Tuesday, August 28, 2012

சென்னை பதிவர் மாநாடில் பட்டுகோட்டை பிரபாகர் பேசியது : வார்த்தைகளில் + வீடியோ

சென்னை மாநாட்டில் பட்டுகோட்டை பிரபாகரின் பேச்சு முழுக்க முழுக்க வலைப்பூ பற்றியே சுற்றி சென்றது ஆச்சரியமான விஷயம் ! இருபது நிமிடம் பேசினார் PKP! இதிலிருந்து சில துளிகள் ..
வீடியோ எனது சோனி டிஜிடல் காமிராவில் எடுத்தது. வெகு சில இடங்கள் தவிர்த்து மற்றபடி வீடியோ நன்றாக தான் உள்ளது. வீடியோ பார்க்க முடியாதோருக்காக அவர் பேசியது வார்த்தைகளிலும் ..

PKP - PART I


வலைப்பதிவர்களின் விழா சென்னையில் இவ்வளவு பெரிய முறையில் நடப்பது இது முதல் முறை. பெண்கள் இவ்வளவு பெரிய அளவில் கலந்து கொண்டது அதுவும் நாள் முழுதும் அமர்ந்து கேட்டது விழாவின் வெற்றி என சொல்லலாம்.

மின்னல் வரிகள் கணேஷ் நீங்கள் பேசும் நேரம் இருந்தால் போதும் என்று தான் சொன்னார். ஆனால் அது சபை நாகரிகம் அல்ல; அந்த பகுதி முழுமைக்கும் நான் இருப்பதே நல்லது; நானும் ஒரு வலைபப்திவர் தான். அதனால் முழுதும் இருக்க விரும்பினேன். அனைத்தையும் சந்தோஷமாக நீங்கள் பேசுவதை ரிசீவ் செய்து கொண்டிருந்தேன்.

தென்றல் சசிகலாவின் கவிதை புத்தகத்தை நான் வெளியிட்டேன். அது பற்றி சிறிதேனும் பேசுவது தான் முறை என சில நல்ல கவிதைகளை குறிப்பிட்டு இப்பகுதியில் பேசினார்




PKP - PART II

வலைப்பதிவில் உள்ள வாய்ப்புகள் பற்றி PKP:

முதலில் கையெழுத்து பத்திரிக்கை என்ற ஒன்று இருந்தது. அதன் நீட்சியாக தான் இன்றைய வலைப்பூவை பார்க்கிறேன்

நாங்கள் எழுதிய போது பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டு எப்போது பிரசுரம் ஆகும் என காத்திருக்க வேண்டும். ஆறு மாதம் கழித்து " உங்கள் படைப்பை பிரசுரம் செய்ய முடியாமைக்கு வருந்துகிறோம் " என கடிதம் வரும். ஆனால் நீங்கள் காத்திருக்க தேவையின்றி உங்கள் படைப்புகளை வெளியிடுகிறீர்கள். ஆயிரக்கணக்கானோர் உடன் வாசித்து கருத்துக்கள் சொல்கிறார்கள்

விஞ்ஞானம் எந்த அளவு வளர்ந்துள்ளது ! எலக்ரானிக் யுகத்தில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வாய்ப்புகள் ! அந்த காலத்தில் போன் பேசவே டிரன்க் கால் புக் செய்து பேசணும் ! அதுக்கு எட்டு பேர் காத்திருப்பாங்க. இப்போ எந்த அளவு வளர்ந்துட்டோம் !

மூத்த பதிவர்கள் பற்றி நெகிழ்வாக பேசினார் . என்ன பேசினார் என மூத்த பதிவர்கள் பற்றி எழுதும் தனி பதிவில் குறிப்பிடுகிறேன். நீங்கள் விரும்பினால் இங்கே வீடியோவில் கேட்டு கொள்ளலாம்



PKP - PART - III

வலைப்பதிவர்கள் உங்கள் அனுபவத்தை எழுதுவதுடன் இன்னும் பலரை எழுத வைக்க வேண்டும். நாம் பேப்பர்லெஸ் சொசைட்டி நோக்கி செல்கிறோம். வருங்காலத்தில் வலைப்பூக்கள் உலகை ஆளும். எனவே " எனது வலைப்பூவை படியுங்கள் " என சொல்வதை விட உங்களை போன்ற நிறைய வலைப்பதிவர்களை உருவாக்க வேண்டும் ! அடுத்தடுத்த கூட்டங்கள் புதிய வலைப்பதிவர்களுக்கு டெக்னிக்கல் விஷயங்களை சொல்லி தரும் கூட்டங்களாக இருந்தால் நலம் !


உங்கள் சினிமா விமர்சனங்கள் திரை உலகினரால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. பத்திரிக்கையில் விமர்சனம் வர தாமதம் ஆகும். உங்கள் விமர்சனம் தான் முதலில் வாசிக்கிறார்கள். கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் போன்றோரின் விமர்சனம் அனைத்து இயக்குனர்களும் வாசிக்கிறார்கள்.

சில ப்ளாகுகளில் பின்னூட்டங்களில் தனி மனித தாக்குதல் நடப்பதை பார்க்கிறேன். ஒருவனின் எழுத்தை மட்டும் பாருங்கள். விமர்சியுங்கள் அவன் வாழ்க்கையையும், அவனையும் விமர்சிக்காதீர்கள். கண்ணதாசன் இன்றளவும் நினைவு கூறப்படுவது அவர் எழுத்தால் தான். அவர் வாழ்க்கையில் பல்வேறு முறை தடுக்கி விழுந்தார். இன்று யாரும் அதை பற்றி பேசவில்லை.அவர் எழுத்துக்களால் நிலைத்து நிற்கிறார் !




PKP PART -IV

பதிவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது என, அறிவுரையாக PKP சொன்னது :

பத்திரிக்கைகளுக்கு தணிக்கை உண்டு. எழுத்தாளர்கள் படைப்புகளை எடிட் செய்து தான் பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. ஆனால் ப்ளாகில் கட்டற்ற சுதந்திரம் உள்ளது. எனவே வெளியிடுவோர் தான் எச்சரிக்கை ஆக இருந்து தேவையற்றவற்றை தவிர்க்க வேண்டும்.


வலைப்பூவை எளிதில் எடுத்து கொள்ளாதீர்கள். அங்கு தெரிவது ஒரு மனிதனின் பெர்சனாலிட்டி. உங்கள் முகம், உங்கள் சுயம் அதில் தெரிகிறது. நீங்கள் யார் எத்தகையவர் என ஒவ்வொரு பதிவிலும் வெளிப்படுத்துகிறீர்கள். அதை நினைவில் கொண்டு எழுதுங்கள்.

Unparliamentary வார்த்தைகள்/ விஷயங்கள் எழுதினால் பெண்களால் எப்படி வாசிக்க முடியும்? அப்படி நீங்கள் தொடர்ந்து எழுதினால் உங்களை பலரும் புறக்கணித்து விடுவார்கள். ஒரு மீட்டிங்கில் உங்களை பார்த்தால் உங்களை வந்து சந்தித்து பேசணும். இவரிடம் பேசாமல் இருப்பதே நல்லது என போகும் அளவில் இருக்க கூடாது !



சினிமா விமர்சனம் முக்கியம் தான் எனினும் எல்லாரும் அதை எழுத வேண்டும் என்பது இல்லை. சினிமா பற்றிய அறிவும் ரசனையும் உள்ளவர்கள் அதை எழுதினால் நல்லது.விமர்சனத்தில் ஒரு நேர்மை இருக்க வேண்டும்

PKP - PART V

வலைப்பூ ஒன்றில் வாசித்து தான் ரசித்த கதை என இங்கே பகிர்கிறார் PKP



***
இங்கு சொல்லப்பட்டவை என் (வீடுதிரும்பல்) கருத்துக்கள் அல்ல ! நிகழ்ச்சியில் PKP பேசியது ! நிச்சயம் ஒவ்வொரு பதிவருக்கும் தேவையான செய்தி இந்த பேச்சில் இருப்பதாக நினைக்கிறேன் அதனால் தான் முழுமையாக பகிர்கிறேன் நன்றி !
***
பதிவர் சந்திப்பு குறித்த பதிவுகள் :


பதிவர் சந்திப்பு மாபெரும் வெற்றி : படங்கள் : இங்கே

பதிவர் சந்திப்பு படங்கள் பார்ட் டூ : இங்கே

சென்னை பதிவர் சந்திப்புக்கு பின்னே இருந்தது யார்? : இங்கே

சென்னை பதிவர் சந்திப்பை வெளியிட ஊடகங்கள் போட்டி : இங்கே

பட்டுகோட்டை பிரபாகர் பேசியது என்ன? : இங்கே

சாப்பாட்டு பந்தியும் பிரபல பதிவர்களும் : இங்கே



33 comments:

  1. உங்கள் அர்ப்பணிப்புக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. என்னடா இவர் ரொம்ப நேரத்திலேயே எழுந்திட்டாரே அப்படின்னு பார்த்தா..நல்ல பதிவுக்கு மெனக்கெட்டு இருக்கறீர்..ஹாட்ஸ் ஆப்

    ReplyDelete
  3. நல்ல கருத்துகளுடன் பேசியிருக்கிறார். தனிமனிதத் தாக்குதல்கள், சுயக் கட்டுப்பாடு விஷயங்கள் முற்றிலும் உண்மை.

    ReplyDelete
  4. தமிழ்மணம் இன்னும் சப்மிட் ஆகவில்லை!

    ReplyDelete
  5. நன்றாக பேசியிருக்கிறார். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. மதிய நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாத வருத்தம் உங்கள் காணொளிகளைப் பார்ப்பதன் மூலம் சற்றே தணிந்தது. ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

    பகிர்ந்து கொள்வதற்கு நன்றி மோகன்.

    ReplyDelete
  7. ஸ்ரீராம். said...
    தமிழ்மணம் இன்னும் சப்மிட் ஆகவில்லை!

    ***
    பதிவு வெளியிட்ட போது தமிழ் மணம் சுத்தமாய் வேலை செய்யலை. இப்போது நண்பர் யாரோ தமிழ் மணத்தில் இணைத்து விட்டார். அவருக்கு என் நன்றி ! (யாருப்பா அந்த நல்லவர்?)

    ReplyDelete
  8. திரும்பவும் எழுத்தாளர் PKP அவர்களின் பேச்சைக்கெட்டு, விழா நிகழ்வுகளை அசைபோட வைத்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  9. நேரடி ஒளிபரப்பில் கொஞ்சம் நாய்ஸியா இருந்துச்சு. சரியாக் கேட்கலை:(

    இப்ப நீங்க அதை எழுத்தால் சொன்னது அருமை!

    சென்னையில் ஜிஆர்டியில் ஒரு இண்டிப்ளொக்கர்ஸ் மீட் நடந்தப்ப நானும் கலந்துக்கிட்டேன். ஒரு நாலைஞ்சு தமிழ்ப்பதிவர்கள் இருந்தோம். உண்மைத்தமிழன், பாலபாரதி, லக்கி லுக், ஆதிரா, இன்னும் சிலர் பெயர் நினைவில் இல்லை:(

    Zee TV தமிழ்ப்பிரிவு வந்து எங்களை பேசச்சொன்னாங்க:-)

    நம்ம தல பாலபாரதியின் ஏற்பாடு!

    ReplyDelete
  10. பிகேபி அவர்கள் பேச்சை எழுத்தா கொடுத்தற்கு மிக்க நன்றி. நடந்த மாநாட்டில் உங்களுக்கு எவ்வளவு ஈடுபாடு இருந்திருக்குன்னு புரியுது. இந்த விழா சிறக்க துணை நின்ற அத்தனை நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. என் உள்ளம் கவர்ந்த எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரின் வலைப்பதிவுகள் குறித்த கருத்துக்கள் அற்புதம். மிகத் தெளிவாகவும், முழுமையாகவும் தந்ததற்கு மனமார்ந்த நன்றிகள்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  12. ஒரு பெரிய எழுத்தாளர் நம்மை இவ்வளவு உன்னிப்பாக கவனித்து கொண்டுருப்பது நமக்கெல்லாம் பெருமைதான்...

    ReplyDelete
  13. பகிர்வுக்கு நன்றிகள். ஒவ்வொரு வீடியோவா பார்த்துட்டிருக்கேன்.

    ReplyDelete
  14. எழுத்தாளர் PKP அவர்களின்
    பேச்சு சிறப்பாகவும்
    பயனுள்ளதாகவும் அமைந்திருக்கிறது..
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  15. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  16. வீடியோவுடன் பகிர்ந்தது அருமை. என் நண்பரின் பேச்சை முழுமையான விரிவான உரையாக நான் அடுத்து பதிய இருந்தேன். வழக்கம் போல என்னை முந்தி விட்டீர்கள் நீங்கள். மிக்க மகிழ்ச்சி நண்பா.

    ReplyDelete
  17. \\எனவே " எனது வலைப்பூவை படியுங்கள் " என சொல்வதை விட உங்களை போன்ற நிறைய வலைப்பதிவர்களை உருவாக்க வேண்டும் ! அடுத்தடுத்த கூட்டங்கள் புதிய வலைப்பதிவர்களுக்கு டெக்னிக்கல் விஷயங்களை சொல்லி தரும் கூட்டங்களாக இருந்தால் நலம் !\\

    மோகன் சார், என்னை மாதிரி ஆட்களுக்கு எப்போ டெக்னிகல் விஷயங்களைச் சொல்லித் தரப் போறீங்க? அவர் சொன்ன மாதிரி எங்களையும் வளர்த்துவிடுங்க.

    ReplyDelete
  18. சிறந்த பகிர்வு மீண்டும் மீண்டும் செவிக்கு விருந்தளிக்கும் பகிர்வு நன்றிங்க. வீடு திரும்பல் நீங்கதானே... நான் சசி என்று போட்டது என்னை. புரிகிறதா..?

    ReplyDelete
  19. பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.

    "மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?"

    http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html

    ReplyDelete
  20. மிக நல்ல தேவையான விஷயங்களை மட்டுமே பேசியதிலிருந்து அவர் மேல் ஏற்கனவே வைத்திருந்த மதிப்பு மேலும் உயர்ந்துவிட்டது. நல்ல எழுத்தாளர் என்பது அறிந்தது தான். நல்ல பேச்சாளர் என்றும் நிரூபித்துள்ளார். மாநாட்டின் நோக்கத்தை ஒட்டியே பேச்சை அமைத்தது தான் சிறப்பு.

    ப.கோ.பி-யின் அறிவுரை (சுயக்கட்டுப்பாடு பற்றிய) நம் அனைவருக்கும் தேவையான ஒன்று...

    எழுத்து வடிவிலும் வெளியிட்டமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  21. அன்பின் சகோ மோகன் குமார்,
    பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் உரை கூர்மையாகவே இருந்தது. அவர் தெரிவு செய்த வார்த்தைகளில் இருக்கும் உண்மைகளை பதிவுலகம் உணர்ந்தால் ஆரோக்கியமான வழியில் செல்ல ஏதுவாக இருக்கும். கருத்தியலை உருவாக்கும் இடத்தில் இருப்பவர்கள் பதிவர்கள் என்பதை பதிவர்கள் அனைவரும் உணர வேண்டும். பதிவை அனைவரும் படிப்பார்கள் என்ற எண்ணம் எப்போதுமே இருக்க வேண்டும். பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் பேச்சை குறித்து இதுவரை யாருமே பதிவிடலையே என்று வருத்தத்தில் இருந்தேன். அதை நிவர்த்தி செய்து விட்டீர்கள் மோகன் குமார்.

    ReplyDelete
  22. பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  23. கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்துகள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  24. ப.கோ.பி. யின் உரையை விபரமாகப் பதிந்ததற்கு நன்றி. வீடியோ என்றால் பார்க்கப் பொறுமை இருக்காது. வாசிப்பதே இலகு.

    ReplyDelete
  25. எழுத்து வடிவிலும் தந்தது வசதியாயிருந்தது. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  26. பதிவர்களுக்கு அவசியமான கருத்துக்களை சுவாரஸ்யமாகி பேசி உள்ளார் பி கே பி...அதை நீங்கள் இன்னும் சுவாரஸ்யமாக எழுதி உள்ளீர்கள் நன்றி

    ReplyDelete
  27. பதிவர்களுக்கு அவசியமான கருத்துக்களை சுவாரஸ்யமாகி பேசி உள்ளார் பி கே பி...அதை நீங்கள் இன்னும் சுவாரஸ்யமாக எழுதி உள்ளீர்கள் நன்றி

    ReplyDelete
  28. கருத்தாழமுள்ள பேச்சு PKP அவர்களுடையது... அவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்ற அளவில் மட்டுமே நான் அறிந்து இருந்தேன்... அன்று தான் முதன் முறையாக நேரடியாக கண்டு அவரின் பேச்சாற்றலையும் கவனித்தேன்... 4 மணிக்கு கிளம்ப இருந்தேன் கவிதைகள் என்னை ஈர்த்தன மீண்டும் கிளம்ப எணினேன் இப்போது PKP பேச்சால் ஈர்க்கப்பட்டேன்... மேடையில் அவர் அமர்ந்து இருந்தபோது எனக்குள் நான் நினைத்தது "இவர் மற்றவர்கள் பேசுவதை கவனிக்கிறாரா இல்லையா? இப்படி உம்மென்று இருக்கிறாரே", பிறகுதான் தெரிந்தது அவர் மற்றவர் பேச்சினை கிரகித்து கொண்டு இருந்தார் என்று!!! என்றுமே நிறைகுடம் நீர்தளும்பது தான்....

    நன்றி சார்.. வீடியோ எடுத்து பகிர்ந்ததற்கு.. சிறப்பான சிறப்பு விருந்தினரை தேர்வு செய்ததற்கும் நன்றிகள்....

    ReplyDelete
  29. பகி்வுக்கு மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  30. அருமையான பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
    http://thalirssb.blogspot.in/2012/08/6.html
    மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html

    ReplyDelete
  31. இனிய சந்திப்பு
    நன்றி

    ReplyDelete
  32. விடியோவில் இல்லாத சொல் தெளிவை
    உங்கள் வரிகள் நீக்கிவிட்டது சார்

    வலை பதிவர்களுக்கு
    மிகவும் பயனுள்ளதாக உள்ளது கேபி சாரின் உரை

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...