Friday, September 7, 2012

பெங்களூரு - காமிரா கண்களில் -படங்கள் +அனுபவம்

பெங்களூர் எனக்கு பிடித்த ஊர்களில் ஒன்று. 10 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் செல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்போது எடுத்த படங்கள் சிலவற்றை இங்கு பகிர்கிறேன்

பெங்களூர் என்றவுடன் நினைவுக்கு வருவது இத்தகைய மரங்கள் நிறைந்த தெருக்கள் தான்


துரதிர்ஷ்டவசமாய் இத்தகைய மரங்கள் உள்ள தெருக்கள் இப்போது பெரிதும் குறைந்து விட்டது தெரிகிறது. மெட்ரோ வருகிற காரணமா அல்லது வேறு என்ன விஷயம் என தெரியலை

ஆங்காங்கு இப்படி வெட்டப்பட்ட மரங்களை பார்க்கும் போது நமக்கே மனது வலிக்கிறது. அங்குள்ள மனிதர்களுக்கு எப்படி வலிக்கும்?


ராஜ்குமார் மீது அங்குள்ள மக்களுக்கு எவ்வளவு மரியாதை ! நாங்கள் தங்கிய ஹோட்டலில் அவர் போட்டோ இருந்தது; தெருக்களில் அவர் சிலை பார்த்தேன். ஆங்காங்கு போஸ்டர்களில் அவர் சிரித்தார். (சமீபத்தில் அவர் பிறந்த  நாள் ஏதும் வந்ததோ தெரியலை) இங்குள்ள பெரிய ஆர்ச்சிலும் அவர் படமே !


காவிரி தண்ணீர் நிறைய இருக்கு என்று நினைத்தாலும் எளிய மக்கள் தெருக்களில் தண்ணீர் பிடிப்பதை பார்க்க முடிந்தது ( வீட்டுக்கே தண்ணீர் வராதா?) ஆனால் சண்டையின்றி பொறுமையாய் ஒவ்வொருவராய் தண்ணீர் பிடித்தனர் !

ஒரு அரிசி கடையில் எடுத்த படம் இது. அரிசி விலை தமிழகத்தை விட நிச்சயம் குறைவாய் தெரிகிறதே !


நிறைய கையேந்தி பவன்களை காண முடிந்தது. இந்த கையேந்தி பவனில் செம கூட்டம். நான் பார்த்த இந்த கடையில் முப்பது பேர் போல் நின்றவாறு சாப்பிட்டு கொண்டிருந்தனர். பெரும்பாலும் ஆட்டோ ஓட்டுனர்கள் !



சென்ற கடைக்கு அருகிலேயே இந்த கையேந்தி பவன் இருக்கு; ஆனால்
இங்கு அதிக கூட்டமில்லை

ராஜாஜி நகர் கார்மல் என்கிற பள்ளியின் மாணவர்கள் காலை எட்டு மணிக்கே வந்து பாண்டு வாத்தியம் வாசித்து பழகி கொண்டிருந்தனர். அவர்களுக்கு சொல்லி தந்ததும் ஒரு மாணவனே !


ரயில்வே நிலையத்தில் பார்த்த NCC மாணவர்கள்; டூர் செல்கிறார்கள் போலும். ஆசிரியர் சொல்படி கேட்டு நல்ல பிள்ளையாய் இருந்தார்கள்

ரயிலில் சென்ற போது பார்த்த பூந்தோட்டம்.  பெங்களூர் வெளியே உள்ளது இந்த ஊரும் தோட்டமும்



பிசி ஆன தெருவில் அதிசயமாய் ஒரு காலி பிளாட்(Plot). நம்ம ஊரா இருந்தா இந்த பிளாட் முழுக்க குப்பை கொட்டிடுவாங்க ! இங்கு அப்படி கொட்டாதது ஆச்சரியம் !



ஒவ்வொரு transformer-க்கும் வெளியே இரும்பில் வேலி அமைத்துள்ளனர்; நல்ல விஷயம் இது ! வண்டிகள் வந்து மோதாமல் இருக்கும் ! ( சென்னையில் இப்படி கிடையாதுங்கோ !)


மரத்தை பார்த்ததும் கீழே சில சாமி படங்கள் வைத்து கும்பிடும் வழக்கம் அங்கும் உள்ளது.

சினிமா போஸ்டர்களும் பிளாட்பாரத்தில் காய்கறி விற்போரும்


பெங்களூர் முழுதுமே ஹில் ஸ்டேஷன் போல் தான் உள்ளது. தெருக்கள் நேராக இல்லாமல் ஒரு பக்கம் மிக பள்ளமாக மறுபக்கம் மேடாக இருக்கும். உதாரணத்துக்கு இந்த தெருவை பாருங்கள்
***
கழிப்பிடங்களில் ஆபாசமாக சுவரில் எழுதுவதிலும் தெருக்களில் சிறுநீர் கழிப்பதிலும் சென்னையை முழுதும் ஒத்துள்ளது பெங்களூர் !
***
பெங்களூர் குறித்து படங்கள் முழுதும் முற்றும். ஆனால் பெங்களூர் பயணம் குறித்து வேறு 2 பதிவுகள் மிக விரைவில் வெளி வரும் !

60 comments:

  1. இங்கும் கூட சென்னையை தவிர்த்து பல ஊர்களிலும் பொதுக் குழாய்தான் மோகன் . உங்களுக்கு தெரியாதா ?

    மரம் வெட்டுவது என்ன சொல்ல

    ReplyDelete
  2. //மெட்ரோ வருகிற காரணமா அல்லது வேறு என்ன விஷயம் என தெரியலை//
    சாலை விரிவாக்கம்! :)

    //அங்குள்ள மனிதர்களுக்கு எப்படி வலிக்கும்?//
    புலம்பித் தள்ளி விடுவார்கள்!

    //ராஜ்குமார் மீது அங்குள்ள மக்களுக்கு எவ்வளவு மரியாதை//
    கன்னடக் கொடியை போட்டோ எடுக்கவில்லையா? அதற்கு இவரை விட அதிக மரியாதை! :)

    //வீட்டுக்கே தண்ணீர் வராதா?//
    வரும், ஆனா வராது! :) பல ஏரியாக்களில் ஹார்ட் வாட்டர்தான் - RO ஃபில்டரே துணை!

    //அரிசி விலை தமிழகத்தை விட நிச்சயம் குறைவாய் தெரிகிறதே//
    சோனாவும் பொன்னியும் ஒன்றா என்ற டவுட் இப்போதும் உள்ளது!

    //நிறைய கையேந்தி பவன்களை காண முடிந்தது//
    தர்ஷினிக்களை விட்டு விட்டீர்களே!

    //பிசி ஆன தெருவில் அதிசயமாய் ஒரு காலி பிளாட்(Plot). நம்ம ஊரா இருந்தா இந்த பிளாட் முழுக்க குப்பை கொட்டிடுவாங்க !//
    ஒரு ப்ளாட்டை வச்சு அப்படி எல்லாம் பொதுவா சொல்லிட முடியாது! :) குப்பைகள் தலைநகரமா மாறிட்டு, நாறிட்டு வருது பெங்களூர்! இரண்டு மாசமா இந்த பிரச்சினை ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு!

    //ஒவ்வொரு transformer-க்கும் வெளியே இரும்பில் வேலி அமைத்துள்ளனர்; நல்ல விஷயம் இது ! வண்டிகள் வந்து மோதாமல் இருக்கும்!//
    வேலியில் மோதும் ஆட்களுக்கு இங்கே பஞ்சமில்லை! ;)

    //சினிமா போஸ்டர்களும்//
    போஸ்டர்களில் உள்ள ஆங்கில பஞ்ச லைன்களை படித்தீர்களா? செம காமெடியாக இருக்கும்! உதாரணம்: God is supreme, Upendra is extreme! :D

    //கழிப்பிடங்களில் ஆபாசமாக சுவரில் எழுதுவதிலும் தெருக்களில் சிறுநீர் கழிப்பதிலும் சென்னையை முழுதும் ஒத்துள்ளது பெங்களூர் !//
    BDA கழிப்பிடங்களில் நுழைய முடியாது அவ்வளவு நறுமணம்! :) Sulabh பரவாயில்லாமல் இருக்கும்!

    ReplyDelete
  3. படங்களும் விளக்கங்களும் நன்றாக உள்ளது...

    /// பெங்களூர் முழுதுமே ஹில் ஸ்டேஷன் போல் தான் உள்ளது ///

    மரம் வெட்ட ஆரம்பித்து விட்டார்களா...? அடுத்த முறை "ஹில் ஸ்டேஷன்" கிடையாது...

    Cost of Living : பெங்களூரும் கோவையும் ஒன்று...

    ReplyDelete
  4. சென்னையைக் ஒப்பிட்டு பாத்தா அங்க ஆட்டோ சார்ஜ்ல ரொம்ப நேர்மை இருக்குமே?.. ஆட்டோலயே போகலையா.

    படங்கள்+குறிப்புகள் நல்லாருக்கு.

    ReplyDelete
  5. முக்கியமா அம்மணிகளை பத்தி எதுவும் சொல்லாததால் நான் வெளிநடப்பு செய்கிறேன்..

    ReplyDelete
  6. படங்கள் நன்று. பெங்களூர் எனக்கும் பிடித்த ஊர்....

    ReplyDelete
  7. படக்கதை நல்லா இருக்கு. உங்க புண்ணியத்தில் ஊர் சமாச்சாரம் கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டேன். நான் போய் ஆறு வருசமாச்சு.

    ReplyDelete
  8. படங்கள் அனைத்தும் அருமை... விரைவில் ஊர் சுற்றச் செல்ல வேண்டும்

    ReplyDelete
  9. படங்கள் எல்லாம் நல்லா இருக்கு சகோ.

    ReplyDelete
  10. /தெருக்கள் அனைத்தும்/

    அனைத்தும் அல்ல:)! சில இடங்களில். நீங்கள் சென்றிருந்த இராஜாஜிநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் சற்று அதிகம்.

    அரிசிக் கடையில் விலை குறைவு. இதே வகைகள் சூப்பர் மார்க்கெட்டில் கிலோவுக்கு ரூ10 வரையிலும் கூடுதலான விலையில்.

    கார்த்திக் சொல்லியிருப்பது போல் கடந்த இருமாதங்களாக அதிகம் செய்தித்தாள்களில் படங்களுடன் குரல் எழுப்பப்பட்டு வருகிற பிரச்சனை அகற்றப்படாது குவியும் குப்பைகள் குறித்துதான்.

    படங்களின் தொகுப்பு அருமை.



    ReplyDelete
  11. படத்துல பார்க்க என்னமோ நல்லாத்தான் இருக்கு. ஆனால் நிறைய பிரச்சனைகள் இருக்கற ஊரு. தமிழ்-ல பேசினாலே, பிரச்சனைதான், அதுவும் இந்த காவேரி தண்ணீர் சம்பந்தமா கோர்ட் கேஸ் கொஞ்சம் பெருசாகர சமயத்துல.

    என்னை பொறுத்தவரை, பெங்களூர் இப்போ முன்ன மாதிரி இல்லைங்க. மக்களோட attitude ரொம்ப மாறிடுச்சு.

    ReplyDelete
  12. படங்களுடன் பகிர்வு அருமை....

    தில்லியிலும் மரங்களுக்கு கீழே சுவாமி சிலைகளையோ, படத்தையோ வைத்திருப்பார்கள்.

    ReplyDelete
  13. பெங்களூர் சென்று 5 வருடங்கள் ஆகி விட்டது. படங்கள் நல்லாயிருக்கு.

    ReplyDelete
  14. பெங்களூர் எனக்கு பிடித்த ஊர்களில் ஒன்று.
    >>
    எனக்கு கூட பெங்களூர்ன்னா ரொம்ப பிடிக்கும். அங்க இருக்குற தாஜ்மகாலுக்கு கூட அடிக்கடி போய் இருக்கேன்.

    ReplyDelete
  15. நானும் பத்து வருடங்களுக்கு முன் டூர் போய் இருக்கேன். கிளைமேட் சூப்பரா இருக்கும். இஸ்கான் டெம்பிளும், டெக்னிக்கல் மியூசியமும் என்னை கவர்ந்த இடம். என் பாய் ஃப்ரெண்ட் அந்த ஊருலதான் இருக்கார்.அழகா இருப்பார், வயசு 11/2. நன்பரின் மகன். அவனை பார்க்க விரைவில் போவேன். அப்போ நீங்க சொன்னதுலாம் மேட்ச் ஆகலைன்னா வந்து சண்டை பிடிப்பேன்.

    ReplyDelete
  16. 5 வருடங்களுக்கு முன் சென்றது. திரும்ப பார்க்க வியப்பாக இருக்கிறது. புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அருமை

    துரதிர்ஷ்டவசமாய் இத்தகைய மரங்கள் உள்ள தெருக்கள் இப்போது பெரிதும் குறைந்து விட்டது தெரிகிறது. மெட்ரோ வருகிற காரணமா அல்லது வேறு என்ன விஷயம் என தெரியலை

    என்ன செய்வது இன்று எல்லா நகரங்களின் நிலையும் இது தான்.

    ReplyDelete
  17. முன்பு சென்னையிலும் நிறைய சாலைகள் இப்படி மரங்களுடன் காட்சியளித்தது நினைவுக்கு வருகிறது. சாலையை அகலப் படுத்தும் அதே நேரம் மரங்களையும் நட்டிருக்கலாம். அல்லது அப்படியே பெயர்த்து தளளி நட்டிருக்கலாம். *ராஜ்குமார் அவர்களின் இதய தெய்வம், முடி சூடா மன்னர்! *தண்ணீர் உறுதியாய் எல்லோருக்கும் கிடைக்கும் என்ற நிலை இருந்தால் சண்டையின்றி பிடிக்கலாமோ என்னவோ! *டிரான்ஸ்பார்மர் பாதுகாப்பு பாராட்டப் பட வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  18. ஏதோ அயல்தேசத்தைப் பார்ப்பது போன்ற அறிமுகம்!! படங்கள் அருமை.

    ReplyDelete
  19. ராஜி... பெங்களூர்ல தாஜ்மகாலா... அவ்வ்வ்வ்!

    இரண்டு மாதங்களுக்கு முன் பெங்களூர் சென்றபோது நானும அதன் கிளைமேட்டையும். ஊரையும் மிக ரசித்தேன். தம்பி பட்டிக்காட்டான் சொன்ன மாதிரி கொள்ளையடிக்காத ஆட்டோ விஷயத்திலும் வியந்தேன். ஆனால் மரங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது வேதனை தரும் செய்தி. அப்படி ஆயிட்டா இனி க்ளைமேட் அங்கயும் காணாமப் போயிடுமே... அட ஆண்டவா.... ட்ரான்ஸ்பார்மரைச் சுத்தி வேலி போட்ருக்கறது சூப்பர்ங்க.

    ReplyDelete


  20. படங்கள் அருமை! பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இன்னும் அழகாக இருந்தது என்பதே என் கருத்து!

    ReplyDelete
  21. கடந்த மே மாதம் இந்த பகுதியில் (ராஜாஜி நகர்) சுற்றியது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  22. படங்களின் பகிர்வு நல்லாயிருக்கு.

    ReplyDelete
  23. படங்கள் நல்லாருக்கு மோகன் எனக்கு மிகவும் பிடித்த ஊர் இருந்தும் நான் இருமுறை போயிருந்தும் எந்த ஒரு சுற்றுலா சம்பந்தப்பட்ட இடங்களையும் பார்க்கவில்லை

    ReplyDelete
  24. நான் போகாத குறையை உங்கள் இந்த பதிவும் வரும் பதிவுகளும் தீர்த்து வைத்து விடும் என்று நம்புகிறேன் அண்ணே .. நன்றி

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. நீங்க ஒரு நல்ல photographer தான் சார்.. எங்க போனாலும் புகைப்படம் எடுத்து சேகரிக்கறீங்க...நான் போன வருடம் பெங்களூர் சென்ற போது என்னை கவர்ந்ததும் அந்த மேலும் கீழுமாக இறங்கும் சாலைகள்.. அனைத்தும் குறுகிய சாலைகள்... ஒரு மலைபிரதேசத்தில் இருக்கும் உணர்வு கொடுக்கும்.... அங்கு நிலவும் காலநிலை சென்னை மக்களை நிச்சயம் ஈர்க்கும்... நிறைய மரங்கள் அடர்ந்த சாலைகளை காண முடிந்தது... ஆனால் நீங்கள் சொல்லி தான் தெரிந்தது மரங்கள் முன்பு போல் நிறைய இல்லை என்பது!!! வருத்தப்பட வேண்டிய ஒன்று!!!

    புகைப்படம் எடுத்து பகிர்ந்ததற்கு நன்றி!!!

    முதல் முறை ஆட்டோ-வில் சென்றபோது 30ரூ கட்டணத்திற்கு என்னிடம் 100 ரூ வாங்கி ஏமாற்றினார்.. ஆனாலும் அங்கு மீட்டர் ஆட்டோக்கள் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.. இதுபோல ஆட்டோக்கள் சென்னை இல் இனி வருமா என்பதுகூட சந்தேகம் தான்...

    ReplyDelete
  27. நல்ல படங்கள் + கருத்துரைகள்!

    ***

    எனக்கு அங்கே பிடித்தது க்ளைமேட், நல்ல தெருக்கள்! :)

    ReplyDelete
  28. LK உண்மை தான் நன்றி

    ReplyDelete
  29. கார்த்திக் மிக விரிவான அட்டகாசமான பின்னூட்டம் மிக நன்றி. அரிசிக்கு வித்யாசம் எல்லாம் எனக்கு தெரியாது அம்பேல் !

    ReplyDelete
  30. நன்றி ராஜசேகர்

    ReplyDelete

  31. தனபாலன்: கோவை Cost of living அவ்ளோ அதிகமா?

    ReplyDelete

  32. ஆட்டோ பத்தி எழுதுறேன் ஜெய்

    ReplyDelete

  33. கோவை நேரம்: உமக்கு தான் கல்யாணம் ஆகிடுசுள்ள :))

    ReplyDelete

  34. நன்றி வெங்கட் கிளைமேட் காரணமாகவே எல்லாருக்கும் பிடிக்கும்

    ReplyDelete
  35. துளசி மேடம்: நன்றி

    ReplyDelete

  36. சீனு: போயிட்டு வா தம்பி

    ReplyDelete

  37. நன்றி ஆமினா

    ReplyDelete

  38. நன்றி ஆமினா

    ReplyDelete

  39. ராமலட்சுமி மேடம்: தகவல்களுக்கு நன்றி. பெங்களூர் பெயர் பார்த்து விட்டு உள்ளே வந்தீர்கள் போலும் :)

    ReplyDelete

  40. கருத்துக்கு நன்றி விரிச்சிகன்

    ReplyDelete

  41. அட கோவை டு தில்லி மேடம் : வாங்க நல்லாருக்கீங்களா

    ReplyDelete

  42. நன்றி அமுதா

    ReplyDelete
  43. ராஜி said...

    எனக்கு கூட பெங்களூர்ன்னா ரொம்ப பிடிக்கும். அங்க இருக்குற தாஜ்மகாலுக்கு கூட அடிக்கடி போய் இருக்கேன்.

    ஷ்ஷ் ! முடியல !

    //அப்போ நீங்க சொன்னதுலாம் மேட்ச் ஆகலைன்னா வந்து சண்டை பிடிப்பேன்.//

    சண்டை தானே; போய் வந்த செலவு தாங்கன்னு கேட்காட்டா சரி !

    ReplyDelete
  44. ஸ்ரீராம்: விரிவான கருத்துக்கு நன்றி

    ReplyDelete

  45. நன்றி பாலகணேஷ்

    ReplyDelete

  46. நன்றி ராமானுசம் ஐயா

    ReplyDelete
  47. அப்படியா சீனி? நன்றி

    ReplyDelete
  48. அப்படியா சீனி? நன்றி

    ReplyDelete

  49. நன்றி இந்திரா

    ReplyDelete
  50. நன்றி சரவணன் ; பல இடங்கள் இருக்கு. பார்க்க முயற்சி பண்ணுங்க

    ReplyDelete

  51. நன்றி அரசன் ; இம்முறை போனது சின்ன ட்ரிப் -ஒரு நாள் தான்

    ReplyDelete
  52. சமீரா: வாங்க நல்லாருக்கீங்களா? ரொம்ப நாள் கழிச்சு வர்றீங்க. பெங்களூர் ஆட்டோ காரர் உங்களை ஏமாற்றியது ஆச்சரியமா இருக்கு எனக்கு அப்படி ஆனதே இல்லை

    ReplyDelete
  53. தமிழ் ராஜா: கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  54. தமிழ் ராஜா: கருத்துக்கு நன்றி

    ReplyDelete

  55. பழூர் கார்த்தி: உண்மை நன்றி

    ReplyDelete
  56. நான் போயிருந்தப்பவும் பார்த்து வேதனைப்பட்டது மரங்கள் வெட்டப்பட்ட காலியிடங்களைப் பார்த்துதான்..

    ReplyDelete
  57. நான்கூட 7வருடங்களுக்குமுன் ஒரு 3வருடங்கள் பெங்களூருவில் இருந்தேன் மெட்ரோதிட்டம் ஆரம்பித்து மரங்கள் வெட்ட ஆரம்பித்திருந்தார்கள் ஆனாலும் இந்திராநகர், அல்சூர் ஏரி பகுதிகளில் நிறைய மரங்கள் இருக்குமே. பெங்களூருவில் கல்வி மிக அருமை.கையேந்திபவன் கோபி மஞ்சூரியன் மறக்கமுடியாத சுவை!பிரிக்கேட் ரோட்டின் கலகலப்பு,சிவாஜிநகரின் சுறு சுறுப்பு எல்லாவற்றையும் பற்றி எழுதுங்கள்
    (அரிசிவிலை கம்மிதான் சுவையும் மிகமிக குறைவுதான் )

    ReplyDelete
  58. அருமையான பதிவு.
    எங்களைப் பெங்களூருக்கே கூட்டிச் சென்று விட்டீர்கள். அருமையான படத்தொகுப்புகள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...