வித்தியாச கதைக்களன் எடுத்த படக் குழுவினருக்கு ஒரு சபாஷ் ! குறிப்பாய் இயக்குனர் மற்றும் வசனகர்த்தா இருவருமே நம்மை படம் இந்த அளவு கவரக் காரணம் ! விகடனில் இயக்குனர் பேட்டி வாசித்தேன். அதில் இயக்குனர் ஒரு முறை கூட குடிக்காதவர் என அறிந்து ஆச்சரியமாய் இருந்தது.
எத்தனை எத்தனை சுவாரஸ்ய பாத்திரங்கள் !
தத்துவம் பேசும், தகராறு செய்யும் மணி பாத்திரம் அருமை ! யாருமே ஹீரோ என்று இல்லாத இந்த படத்தில் கிட்டத்தட்ட இவரும், முதலாளி பெண்ணை காதலிக்கும் ரபீக்கும் தான் ஹீரோ போல் முக்கியத்துவம் உள்ள பாத்திரங்கள். பார் ஓனரை " மூர்த்தி, மூர்த்தி" என கூப்பிட்டு திட்டும், குடித்து விட்டு டாஸ்மார்க் வாசலிலேயே நிற்கும் மணி இயல்பான நடிப்பில் நம்மை பெரிதும் கவர்கிறார்.
அடுத்து காதல் தோல்வி என பாருக்குள் முதல் முறை வந்து குடிக்கும் இளைஞன். எல்லோரையும் அலறி ஓட வைக்கும் ஒருவரையே அவன் காதல் கவிதை சொல்லி ஓட வைப்பது அமர்க்களம் ! " இறந்து விடு என்று சொல்; என்னை மறந்து விடு என்று சொல்லாதே " என அவன் சொல்லும் கவிதை, டி. ஆர் பாணியில் பேசுவது நன்கு சிரிக்க வைக்கிறது !
என்னை மிக அதிகம் சிரிக்க வைத்தவர்கள் ராமன் மற்றும் அனுமான் வேடம் போட்ட படி வந்து குடிப்போர் தான். அவர்கள் வரும் பத்து நிமிடங்களும் மிக ரசித்தேன். அவர்களுக்குள் நடக்கும் பேச்சு, குடிகாரர்கள் அவர்களிடம் வந்து ஆசி கேட்பது என அனைத்தும் அட்டகாசம் !
பாரில் வேலை பார்க்கும் ஒருவன் அடிக்கடி " நான் டிகிரி ஹோல்டர் தெரியுமா? நல்ல வேலைக்கு போயிடுவேன்" என சொல்வது, பாரில் இருப்போருக்குள் சண்டை வந்தாலும், அவர்களில் ஒருவரை யாரேனும் அடித்தால், அனைவரும் சேர்ந்து எதிர்ப்பது என ரியலிசதுக்கு மிக அருகில் உள்ளது படம் !
கடைக்கு வருவோரிடமே காசு கரக்ட் பண்ணி குடிக்கும் சின்னராசு பாத்திரம் போல் நிஜத்தில் ஆட்கள் உண்டு எனினும், இவரை பாடகராக்கி ஆங்காங்கு பாட வைக்கும் போது தான் நாம் சினிமா பார்க்கிறோம் என்பது நினைவுக்கு வருகிறது
காலையில் கடை திறக்கும் முன்பே வந்து காத்திருப்போர் பேசுவது மிக அழகாய் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் அங்கு நின்று கொண்டு punctuality பற்றி பேசுவதும், அங்கு நிற்போரின் பொறுமையின்மையும் மிக இயல்பாய் காட்டியுள்ளனர்.
"காய்கறி பழசா கொஞ்சம் அழுகி போய் இருக்கு " என்று கடை ஓனரிடம் சொல்லும் போது " குடிகாரனுங்களுக்கு இது போதும்" என்று அவர் சொல்வது அதிர வைக்கிறது !
இத்தகைய கடைகளில் தமிழை தப்பு தப்பாய் தான் எழுதி இருப்பார்கள். இந்த கடையில் " சிறுநீர் களிக்குமிடம் " என்று "களிப்பாய்" சொன்னது செம ! அதிலும் தண்ணி அடித்து முடித்து விட்டு ஆனந்தமாய் சிறுநீர் கழிப்பவரின் முகபாவத்தை கூட ஒரு முறை காட்டுகிறார்கள் !
குறைகள் என்று பார்த்தால்
முழுக்க முழுக்க மதுபான கடையை ஒட்டியே சுழுலும் போது சில நேரம் போர் அடிக்கவே செய்கிறது.
கதை என ஒன்று இருந்திருக்கலாம். இருந்தால் தாக்கம் இன்னும் அதிகம் இருந்திருக்கலாமோ என்னவோ !
பலரும் "ம" - வில் துவங்கும் கெட்ட வார்த்தையை ( முடியை குறிப்பது) அடிக்கடி சொல்வது உறுத்துகிறது. கெட்ட வார்த்தை பேசுவதை காட்டினால் தான் ரியலிசமா என்ன? படத்துக்கு " A" சான்றிதழ் வழங்கிய சென்சார் இந்த வார்த்தை பத்துக்கும் மேற்பட்ட முறை பேசுவதை கட் செய்யாமல் விட்டது ஏனோ?
குடிகாரர்களுடன், குடிக்காமல் இருக்கும் ஒரு நண்பன் அவர்கள் குடிக்கும் நேரத்திலும் அருகில் இருப்பான். இவன் சைட் டிஷ்களை மட்டும் சாப்பிட்ட படி அவர்கள் பேசுவதை பார்த்து சிரித்தபடி இருப்பான். அத்தகைய பாத்திரம் படத்தில் காட்டப்படாதது சற்று வருத்தமே.
குடியை பற்றி பேசுவது சரி. திடீரென குழந்தை தொழிலாளர் பிரச்சனை, அரவாணிகள் கஷ்டம், கம்யூனிசம் என கருத்து சொல்ல பார்க்கும் போது " ஏன்ன்ன்ன்?" என்று கேட்க தோன்றுகிறது.
எனக்கென்னவோ அவ்வப்போதாவது குடித்தவர்களுக்கு மட்டுமே படம் பிடிக்கும் என தோன்றுகிறது. சுத்தமாக குடிக்காதோருக்கும் பெண்களுக்கும் படம் பிடிப்பது சந்தேகமே !
நிறைவாக: மிக வித்யாசமான முயற்சி இந்த மதுபானக்கடை ! இந்த டீமிடம் நல்ல விஷயங்களை வருங்காலத்தில் எதிர்பார்க்கலாம் !

வணக்கம்...நேத்து புல்லா..) இதுல இருந்து இருப்பீங்க போல...விமர்சனம் நச்..
ReplyDeleteஎப்பவும் வான வில்லில் ஊறுகாய் போல விமர்சனம் எழுதி இருப்பீர்கள்..இப்போ...முழு விமர்சனமா...?
ReplyDelete//எனக்கென்னவோ அவ்வப்போதாவது குடித்தவர்களுக்கு மட்டுமே படம் பிடிக்கும் என தோன்றுகிறது. சுத்தமாக குடிக்காதோருக்கும் பெண்களுக்கும் படம் பிடிப்பது சந்தேகமே !//
ReplyDeleteஅனேகமா உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்...எப்படியோ போட்டு வாங்கிட்டேன்...?
கோவை நேரம்
ReplyDelete//எப்பவும் வான வில்லில் ஊறுகாய் போல விமர்சனம் எழுதி இருப்பீர்கள்..இப்போ...முழு விமர்சனமா...?//
நல்ல படத்துக்கு சுருக்கமான விமர்சனம் போதாது என்பதால் முழு விமர்சனம் !
அப்புறம் வீட்டம்மா கிட்டே எனக்கு அடி வாங்கி தர்றதுன்னு முடிவோட இருக்கீங்க போல :)
//முழுக்க முழுக்க மதுபான கடையை ஒட்டியே சுழுலும் போது சில நேரம் போர் அடிக்கவே செய்கிறது. ///
ReplyDeleteநமக்கு நாள் முழுக்க அங்கேயே இருந்தாலும் போர் அடிக்க மாட்டேங்குது...அடடா...உண்மைய சொல்லிட்டேனே...
பரவாயில்லையே..ரொம்ப பயப்படறீங்க...ஓகோ...அவங்க தான் இந்த ப்ளாக் எடிட்டர் ஆ//?
ReplyDelete///குடிகாரர்களுடன், குடிக்காமல் இருக்கும் ஒரு நண்பன் அவர்கள் குடிக்கும் நேரத்திலும் அருகில் இருப்பான். இவன் சைட் டிஷ்களை மட்டும் சாப்பிட்ட படி அவர்கள் பேசுவதை பார்த்து சிரித்தபடி இருப்பான். அத்தகைய பாத்திரம் படத்தில் காட்டப்படாதது சற்று வருத்தமே.//
ReplyDelete//
சரியா சொல்லி இருக்கீங்க..நாம லாம் அந்த ஜாதின்னு சொன்னா யார் நம்ப போறா..?
நல்ல விமர்சனம்.
ReplyDeleteநன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
கோவை நேரம் said...
ReplyDeleteபரவாயில்லையே..ரொம்ப பயப்படறீங்க...ஓகோ...அவங்க தான் இந்த ப்ளாக் எடிட்டர் ஆ//
மேடம் தினம் ஒரு முறை ப்ளாக் பக்கம் வந்து எட்டி பாப்பாங்க. பையன் ஒழுங்கா இருக்கானா என. அப்போ யார் யார் நல்ல மக்கள்; யார் யார் கெட்டவர்கள் என கணக்கெடுப்பாங்க.
"யாருங்க இந்த கோவை நேரம்; அவரு குடிப்பாரு போலருக்கு ; அவர் கூட சேராதீங்க" என்று இன்னிக்கு சொன்னாலும் சொல்லலாம் :))
இது மாதிரியான படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும் என்பதே விருப்பம்.சினிமாக்கள் நம் கலாச்சாரத்தை பிரதிபலிப்பவைதானே?நல்ல் பதிவு வாழ்த்துக்கள்/
ReplyDeleteபார்க்கவில்லை...
ReplyDeleteவிமர்சனம், படம் பார்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகிறது ...
நன்றி...(TM 2)
அட பார்த்துடலாம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete
ReplyDeleteநிறைவாக: மிக வித்யாசமான முயற்சி இந்த மதுபானக்கடை ! இந்த டீமிடம் நல்ல விஷயங்களை வருங்காலத்தில் எதிர்பார்க்கலாம் !//
மிக அருமையாக விமர்சனம் செய்துள்ளிர்கள்
தியேட்டருக்குப்போய் படம் பார்த்து
வெகு நாட்களாகிவிட்டது
கதை இல்லாமல் கதா நாயகன் இல்லாமல் இருப்பது கூட
ஒரு சிறப்புதான் என நினைக்கிறேன்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
இது முழுநீளப் படமா அல்லது குறும்படமா?
ReplyDeleteமுழுநீளப்படம் என்றால், கதை வேறு இல்லை என்று கூறுகிறீர்கள், போரடிக்கத்தான் செய்யும். கதைக்களனைத் தேர்வு செய்வதில் காட்டிய ஆர்வம் கதையை முடிவு செய்வதில் காட்டவில்லையோ?
இன்னும் பார்க்கலை இனி மேல் தான் பார்க்கணும் சார்..
ReplyDeleteமிக எளிமையான விமர்சனம் சார்
//திடீரென குழந்தை தொழிலாளர் பிரச்சனை, அரவாணிகள் கஷ்டம், கம்யூனிசம் என//
ReplyDeleteமுடிவில் வரும் சாதி பிரச்னையை ஏன் விட்டு விட்டீர்கள்?.அவன் வேதனை வார்த்தைகளை பற்றி குறிப்பிட்டால் தீண்டாமை பிரச்னை வந்து விடுமென நாகரீகமாய் ஒது(டு)க்கி விட்டீர்கள்.
அப்புறம் இந்த படம் திரு. நாஞ்சில் நாடன் எழுதிய "உண்ணற்க கள்ளை"
என்ற கட்டுரையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப் பட்டது.
அந்த மூலத்தின் முகவரி
http://nanjilnadan.com/2011/10/27/உண்ணற்ககள்ளை/
படித்துதான் பாருங்களேன்.
வித்தியாசமான படத்தை பற்றிய சிறப்பான அலசல்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html
விமலன் said...
ReplyDeleteஇது மாதிரியான படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும் என்பதே விருப்பம்.சினிமாக்கள் நம் கலாச்சாரத்தை பிரதிபலிப்பவைதானே?
**********
உண்மை விமலன் ! நன்றி !
தனபாலன் சார்: நன்றி
ReplyDeleteஹாரி பாட்டர்: பாருங்க நண்பா
ReplyDeleteரமணி சார்: சென்னைக்கு வரும்போது சொல்லுங்க நல்ல படம் சேர்ந்து தியேட்டரில் பார்க்கலாம்
ReplyDeleteவெங்கட ஸ்ரீநிவாசன் : முழு நீள படம் தான். டாஸ்மார்க்கில் ஒரு நாள் நிகழ்வை சில பாத்திரங்களை மையமாய் வைத்து சொல்லியிருக்கிறார்கள் வித்தியாச முயற்சி தான்
ReplyDeleteஅரசன்: நன்றி
ReplyDeleteசேக்காளி: சொல்ல கூடாது என்றெல்லாம் இல்லை.
ReplyDeleteபடம் முடிந்ததும் நாஞ்சில் நாடன் கட்டுரை ஒன்றின் அடிப்படையில் எடுத்த படம் என போட்டார்கள்.
பெயரைப் பார்த்தால் உள்ளே வர பயமாகத்தான் இருக்கின்றது :))))
ReplyDeleteநல்ல அலசல்.
padam paarkka thuundum vimarsanam... thallaadi nadakka vaikkirathu theaterai nokki
ReplyDeleteஇப்படத்தின் விமர்சனத்தினை வேறொரு தளத்திலும் படித்தேன். பார்க்கலாமெனத் தோன்றுகிறது. ...
ReplyDeleteவிரைவில் பார்க்க முயல்கிறேன்.
மாதேவி: ஆம் பெண்களுக்கு படம் பிடிப்பது சந்தேகமே
ReplyDeleteமதுரை சரவணன்: நன்றி நண்பா
ReplyDeleteவெங்கட்: நன்றி பாருங்கள்
ReplyDelete