Friday, September 14, 2012

விஜயகாந்த் கலக்கல் காமெடி போஸ்டர் + சட்ட ஆலோசனை

ட்ட ஆலோசனையுடன் இந்த முறை கேப்டன் ஸ்பெஷல். முதலில் சற்று சிரிப்போம் அப்புறம் சட்டம் பற்றி சிந்திப்போம் ! படங்கள் அனைத்தும் Facebook-ல் வெவ்வேறு நண்பர்கள் பகிர்ந்தது.



















**********
சட்ட ஆலோசனை

கேள்வி: பெயர் வெளியிட விரும்பாத பெண்மணி 

எனது கணவர் மிக பயங்கரக் குடிகாரர். அவர் சம்பாதிப்பது போக அவர் இப்படிச் செலவு செய்ய அவருக்கு யார் கடன் தருகிறார்கள் என்று தெரியவில்லை. இப்போதே பல முகம் தெரியாதவர்கள், நான் ஆயிரம் தந்தேன் அறுநூறு தந்தேன் என்கிறார்கள். இப்போது எனக்குத் தெரிய வேண்டியது ஒன்றேதான்…

To whomsoever it may concern என்று பேப்பரில் விளம்பரம் அல்லது அறிவிப்பு தருவார்களே, அது போல செய்தித் தாள்களில் இது போல, இன்னார் என் கணவரே ஆயினும் இவர் வாங்கும் கடன்களுக்கு நான் அல்லது நாங்கள் பொறுப்பாளி அல்ல என்று தர முடியுமா…. பயனிருக்குமா….?

தற்சமயம் அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்றாலும் இப்போதும் அவர் காலத்துக்குப் பின்னும் கடன் தீர்க்கும் பிரச்னை இல்லாமல் இருக்கும் வழி உண்டா?

பதில்:  

உங்கள் பிரச்சனை சிக்கலானது தான்.

நீங்கள் குறிப்பிட்டது போல “என் கணவர் வாங்கும் கடன்களுக்கு நான் பொறுப்பேற்க முடியாது” என பேப்பரில் குடுப்பது சரியான தீர்வு அல்ல . ஒருவர் மரணம் அடைந்த பின் அவரது சொத்துக்கள் எப்படி அவர் legal heirs-க்கு வருகிறதோ, அதே போல் அவரது கடன்களும் legal heirs -க்கு தான் வரும்.

நீங்கள் அத்தகைய விளம்பரம் கொடுத்தால் கூட , ஒரு வேளை அவரது மறைவுக்கு பின் கடன் தந்தவர்கள் கோர்டுக்கு சென்றால் அவரது கடன்களுக்கு, அவர் குடும்பத்தினர் தான் பொறுப்பு என சொல்ல கூடும் என்றனர்.

இப்போதைக்கு ” யாரிடம் கடன் வாங்கினீர்களோ அவரிடமே கேளுங்கள். எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை” என சொல்லலாம். அல்லது கணவரை பற்றி போலீசில் புகார் சொல்லி, போலீசை விட்டு “இப்படி குடிக்காதீர்கள்; கடன் வாங்காதீர்கள்” என சொல்ல சொல்லலாம்.

மேலும் இது பற்றி விசாரித்த போது கிடைத்த உபரி தகவல்:
Married Women's Property Act, என்கிற சட்டத்தின் கீழ்  ஒரு குறிப்பிட்ட பாலிசி இருப்பதாக நண்பர்கள் மூலம் அறிகிறேன். இது குறித்த தகவல் இதோ (ஆங்கிலத்தில் தருவதற்கு மன்னிக்க). உங்கள் பிரச்சனைக்கு இந்த பாலிசி மூலம் ஓரளவு தீர்வு கிடைக்க கூடும்


 S. 6 of the Married Women's Property Act allows an individual to buy a policy for himself under the Act and create a trust for the same. This policy is free from creditors, court attachments and creditors would not form part of his estate. However, the law also explicitly states that if the policy has been effected with an intention to defraud creditors, these laws would not operate to destroy or impede the rights of any creditor to be paid out of the proceeds of the policy.

In this policy, the policyholder (the husband) loses all control over the policy with the exception of paying premiums and the policy becomes a property of his wife in the form of a trust where the beneficiary of the trust is only his wife and children. Thus, even if the husband dies before clearing all his debt, still the creditors would not be able to claim the funds from this policy as the policy from the very first day is the property of a trust and not his personal estate.

Any married man can take a life insurance policy under MWP Act. This includes divorced persons and widowers. The policy can be taken only on one's own name, i.e., the life assured has to be the proposer himself. Any type of plan can be endorsed to be covered under MWP Act.

Also in case of a death claim, the policy proceeds are received by the trust and cannot be claimed by the debtors nor will it form part of the estate of the proposer. Hence, the welfare the wife/child/children are protected with utmost care.

*****
ஆங்கிலத்தில் சொல்லப்பட்டதன் சாராம்சம்: இதில் குறிப்பிட்டுள்ள பாலிசி எடுத்தால் (கணவர் தான் எடுக்க முடியும்) அந்த பாலிசி மூலம் வரும் பணத்தை மனைவி தவிர வேறு யாரும் (கடன்காரர்கள் உட்பட) கிளைம் செய்ய முடியாது !


*****
நான் கோர்ட் செல்லும் வழக்கறிஞர் அல்ல. இதற்கு மேலும் தகவல் மற்றும் உதவி வேண்டுமெனில் ஒரு வக்கீலை நீங்கள் கன்சல்ட் செய்வது நல்லது !

48 comments:

  1. கேப்டன் ஸ்பெஷல் மனம் விட்டுச் சிரிக்க வெச்சது. அதுலயும் காந்தியோட புள்ளை பேரு... ஹா... ஹா... சூப்பரு.

    ReplyDelete
  2. ஆங்கிலத்தில் சொல்லப்பட்டதன் சாராம்சம்: இதில் குறிப்பிட்டுள்ள பாலிசி எடுத்தால் (கணவர் தான் எடுக்க முடியும்) அந்த பாலிசி மூலம் வரும் பணத்தை மனைவி தவிர வேறு யாரும் (கடன்காரர்கள் உட்பட) கிளைம் செய்ய முடியாது !//

    உண்மைதான். பிஎப் பணத்தைக்கூட கோர்ட்டால் அட்டாச் செய்து எடுக்க வழி இருக்கிறது. ஆனால் இந்த பாலிசியில் சால்வன்ஸி தந்தவரின் பாலிசி தொகையைக் கூட யாராலும் கைப்பற்ற முடியாதபடிக்கு அது சம்பந்தப்பட்டவரின் மனைவி குழந்தைக்கே போய்ச் சேரும்.

    முக்கியமான விஷயம்: சம்பந்தப்பட்டவர் குடிக்கும் பழக்கமுடையவர் என்பது எல் ஐ சி பாலிசி பார்மில் தெரியப்படுத்தப்படவேண்டும். இறப்பு குடித்து அதன் மூலமான விபத்து என்றால் க்ளெயிம் ப்ரச்சனை வர வாய்ப்புண்டு.

    மனைவி குழந்தைகளுக்கு மட்டுமே தன் இறப்பின் மூலமான பணம் போய்ச் சேரவேண்டும் என்று நினைக்கும் எவரும் இந்த வகையில் பாலிசி எடுத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  3. நான் கூட காந்தி பையன் பேரு தினேசன் பார்த்துவிட்டு, ஹய்யோ காந்தி பத்தி நிறைய தெரியாத விஷயம் இருக்குன்னு நினைச்சிட்டேன்.. அடுத்த லைன் பஞ்ச் பார்த்து செம சிரிப்பு....
    சட்ட ஆலோசனை அருமை சார்.. இப்படி நிறைய சந்தேகங்கள் பிறர் கேட்டுக்கும் போது தான் புது புது விஷயம் தெரிந்து கொள்ள முடிகிறது.. நன்றி...

    ReplyDelete
  4. அருமையான நகைசுவை..ஹா.ஹா...ஹா..

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  5. Anonymous10:52:00 AM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. நிறைய பெண்கள் வருகிற இடம் வீடுதிரும்பல் அது சண்டை கடையாக வேண்டாம் என்பதாலும் நமது சண்டை பார்த்தால் இனி வர தயங்குவார்கள் என்பதாலும் உங்கள் கமண்ட்டை நீக்குகிறேன் பிரபா. உங்கள் ஓட்டு பணியை நீங்கள் தொடரலாம். தலைவர் விஜய் காந்துக்கு எதிரான ஓட்டு என்று சொன்னாலும் உண்மையில் எதுக்கு நெகடிவ் ஓட்டு போடுறீங்க என இணையம் பார்க்கும் எல்லாருக்கும் தெரியும் ; கமன்ட் மாடரேஷன் வைக்கப்படுகிறது நன்றி !

    ReplyDelete
  8. மோகன்! சார்!

    Sureshkumar.artist@gmail.com

    என்னுடைய ஓட்டு ”+” தான் போட்டிருக்கின்றேன்...!

    பட்டிக்காட்டான் ஜெய் போல்தான் நானும்!

    ReplyDelete
  9. விஜயகாந்த் ஸ்பெஷல் ரசிக்க வைத்தது

    ReplyDelete
  10. ஹா... ஹா... ரசிக்க வைத்தது சார்...

    ReplyDelete
  11. சமீரா சொல்லியிருப்பது போல பல பெண்களுக்கு உபயோகமாக இருக்கலாம் இன்றைய சட்ட ஆலோசனைப் பக்கம்! ஆனாலும் இந்தப் பாலிசி மேட்டரை விட இன்னும் கொஞ்சம் உபயோகமான ஆலோசனைகள் இருந்தால் நலம்.

    ReplyDelete
  12. விஜயகாந்த் படங்களும், செய்திகளும் அருமை. திணேசன் பிரமாதம்..

    சட்ட ஆலோசனையும் நன்று. தெரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  13. குடிகாரர் பற்றிய கேள்வி-பதிலுக்குக் கேப்டனின் படம் போட்டு ஆங்கிலத்தில் பதில் சொல்லும் உங்கள் உள்குத்து எங்களுக்குப் புரியாதா?

    ReplyDelete
  14. நான் கூட திநேஷன் என்றதும் தினேஷ் என்பதை இப்படி சொல்றரோன்னு யோசித்தேன் .ROFL:)))

    ReplyDelete
  15. விஜய்காந்த்.... - நேத்து ராஜ்யம்-னு ஒரு படம் பார்த்தேன் - நொந்தேன்....

    ஆலோசனை நன்று!

    ReplyDelete
  16. விஜயகாந்த் போட்டோக்களை ரசித்தேன். சட்ட சிக்கல் வந்தா உங்ககிட்ட வரலாம் போல இருக்கே.

    ReplyDelete
  17. சூப்பர் மோகன் கேப்டன் காமெடி கலக்கீட்டிங்க.
    உங்களுக்கு நிறைய வழக்கறிஞர்கள் நண்பர்கள் உண்டுன்னு எங்கேயோ படிச்சதா நியாபகம்,அவர்களில் சேவை உள்ளம் உள்ளவர்களில் ஒருவரிடம் இலவச ஆலோசனை தர கேட்டு பாருங்களேன்.
    தேவை படுபவர்களுக்கு ஏதோ உங்களால்
    முடிந்த உதவி.

    ReplyDelete
  18. ஒருவர் வாங்கும் கடன் அவருடைய சந்ததிக்கு வருமா? இது என்ன சட்டம்? இந்தியாவில் மட்டுமா?

    ReplyDelete
  19. கடன் வாங்கியதற்கான அத்தாட்சி தேவை. அதிலும் secured கடனாக இருந்தால் மட்டுமே நிலையான/நிலையற்ற சொத்துக்கள் மேல் lien எடுக்க முடியும். இத்தனை கடன் தொகைக்கு இத்தனை ஸ்டாம்பு என்று வேறு இந்தியாவில் சட்டம் இருப்பதாக துருப்பிடித்த நினைவு. இப்படி எதுவும் இல்லாவிட்டால் கடனைத் திருப்ப வேண்டிய அவசியம் ethical responsibility மட்டுமே. (திருப்பவில்லையென்றால் உதை கிடைக்கலாம், அது வேறு விஷயம்)

    ReplyDelete
  20. தங்கை திருமணத்துக்காக என்று என்னிடம் 20000 ரூபாய் கடன் வாங்கினார் ஒரு நண்பர். முப்பது வருடங்களாகிறது, இன்னும் ஒரு ரூபாய் கூடத் திருப்பவில்லை. இப்போது அவர் நண்பரல்ல என்பது மட்டுமே ஒரே மாற்றம்.

    சமீபப் பயணத்தில் தற்செயலாகச் சந்தித்த போது கூட அடுத்த விசிட்டில் தன் புது வீட்டில் அவசியம் வந்து தங்க வேண்டும் என்றாரே தவிர கடன் பற்றி மூச்... தோன்றிய மூட எண்ணங்களைக் கட்டுப்படுத்தினேன் :)

    ஹ்ம்ம்.. கடன் தொகைக்கு statute of limitation எதுனாச்சும் இருக்கா?

    ReplyDelete
  21. திநேஷன் காமெடி பார்த்து வயிறு குலுங்க சிரிச்சேன் ஹா..ஹா..ஹா...

    ReplyDelete
  22. சொத்து சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் வக்கீலை மாற்ற விரும்புகிறேன். (முறையான தகவல்களை எங்களுக்கு தெரிவிக்காதது போன்ற காரணங்களுக்காக).. அதற்கு என்ன என்ன செய்ய வேண்டும்.

    ReplyDelete
  23. @அப்பாதுரை, You have slept over your rights:-)

    ReplyDelete
  24. Gஏப்டன் படங்கள் நன்றாக இருந்தன...

    || நான் கோர்ட் செல்லும் வழக்கறிஞர் அல்ல. ||

    கரெக்ட்..

    அரைகுறை சட்ட ஆலோசனைகள் சொல்வதைத் தொடர வேண்டுமா என்பதையும் நீங்கள் பரிசீலிக்கலாம்..

    @ அப்பாதுரை
    இந்தியாவில் கடன் கொடுத்து விட்டு ப்ராமிசரி நோட்டு எழுதி வாங்கியிருந்தால் கூட, வழக்குப் போட்டு, அரை சதவிகிதம் வட்டியுடன் பணத்தை வாங்குவதற்குள் தாலி அறுந்து விடும்...

    பெட்டர், குறிப்பிட்ட நபரை, வைது வாழ்த்திவிட்டு விலகுவது !

    பெட்வீன் தட்...எல்.ஏ.ஹில் எழுதிய மை லாஸ்ட் டாலர் படித்திருக்கிறீர்களா?

    இல்லையெனில் தேடிப் படியுங்கள்..ஒரிஜினல்,நாட் அப்ரிட்ஜ்ட் வர்ஷன்..
    இருபதாயிர மனப் புண் ஆறி சிறிது சிரிக்கலாம்!

    ReplyDelete
  25. ரஹீம் கஸாலி : நன்றி

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. பாலகணேஷ்: நன்றி நண்பரே

    ReplyDelete
  28. சமீரா: நன்றி

    ReplyDelete
  29. வீடு சுரேஷ்: சரிங்கண்ணா ! இது பிரபா என்கிற ஒரே ஒரு தம்பி செய்யும் விளையாட்டு என்பதை அறிவேன். தம்பி ஆடும் வரை ஆடட்டும் ! ஆரம்பத்தில் கொஞ்சம் சீரியஸா தான் எடுத்துக்கிட்டேன். அப்புறம் தான் அவர் fun-க்கு செய்கிறார். என் மேல் கோபம் ஏதும் இல்லை என புரிந்தது. இனி நோ டென்ஷன் ! பிரபா தம்பி விளையாடும் வரை ஆடிட்டு போகட்டும். நம்ம பசங்க தானே?

    ReplyDelete
  30. நன்றி தனபாலன்

    ReplyDelete
  31. ஸ்ரீராம்: நன்றி

    ReplyDelete
  32. கோவை டு தில்லி : நன்றி

    ReplyDelete
  33. சீனி: நீங்கள் சொன்ன கோணம் யோசிக்கவே இல்லை.

    ReplyDelete
  34. ஏஞ்சலின் : நன்றி

    ReplyDelete
  35. வெங்கட் நாகராஜ் : ரைட்டு

    ReplyDelete
  36. ராஜி: சிக்கலே வராமல் இருக்கட்டும்

    ReplyDelete
  37. ஆசீம் பாஷா : இப்பவே அப்படி தான் கேட்கிறேன் நண்பரே

    ReplyDelete
  38. ஆசீம் பாஷா : இப்பவே அப்படி தான் கேட்கிறேன் நண்பரே

    ReplyDelete
  39. அப்பாதுரை: நீங்கள் கேட்ட அணைத்து கேள்விக்கும் ஏற்கனவே சட்ட ஆலோசனையில் பதில் சொல்லிருக்கேன். முடிந்தால் தனி மெயிலில் லிங்க் அனுப்புறேன்

    ReplyDelete
  40. ஆமினா: நன்றி

    ReplyDelete
  41. வாசகன்:

    //|| நான் கோர்ட் செல்லும் வழக்கறிஞர் அல்ல. ||

    கரெக்ட்..அரைகுறை சட்ட ஆலோசனைகள் சொல்வதைத் தொடர வேண்டுமா என்பதையும் நீங்கள் பரிசீலிக்கலாம்..//

    கோர்ட் செல்லும் வழக்கறிஞர்கள் ஒருவருக்கு இருவரிடம் கேட்டு தான் இங்கு பதில் தரப்படுகிறது.சம்பந்தப்பட்ட நபர்கள் சென்றால் நிச்சயம் சில ஆயிரங்கள் அவர்களுக்கு தரவேண்டும். நான் நண்பன் என்பதால் போனில் இலவசமாய் கருத்து சொல்கிறார்கள்

    இந்த கேள்வியை பொறுத்த வரை முதல் பார்ட் பதில் தந்த பின் இன்னும் திருப்தி அடையாமல் வேறு சிலரிடம் கேட்டு அந்த பாலிசி பற்றியும் எழுதப்பட்டது. இந்த பாலிசி பற்றி தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட பெண்மணிக்கும் தகவல் தரப்பட்டது. இவ்வளவு உழைப்பு இதன் பின்னே இருக்கு.

    இது எதுவும் தெரியாமல் இங்கிலாந்தில் உட்கார்ந்து கொண்டு, தமிழகத்தில் உள்ள ஒருவர் கஷ்டத்துக்கு உதவ நினைப்பதையும் குறை சொல்லும் ஆட்களை என்ன செய்யலாம் சொல்லுங்கள்? இப்படி பேசி தான் இன்னொரு இடத்தில் ஒரு கிழவர் வாங்கி கட்டி கொண்டு போனார். :((

    இந்த கிழவர் பற்றி அங்குள்ளவர்களே தலையில் அடித்து கொள்கிறார்கள் !

    ReplyDelete
  42. @வாசகன், Stephen Leacock என்பவரும் நீங்கள குரிப்பிட்டுள்ளவரும் ஒருவரேதானா?

    ReplyDelete
  43. நான் ஏற்கனவே சொன்னதுதான். சட்ட ஆலோசனை பகுதியில் மற்றவை கவனத்தைத் திசை திருப்புகின்றன. தலைப்பைச் சற்று வித்த்யாசமாக வைத்தாலே போதுமானது என்று தோன்றுகிறது. நீங்கதான் பிரபல பதிவர் ஆகிட்டீங்களே (பின்னே, எம்புட்டு மைனஸ் ஓட்டு!!), அப்புறம் ஏன் ஹிட்ஸ் கவலை எல்லாம். :-))))))

    MWP act -ன் கீழ் பாலிஸி எடுப்பது புது தகவல். நிறைய பேருக்குப் பயன்படும்.

    //நான் கோர்ட் செல்லும் வழக்கறிஞர் அல்ல//

    இதெல்லாம் எதுக்கு? உங்க ப்ரொஃபைலைப் பாத்தாலே புரியும் இது. மேலும், இந்த மாதிரி கேள்வி-பதிலக்ளில் ஒரு ஆலோசனை மட்டுமே கிடைக்கும், முழு தீர்வும் கிடைத்துவிடாது என்று அவருக்கும் தெரிந்துதானிருக்கும்.




    ReplyDelete
  44. @அப்பாதுரை, என்ன சார் நீங்க? அமேரிக்காவுல இருந்துகிட்டு போயும்போயும் ஆஃப்டரால் 20,000 ரூபாய்க்குக் கணக்குப் பாக்குறீங்களே #அனுபவம்!! :-))))))))

    ReplyDelete
  45. @ கோபி
    மை லாஸ்ட் டாலர்' லீகாக் எழுதியதே..தகவலில் பிழைக்கு வருந்துகிறேன்..

    @அப்பாதுரை
    உங்களுக்கும் ஒரு அப்டேட் !(உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும்!)

    ReplyDelete
  46. Captain படங்கள் .. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார் என்பதற்காக இப்படி எல்லாருமே மூச்சு திணற திணற அடிக்கிறீங்களே பாவம் அந்த மனுஷன்.

    ReplyDelete
  47. ஆலோசனை கொடுப்பதுக்கு வாழ்த்துக்கள் . தொடருங்கள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...