Saturday, August 18, 2012

பேஸ்புக் போஸ்டர்: பெண்கள் மன்னிக்க! + சட்ட ஆலோசனை

சட்ட ஆலோசனை

பிரபாகரன், சென்னை

ட்ட ஆலோசனை பகுதியை விரும்பி படித்து வருபவன் நான். எனக்கு ஒரு ஆலோசனை வழங்க வேண்டுகிறேன். 2007 ம் ஆண்டு என் தந்தை ஒருவருக்கு 50000 பணமாக கடன் கொடுத்தார். 2 வட்டி என்று சொல்லி வெற்று promisory note ல் கையெழுத்து வாங்கி வைத்திருக்கிறார்.நிலபட்டா ஒன்றையும் வாங்கி வைத்திருக்கிறார். கடனை திருப்பி செலுத்த பல முறை கேட்டும் கடன் வாங்கியவர் இது வரை கொடுக்கவில்லை.கடனை திரும்பி வாங்க எவ்விதம் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறவும். நன்றி அய்யா.

பதில்:

பொதுவாய் ஒருவருக்கு கடன் தந்துள்ளீர்கள் என்றால் அதனை மூன்று ஆண்டுகளுக்குள் திரும்ப பெறவேண்டும். லிமிடேஷன் சட்டத்தின் படி ஒவ்வொரு பிரச்சனைக்கும் எத்தனை ஆண்டுக்குள் வழக்கு தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் படி கடனை திரும்ப பெற அல்லது அவர் கடன் திரும்ப செலுத்த வில்லை என அவர் மீது வழக்கு தொடர மூன்று ஆண்டுகள் தான் கால அவகாசம்.

ஆனால் இந்த மூன்று ஆண்டுகள் எப்போது தொடங்குகிறது என்பதற்கு சில விதிகள் உண்டு.

உங்கள் தந்தையிடம் அவர் கடன் பெற்றது 10 .6.2009 என வைத்து கொள்வோம். அதன் பின் அடுத்த மூன்று ஆண்டுக்குள் ஒரு முறை வட்டியோ அல்லது Prinicipal-ல் சிறு தொகையோ தந்தால், அப்படி அவர் கடைசியாய் பணம் தந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் கால அவகாசம் துவங்கும்.

போலவே உங்கள் தந்தை அவரை பணம் திரும்ப தர சொல்லி கடிதம் எழுதி அதற்கு அவர் இன்ன தேதியில் பணம் திரும்ப தருகிறேன் என பதில் கடிதம் தந்திருந்தால் அன்றிலிருந்து மூன்று ஆண்டுகள் கால அவகாசம் துவங்கும். இதற்கு " Acknowledging the debt" என்று சொல்வார்கள் (உங்கள் தந்தை எழுதும் கடிதம் இங்கு முக்கியமில்லை. அவர் எழுதும் பதில் கடிதமே முக்கியம்)

நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கும் போது அவர் எந்த பணமும் தரவில்லை அல்லது கடனை ஒப்பு கொண்டு சமீபத்தில் எந்த கடிதமும் தர வில்லை என்பது தெரிகிறது.

சிவில் முறையில் நீங்கள் வழக்கு தொடர வேண்டுமெனில், அவரது கடனை உறுதி செய்யும்படி அவரிடம் தற்போதைய தேதியில் ஒரு கடிதமோ, அல்லது அவர் கடனுக்கு சிறு வட்டியோ தற்போது வாங்கினால் மட்டுமே நடக்கும். இவை முடியாத பட்சம் சிவில் வழக்கு தொடர முடியாது

ஆனால் உங்களிடம் பணம் வாங்கி கொண்டு தராமால் ஏமாற்றி விட்டார் என அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர முடியும். இதற்காக அவர் மீது ஒரு வக்கீல் நோட்டிசு அனுப்பினாலே அவர் உடனே இறங்கி வர வாய்ப்புண்டு.

நீங்கள் உடனே ஒரு வழக்கறிஞரை ஆலோசித்து சட்ட நடவடிக்கை எடுக்கவும்.
*******
சட்டஆலோசனை - வல்லமை ஆகஸ்ட் 17, 2012 இதழில் வெளியானது
*******
பேஸ்புக் போஸ்டர்கள்: பெண்கள் மன்னிக்க!

சட்ட ஆலோசனையுடன் உங்களை சிரிக்க வைக்கும் சில போஸ்டர்கள் தொடர்ந்து பகிர்ந்து வருவதை அறிவீர்கள். சட்டம் குறித்த நல்ல விஷயம் சொல்லும்போது பலரும் உள்ளே வருவதில்லை. அதனால் தான் இந்த ஏற்பாடு !

வீடுதிரும்பலை மிக அதிக பெண்கள் விரும்பி வாசிக்கிறார்கள் என்று தெரிந்தாலும், அவர்கள் இதனை சிரிப்புடன் கடந்து செல்வார்கள் என்கிற நம்பிக்கையில் இந்த போஸ்டர்களை பகிர்கிறேன்.

















ஒரு உரிமையில் பெண்களை கலாய்த்தாலும், பெண்கள் பற்றிய நம் உண்மை உணர்வுகளை இந்த போஸ்டரில் காணலாம் :

தொடர்புடைய பதிவுகள்:


வடிவேலு ஸ்பெஷல் + சட்ட ஆலோசனை

எங்கள் வீட்டில் ஷூட்டிங் -படங்கள் + சட்ட ஆலோசனை

38 comments:

  1. FB பெண்களைப் பற்றியது, இன்னமும் நிறைய இருக்காதா என்று என்ன வைத்து விட்டது!! அதிலும் Difference between boys & Girls profile, and Waiting for perfect man டாப்.

    ReplyDelete
  2. முகப்புத்தக போஸ்டர்கள் அனைத்தும் நகைச்சுவை என்று எடுத்துக் கொண்ட அளவில் ரசித்துச் சிரிக்க வைத்தன. கடைசி ஒன்று சொன்ன விஷயம் அருமை.

    ReplyDelete
  3. முகநூல் பக்கம் சென்றாலே இப்படியான படங்கள் அதிகளவில் காட்சி கொடுக்கின்றன.சிரிக்கலாம்.

    பதிவர் சந்திப்பு - நேரடி ஒளிபரப்பு - அவரவர் தளத்திலேயே காண ஏற்பாடு

    ReplyDelete
  4. ரீ சார்ஜ் அண்ணா போஸ்டர் சிரிக்க வைத்தது மோகன் சார்

    ReplyDelete
  5. ஆண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள்... இதுவும் சட்ட ஆலோசனையா சார்

    ReplyDelete
  6. ஆஹா... டிஸ்கியும் முகநூலிலிருந்தே எடுத்தது போலிருக்கிறதே..
    [btw கடைசியில் இருந்தது டிஸ்கி தானே]

    ReplyDelete
  7. உங்களின் மற்ற பதிவுகளைவிட சட்டம்குறித்த பதில்கள் வரும் பதிவுகளை தவறவிடாமல் படிப்பேன். என்னைப் போலவே பலரும் இருப்பார்கள் என்பது நிச்சயம். பதிவிலிருந்து புது தகவல் அறிந்துகொள்வோம், ஆனால், பின்னூட்டமாக எழுத ஒன்றும் இருக்காது (அ) தெரியாது.

    உங்கள் பதிவின் உண்மையான நோக்கம் நிறைவேறுகிறதா - சட்ட ஆலோசனையை எத்தனை பேர் கவனமாக வாசித்தார்கள் - தகவல் பெற்றுக்கொண்டார்கள் என்பதற்கு அந்தப் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களே சாட்சி.

    சட்டப்பதிவுகளுடன் வேறு தகவல்கள் வருவது, வாசகர்களின் கான்ஸண்ட்ரேஷனை டைவர்ட் செய்துவிடுகிறது என்பதே உண்மை.

    //ஒரு உரிமையில் பெண்களை கலாய்த்தாலும், பெண்கள் பற்றிய நம் உண்மை உணர்வுகளை இந்த போஸ்டரில் காணலாம்//

    பரிகாரம் - பிராயசித்தம்??!! :-))))

    ReplyDelete
  8. //வீடுதிரும்பலை மிக அதிக பெண்கள் விரும்பி வாசிக்கிறார்கள் என்று தெரிந்தாலும், அவர்கள் இதனை சிரிப்புடன் கடந்து செல்வார்கள் என்கிற நம்பிக்கையில் இந்த போஸ்டர்களை பகிர்கிறேன். //

    குழந்தையை கிள்ளிஃபையிங்....தொட்டிலை ஆட்டிஃபையிங் :))

    ReplyDelete
  9. Difference between boys & Girls profile கலக்கல் உண்மையும் கூட

    ReplyDelete
  10. ஆலோசனைப் பக்கம் வழக்கம் போல பயனுள்ளது.

    நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டுமே பார்க்க வேண்டும்! ஆனாலும் கடைசியாக ஒன்றைப் போட்டு சமாளித்து விட்டீர்களே...!

    ReplyDelete
  11. கலக்கல் மோகன் சார் ...

    ReplyDelete

  12. //வீடுதிரும்பலை மிக அதிக பெண்கள் விரும்பி வாசிக்கிறார்கள் என்று தெரிந்தாலும், அவர்கள் இதனை சிரிப்புடன் கடந்து செல்வார்கள் என்கிற நம்பிக்கையில் இந்த போஸ்டர்களை பகிர்கிறேன். //
    தப்பிக்க வழியா?
    இருந்தாலும் நீங்க ரொம்ப கலாச்சிடீங்க பெண்களை!!! excape ஆகறதுக்காக கடைசியா ஆறுதல் பரிசு தரிங்க சார்...

    ஆனாலும் நல்ல ரசிக்கும் படியாக தான் இருந்தது இன்றைய பதிவு!!! நன்றி!!!!

    ReplyDelete
  13. சட்ட ஆலோசனை நல்ல தகவல் சார்..

    ReplyDelete
  14. சட்ட ஆலோசனையும் போட்டோ பகிர்வும் சிறப்பு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
    http://thalirssb.blogspot.in/2012/08/180.html
    பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

    ReplyDelete
  15. படங்கள் அனைத்தும் சிந்திக்க கூடியதாகவும், சிரிக்க கூடியதாகவும் இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.!

    ReplyDelete
  16. மிகவும் நன்றி அய்யா. மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஆலோசனைகள் தொடரட்டும்.

    ReplyDelete
  17. சட்ட ஆலோசனை பக்கம் பலருக்கும் உபயோகமாக இருந்திருக்கும்.

    மற்றபடி... பெண்களை கிண்டல் செய்யும் ஆணாதிக்கவாதி மோகன் சார் ஒழிக...

    ஒரு அம்மனியும் திட்டக்கானோமே!!!!!!!!!

    ReplyDelete
  18. Anonymous5:24:00 AM

    Nalla thakaval.nandri

    ReplyDelete
  19. தாஸ்: Difference between boys & Girls profile தான் எனக்கும் மிக பிடித்த ஒன்று நன்றி

    ReplyDelete
  20. பால கணேஷ் said...
    கடைசி ஒன்று சொன்ன விஷயம் அருமை

    ஆம் சார் நன்றி

    ReplyDelete
  21. ராஜசேகர்: நன்றி

    ReplyDelete

  22. நன்றி மதுமதி. நேரடி ஒளிபரப்பில் கலக்கிடுவோம் என நம்புகிறேன்

    ReplyDelete

  23. நன்றி சரவணன் சார்

    ReplyDelete
  24. சீனு: விடுங்க தம்பி சும்மா ஜாலிக்கு தானே

    ReplyDelete
  25. வெங்கட ஸ்ரீநிவாசன் said...
    ஆஹா... டிஸ்கியும் முகநூலிலிருந்தே எடுத்தது போலிருக்கிறதே..
    ****
    ஆம் அது ஒரு பெண் முக நூலில் பகிர்ந்தது :)

    ReplyDelete
  26. ஹுசைனம்மா
    /சட்டப்பதிவுகளுடன் வேறு தகவல்கள் வருவது, வாசகர்களின் கான்ஸண்ட்ரேஷனை டைவர்ட் செய்துவிடுகிறது என்பதே உண்மை. //

    இது பற்றி யோசிக்கிறேன். இரண்டு அல்லது மூன்று பதிவு இந்த ரீதியில் முழுசும் தயார். அது முடிந்ததும் மாற்றி பார்க்கிறேன்

    ReplyDelete
  27. ர‌கு said...

    குழந்தையை கிள்ளிஃபையிங்....தொட்டிலை ஆட்டிஃபையிங் :))

    ரகு: நோ சண்டை மூட்டி ஃபையிங் :)

    ReplyDelete

  28. பிரேம்குமார்: ஆமாங்கோ

    ReplyDelete

  29. ஸ்ரீராம். said...

    கடைசியாக ஒன்றைப் போட்டு சமாளித்து விட்டீர்களே...!

    என்ன பண்றது வீட்டுக்கு போகணும் இல்லையா? On a சீரியஸ் நோட் பெண்கள் நம்மை விட பல விதத்தில் நல்லவர்கள்

    ReplyDelete

  30. நன்றி அரசன்

    ReplyDelete

  31. சமீரா: நகைச்சுவை உணர்வுடன் எடுதுக்கொண்டமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  32. சுரேஷ் : நன்றி

    ReplyDelete
  33. நன்றி கோகுல்

    ReplyDelete
  34. பிரபாகரன்: நீங்கள் கேட்ட கேள்வி தான். உங்களுக்கு பதில் உபயோகமாய் இருந்தது எனில் மகிழ்ச்சி

    ReplyDelete
  35. பட்டிகாட்டான் Jey said...

    மற்றபடி... பெண்களை கிண்டல் செய்யும் ஆணாதிக்கவாதி மோகன் சார் ஒழிக...

    ஒரு அம்மனியும் திட்டக்கானோமே!!!!!!!!!

    அண்ணே: ஏன் ? நல்லா தானே போய் கிட்டு இருக்கு

    ReplyDelete
  36. நன்றி ஆரிப்

    ReplyDelete
  37. சட்ட ஆலோசனைகள் நன்று... படம் போட்டுத்தான் படிக்கவைக்க வேண்டுமென்றில்லை....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...