Friday, September 21, 2012

சிம்லா பயணம்: 2 கோவில்கள் -சிம்லா புகைப்படங்கள்


 108 அடி ஆஞ்சநேயர் சிலையை கொண்ட ஜாக்கு கோவில் சிம்லாவின் சமீபத்திய வரவு. ஊரிலிருந்து சற்று தள்ளி உள்ளது இக்கோவில். சிறு மலை மேல் ஏறுவது போல் இருக்கு பயணம். சிம்லாவிலிருந்து 7 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த இடத்தை அடைகிறோம். இந்த கோவில் சென்று திரும்ப மட்டும் ஐநூறு ரூபாய் அனைத்து டாக்சி ஓட்டுனரும் கேட்கிறார்கள் !

மற்ற மாநில கார்கள் கோவிலுக்கு ஒரு கிலோ மீட்டர் முன்பே நிறுத்தப்பட்டு விடுகிறது. ஹிமாச்சல் சேர்ந்த கார் என்றால் மட்டுமே கோவில் அருகே வரை செல்ல முடியும். மலை என்பதால் முதல் கியரிலேயே வண்டி ஓட்ட வேண்டியிருக்கும்  என்றார் டிரைவர். 

கோவில் மிக உயரத்தில் இருப்பதால் நூற்றுகணக்கில் குரங்குகள் உள்ளன. இதற்காக கோவிலுக்கு வெளியே கம்பு (குச்சி) கள் விற்கிறார்கள். இது வாக்கிங் ஸ்டிக் போல் உள்ளது. இந்த குச்சியுடன் சென்றால் குரங்குகள் பயந்து கொண்டு நம்மிடம் வராது என்று எண்ணம். நாங்கள் சென்ற இடம் முழுக்க குரங்குகள் இருந்தன. அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு கொண்டோ விளையாடி கொண்டோ இருந்தன. நம்மிடம் அதிகம் வம்பு செய்யலை. கண்ணாடி அணிந்து சென்றால் மட்டும் அதை பிடுங்கி எடுத்து போயிடுமாம் குரங்குகள். மற்ற இடங்களில் நிறைய வெளியூர் ஆட்கள் தான் இருப்பார்கள். இங்கோ உள்ளூர் வாசிகள் நிறைய வருகின்றனர். யாரும் கண்ணாடி அணிந்து வருவதில்லை !


உள்ளே நுழைந்ததும் முதலில் நாம் பார்ப்பது ஆஞ்சநேயரின் 108 அடி சிலையை தான். (பதிவில் முதலில் உள்ள படம்)

இங்கு ஏதும் அர்ச்சனையோ, இதன் அருகில் மக்கள் வேண்டுவதோ கிடையாது. இது ஒரு டூரிஸ்ட் அட்ராக்ஷன் ஆக மட்டுமே உள்ளது. இதன் அருகில் பலர் படம் எடுக்க தவறுவது இல்லை. ஆஞ்சநேயர் சிலை மேலே ஏறி குரங்குகள் விளையாடிய படி உள்ளன.


இதற்கு சற்று அருகே குழந்தைகள் விளையாட சறுக்கல்கள் போன்றவை உள்ளன. இங்கும் குரங்குகளே விளையாடி மகிழ்கின்றன. பார்க்க செம காமெடியாக உள்ளது.எல்லா குரங்ககளும் ஒரு நிமிடம் கூட சும்மா இல்லாமல் ஓடி கொண்டிருக்க, ஒரே ஒரு வயதான குரங்கு மட்டும் நகர முடியாமல் முனகி கொண்டிருந்தது. பார்க்க பாவமாய் இருந்தது.

நாய்கள் சிலவும் அங்கு உள்ளது, நாயும் குரங்கும் அருகருகே இருப்பதை பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. நாய் தான் குரங்கை பார்த்து பயப்படுகிறது !

நாயும் குரங்கும் அருகருகே


கோவிலுக்குள் அழகான பூக்கள் மற்றும் புல்வெளி


படம் பிடிப்போரை படம் பிடிப்போம் கார்னர்காளி கோவில்

மால் ரோடுக்கு ஒரு முறை கீழே இருந்து தனியே நடந்தே செல்லும் போது வழியில் இந்த காளி கோவிலை கண்டேன்.நிறைய உள்ளூர் வாசிகள் தான் வருகிறார்கள். வயதான ஆண் - பெண் இருபாலாரும் மிக பயபக்தியுடன் வணங்குகின்றனர்.காளி சிறிய உருவில் உள்ளது. கழுத்தில் நிறைய மணிகள் அணிந்து காட்சி தருகிறது. பம்பை போன்ற வாத்தியங்கள் அங்கு இருக்கிறது. அதனை அடிப்பதற்கு ஆட்கள் தயாராய் உள்ளனர் (எப்போது அடிப்பர் என தெரியலை)

உள்ளே நுழையவோ, செருப்பு பாதுகாக்கவோ எந்த பணமும் வசூலிக்க வில்லை.

அருகில் மிலிடரி வீரர்கள் இருக்கிறார்கள். அந்த பக்கம் மட்டும் படம் எடுக்காதீர்கள் என்கிறார்கள் அங்கிருக்கும் போலீசார் !


****
சிம்லாவில் மீதம் உள்ள சில படங்களை பகிர்ந்து விட்டு அடுத்த பகுதியில் குளு மணாலி பயணமாவோம் :

சிம்லாவில் இயற்கை காட்சிஇது போன்று தான் இருக்கும் பாதைகள்..செங்குத்தாய் நடக்க சற்று சிரமமே

சிம்லா லோக்கல் பஸ் ஸ்டாண்ட்
சிம்லாவில் உயரமான இடத்தில் ஓர் இரவில்  

தேங்காயை எப்படி வெட்டி விற்கிறார்கள் பாருங்கள் !


*************
அடுத்த பகுதியில்:

சிம்லா டு குளு மணாலி மறக்க முடியாத அற்புத பஸ் பயணம்

37 comments:

 1. வணக்கம்..சிம்லா ...அருமை..அதிகம் நம்ம முன்னோர்கள் இருப்பாங்க போல...

  ReplyDelete
 2. அதிகமா கோவிலை விட குரங்கு புராணம் இருக்கே...ஏன்..? ஒருவேளை ஆஞச நேயர் இருப்பதால் என்னவோ...

  ReplyDelete
 3. கோவை நேரம்: ஆம் ! கோயிலில் எங்கும் நீக்கமற முன்னோர்கள் தான் இருக்காங்க. பத்தடி கூட அவங்க இல்லாம நீங்க நடக்க முடியாது. செம வித்யாசமா அனுபவம்

  ReplyDelete
 4. சிம்லா ஈசில சுத்திப்பாத்தாச்சு!!!. ஆஞ்சநேயர் கோவில் தவல்கள் சூப்பர்.

  குறங்கு மேலேயும், நாய் கீழேயும்தான படுத்துக்கிடக்கு, எங்க பக்கத்துல பக்கத்துல இருக்கு!!!!

  :-)))

  ReplyDelete
 5. ஈசில= ஓசில.... மிஸ்டீக்கு..

  ReplyDelete
 6. ஜெய்: குரங்குகள் ஒரு நிமிடம் கூட ஒரு இடத்தில் இருக்காது. எனவே குரங்கு மேலே இருக்கும் போது கீழே நாய் மீது தாவி விழ வாய்ப்பு மிக அதிகம். இந்த படம் எடுத்த அடுத்த நொடி பாய்ந்து நாய் அருகே குதித்தது பின் ஓடியது. அருகருகே படம் எடுக்க முடியலை

  ReplyDelete
 7. பயணக் கட்டுரை தொடருங்கள் தொடர்கிறோம்....

  //பதிவில் முதலில் உள்ள படம்// பயபடாதீர்கள் சார்..எனகளுக்கு தெரியும் நீங்கள் தான் மோகன் குமார் என்று :-)

  ReplyDelete
 8. வீடியோ பார்த்தேன். வாலுப்பசங்க....என்னமா சேட்டை பண்ணுறானுங்க. அந்த வயதான குரங்கு பாவம்தான்..

  ReplyDelete
 9. ஜில்லுன்னு ஒரு பயணம் ஜூப்பர்.

  ReplyDelete
 10. உங்கள் பயணத்தை தொடருங்கள்........பகிர்வுக்கு நன்றி.....

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 11. புகைப் படங்களுடன் பகிர்வு அருமை. நாயும் குரங்கும் பழகி விட்டால் பக்கத்தில் இருந்தாலென்ன, ஒன்றும் செய்யாது! வீடியோ வில் இரண்டு சிலிண்டர்களைத் தூக்கிச் செல்லும் நபரைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது! வீடியோ காலைதான் பார்க்கணும்!

  ReplyDelete
 12. நல்ல புகைப்படப் பகிர்வுகள்..

  ReplyDelete
 13. படங்களும் பதிவும் ரசித்தேன்...

  கண்ணொளி - சேட்டை ஜாஸ்தி...

  இப்போ கொஞ்சம் ஒல்லியா இருக்கீங்க...

  ReplyDelete
 14. சிம்லா ஸ்பெஷல் அருமையா இருக்கு இங்கெல்லாம் எப்ப போக போறோம னு ஏக்கமும் வந்துடுச்சு

  ReplyDelete
 15. அப்படியே சிம்லாவைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள். அருமையான பயணம்.

  ReplyDelete
 16. பஞ்சு மிட்டாய் எல்லா ஊர்களிலும் ஒரே கலரில்தான் இருக்கும் போல.

  ReplyDelete
 17. சிம்லா சுற்றிப் பார்த்துவிட்டோம்.

  தேங்காய் பூ அருமை.

  ReplyDelete
 18. அங்கேயும் மெஜாரிட்டி பிரச்னையா.
  குரங்குகள் எண்ணிக்கையில் அதிகம் என்பதால் நாய் அடங்கிவிட்டதோ.
  உங்கள் பயணக்கட்டுரை அருமையகா இருக்கிறது, அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 19. பயணம் தொடருட்டும் . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 20. சீனு: ஹி ஹி நன்றி

  ReplyDelete

 21. Uma said...
  வீடியோ பார்த்தேன். வாலுப்பசங்க

  ஆமாங்க. ஆனா வீடியோ இன்னும் கொஞ்சம் தெளிவா ஆடாம எடுத்திருக்கலாம் :(

  ReplyDelete
 22. நன்றி அமைதி சாரல்

  ReplyDelete
 23. ஸ்ரீராம்

  //வீடியோ வில் இரண்டு சிலிண்டர்களைத் தூக்கிச் செல்லும் நபரைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது! //

  அந்த மலையில் அப்படி தூக்கி செல்பவரை பார்த்தால் பாவமா தான் இருந்தது !

  ReplyDelete
 24. This comment has been removed by the author.

  ReplyDelete
 25. தனபாலன் சார்: நன்றி

  ReplyDelete
 26. சரவணன்: மனம் வைத்தால் நிச்சயம் போகலாம் சார்

  ReplyDelete

 27. தமிழ் ராஜா: நன்றி

  ReplyDelete
 28. பழனி கந்தாசாமி ஐயா : ஆம். நன்றி

  ReplyDelete
 29. This comment has been removed by the author.

  ReplyDelete

 30. அசீம் பாஷா: மிக மகிழ்ச்சி நன்றி

  ReplyDelete

 31. நன்றி ஞானம் சேகர்

  ReplyDelete
 32. This comment has been removed by the author.

  ReplyDelete
 33. Did you read the notice board at the starting point to the hill? It says that Hanuman stopped there at the top while carrying the Sanjeevi malai. - R. J.

  ReplyDelete
 34. ஜகன்னாதன் சார்: நீங்கள் சொன்னது எனக்கு புது தகவல். நான் கவனிக்கலை. சொன்னமைக்கு நன்றி

  ReplyDelete
 35. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...