Thursday, September 20, 2012

கோபால் நீங்க நல்லவரா,கெட்டவரா?மணிவிழா ஸ்பெஷல் படங்களுடன்

ன்று மணிவிழா காணும் கோபால்- துளசி கோபால் இருவரையும் வாழ்த்தி மகிழ்கிறோம் !


துளசி டீச்சரிடம் கோபால் சார் பற்றி எழுதி தர சொல்லி கேட்டபோது அவர் விழாவுக்காக சென்னை வந்திருந்தார். " நேரம் இருக்குமான்னு தெரியலையே மோகன். முயற்சி பண்றேன். இல்லாட்டி தப்பா நினைச்சுக்காதீங்க" என்றாலும் அடுத்த இரு நாளில் அனுப்பி விட்டார் !

மணிவிழா நாளான இன்று இதை வெளியிடுவது பொருத்தம் என்பதாலும், இன்று மாலை விழாவிற்கான ஒரு நினைவூட்டலாகவும் இப்பதிவு வெளியாகிறது. மாலை சென்னையில் ஒரு மினி பதிவர் சந்த்ப்பே நடக்க உள்ளது. சந்திப்போம் நண்பர்களே !

ஓவர் டு துளசி டீச்சர் !
*******
கோபால் நீங்க நல்லவரா, கெட்டவரா? By:  துளசி கோபால்  

முப்பத்தியெட்டு வருசத்துக்குப்பிறகு(ம்) இப்படி ஒரு கேள்வி வருது பாருங்க:-))

          
வாழ்விலும் தாழ்விலும் சுகத்திலும் கஷ்டத்திலும் வாழ்க்கை ஏற்றத்திலும் இறக்கத்திலும் இப்படி எல்லா சமயங்களிலும் இணைபிரியாது நாடுகள் தோறும் அடுப்புகள் வேறு என்று கூடவே பயணப்பட்டு வந்துருக்கறவரைப் பற்றி என்னன்னு எழுதறது?

நல்லவரென்ற வகையில் பார்த்தால் அன்பானவர். நாம் வாழும் கம்யூனிட்டிக்கு நம்மாலான உதவிகளையும் சேவைகளையும் செய்யணும் என்பதில் உறுதியா இருப்பவர். நாய் பூனைகளை அண்டவிடக்கூடாதுன்னு என்னிடம் ஒருபக்கம் சொல்லிக்கிட்டே பூனை இல்லாத வீட்டுக்குப் பூனை சாப்பாடு வாங்கித் தருபவர். ( அட.... எனக்கில்லைங்க. நம்ம வீடுதேடி வரும் அதிதிகளான ரஜ்ஜூ, மூணு வாரமா நெருங்கிவரத் தொடங்கி இருக்கும் கப்பு 2 என்பவர்களுக்காக)

சென்னை விஜயகாந்த் உடன் க்ரைஸ்ட்சர்ச் விஜயகாந்த் 
                      
என் நண்பர்களையெல்லாம் தன் நண்பர்களைப்போலவே பாவிக்கும் நல்ல குணம். ("தனியா எனக்குன்னு யாரும் நண்பர்கள் இல்லைம்மா. உங்க ஆளுங்கெல்லாம் நம்மாளுங்க")

துளசிதளத்தின் புரவலர். பின்னூட்டப்ரேமி. இடுகையைப்பற்றிக் கவலைப்படமாட்டார். பின்னூட்டம் வரலைன்னா நடுங்கிப் போயிருவார்:-)))

பசும்பால் என்ற பெயருக்கு ஏத்தமாதிரி கறந்தபாலின் தன்மை. கொஞ்சம் வெகுளி. நம்பிருவார். அதுவும் நான் சொல்ற எல்லாத்தையுமே!!!



அதேபோல் இந்தியாவைப் பற்றிய அதீத நம்பிக்கை. எத்தனை மோசடிகளைப்பற்றி தினசரிகளிலும் ஊடங்களிலும் வந்தாலும் அதையும் மீறி எல்லாத்திலும் நம்பிக்கையோடு பேசுவார். டிவிக்காரன் சொல்லிட்டா வேதம்! சுருக்கத்தில் சொன்னால்.... எவ்ளோ அடிச்சாலும் தாங்கிக்குவார் நம்ம வடிவேலுவைப்போல்:-))))

எப்பவுமே நல்லவராவே இருப்பாரா? இருக்கத்தான் முடியுமா? கெட்டவைகள் என்னன்னு பார்த்தால்......

                          
எப்பப்பார்த்தாலும் சாப்பிடு சாப்பிடுன்னு சொல்லிச்சொல்லியே என்னை குண்டடிக்க வச்சுட்டார்:-)

ரெஸ்ட் எடுத்துக்கோ ரெஸ்ட் எடுத்துக்கோன்னு ஒரு பக்கம் சொல்லிக்கிட்டே (பதிவுக்கு மேட்டர் தேத்த) ஊர் சுத்தக் கூட்டிக்கிட்டுப் போயிருவார்.

நான் எங்கே கவலைப்படப் போறேனோன்னு அவர் கவலைப்பட்டு என்னைக் கவலைப்படாதேன்னு சொல்லித் தேற்றிக்கிட்டே(??) இருப்பார்.

பிடிவாதக்காரர். கண்டிப்பா வாழ்க்கையில் முன்னேறணுமுன்னு அயராமல் மேல்படிப்பு, செய்யும் வேலையில் ஆர்வம், முழுமனசுடன் அதில் ஈடுபாடு . இதற்கு நடுவில் காதல் மனைவியை நல்லபடியா வச்சுக் காப்பாத்தணும் என்ற கவனம். ரெண்டு சைடும் க்ளாஷ் ஆகாமல் பேலன்ஸ் பண்ணும் சாமர்த்தியம்.

மகளுக்கும் , எனக்கும், நம்ம கப்பு கோகின்னு எல்லோருக்கும் ரொம்பச் செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சுருக்கறவர்.

                      
வெட்டிக்கிட்டு வான்னால் கட்டிக்கிட்டு வர்ற குணம். நான் பார்த்து வச்சுருக்கும் பொருளை அவர் வாங்கப்போனால் அதைவிட (நல்லா இருக்கும்) வேறொன்னை வாங்கி வந்துருவார்.

நான் எதாவது பொருளை வாங்கிட்டு இவர் கோச்சுக்கப்போறார். அதை சமாளிக்கச் சண்டை போடலாமுன்னு நாக்கைத் தீட்டிக்கிட்டு இருந்தாலும் ஒன்னுமே சொல்லாம நீ இஷ்டப்பட்டு வாங்கினால் அது நல்லா இருக்குமுன்னு சொல்வாரா, எனக்குக் பொசுக்ன்னு போயிரும்! கத்திச்சண்டை போட என்னை விடுவதே இல்லைன்னா பாருங்க.

                           

முந்தாநாள் பாருங்க.... விழாவுக்கான ஹாலை ஒரு பார்வை பார்க்கலாமுன்னு போய் அங்கே கால் தடுக்கிக் கீழே விழுந்துட்டேன். ஒருவேளை கால் உடைஞ்சு போயிருந்தால்.....? என்னைக் கல்யாணம் செஞ்சுக்க மாட்டீங்கதானேன்னு கேட்டதுக்குத் தூக்கிட்டுப்போய் மணையிலே வச்சுத் தாலி கட்டிருவேன்னு சொன்ன நெஞ்சுரம்...........அப்பப்பா..... யானையைத் தூக்கணுமுன்னா சும்மாவா?


என்னடா.... கெட்டதைச் சொல்றேன்னு இப்படியெல்லாமான்னா.... என்ன செய்வது? ரொம்பக் கெட்டதா வேறொன்னும் ச்சட்ன்னு நினைவுக்கு வரலையே!

ஆங்......... ஒன்னு இருக்கு. ஒன்னு இருக்கு . டிவி ரிமோட்டை என்கிட்டே தரவே மாட்டார். அதுக்காக நான் அழமாட்டேன். நான்தான் டிவி பார்க்கிறதில்லையே!


கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் அன்று ஒரு காலத்தில் காண்பித்த அன்பு இன்னும் குறையாமல் இருக்கும் என் காதல் கணவன் கோபாலை நல்லவரா கெட்டவரான்னு என்னால் தீர்மானிக்கவே முடியலை.

இன்றைய தினம் தன் அறுபதாம் பிறந்த நாளைக் கொண்டாடும் கோபாலுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

                      

நட்புக்கு மரியாதைன்னு நம்ம மோகன்குமாரின் சிறப்பு இடுகைக்கும் பின்னூட்டம் இடப்போகும் அன்பு உள்ளங்கள் அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

39 comments:

  1. படங்களுக் பதிவும் அருமையாக அமைந்துள்ளன! வாழ்க மணிவிழா நாயகரும் நாயகியும் பல்லாண்டு! பதிவிட்டு சிறப்பித்த தங்களுக்கும் நன்றி மோகன்!

    ReplyDelete
  2. அருமை. மணிவிழா தம்பதியர் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்! சிறப்பான பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. மணிவிழா தம்பதியருக்கு வாழ்த்துக்கள்...

    படங்களும் பதிவும் அருமை... பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
  4. Excellent Post Mohan.

    Best Wishes to Shri Gopal and Tulsi teacher.

    ReplyDelete
  5. மணிவிழா தம்பதியருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. மணிவிழா தம்பதியருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. மணிவிழா காணவிருக்கும் தம்பதியருக்கு அன்பான வணக்கம். கோபால் சாரைப் பற்றி துளசி மேடம் கூறக்கேட்டு மிகவும் நெகிழ்ச்சி. கருத்தொருமித்தக் காதல் வாழ்வு வாழும் உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. இன்றுபோல் என்றும் மகிழ்வோடும் மனநிறைவோடும் குறைவிலாத வளத்தோடும் குன்றாத உடல்நலத்தோடும் வாழ வாழ்த்துக்கள்.

    துளசி மேடம், கோபால் சாரின் கெட்டப்புகள் அருமை. அழகான படங்களுடன் மணிவிழாத் தகவல்களைத் திரட்டி வெளியிடும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி மோகன்.

    ReplyDelete
  8. வாவ்வ்வ்வ்வ்வ்.. இந்த வயதிலும் அதே காதலுடன்...

    படிக்கும் போது 20-25 வயசு ஜோடி எழுதிய பதிவு மாதிரியே இருந்துச்சு!

    வாழ்த்துகள் உங்கள் இருவருக்கும்

    படங்கள் எல்லாம் அருமைங்க :-)

    ReplyDelete
  9. கோபால் ஐயாவுக்கு, துளசி அம்மாவுக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள், நிகழ்வில் நேரடியாக கலந்து கொள்ள இயலாமல் போனதற்கு வருந்துகிறேன், தாங்கள் அந்த குறையை சற்று போக்கியுள்ளீர்கள்

    ReplyDelete
  10. கோபால் ஐயாவுக்கு, துளசி அம்மாவுக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  11. மணிவிழா தம்பதியருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. Super photos. வழக்கமா கருப்பு வெள்ளை புகைப்படங்களில், புகைப்படத்தில் இருப்பவர்கள் தம் கட்டி நின்னு, ஏதோ ஒரு திசையை வெறிச்சு பார்த்துட்டு நிப்பாங்க. நாலாவது புகைப்படம் ரெம்ப இயற்கையா இருக்கு.

    ReplyDelete
  13. வாழ்த்துன்னு சும்மா சொல்லிட்டு போக முடியலை. ரொம்ப சந்தோசமா இருந்துச்சு படிக்க. எங்களுக்கும் வாழ்வில் இந்த நிறைவு வரும் மனநிலை வரட்டும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க :))

    ReplyDelete
  14. இது போன்ற கருத்துப் பகிர்விற்கு வாய்பளித்த உங்களுக்கு நன்றிகள் சார்

    ReplyDelete
  15. bandhu has left a new comment on your post "கோபால் நீங்க நல்லவரா, கெட்டவரா?ஸ்பெஷல் படங்களுடன் ...":

    மணி விழா வாழ்த்துக்கள் டீச்சர்! பெருமைபடுத்திய உங்களுக்கும் மோகன் குமார்!

    ReplyDelete
  16. மணிவிழா தம்பதியருக்கு வாழ்த்துகள்...

    ஆத்துலே இறங்கி, ஒருத்தர் மேலே ஒருத்தர் தண்ணீரை அடிச்சிக்கற அந்த பிளாக் & ஒயிட் படம்.. காதல் என்கிற உணர்வின் விஷூவல் வடிவம்...

    ReplyDelete
  17. மணிவிழா தம்பதியருக்கு வாழ்த்துகள்...

    ஆத்துலே இறங்கி, ஒருத்தர் மேலே ஒருத்தர் தண்ணீரை அடிச்சிக்கற அந்த பிளாக் & ஒயிட் படம்.. காதல் என்கிற உணர்வின் விஷூவல் வடிவம்...

    ReplyDelete
  18. ம‌ணி விழா காணும் திரு. கோபால் அவர்களுக்கும் திருமதி.துளசிக்கும் இன்னும் நிறைய வருடங்கள் ' வெண்ணிலாவும் வானும் போல, வீரனும் கூர்வாளும் போல' வாழ்வாங்கு வாழ மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  19. மணிவிழா தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. படங்கள் சொன்ன கதை ஒரு பக்கம்.. கலகலப்பாய் நீங்கள் சொல்லிப் போன விஷயங்கள் இன்னொரு பக்கம்.. படிக்கும்போது மனசுக்கு ஒரு நிறைவு வருது பாருங்க.. அந்த சந்தோஷத்தோட நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. மணிவிழா தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..

    நாலாவது படம் ரொம்ப அழகா இயற்கையா இருக்கு.

    @துள்சிக்கா,.. உங்க பொண்ணு அரிச்சுவடி ஆரம்பிக்கற படம் ஜூப்பர். புஸ் புஸ் கன்னத்தோட இருக்கற குட்டிப்பாப்பாவை அப்படியே தூக்கிட்டு வந்துரலாம் போல இருக்கு :-))))

    ReplyDelete
  22. மணிவிழா தம்பதியருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. ம‌ணி விழா காணும் திரு. கோபால் திருமதி.துளசி கோபால் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்.

    இன்றுபோல் என்றும் இனித்திடட்டும் இல்லறம். வாழ்க நலமுடன்.

    ReplyDelete
  24. இன்னொரு பூங்கொத்தும் வாழ்த்துக்களுடன்!!

    ReplyDelete
  25. டீச்சர், மிகுந்த சந்தோஷத்தையும் நிறைவையும் தந்த இடுகை.

    இது க்ளிஷே இல்லை, அறுவது கொண்டாடிய உங்களை வாழ்த்த வயதில்லை, வணங்கிக் கொள்கிறேன்

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  26. மணிவிழா தம்பதியருக்கு வந்தனங்கள்! சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  27. என்ன சுவாரஸ்யமான தம்பதிகள்! வாழ்த்துகள்

    ReplyDelete
  28. கடந்த 15 ஆம் தேதி..துளசி கோபால் அவர்கள் எங்களுக்கு தொலைபேசினார்.மணிவிழாவிற்கு அன்புடன் அழைத்தார்.ஆனால் நாங்கள் 16ஆம் நாள் இரவு அமெரிக்கா செல்ல இருப்பதைச் சொல்லி ,எங்கள் இயலாமையைத் தெரிவித்ததுடன்...எங்களது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்தோம்.எங்களை மறக்காமல் அவர் அழைத்ததற்கு நன்றி.விழாவில் கலந்துகொள்ள இயலாமைக்கு சற்று வருத்தமே.
    துளசியும்..கோபாலும் பல்லாண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறோம்.

    காஞ்சனா ராதாகிருஷ்ணன், டி.வி.ராதாகிருஷ்ணன்

    ReplyDelete
  29. மணிவிழா தம்பதியருக்கு வாழ்த்துகள்..

    நிறைவான வாழ்க்கை கொடுக்குற சந்தோஷத்துக்கு ஈடா இந்த உலகத்துல வேற எதுவுமே இல்ல.

    வணங்குகிறேன் துளசி அம்மா கோபால் சார். ஆசிர்வாதம் பண்ணுங்க.

    ReplyDelete
  30. 'வலையுலக' அம்மா அப்பாவுக்கு வாழ்த்துக்கள்.

    தனி பதிவிட்ட மோகனுக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  31. மணிவிழா தம்பதியருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  32. மணிவிழா தம்பதியருக்கு வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  33. இந்தக் கேள்வி Mrs. துளசி கோபால் அவர்களுக்கு:

    அந்த கருப்பு வெள்ளை படத்தில் இருக்கும் பீச் [beach] சென்னையில் உள்ள 'பட்மோட்' பீச்சா. பட்மோட் பீச் அடையாறு கடலில் கலக்கும் முகத்துவாரம். அதற்கு செல்ல Foreshore Estate பீச் வழியாக செல்லவேண்டும். பெசன்ட் நகர் வழியாகவும் வரலாம்.

    மந்தைவெளியில் வசிக்கும் போது நண்பர்களுடன் 'பட்மோட்' பீச் சென்று அங்கு குளிப்போம். அங்கு அலைகள் கம்மி பௌர்ணமி அமாவாசை நாட்களைத் தவிர (அப்போ, High tides). இப்போது கடல் அந்தப் பாதையை அரித்துவிட்டது .

    கோபால் முகம் தெரிந்த முகமாக இருக்கிறது! கோபால் சென்னையா? துளசியும் சென்னை தானா?

    ReplyDelete
  34. அன்பு மோகன்குமார் அரிய படங்களைத் தந்து என்னை மகிழ்ச்சியில் அழ்த்திவிட்டீர்கள். துளசியின் அன்பையும் கோபால் அவர்களின் பண்பையும் விவரிக்க வார்த்தைகளெ இல்லை. நூறாண்டு வாழவேண்டும் இந்த அன்புப் பறவைகள் இருவரும். எங்கள் ஆசிகள்.பதிவிற்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  35. பாராட்ட வார்த்தைகள் போதாது. excellent.

    ReplyDelete
  36. நண்பர்களே, பின்னூட்டமிட்ட உங்கள் அனைவருக்கும் அன்பான நன்றி.

    நேற்று மாலை விழாவில் டீச்சரை பார்த்த போது எப்படியோ மதிய நேரம் இந்த பதிவையும் உங்கள் அனைவரின் பின்னூட்டத்தையும் படித்து விட்டதாக சொன்னார்கள் ! ரொம்ப சந்தோசம் எனக்கு மலரும் நினைவுகள் வந்துடுச்சு என்றார்கள். பொறுமையாய் மீண்டும் வந்து இப்பதிவையும் உங்கள் பின்னூட்டத்தையும் படிப்பாகள் என நினைக்கிறேன்

    ReplyDelete
  37. அருமை ,அருமை ,,அருமை வேறென்ன சொல்வது.. மணிவிழா கொண்டாட உண்மையாகவே தகுதி படைத்த தம்பதியினர்!

    ReplyDelete
  38. //ஆதி மனிதன் said...
    'வலையுலக' அம்மா அப்பாவுக்கு வாழ்த்துக்கள்.//

    ரிப்பீட்டூ...

    இருவருக்கும் இணைபிரியா வாழு நீடிக்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  39. அன்பின் மோகன் குமார் - அருமையான பதிவு - மணி விழா தம்பதியினருக்கு நல்வாழ்த்துகள் - 60 வது பிறந்த நாள் நிறைவு மணி விழாவில் கலந்து கொண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். சிறு வயதுப் புகைப்படங்கள் - துளசியின் பார்வையில் கோபால் - அனைத்துமே அருமை. நல்வாழ்த்துக்ள் மோகன்குமார் - நட்புடன் சீனா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...