தஞ்சை ராணி பாரடைஸ் அருகே, மேம்பாலம் வழியே செல்லும் போதெல்லாம் மேம்பாலத்துக்கு கீழே உள்ள அந்த சிறுவர் சீர்திருத்த பள்ளி கண்ணில் படும். ஒரு முறையேனும் உள்ளே போய் பார்க்க ஆசைப்படும் மனசு !
அம்மாவையும்- கள்ள காதலனையும் கொன்று விட்டு அத்தகைய சீர்திருத்த பள்ளியில் இருக்கும் நெகடிவ் ஹீரோ கதை தான் "நான்". பொதுவாய் இத்தகைய படங்களில் தொடர்ந்து தப்பு செய்யும் ஹீரோ கடைசியில் இறப்பான் - அல்லது போலிஸ் வந்து கைது செய்யும். இங்கு இரண்டும் இன்றி அவன் தன் வாழ்க்கையை வளமை போல் தொடர்கிறான் என முடித்துள்ளனர் !
விஜய் ஆண்டனிக்கு நடிகராக முதல் படம். ஒரு மியூசிக் டைரக்டராக தன்னை நிலை நிறுத்தி கொண்டவருக்கு இது நிச்சயம் ஒரு ரிஸ்க் தான். மேலும் தயாரிப்பாளரும் இவரே ! ஆனால் நல்ல ஒரு இயக்குனர் மற்றும் வித்தியாச கதையால் தப்பித்து விடுகிறார். காமிரா கூச்சமும், பயமும் அந்த பாத்திரத்துக்கு இயல்பாய் பொருந்தி போய் விடுவது மிக பெரிய பிளஸ். நண்பன் சித்தார்த் வீட்டில் இவர் தங்கியிருக்க அவனையே ஒரு விபத்தில் தான் கொலை செய்ய நேரும் போது அழுகிற காட்சியில் நடிக்க தெரியும் என நிரூபிக்கிறார்.
இசை அமைப்பாளாராக நிச்சயம் ஸ்கோர் பண்ணி விடுகிறார் விஜய் ஆண்டனி. " உலகினில் மிக உயரம் - மனிதனின் சிறு இதயம்" " தப்பெல்லாம் தப்பே இல்லை" இவை அருமையான பாட்டுகள் என்றால், இன்னொரு பக்கம் ஹீரோயின் ஆடும் பார்ட்டி பாட்டும் அட்டகாசம் !
இயக்குனர் கம் ஒளிப்பதிவாளர் ஜீவா ஷங்கர்க்கு தான் படத்தின் முழு பாராட்டும் சென்று சேரவேண்டும். வித்தியாச கதை- புது நடிகர்- நடிகைகள் சின்ன பட்ஜெட் இவற்றிலேயே தன்னை நிரூபித்து விட்டார்.
ரூப மஞ்சரி, அனுயா போன்ற ஹீரோயின்கள் படம் ரொம்ப டார்க்காக இல்லாமல், சற்று கிளாமர் சேர்க்க உதவுகின்றனர். ஆனால் அங்கும் கூட, இந்த கதைக்கு வன்முறை மற்றும் செக்ஸ் காட்சி வைக்க எவ்வளவோ வாய்ப்பிருந்தும் தெளிவாய் அவற்றை ஒதுக்கி விட்டு போகிறார் இயக்குனர் !
படத்தில் காமெடி இல்லை. தேவையின்றி சிறு காட்சியும் இல்லை. ஒவ்வொரு சம்பவமும், காட்சியும் நூல் கோர்த்தாற்போல் செல்கிறது. முதல் பாதியிலேயே மூன்று பாட்டும் வந்து விடுகிறது. இரண்டாம் பகுதியில் பாடல்கள் மட்டுமல்ல, வசனமே குறைவு தான். வசனத்துக்கு அதிக வேலையின்றி காட்சியிலேயே படத்தை நகர்த்துவது இயக்குனரின் திறமை !
சில லாஜிக் மீறல்களும் குறைகளும் இல்லாமல் இல்லை.
ஹீரோ பகுதி நேர வேலை பார்ப்பதாக சொல்கிறார்கள். அப்புறம் சித்தார்த் இறந்த பின்னும் ஏன் அவன் வீட்டிலேயே ஹீரோ தங்கணும் என்று புரியலை.
சில காட்சிகள் என்ன ஆகுமென எளிதாய் ஊகித்து விட முடிகிறது. ஜெயிலில் இருந்து வரும் ஹீரோ சொந்தக்காரர் வீட்டுக்கு போக, அவர் மனைவி கணவனை உள்ளே கூட்டி போய் "இவனுக்கெல்லாம் நான் சோறு போட மாட்டேன்" என்பதும், டீயை குடிக்காமல், ஹீரோ சொல்லிக் கொள்ளாமல் போய் விடுவதும் எத்தனை படங்களில் பார்த்து விட்டோம் !
ஹீரோ மாட்டிக் கொள்ள கூடாது என்று நாம் நினைத்தாலும் கடைசியில் எந்த சிறு தண்டனையும் இன்றி அவன் தப்புவது சற்று ஏமாற்றமாக தான் உள்ளது.
ஒரு வித்தியாச படத்தை தந்த இயக்குனர் நிச்சயம் அடுத்த படம் பற்றி எதிர்பார்க்க வைத்து விட்டார்.
வாழ்த்துகள் விஜய் ஆண்ட்டனி மற்றும் ஜீவா ஷங்கர் !

டிஸ்கி: 10 நாள் புகைப்படமா போட்டதன் விளைவு, இந்தபதிவு படம் பார்த்து இவ்ளோ நாள் கழித்து வருது !
வணக்கம்.அட..சினிமா விமர்சனம்...நான் இந்த படத்தை பார்த்துவிட்டேன்..நன்றாக இருக்கிறது
ReplyDeleteஎன்னது ..ஒரு போட்டோவோட சினிமா விமர்சனத்த முடிச்சிடீங்க...
ReplyDeleteவிஜய் ஆண்டனிக்கு முதல் படம் தானே... அடுத்த படத்தில் அசத்துவார்... சுருக்கமான நல்ல விமர்சனம்... நன்றி...
ReplyDeleteநான் படத்தை பற்றிய விமர்சனம் சூப்பர் நண்பரே..
ReplyDeletepadathai theatre la thaan partheengalaa # doubt...
ReplyDeleteமீண்டும் ஒரு பாசிடிவ் விமர்சனம்... படம் பார்பனி தெரியவில்லை சார். வாய்ப்பு இருந்தால் பார்க்க முயல்கிறேன்
ReplyDelete//ஹீரோ மாட்டிக் கொள்ள கூடாது என்று நாம் நினைத்தாலும் கடைசியில் எந்த சிறு தண்டனையும் இன்றி அவன் தப்புவது சற்று ஏமாற்றமாக தான் உள்ளது.//
ReplyDeleteவழக்கமான தமிழ்சினிமா மாதிரியில்லாம தப்பிச்சாரே.. சந்தோசம்.
லேட்டா வந்தாலும் அருமையா வந்திருக்கு விமர்சனம். சின்னச் சின்னக் குறைகள் இருந்தாலும் பொதுவா பாக்கக் கூடிய நல்ல படம்னு தெரியுது. பாக்க முயல்கிறேன் மோகன்.
ReplyDeleteதஞ்சாவூர் தானா நீங்களும்?
ReplyDeleteபார்க்கும் லிஸ்ட்டில் வைத்திருக்கிறேன்!
ReplyDeleteஇப் படம் இன்னும் பார்க்கவில்லை இதில் வரும் ஒரு பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
ReplyDeleteHi. Another heroine is Anuya and not Ananya. Review was nice.
ReplyDeleteThere are some logic mistakes like how hero will handle Anuya's family as they have a chance to meet Siddharth's parents. It is open ended.
Also how hero is sure that Siddharth's buried corpse will not be found out some day?
But director has concluded the film by indicating that second part has been planned. Let us see how it rolls out.
Hi. Another heroine is Anuya and not Ananya. Review was nice.
ReplyDeleteThere are some logic mistakes like how hero will handle Anuya's family as they have a chance to meet Siddharth's parents. It is open ended.
Also how hero is sure that Siddharth's buried corpse will not be found out some day?
But director has concluded the film by indicating that second part has been planned. Let us see how it rolls out.
நான் சினிமாவுக்கே போறதில்லை. டிவியில் போட்டால் கூட படங்களை நான் பார்ப்பதில்லை. உங்களுக்காக வந்தேன். ஓட்டும் போட்டாச்சு.
ReplyDeleteகோவை நேரம் said...
ReplyDeleteஎன்னது ..ஒரு போட்டோவோட சினிமா விமர்சனத்த முடிச்சிடீங்க...
>>>
10 நாளா போட்டோவா போட்டு பதிவை தேத்துனதுக்கு பிராயசித்தமா இனிவரும் 10 நாளுக்கு ஒரே ஒரு போட்டோ மட்டும் போட்டு பதிவை தேர்த்துறதா அவரோட குலதெய்வத்துக்கு நேந்துக்கிட்டாராம்
படம் மேக்கிங் நல்லாத்தான் இருக்கு, ஆனா //ஹீரோ மாட்டிக் கொள்ள கூடாது என்று நாம் நினைத்தாலும், கடைசியில், எந்த சிறு தண்டனையும் இன்றி அவன் தப்புவது சற்று ஏமாற்றமாக தான் உள்ளது//ங்கிறது குறைதான். காரணம், அதில் moral justification இல்லை.
ReplyDeleteமல்ட்டிப்ளெக்ஸ்ல படம் பார்க்கிற க்ரீம் லேயரா நீங்க, இம்புட்டு லேட்டா விமர்சனம் எழுதுறீங்க?
விமர்சனத்துக்கு நன்றி.
ReplyDeleteநல்ல விமர்சனம்...
ReplyDeleteபடம் பார்த்தேன். கொஞ்சம் சைக்கோ மாதிரி படம் என்றாலும், விஜய் ஆண்டனி நன்றாக நடித்து இருக்கிறார். என்னுடைய கருத்து பார்க்கலாம் (குழந்தைகளுடன் வேண்டாம்)
இன்னும் படம் பார்க்கவில்லை. நல்ல விமர்சனம் சார்.
ReplyDeleteநடிப்பு ஆசை யாரையும் விடு வைக்காது போலிருக்கு.
ReplyDeleteவிமர்சனத்துக்கு நன்றி...சார்
ReplyDeleteலேட்டானாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டீங்க தல!
ReplyDeleteநன்றி கோவை நேரம். உங்களுக்கும் படம் பிடித்ததில் மகிழ்ச்சி
ReplyDelete
ReplyDeleteநன்றி தனபாலன் சார்
நன்றி யயாதின். வித்யாசமான பெயர்
ReplyDelete
ReplyDeleteஜெட்லி: படம் பாத்து 15 நாளுக்கு மேல் ஆச்சு ; ஒரே பதிவர் சந்திப்பு பதிவா போட்டதால் எழுத முடியலை
ReplyDeleteநன்றி இந்திரா
ReplyDeleteவாங்க கணேஷ் பார்க்க முயற்சி பண்ணுங்க
ReplyDeleteஆமாம் நாடோடி இலக்கியன் உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் பார்க்க முயற்சி பண்ணுங்க
ReplyDeleteசரவணன் சார்: நன்றி
ஜகன்னாத் : அனுயா என மனசில் இருந்தது. டைப்பும் போது தப்பாகிடுச்சு :(
ReplyDeleteராஜி: நல்லது டிவியில் கூட படம் பார்க்காட்டி நிறைய நேரம் மிச்சமாகும் ஆனா சீரியல் பாப்பீங்களே ??

ReplyDeleteராஜ சுந்தரராஜன் சார்: இப்போ தான் எழுத முடிஞ்சுது நன்றி சார்
ReplyDeleteநன்றிக்கு நன்றி மாதேவி
ReplyDelete
ReplyDeleteவிருச்சிகன் ஆம். சரியாதான் சொல்லிருக்கீங்க நீங்க
நன்றி சீன் கிரியேட்டர்
ReplyDelete
ReplyDeleteஆம் முரளி சார். ஆனா விஜய் ஆண்டனி ஓகே
நன்றி உழவன் ராஜா
ReplyDeleteகுட்டன்: நன்றி
ReplyDeleteசிறப்பான விமர்சனம் !..தொடர வாழ்த்துக்கள் .
ReplyDeleteபடத்தை பார்க்கலாம் என நினைக்கிறேன் உங்க விமர்சனத்தை பார்த்து விட்டு.. நன்றி!
ReplyDelete***
விஜய் ஆண்டனியின் தைரியத்தை பாராட்ட வேண்டும்! :)
நல்ல விமர்சனம் மோகன்....
ReplyDeleteபடம் பார்க்கத்தான் வழியில்லை இங்கே....
நான் - நிச்சயம் பார்க்க வேண்டிய படம் என்று சொல்லுகின்றீர்கள்.. பார்த்துட்டாப் போச்சு !
ReplyDeleteநன்றி அம்பாளடியாள்
ReplyDeleteநன்றி பளூர் கார்த்தி
நன்றி வெங்கட்
ReplyDelete
ReplyDeleteநன்றி இக்பால் செல்வன். பாருங்கள்