என்.சொக்கன் எழுதிய மகாத்மா காந்தி கொலை வழக்கு என்கிற புத்தகம் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
பொதுவாய் எல்லோரும் மகாத்மா வாழ்க்கையை தான் அறிவோம். அவரை கொன்றது கோட்சே என்று அறிந்தாலும், கோட்சே உடன் இன்னொருவரும் தூக்கில் இடப்பட்டார் என்பதும் அவர் பெயர் என்ன என்பதும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
வரலாற்றின் கருப்பு பக்கங்களை சொல்லும் இந்த புத்தகத்திலிருந்து சில தகவல்கள் :
* ஜனவரி 30, 1948 - அன்று காந்தி கொல்லப்படுவதற்கு இருபது நாளுக்கு முன்பே கோட்சே உள்ளிட்ட குழு காந்தியை அதே இடத்தில் கொல்ல முயன்றுள்ளது. கையெறி குண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடும் போது மதன்லால் என்கிற நபர் மட்டும் மாட்டிக்கொள்ள மற்றவர்கள் தப்பி விட்டனர். போலிஸ் மதன்லாலிடம் விசாரித்த போது அவர் நான்கைந்து பேர் சேர்ந்து காந்தியை கொல்ல திட்டம் தீட்டியதை சொல்லி விட்டார். ஆனால் டில்லி போலிஸ் மற்றும் மும்பை போலிஸ் மிக தீவிரமாக இயங்கி குற்றவாளிகளை அடுத்த பத்து நாளைக்குள் பிடிக்க தவறி விட்டது.
* காந்தி உயிருக்கு ஆபத்து என்று அறிந்து அவருக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று போலிஸ் சொன்னதை காந்தி ஏற்கவில்லை. சரியான பாது காப்பு இருந்தால் காந்தி கொல்லப்பட்டிருக்க மாட்டார் என்றும் இதனால் காந்தியை கொன்றது காந்தியே தான் என்று ஒரு கருத்தும் உண்டு; இதே பெயரில் (காந்தியை கொன்றது காந்தியே தான்) ஒரு புத்தகமும் வெளிவந்துள்ளது !
* பாகிஸ்தான் பிரிந்த போது அவர்களுக்கு நம்மிடம் இருக்கும் பணத்தில் 75 கோடி தருவதாக ஒப்பு கொள்கிறார்கள் . அதன் படி முதலில் 20 கோடி தந்தாலும், மீதம் 55 கோடி இந்தியா தரவில்லை. காரணம் அதற்குள் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பிரச்சனை வந்து விட்டது. ஆனால் இது தெரிந்து காந்தி கோபிக்க, பின் இந்திய அரசு அந்த பணத்தை பாகிஸ்தானுக்கு தந்து விட்டது. ஏற்கனவே காந்தி முஸ்லீம்களுக்கு ஆதரவாக உள்ளார் என்று எண்ணியிருந்த கோட்சே குழுவுக்கு இது பெரும் கோபத்தை தந்து விட்டது
* கோட்சே முதலில் காந்தியின் கொள்கைகளை விரும்பிய மனிதனாக இருந்தார் என்று அறிய ஆச்சரியமாக உள்ளது. பின் ஹிந்து கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு சாவர்கர் என்கிற நபரின் follower ஆகிவிட்டார் கோட்சே.
* நாராயண ஆப்தே மற்றும் விஷ்ணு கார்கரே ஆகிய இருவரும் கோட்சே காந்தியை சுட்ட போது அவர் உடன் இருந்த நபர்கள். இதில் நாராயண ஆப்தேக்கு தூக்கு கிடைத்தது. கார்கரே உள்ளிட்ட பலருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது
* சுதந்திரத்துக்கு முன்பும் ஒரு முறை கோட்சே காந்தியை கத்தியால் குத்தி கொல்ல முயன்றுள்ளார். கூட்டத்தில் இது நிகழ, பலரும் சேர்ந்து காப்பாற்றி விட்டனர். காந்தி அப்போது " அந்த மனிதரை எதுவும் செய்யாதீர்கள். விட்டு விடுங்கள். அவரை என்னுடன் எட்டு நாட்கள் வந்து தங்க சொல்லுங்கள். அவரது கருத்தை நான் அறிய விரும்புகிறேன்" என்றார். கோட்சே அவருடன் தங்குவதை (அப்போதும் கொல்ல முயற்சிப்பார் என்பதால்) மக்கள் யாரும் விரும்ப வில்லை.
* காந்தியை கொல்ல வாங்கிய துப்பாக்கி பற்றி பெரிய கதையே விரிகிறது. முதலில் ஒரு துப்பாக்கி வாங்கி அது திருப்தி இன்றி அப்புறம் இத்தாலிய துப்பாக்கி ஐநூறு ரூபாய்க்கு வாங்கி, அதை வைத்து தான் காந்தியை சுட்டுள்ளனர்.
* காந்தியை கொல்ல ஒரு நாளுக்கு முன் கோட்சே தன்னுடன் இருக்கும் கார்கரே மற்றும் ஆப்தேக்கு ஒரு கடிதம் எழுதி அவர்கள் ஊரான மகாராஷ்டிராவுக்கு அனுப்புகிறார். காரணம் அவர்கள் தன்னுடன் இல்லை; ஊரில் இருந்தார்கள் என்று நிரூபிக்க ! வழக்கு நடக்கும் போதும் " நான் தான் கொன்றேன்; அவர்கள் உடன் இல்லை" என கோட்சே வாதிட்டாலும், போலிஸ் ஆதாரத்துடன் அவர்களும் உடன் இருந்தததை நிரூபிக்கிறது.
* காந்தியை கொல்ல போகும் முன் முதலில் பர்தா அணிந்து போகலாம் என புது பர்தா வாங்கி முயன்றுள்ளனர். பின் அது சரியாக இல்லை என கோட்சே கூறி ராணுவ வீரன் போன்ற உடை அணிந்து சென்றுள்ளனர். கொல்லும் முன் கோட்சே உப்பு கடலை சாப்பிட ஆசைப்பட, பல இடத்தில் கிடைக்காமல் கடைசியாய் அவருக்கு உப்பு கடலை வாங்கி தந்துள்ளனர் அவருடன் இருந்தவர்கள்.
* குறிப்பிட்ட தினத்தன்று காந்தி பிரார்த்தனை கூட்டத்துக்கு வரும் போது கோட்சே சுட வேண்டும் என்று காத்திருக்க, காந்தி உள்துறை அமைச்சர் பட்டேலுடன் தீவிர ஆலோசனையில் இருந்துள்ளார். பட்டேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் அப்போது ஏதோ கருத்து வேறுபாடு. அது பற்றி காந்தியிடம் பேசியுள்ளார் பட்டேல். பட்டேலுடன் பேசியதில் பிரார்த்தனை கூட்டத்துக்கு நேரமாகி விட்டது என்று அவசரமாக குறுக்கு வழியில் காந்தி சென்றுள்ளார். காந்தியை மேடையில் வைத்து தான் சுட கோட்சே எண்ணியுள்ளார். ஆனால் காந்தி வழக்கமாய் செல்லும் வழியை விடுத்து, கோட்சே நின்ற இடம் வழியே செல்ல, அங்கேயே அவரை சுட்டார் கோட்சே. மூன்று குண்டுகள் மகாத்மா மார்பை துளைக்க அங்கேயே இறந்து விட்டார். சுட்ட கோட்சே கைகளை தூக்கியவாறு, " போலிஸ்" போலிஸ்" என்று கத்தியுள்ளார். மக்கள் வந்து அடித்து விடுவார்களே என்று தான் அவர் போலிசை அழைத்துள்ளார்.
* காந்தி இறந்த அன்று ரேடியோவில் காந்தியை ஒரு இந்து சுட்டு கொன்றார் என்று திரும்ப திரும்ப அறிவித்துள்ளனர். அந்த நேரம் இந்து- முஸ்லீம் பிரச்சனை பற்றி எரிந்து கொண்டிருக்க, காந்தியை ஒரு முஸ்லீம் கொன்றார் என்று மக்கள் நினைத்தால் பிரச்சனை பெரிதாகுமே என்று தான் இப்படி அறிவித்துள்ளனர்.
* இந்த வழக்கு 1948 மே மாதம் துவங்கி தொடர்ந்து நடந்து, 7 மாதங்களில் (1948 டிசம்பர் 30-ல்) முதல் தீர்ப்பு வருகிறது. இதற்கு மேல்முறையீடு செய்யப்பட்டு அது சிம்லாவில் நடக்கிறது. அங்கு பிப்ரவரி 10, 1949-ல் தீர்ப்பு வெளிவருகிறது. கோட்சே மற்றும் ஆப்தே நவம்பர் 15, 1949ல் தூக்கில் போடப்படுகின்றனர். அவர்களை தூக்கில் போடுவதை காந்தி குடும்பத்தினரே எதிர்த்தனர்.
* காந்தியை கொன்ற காரணம் என கோட்சே கோர்ட்டில் ஐந்து மணி நேரம் பேசியது "May it please your honour " என்று புத்தகமாக வெளிவந்துள்ளது. கோர்ட்டில் அன்று கோட்சே பேச்சை கேட்டவர்கள் கண்ணீர் விட்டு அழுததாகவும், கோட்சேயை விடுதலை செய்ய வேண்டும் என்று பலரும் கூறுமளவு கோட்சே பேச்சு இருந்ததாகவும் நீதிபதியே தீர்ப்பில் கூறுகிறார்.
****
சில பகுதிகளை தேவைக்கதிகமாக நீட்டி கொண்டே செல்வது, பல்வேறு மனிதர்களின் பெயர்கள் அவர்கள் பற்றிய தகவல்கள் நமக்கு குழப்புவது .... இப்படி சிற்சில குறைகள் இருந்தாலும் வரலாற்றின் மேல் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது !
****
வல்லமை இணைய இதழின் சுதந்திர தின சிறப்பிதழில் வெளியான கட்டுரை

கண்டிப்பாக கேட்சே பற்றி அறிந்து கொள்ள வேண்டிய புத்தகம். கேட்சேவை பற்றி பல புத்தகங்களில் படித்த போது அவர் ஒரு நல்ல மனிதர் என்றே புரிந்து கொள்ள முடிகின்றது!
ReplyDeleteநான் படித்திருக்கிறேன் இந்தப் புத்தகத்தை. அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் கொட்டிக் கிடக்கும் புத்தகம் இது. என்.சொக்கனின் எழுத்து நடையும் நன்றாகவே இருக்கும.
ReplyDeleteகோட்சே ஏன் அப்படி செய்தாருன்னு அவர் தரப்பு நியாயத்தை அறிய கண்டிப்பா வாங்கி படிக்கனும். பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபடித்துள்ளேன்... அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய புத்தகம்... நன்றி...
ReplyDeleteகண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன். ஆனால் இதற்கு ஏன் இவளவு மைனஸ் ஓட்டுகள்? அன்யூஷுவலாக இருக்கிறது.
ReplyDeleteஇந்தப் புத்தகம் இது வரை படிக்கவில்லை. ஆனால் கோட்சேவின் வாதங்கள் அடங்கிய புத்தகம் [ஆங்கிலம்] படித்திருக்கிறேன்....

ReplyDelete|| சாவர்கர் என்கிற நபரின் ||
ReplyDeleteசாவர்க்கர் என்ற நபரின்... அவரை ஒரு நபராக மட்டும் அறியும் நீங்கள் இது போன்று காந்தி, கோட்சே, சுதந்திர தின சிறப்பிதழ் என்று எழுதுவது வேடிக்கை.
இன்னம்பூரான் : ஒரு பக்க அளவு விஷயத்தில் அவ்வளவு தான் சொல்ல முடியும். நீங்கள் அடைந்த உயரத்துக்கு இப்படி ஒரு ப்ரோபைல் தெரியாத ஐ. டி வைத்து கொண்டு கோபத்தை எல்லா இடத்திலும் அள்ளி தெளிப்பது அழகா? சரியாக வல்லமையில் வந்த எனது 2 கட்டுரைகள் மீதும் காண்டாவதிலேயே உங்களை தெரிந்து விடுகிறதே. இனி வேறு ஐ. டி வைத்து கொள்ளுங்கள் பெரியவரே !
ReplyDeleteநிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் தான். வாய்ப்பு கிடைக்கும் போது படிக்கிறேன்.
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி சார்.
// பல்வேறு மனிதர்களின் பெயர்கள் அவர்கள் பற்றிய தகவல்கள் நமக்கு குழப்புவது//
ReplyDeleteமுதலில் வாசிக்கும்போது அப்படி தோன்றினாலும், அவை எல்லாம் எந்தளவு முக்கியம் என்பதை கடைசியில் வரும் அத்தியாயங்களில் உணர முடியும்....சொக்கன் அவர்களின் சிறந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று என்றே நான் கருதுகிறேன்.
இந்த பதிவிற்கும் நெகடிவ் ஒட்டு!....பிரபலத்திற்கான விலை மோகன் :(
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோ.. இந்த புத்தகத்தை நிச்சயம் வாங்கி வாசிக்கிறேன்..
ReplyDeleteநன்றி
வரலாற்றின் மேல் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் பற்றிய பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteகாந்தியை கொன்ற காரணம் என கோட்சே கோர்ட்டில் ஐந்து மணி நேரம் பேசியது "May it please your honour " என்று புத்தகமாக வெளிவந்துள்ளது. கோர்ட்டில் அன்று கோட்சே பேச்சை கேட்டவர்கள் கண்ணீர் விட்டு அழுததாகவும், கோட்சேயை விடுதலை செய்ய வேண்டும் என்று பலரும் கூறுமளவு கோட்சே பேச்சு இருந்ததாகவும் நீதிபதியே தீர்ப்பில் கூறுகிறார்.
ReplyDeleteஇது வரை இந்தப் புத்தகத்தைப் பற்றி அறியவில்லையே என்று கொஞ்சம் மனம் வெட்கப்படுகிறது. தகவலுக்கு மிக்க நன்றி
நல்லதொரு புத்தகப்பகிர்வு! பல தகவல்கள் வியப்பை அளித்தன! வாங்கி படிக்க தூண்டுகிறது! நன்றி நண்பரே!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பிள்ளையார் திருத்தினார்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_15.html
வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5435.html
நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் டெல்லிக்கு சுற்றுப் பயணம் செய்தபோது கோட்சேயின் சகோதரர் நாதுராம் கோட்சே எங்களிடம் இது பற்றி பேசினார் அப்போது ஒன்றும் புரியவில்லை அவர் ஆயுள தண்டைநை முடிந்து விடுதலை பெற்றவர் என்று கூறினார்கள்.
ReplyDeleteஆயிரம் காரணங்கள் கூறினாலும் காந்தியை கொன்றது ஏற்றுக் கொள்ள இயலாததே!
நல்ல பகிர்வு!
ReplyDeleteMay it please your honour வாசிக்கவேண்டும்போல் உள்ளது இப்படியொரு நிகழ்வு நடந்ததையே நான் கேள்விப்பட்டதில்லை இது நான் வெட்கப்படவேண்டியவிடயம்தான்...கோட்சேயை சுட்டவன் என்ற கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்கள் நிச்சயம் இதை வாசிக்கவேண்டும்...
ReplyDeleteநல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றிகள் பல நண்பரே...
ReplyDeleteநல்ல நூல் அறிமுகம் நன்றிகள்.
ReplyDeleteமோகன்
ReplyDeleteதமிழ் படம் review மற்றும் personal experience லிருந்து சமுதாய, வரலாறு பக்கம் உங்கள் எழுத்துக்கள் செல்வது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அவரவருக்கு அவரவர் நியாயம் - கொலை செய்பவர்களுக்கும்!! நார்வேயில் 77 பேரைக் கொன்ற Breivik-க்கும் தன் செயலுக்கான நியாயப்படுத்துதலை “2083 – A European Declaration of Independence” என்ற சிறுபுத்தகமாக வடித்துள்ளான். சிறப்பாக இருக்கிறதாம். எழுத்துத் திறமை, பேச்சுத் திறமை இருக்கிறதால் செயல்கள் நியாயமாகிவிடாது.
ReplyDeleteஆனால், இத்தனை மைனஸ் ஓட்டுகள் ஏன் இந்தப் பதிவுக்கு? Something strange!! பாத்ததும், இதுவரை ஓட்டே போடாத எனக்கே ஒரு மைனஸ் போடலாமான்னு கை துறுதுறுக்குது!! :-)))))))))))
கோட்சே கையில் துப்பாக்கி வைத்திருப்பதைப் போல சித்தரிக்கப்பட்டுள்ள படம் உண்மையானது அல்ல. என்ற திரைப்படத்தில் வரும் காட்சி அது. இன்று இந்திய தேசியம் பேச ஏதுவாக இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதி ஒரே நாடாக உருவாக காரணமானவர் காந்தி. காந்தி இல்லை என்றால் சிறு சிறு தேசங்களாக இருந்திருப்போம். முரண் நகை என்னவெனில் , இன்று இந்திய தேசியத்தைப் போற்றுபவர்கள் காந்தியின் மரணத்தை நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள். இந்த வகையிலான புத்தகங்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியவை.
ReplyDeleteகோட்சே கையில் துப்பாக்கி வைத்திருப்பதைப் போல சித்தரிக்கப்பட்டுள்ள படம் உண்மையானது அல்ல.Nine Hours to Rama, (http://www.youtube.com/watch?v=ZtxRUXo9Wjo&feature=relmfu) என்ற திரைப்படத்தில் வரும் காட்சி அது. இன்று இந்திய தேசியம் பேச ஏதுவாக இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதி ஒரே நாடாக உருவாக காரணமானவர் காந்தி. காந்தி இல்லை என்றால் சிறு சிறு தேசங்களாக இருந்திருப்போம். முரண் நகை என்னவெனில் , இன்று இந்திய தேசியத்தைப் போற்றுபவர்கள் காந்தியின் மரணத்தை நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள். இந்த வகையிலான புத்தகங்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியவை.
ReplyDelete// வினையூக்கி said...
ReplyDelete..... தேசியம் பேச ஏதுவாக இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதி ஒரே நாடாக உருவாக காரணமானவர் காந்தி. காந்தி இல்லை என்றால் சிறு சிறு தேசங்களாக இருந்திருப்போம். முரண் நகை என்னவெனில் , இன்று இந்திய தேசியத்தைப் போற்றுபவர்கள் காந்தியின் மரணத்தை நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள். இந்த வகையிலான புத்தகங்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியவை. //
I wonder how you are unaware of Sardar Vallabhai Patel in this contest.. (even Subash Chandra bose, you don't know it seems)
I take it this way.. "Many faught for India's Freedom.. and Gandhi was one among them and mostly led them (led may be subtituted by 'dominated' also, in my view)