Wednesday, August 15, 2012

வானவில் 101: CM செல் - ஆண்ட்ரியா -யுவகிருஷ்ணா

CM செல்லை அணுகுவது எப்படி?

Facebook-ல் பார்த்த இந்த தகவல் உங்களுக்கு பயன்படும் என்பதால் பகிர்கிறேன்


முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையத்தளம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது . இங்குபுகார் அல்லது பெட்டிஷனை அப்ளை பண்ண உங்களுக்கு தேவையானது மின்னஞ்சல் முகவரி அல்லது கைப்பேசி எண் இருந்தால் போதும். இந்த முகவரியில் (http://cmcell.tn.gov.in/register.php
சென்றால் நீங்கள் யூஸர் ஐடி பாஸ்வோர்டை ரிஜஸ்டர் செய்து பெட்டிஷன் கம்பிளெயின்ட் எழுதுவது மட்டுமில்லாமல் இதன் அக்னலாஜ்மென்ட் உடனே உங்கள் மின்னஞ்சலுக்கு ரெஃபரன்ஸ் நம்பரோடு வரும் அது போக கைத்தொலைப்பேசிக்கு குறுந்தகவல் மூலமாகவும் வரும். இந்த முகவரியில்(http://cmcell.tn.gov.in/login.phpஉங்கள் பெட்டிஷன், கம்ப்ளெயின்டை நீங்கள் எந்த நிலையில் இருக்கிறது என டிராக் செய்ய முடியும். அது போக இந்த பெட்டிஷ்ன்களை அவசரகதியாக அந்த டிப்பார்டெமென்டுக்கும் ஃபார்வொர்ட் செய்ய தலைமை செயலகத்தில் தனிப்பிரிவு இயங்குகுறது.

கடிதம் மூலம் அனுப்ப வேண்டியவர்கள் இந்த முகவரிக்கு எழுதலாம்....

Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009. Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929 E-Mail : cmcell@tn.gov.in 


யுவகிருஷ்ணா பாராட்டிய மூன்று பதிவர்கள்

பதிவுலகில் கடந்த வாரம் நமக்கு செம வித்தியாசமான ஒன்றாய் இருந்தது.

நம்மை திட்டி வெளியான 2 பதிவுகளுக்கிடையே ஒரு ஆறுதல் இந்த சம்பவம். இதனை (கூகிள் பிளஸ்சில் இல்லாத) பலரும் கவனித்திருக்க வாய்ப்பு இல்லை.

மூத்த பதிவரான யுவகிருஷ்ணா தற்போது எழுதும் புது பதிவர்களில் நன்கு எழுதுவோர் என மூவரை குறித்து எழுதியிருந்தார். பிலாசபி பிராபகர், மோகன் குமார், ஆரூர் மூனா செந்தில் ஆகியோரே அவர் சொன்ன மூவர்.

வீடுதிரும்பல் பற்றி அவர் சொன்னது இதோ :

வீடு திரும்பல் மோகன் குமார்

பிளாக் எனும் ஊடகத்தை சரியாகப் பயன்படுத்துபவர்களில் இவரும் ஒருவர். எந்த விஷயத்தை எல்லாம் பதிவாக்குவது என்கிற வித்தை தெரிந்தவர். இவருடைய பதிவுகளில் காணப்படும் எக்ஸ்க்ளூஸிவ்னெஸ் முக்கியமானது. எல்லோருக்கும் தெரிந்த, எல்லோரும் அனுபவித்த விஷயங்களை திரும்பத் திரும்ப எழுதாமல் புதுசாக முயற்சிக்கிறார்.

பலவீனமென்றால் பதிவை எடிட் செய்யாமல் வெளியிடுகிறார் என்று நினைக்கிறேன். வார்த்தைச் சிக்கனம் அவசியம். சுண்டக்காய்ச்சிய பால்தான் சுவை.

நன்றி யுவகிருஷ்ணா ! நீங்கள் சொன்ன குறையை நீக்க முயல்கிறேன் !

ஆனந்த் கார்னர்

The 4 hardest task in life.

1. To return love for hatred.
2. To include the excluded.
3. To forgive without apology
4.. To be able to say I am wrong.

நாட்டி அஜூ கார்னர்

நண்பர்கள் தினத்துக்கு " Friendship band" வாங்கியிருந்தோம். அதில் ஒன்றை எடுத்து நாட்டிக்கு என்னோட பெண் கட்ட, நாட்டி அதனை உடனே இழுத்து கட்டை பிரித்து விட்டாள். பின் நன்றாக அந்த நூலை கடித்து விளையாடினாள். இதை பார்த்து விட்டு அஜூ எதோ புது விதமான உணவு நாட்டிக்கு மட்டும் தருகிறார்கள் என்று கிட்ட வந்து கூர்ந்து பார்த்தான். பின் இன்னொரு பக்கம் நூலை இழுத்து கடித்து பார்த்தவன், அதன் சுவை பார்த்து சாப்பிடும் சமாசாரம்
இல்லை என தெரிந்து ஏமாந்து விட்டான். நாட்டி இந்த நூலை வைத்து கொண்டு சுவாரஸ்யமாக விளையாடி கொண்டே இருந்தாள். அவ்வப்போது அஜூவும் அவளிடம் வந்து இந்த கயிறுக்காக சண்டை போடுவான். இப்படியாக இவர்களும் பிரண்ட்ஷிப் டே கொண்டாடி விட்டார்கள். இன்று வரை இன்னும் அந்த கயிறு வைத்து விளையாடி கொண்டுள்ளனர் இருவரும் !

இந்த குட்டி வீடியோவில் அவர்கள் விளையாடுவதை நீங்கள் பார்க்கலாம் !



அழகு கார்னர் : ஆண்ட்ரியா


ஆண்ட்ரியா பச்சை கிளி முத்துச்சரம் காலம் முதல் எனக்கு பிடித்த நடிகை. ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொருவர் இவரை சொந்தம் கொண்டாடுவார்கள். செல்வராகவன் சாப்டர் முடிந்தது என பார்த்தால் அடுத்து மயக்கம் என்ன செகண்ட் ஹீரோ சௌந்தர் என்றார்கள். இப்போது அனிருத் என்கிற குட்டி பையனுடன் இவரது படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன ! பாக்குறவங்க எல்லாம் அனிருத்தை திட்டி தீக்குறாங்க (பொறாமை தான். வேறென்ன?)

பதிவர் பக்கம்

வெங்காயம் என்கிற இந்த பதிவர் சமீப காலமாய் கவனம் ஈர்க்கிறார். அரசியல், அறிவியல், வரலாறு என அனைத்து டாபிக்கும் பிரித்து உரிக்கிற இடமாய் உள்ளது வெங்காயம் !

இவரை நமக்கு அறிமுகம் செய்தமைக்கு நண்பர் ஜெயதேவ தாசுக்கு தான் நாம் நன்றி சொல்லணும் !  

சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் : சிறு குறிப்பு 

** காலை கலைஞரில் லியோனி பட்டி மன்றம் ஓரளவு தான் பார்க்க முடிந்தது. பார்த்த வரை சுமாராய் தான் சிரிப்பு வந்தது. ஓஹோ ரகம் இல்லை !

## நீயா நானா சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில், பேசியவர்கள் அனைவர் பெயரையும் சொல்ல சொன்னார் கோபி. (சில வாரங்களுக்கு முன் நாம் "நீயா நானாவில் எல்லார் பெயரும் சொன்னால் என்ன?" என எழுதியது நினைவிருக்கலாம்) பார்ப்போம்.. தொடர்ந்து அனைவர் பெயரும் சொல்லவோ போடவோ செய்கிறார்களா என !

**   கும்கி படம் பற்றி எல்லா சேனலும் ஆள் ஆளுக்கு ஒரு நிகழ்ச்சி வச்சாங்க

##   இன்று பல டிவிக்களும் போட்ட படங்களில் உருப்படியான ஒரே படம் கலைஞரில் போட்ட கோ ! தொடர்ந்து பார்க்க முடியாமல் ஏகமாய் விளம்பரம் !

**  முதலில் அரவான் படம் இன்று ஒளிபரப்பாகும் என்று சொன்ன சன் பின்பு அதனை மாற்றி விட்டது. மம்பாட்டியான் படம் போட்டு, பார்த்தவர்களை வெட்டி கொன்றது !

##  ஜெயா டிவியில் நினைத்தாலே இனிக்கும் என்கிற நிகழ்ச்சிக்காக ஊர் ஊராய் சென்று அந்த ஊரில் உள்ள மக்களை பாட வைத்தனர். பொது இடத்தில் ஒரு பெஞ்ச் போட்டு, அதன் மீது ஏறி நின்று (பள்ளியில் பெஞ்ச் மேல் நிற்கும் மாணவன் போல் ) பாட வைத்தார்கள். பாடிய அனைவரும் மிக சுமாராகவே பாடினர் !

**  அட்ட கத்தி படம் பற்றி விஜய்யில் ஒரு கலந்துரையாடல் ! இயக்குனரின் குருநாதர் வெங்கட் பிரபு தன் நண்பர்கள் குழுவுடன் வந்திருந்தார். ஹீரோ- ஹீரோயின், இயக்குனர் வந்திருந்தனர். படம் பற்றி நம்ம பதிவர்கள் "படம் நன்றாக உள்ளது" என சொல்கிறார்கள். விரைவில் பார்க்கணும் !

47 comments:

  1. வானவில் வழக்கம் போல் வாசிக்க சுவையாய் இருந்தது மோகன் சார்
    CM செல் குறித்த பயனுள்ள தகவல் OK


    நான் இன்று லியோனி பட்டி மன்றம் சாலமன் பாப்பையா பட்டி மன்றம் பார்த்தேன் கும்கி படம் பற்றி பகிர்வு பார்த்தேன் எந்த சினிமாவும் பார்க்கவில்லை கரணம் விளம்பரங்கள் சுவாரஸ்யத்தை குலைத்து விடுவதால்

    ReplyDelete
  2. வானவில்லின் நிறங்கள் அனைத்தும் அருமை! சிறப்பான உபயோகமான தகவல் பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்

    தாயகத்தை தாக்காதே! கவிதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html

    சுதந்திர தின தகவல்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html

    ReplyDelete
  3. Anonymous6:51:00 PM

    நண்பர் யுவகிருஷ்ணா வீடு திரும்பல் குறித்து மிக அழகாகக் கூறியுள்ளார். வாழ்த்துக்கள்...

    உங்கள் இதயத்தைக் கொள்ளை கொண்ட தேவதைகள் லிஸ்டில் முதலில் அனுஷ்கா, இப்போது ஆண்ட்ரியாவா ? ஒகே...

    ReplyDelete
  4. அ போய் ஆ மேல விருப்பம் வந்து விட்டதா...! யுவ கிருஷ்ணா பாராட்டியிருப்பதற்கு வாழ்த்துகள். ஆனால் நீங்கள் புதிய பதிவரா?

    ReplyDelete
  5. சி எம் செல் அருமை ..
    பார்ப்போம் எத்தனை நாள் சிறப்பாக இயங்குகிறது என்று ..

    ஆண்ட்ரியா பிரச்சினை நீங்கள சொல்வது போல் பொறாமை தான் ..
    திறமை இருக்குறவன் தேன் மிட்டாய் சாப்புடுறான் ..

    வானவில் அட்டகாசமா இருந்துச்சி சார்

    ReplyDelete
  6. அரசன் சே said...//திறமை இருக்குறவன் தேன் மிட்டாய் சாப்புடுறான் ..//

    அட நல்லா இருக்கே

    ReplyDelete
  7. CM CELL தேவையான தகவல் அன்பரே

    ReplyDelete
  8. //இந்த பெட்டிஷ்ன்களை அவசரகதியாக அந்த டிப்பார்டெமென்டுக்கும் ஃபார்வொர்ட் செய்ய தலைமை செயலகத்தில் தனிப்பிரிவு இயங்குகுறது.//

    சென்ற வருடம், மழைக்காலத்தில், எங்கள் தெரு தத்தளித்தபோது, பேஸ்புக்கில் பார்த்து, மேயர் நம்பரை தொடர்பு கொண்டேன். நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்கள். அதற்கு பிறகு, ஒரு Onionம் நடக்கவில்லை.

    இப்போது முதல்வர் தனிப்பிரிவு. பார்ப்போம், இது எந்தளவிற்கு இயங்குகிறது என்று.

    //நம்மை திட்டி வெளியான 2 பதிவுகளுக்கிடையே ஒரு ஆறுதல் இந்த சம்பவம்//

    உங்களை திட்டியா?!

    //யுவகிருஷ்ணா பாராட்டிய மூன்று பதிவர்கள்//

    மோதிர விரல் :)

    //அனிருத் என்கிற குட்டி பையனுடன் இவரது படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன//

    Person who has teeth eats pakoda ;)

    ReplyDelete
  9. வித்தியாசமான நிறங்களில் வானவில்...
    அருமை...

    வாழ்த்துக்கள்... நன்றி... (TM 7)

    ReplyDelete
  10. பயனுள்ள ,அழகிய வானவில்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. \\CM செல்\\ மன்னர்கள் காலத்தில் கட்டிய ஆராய்ச்சி மணியை இது ஞாபகப் படுத்துகிறது. தங்களுக்கு என்ன குறை இருந்தாலும் இதை யார் வேண்டுமானாலும் போய் அடிப்பார்கள், மன்னால் வெளியில் வந்து அந்த குறையை தீர்க்க தக்க நடவடிக்கை எடுப்பாராம், அம்மா அதுபோல ஏதோ செய்கிறார், ஆனால் எந்தளவுக்கு மக்கள் குறை தீர்க்கப் படும்............??????

    ReplyDelete
  12. பயனுள்ள தகவலுடன்
    சுவாரஸ்யங்கள் நிறைந்த அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    பதிவுகளைத் தொடரவும்
    முதனமையாகவே தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. \\இப்போது அனிருத் என்கிற குட்டி பையனுடன் இவரது படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன !\\ என்னா படம் சார் அது........... செம கிக்கா இருக்கு........... இது எதுவரைக்கும் போகுமோ தெரியலை......... கல்யாணம் என்றால் ஐந்து வயதாவது இளைய பெண்ணாக இருக்கணும்........

    ReplyDelete
  15. \\வெங்காயம்\\ வேண்டுகோளுக்கிணங்கி அறிமுகப் படுத்தியதற்கு நன்றி சார்.

    ReplyDelete
  16. \\லியோனி பட்டி மன்றம்.\\ இவருடைய பழைய பாடலா....... புதிய பாடலா..... என்ற முதல் பற்றி மன்றம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது, அதற்க்கப்புறம் எதுவும் உருப்படியாக இல்லை, ஆனாலும் உலகப் புகழ் வாங்கி விட்டார். தரமான பட்டிமன்றங்களை இவர் எதுவும் நடத்தியதில்லை. வெறும் டம்மி காமடி பீசாகவே ஓட்டிக் கொண்டிருக்கிறார்........

    ReplyDelete
  17. எமது வெங்காயம் தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.எம்மைப்போன்ற இளம்பதிவர்களை ஊக்குவிக்கும் உங்களைப்போன்ற பிரபல பதிவர்களுக்கு தலைவணங்குகின்றோம்.மிக்க நன்றிகள்.நம்மை வீடுதிரும்பலுக்கு அறிமுகப்படுத்திய ஜயதேவ்தாஸ் அவர்களுக்கும் எமது குழுவின் சார்பில் நன்றிகள்.(வெங்காயம்குழு,இலங்கை,யாழ்ப்பாணம்)

    ReplyDelete

  18. Please visit my post of today Link: http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

    தயவுசெய்து தங்களுக்கான விருதினை ஏற்றுக்கொள்ள்வும். அன்புடன் vgk

    ReplyDelete
  19. //நம்மை திட்டி வெளியான 2 பதிவுகளுக்கிடையே//

    எங்கேன்னு சொன்னா நாங்களும் பாத்து ஜந்தோஜப்படுவோம்ல!! :-))))

    //சி.எம். செல்//
    இதெல்லாம் எந்தளவுக்கு வொர்க் அவுட் ஆகும்னு சந்தேகம்தான். இமெயிலுக்கும், கடிதம் மூலம் மனு பொடுவதற்கும் வித்த்யாசம் இருக்காது. ஏன்னா, ஜெ. ஒன்றும் டெக்னிக்கல் இண்ட்ரெஸ்ட் உள்ளவரும் அல்ல.

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் சார்..

    ReplyDelete
  21. நாட்டி & அஜூ,

    ரொம்ப க்யூட்!

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. CM செல் மிக பயனுள்ள தகவல் சார். நான் செய்திதாளில் படித்து குறித்து வைத்து கொண்டேன். என்னுடைய முதல் புகார் என் ஏரியா (அ)நியாய விலைகடை பற்றியதாக இருக்கும்.. விரைவில் பார்போம் இதன் செயல்முறை வேகம் மற்றும் பலனை!!!

    வாழ்த்துக்கள் சார் பதிவுகளில் மேலும் முன்னணி பெறுவதற்கு!!!

    ReplyDelete
  24. வானவில் வழக்கம் போல் சுவாரசியமாக இருந்தது. இதில் தொலைக்காட்சிகளின் சுதந்திரதின சிறப்பு நிகழ்ச்சிக்ளின் விளம்பரத்தைச் சேர்த்துள்ளீர்களே. (தனியாகவே போட்டிருக்கலாமே. ஒருவேளை சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் அதிக என்பதால் நீண்ட விமர்சனம் தேவையில்லை என்று நினைத்து விட்டீர்களோ?)

    ReplyDelete
  25. இரவு 9.30 க்கு ஜெயா டி.வியில் இளையராஜா -கவுதம் மேனன் உரையாடல் பார்த்தீர்களா? தவறவிட்டால் இணையத்தில் பாருங்கள்.ராஜா ராஜா தான் .மொத்தமாக அவரது இசை பயணம் பற்றி கௌதம் கேட்க அதற்க்கு அவர் சொன்ன பதில் .யாரும் இப்படி ஒரு பதிலை சொல்லி இருக்க மாட்டார்கள்.அவசியம் இணையத்தில் பாருங்கள் சார்.

    ReplyDelete
  26. cmcell அவசியம் பகிரப்பட வேண்டிய தகவல்.

    ***************
    வீடுதிரும்பல் குறித்து திரு யுவகிருஷ்ணா அவர்களின் பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  27. சரவணன் சார்: நன்றி பதிவர் விழாவில் சந்திப்போம்

    ReplyDelete
  28. நன்றி சுரேஷ்

    ReplyDelete
  29. balhanuman said...

    உங்கள் இதயத்தைக் கொள்ளை கொண்ட தேவதைகள் லிஸ்டில் முதலில் அனுஷ்கா, இப்போது ஆண்ட்ரியாவா ?

    **
    ஆமாம் சார் இதில் அஞ்சலியும் அடக்கம். வர வர " A "-யில் ஆரம்பிக்கும் நடிகைகள் பலரையும் பிடிக்குது :)

    ReplyDelete
  30. ஸ்ரீராம் said...


    நீங்கள் புதிய பதிவரா?
    ****
    யுவ கிருஷ்ணா, துளசி மேடம் போன்றோர் ஏழெட்டு வருஷமா ப்ளாக் எழுதுறாங்க. நான் எழுத வந்து ரெண்டு வருஷம் தான் ஆகுது. அப்போ நான் அடுத்த தலைமுறை தானே?

    ReplyDelete
  31. அரசன் சே said...


    திறமை இருக்குறவன் தேன் மிட்டாய் சாப்புடுறான் ..

    ***

    நன்றிங்க அரசன். இருந்தாலும் மனசு கேட்க மாட்டேங்குது :)

    ReplyDelete
  32. நன்றி பிரேம் குமார்

    ReplyDelete
  33. ர‌கு said...

    //நம்மை திட்டி வெளியான 2 பதிவுகளுக்கிடையே ஒரு ஆறுதல் இந்த சம்பவம்//

    உங்களை திட்டியா?!

    ******
    நீங்க வீடுதிரும்பல் தவிர வேறு ப்ளாக் படிப்பதில்லை போல. நேரில் பேசுவோம்




    ReplyDelete
  34. நன்றி தனபாலன் சார்

    ReplyDelete

  35. நன்றி ரமணி சார்

    ReplyDelete
  36. Jayadev Das said...

    \\இப்போது அனிருத் என்கிற குட்டி பையனுடன் இவரது படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன !\\ என்னா படம் சார் அது........... செம கிக்கா இருக்கு...........

    *****
    தாஸ். இப்படி ஒப்பனாவா பேசறது :)

    லியோனி பற்றி நீங்க சொன்னது சரிதான். இவர் குழுவில் இனியவன் என்பவர் சில நேரம் காமெடியா பேசுவார்

    ReplyDelete
  37. நன்றி வெங்காயம். தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  38. கோபாலகிருஷ்ணன் சார்; மிக நன்றி

    ReplyDelete
  39. ஹுசைனம்மா: //எங்கேன்னு சொன்னா நாங்களும் பாத்து ஜந்தோஜப்படுவோம்ல!! :-))))

    பொது வெளியில் நம்மளை நாமளே எதுக்கு டேமேஜ் பண்ணிக்கிட்டு :)

    ReplyDelete
  40. நன்றி மணிமாறன்

    ReplyDelete
  41. மகிழ்ச்சி துளசி மேடம்

    ReplyDelete
  42. மகிழ்ச்சி சமீரா நன்றி

    ReplyDelete
  43. சீனி: ஆம் தனியே அதுக்கு எதற்கு ஒரு பதிவு என்று தான் :)

    ReplyDelete
  44. சீன் கிரியேட்டர் : அடடா பார்க்கலை. இணையத்தில் பார்க்கிறேன் நன்றி

    ReplyDelete
  45. சுவையான வானவில்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...