சமீபத்தில் டில்லி சென்றபோது ஒரு நாள் செங்கோட்டை வாசல் வரை சென்று உள்ளே போகாமல் திரும்பும் நிலை !!
மணாலி சென்று விட்டு திரும்ப ஊருக்கு (சென்னை)வரும் போது, விமானம் ஏறும் முன் நான்கைந்து மணி நேரம் கிடைத்தது. இந்த நேரத்தில் தான் நாங்கள் செங்கோட்டை மற்றும் கண்ணாட் பிளேஸ் பார்த்தோம்.
செங்கோட்டை பழைய டில்லியில் உள்ளது. இங்குள்ள மெட்ரோ ரயில் ஸ்டேஷனில் இறங்கி வெளியே வந்தால், டில்லி இவ்வளவு அழுக்கும் நாற்றமும் உள்ள ஊரா என நொந்து விடுவீர்கள். விட்டோம்.
சரி செங்கோட்டைக்கு வருவோம். நமக்கெல்லாம் தெரிந்தது சுதந்திர தினத்தன்று பிரதமர் கோடி ஏற்றும் இடம் இது என்பது. 1950-ஆம் ஆண்டு முதல் இந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது.
செங்கோட்டை வெளியே எடுத்த வீடியோ இதோ:
செங்கோட்டையில் வருடம் இரு முறை மட்டும் தானே பிரதமர் கொடி ஏற்றுகிறார்? மற்ற நேரம்? மற்ற நேரம் சும்மா இராமல் அங்கு நிறைய கடைகளை வாடகைக்கு இருக்க அனுமதி தந்துள்ளனர்.
கடை தெரு பற்றிய விளக்கம் உள்ள போர்டை பாருங்கள்:
கிட்டத்தட்ட ஆக்ரா கோட்டை போலவே தான் உள்ளது செங்கோட்டையும். சுற்றி பார்க்க டிக்கெட் விலை ஒருவருக்கு ரூ. முப்பது. எல்லா நேரமும் டிக்கெட் வாங்க நிறைய கூட்டம் நிற்கிறது. டில்லி வந்து விட்டு செங்கோட்டையை ஒரு முறையேனும் பார்க்காமல் யாரும் போவதில்லை போலும் !
இங்கு கார்டன் உள்ள இடத்தில் எடுத்த வீடியோ இதோ :
நாங்கள் சென்ற நேரம் போஸ்டல் துறையிலிருந்து ஒரு கண்காட்சி போல வைத்திருந்தனர். ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு கண்காட்சி இருக்கும் என நினைக்கிறேன்
செங்கோட்டை முழுவதுமே பெயருக்கேற்ப செந்நிறத்தில் உள்ளது.
இங்கு சுதந்திர போராட்டம் குறித்த ஒரு கண்காட்சியும் உண்டு. நாங்கள் நேரமின்மையால் பார்க்கவில்லை
இது தான் பிரதமர் கொடியேற்றும் இடம். இந்த படி வழியே மேலே ஏறி சென்று .............
இங்கு கொடி ஏற்றுவார்....
இங்கு எடுத்த வீடியோ..
செங்கோட்டையை சுற்றி நிறைய புறாக்கள் பறந்த வண்ணம் உள்ளன. இவை பார்க்க மிக அழகாக உள்ளன.
டில்லி சென்றால் செங்கோட்டை அவசியம் ஒரு முறை சென்று வாருங்கள். ஓரிரு மணி நேரத்தில் செங்கோட்டையை சுற்றி பார்த்து விடலாம் !
****************
கன்னாட் பிளேஸ் - டில்லியின் டி. நகர்
டில்லி சென்று வருவோர் எல்லாம் அங்கு வாங்குவதாக சொல்வது ஷூக்களும், தோல் பைகளும் தான். நாங்கள் பர்ச்சேஸ் செல்ல நேரமே இல்லை. இருந்தும் மணாலியில் இருந்து திரும்பும் போது அவசரமாக கன்னாட் ப்ளேஸ் சென்று கொஞ்சம் ஷாப்பிங் முடித்து அப்படியே விமான நிலையம் விரைந்தோம்.
கன்னாட் பிளேஸ் மிக மிக பெரிய ஷாப்பிங் ஏரியா. சென்னை டி. நகர் போன்றது. மேலே சொன்னபடி ஷூ மற்றும் லெதர் தோல் பை உள்ளிட்டவை இங்கு மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன. சென்னையை ஒப்பிட்டால் நிச்சயம் இவை குறைவே. பெண்கள் பைகள் நூறு முதல் இருநூறுக்குள் ஸ்டைலாக கிடைக்கிறது. சிறுவர்கள் ஷூக்கள் அழகழகாய் உள்ளன.
இங்கு காரும் நிறுத்த முடிகிறது என்பது ஆச்சரியமாய் இருந்தது. நாங்கள் காரை நிறுத்தி விட்டு அருகிலேயே சென்று ஷாப்பிங் செய்து வந்தோம். இங்கு மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையமும் மிக அருகில் உள்ளன.
இன்னொரு முறை தில்லி செல்ல வாய்ப்பு கிடைத்தால் நிதானமாக கன்னாட் பிலேசை சுற்றி வரவேண்டும் !
செங்கோட்டைக்குள் நுழைகிறார்கள் மக்கள் |
மணாலி சென்று விட்டு திரும்ப ஊருக்கு (சென்னை)வரும் போது, விமானம் ஏறும் முன் நான்கைந்து மணி நேரம் கிடைத்தது. இந்த நேரத்தில் தான் நாங்கள் செங்கோட்டை மற்றும் கண்ணாட் பிளேஸ் பார்த்தோம்.
செங்கோட்டை பழைய டில்லியில் உள்ளது. இங்குள்ள மெட்ரோ ரயில் ஸ்டேஷனில் இறங்கி வெளியே வந்தால், டில்லி இவ்வளவு அழுக்கும் நாற்றமும் உள்ள ஊரா என நொந்து விடுவீர்கள். விட்டோம்.
சரி செங்கோட்டைக்கு வருவோம். நமக்கெல்லாம் தெரிந்தது சுதந்திர தினத்தன்று பிரதமர் கோடி ஏற்றும் இடம் இது என்பது. 1950-ஆம் ஆண்டு முதல் இந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது.
செங்கோட்டை வெளியே எடுத்த வீடியோ இதோ:
செங்கோட்டையில் வருடம் இரு முறை மட்டும் தானே பிரதமர் கொடி ஏற்றுகிறார்? மற்ற நேரம்? மற்ற நேரம் சும்மா இராமல் அங்கு நிறைய கடைகளை வாடகைக்கு இருக்க அனுமதி தந்துள்ளனர்.
கடைகள் உள்ள பகுதி |
கடைகள் .......... |
கடை தெரு பற்றிய விளக்கம் உள்ள போர்டை பாருங்கள்:
கிட்டத்தட்ட ஆக்ரா கோட்டை போலவே தான் உள்ளது செங்கோட்டையும். சுற்றி பார்க்க டிக்கெட் விலை ஒருவருக்கு ரூ. முப்பது. எல்லா நேரமும் டிக்கெட் வாங்க நிறைய கூட்டம் நிற்கிறது. டில்லி வந்து விட்டு செங்கோட்டையை ஒரு முறையேனும் பார்க்காமல் யாரும் போவதில்லை போலும் !
ஆக்ரா கோட்டை போலவே.. |
இங்கு கார்டன் உள்ள இடத்தில் எடுத்த வீடியோ இதோ :
நாங்கள் சென்ற நேரம் போஸ்டல் துறையிலிருந்து ஒரு கண்காட்சி போல வைத்திருந்தனர். ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு கண்காட்சி இருக்கும் என நினைக்கிறேன்
Postal Exhibition |
இங்கு சுதந்திர போராட்டம் குறித்த ஒரு கண்காட்சியும் உண்டு. நாங்கள் நேரமின்மையால் பார்க்கவில்லை
இது தான் பிரதமர் கொடியேற்றும் இடம். இந்த படி வழியே மேலே ஏறி சென்று .............
இங்கு கொடி ஏற்றுவார்....
இங்கு எடுத்த வீடியோ..
செங்கோட்டையை சுற்றி நிறைய புறாக்கள் பறந்த வண்ணம் உள்ளன. இவை பார்க்க மிக அழகாக உள்ளன.
புறாக்கள் |
புறாக்கள் |
****************
கன்னாட் பிளேஸ் - டில்லியின் டி. நகர்
டில்லி சென்று வருவோர் எல்லாம் அங்கு வாங்குவதாக சொல்வது ஷூக்களும், தோல் பைகளும் தான். நாங்கள் பர்ச்சேஸ் செல்ல நேரமே இல்லை. இருந்தும் மணாலியில் இருந்து திரும்பும் போது அவசரமாக கன்னாட் ப்ளேஸ் சென்று கொஞ்சம் ஷாப்பிங் முடித்து அப்படியே விமான நிலையம் விரைந்தோம்.
கன்னாட் பிளேஸ் மிக மிக பெரிய ஷாப்பிங் ஏரியா. சென்னை டி. நகர் போன்றது. மேலே சொன்னபடி ஷூ மற்றும் லெதர் தோல் பை உள்ளிட்டவை இங்கு மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன. சென்னையை ஒப்பிட்டால் நிச்சயம் இவை குறைவே. பெண்கள் பைகள் நூறு முதல் இருநூறுக்குள் ஸ்டைலாக கிடைக்கிறது. சிறுவர்கள் ஷூக்கள் அழகழகாய் உள்ளன.
இங்கு காரும் நிறுத்த முடிகிறது என்பது ஆச்சரியமாய் இருந்தது. நாங்கள் காரை நிறுத்தி விட்டு அருகிலேயே சென்று ஷாப்பிங் செய்து வந்தோம். இங்கு மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையமும் மிக அருகில் உள்ளன.
இன்னொரு முறை தில்லி செல்ல வாய்ப்பு கிடைத்தால் நிதானமாக கன்னாட் பிலேசை சுற்றி வரவேண்டும் !
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteபடங்களும் பதிவும் அருமை...
கண்ணொளிகளை இணைத்தமைக்கு நன்றி...(TM 2)
ஒருமுறை என்று வந்திருக்கிறேன்
ReplyDeleteஅதனை ரீவைண்ட் செய்து பார்க்க உதவியதுதங்கள் பதிவு
படங்களுடன் விளக்கங்களும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
சுதந்திர போராட்டம் குறித்த கண்காட்சி மிகச்சிறப்பாக இருந்தது..
ReplyDeleteகனாட் பிளேஸ் மறக்கமுடியாத ஷாப்பிங் பிளேஸ்.
அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
சுதந்திர தினத்திற்கு பொருத்தமான பதிவு. சில வருடங்களுக்கு முன் நாங்கள் சென்ற தில்லிப் பயணம் நினைவுக்கு வந்தது...
ReplyDeleteசுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteபடங்களுடன் அருமை பகிர்வு பாராட்டுக்கள்
தில்லியில் கரோல் பாக் சந்தைதான் தி.நகர் சந்தை. கனாட் ப்ளேஸ், குறிப்பாக அதன் பாலிகா பஜார், சென்னையின் பர்மா பஜார். இது இரண்டு வட்டங்களைக் கொண்டது. விக்டோரியா மஹாராணியின் மூன்றாவது மகன் கனாட் ப்ரபுவின் பெயரால் வழங்கப்படும் இது, முதலில் புது தில்லி ரயில் நிலையத்திற்காக வடிவமைக்கப்பட்டது. பின்னர் இந்திய ரயில்வே அதைச் செயல்படுத்த முடியாது என்று கைவிட்டு அதன் அருகில் கட்டியது.
ReplyDeleteகாங்கிரஸ் ஆட்சியில் (மாநில) இதல் வெளிவட்டம் இந்திரா சௌக் என்றும் உள் வட்டம் ராஜீவ் சௌக் என்று மறுபெயரிடப்பட்டாலும் மக்கள் கனாட் ப்ளெஸ் என்று தான் கூறுகின்றனர். இருந்தாலும் மெட்ரோ ரயில் நிலையத்தினால் ராஜீவ் சௌக் மக்கள் மத்தியில் புழங்கத் தொடங்கியுள்ளது.
சுதந்திர தினத்திற்கேற்ற நல்ல பதிவு.
பொருத்தமான நேரத்தில் பொருத்தமான பதிவு.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அடுத்த பதிவில் சிம்லாவை சுற்றி பார்க்க ஆரம்பிப்போம் !////
ReplyDelete?
?
?
மணாலி சென்று விட்டு திரும்ப ஊருக்கு (சென்னை)வரும் போது....///
why தல...
தனபாலன் சார்: நன்றி
ReplyDeleteரமணி சார்: நன்றி
ReplyDeleteவழமை போல் அடிஷனல் தகவல்களுக்கு நன்றி சீனி
ReplyDelete
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி: நன்றி மேடம்
ReplyDeleteமகிழ்ச்சி பாலஹனுமான் சார் நன்றி
நன்றி வலங்கை சரவணன்
ReplyDeleteநன்றி ராஜசேகர்
ReplyDeleteஸ்ரீராம் : நன்றி
ReplyDeleteஸ்ரீ ஸ்ரீனி: நன்றி நண்பா. சின்ன கால்குலேஷன் மிஸ். டில்லி பற்றி எழுதும்போதே " செங்கோட்டை மட்டும் எழுதலை; அதனை சுதந்திர தினத்துக்கு முன் ரிலீஸ் செய்வேன்" என எழுதினேன். அடுத்த பகுதியில் சிம்லா தொடரும்
ReplyDeleteசிறப்பான பகிர்வு. படங்கள் அருமை. வீடியோ பார்க்கிறேன்.
ReplyDeleteபடங்களும் பதிவும் சூப்பர்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html
நல்ல நாளில் நல்ல பகிர்வு.
ReplyDeleteசெங்கோட்டையைக் கண்டு கோண்டோம்.
சுதந்திர தின நல்வாழ்த்துகள்.