Saturday, August 11, 2012

சென்னை கார்பரேட் க்ளப்-ஏமாற வேண்டாம் ! ஜாக்கிரதை !

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பொருட்காட்சி சென்றிருந்தேன். ஒரு ஸ்டாலில் சென்னை கார்பரேட் கிளப் ஸ்டால் இருந்தது. அதனை பொருட்படுத்தாமல் நகர பார்க்கும் போது " சார் சும்மா பாருங்க" என்று கூப்பிட்டனர். " சார்.. லைப் டைம் ஸ்கீம் சார். எப்ப வேண்ணா இந்தியா முழுக்க இருக்க எங்க க்ளப்புக்கு போய் தங்கலாம். சென்னையா இருந்தா இலவசம் சார். மத்த இடம்னா குறைந்த காசில் ரூம் தருவோம் சார். சாப்பாடு, சுவிம்மிங் பூல் எல்லாம் இருக்கு சார்" என்றனர்.

அந்த ஸ்கீமை படிக்கும் போதே " இந்த ஸ்கீம் இன்னிக்கு லாஸ்ட் நாள் சார் . பத்தாயிரம் ரூபாய் ஒன் டைம் பணம் கட்டினால் போதும்" என்றனர். அவ்வளவு பணம் இல்லை என்றால், செக் இருந்தால் குடுங்க. இல்லாட்டி அப்ளிகேஷன் பில் பண்ணி கையெழுத்து போட்டுடுங்க; நாளைக்கு வந்து பணம் அல்லது செக் வாங்கிக்குறோம் என்றனர். கையில் செக் இருந்தது. குடுத்து விட்டு ரீசிப்ட் வாங்கி கொண்டு வந்தேன் .

அடுத்தடுத்து நடந்த ஏமாற்று வேலைகளை பாருங்கள் :

ஓரிரு வாரத்தில் மெம்பர்ஷிப் கார்டு வந்தது. அதில் "மெம்பர்ஷிப் ஐந்து வருடத்துக்கு மட்டுமே" என்று கூறப்பட்டு இருந்தது. எனக்கு ஸ்கீம் விற்றவரிடம் போன் செய்து கேட்க, " தப்பா பிரின்ட் ஆகியிருக்கும். மாற்றி தருகிறேன்" என்றார். அதன் பின் பத்துக்கும் மேற்பட்ட முறை போன் செய்தும், நேரில் சில முறை சென்றும் மாற்றி தரவே இல்லை.

சரி ஒரு முறை இவர்களின் ரிசார்ட் போகலாம் என ஒரு ஞாயிறு அன்று படப்பையில் உள்ள இவர்கள் ரிசார்ட்டுக்கு என் குடும்பமும், மச்சான் குடும்பமும் சென்றோம். ரிசார்ட்டை நேரில் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகிட்டோம். அங்கு இருந்த அத்தனை பேரும் குடித்து கொண்டிருந்தனர். பெண்கள் யாருமே இல்லை. நாங்கள் மட்டுமே பெண்களுடன் சென்றிருந்தோம்.

அப்படியே திரும்பிடலாமா என்கிற எண்ணம் உந்தி தள்ளினாலும், வந்தது வந்துட்டோம், குளிச்சிட்டாவது போவோம் என சுவும்மிங் பூல் சென்றோம்.  ஆண்களும், குட்டி பசங்களும் குளிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலே எல்லாருக்கும் தோல் எரிய ஆரம்பித்தது. தண்ணியை என்னிக்கு மாத்தினாங்களோ ! வெறுத்து போய் கிளம்பி விட்டோம். மேலே ஏறியதும் அனைவர் கண்ணும் நாவப்பழம் கலரில் சிகப்பாய் இருந்தது. அப்புறம் தான் யோசித்தால் எங்களை தவிர யாரும் குளத்தில் இறங்கலை. எல்லாருக்கும் இவங்களை பத்தி தெரியும் போல இருக்கு !

இனி இவர்களிடம் லைப் டைம் கார்டு கேட்டு என்ன பிரயோஜனம் என அதன் பின் அந்த கார்டை தூக்கி கடாசி விட்டேன்.

இது நடந்து இரண்டு, மூன்று வருடம் இருக்கும். சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் கார்பரேட் கிளப் மெம்பர்ஷிப் வாங்கியிருப்பதாக பெருமையுடன் சொன்னார். அதே கதை.

" இன்னிக்கு ஸ்கீம் லாஸ்ட். இன்னிக்கு போட்டா தான் இந்த ரேட். லைப் டைம் மெம்பர்ஷிப்" என்று சொல்லி யோசிக்க நேரம் தராமல் பணம் பிடுங்கி உள்ளனர். என்னிடம் முதலில் அவர் பேசும் போது மெம்பர்ஷிப் கார்டு அவருக்கு வரலை  !  " வரும் ஆனா அஞ்சு வருஷம்னு தான் போட்டுருக்கும் பாருங்க " என்றேன். " அதெப்படி அஞ்சு வருஷம்னு போட முடியும். என்னிடம் லைப் டைம் என சொன்னார்களே" என என்னை கோபித்தார். சில நாள் கழித்து " ஆமாங்க. அஞ்சு வருஷம்னு போட்டு தான் கார்டு குடுத்திருக்காங்க. சண்டை போட்டு கிட்டு இருக்கேன் " என்றார். சேம் பிளட் !!

வருடங்கள் மாறினாலும் இவர்கள் ஏமாற்றும் முறை மாறவே இல்லை !

இணையத்தில் தேடினால் இவர்களை பற்றி கதை கதையாய் ஏராளம் இதே போல் தகவல் கிடைக்கிறது !


http://www.consumercomplaints.in/complaints/chennai-corporate-club-c119266.html

http://www.mouthshut.com/product-reviews/Chennai-Corporate-Club-Madras-Chennai-reviews-925071434


*****
தே போல் இன்னொரு சம்பவம். சமீபத்தில் ஒரு போன் கால் வந்தது. சென்னை புக் பேரில் எனது விசிட்டிங் கார்ட் போட்டதாகவும், அது லக்கி டிராவில் செலெக்ட் ஆகி பரிசு விழுந்துள்ளதாகவும், பரிசு வாங்க வேண்டுமெனில் மனைவியுடன் வந்தால் தான் பரிசு தர முடியும் என்றும் சொன்னார்கள். "மனைவி வர மாட்டார். நான் மட்டும் தான் வர முடியும் " என்றதும் " உங்களுக்கு பரிசு கிடையாது போனை வையுங்க" என வைத்து விட்டார்.

சில நாளில் முக நூலில் ஒரு நண்பர் இதே நிறுவனம் பற்றி எழுதி இருந்தார். அதே போன் கால். "புக் பேரில் லக்கி டிராவில் செலெக்ட் ஆகி பரிசு .. மனைவியுடன் வந்தால் மட்டும் ஒரு நினைவு பரிசு தருவோம் " என்று போன் வந்து சென்றதாகவும், அங்கு போனால், இது போன்ற ஒரு கிளப் மெம்பர்ஷிப் தந்து, அதன் விலை இருபதாயிரம், நீங்கள் லக்கி டிராவில் செலக்ட் ஆனதால் உங்களுக்கு பத்தாயிரம் என்று பேசினராம் ! அழகான பெண்களை வைத்து " உங்களால் பத்தாயிரம் செலவு பண்ண முடியாதா? உங்க குடும்பத்துக்காக இவ்வளவு கூட செலவு பண்ண முடியாதா? " என்றெல்லாம் பேசினால் கொஞ்சம் பேராவது பணம் கட்டி விடுகின்றனர்.

இந்த கிளப்னு பேர் வச்சிருக்கவங்க எல்லாம் விதம் விதமா ஏமாத்துறாங்க ! பாத்து சூதனமா இருந்துக்குங்க மக்களே !

*****

டிஸ்கி: நாளைக்கு யாரோ பிரபல (!!??) பதிவர் ஒருவருக்கு பிறந்த நாளாம். யாருன்னு யோசிங்க. நாளை பதிவில் சொல்றேன் !

58 comments:

  1. உங்கள் அனுபவம், விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதை கூறுகிறது... நன்றி... (TM 2)

    ReplyDelete
  2. நல்ல எச்ச்ரிக்கைப் பதிவு
    தங்கள் பதிவைப் படித்தவர்கள்
    நிச்சயம் ஏமாறமாட்டோம்
    பகிர்வுக்கு நன்றி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி....

    ReplyDelete
  4. //ஜாக்கிரதை .//
    சரியா சொன்னீர்கள் .

    ReplyDelete
  5. ஏமாற மக்கள் தயாரா இருக்கும் போது விதம் விதமா ஏமாத்துறாங்க ....தங்கள் பதிவைப் படித்தவர்கள்
    நிச்சயம் ஏமாறமாட்டார்கள் என்பது நிச்சயம்

    ReplyDelete
  6. மோகன் உங்களைப் போன்ற சட்டம் தெரிந்தவர்கள் இப்படி கேட்காமல் கார்டை தூக்கிப் போட்டு விட்டு, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, உங்களுக்கான காம்பென்ஷேஷனை வாங்கியோ, அல்லது அவர்களை தோலுரித்தோ காட்டியிருந்து பதிவிட்டிருக்கலாம். சட்டம் தெரிந்த நீங்களே இப்படி இருப்பதால் தான் இன்னும் நாலு கம்பெனிகள் ஏமாற்ற் கிளம்புகிறார்கள். கேளுங்க சார்.. உங்கள் உரிமைகளை கேளுங்க.. கேட்டால் நிச்சயம் கிடைக்கும்.

    ReplyDelete
  7. கேபிள்: இவனுங்க லைப் டைம் கார்டுன்னு வாயில தான் சொல்லுவாங்க. ரைட்டிங்கில் தருவதில்லை. கோர்டுக்கு போனா ரைட்டிங்கில் இல்லாம நம்ம கேஸ் ஜெயிக்காது. அவனுங்க "அஞ்சு வருஷம்னு சொல்லி தான் வித்தோம்" னு பல்டி அடிச்சிடுவாங்க. (இவ்ளோ திருட்டு தனம் பண்றவங்க அதை பண்ண மாட்டாங்களா?)

    அதோட இவனுக facility- ரெண்டாவது முறை போற அளவே வொர்த் இல்லை ! லைப் முழுக்க எங்கேந்து போறது?

    ReplyDelete
  8. நாளைக்கு யாரோ பிரபல (!!??) பதிவர் ஒருவருக்கு பிறந்த நாளாம். யாருன்னு யோசிங்க. நாளை பதிவில் சொல்றேன் !

    தங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !

    ReplyDelete
  9. கேபிள்ஜி சொன்னதேதான் என்னுடைய கருத்தும்.

    உங்கள் கருத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை :)) ஒரு சட்டம் தெரிந்த நீங்கள் எழுத்துப்பூர்வமாக சரிபார்த்திருக்க வேண்டும். அதை விடுத்து சட்டம் தெரியாத எங்களைப் போன்று பேசுவது வியப்பளிக்கிறது.

    இன்னும் பெட்டரான ஏமாறாத சட்ட விழிப்புணர்வு பதிவுகளை உங்களிடம் அன்புடன் எதிர்பார்க்கிறேன் :))

    ReplyDelete
  10. இதற்காகவே சட்டம் படித்துவிடலாமா என்ற எண்ணம் தோன்றி இருக்கிறது # நான் என்னைய சொன்னேன் :))

    ReplyDelete
  11. ஹீரோ ஷங்கர்: நடந்ததை நடந்த மாதிரி தானே சொல்ல முடியும்? இந்த பதிவை படிப்பவர்கள் இனி வேறு இடத்தில் இப்படி ஸ்கீம் எடுத்தாலும் ரைட்டிங்கில் லைப் டைம் என போட்டிருக்கா என பார்த்து வாங்கணும். நான் கத்துக்கிட்டது இது தான்.

    ReplyDelete
  12. எப்படியெல்லாம் பொழப்ப நடத்துறாங்க..

    ReplyDelete
  13. லக்கி டிரா என்கிறார்களே, அதற்கும் லக்கிலுக்கும் எந்த தொடர்புமில்லை என்பதை இங்கே முன்னெச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  14. நல்ல தொரு எச்சரிக்கை தரும் பதிவு மோகன் சார்

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களின் கொட்டம் தொடரும்

    ReplyDelete
  15. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களின் கொட்டம் தொடரும் அதை தொடர விடாமல் செய்வது மக்களின் கையில் இருக்கிறது

    ReplyDelete
  16. நீங்க போட்டிருக்கும் ரிசார்ட் படம் நல்லாயிருக்கே சார்!! நீங்களாவது நேரில் பார்த்து பேசி எமாந்திருக்கிரீர்கள். சில சமயம் இ-மெயிலில்/SMS -ல் லண்டனில் ஒரு ஆள் உங்க மேல ஒரு மில்லியன் ஈரோ எழுதி வச்சிட்டு செத்துட்டான், அதை உங்க பேருக்கு அனுப்ப ஆக வேண்டிய செலவுக்கு மட்டும் கொஞ்சம் பணம் தேவைப் படுது என்று சொல்லி, முதலில் ஒன்றரை லட்சம் அனுப்பு, அப்புறம் ரெண்டு.......... என்று கிட்டத் தட்ட பன்னிரெண்டு லட்சம் ரூபாயை கறந்து விட்டிருக்கிறார்கள். எனக்கு இதில் வியப்பு என்ன என்றால், இணையத்தில் தனது வங்கிக் கணக்கை இயக்கத் தெரிந்து அதில் யாருக்கு வேண்டுமானாலும் பணப் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு இருக்க வேண்டுமானால் அவர் பாமரனாக இருக்கவே முடியாது, சராசரிக்கும் மேலாக விஷயம் தெரிந்தவராக இருக்க வேண்டும். அப்படி இருந்தும், இப்படி சீப்பாக எப்படி ஏமாந்து போகிறார்கள்? இவர்களே இப்படி என்றால், சராசரி மக்கள் எப்படி இருப்பார்கள்? வருடத்திற்கு நாலு முறை சீட்டுக் கம்பனிக்காரன் பணத்தை சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டிவிட்டான் என்று பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் செய்தி வந்தாலும், அடுத்த சீட்டுக் கம்பனிக்காரன் வந்ததும், கூட்டம் கூட்டமாய் ஓடிப்போய் பணத்தை முதலீடு செய்கிறார்கள், அதில் அரசில் உயர் பதவியில் இருப்பவர்களும் அடக்கம், இவர்களுக்கு இதற்கும் மேல் என்ன வகையில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த முடியுமோ தெரியவில்லை. ஆசை கண்ணை மறைக்கிறது, அவ்வளவுதான்.

    ReplyDelete
  17. தாஸ்: வித விதமா எமாந்துகிட்டு தான் இருக்கோம்

    //நீங்க போட்டிருக்கும் ரிசார்ட் படம் நல்லாயிருக்கே சார்!! //

    இணையத்தில் இருந்து எடுத்த படம். அநேகமாய் இந்த படம் ரிசார்ட் துவங்கிய போது எடுத்ததாய் இருக்கும். இப்போ ஹும் :(

    ReplyDelete
  18. நல்லதொரு எச்சரிக்கைப் பதிவு. ஏமாற்றுபவர்கள் என்றும் கில்லாடிகளாகத்தான் இருக்கிறார்கள். நாம்தான் உஷாராக இருக்க வேண்டியுள்ளது, உங்களுக்கு என் அட்வான்ஸ் இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. Anonymous1:35:00 PM

    அய்யாசாமிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  20. as i read one ur post abt night shift(sivakumar interview)......in puthiya parvai........r u seen it.......besides tis post is alert fr others .........

    ReplyDelete
  21. இந்தியா முழுவதும் சுத்திக்காட்டுறேன்..!அப்படின்னு கோயமுத்தூர்ல ஒரு டிராவல் ஏஜன்சி இப்படித்தான் பல பேரை ஏமாற்றினாங்க....!

    ReplyDelete
  22. My friend also got the membership from CORPORATE CLUB, And he got the 1200 SQ.FT Land in near KAVERIPAKKAM.
    He got registered also , What you are telling is new to me, May be this friend never visited that Place what you are telling about PADAPPAI,

    ReplyDelete
  23. முன்கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

    மொபைல், மெயில் ஆகியவற்றில் வரும் மெசேஜ்களை எல்லாம் பார்த்தவுடனே டெலிட் பண்ணிவிடுவேன். இதோ, இப்போது இந்த கமெண்ட்டை டைப் பண்ணும்போது கூட மொபைலில் ஒரு மெசேஜ் (#என்னா டைமிங்டா!) . நான் அஞ்சு லட்சம் பவுண்ட்ஸ் ஜெயிச்சிருக்கேனாம். என்னோட டீடயில்ஸ் icccricket@hotmail.com என்ற மெயிலுக்கு அனுப்ப வேண்டுமாம். போங்கடா டேய்!

    ரிசார்ட்டுகெல்லாம் குடும்பத்துடன் போவதென்றால், யாரிடமாவது விசாரித்துவிட்டு போங்க மோகன்.

    ReplyDelete
  24. எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க! நல்ல விழிப்புணர்வு பதிவு! நன்றி!
    இன்று என் தளத்தில்
    மனம் திருந்திய சதீஷ்
    அஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்!

    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  25. ஏமாற்றுவதில்தான் எத்தனை வகை? புத்தகக் கண்காட்சி என்று இல்லை எங்கு லக்கி டிரா என்று டிக்கெட்டில் முகவரி போன்ற விவரங்கள் கேட்டிருந்தாலும் பலநாட்கள் கழித்துக் கூட இந்த மாதிரி போன்கால்கள் வரும்! மனைவி இல்லை என்றால் எதாவது ஒரு ஜோடியுடன் கூட வரலாம் என்பார்கள். நண்பர்களைக் கூட அழைத்து வரலாம் என்பார்கள்! கொஞ்ச நேரம் அவர்களோடு ஃபோனில் வருவது போலவே பாவ்லா காட்டி பொழுது போக்குவது உண்டு! போவதெல்லாம் இல்லை!!

    ReplyDelete
  26. பிரபலப் பதிவருக்கு பிறந்தநாள்? யாராயிருந்தாலும் அட்வான்ஸ் வாழ்த்துகள்!

    ReplyDelete
  27. எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்.

    ReplyDelete
  28. நீங்கள் ஏமாற்றப்பட்டதை ஒரு பாடமாகச் சொல்ல முன்வந்த நேர்மைக்கும் துணிவுக்கும் பாராட்டுக்கள்.
    ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோரைக் குறை சொல்லிப் பயனில்லை என்பது என் கருத்து. இருந்தாலும் இதைப் போன்ற கூட்டங்களைப் பற்றிக் குறைந்த பட்சம் போலீஸ் புகார் கொடுத்து வைப்பது நல்லது - consumer affairs போல ஏதாவது இலாகா உள்துறை அமைச்சர் பதவியின் இருந்தால் அங்கேயும் புகார் தரலாம். உங்களைப் போன்றவர்கள் புகார் கொடுத்தால் தான் உண்டு.

    ReplyDelete
  29. சிறந்த பதிவு சார்.. விழிபுனர்வூட்டும் பதிவு

    ReplyDelete
  30. சில இடங்களில் இது ஏமாற்று வேலை என்று தெரிந்தும் இது அப்படி இல்லை என்ற உறுதிமொழியை நம்பி ஏமாறுவது சகஜமாகி விட்டது.

    ReplyDelete
  31. ஆஹா...ஆக 5 வருஷம் மட்டும் தோலெரிஞ்சா பத்தாது...வாழ்நாள் முழுவதும் எரியணும்னு ஆசை இருக்கா?

    அடப் போங்கண்ணே!! சரி இன்னும் அந்த கார்டு இருந்தா குடுங்க...ஒரு காட்டு காட்டிடுவோம்.


    பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. Hi, Useful post to everyone..

    ReplyDelete
  33. நன்றி தனபாலன்

    ReplyDelete
  34. ரமணி சார் நன்றி

    ReplyDelete
  35. ஆட்டோமொபைல்: நன்றி சாரே

    ReplyDelete
  36. நண்டு @ ராஜசேகர் : நன்றி

    ReplyDelete
  37. அவர்கள் உண்மைகள்: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  38. ராஜேஸ்வரி: அய்யாசாமி பிறந்த நாளை சரியே கணித்தமைக்கு நன்றி

    ReplyDelete
  39. கோவி: ஆமாங்கோ :((

    ReplyDelete
  40. லக்கி: ரைட்டு :)

    ReplyDelete
  41. சரவணன்: நன்றிங்க.

    ReplyDelete
  42. பாலகணேஷ் said :

    //ஏமாற்றுபவர்கள் என்றும் கில்லாடிகளாகத்தான் இருக்கிறார்கள். நாம்தான் உஷாராக இருக்க வேண்டியுள்ளது //

    ஆமாம் சார்

    ReplyDelete
  43. பாலஹனுமான்: மிக நன்றி. போனில் தாங்கள் நெடு நேரம் பேசியமைக்கும் தான். விரைவில் நேரில் சந்திப்போம்

    ReplyDelete
  44. சுரேஷ்: கோயமுத்தூர்லயும் இப்படி ஒரு ஏஜன்சி இருக்கா :((

    ReplyDelete
  45. சென்னை லோக்கல்": அவர்கள் நிலம் தருவதாக சொல்வது பற்றியும் அதில் ஏமாற்று வேலை இருக்கா எனவும் தெரியலை நண்பா. விசாரியுங்க

    ReplyDelete
  46. ரகு: உங்கள் அனுபவம் சொன்னதுக்கு தேங்க்ஸ்

    ReplyDelete
  47. சுரேஷ்: நன்றிங்க

    ReplyDelete
  48. ஸ்ரீராம்

    //கொஞ்ச நேரம் அவர்களோடு ஃபோனில் வருவது போலவே பாவ்லா காட்டி பொழுது போக்குவது உண்டு! //

    அடேங்கப்பா ! எனக்கு அத்தகைய போனில் பேச பொறுமையே இருக்காது. சீக்கிரம் கட் பண்ணிடுவேன்

    ReplyDelete
  49. நன்றி மாதேவி

    ReplyDelete
  50. அப்பாதுரை: நீங்கள் சொல்வது உண்மைதான் யோசிக்கிறேன் நண்பரே

    ReplyDelete
  51. சீனு: நன்றிங்க

    ReplyDelete
  52. முரளி சார் : ஆம் நன்றி

    ReplyDelete
  53. சுரேகா : ஹா ஹா பேசுறேன் சுரேகா

    ReplyDelete
  54. வடிவேலன் : நன்றிங்க

    ReplyDelete
  55. சென்ற வருடம் திருச்சி சென்ற பொழுது என் உறவினருக்கு இது போல ஒரு தொலைபேசி வந்தது . நானும் அவருடன் சென்றேன். ஆனால், எங்களுக்கு அவர்கள் பேசும் பொழுதே சற்று பொறிதட்ட எழுத்துப் பூர்வமாகக் கேட்கச் சொன்னேன். அவர்கள் பின்னர் தருவதாகக் கூற, நாங்கள் பின்னரே புக் செய்து கொள்கிறோம் என்றோம். அவர்கள் நாளை டிஸ்கௌண்ட் கிடையாது என்று கொக்கிப் போடப் பார்த்தார்கள். ஆனால், நாங்கள் மாட்டாமல் தப்பித்தோம்.

    ReplyDelete
  56. ஹஹஹா!! சிரிப்பு தான் சார் வந்தது இந்த பதிவு பார்த்ததும்.. நானும் ஒரு முறை இவர்களை நம்பி சென்று ஏமாந்து வந்து இருக்கிறேன்.. ஆறுதல் நான் எந்த மெம்பெர் ஷிப்-ம் ஆகவில்லை. ஆனால் நிறைய ரொம்ப அதிகமாகவே ஏமாந்தது இப்போது தான் தெரிகிறது... நான் அம்மா அப்பாவுடன் அவர்களின் அலுவலகம் சென்று ஏமாந்து gift பவுல் வங்கி வந்து இருக்கிறேன்.. பிறகு அவர்களை பற்றி தெரிந்தே சென்று gift பவுல் கூட கிடைக்காமல் நொந்து வந்தும் இருக்கிறேன்...

    ரொம்ப நல்ல பதிவு சார்... மற்றவர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க இது உதவும்.

    ReplyDelete
  57. மெம்பர் ஆகிட்டா அவுங்களுக்கு ஆயுசு அஞ்சே வருசம்தான்னு இருக்கலாம். அந்தத் தண்ணிரில் குளிச்சா அஞ்சு, ரெண்டு ஆகவும் செய்யும்:(

    ஏமாத்துகளுக்கு எல்லையே இல்லை!!!!

    எப்படியெல்லாம் யோசிக்கறாங்க பாருங்களேன்!!!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...