"எந்தெந்த இடத்தையோ, ஹோட்டலையோ அறிமுகம் செய்கிறோம்; நம் வீட்டுக்கருகே இருக்கும் , நாம் அடிக்கடி உணவு வாங்கும் இடத்தை அறிமுகம் செய்யா விட்டால் எப்படி?"என நட்ட நடு ராத்திரி மனசாட்சி கேள்வி கேட்டதால் இதோ இந்த பதிவு ! (பய புள்ளை ஒரு பதிவு தேத்திட்டு பேச்சை பாரு !)
துர்கா பவன் ! சுத்த சைவ உணவகம் . மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் அருகில் உள்ளது. கீழ்கட்டளை மெயின் ரோடிலிருந்து வேளச்சேரிக்கு செல்லும் பேருந்துகள் மடிப்பாக்கம் உள்ளே புகுந்து செல்லும். அப்போது பொன்னியம்மன் கோவில் என்கிற நிறுத்தத்துக்கு அருகில் தான் உள்ளது இந்த ஹோட்டல். பிரபல பதிவர் யுவகிருஷ்ணா வீடு இங்கிருந்து கூப்பிடும் தூரம் தான் !
இந்த இடத்தில் எப்போதுமே ஒரு ஹோட்டல் இருந்து வருவதை கடந்த பத்து வருடமாக கவனித்து வருகிறேன். ஆனால் இந்த ஹோட்டல் வந்து ஐந்து அல்லது ஆறு வருடம் இருக்கலாம்
பெயருக்கேற்ற படி இது சுத்த சைவ ஹோட்டல். இங்கு நாங்கள் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டது ஓரிரு முறை தான் இருக்கும். ஆனால் இங்கு பார்சல் வாங்கி சாப்பிட்டது குறைந்தது ஐம்பது முறைக்கு மேல் இருக்கும் !
பிரைட் ரைஸ், பரோட்டா மற்றும் இடியாப்பம் இங்கு நன்றாக இருக்கும்
***
நாங்கள் பெரிதும் விரும்புவதும், அடிக்கடி வாங்குவதும் இட்லி தான் !
சூடாய் இருக்கும் எதுவும் நம்பி சாப்பிடலாம் என்பது வீட்டம்மா அடிக்கடி சொல்வது. இட்லிக்கு தொட்டு கொள்ள சாம்பார் சூப்பர். (கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேட்டு வாங்கி, மறு நாள் காலை டிபனுக்கு வீட்டில் சட்னிக்கு பதில் இந்த சாம்பார் சுடவைத்து தொட்டு கொள்வது தொழில் ரகசியம் !) புதினா சட்னி ஒன்று எப்போதும் தருவார்கள் அதுவும் நன்றாய் இருக்கும்.
தேங்காய் சட்னி மட்டும் பார்சல் வாங்கி வீட்டுக்கு வந்து சாப்பிட்டால் தேறவே தேறாது. அதுக்குள் புளிப்பு சுவை வந்துடும்.
இடியாப்பம் வீட்டில் செய்து சாப்பிடுவது கடினம் என நினைப்போர் அதனை prefer செய்வார்கள். இடியாப்பத்துக்கு தேங்காய் பால் தருவதில்லை. குருமா மட்டும் தான் !
போண்டா உள்ளிட்டவை மாலையில் சுட சுட போடுவார்கள் ! செமையாக இருக்கும் ! மாலை நேர வடை மற்றும் போண்டா மிஸ் பண்ணாமல் சாப்பிட வேண்டிய ஐட்டங்கள் !
பொங்கல் நெய் நிறைய ஊற்றி சூப்பராய் இருக்கும்.
உணவுகள் குறைந்த விலையுள்ள இந்த ஹோட்டல் மடிப்பாக்கம் காரர்கள் குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடும் ஒன்றாய் உள்ளது.
மடிப்பாக்கம் பக்கம் வரும்போது இங்கே ஒரு முறை சாப்பிட்டு பாருங்க ! Cheap and Good !
****
டிஸ்கி : சென்னையில் நாளை மாலை ஐந்து மணிக்கு மெரீனா பீச் காந்தி சிலை அருகில் பதிவர் சந்திப்பொன்று நடக்க உள்ளது. கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். மேலதிக தகவலுக்கு இங்கே பார்க்கவும் !

நீங்களும் பார்சல் கேஸ் தானா?
ReplyDeleteயோவ் என்னங்கைய்யா நினைச்சிட்டீங்க ஆளு ஆளுக்கு ஹோட்டலில் சாப்ப்பிட்டு அங்க நல்ல இருக்கு இங்கே நல்ல இருக்க்குன்னு நீங்க பாட்டுல எழுதிகிட்டு போயிடுறீங்க....அதை படிச்சுகிட்டு நாங்க நாக்கை தொங்க போட்டு ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று சொல்லிகிட்டு போக வேண்டி இருக்கிறது...ஹூம்ம்ம்ம்ம்ம் வெளிநாட்டில் இருக்கிற எங்க நிலமையை நினைச்சு பதிவு போடுங்கப்பா .......
ReplyDelete(கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேட்டு வாங்கி, மறு நாள் காலை டிபனுக்கு வீட்டில் சட்னிக்கு பதில் இந்த சாம்பார் சுடவைத்து தொட்டு கொள்வது தொழில் ரகசியம் !)//ஆஹா..நல்ல ஐடியாக அல்லவா இருக்கு.
ReplyDeleteகொஞ்சம் எக்ஸ்ட்ரா கேட்டு வாங்கி, மறு நாள் காலை டிபனுக்கு வீட்டில் சட்னிக்கு பதில் இந்த சாம்பார் சுடவைத்து தொட்டு கொள்வது தொழில் ரகசியம்
ReplyDeleteஇது சூப்பர்
பூர்விக மடிப்பாக்கம் வாசிகள் ஓட்டலில் சாப்பிடுவதில்லை மோகன். அதனாலேயே மடிப்பாக்கத்தில் பொதுவாக ஓட்டல் பிசினஸ் அவ்வளவாக சூடு பிடித்ததில்லை. மடிப்பாக்கம் கூட்ரோடு பகுதியில் பேச்சுலர்கள் நிறைய பேர் அறை எடுத்து தங்குவதுண்டு. அவர்களெல்லாம் நல்ல ஓட்டல் இல்லை என்பதாலேயே விரைவில் அறையை காலி செய்துவிடுகிறார்கள்.
ReplyDeleteபூர்விக மடிப்பாக்கம் வாசிகள் ஓட்டலில் சாப்பிடுவதில்லை மோகன். அதனாலேயே மடிப்பாக்கத்தில் பொதுவாக ஓட்டல் பிசினஸ் அவ்வளவாக சூடு பிடித்ததில்லை. மடிப்பாக்கம் கூட்ரோடு பகுதியில் பேச்சுலர்கள் நிறைய பேர் அறை எடுத்து தங்குவதுண்டு. அவர்களெல்லாம் நல்ல ஓட்டல் இல்லை என்பதாலேயே விரைவில் அறையை காலி செய்துவிடுகிறார்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉங்கள் பகிர்வுக்கு நன்றி...தொடர்ந்து எழுதுங்கள்.....
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
நல்ல அறிமுகம். தம்பியிடம் சொல்கிறேன். அவனுக்கு உபயோகமாக இருக்கும்.
ReplyDeleteஅறிந்து கொண்டேன்... நன்றி...
ReplyDelete//பிரபல பதிவர் யுவகிருஷ்ணா வீடு இங்கிருந்து கூப்பிடும் தூரம் தான் !//
ReplyDeleteஇப்படிப் போட்டுக் கொடுத்துவிட்டாரே. அதைப்பற்றி, யுவா, நீங்கள் எதுவுமே கெமெண்ட் செய்யவில்லையே ?
இட்லி, பரோட்டா விலை என்னவோ? பரோட்டாவுக்கு தொட்டுக் கொள்ளக் குருமாவா, சைவ சால்னாவா? ரவா தோசை தரம் என்ன?(என் வழக்கமான கேள்வி இதுதான் எம்கே!)
ReplyDeleteசாப்பிட உட்கார்ந்திருக்கும் தாடிப் பெரியவர் பார்த்த முகமாய் இருக்கிறது! பொங்கல் சாப்பிடுவதில் ஒரு கஷ்டம், அப்புறம் கிட்டத் தட்ட அன்று நாள் முழுதுமே வேறு எதுவும் சாப்பிட முடியாமல் வயிறு அடைத்து விடும்!
சுத்த சைவ உணவகம் .
ReplyDelete>>
அசுத்த சைவ உணவகம்ன்னு இருக்கா? அது எங்கே இருக்கு. அட்ரஸ் சொல்லுங்க.
//பிரபல பதிவர் யுவகிருஷ்ணா வீடு இங்கிருந்து கூப்பிடும் தூரம் தான் !//
ReplyDelete>>
ஹோட்டல் வாசல்ல நின்னு கூப்பிட்டா(செல்போன்ல இல்ல) யுவகிருஷ்ணா வருவாரா?
மடிப்பாக்கம் பக்கம் வரும்போது இங்கே ஒரு முறை சாப்பிட்டு பாருங்க ! Cheap and Good
ReplyDelete>>
பெரிய ஹோட்டலுக்கெல்லாம் கூட்டி போக மாட்ட்டீங்களா?
//(கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேட்டு வாங்கி, மறு நாள் காலை டிபனுக்கு வீட்டில் சட்னிக்கு பதில் இந்த சாம்பார் சுடவைத்து தொட்டு கொள்வது தொழில் ரகசியம் !)//
ReplyDeleteஇது நிறைய வீட்டில் நடக்குது அண்ணே... உண்மைய ஒத்துக்கொள்பவர்கள் குறைவு....
நல்ல அறிமுகம்.....
ReplyDeleteஇந்த மண்டே கூப்பிட்டு போவீங்களா! :))))
(பய புள்ளை ஒரு பதிவு தேத்திட்டு பேச்சை பாரு !)
ReplyDeleteகேள்வி கேட்ட நல்லவனுக்கெல்லாம் நெத்தியடி.
/// இந்த ஹோட்டல். பிரபல பதிவர் யுவகிருஷ்ணா வீடு இங்கிருந்து கூப்பிடும் தூரம் தான் ! ///
ReplyDeleteகூப்ட்டா வருவாரா அந்த பெரிய மனுசன்.
(கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேட்டு வாங்கி, மறு நாள் காலை டிபனுக்கு வீட்டில் சட்னிக்கு பதில் இந்த சாம்பார் சுடவைத்து தொட்டு கொள்வது தொழில் ரகசியம் !)
ReplyDeleteசேம் பிளட்ணா.
இது ஓர வஞ்சனை அடுத்த உணவகம் அறிமுகத்தை வடசென்னையில் வைத்துக் கொள்ளுமாறு வட சென்னை பதிவர்கள் சார்பாக எச்சரித்து கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் மட்டும் சாப்பிட மாட்டோமா என்ன.
ReplyDeleteஸ்கூல் பையன்: ஆம் அப்பப்போ !
ReplyDelete
ReplyDeleteஅவர்கள் உண்மைகள்: அட விடுங்க பாஸ். சென்னை வரும்போது சொல்லுங்க ஜமாய்ச்சிடலாம்
ஸாதிகா: நன்றி நீங்க இப்படி செய்தது இல்லியா? ஆச்சரியமா இருக்கு
ReplyDelete
ReplyDeleteநன்றி சரவணன்
லக்கி: மடிப்பாக்கம் அடையார் ஆனந்த பவன் இங்கு நல்ல ஹோட்டல் இல்லை என்ற குறையை ஓரளவு போக்கியுள்ளது. ஆனால் விலை நிச்சயம் மிக அதிகம்
ReplyDeleteநன்றி கோவை டு தில்லி : அவருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்
ReplyDelete
ReplyDeleteநன்றி சீனி. அவரே சொல்லிய தகவல் தானே? ரகசியம் ஏதும் இல்லை
ஸ்ரீராம்: இட்லி ஆறு ரூபாய் என நினைக்கிறேன். உங்கள் favourite ரவா தோசை சாப்பிட்டதே இல்லை. தோசை வீட்டில் செய்ய முடியும் என்பதால் மிக அரிதாகவே தோசை வெளியில் சாப்பிடுவோம்
ReplyDeleteராஜி: பெரிய ஹோட்டல் தானே? பர்ஸ் + பணம் மட்டும் மறக்காம எடுத்துட்டு வந்துடுங்க. போய் சாப்பிடலாம்
ReplyDeleteநன்றி சங்கவி
ReplyDeleteவாங்க வெங்கட். போகலாம்
ReplyDeleteஆரூர் மூனா: நிறைய கமன்ட் போட்டதுக்கு முதல் நன்றி தம்பி. வட சென்னை ஹோட்டலுக்கு நீங்கள் தான் கூட்டி போகணும் :)
ReplyDeleteதொழில் இரகசியம் சிறப்பு. நாங்களும் அப்படி செய்வோமில்ல இனிமே...
ReplyDelete