Sunday, September 2, 2012

சென்னை பதிவர் மாநாடு என்ன சாதித்தது ?

ண்பர்களே, பதிவர் மாநாடு சாதித்து என்ன என பார்ப்பதற்கு முன் இந்த மாநாடு துவங்கும் போது எங்களின் எதிர்பார்ப்பு என்ன என பார்த்து விடலாம்

விழாவில் வரவேற்புரை ஆற்றிய போது பேசிய சில விஷயங்களை இங்கு பகிர்கிறேன் (இது விளம்பரத்துக்கு அல்ல; முதலிலேயே நாங்கள் இந்த விஷயத்தில் தெளிவாய் இருந்தோம் என விழா காணாதொருக்கு தெரியவே !)
****
விழாவிற்கு அனைவரையும் வரவேற்ற பின் பேசியது  பின்வருமாறு 

இப்படி ஒரு விழா தேவையா? நாம் தான் நம் பதிவிலேயே,  பின்னூட்டத்தில் பேசிக்குறோமே? மெயில் அனுப்பிக்குறோம். போனில் பேசிக்குறோம். அப்புறமும் இந்த விழா தேவையா என்ற கேள்வி நம் முன் இருக்கிறது. இந்த விழா தேவை தான் என்று நாங்கள் உறுதியாய் நினைக்கிறோம். அதற்கான காரணங்கள்

1. இணைய நட்பு பெரும்பாலும் முகம் தெரியாமலே  தான் உள்ளது . முகம் தெரியாமல் பழகியதில் சில பிரச்சனைகள் ஆங்காங்கு வரவே செய்கின்றன. எழுத்தில் நீங்கள் ரசித்தோரை நேரில் பார்க்கும் போது அவர்கள் உண்மையிலேயே உங்கள் மனதுக்கு பிடித்தால்,  wavelength ஒத்து போனால் நட்பு தொடரலாம். இப்படி ஒவ்வொருவருக்கும் குறைந்தது நான்கைந்து நண்பர்களாவது இந்த விழா மூலம் கிடைப்பார்கள் என நம்புகிறோம்

2. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் செய்யும் வேலை பெரிய அளவு திருப்தி தருவதில்லை. பணம் சம்பாதிக்கத் தான் வேலைக்கு செல்கிறோம். அந்த நேரத்தில் நமக்கு தரப்பட்ட வேலையை செய்து விட்டு வருகிறோம். தான் செய்கிற வேலையை தாண்டி ஒவ்வொருவருக்கும், அவர் ரசனை சார்ந்து வேறு விஷயத்தில் ஈடுபாடு இருக்கு,நமக்கெல்லாம் அது எழுத்து அல்லது ப்ளாக்.

சின்ன வயசில் இருந்து நமக்குள் இந்த திறமை இருந்து கிட்டு தான் இருக்கு. ஆனால் படிக்கணும் என்கிற காரணத்துக்காக அந்த திறமையை உள்ளுக்குள் வைத்து அமுக்கி கொள்கிறோம். நம்ம பெற்றோர்,  கூட பிறந்தவர்கள் கூட அந்த திறமையை ஊக்குவிக்காத போது, நாம் எழுத ஆரம்பித்ததும் அதனை ஊக்குவித்து நம்மை தொடர்ந்து எழுத வைப்போர் இங்கு உள்ளோர் தானே? அவர்களை நேரில் பார்ப்பது நமக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரும் தானே?

3. அடுத்து நெட்வொர்கிங். ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் துறை சார்ந்த நண்பர்களே அதிகம் தெரியும். எனக்கு கம்பனி செக்ரட்டரி அல்லது வக்கீல்கள் தான் அநேகமாய் நண்பர்கள். ஆனால் இதை தாண்டி பல துறையில் நட்பு கிடைக்க இது மாதிரி சந்திப்புகள் உதவுது.
பேருந்து டிரைவர் - பதிவர் - பரமேஷ் பேசுகிறார் 
4. எழுதுறவங்களை நேரில் சந்திக்க ஏன் தயங்குறோம் தெரியுமா? பல நேரம் அவங்க எழுத்தை போல நிஜத்தில் இருப்பதில்லை அதனால் தான் ! அவங்க மேலே நாம உருவாக்கி வைத்திருக்க பிம்பம் உடைஞ்சு போயிடும்னு நினைக்கிறோம்.  ஆனால் அப்படி ஏமாற்றம் தருவோர் அம்பது சதவீதம் தான்.

இன்னொரு 25 % எழுதுற மாதிரியே நேரிலும் இருக்காங்க. ஆனால் மூணாவது ரகம் தான் ரொம்ப முக்கியம். இவங்க எழுத்தை விட நேரில் இன்னும் சுவாரஸ்யமா இருப்பாங்க. கேபிளை எடுத்துக்குங்க. அவர் சினிமா விமர்சனத்தில் எழுதுவதை விட அதே படத்தை பத்தி இன்னும் ரெண்டு மணி நேரம் நேரில் பேசுவார். ரமணி சார் கவிதைன்னு எழுதுறாரே ஒழிய நேரில் அவர் கூட பேசினா அவ்ளோ தகவல் தெரியும். சிரிச்சிக்கிட்டே இருக்கலாம். மெட்ராஸ்பவன் சிவாவை நேரில் பார்க்கும் வரை நான் சீரியஸா எடுத்துக்கலை. பார்த்த பின் தான் அவர் எழுதுவதும் ஆளும் வேறு வேறு இல்லை. அவர் எப்படி ரொம்ப assertive ஆக இருக்காரோ அது தான் எழுத்தில் தெரியுது என புரிந்த பின் தான் அவர் எழுத்தை விரும்பி வாசிக்க ஆரம்பித்தேன்

 5. இந்த விழா ஒரு துவக்கம் தான். இதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்து போகணும். புலவர் ஐயா போன்ற பெரியவர்கள் அதற்கு கைட் செய்வார்கள். அப்படி நாம் ஒன்றாய், ஒரு இயக்கமாய் ஆகும் போது , நம்மில் ஒருவர் நியாயமான பொது பிரச்சனை எழுதி அதனால் அவருக்கு அரசிடமோ, வேறு யாரிடமோ பிரச்சனை வந்தால், ஒரு குழுவாய் அவருக்கு நம்மால் உதவ முடியும். உலக தமிழ் மாநாடு போன்ற நேரங்களில் பதிவர்களை நாம் சரியான முறையில் represent செய்ய முடியும்.

6. பல மேடைகளில் சிலருக்கு மட்டுமே பேச வாய்ப்பு இருக்கும். இங்கு அனைவரும் மேடை ஏறி பேச போறோம் இந்த விழாவின் முக்கிய நிகழ்வே அது தான். அதான் காலை முழுதும் அது மட்டும் வைத்துள்ளோம்.தொடர்ந்து இளைஞர்கள் மேடையேறினால் அவர்களுக்கு மேடை பயமே போகிடும்

உங்களுக்கு எப்போதும் தொடரும் சில நல்ல நட்புகளையும், மறக்க முடியாத நினைவுகளையும் இந்த விழா தரும் என்று நம்புகிறோம் !
****
இவை தான் எங்களின் எதிர்பார்ப்பு. இவை நடந்ததா எனில் 100 % நிச்சயமாய் நடந்தது !

விழாவுக்கு வந்த சமீரா என்கிற இந்த பெண்ணின் பின்னூட்டத்தை பாருங்கள் (இவர் பதிவரல்ல, அதனால் தன் வலைப்பூவுக்கு நான் சென்று மறு பின்னூட்டம் போடுவேன் என நினைக்கும் அவசியமும் அவருக்கு இல்லை )
***********
விழாவில் கலந்துகொண்டதால் நான் பல நண்பர்களை பெற்றேன்... குறிப்பாக ரஞ்சனி நாராயணன் அம்மா, வல்லி சிம்ஹன் அம்மா, லஷ்மி அம்மா, ருக்மணி அம்மா, தூயா மற்றும் சசிகலா அக்கா, தேவாதிதேவன் சார்...

முக்கியமாக உங்கள் அறிமுகம் மற்றும் கணேஷ் சார் அறிமுகம்.....

வெகு நாட்களாக என்னை குழப்பிக்கொண்டு இருந்த சேட்டைக்காரன் சார் அறிமுகம்.... விழாவில் நான் கண்ட அனைவரும் இன்முகத்துடன் குதூகலத்துடன் பேசியது என்னை மிகவும் கவர்ந்தது!!!!

சொந்த குடும்ப விழாவில் கூட காணக்கிடைக்காத ஒரு நல்லுணர்வு ஒற்றுமை மகிழ்ச்சியை கண்டு அனுபவித்து வியந்தேன்...

************
விழாவுக்கு வந்த ஒவ்வொருவரும் தங்கள் மகிழ்ச்சியை, நெகிழ்வை அன்று நேரிலும் அதன் பின் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் எங்களிடம் தெரிவித்து கொண்டே தான் உள்ளனர்.

ஸாதிகா என்கிற பதிவர் விழா குறித்து வந்த அனைத்து பதிவுகளையும் ஒன்றாய் திரட்டி ஒரே பதிவில் வைத்துள்ளார். நேரம் கிடைக்கும் போது ( ரெண்டு மூணு மணி நேரம் ஆகும் இவை அனைத்தையும் முழுசாய் படித்து முடிக்க ) வாசித்து பாருகள். எத்தனை பேர் மகிழ்ந்துள்ளனர். எவ்வளவு நட்பு ..எத்தனை அன்பு !

விழாவில் எங்களுக்கு மிக நெகிழ்வான இன்னொரு விஷயம்: மூத்த பதிவர்களுக்கான பாராட்டு விழா. அவர்களின் சிறந்த எழுத்தை பற்றி பேசி, பாராட்டி அதன் பின் நினைவு பரிசு தந்ததில் அவர்கள் ஒவ்வொருவரும் மிக மகிழ்ந்தார்கள். இந்த பெரியவர்களை இந்த மகிழ்ச்சி, அவர்களின் ஆயுள் காலத்தை இன்னும் சிறிதளவு கூட்ட உதவினால் அது எவ்வளவு பெரிய விஷயம் ! நிச்சயம் அது அன்று நிகழ்ந்தது என்றே சொல்ல வேண்டும்.


விழாவில் கௌரவிக்கப்பட்ட ஒரு மூத்த பதிவரான சுப்புரத்தினம் அவர்கள் தன் மனைவியிடம் குழந்தை மாதிரி உற்சாகத்துடன் தான் விருது பெற்றதை மகிழ்வோடு சொல்கிறார்.. இந்த வீடியோவில் பாருங்கள்: இதை விட வேறென்ன மகிழ்வு வேண்டும்.. ?சட்டக்கல்லூரி துவங்கி பல விழாகுழுவில் நான் இருந்திருக்கிறேன். அத்தனை குழுவிலும் இருந்ததை விட வெளிப்படையான அணுகுமுறை இந்த குழுவில் இருந்தது. 25 பேர் அடங்கிய விழா குழுவினர் அனைவருக்கும் அனைத்து தகவல்களும் சொல்லப்பட்டது. ஒவ்வொரு கட்டத்திலும் முடிவுகள் எடுக்கும் போது கருத்து சொல்ல வாய்ப்பு இருந்தது. எங்கள் அனைவருக்குள்ளும் ஒரு அற்புத நட்பு மலர்ந்துள்ளது. இது தொடர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

மற்றபடி கவியரங்கம் போன்றவை இதர நிகழ்வுகளாகவே கொள்ளப்பட்டன. சுய அறிமுகம் மற்றும் மூத்த பதிவர் பாராட்டு விழா இவை தான் மிக முக்கிய நிகழ்வுகள், அவற்றுக்கு தான் விழா ஏற்பாடு ஆனதே. கூடவே சசிகாலா அவர்களின் புத்தகம் வெளியீடு நடந்தது. அடுத்தடுத்த விழாக்களில் பல பதிவர்களின் புத்தகங்கள் ஒரே நாளில் வெளியிடலாம். இதே ஜூலை/ ஆகஸ்ட்/செப்டம்பர் காலத்தில் விழா நடந்தால், பின் புத்தக கண்காட்சியில் புத்தகங்கள் விற்பனைக்கு செல்ல எதுவாய் இருக்கும். இது பற்றி நிச்சயம் பேசி வருகிறோம்.

எனக்கு விழா மூலம் இருபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் கிடைத்தனர். எனது போன் நம்பர் அதிகம் வெளியில் பகிர மாட்டேன். ஆனால் இப்போது இந்த இருபது நண்பர்களிடமும் எனது போன் எண் உள்ளது. ஒவ்வொரு நாளும் இதில் ஒரு சில நண்பர்கள் போன் செய்து பேசுகிறார்கள் ! நானும் சிலருக்கு போன் செய்கிறேன் !வாழ்க்கை இனிக்கிறது !

எனக்கு கிடைத்த மூன்று நல்ல நட்புகள் பற்றி சில வரிகள் :

திண்டுக்கல் தனபாலன்:

தனபாலன், நான், PKP
இவர் படிக்காமலே கமன்ட் போடுறார் என பலருக்கும் சந்தேகம் (எனக்கும் தான் ) ஆனால் அவர் நிச்சயம் படித்து விட்டு தான் கமன்ட் எழுதுறார் என நேரில் பார்த்ததும் உணர்ந்தேன். மிக எளிய மனிதர். "என்ன உதவி செய்யணும் ? என்ன உதவி செய்யணும் " என கேட்டு கேட்டு செய்தார். எட்டு மணி நேரம் அவர் ஊரில் கரண்ட் இல்லா விடினும் இருக்கும் நேரம் ப்ளாக் படித்து விட்டு கமன்ட் போடுறார். அப்படிப்பட்டவர் காயப்படும் படி இந்த வாரம் ஒரு சம்பவம் நடந்தது. நண்பர்கள் நல்ல உள்ளங்களை காயப்படுத்த வேண்டாம் என வேண்டியுள்ளோம். அவரிடமும் " சார் பதிவு அருமை மாதிரி பின்னூட்டங்கள் இடாதீர்கள். ஏதாவது சில வரிக்கு கருத்து சொல்லி எழுதுங்கள் சார் " என்று சொல்ல நிச்சயம் செய்கிறேன் என்று கூறியுள்ளார். இன்னும் நிறைய பழக வேண்டும் என எண்ண வைக்கும் மனிதர்.

ராஜி 

விழாவுக்கு தன் மகள் தூயா (இவரும் பதிவரே) மற்றும் மகனுடன் வந்த ராஜி, உள்ளே வந்தவுடன் மூத்த பதிவர்களை பார்த்து அவர்கள் காலில் விழுந்து கும்பிட துவங்கினார். அவ்வளவு கூட்டம் இடையே இப்படி ஆசி வாங்குவதை பார்க்கும் போதே மனதை நெகிழ்த்தியது. 

சரி இவர் ரொம்ப சீரியஸ், செண்டிமெண்ட் ஆள் என நினைத்தால் அதன் பின் தான் தெரிந்தது செம ஹாப்பி ஆன, நண்பர்களிடம் ஜாலியாய் வம்பு வளர்க்கும் ஒருவர் என்பது. இவர் பின்னூட்டங்களுக்குள் வந்தால் பதிவே களை கட்டிடுது. 

டாக்டர் மயிலன்

தஞ்சையில் M .S படிக்கிறார் . அறுவை சிகிச்சை நிபுணர். கான்சர் நோய்க்கு அறுவை சிகிச்சை பற்றி மேல் படிப்பு படிக்கும் எண்ணம் உள்ளது. தமிழில் அட்டகாசமாக எழுதும் சுவாரஸ்யமான எழுத்துக்கு இவர் சொந்தக்காரர். நல்ல நண்பராய் எனக்கு கிடைத்துள்ளார்

ஒவ்வொருவருக்கும் தங்கள் வேவ்லெங்க்த் (Wavelength) பொறுத்து இப்படி சில நண்பர்கள் கிடைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் !
***

நிறைவாக :

சென்னையில் முதன் முறையாய் இத்தனை பெரிய விழா கொண்டாடியது

நேரலை ஒளிபரப்பு பெரும் வெற்றி பெற்றது,

பல ஊடகங்கள் நம் மேல் வெளிச்சம் பாய்ச்சியது

ஏராளமான பெண்கள் வந்ததுடன் இறுதி வரை இருந்தது

ஒவ்வொரு பதிவரும் மைக் முன் சென்று சில நிமிடமாவது பேசியது ( இரண்டே வரி பேசிவிட்டு இறங்குவோரை மடக்கி கேள்வி கேட்க, கேபிள், சிபி, சங்கவி, ஜெய் போன்றோர் மேடையில் அமர்ந்திருந்தனர்) 

காலை, மதியம் இரு நேரமும் சரியான நேரத்துக்கு துவங்கி, சரியான நேரம் விழாவை முடித்தது....

பதிவரல்லாத சிலருக்கும் ப்ளாக் துவங்க எண்ணம் வந்தது

இப்படி நல்ல விஷயங்கள் இந்த விழா மூலம் நடக்கவே செய்தது !
**********
ப்ளாக் என்பது நமக்கெல்லாம் டைம் பாஸ் தான். ஆனால் அந்த டைம் பாசை கூட நிச்சயம் உபயோகமாக, நல்ல விதமாக நாம் செயல் படுத்துவோம் !

இந்த விழாவின் அடுத்த பயணம் எங்கே என்பது குறித்து மதுமதியோ, ஜெய்யோ பின்னர் எழுதுவார்கள் என நம்புகிறேன்.

மனதில் இருந்த அனைத்து எண்ணங்களும், காமிராவில் இருந்த அனைத்து படங்களும் இங்கு பகிர்ந்தாச்சு. தங்களின் தொடர் வாசிப்புக்கு நெஞ்சார்ந்த நன்றி !

நாளை முதல் (தினம் ஒரு பதிவாக) வழக்கம் போல் வீடு திரும்புவோம் !

60 comments:

 1. அண்ணே சந்திப்பு தொடர்பான கடைசி பதிவை அழகா சொல்லி முடிச்சிருக்கீங்க.

  இந்த விழாவிற்கு செலவளித்தது போக மீதத் தொகையை , விழாவிற்கு போட்டோ+வீடிட்யோ எடுத்ததற்காக செட்டில் செய்துவிவது தொடர்பான முடிவை இன்று நண்பர் பிலாஸபி பிரபாகரன் அவர்களின் நிச்சயதார்த்த நிழச்சியில் வைத்து முடிவெடுத்து விடலாம்.

  அடுத்த கட்ட முடிவை வழக்கம்போல் போல் நாம் மின்னஞ்சலில் முதலில் பகிர்ந்துகொண்டு, அதை மதுமதி பதிவாக வெளியிட்டு அனைவரின் கருத்துக்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
  இதற்காக ஒரு தனி வலைபூ ஏற்படுத்தி அதில் இது தொடர்பான பதிவுகளை இடலாம். அதை மற்ரவர்களும் தங்கள் வலைப்பூவில் வெளியிடலாம்.

  ஜெய்

  நன்றி
  ஜெய்.

  ReplyDelete
 2. சபாஷ்.. அருமையான பதிவு.பாராட்டுப்பெற்ற மூத்த பதிவர் கனக சுப்புரத்தினத்தின் மகிழ்ச்சியை இங்கே சென்று பாருங்கள் இந்த காணொளியையும் https://www.youtube.com/watch?v=_d-gZTRIJpA&feature=player_embedded#! இந்த பதிவில் இணையுங்கள்.இதை விட சந்தோஷம் இருக்க முடியுமா?

  ReplyDelete
 3. [[ மதுமதி said...
  சபாஷ்.. அருமையான பதிவு.பாராட்டுப்பெற்ற மூத்த பதிவர் கனக சுப்புரத்தினத்தின் மகிழ்ச்சியை இங்கே சென்று பாருங்கள் இந்த காணொளியையும் https://www.youtube.com/watch?v=_d-gZTRIJpA&feature=player_embedded#! இந்த பதிவில் இணையுங்கள்.இதை விட சந்தோஷம் இருக்க முடியுமா? ]]

  மதுமதி அதை நான் 2 தினங்களுக்கு முன் பார்த்தேன் , மனுசன் ரொம்ப சந்தோசப்பட்டிருக்காரு. நம்ம நோக்கமும் அதுதானே....

  ReplyDelete
 4. ரொம்ப அழகா இயல்பா சொல்லி முடிச்சிருக்கீங்க மோகன் சார்

  தங்கள் என்னுடன் பழக ஆரம்பித்து ஒரு மாதம் தான் இருக்கும் நாம் face book இல் சாட் செய்யும் போது என் செல் நம்பர் குறிப்பிட்டேன் அடுத்த விநாடி நீங்கள் என்னை செல் போனில் அழைத்தது மறக்க முடியாத ஒன்று

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. தங்களின் நட்பு எனக்கு கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது... தங்களின் கருத்தை நான் ஏற்கனவே ஏற்றுக் கொண்டேன் என்பது உங்களுக்கு தெரியும்... இன்று 8.30௦ a.m. மணிக்கு மேல் மின்சாரம், இந்த நேரம் வரை போகவில்லை... அதனால் கருத்திட்ட முடிந்தது... மிக்க நன்றி சார்...

  ReplyDelete
 7. சார் அவங்க சந்தோசத்துக்கு ஈடு இணை இல்லை, புண்ணியகோடி மண்டபம் மூலமா நல்ல புண்ணியம் தேடிகிட்டிங்க பெரியவங்கள சந்தொசபடுத்தி, இத பார்த்த கொஞ்ச பேராச்சி அவங்க வீட்டு பெரியவங்கள ஒரு நிமிஷம் ஆச்சி நினைச்சி பார்த்து இருப்பாங்க, அதுவே நீங்க பண்ணிய புண்ணியம்.
  நீங்க = குழு

  நன்றி

  ReplyDelete
 8. சென்னை பதிவர்வ் மாநாடு சாதித்தது என்ன?இந்த கேள்வியே தேவை இல்லை மோகன்குமார் சார்.இது மாபெரும் மாநாடுமட்டுமல்ல மாபெரும் சாதனியும் கூட.இதே போல் அடுத்த வருட பதிவர் மாநாட்டுக்குக்காக இப்போதிருந்தே வெயிட்டிங்...மிக சிரத்தையுடன் படம் எடுத்து பகிர்விட்ட உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நான் அதிகம் புகைப்படங்கள் எடுக்கவில்லை.உங்கள் பதிவின் மூலம்தான் என் கணவர்,மகன் உட்பட என்குடும்பத்தில் உள்ளவர்கள் காட்சிகளை கண்டு கழித்தனர்.மிக்க நன்றி.

  ReplyDelete
 9. மிக்க நன்றி.. கூடவே அதீத மகிழ்ச்சி...

  எனக்கு பொழுதுபோக்கிற்காக எடுத்துக்கொள்ளும் எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து நீண்ட நாட்கள் செய்ய வராது... ஒரு வெறுமை வந்துவிடும்... தனிப்பட்ட முறையில் நான் இந்த சந்திப்பை எப்படி பார்க்கிறேன் என்றால், அந்த வெறுமையை நீக்கி இன்னும் கொஞ்ச நாட்கள் தொடர்ந்து எழுத ஒரு உத்வேகம் தந்த நினைவில் நீங்கா நிகழ்வு... (சோ யாரும் என்கிட்ட இருந்து அவ்வளவு சீக்கிரம் தப்பிக்க முடியாது...ஹி ஹி...)

  ReplyDelete
 10. என்னது அக்காவா எல்லோரையும் அக்கா என்று சொல்லி நீங்க சின்ன வயது என்று காண்பிக்க நானா கிடைத்தேன் தங்கை என்று சொல்லுங்கள் இல்லை சண்டைக்கு வருவேன்.

  ReplyDelete
 11. அனைத்து பகிர்தலுக்கும் மிக்க நன்றிகள் மோகன்..!

  இத்தோடு இதற்கு மங்களம் பாடுங்கள்.. அடுத்து ஆக வேண்டியதைப் பார்ப்போம்..!

  ReplyDelete
 12. இனிமையான பகிர்வு மோகன்.

  அதிலும் சுப்புரத்தினம் ஐயா அவர்களுடைய காணொளி பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

  தொடரட்டு சந்திப்புகள். அடுத்த மினி பதிவர் சந்திப்பு - 20 ஆம் தேதியா? நான் வருவது குறித்து இரண்டொரு நாட்களில் தெரிவிக்கிறேன். அலுவலக்த்தில் லீவு பிரச்சனை இல்லை எனில் வருவேன்!

  தொடரட்டும் உங்கள் வழக்கமான சுவையான பதிவுகள்.

  ReplyDelete
 13. தொடரட்டும் சந்திப்புகள்... ஒரு ம்... விட்டுட்டேன் :)

  ReplyDelete
 14. உ. த. அண்ணே: சரிங்கண்ணே அப்படியே செஞ்சிடலாம்

  ReplyDelete
 15. தெரிந்து கொண்டேன் நன்றி நண்பரே

  ReplyDelete
 16. சசிகலா அக்காவை சாரி சசிகலாவை தங்கச்சி ன்னு சொல்லுங்க மோகன்.

  ReplyDelete
 17. நல்ல உறவுகளை பெறுவதற்கு நிச்சயமாக பதிவர் சந்திப்பு உதவியது,,,

  ReplyDelete
 18. நானும்..அப்படித்தான் நேரில் அதிகம் பேசவராது...! சிவா பேசுங்க...பேசுங்க என்பார் நமக்கு பேச்சே வராது..!ஹிஹி!

  ReplyDelete
 19. பதிவர் சந்திப்பில் உங்களுடன் சேர்ந்து கலந்து கொள்ள இயலாமையால் இந்த பதிவுகளை படித்து நிகழ்வுகளை அறிந்து கொண்டேன்... நல்ல பகிர்வுகள் அனைத்தும்!

  ReplyDelete
 20. //நாளை முதல் (தினம் ஒரு பதிவாக) வழக்கம் போல் வீடு திரும்புவோம்//

  இப்பத்தான் ஹப்பாடா!!ன்னு இருக்கு. :-))))

  உங்க எண்ணங்கள் புரியுது. குடும்பத்துக்குள்ளே சின்னதா ஒரு பெயர்சூட்டும் விழா நடத்தினாக்கூட, எத்தனை குழப்பங்கள்!! இது அதைவிட எவ்ளோ பெரிசு. சிலபல மனக்கசப்புகள் வரத்தான் செய்யும். விடுங்க, எல்லாம் நன்மைக்கே!!

  ReplyDelete
 21. முடிவுரை...! குழந்தைப் பருவத்தில் தீபாவளி முடிந்து கூட அதன் சந்தோஷம் கொஞ்ச நாட்களுக்கு இருந்து கொண்டே இருக்குமே.. அது போல அனுபவம்!

  ReplyDelete
 22. மனதுக்கு நிறைவா ஒரு விஷயம் நடந்துச்சுன்னா அது மனசைவிட்டு அகலவே நிறையநாள் பிடிக்கும்.

  அது முழுசும் உங்கள் பதிவுகளின்மூலம் தெரியுது.

  அனைவருக்கும் நிறைவைத்தந்தது இந்த மாநாடு என்பதில் ஐயமே இல்லை!

  விழாக் குழுவினருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

  ReplyDelete
 23. ப்ளாக் என்பது நமக்கெல்லாம் டைம் பாஸ் தான். ஆனால் அந்த டைம் பாசை கூட நிச்சயம் உபயோகமாக, நல்ல விதமாக நாம் செயல் படுத்துவோம் !//

  நீங்கள் அதைத்தானே செய்து கொண்டு உள்ளீர்கள்
  தங்கள் பதிவுகள் அனைத்துமே மிக்க பயனுள்ளவைகளாகத்
  தானே இருக்கின்றன.தொடர்ந்து தொடர்பில் இருப்போம்
  புதிய சாதனைகள் பல படைப்போம்.வாழ்த்துக்களுடன்..

  ReplyDelete


 24. நன்றி மோகன்!
  தங்கள் அனைத்துப் பதிவுகளும் விழாபற்றி விளக்கமாக, விளக்கியுள்ளன என்றால் அது மிகையல்ல!
  இனி,ஒருவார கால ஓய்வுக்குப்பின், வழக்கம் போல் என் வலையுலகப் பணி தொடரும்

  சந்திப்போம்! சிந்திப்போம்!

  ReplyDelete
 25. அடுத்த கட்ட பணிகள் என்றால் இவையா

  1. பொருளாதார ரீதியாக பின் தங்கியோர், ஆதரவு அற்றோர், மாற்றுத் திறனாளிகள் பள்ளிகள், கல்வி மருத்துவம் சார்ந்த, முதியோர் இல்ல உதவிகள்

  2. கவிதை, சிறுகதை , நாவல் எழுத பதிவர்களுக்கு பயிற்சி, அதன் மூலம் அவர்களின் படங்கள், படைப்புகள் வணிக வார இதழ்களில் வரச் செய்வது, அவர்களின் புத்தகங்கள் வெளி வருவது

  3. திரைக் கதை, ஒளிப் பதிவு, வசனம் ஆகியவை உருவாக்க பதிவர்களுக்கு கற்றுக் கொடுத்தல் அதன் மூலம் திரை உலகில் அவர்கள் நுழைய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தல்.

  4. தொழில் கல்வி, மெபொருள், இன்ன பிற கல்விகள் சார்ந்த உதவிகள் செய்து வேலை வாய்ப்பு, வருமானம் ஈட்ட வழி செய்தல்

  5. விலை வாசி உயர்வு, மின் கட்டண உயர்வு இவற்றிற்கு எதிராக போராட்டம், உண்ணாவிரதம் , மெழுகு வர்த்தி போராட்டம் நடத்துதல், பத்திரிகைகளில்/தொலைக் காட்சிகளில் பேட்டி கொடுத்தலா

  6. தமிழகம் முழுதும் மாவட்டம் தோறும் மூன்று/நான்கு அமைப்பாளர்களை தேர்ந்து எடுத்தல்/ நியமித்தல்

  ReplyDelete
 26. மூத்த பதிவர்களை பார்த்து அவர்கள் காலில் விழுந்து கும்பிட துவங்கினார். அவ்வளவு கூட்டம் இடையே இப்படி ஆசி வாங்குவதை பார்க்கும் போதே மனதை நெகிழ்த்தியது.
  >>>
  அப்பாடா, போட்ட பிளான் சக்ஸஸ். இதுப்போல நல்ல பேரை எடுக்கத்தான் முதுகு வலிச்சாலும் பரவாயில்லைன்னு கால்ல விழுந்து சீன் போட்டது.

  ReplyDelete
 27. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த பதிவர் சந்திப்பு நடத்த ரெடியாகுங்க சகோ. என்னால் பொருளுதவி மட்டுமே செய்ய முடியும். அறிவிப்பு கிடைத்த உடன் முதல் ஆளாய் என் பங்களிப்பு கடிப்பாய் இருக்கும்.

  ReplyDelete
 28. விழா பற்றிய விவரங்கள் மனசுக்கு நிறைவா இருக்கு. ஒவ்வொருவருடைய பகிர்வுகளையும் வாசிக்கறப்ப நாமும் கலந்துக்கலையேங்கற ஏக்கம் அதிகமாகுது..

  ReplyDelete
 29. நிறைவுப் பகுதியாய் நீஙகள் எழுதியிருப்பது ஒவ்வொரு வரியும் மிக அருமை. சுப்புரத்தினம் ஐயா மற்றும் சமீராவின் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் மனதை விட்டு அகலாதவை.

  ReplyDelete
 30. பதிவுலகில் இம்மாதிரியான சந்திப்புகள் ஆரோக்கியமான விஷயம்.

  ReplyDelete
 31. திண்டுக்கல் தனபாலன்! பல பேரை ஊக்குவிக்கும் சிறந்த மனிதர்! இந்த முறை சந்திக்க வாய்ப்பில்லாது போனது வருத்தமே! நல்ல முழுமையான பதிவு! நன்றி!

  இன்று என் தளத்தில்
  தளிர்ஹைக்கூ கவிதைகள்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

  ReplyDelete
 32. மதுமதி: அந்த வீடியோ ஓடவிட்டு விட்டேன் பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 33. சரவணன் சார்: நம்ம ஊர் காரர் நீங்க பேசாம இருப்பேனா?

  ReplyDelete
 34. நன்றி தனபாலன் சார்

  ReplyDelete
 35. ஹேமந்த்: எஸ். சரியாய் சொன்னீர்கள்

  ReplyDelete
 36. ஸாதிகா

  //நான் அதிகம் புகைப்படங்கள் எடுக்கவில்லை.உங்கள் பதிவின் மூலம்தான் என் கணவர்,மகன் உட்பட என்குடும்பத்தில் உள்ளவர்கள் காட்சிகளை கண்டு கழித்தனர்.மிக்க நன்றி.//

  நன்றி ! நான் ஹிட்ஸ்க்கு தான் படங்கள் போட்டேன் என ஒரு சிலர் சொல்லி கொண்டிருந்தாலும், உங்களை போன்ற பலர் படங்கள் பார்த்து மகிழ்வார்கள் என்று தான் போட்டேன்.

  உண்மையில் இந்த பதிவுகளுக்கு ஆரமபத்தில் தான் அதிகம் பேர் வாசித்தனர். பின் கூட்டம் சுத்தமாய் இல்லை. இருந்தாலும் எடுத்த வேலை பாதியில் விட கூடாது என்று முழுதாய் பகிர்ந்து முடித்தேன்

  இந்த பதிவை கூட வாசித்தோர் மிக குறைவே !

  ReplyDelete
 37. மயிலன்

  //தனிப்பட்ட முறையில் நான் இந்த சந்திப்பை எப்படி பார்க்கிறேன் என்றால், அந்த வெறுமையை நீக்கி இன்னும் கொஞ்ச நாட்கள் தொடர்ந்து எழுத ஒரு உத்வேகம் தந்த நினைவில் நீங்கா நிகழ்வு//
  ****
  அழகு !

  ReplyDelete
 38. Sasi Kala said...

  என்னது அக்காவா எல்லோரையும் அக்கா என்று சொல்லி நீங்க சின்ன வயது என்று காண்பிக்க நானா கிடைத்தேன் தங்கை என்று சொல்லுங்கள் இல்லை சண்டைக்கு வருவேன்.

  ****
  உங்களை எங்கே அக்கான்னு சொன்னேன். ராஜியை தானே சொன்னேன்:) வேலைக்கு நடுவே அவசரமா படிச்சீங்க போல :)

  ReplyDelete
 39. வெங்கட்: செப் 20 வர பாருங்கள்

  ReplyDelete
 40. நன்றி மனசாட்சி

  ReplyDelete

 41. மிக நன்றி தொழிற்களம் குழு

  ReplyDelete
 42. வீடு சுரேஸ்குமார் said...

  நானும்..அப்படித்தான் நேரில் அதிகம் பேசவராது...! சிவா பேசுங்க...பேசுங்க என்பார் நமக்கு பேச்சே வராது..!ஹிஹி!

  ****
  பேசணும்; அடுத்த தடவை நீங்க எப்படியும் உங்களை அறிமுகபடுதிக்கவாவது பேசணும் இல்லியா

  ReplyDelete
 43. ஸ்ரீராம். said...


  குழந்தைப் பருவத்தில் தீபாவளி முடிந்து கூட அதன் சந்தோஷம் கொஞ்ச நாட்களுக்கு இருந்து கொண்டே இருக்குமே.. அது போல அனுபவம்!
  **
  உண்மை தான். இந்த பதிவுகள் மற்றவர்களுக்காக தான் பகிர்ந்தேன்.எனக்கே ஒரு லெவலில் போர் அடிச்சுடுச்சு. ஹவுஸ் பாஸ் வேறு இதே போடுறீங்களே என திட்ட ஆரமபித்து விட்டார் :))

  ReplyDelete
 44. நன்றி துளசி மேடம்

  ReplyDelete
 45. ரமணி சார்: நன்றி மகிழ்ச்சி

  ReplyDelete
 46. ராமானுசம் ஐயா: நீங்கள் இந்த பதிவுகள் படிக்கலையோ என நினைத்தேன். நீங்கள் வாசித்து அறிந்து மகிழ்கிறேன்

  ReplyDelete
 47. ராம்ஜி : பொறுப்பாளர்களில் நான் இல்லை. அவர்கள் கவனத்துக்கு உங்கள் மெயில் கொண்டு செல்கிறேன்

  ReplyDelete
 48. அப்து அண்ணே; முக்கிய நேரத்தில் உங்கள் உதவியை மறக்க முடியுமா?

  ReplyDelete
 49. ராஜி said...

  மூத்த பதிவர்களை பார்த்து அவர்கள் காலில் விழுந்து கும்பிட துவங்கினார். அவ்வளவு கூட்டம் இடையே இப்படி ஆசி வாங்குவதை பார்க்கும் போதே மனதை நெகிழ்த்தியது.
  >>>
  அப்பாடா, போட்ட பிளான் சக்ஸஸ். இதுப்போல நல்ல பேரை எடுக்கத்தான் முதுகு வலிச்சாலும் பரவாயில்லைன்னு கால்ல விழுந்து சீன் போட்டது.
  ***
  எல்லாத்துக்கும் வெளையாட்டு ! சின்னபுள்ள தனமால்ல இருக்கு; :))

  ReplyDelete
 50. நன்றி அமைதி சாரல்; சென்னை வரும்போது சொல்லுங்க பீச் அல்லது வேறு இடத்தில் குட்டி பதிவர் சந்திப்பு போட்டுடலாம்

  ReplyDelete
 51. நன்றி இந்திரா

  ReplyDelete
 52. திருவிழாக்கூட்டம் போல் அத்தனை பிரம்மாண்டமாக இருந்ததது பதிவர் மாநாடு.. நீங்கள் எல்லோரும் எழுதிய எழுத்தில் இருந்து தான் நாங்களும் அந்த விழாவுக்கு வந்திருந்தோம் என்பது போல தோன்றவைத்த மிக அருமையான பகிர்வு மோகன்....

  மூத்த பதிவர் சுப்புரத்தினம் ஐயாவின் சந்தோஷத்தை வீட்டில் சென்று பார்க்க எனக்கும் ஆசைப்பா...

  ராஜி ராஜி ராஜின்னு எங்கே பார்த்தாலும் ராஜி அக்காவை பற்றி ஒரே கலாட்டாவா இருக்கேன்னு ராஜி வலைப்பூ பக்கம் போனேன்பா... சிரித்து சிரித்து வீட்டில் என் கணவர் என்னாச்சு அப்டின்னு என்னை பார்க்கும் அளவுக்கு சிரித்தேன்...

  இன்னைக்கும் விட்டு வைக்கலை இந்த ராஜி... காலில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கும் நல்ல பழக்கம் எங்க வீட்டில் எங்கள் அனைவருக்குமே உள்ளது... அதே போல் ராஜியும் செய்கிறாரேன்னு பார்த்தால் :) உடனே அதற்கு அவர் போட்ட பின்னூட்டம் படித்து சத்தமாக சிரித்துவிட்டேன். சிரிக்கும் சரியாக அந்த நேரம் எங்க மேனேஜர் வந்துட்டார் :( தனியாக சிரித்துக்கொண்டிருப்பது பைத்தியம் என்று நினைத்திருப்பார் என்னை கண்டிப்பாக...

  நிஜம்மா பதிவர் மாநாட்டை ரொம்ப மிஸ் பண்ணிட்டோமேன்னு இருக்குப்பா....

  அன்பு நன்றிகள் மோகன்.. நிறைவான பகிர்வு...

  ReplyDelete
 53. பகிர்தலுக்கு நன்றி.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...