Monday, August 27, 2012

சென்னை பதிவர் சந்திப்பை வெளியிட ஊடகங்கள் போட்டி - படங்கள் Part III

ஆகஸ்ட் 26 சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பை குறித்து தங்கள் தொலை காட்சியில் வெளியிட ஊடகங்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன.

புதிய தலைமுறை செய்தி நிருபர் எங்களுடன்

புதிய தலைமுறை செய்தி சானல் பதிவர்கள் சிலரிடம் இது பற்றி பேட்டி எடுத்து இன்றும் நாளையும் அதன் செய்திகளில் வெளியிட உள்ளது.

மக்கள் தொலைக்கட்சிக்கு பேசுகிறார்கள் கோவை குழும நண்பர்கள்
சரளா, அகிலா , சங்கவி, ஜீவா,
 மக்கள் தொலைக்காட்சி நிகழ்வை படம் பிடித்ததோடு இருபதுக்கும் மேற்பட்ட பதிவர்களிடம் பேட்டி எடுத்து அரை மணி நேர நிகழ்வாக வெளியிடுகிறது.

புத்தக வெளியீடு பற்றி மக்கள் தொலை காட்சியில் பேசுகிறார்கள் சசிகலா மற்றும் இன்னொரு பதிவர்

இந்த நிகழ்ச்சி செப்டம்பர் -சனிக்கிழமை காலை 8.30 முதல் 9 மணி வரை மக்கள் தொலை காட்சியில் ஒளிபரப்பாகும். அவசியம் பாருங்கள் !

விகடன் நிறுவனத்திலிருந்து ஒரு நிருபர் வந்து நிகழ்வை கவர் செய்துள்ளார். என் விகடன் சென்னை பதிப்பில் வெளியாகும் என்றார் இவர். குமுதத்திலும் நிகழ்வு பற்றி வர வாய்ப்புள்ளது.

நேற்றைய நிகழ்ச்சியில் எடுத்த படங்கள் சில:

தஞ்சை குமணன், மோகன்குமார். சீனு மற்றும் சிராஜுதீன்

மகிழ்வோடு பேசி சிரிக்கும் செல்வின், பிலாசபி, கருண் மற்றும் கவிதை வீதி சவுந்தர்

மும்முரமாய் நடக்கும் புத்தக கண்காட்சி 

அனைவரையும் " கண்ணா" என தன் மகனாக  பாவித்து பேசிய வல்லிசிம்ஹன் அம்மா. நிகழ்ச்சிக்கு ஒரு தொகையும் தந்து உதவினார்

சிராஜுதீன்,  மோகன்குமார், ஆஷிக் முகமது,ஷர்புதீன், ரஹீம் கசாலி
மேடையில் பேசும் ஆரூர் மூனா செந்தில்

முந்தைய படத்தில் இருக்கும் ஆஷிக்குக்கும் ஆரூர் மூனா செந்திலுக்கும் தான் வலையில் சென்ற வாரம் பெரும் விவாதம் நடந்தது. நிகழ்வில் இருவரும் சமாதானம் ஆகி விட்டனர். மகிழ்ச்சி நண்பர்களே !

அகநாழிகை வாசுதேவன், மணிஜி, சிவகுமார்

கோவை குழும நண்பர்களுடன் கேபிளும் நானும்

ஹைதராபாத்தில் இருந்து நிகழ்வுக்கு வந்த ராஜ்குமார்

மூத்த பதிவர்களுக்கு பாராட்டுரைக்கான காரணம் குறித்து பதிவர் நண்டு @ நொரண்டு பேசுகிறார்


மீட்டிங் நடக்கும்போதே ஆங்காங்கு நடக்கும் சிறு டிஸ்கஷன்கள்.. தவிர்க்க முடியாதவை !

****
படங்கள் முதல் பார்ட் : இங்கே

இரண்டாம் பார்ட் படங்கள் இங்கே

பதிவர் சந்திப்பிற்கு உழைத்தோர் பற்றி : இங்கே வாசிக்கலாம்

பட்டுகோட்டை பிரபாகர் பேசியது என்ன? : இங்கே


சாப்பாட்டு பந்தியும் பிரபல பதிவர்களும் : இங்கே

46 comments:

  1. மிக அருமையான படங்கள்,,நன்றி,...

    ReplyDelete
  2. புதிய தலைமுறை சேனலில் நிகழ்ச்சி வரும்னா பாக்கலாம். எந்த நேரம்னு கேட்டு சொல்லுங்க.

    ReplyDelete
  3. படங்கள் அருமை... நன்றி சார்... தொடருங்கள்... (TM 2)

    ReplyDelete
  4. அருமையான தொகுப்பு! என்னால் வர இயலவில்லை! :(

    தமிழ் காமிக்ஸ் இதழ்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது!

    ReplyDelete
  5. அருமையான தொகுப்பு...

    ReplyDelete
  6. மிகவும் அருமையான நிகழ்வு தங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. படங்கள் சிறப்பு.

    ReplyDelete
  7. நேறறு இரவே உங்கள் பதிவை ( முதல் பகுதி) படித்து விட்டேன்.
    இப்பொழுதான் இந்த பதிவை படிக்க நேரம் கிடைத்தது. பதிவர்கள் சந்திப்பு குறித்து தெளிவான படங்களுடன் செய்தி வெளியிட்டதற்கு நன்றி!

    ReplyDelete
  8. அருமையான படங்களுடன் நல்லதொரு பகிர்வு, பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  10. வர முடியாமற் போன என் போன்றவர்களுக்கு ஏக்கத்தை அளிக்கிறது உங்கள் பதிவுகள். அணைத்தையும் கண்டு களித்துவிட்டேன். உங்கள் உழைப்பிற்கு எனது பாராட்டுகள்.

    ReplyDelete
  11. ஆரூர் மூனா செந்தில்!விஜயகாந்த் இப்ப நடிப்பதில்லைதானே!கோடம்பாக்கம் ஒரு ரவுண்டு உடறது:)

    படங்கள் மிளிர்கின்றன.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  12. ஒரொரு சேனலிலும் நிகழ்சிகள் வரும் நேரம் முன்னமே சொன்னால் பார்க்கலாம்! படங்கள் பார்த்தாச்சு. திடீரெனப் பார்த்தால் பார்ட் III என்று இருக்கிறது. பார்ட் இரண்டும் சென்று பார்க்க வேண்டும்!

    ReplyDelete
  13. நேரில் வர இயலாவிட்டாலும் முக்கால்வாசிப் பதிவர்களைப் புகைப்படங்கள் மூலம் பார்த்தது நிறைவைத் தருகிறது. நன்றி.

    ReplyDelete
  14. மிக அருமையான் தொகுப்பு

    ReplyDelete
  15. பதிவு விழா சிறப்பாக அமைந்தமைக்கு மகிழ்ச்சி. நான் அயல்நாட்டில் பணியில் இருப்பதால் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. வருந்துகிறேன். இருந்தும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் நல்ல நிறைவுடன் இனிதே நிகழ்வு முடிந்தமைக்கு.. அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    என் பதிவில் "வேண்டாம் தூக்கு கயிறு"..

    ReplyDelete
  16. அட.மீண்டும் நான்;)
    நன்றி மோகன்குமார். உண்மையாகச் சொல்லப் போனால் எழுதும் ஆர்வம் அனைவருக்கும் அதிகரிக்கும்(என்னையும் சேர்த்துத்தான்)
    அப்படி ஒரு நிகழ்வு.நல்ல விழா.

    ReplyDelete
  17. படங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. நன்றிகள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு நேரம் தங்களுக்குத் தெரியுமானால் அதையும் குறிப்பிடவும். எங்களைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  18. அனைத்து படங்களும் அருமை ...
    நேற்றைய விழா பெரும் சிறப்பாக முடிவடைந்ததில் ரொம்ப சந்தோஷம் சார் ///

    ReplyDelete
  19. pakirvukku nanrikal...

    http://sakthistudycentre.blogspot.com/2012/08/blog-post_5740.html

    naangalum pathivu poduvomla..

    ReplyDelete
  20. நேரில் வர இயலாத குறையைத் தீர்த்தது உங்கள் படங்களும், தகவல்களும். நன்றி.

    ReplyDelete
  21. மூன்று பதிவுகளின் போட்டோக்களும் அருமை பல பதிவர்களின் போட்டோவை பார்த்து நேரில் பார்த்தது போலே இருந்தது குட் ஜாப்

    ReplyDelete
  22. part part ஆ படம் போட்டு பட்டய கெளப்புறீங்க..அருமை நண்பரே

    ReplyDelete
  23. பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.

    மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?

    http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html

    ReplyDelete
  24. நேரில் வர முடியாத குறையை இந்த பதிவில் உள்ள படங்கள் தீர்த்து வைத்தது...நன்றி

    ReplyDelete
  25. Good pictures.. thanks for sharing.

    To see what my experience on 'Bloggers Meet'you r invited here

    ReplyDelete
  26. அருமையான பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    நினைவுகள்! கவிதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
    நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

    ReplyDelete
  27. பதிவர்களின் கூட்டத்தில் ஒரு புதிய ஆடு

    http://rajaavinpaarvayil.blogspot.com

    ReplyDelete
  28. அருமையான விழா மோகன், பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றி. தொகுப்பு அருமை.

    ReplyDelete
  29. ஒரு நிகழ்ச்சித் தொகுப்பு போல் விழா படங்கள் அளித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  30. அருமையான படங்கள்,,நன்றி,

    ReplyDelete
  31. அருமையான பதிவு, படங்களுடன்.
    ஒரு அருமையான நிகழ்ச்சியை தவற விட்டு விட்டேன்.
    உங்களை நினைத்து மிகவும் பெருமைப் படுகிறேன்.
    நன்றி & வாழ்த்துகள் திரு மோகன் குமார்.

    ReplyDelete
  32. அருமையான படங்கள் மற்றும் பகிர்வு...

    என்னைப் போன்று வர முடியாமல் வருந்துவோர்க்கு இந்த பதிவு கொஞ்சம் மன இளக்கத்தைக் கொடுக்கும்.
    நன்றிங்க வீடு திரும்பல்...

    ReplyDelete
  33. இந்த மாதிரியா தெளிவான படங்களாக எடுங்க மோகன் சார், முந்தைய பதிவுகளில் எல்லாம் இருட்டு. தொலைக் காட்சி நிகழ்சிகளை ஒளிபரப்பை பலர் தவற விடக்கூடும், தங்கள் இருக்கைகளில் வெளியிட்டா நலம்.

    ReplyDelete
  34. அருமையான படங்கள்.

    ReplyDelete
  35. ஒரு நாள் எப்படிப் போனது என்றே தெரியவில்லை.நிகழ்வை படங்களாக வெளியிட்டு மறக்கமுடியாத ஆவணமாக மாற்றி விட்டீர்கள நன்றி.
    நம்ம மூஞ்சி எங்கயும் காணோமே! ஹிஹிஹி

    ReplyDelete
  36. என்னால் கலந்து கொள்ள முடியவில்லையே என ஒவ்வொரு பதிவினைப் பார்க்கும்போது இருந்தாலும், உங்களது மகிழ்ச்சியில் நானும் மகிழ முடிகிறது மோகன்...

    விரைவில் சென்னை வரும்போது மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவரையும் காண வேண்டும். இம்முறை [20.08.12 அன்று] தான் உங்களை சந்திக்க முடியாது போய்விட்டது.... பார்க்கலாம்.

    தொடரட்டும் படங்கள்.

    ReplyDelete
  37. Thanks for the photographs! Hats off for the team!

    ReplyDelete
  38. Anonymous3:16:00 AM

    படங்கள் அருமை ! மிஸ் பண்ணிடோமே என்ற வருத்தம் இருக்கின்றது ...

    மக்கள் டிவி, புதிய தலைமுறை டிவி, விகடன் போன்ற ஊடகங்களுக்கு நன்றிகள் !!!

    ReplyDelete
  39. கலந்து கொண்ட உணர்வைத்தருது உங்க படங்களும் பகிர்வும்..

    ReplyDelete
  40. நண்பர்கள் அனைவருக்கும் மிக மிக நெகிழ்வான நன்றி; இந்த பதிவுகளுக்கு மட்டும் தனி தனியே நன்றி சொல்லவில்லை மன்னிக்க சில கேள்விகள் கேட்டோருக்கு மட்டும் பதில் சொல்கிறேன்.

    ReplyDelete
  41. வெங்கட ஸ்ரீநிவாசன் said...

    படங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. நன்றிகள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு நேரம் தங்களுக்குத் தெரியுமானால் அதையும் குறிப்பிடவும்.
    **
    இன்னும் தெரியவில்லை அவசியம் சொல்கிறோம் சீனி !

    ReplyDelete
  42. Jayadev Das said...

    இந்த மாதிரியா தெளிவான படங்களாக எடுங்க மோகன் சார், முந்தைய பதிவுகளில் எல்லாம் இருட்டு.
    **
    இது நல்ல காமிராவில் எடுத்தது. அது மொபைல் காமிரா. எல்லா இடத்துக்கும் இந்த காமிரா கொண்டு போகமுடியாது இல்லையா? திடீரென ஒரு வித்தியாச விஷயம் பார்த்தால் மொபைல் போனில் எடுக்க வேண்டியிருக்கு

    ReplyDelete
  43. T.N.MURALIDHARAN said...

    நம்ம மூஞ்சி எங்கயும் காணோமே! ஹிஹிஹி

    **

    என் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தீங்க அதான் :))

    நீங்கள் கவியரங்கில் வாசிக்கும் போட்டோ இருக்கு நிச்சயம் இங்கு பகிர்கிறேன்

    ReplyDelete
  44. super.. நான் வந்திருந்தேனே என்னை மட்டும் படம் எடுக்காம விட்டுபுட்டீங்களே இது உங்களுக்கே நியாயமா?

    ReplyDelete
  45. summa தமாசுக்கு

    ReplyDelete
  46. சென்னையில் பதிவர் சந்திப்பு நடந்தது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாதிரி சந்திப்புகள் நடைபெறும்போது அண்டைமானில பதிவர்களையும் அழைப்பது நன்றாக இருக்கும் என்று தாழ்மையுடன் ஆலோசனை கூற விரும்புகிறேன்.. அனைத்து தமிழ் பதிவர்கள்க்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...