும். அதுபோல வாழ்க்கையில எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், நாமும் எழுந்து நிற்க வேண்டும்” என்பதை சொல்லாமல் உணர்த்துகிறது.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...