Monday, September 24, 2012

தொல்லை காட்சி பெட்டி - 2

நல்ல நிகழ்ச்சி : ஜெயா டிவியில் கபடி கபடி



பெண்கள் ஆடும் கபடி போட்டி ஐ. பி. எல் போல கே.பி. எல் என ஜெயா டிவி நடத்துகிறது. இது ரொம்ப நல்ல விஷயம். கபடி விளையாட்டுக்கு நல்ல ஊக்கமாய் இருக்கும். சென்னை அணி மிக நன்கு ஆடி வருகிறது. பெரும்பாலும் மிக சுமாரான அல்லது ஏழை குடும்பத்தில் உள்ள பெண்களே இதில் விளையாடுவது தெரிகிறது. ஒரு பெண்ணின் வீட்டுக்கே போய் பேட்டி எடுத்து அவர் அப்பா மீண்டும் மீண்டும் அழுகிற விஜய் டிவி ஸ்பெஷல் டைப் காட்சிகளும் உண்டு. இந்த விஷயமெல்லாம் தவிர்த்து நிஜமாய் கபடி மேட்ச் பார்க்க செமையாக உள்ளது. ஞாயிறு மதியம் ஒன்று முதல் இரண்டு வரை பார்க்க முயலுங்கள் !

சூப்பர் சிங்கர் ஜூனியர் கார்னர்

செமி பைனலை எட்டியுள்ளது சூப்பர் சிங்கர் ஜூனியர். காலிறுதியில் ஒரு பாட்டின் இடையே சில வரிகளை மறந்த முற்றிலும் தவறாய் பாடிய கெளதம் அடுத்த சுற்று போய் விட்டார். அனு அவுட் ஆகி வெளியேறினார் ! நிகழ்ச்சி பார்த்த யாருமே அவுட் ஆக வேண்டியது கெளதம் தான் என்று அறிவார்கள். ஆனால் அவரை அவுட் ஆக்கினால் மற்ற நால்வருமே பெண்கள் மட்டுமே என்று இருக்கும் என்பதால் இப்படி செய்தது அப்பட்டமாய் தெரிகிறது. வாழ்க நடுநிலைமை !

செமி பைனலுக்கு அவர்கள் போடும் கிளிப்பிங்களில் சுகன்யா முதல் நபராய் பைனல் செல்வதும், கெளதம் நன்கு பாடுவதும் தெரிகிறது. இந்த வாரம் செமி பைனல் ரவுண்ட் !

விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்

தாண்டவம் படம் பற்றி விக்ரமிடம் பேசினார் கோபிநாத். ஒரே நேரத்தில் இந்த படத்திலும் ஷங்கரின் ஐ படத்திலும் நடிப்பதாகவும் கண் தெரியாத இந்த பாத்திரத்துக்கு மிக மெனக்கெட்டதாகவும் சொன்னார் விக்ரம். கோட் போடாமல் முழுக்கை சட்டை அணிந்த கோபியை பார்க்க வேடிக்கையாய் இருந்தது. அடிக்கடி நெற்றியில் கை வைத்து வியர்வையை துடைத்து கொண்டே இருந்தார் கோபி. கேட்டபோது அதிகம் கவராத தாண்டவம் பாடல்கள் திரையில் பார்க்கும் போது ஓகே என்று என தோன்றியது.

விஜய்யில் போட்ட வழக்கு எண் 18/9 மற்றும் சன்னில் மாலை போட்ட 3 ஆகியவை மட்டுமே புது படங்கள். இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் வழக்கு எண் 18/9 படத்தை நான்கு மணி நேரம் காட்டி விஜய் டிவி விளம்பரங்களால் கொன்று கொண்டிருந்தது. மாலை மறுபடி விஜய் டிவியில் ஒரு விளம்பரம் " இன்று இரவு 9.30 மணிக்கு ஒரே முறை மட்டும் விளம்பர இடைவெளியுடன் மீண்டும் வழக்கு எண் 18/9 படம் ஒளிபரப்பாகும் என ! இப்படியெல்லாம் செய்வதால் தான் பலருக்கும் டிவியே வெறுத்து விடுகிறது !

மனதோடு மனோ

ஜெயா டிவி யில் மனதோடு மனோ நிகழ்ச்சியில் MSV-யுடன் மனோ பேசினார். பல சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்தார் MSV . " யார் அந்த நிலவு? ஏன் இந்த கனவு? ? என்ற பாடல் சிவாஜிக்காக இசை அமைத்துள்ளனர். ஆனால் பாடல் படமாக்கும் போது சிவாஜி இரண்டு நாள் ஏதேதோ காரணம் சொல்லி படபிடிப்புக்கு வர வில்லையாம். "பாட்டு பிடிக்கலையோ மாத்திடலாமா? " என கேட்க, TMS ரொம்ப நல்லா பாடிருக்கார் ; MSV ரொம்ப நல்லா மியூசிக் போட்டிருக்கார். நான் அவங்களை விட பெட்டரா பண்ணனும் அதுக்கு தான் ஐடியா பண்றேன் " என சொல்லி விட்டு ஸ்டைலாக சிகெரெட் பிடிப்பது போல் பிளான் செய்து, பயிற்சி செய்து வந்து இரண்டு நாள் கழித்து நடித்தாராம் சிவாஜி !


நீயா நானா - இந்த வாரம்

நசிந்து வரும் தொழில்கள் மற்றும் புதிய தொழில்கள் பற்றிய விவாதம் நன்றாகவே இருந்தது.

நிகழ்ச்சியில் நாம் சென்னையில் வித்தியாச டி. ஷர்ட் கடை பற்றி எழுதினோமே .. அந்த கடை ஓனர் வந்திருந்தார். நாம் சாதாரண மனிதர்களில் எழுதிய சில தொழில்களை சேர்ந்தவர்கள் ( அயர்ன் செய்பவர், மாவு மில் காரர்) வந்திருந்தனர்.

மனித கழிவை அகற்றும் பெண்கள் தங்கள் வருத்தத்தை சொல்லும் போது கோபிநாத்திடம் " நீங்களும் தள்ளி தான் நிக்குறீங்க" என சொல்ல, ஓடி வந்த கோபி " நீங்க எனக்கு அக்கா மாதிரி" என்று சொல்லி கட்டி கொண்டார்.
நசிந்த தொழில்களை மதிக்க வேண்டும், ஆதரிக்க வேண்டும் என்பது வார்த்தைக்கு வேண்டுமானால் நன்றாயிருக்கும். ஆனால் நிஜத்தில் நாம் எந்த அளவு செய்கிறோம் என்பது கேள்விக்குறியே !

கிரிக்கெட்

இந்தியா இங்கிலாந்தை எளிதாக வென்றது  ! 

T 20-ல் ஏழு பாட்ஸ்மேன்   என்பது luxury. ஒரு பாட்ஸ் மேனை தியாகம் செய்து விட்டு ஹர்பஜன் ஆடலாம். அஷ்வின் மற்றும் பதான் இருவரும் ஓரளவு பாட்டிங் செய்ய கூடியவர்களே. தோனி இவ்விஷயத்தில் என்ன செய்கிறார் என பொறுத்திருந்து பார்ப்போம் !

30 comments:

  1. வணக்கம் சார்...இவ்ளோ ப்ரோக்ராம் பார்க்கறீங்க..இங்க கரண்டே இல்ல...

    ReplyDelete
  2. ஒரு மணி நேரம் உங்களுக்கு...எங்க ஏரியாவுல 14 டூ 18 மணீ நேரம்..நல்லா டி வி பாருங்க...எஞ்சாய்...

    ReplyDelete
  3. Anonymous9:38:00 AM


    //கோபி " நீங்க எனக்கு அக்கா மாதிரி" என்று சொல்லி கட்டி கொண்டார். //

    புல்லரிப்பு!!

    ReplyDelete
  4. ஆபீஸ்லயும் டிவி நிகழ்ச்சிகளப் பாக்குறீங்களா?...
    எல்லா நிகழ்ச்சிகளையும் கவர் பண்ணிடுரீங்களே அதான் டவுட்ட்....

    :-))))))

    ReplyDelete

  5. ///மனித கழிவை அகற்றும் பெண்கள் தங்கள் வருத்தத்தை சொல்லும் போது கோபிநாத்திடம் " நீங்களும் தள்ளி தான் நிக்குறீங்க" என சொல்ல, ஓடி வந்த கோபி " நீங்க எனக்கு அக்கா மாதிரி" என்று சொல்லி கட்டி கொண்டார். ///

    வருங்கால எம்ஜியார்...புதிய கட்சி ஆரம்பிக்க கோபிநாத்திற்கு தகுதி வந்துவிட்டது

    ReplyDelete
  6. கலக்கல் அண்ணே ..
    நான் தவறவிட்ட நிகழ்சிகளை இதில் படித்து அறிந்தேன் அண்ணே

    ReplyDelete
  7. மனதோடு மனோ சனிக் கிழமைகளில் மறு ஒளிபரப்பில் பார்ப்பேன். எம் எஸ் வி இந்த சம்பவத்தைப் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்! சுவாரஸ்யமான நிகழ்ச்சி.
    கிரிக்கெட்டில் முதல் விக்கெட் விழுந்ததும் ஹர்பஜன் சீயயல் பார்க்கும் பெண் போலக் கண் கலங்கியது புன்னகையை வரவழைத்தது. கேலரியில் அஷ்வின் வில்லனைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தார்! இங்கிலாந்து இதில் திட்டமிட்டே தோற்றதோ? சூப்பர் எட்டை மனதில் வைத்து?

    ReplyDelete
  8. லீவு நாட்களில் என் கணவர் கண்ட்ரோலில் தான் ரிமொட் இருக்கும். அதிக நேரமில்லை காலை 6லிருந்து இரவு 11 வரை. டிஸ்கவரி,டி.எல்.சி,ஸ்டார்,எச்.பி.ஓ இப்படி அனைத்தும் இங்கிலிஷ் சேனல்களே ஓடுஓடென்று ஓடி கொண்டிருக்கும். அவர் இப்படி டி.வி பார்ப்பதை நாங்கள் பார்த்து பார்த்து பழகி விட்டது.

    ReplyDelete
  9. சண்டே செம பிஸி சார் நீங்க!! மனதோடு மனோ நானும் சில முறை பார்த்து இருக்கிறேன்.. நல்ல நிகழ்ச்சி!! இது தவிர ஜாக்பாட் நான் விரும்பும் மற்றொரு நிகழ்ச்சி!!
    பொறுமையாக பார்த்தவற்றை தொகுதளித்ததர்க்கு நன்றிகள்..

    ReplyDelete
  10. ...ம்... இங்கு 6 அல்லது 8 மணி நேரம் தான் மின்சாரம் இருக்கிறது... விரும்பிய நிகழ்ச்சிகள் முழுதாக பார்க்க முடிவதில்லை... பகிர்வு மூலம் அறிந்து கொண்டேன்... நன்றி...

    ReplyDelete
  11. நீயா நானா கடைசியில் கரெண்ட் கட். அதனால் நீங்கள் குறிப்பிட்ட அந்த பகுதி பார்க்கவில்லை. பொதுவாக திரைப்பட ப்ரமோடிங் நிகழ்ச்சி பார்க்கப் பிடிப்பதில்லை. அதனால் விக்ரம் நிகழ்ச்சியும் கட். அப்பொழுது சுட்டி டீவியில் பால-கணேஷ் கார்டூன் வேறு ஓடியதால் குழந்தைகள் கையில் ரிமோட்.

    மனதோடு மனோ பார்க்கவில்லை.

    ReplyDelete
  12. எந்த நிகழ்ச்சியுமே பார்க்கவில்லை வீட்டில் விருந்தினர்!

    ReplyDelete
  13. "ஆனால் நிஜத்தில் நாம் எந்த அளவு செய்கிறோம் என்பது கேள்விக்குறியே ! "

    Good point... we are showing patriotism only in Social media. esp. Facebook.. but in nature, it is a big question mark ???

    ReplyDelete
  14. ஐயோ இம்புட்டு டிவி சீரியல்களா? அது முன்னாடி 10 நிமிசம் உக்காரவே எனக்கு பிடிக்க மாட்டேங்குது. னீங்க எப்படி இவ்வளாவு புரோகிராம்களை பார்க்குறிங்க?

    ReplyDelete
  15. நிகழ்ச்சிகளை பற்றிய விமர்சனம் நறுக்

    ReplyDelete
  16. கோவை நேரம்: நிச்சயம் நீங்கள் சொல்வது வருந்த வேண்டிய விஷயம் தான்

    ReplyDelete

  17. ஜெய் : ஏஏஏஏன் ? கிரிக்கெட் மட்டும் முக்கியமான மேட்ச் சில நேரம் ஆபிஸ் டிவியில் பார்ப்போம்

    ReplyDelete

  18. அவர்கள் உண்மைகள் :சரிங்கண்ணா

    ReplyDelete
  19. அரசன் சே said...

    நான் தவறவிட்ட நிகழ்சிகளை இதில் படித்து அறிந்தேன் அண்ணே
    *********
    ஆமாம் அரசன். அதுக்கு தான் இங்கு பகிர்வது !

    ReplyDelete
  20. ஸ்ரீராம் said

    /இங்கிலாந்து இதில் திட்டமிட்டே தோற்றதோ? சூப்பர் எட்டை மனதில் வைத்து?//

    ஒருவேளை இருக்கலாம்என தோணுது . இப்போ அணிகள் அணி வகுப்பை பார்த்தால் அந்த சந்தேகம் வரவே செய்யுது

    ReplyDelete
  21. அமுதா கிருஷ்ணா: ஏறக்குறைய நீங்க சொல்றது நமக்கும் பொருத்தும். பல நேரம் நம்ம கண்ட்ரோலில் ரிமோட் இருக்கலாம். சில நேரம் பெண் கையில்

    ReplyDelete

  22. நன்றி சமீரா

    ReplyDelete

  23. தனபாலன் சார்: விரைவில் கரண்ட் பிரச்சனை சரியாகும் என நம்புகிறேன்

    ReplyDelete
  24. சீனி: டில்லியிலும் கரண்ட் கட்.. அதுவும் இரவு 11 மணிக்கா??

    ReplyDelete

  25. உமா: தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  26. வடிவேலன்: உண்மை தான் நன்றி

    ReplyDelete
  27. ராஜி: சரி விடுங்க. :))

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete

  29. முரளி தரன் சார்: நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...