பெங்களூரில் இருந்து சென்னைக்கு குடும்பத்துடன் ரயிலில் வரும்போது ரயிலில் நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் மனக்கசப்பை தந்தது.
அதனை இங்கு பகிர்கிறேன். முதலில் இப்பதிவுக்கு தலைப்பு " ஆண்மையற்ற தென்னக ரயில்வே" என்று தான் வைக்க நினைத்தேன். அவ்வளவு மோசமாய் போக வேண்டாமென்று சற்று மிதமாய் வைத்ததே இத்தலைப்பு !
"ரிசர்வேஷன் கம்பார்ட்மேன்ட்டில் எப்படி இந்த மாதிரி நடக்கிறது?" என மனைவி கேட்க, " கொஞ்ச நேரம் இரு; டிக்கெட் செக்கர் வந்தால் எல்லாரையும் துரத்தி விடுவார் என்றேன் நம்பிக்கையாய்.
ஆங்காங்கு சில சண்டைகள் வெடித்து கொண்டிருந்தது. சிலர் ரிசர்வ் செய்யாமல் உட்கார, அங்கு உட்கார்ந்தவர்கள் எதிர்க்க, சண்டைகள் அரங்கேறியது.
சற்று நேரத்தில் எதுவோ ஒன்று என் மண்டையை ஓங்கி தாக்கியது. முன்னே இருப்பவர் மீது போய் விழுந்தேன். தலைக்கு மேலே லக்கேஜ் வைக்கும் இடத்தில் ஒருவர் செம வெயிட்டான டிரில்லிங் மெஷின் வைக்க, அது கீழே விழுந்தது. என் அருகே நின்றவர் அதை நல்ல வேளையாய் பிடித்து விட்டார். பிடித்தும் அது என் மீது லேசாய் பட்டு எதிரே போய் மோதினேன். அவர் பிடிக்கா விட்டால், டிரில்லிங் மெஷின் முழு வெயிட்டும் தலையில் அடித்து "சேது" நிலைக்கு ஆளாகியிருப்பேன் !
லைட் லக்கேஜ் மட்டும் என்று போட்டும் கூட, மேலே டிரில்லிங் மெஷின் போன்றவை வைப்பவர்களை என்ன சொல்வது? ஒண்ணும் சொல்ல முடியாமல் தான் அமர்ந்திருந்தேன்.
டிக்கெட் செக்கர் மீண்டும் ஒரு முறை வந்து, சீட்டில் அமர்ந்தவர்களில் புதிதாய் ஏறியவர்களை மட்டும் டிக்கெட் கேட்டு விட்டு, நிற்பவர்களை ஏதும் கேளாமல் சென்று விட்டார் !!
நேரம் போக போக என் குடும்பத்தினர் பாத் ரூம் போக முடியாமல் சிரமப்பட்டனர். ஒரு வழியாய் அவர்கள் எழுந்து கூட்டத்தை விலக்கி கொண்டு செல்ல முயல, வழியில் மட்டுமல்ல டாய்லட் வாசலில் ஆண்கள் முழுக்க நின்று கொண்டிருந்தனர். செல்ல முடியாமல் சிரமப்பட்டு நின்று விட்டனர்.
அந்த நேரத்தில் மீண்டும் டிக்கெட் செக்கர் வர, அவரிடம் இதனை சொல்ல, டாய்லட் செல்ல வழி விடுமாறு பாத்ரூம் வாசலில் நின்றவர்களிடம் கெஞ்சினார் அவர் !
என் கோபம் இப்போது தான் எட்டி பார்க்க ஆரம்பித்தது. " சார் கம்பிலேயின்ட் ரிஜிஸ்தர் இருக்கா? ரிசர்வேஷன் கம்பார்ட்மேன்ட்டில் இவ்ளோ கூட்டம் நிக்குறாங்களே. அது பற்றி எழுதணும்" என்றேன். "அதுக்கு நீங்க சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் தான் போகணும்" என்றார் அவர். " சார் ரயிலில் எனக்கு ஒரு பிரச்சனை என்றால் நீங்க தான் சரி பண்ணனும். எப்படி இவ்ளோ பேரை அலோ பண்றீங்க? இவங்க எப்படி ரிசர்வேஷன் பெட்டியில் ஏறலாம்? " என்று கேட்க, " இவ்ளோ பேரை நான் எப்படி சார் அனுப்ப முடியும்? நீங்க வேண்ணா செயினை பிடிச்சு இழுங்க. ரயில் நின்னா போலிஸ் வரும். அவங்க வேண்ணா இவங்களை இறக்கி விடலாம் " என்றார்.
வாக்கு வாதம் சற்று வளர்ந்து நான் செயினை பிடித்து இழக்க போக, அங்கு நின்றிருந்த கூட்டம் " இழுக்காதே; இழுக்காதே" என்று கத்தியது. செயினை பிடித்து நான் முழுசாய் தொங்கியும் ரயில் நிற்கலை. டிக்கெட் செக்கர் கூலாக " அது வேலை செய்யாது " என்றார். " பாதிக்கு மேலே செயின் இழுத்தா நிக்காது ; எல்லாம் ரிப்பேர் " என்றார்.
எனக்கு எதிரே உள்ள ஒரு பெரியவரும் ஒரு கைக்குழந்தை வைத்தவரும் தங்கள் கஷ்டத்தை டிக்கெட் செக்கரிடம் சொல்ல துவங்கினர் :
இருவரும் காட்பாடியில் ஏறும்போது உறுதி செய்த டிக்கெட் கையில் இருந்தும் வாசலில் நின்ற கூட்டம் அவர்களை உள்ளேயே விட வில்லையாம். கைக்குழந்தையுடன் இருந்தவர்கள் கெஞ்சி கூத்தாடி டிக்கெட் காட்டி அப்புறம் உள்ளே வந்துள்ளனர்.
இது தினமும் இந்த வழியில் நடக்கும் நிகழ்வு என்றும் வார இறுதியில் இன்னும் மோசம் என்றும் சொன்னார் பெரியவர். டிக்கெட் செக்கரும் அவரை ஆமோதித்து "ஆமாங்க. தினம் இது தான் பிரச்சனை. அவங்க கிட்டே நான் டிக்கெட்டே கேட்க முடியாது. இங்கே நிக்குறவங்களில் பாதி பேர் கிட்டே டிக்கெட் இருக்காது. இது எங்க ஆபிசில் மேலே வரை எல்லாருக்கும் தெரியும்; யாரும் எதுவும் செய்வதில்லை. என்ன பண்ண சொல்றீங்க?"" என்றார்.
"கூட்டம் ஏகமா நிக்குறதால் அவங்க மிதிச்சு மிதிச்சு என் வெள்ளை பேன்ட் எல்லாம் அழுக்காயிடுது..." என்று நாங்கள் பேசும்போது பலமுறை சொல்லி விட்டார். (இது தான் கவலை அவருக்கு !)
நிற்க தென்னக ரயில்வேக்கு சில கேள்விகள்:
1. எப்படி ரிசர்வேஷன் பெட்டியில் ஆயிரக்கணக்கில் கூட்டத்தை அனுமதிக்கிறீர்கள்? இது ரிசர்வ் செய்து வருவோரை எந்த அளவு பாதிக்கிறது என உணர்ந்துள்ளீர்களா? ரிசர்வ் செய்து வர காரணமே ஒழுங்கான சீட்டுகள் கிடைக்கும். நன்கு அமரலாம். கை காலை நீட்டலாம் என்று தானே? இப்படி மூன்று பேர் அமரும் இடத்தில் நாலாவதாய் ஒருவர் அமர்வதும், காலை நீட்ட முடியாமல் அங்கு ஆள் நிற்பதும் என்ன கொடுமை ! உடலை முழுதாய் சீட்டில் வைக்க முடிய வில்லை. சிறிதும் நகர முடியவில்லை. ஐந்து மணி நேரத்துக்கு மேல் இப்படி உட்கார வைப்பது தான் ரிசர்வ் செய்து போவருக்கு நீங்கள் தரும் பரிசா?
ரிசர்வ் செய்து வருவோரின் உணர்வுகளுக்கும் சிரமங்களுக்கும் உங்கள் பதில் என்ன?
2. ஒரு ரயிலில் அன் ரிசர்வ்ட் பெட்டிகள் இரண்டு அல்லது மூன்று தான் இருக்கு. அதற்கு தகுந்த மாதிரி டிக்கெட் தரலாமே? எதனால் இப்படி அதிக டிக்கெட் தரணும்?
3. இந்த தடத்தில் மிக அதிக கூட்டம் வருகிறது என்றால் நிறைய ரயில்கள் விடலாமே?
4. இங்குள்ளோரில் பாதி பேரிடம் டிக்கெட்டே இருக்காது என்கிறார் டிக்கெட்செக்கர். அரசுக்கு இது பெரும் வருவாய் இழப்பு இல்லையா? இதை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது? கூட்டம் இல்லாத போது சாதா டிக்கெட் எடுத்து விட்டு ஏறினால், ரிசர்வேஷன் கோச் என்று அதிக பணம் வாங்கும் ரயில்வே, இந்த விஷயத்தில் இப்படி தூங்கி வழிவது ஏன்? ரிசர்வ் கம்பார்ட்மென்டில் இத்தனை பேர் ஏறுவது சட்டப்படி தவறு. இதனை எப்படி தெரிந்தே அனுமதிக்கிறீர்கள்? இனி இந்த ரயிலில் ரிசர்வும் செய்யாமல், டிக்கெட்டும் எடுக்காமல் போகலாம் என பலரையும் எண்ண வைக்கிறீர்களே ? இது சரியா?
5. பொது மக்களுக்கு பிரச்சனை என்றாலோ, குறைகள் என்றாலோ அதை பதிவு செய்ய கம்பிலேயின்ட் ரெஜிஸ்தர் ரயிலில் வைக்க வேண்டாமா?
6. பயணிகளின் கஷ்டங்கள் பற்றி துளியும் கவலைப்படாமல் தன் வெள்ளை பேன்ட் அழுக்காவது பற்றி மட்டுமே கவலைப்படும் டிக்கெட் செக்கர்களை எங்கிருந்து பிடிக்கிறீர்கள்? எனக்கு அவர் தென்னக ரயில்வேயின் மனோபாவத்தை மிக சரியாக பிரதிபலிப்பவராக தெரிந்தார். மற்றவர்கள் எக்கேடு கெட்டு போனால் என்ன? என் பேன்ட் அழுக்காக கூடாது என்று நினைக்கும் இவரும், ஒவ்வொரு நாளும் இப்படி நடப்பது தெரிந்தும் பேசாமல் இருக்கும் தென்னக ரயில்வேயும் ஒன்று தான். இருவருக்கும் எந்த வித்யாசமும் இல்லை.
7. ரயிலை நிறுத்த உள்ள செயின்கள் வேலை செய்யவே செய்யாதா? அப்புறம் எதுக்கு அவற்றை வைத்துள்ளீர்கள்? ஒரு எமெர்ஜென்சி என்றால் எப்படி தான் ரயிலை நிறுத்துவது? Safety norms இப்படி காற்றில் பறக்கிறதே?
8. என் தலை மீது விழுந்த டிரில்லிங் மெஷின் அதிகப்படியான கூட்டத்தால் தான் மேலே வைத்தனர். இல்லாவிடில் சீட்டின் கீழ் வைத்திருப்பர். அதுவும் இப்படி நின்று கொண்டு வந்த கூட்டத்தில் ஒருவர் தான். இப்படி நடக்கும் விபத்துகளுக்கு தென்னக ரயில்வேயின் பதில் என்ன?
ஒவ்வொருவருக்கும் தான் செய்யும் வேலை குறித்த பெருமிதம் கலந்த கர்வம் இருக்கும். தன் வேலை குறித்து பிறர் குறை சொல்ல கூடாது என்ற எண்ணம் இருக்கும். தென்னக ரயில்வேக்கு அது இருக்கிறதா? இருந்தால் இந்த விஷயத்தை முதலில் சரி செய்யட்டும் !
டிஸ்கி: 1. இந்த பதிவு தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு( General Manager ) விரைவில் அனுப்பி வைக்கப்படும் ! அவர் நடவடிக்கை எடுக்கா விடில் ரயில்வே அமைச்சருக்கும் பின் பொது நல வழக்கு தொடரவும் யோசிக்கப்படும் !
2. இந்த விஷயம் நடந்து பத்து நாள் கழித்து எழுதிய பதிவு இது. எனவே கோபம் குறைவாக தான் வெளிப்பட்டுள்ளது !
அதனை இங்கு பகிர்கிறேன். முதலில் இப்பதிவுக்கு தலைப்பு " ஆண்மையற்ற தென்னக ரயில்வே" என்று தான் வைக்க நினைத்தேன். அவ்வளவு மோசமாய் போக வேண்டாமென்று சற்று மிதமாய் வைத்ததே இத்தலைப்பு !
ஆகஸ்ட் 22- புதன் மதியம் மூன்று மணிக்கு பெங்களூரில் ஏறும்போது எல்லாம் நன்றாக தான் இருந்தது. டிக்கெட் செக்கர் வந்து விட்டு போன பின், பெங்களூர் தாண்டி முதல் ஸ்டேஷன் வந்ததுமே மிக பெரும் கூட்டம் உள்ளே வந்து விட்டது. மூன்று பேர் அமரும் இடத்தில் நம்மை நகர சொல்லி நாளாம் ஆள் உட்கார்ந்து கொள்ள, நம் கால் வைக்கும் இடத்திலும் ஆள்கள் நிற்க, வழி முழுதும் மனிதர்களால் கம்பார்ட்மென்ட் நிரம்பி வழிந்தது.
இதுக்கு பேரு ரிசர்வேஷன் கம்பார்ட்மென்ட்டாம் ! |
ஆங்காங்கு சில சண்டைகள் வெடித்து கொண்டிருந்தது. சிலர் ரிசர்வ் செய்யாமல் உட்கார, அங்கு உட்கார்ந்தவர்கள் எதிர்க்க, சண்டைகள் அரங்கேறியது.
சற்று நேரத்தில் எதுவோ ஒன்று என் மண்டையை ஓங்கி தாக்கியது. முன்னே இருப்பவர் மீது போய் விழுந்தேன். தலைக்கு மேலே லக்கேஜ் வைக்கும் இடத்தில் ஒருவர் செம வெயிட்டான டிரில்லிங் மெஷின் வைக்க, அது கீழே விழுந்தது. என் அருகே நின்றவர் அதை நல்ல வேளையாய் பிடித்து விட்டார். பிடித்தும் அது என் மீது லேசாய் பட்டு எதிரே போய் மோதினேன். அவர் பிடிக்கா விட்டால், டிரில்லிங் மெஷின் முழு வெயிட்டும் தலையில் அடித்து "சேது" நிலைக்கு ஆளாகியிருப்பேன் !
லைட் லக்கேஜ் மட்டும் என்று போட்டும் கூட, மேலே டிரில்லிங் மெஷின் போன்றவை வைப்பவர்களை என்ன சொல்வது? ஒண்ணும் சொல்ல முடியாமல் தான் அமர்ந்திருந்தேன்.
டிக்கெட் செக்கர் மீண்டும் ஒரு முறை வந்து, சீட்டில் அமர்ந்தவர்களில் புதிதாய் ஏறியவர்களை மட்டும் டிக்கெட் கேட்டு விட்டு, நிற்பவர்களை ஏதும் கேளாமல் சென்று விட்டார் !!
நேரம் போக போக என் குடும்பத்தினர் பாத் ரூம் போக முடியாமல் சிரமப்பட்டனர். ஒரு வழியாய் அவர்கள் எழுந்து கூட்டத்தை விலக்கி கொண்டு செல்ல முயல, வழியில் மட்டுமல்ல டாய்லட் வாசலில் ஆண்கள் முழுக்க நின்று கொண்டிருந்தனர். செல்ல முடியாமல் சிரமப்பட்டு நின்று விட்டனர்.
டாய்லட் போக வழி விடாமல் நிற்கிறார்கள்
|
அந்த நேரத்தில் மீண்டும் டிக்கெட் செக்கர் வர, அவரிடம் இதனை சொல்ல, டாய்லட் செல்ல வழி விடுமாறு பாத்ரூம் வாசலில் நின்றவர்களிடம் கெஞ்சினார் அவர் !
என் கோபம் இப்போது தான் எட்டி பார்க்க ஆரம்பித்தது. " சார் கம்பிலேயின்ட் ரிஜிஸ்தர் இருக்கா? ரிசர்வேஷன் கம்பார்ட்மேன்ட்டில் இவ்ளோ கூட்டம் நிக்குறாங்களே. அது பற்றி எழுதணும்" என்றேன். "அதுக்கு நீங்க சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் தான் போகணும்" என்றார் அவர். " சார் ரயிலில் எனக்கு ஒரு பிரச்சனை என்றால் நீங்க தான் சரி பண்ணனும். எப்படி இவ்ளோ பேரை அலோ பண்றீங்க? இவங்க எப்படி ரிசர்வேஷன் பெட்டியில் ஏறலாம்? " என்று கேட்க, " இவ்ளோ பேரை நான் எப்படி சார் அனுப்ப முடியும்? நீங்க வேண்ணா செயினை பிடிச்சு இழுங்க. ரயில் நின்னா போலிஸ் வரும். அவங்க வேண்ணா இவங்களை இறக்கி விடலாம் " என்றார்.
வாக்கு வாதம் சற்று வளர்ந்து நான் செயினை பிடித்து இழக்க போக, அங்கு நின்றிருந்த கூட்டம் " இழுக்காதே; இழுக்காதே" என்று கத்தியது. செயினை பிடித்து நான் முழுசாய் தொங்கியும் ரயில் நிற்கலை. டிக்கெட் செக்கர் கூலாக " அது வேலை செய்யாது " என்றார். " பாதிக்கு மேலே செயின் இழுத்தா நிக்காது ; எல்லாம் ரிப்பேர் " என்றார்.
எனக்கு எதிரே உள்ள ஒரு பெரியவரும் ஒரு கைக்குழந்தை வைத்தவரும் தங்கள் கஷ்டத்தை டிக்கெட் செக்கரிடம் சொல்ல துவங்கினர் :
கை குழந்தையுடன் ரிசர்வ்ட் டிக்கெட் இருந்தும் வாசலில் கூட்டம் வழி விடாமல் கடைசி நொடியில் ஏறியவர்
|
இது தினமும் இந்த வழியில் நடக்கும் நிகழ்வு என்றும் வார இறுதியில் இன்னும் மோசம் என்றும் சொன்னார் பெரியவர். டிக்கெட் செக்கரும் அவரை ஆமோதித்து "ஆமாங்க. தினம் இது தான் பிரச்சனை. அவங்க கிட்டே நான் டிக்கெட்டே கேட்க முடியாது. இங்கே நிக்குறவங்களில் பாதி பேர் கிட்டே டிக்கெட் இருக்காது. இது எங்க ஆபிசில் மேலே வரை எல்லாருக்கும் தெரியும்; யாரும் எதுவும் செய்வதில்லை. என்ன பண்ண சொல்றீங்க?"" என்றார்.
"கூட்டம் ஏகமா நிக்குறதால் அவங்க மிதிச்சு மிதிச்சு என் வெள்ளை பேன்ட் எல்லாம் அழுக்காயிடுது..." என்று நாங்கள் பேசும்போது பலமுறை சொல்லி விட்டார். (இது தான் கவலை அவருக்கு !)
நிற்க தென்னக ரயில்வேக்கு சில கேள்விகள்:
1. எப்படி ரிசர்வேஷன் பெட்டியில் ஆயிரக்கணக்கில் கூட்டத்தை அனுமதிக்கிறீர்கள்? இது ரிசர்வ் செய்து வருவோரை எந்த அளவு பாதிக்கிறது என உணர்ந்துள்ளீர்களா? ரிசர்வ் செய்து வர காரணமே ஒழுங்கான சீட்டுகள் கிடைக்கும். நன்கு அமரலாம். கை காலை நீட்டலாம் என்று தானே? இப்படி மூன்று பேர் அமரும் இடத்தில் நாலாவதாய் ஒருவர் அமர்வதும், காலை நீட்ட முடியாமல் அங்கு ஆள் நிற்பதும் என்ன கொடுமை ! உடலை முழுதாய் சீட்டில் வைக்க முடிய வில்லை. சிறிதும் நகர முடியவில்லை. ஐந்து மணி நேரத்துக்கு மேல் இப்படி உட்கார வைப்பது தான் ரிசர்வ் செய்து போவருக்கு நீங்கள் தரும் பரிசா?
ரிசர்வ் செய்து வருவோரின் உணர்வுகளுக்கும் சிரமங்களுக்கும் உங்கள் பதில் என்ன?
2. ஒரு ரயிலில் அன் ரிசர்வ்ட் பெட்டிகள் இரண்டு அல்லது மூன்று தான் இருக்கு. அதற்கு தகுந்த மாதிரி டிக்கெட் தரலாமே? எதனால் இப்படி அதிக டிக்கெட் தரணும்?
3. இந்த தடத்தில் மிக அதிக கூட்டம் வருகிறது என்றால் நிறைய ரயில்கள் விடலாமே?
4. இங்குள்ளோரில் பாதி பேரிடம் டிக்கெட்டே இருக்காது என்கிறார் டிக்கெட்செக்கர். அரசுக்கு இது பெரும் வருவாய் இழப்பு இல்லையா? இதை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது? கூட்டம் இல்லாத போது சாதா டிக்கெட் எடுத்து விட்டு ஏறினால், ரிசர்வேஷன் கோச் என்று அதிக பணம் வாங்கும் ரயில்வே, இந்த விஷயத்தில் இப்படி தூங்கி வழிவது ஏன்? ரிசர்வ் கம்பார்ட்மென்டில் இத்தனை பேர் ஏறுவது சட்டப்படி தவறு. இதனை எப்படி தெரிந்தே அனுமதிக்கிறீர்கள்? இனி இந்த ரயிலில் ரிசர்வும் செய்யாமல், டிக்கெட்டும் எடுக்காமல் போகலாம் என பலரையும் எண்ண வைக்கிறீர்களே ? இது சரியா?
5. பொது மக்களுக்கு பிரச்சனை என்றாலோ, குறைகள் என்றாலோ அதை பதிவு செய்ய கம்பிலேயின்ட் ரெஜிஸ்தர் ரயிலில் வைக்க வேண்டாமா?
6. பயணிகளின் கஷ்டங்கள் பற்றி துளியும் கவலைப்படாமல் தன் வெள்ளை பேன்ட் அழுக்காவது பற்றி மட்டுமே கவலைப்படும் டிக்கெட் செக்கர்களை எங்கிருந்து பிடிக்கிறீர்கள்? எனக்கு அவர் தென்னக ரயில்வேயின் மனோபாவத்தை மிக சரியாக பிரதிபலிப்பவராக தெரிந்தார். மற்றவர்கள் எக்கேடு கெட்டு போனால் என்ன? என் பேன்ட் அழுக்காக கூடாது என்று நினைக்கும் இவரும், ஒவ்வொரு நாளும் இப்படி நடப்பது தெரிந்தும் பேசாமல் இருக்கும் தென்னக ரயில்வேயும் ஒன்று தான். இருவருக்கும் எந்த வித்யாசமும் இல்லை.
7. ரயிலை நிறுத்த உள்ள செயின்கள் வேலை செய்யவே செய்யாதா? அப்புறம் எதுக்கு அவற்றை வைத்துள்ளீர்கள்? ஒரு எமெர்ஜென்சி என்றால் எப்படி தான் ரயிலை நிறுத்துவது? Safety norms இப்படி காற்றில் பறக்கிறதே?
8. என் தலை மீது விழுந்த டிரில்லிங் மெஷின் அதிகப்படியான கூட்டத்தால் தான் மேலே வைத்தனர். இல்லாவிடில் சீட்டின் கீழ் வைத்திருப்பர். அதுவும் இப்படி நின்று கொண்டு வந்த கூட்டத்தில் ஒருவர் தான். இப்படி நடக்கும் விபத்துகளுக்கு தென்னக ரயில்வேயின் பதில் என்ன?
ஒவ்வொருவருக்கும் தான் செய்யும் வேலை குறித்த பெருமிதம் கலந்த கர்வம் இருக்கும். தன் வேலை குறித்து பிறர் குறை சொல்ல கூடாது என்ற எண்ணம் இருக்கும். தென்னக ரயில்வேக்கு அது இருக்கிறதா? இருந்தால் இந்த விஷயத்தை முதலில் சரி செய்யட்டும் !
டிஸ்கி: 1. இந்த பதிவு தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு( General Manager ) விரைவில் அனுப்பி வைக்கப்படும் ! அவர் நடவடிக்கை எடுக்கா விடில் ரயில்வே அமைச்சருக்கும் பின் பொது நல வழக்கு தொடரவும் யோசிக்கப்படும் !
2. இந்த விஷயம் நடந்து பத்து நாள் கழித்து எழுதிய பதிவு இது. எனவே கோபம் குறைவாக தான் வெளிப்பட்டுள்ளது !
தென்னக ரயில்வே மட்டுமல்ல மோகன் - இந்தியா முழுவதுமே இதே நிலை தான்...
ReplyDeleteவடக்கில் இன்னும் மோசம். ஏசி கோச்களில் கூட டிக்கெட் இல்லாதோர், முன்பதிவு செய்யாதவர்கள் ஏறி உட்கார்ந்து பயணம் செய்வார்கள். டிடிஆர் அவர்களை ஒன்றும் கேட்கவும் மாட்டார். தினம் தினம் அப்படி நடப்பது தான்.
ஓடும் ட்ரையினில் இருந்து சில டிடிஆர்கள் தள்ளி விடப்பட்ட சம்பவங்களும் நடந்துவிட்டன....
முன்னேற்றம் நிறைய செய்ய வேண்டும் - ஆனால் செய்வதற்கு ஒருத்தருக்கும் மனதில்லை மோகன்.
இருப்பது நான்கு டாய்லட். அதில் ஒன்றில் - வெஸ்டர்ன் மூடியை மூடி விட்டு அது முழுவதும் அட்டைப் பெட்டிகளில் பொருட்கள் அடுக்கி மூடி வைத்து எடுத்துச் செல்லும் மனிதர்களும் இருக்கிறார்கள்!
வெங்கட்: வட இந்தியாவில் இப்படி தான் என நன்கு தெரியும். தென் இந்தியாவில் பெரும்பாலும் இப்படி இல்லை. ரிசர்வேஷன் கோச்சில் மற்றவர்கள் பொதுவாய் ஏற முடியாது முதன் முறை இப்படி இங்கு பார்க்கிறேன்
ReplyDeleteகேரளாவிலும் இது போல் நிறைய நடப்பதுண்டு. திருவனந்தபுரம் நெருங்குவதை ரெண்டு மூணு ஸ்டேஷன்கள் முன்னாடியே தெரிஞ்சுக்கலாம். வேலைக்குப் போறவங்க கிடைச்ச பெட்டிகளில் ஏறிக்குவாங்க.
ReplyDeleteட்ரில்லிங் மெஷின்.... இதென்ன கொடுமை!! இத்தனைக் கனமுள்ள பொருளை அப்பர் பெர்த்தில் கொண்டு போய் வைத்ததை என்னன்னு சொல்றது :-(
மதுரை திருநெல்வேலி செல்லும் ரயில்களில், ஜட்டிவரை அவிழ்த்து டிக்கெட் பரிசோதனை ஒரு கிரிமினல் பார்வையோடு ரிசர்வேஷன் கம்பார்மெண்டில் நடத்தப்படுகிறது. பெங்களூர் மார்கத்தில் கேட்க நாதி இல்லாமல் இருக்கிறது.
ReplyDeleteஇத்தனை பேர் ஏறுவது சட்டப்படி தவறு
ReplyDeleteஇதுவரை போட்டிருக்கும் சட்டம் எல்லாம் அமலில் இருக்கா? அதை கணக்கு எடுத்தாலே தெரியும் சட்டம் அமல்படுத்திருக்கும் அழகு.
முதலில் இந்த பதிவில்லாத பெட்டியை தூக்கனும் மற்றும் ரயில் நிலையத்தை Secure செய்து பயணிகளை தவிர யாரையும் அனுமதிக்க கூடாது. முடியுமா? கனவில் வேண்டுமானால்.
எங்கும் ஆக்கிரமிப்பு, எதிலும் ஆக்கிரமிப்பு, பயமின்மை, மக்கள் தொகைக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தாதது...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
வடக்கில் அதிகமெனக் கேள்விப்பட்டிருக்கிறேன். மொத்தத்தில் எல்லா பகுதிகளிலும் இந்த நிலைமைதான் போலும். பதிவை அவசியம் பொது மேலாளருக்கு அனுப்பி வையுங்கள்.
ReplyDeleteநான் ஹி ஹி போட்டுகிறேன். வேறென்ன, இந்தியாவாச்சே..
ReplyDeleteமோகன், கோவை சென்னை கோவை எக்ஸ்ப்ரஸ் பார்த்திருக்கீங்களா ?? ரிசர்வ் கம்ப்பார்த்மென்ட் முழுக்க அன் ரிசர்வ்ட் மக்கள்தான்..
ReplyDeleteஇதை ஒரு பொதுநல வழக்காய் கோர்ட்டில் தொடர முடியுமா
என்ன சொல்வதென்று தெரியவில்லை
ReplyDeleteபடிக்கவே கஷ்டமாக இருக்கிறது
எதிலும் சரியாக முறையக இருப்போம்
சட்டத்தை மதிப்போம் என வாழ்வோருக்குத்தான்
இங்கு இவ்வளவு பிரச்சனை உள்ளது
நிச்சயமாக வழக்குத் தொடர வேண்டும்
என்பதே என கருத்தும்
// 1. இந்த பதிவு தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு( General Manager ) விரைவில் அனுப்பி வைக்கப்படும் ! அவர் நடவடிக்கை எடுக்கா விடில் ரயில்வே அமைச்சருக்கும் பின் பொது நல வழக்கு தொடரவும் யோசிக்கப்படும் !//
ReplyDeleteகண்டிப்பா செய்ங்க மோகன்.....மன உளைச்சலுடன் கூடிய பயணம் என்பது மிகப்பெரும் அவஸ்தை. கொஞ்சமாவது அவர்களுக்கு உறைக்கட்டும்!
// செயினை பிடித்து நான் முழுசாய் தொங்கியும் ரயில் நிற்கலை. டிக்கெட் செக்கர் கூலாக " அது வேலை செய்யாது " என்றார். " பாதிக்கு மேலே செயின் இழுத்தா நிக்காது ; எல்லாம் ரிப்பேர் " என்றார். //
வெளங்கிடும்!
அருமை தோழரே
ReplyDeleteஎல் கே said...
ReplyDeleteமோகன், கோவை சென்னை கோவை எக்ஸ்ப்ரஸ் பார்த்திருக்கீங்களா ?? ரிசர்வ் கம்ப்பார்த்மென்ட் முழுக்க அன் ரிசர்வ்ட் மக்கள்தான்..
இதை ஒரு பொதுநல வழக்காய் கோர்ட்டில் தொடர முடியுமா?
****
நிச்சயம் செய்யலாம் சந்தேகமே இல்லை. தேவையான ஆவணங்கள் இருந்தால் நிச்சயம் வழக்கு தொடரலாம் !
மக்கள் தொகை பெருக்கத்தில் வேறென்ன நடக்கும். இருக்கும் சில ரயில்களில் முன் பதிவு செய்ய இடமில்லை.
ReplyDeleteரயில்கள் குறைவு தேவையோ மிக அதிகம். ஐந்து ரயில் தேவைப்படும் இடத்தில ஒரு ரயில் ஓடினால் எப்படி.
பணமில்லாத மக்கள் வேறென்ன செய்வார்கள். ஏழை எளியவர்களை நினைத்து பாருங்கள். அவர்களும் போக வேண்டுமே. இது இந்தியா. எல்லாம் கடவுள் பார்த்து கொள்வார், மனிதன் ஒன்றும் திட்டம் இட தேவையில்லை , செயல் தேவை இல்லை என்கின்ற நாடு நமது. அதனால் குறை ஒன்றும் சொல்ல கூடாது. அதிகமான கடவுள்கள் இருந்து என்ன பயன்? தன்னிடமுள்ள தங்கம் பணம் கொண்டு இங்குள்ள தேவைகளை கடவுள் சீக்கிரம் சரி செய்ய வேண்டும். அதுவரை சுகமான பயணம் வேண்டும் என்றால் விமானதில் முடியும்.
நண்பரே SSK: ஏ. சி கோச்சில் ( சேர் கார்) இந்த பிரச்சனை இல்லை.இப்படி கூட்டம் ஏறுவதில்லை . அங்கு மட்டும் பணக்காரர்களுக்கு பாது காப்பு தரும் ரயில்வே மிடில் கிளாஸ் என்றால் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறது ! இது தவறல்லவா?
ReplyDeleteஅடுத்த முறை நிச்சயம் ஏ. சி சேர் காரில் தான் கூட்டி போகணும் என முடிவுக்கு தள்ளப்படுகிறேன் ; அரசே இப்படி சட்ட மீறலை allow செய்தால் எப்படி?
பேசாமல் ரிசர்வேஷனை ஒழிச்சிடலாமே?
ReplyDeleteஅரசாங்கப் பணிகளிலும், கல்வியிலும் ரிசர்வேஷனை எதிர்ப்பவர்கள் ரயில்களிலும் ரிசர்வேஷன் கூடாது என்று குரல் கொடுக்க வேண்டும். பணம் இருப்பவர்கள் மட்டும் காலை நீட்டி பயணம் செய்யலாம். மற்றவர்கள் நின்றுக்கொண்டே பயணம் செய்யணும் என்பது அடாவடி :-)
நீங்கள் பகல்வேளைகளில் எந்த ரயிலில் ஏறினாலும் இப்படித்தான் இருக்கும். இரவு ரயில்களில்தான் ரிசர்வேஷன் செய்த சீட்டெல்லாம் கறாராக பரிசீலிக்கப்படும்.
உக்கார இடமில்லை, கால் வைக்கவும் இடமில்லை, தலையில் லேசான அடி வேற பாவம் நீங்க. ஆனா, இம்புட்டு கஷ்டத்துலயும் போட்டோ எடுத்து, பதிவை தேத்துனீங்க பாருங்க. உங்க திறமையை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
ReplyDeleteநானும், பாப்பாவும் கஷ்டப்படுறோம். நீங்க போட்டோ எடுத்து பதிவை தேத்துறீங்களான்னு மதனி, டிரில்லிங் மிஷின் விழுந்த இடத்துலயே ஓங்கி குட்டலியா?!
ReplyDeleteஉங்க கிட்ட போட்டோ ஆதாரம்தான் இருக்கே. சட்டத்துறையில் இருக்கீங. ஒரு பொது நல வழக்கு தட்டி விடுங்க. என்னதான் தீர்ப்பு வந்தாலும், பொது மக்களிடம் விழிப்புணர்வும்,அதிகாரிகளிடம் பொறுப்புணர்வு வந்தால்தான் இது போன்ற நிகழ்வுகள் நிகழாமல் இருக்கும்.உங்க தலையில விழுந்ததால பரவாயில்லை. இதுவே பாப்பா மேல விழுந்திருந்தா? வழக்கு போடுங்க ஒரு கை பார்த்துடலாம்
ReplyDeleteபீகாரில் இன்னும் மோசம் டி டி ஆர் ஒரு போலீசுடன் சென்று தான் டிக்கெட் பரிசோதனை செய்ய முடியும் இல்லை என்றால் டி டி ஆர் காலி. நம்ம நாட்டில் எந்த சட்டம்தான் அமலில் இருக்கு, சில எழுத படாத சட்டங்கள் தீவிரமா அமலில் இருக்கு, அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல் எந்த கையெழுத்தும் போடுவதில்லை, அவர்களின் பிள்ளைகள் பள்ளிகூட ரேங்க் கார்ட்களில் வேண்டுமானால் லஞ்சம் வாங்காமல் போடுவார்கள்
ReplyDeleteரொம்ப அவஸ்தைய அனுபவிச்சீங்க போல
ReplyDeleteஅடப்பாவிகளா... இதுமாதிரி விஷயங்கள் எல்லாம் வட மாநிலங்களில் நடக்கும் என்று கேள்விப்பட்டிருந்த எனக்கு தென் மாநிலங்களிலும் கூடவா என்று அதிர்ச்சிதான் ஏற்படுகிறது. தங்கை ராஜி சொன்னது போல் இது வழக்குப் போட்டு ஒரு வழி பண்ண வேண்டிய விஷயம்தான்.
ReplyDeleteஇதை நீங்கள் கட்டாயம் தென்னகரெயில்வே கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.
ReplyDeleteவட இந்தியாவில் இதைவிட இன்னும் மோசம். நாம் ரிசேர்வ் இருக்கையில் உட்கார்ந்திருக்கும் பொழுது முதுகில் அடித்து எழுப்பிவிடுவார்கள்.
வைகை எக்ஸ்பிரஸ் - இதே நிலைமை தான்... இதை விட இரண்டு மடங்கு கூட்டம் இருக்கும்... நிற்க கூட இடம் இருக்காது... சிறு சிறு குழந்தைகள் வைத்துக் கொண்டு, பெண்கள் படும் பாடு, மிகவும் திண்டாட்டம்...
ReplyDeleteகண்டிப்பாக பொது மேலாளருக்கு அனுப்பி வையுங்கள். நன்றி...
கவலை தருகின்றது.
ReplyDeleteமிகக் கொடுமையான விஷயமாக இருக்கிறது. நுகர்வோர் கோர்ட் மற்றும் உயர்நீதி மண்டத்திலேயே கூட வழக்கு தொடரலாம் போல இருக்கிறது. உங்களுக்குத் தெரியாததா என்ன? பத்திரிகைகளுக்கும் அனுப்பலாம். இந்தச் சூழ்நிலையில் அகப் பட்டவர்கள் ரத்தக் கொதிப்பு நோய் இருப்பவர்களாக இருந்தால் பி பி எகிறி இருக்கும். என்ன கொடுமை? வாழ்க ஜனநாயகம்.
ReplyDeleteகோரமண்டல் எக்ஸ்பிரஸிலும் இந்த மாதிரி ஒரு அனுபவம் ஏற்பட்டதாக என் தந்தை கூறினார்! மிக கொடுமையான விசயம் இதை ரயில்வே இன்னும் சீர் செய்யாமல் இருப்பதுதான்! நல்ல ஆதங்கப் பகிர்வு!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html
சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html
ஒரு முறை கல்கத்தாவிலிருந்து மும்பை வரை பயணித்தோம். மொத்தம் ஏழு பேர். ஒரு சீட்டு மட்டும் கன்பர்ம் ஆகவில்லை. நாங்கள் செக்கரிடம் அனுமதி கேட்ட போது கை கொடுத்து இந்த ட்ரெயினில் இப்படி என்னிடம் அனுமதி கேட்ட முதல் நபர் நீங்கள்தான் என்றார். அதன் அர்த்தம் போகப் போக நன்றாகவே புரிந்தது. அவ்வளவு நரகம் அந்தப் பயணம். பெங்களூர், சென்னை மார்க்கத்தில் இந்த கொடுமை பல வருடங்களாகவே உள்ளது. இதிலே காண்டீன்காரர்கள் செய்யும் இடைஞ்சல் பற்றியே தனி பதிவு எழுதலாம்.
ReplyDeleteஅண்மையில் நட்சத்திரப்பதிவர் ரயில்வே பற்றி எழுதிய சப்பைக்கட்டு பதிவுகளுக்கு இது நேர்மாறானது.
ReplyDeleteஒருவழிப்பாதையில் அதிக ரயில்கள் விடமுடியாது, தமிழக அரசியல்வாதிகளுக்கு இரட்டை வழிப்பாதை வேண்டும் என்று கேட்கத்தெரியவில்லை என்றெல்லாம் எழுதி இருந்தார்.
போக்குவரத்து நெரிசல்கள் பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தெரியாமலா இருக்கிறது?
குறைந்தபட்ச மனிதநேயமாவது இருந்தால்தான் அரசுத்துறைகளுக்கு, பொதுமக்களுக்கு வசதி செய்து தரவேண்டும் என்கிற எண்ணம் வரும்.
விமானத்தில் சென்றாலும் இவர்கள் செய்யும் இடையூறுகளுக்கு அளவில்லை. ஏமாந்தவர்களை ஏர் இந்தியா, இடமில்லை என்று அலைக்கழிக்கவிடுவது சாதாரணமாக நடக்கிறது.
கோவமாக வருது சார் பொறுப்பில்லாத நிர்வாகம் கொண்ட துறைகளை நினைத்தாலே.. இப்படி எதை தொட்டாலும், சீர்கேடு இருந்தால் எப்படி இந்தியா வல்லரசாகும் .. ஒரு நல்லரசுக்கே இங்கு வழியில்லை ..
ReplyDeleteநெரிசலுக்கு மக்கள் தொகை பெருக்கமே காரணம் என சப்பை கட்டு கட்டுவார்கள்.. கூடுதல் ரயில் இயக்க முன் வரமாட்டார்கள்.. சீனா வில் நம்மைவிட மக்கள் அடர்த்தி அதிகம் ஆனாலும் அங்கு இப்படியா நிர்வாகம் சீர்கெட்டு பொறுப்பில்லாமல் உள்ளது??
நம் நாட்டில் பேச்சு சுதந்திரம் மட்டுமே உள்ளது... பாராபட்சம் அற்ற நீதித்துறை இல்லை.. நிலையான கொள்கை இல்லை.. மக்களை மாக்கள் ஆக்கும் ஆட்சி தான் நடைபெறுகிறது.. தனிமனித சுதந்திரம் உள்ளது.. அதே மனிதனுக்கு தனியான பாதுகாப்பும மரியாதையும் இல்லை.. மனிதநேயம் எப்போதோ கேள்விக் குறி ஆகிவிட்டது!!!
ரயில்வே மட்டும் அல்ல சார் பல துறைகள் இப்படிதான் உள்ளன...ஆதங்கமாக உள்ளது... கண்டிப்பாக நீங்க வழக்கு தொடர வேண்டும் ....
We have lot of such problems..
ReplyDeleteBut, does any one propos practical solutions ?
நீங்கள் வந்த வண்டியாவது உட்கார்ந்து வரும் இண்டர்சிட்டி போல் தெரிகிறது. சென்றமாதம் நாங்கள் பெங்களூர் கிருஷ்ணராஜபுரத்தில் இருந்து ஸ்லீப்பர் பெட்டியில் முன்பதிவு செய்து ஏறியபோதும் இதே பிரச்னைதான். ஒரு ஸ்லீப்பர் சீட்டில் 5 பேர் அமர்ந்து வந்தனர். என் பக்கத்தில் இருந்தவரிடம் TTR E ticketக்கு ID கார்டு கேட்டு சோதனை செய்தார். ஆனால் கூட்டமாக ஏறியவர்களிடம் டிக்கெட் இருக்கிறதா என்றுகூடக் கேட்கவில்லை
ReplyDeleteSir, Welcome to Indian railways. This is the real India. Morethan 70% of our population like me depends on this transport system. During daytime General coach and Sleeper class are one and the same. People are left with no other option. Dont get angry. No court or case cant do anything, until you find solution for people who travel from city to city state to state for their Living. Atleast be happy that you are not a frequent traveller in India Railway.
ReplyDeleteஅனைத்து MLA, MP-க்களும் இரண்டம் வகுப்பு பெட்டியில்தான் செல்ல வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தால்தான் இந்நிலைமாறும். ஆனால் சட்டம் இயற்ற வேண்டிய இடத்தில் அவர்களே இருப்பதால், இந்நிலை மாற வாய்ப்பில்லை.
ReplyDeleteரிசர்வேஷன் மட்டுமல்ல, ரயில்வேயின் ஒவ்வொரு துறையிலும் அராஜகம் தான். ஒருமுறை நான் தாம்பரத்தில் ஆர்டர் செய்த உணவை திண்டிவனம் தாண்டியவுடன் கொண்டு வந்து கொடுத்தான். உணவு கெட்டு போயிருந்தது, என்னுடன் ஆர்டர் செய்த ஐவருக்கும் இதே நிலை, விழுப்புரத்தில் இறங்கி ஸ்டேஷன் மாஸ்டரிடம் கம்ளெண்ட் கொடுத்தால், விசாரிக்க நேரமாகும் அதுக்குள்ள ட்ரெயின் போயிடும், நீங்க இந்த ட்ரெயின விட தயாரயிருந்தா நான் விசாரிக்கிறேன் அப்படின்னாரு. எல்லம் கூட்டுக் களவாணிங்க. நூறு ரூபாய்காக ஆயிரம் ரூபாய் இழக்க மனமில்லாததால், கையெடுத்து கும்பிட்டு ரயில் ஏறினேன்.
ReplyDelete//அனைத்து MLA, MP-க்களும் இரண்டம் வகுப்பு பெட்டியில்தான் செல்ல வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தால்தான் இந்நிலைமாறும். ஆனால் சட்டம் இயற்ற வேண்டிய இடத்தில் அவர்களே இருப்பதால், இந்நிலை மாற வாய்ப்பில்லை.//
ReplyDeleteசுத்தம்! இந்த லட்சணத்தில் அவர்கள் பதவி முடிவடைந்த பின்னும் அவருக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் முதல் வகுப்பில் முன்னுரிமை! பின் எப்படி சட்டமியற்றுவார்கள்?
//வட இந்தியாவில் இப்படி தான் என நன்கு தெரியும். தென் இந்தியாவில் பெரும்பாலும் இப்படி இல்லை. ரிசர்வேஷன் கோச்சில் மற்றவர்கள் பொதுவாய் ஏற முடியாது முதன் முறை இப்படி இங்கு பார்க்கிறேன்//
ReplyDeleteநல்லது, மோகன், இப்போதாவது உங்களுக்கு அந்த வாய்ப்புக் கிட்டியதே! போகப்போக நீங்களும் பழகிப் போவீர்கள். முமபையில் இருந்து பரோடா வரை (பரோடா எக்ஸ்ப்ரெஸ்ஸில்) நின்றுகொண்டே பயணித்து இருக்கிறேன். சென்னையில் இருந்து மதுரை வரை (வைகையில்) அப்படிப் பயணித்து இருக்கிறேன். ரிசர்வ் செய்த சீட்டைக் கூட நெருங்க முடியாத கூட்டம்.
ஆனால் சட்டத்தின் மூலம் தீர்வு காணலாம் என்கிற எண்ணம், அதுவும் சட்டம் படித்த உங்களுக்கே இருப்பது ஆச்சரியம்தான்.
எங்கே, இனிமேல் சிவகாசியில் தீவிபத்தே ஏற்படாது; எந்த ஊரிலும் இனிமேல் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஒரு குறையும் வராது என்று சட்டத்தால் சாதித்துக் காட்டுங்களேன் பார்ப்போம்.
'அனைத்துக்கும் ஆசைப்படு' என்று போதிக்கிறவர்கள் இருக்கிற நாடு இது. ஊழலை எப்படித் தவிர்க்க முடியும்? ஊழல் என்னவோ அரசியல்வாதிகளுக்கு மட்டும் உரியது என்பது போல் ஒரு எண்ணம் நமக்கு. ஆனால் அதுவோ நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. அலுவலர்கள் சொல்லித் தராமல் எந்த அரசியல்வாதிக்கும் ஊழல் செய்யத் தெரியாது. நம் அண்ணன் தம்பி மாமன் மச்சான் மதினிகள்தான் அலுவலர்களாக இருக்கிறார்கள்.
பஸ் கட்டணம் இருக்கிற இருப்பில் இந்தியப் பெரும்பான்மையினர் என்ன செய்வார்கள் பாவம்! இது நம் நாடு. அவர்கள் நம் மக்கள். ரிசர்வேஷன் செய்தாலும் இங்கே இப்படி நடப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என்று ஒரு தெளிவுக்கு வருவதே சட்டம் படித்தவர்களுக்கும் நல்லது.
அல்லது புரட்சிக்கு ஏதாவது வழி இருக்கிறதா என்ன?
ஒவ்வொரு முறையும் சென்னை வரும்போது நாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தான் இவை. இது தீரனும்னா சுவிஸ் வங்கியில இருக்கும் இந்திய கள்ளப் பணம் எல்லாம் இந்தியாவிற்கு வரவேண்டும். மக்களை குறை சொல்லக் கூடாது, ஏறும் மக்கட் தொகைக்கேற்ப ரயிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காதது அரசின் குற்றம்.
ReplyDelete\\ஆமாங்க. தினம் இது தான் பிரச்சனை. அவங்க கிட்டே நான் டிக்கெட்டே கேட்க முடியாது. இங்கே நிக்குறவங்களில் பாதி பேர் கிட்டே டிக்கெட் இருக்காது.\\ அவர்களிடம் ரிசர்வ் செய்த டிக்கட் இருக்காது, சாதாரண டிக்கட் நிச்சயம் இருக்கும், இல்லாவிட்டால் இறங்கும் ஸ் டே ஷனில் நோண்டி நொங்கெடுத்து விடுவார்கள்.
பெங்களூர் வந்தீங்க எனக்கு ஒரு மெயில் போட்டிருக்கலாமே சார், நேரில் வந்து பார்த்திருப்பேனே!!
ReplyDeleteநித்ய அஜால்: வந்து ஒரு நாள் கூட முழுசா இல்லை. காலை வந்துட்டு மதிய டிரைனில் திரும்பி விட்டேன்
ReplyDeleteஇது குறித்து விரிவான பின்னூட்டம் பிறகு எழுதுகிறேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபாவம் சார் நீங்க... ரொம்பவே கஷ்டப்பட்டுட்டீங்க... இதுவே உங்க இடத்தில் நானாயிருந்திருந்தா தாண்டி குதிச்சிருப்பேன்.. நாலு பேர்கிட்ட அடி வாங்கிட்டி வந்திருப்பேன்.. நீங்களாஇருக்க போய்.. இப்படி பொறுமையா போட்டோவெல்லாம் எடுத்து பதிவா போட்டிருக்கீங்க..
ReplyDeleteஏன் சார் நீங்க சென்னை-திருச்சி “பல்லவன் எக்ஸ்பிரஸ்”ல் போனதே இல்லையா?? ஆனா பாருங்க... வடமாநிலங்கள்ல இது போல் நடக்குதுன்னு தெரியும்/கேள்வி பட்டிருக்கேன்.. தென்னகத்துல இதுவரை இல்லைன்னு சொல்லியிருக்கீங்க... ஏன் சார்.. வடமாநிலங்கள்ல அப்படின்னு தான் தெரியுமே.. ஏன் இதுவரை யாருமே (நீங்கள் உட்பட) தட்டி கேட்கலை குரல் குடுக்கலை?? ஓ தனக்கு வந்தா தானே தெரியும் தலை வலியும் திருகு வலியும்...
ஏன் சார்.. நீங்க என்றைக்காவது இப்படி ரிசர்வ் டிக்கெட் இல்லாம.. ஆனா அவரசமா/அத்தியாவசியமா போயே ஆகவேண்டிய கட்டாயம் இருந்து அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் போயிருக்கீங்களா?? நாம என்ன செய்வோம்??? ஓப்பன் டிக்கெட் ஒன்னு எடுத்துகிட்டு, டிடிஈ கிட்ட சாம, பேத, கெஞ்ச,லஞ்ச வழிகளைக் கடைபிடித்து சீட் கன்ஃபார்ம் செய்துக்குவோம்.. ஆனா இது வழியில்லாதவங்க / முடியாதவங்க என்ன சார் செய்வாங்க?? முன்பு வட மாநிலங்கள்ல மட்டுமே இருந்த ஒரு கலாச்சாரம் இன்று இங்கேயும் வந்துடிச்சின்னா அதுக்கு காரணம் என்னவா இருக்கும்?? தோழர் யுவகிருஷ்ணா கேட்பது போல பேசாமல் ரிசர்வேஷனை ஒழிச்சிடலாமே?
இங்கிலாந்திலும் ரயில்களில் ரிசர்வேஷன் உண்டு.. ஆனா அவர்களுக்கு என தனி கம்பார்ட்மெண்ட் எல்லாம் கிடையாது... நீங்க சொன்னது போல தான்.. எல்லாரும் ஒரே கம்பார்ட்மெண்டில் தான் ஏறனும்.. ரிசர்வ் செய்தவருக்கு மட்டுமே சீட் உறுதி.. மற்றவர்கள் நின்றுகொண்டு தான் வரவேண்டும்.. நிறைய முறை நான் உட்கார்ந்து நிறைய ஆங்கிலேயர்கள் நின்றுகொண்டு வந்த சம்பவங்கள்லாம் நடந்திருக்கு.. (அதில பாருங்க ஒரு சின்ன அல்ப சந்தோசம்.. நாம உட்கார்ந்து ஒரு வெள்ளக்காரன் நின்னுட்டு வரான்னு)
அது இருக்கட்டும்..
இவ்வளவு கோவமா (10 நாளில் குறைந்த கோவமே இப்படின்னா..) General Managerக்கும் ரயில்வே அமைச்சருக்கும் லெட்டர் போடுவேன்.. பொதுநல வழக்கு போட்வேன்னு சொல்லியிருக்கீங்க.. ரைட்டு.. அப்படியாவது இந்த மாதிரி பிரச்சினைகளுக்கு விடிவு வந்தா சரி.. ஆனா.. அந்த டிடீஈ சொன்னது போல செண்ட்ரல் ஸ்டேஷனில் நீங்க கம்ப்ளெயிண்ட் செய்தீங்களா?? (அது பற்றி நீங்க ஒன்னும் சொல்லலையே) ரயில்வேயில் கம்ப்ளெயிண்ட் செய்யும் முறை சரியில்லை.. ஓகே.. ஆனா இருக்கும் முறையை நாம பயன்படுத்தினோமா??
என்னமோ போங்க சார்...
மே மாதம் நெல்லை எக்ஸ்பிரஸ் மதுரை வரை நல்லாத்தான் வந்தது .மதுரையில் கூட்டம் ரிசர்வேசன் பெட்டியில் திபுதிபுவென ஏற பார்க்கவே பயமா இருந்துச்சு . நீங்க சொல்லி இருக்கிற மாதிரிதான் கால் வைக்கவும் இடம் இல்லாமல் அத்தனை பேரும் வட இந்தியர்கள் .குரங்கு மாதிரி பெர்த் பெர்த்தாக தாவ கிடைத்த பெர்த்தில் இருக்க என ரிசர்வேசன் செய்தவர்கள் பேயறைந்த மாதிரி இருந்தோம் .மதுரை தாண்டி ஒரு இடத்தில் ட்ரெயின் நிற்க மொத்த கூட்டமும் இறக்கி விடப் பட்டது . அப்புறம்தான் மூச்சே வந்தது . வட இந்தியப் பயணம் போகாமலே அங்கே ட்ரெயின் ல நடக்கிற மாதிரி கூத்து இங்கே அரங்கேறி விடுமோன்னு ஒரு பயம் அதுவரை இருந்தது .
ReplyDeleteடிக்கட் செக்கர் என்ன செய்வார் என்று பரிதாபம்தான் வருகிறது. ஆனாலும், இப்பிடி செயின் வேலை செய்யாததைக் கூட சீரியஸாக எடுத்துக் கொள்ளாதவர் என்றால், கோவமும் வருது...
ReplyDeleteஏன் இதை இத்தனை தாமதித்தீர்கள்? இறங்கியவுடன் செண்ட்ரல் ஸ்டேஷனிலேயே புகார் அளித்திருக்கலாம். அல்லது மெயிலாவது அனுப்பிருக்கலாம். (பலன் இருக்கோ இல்லியோ, கம்ப்ளெயிண்ட் செஞ்சுடனும் முதல்லயே).
This comment has been removed by the author.
ReplyDeleteசென்: அன்னிக்கு டிரைன் சென்னை வந்தது அரை மணி நேரம் லேட். இரவு பத்தரைக்கு தான் சென்ட்ரல் வந்தது. டிரைனில் சாப்பாடு இல்லை. நாங்க யாரும் சாப்பிடலை. குழந்தை பொண்டாட்டி அவங்களை விட்டுட்டு அப்ப போயி நான் கம்பிலேயின்ட் கொடுக்க முடியுமா? வீட்டுல சேர்க்க மாட்டாங்க சார் ! சாப்பிட்டு வீடு போய் சேரவே 11 .30 ஆச்சு !
ReplyDeleteஅந்த ரயிலில் வந்தவர்கள் எத்தனை பேர்? TTE உடன் என்னுடன் சேர்ந்து சண்டை போட்டவர்கள் எத்தனை பேர்? யார் இதை எழுதுறாங்க? அட்லீஸ்ட் நான் பதிவா எழுதினேன். இதை போன்ற ஒத்த கருத்து கொண்ட பின்னூட்டங்களை சேர்த்து நிச்சயம் ரயில்வேக்கு அனுப்புவேன், ஒரு சாதாரண மனுஷனா என் வேலை குடும்பம் பாதிக்காமல் என்னால் செய்ய முடிந்தது இது தான்
This comment has been removed by the author.
ReplyDeleteஇதுல செவ்வாய்கிரகத்துக்கு ராக்கெட்விட போறான்களாம்...முதல்ல இங்கு வாழும் மக்களுக்கு கொஞ்சமாவது வசதியை செய்துகொடுத்துவிட்டு அங்கே போய் நோண்டுங்க...கண்டிப்பாக வழக்கு போட வேண்டும்...குடும்பத்துடன் செல்லும்போது இப்படிப்பட்ட சம்பவங்கள் சகிக்கமுடியாது..அனுதாபங்கள் நண்பரே
ReplyDeleteநண்பர்களே உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கும் மிக மிக நன்றி. மிக அதிக கமன்டுகள் என்பதால் என தனி தனி பதில் எழுத வில்லை. தவறாய் எண்ண வேண்டாம் ; ஒவ்வொருவர் அனுபவமும் ஒவ்வொரு பாடம் சொல்கிறது நெஞ்சார்ந்த நன்றி ! நிச்சயம் ஓரிரு நாளில் இந்த பதிவு தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பப்படும்
ReplyDeleteமிகவும் அவசியமான பதிவு.என் வயதான உறவினர் பெங்களூர் சென்று வரும்போது இதேபோல் அனுபவித்துள்ளனர்.நன்றி.
ReplyDeleteரொம்ப காலமாகவே வட இந்திய ரெயில்களில் ஏற்படும் பிரச்சினதான் இது. இப்போது தென்னிந்தியாவிலும் மெல்ல அரங்கேற துவங்கியுள்ளது பூனைக்கு யாராவது மணி கட்டித்தான் ஆகவேண்டும் உங்கள் முயற்சிக்கு நன்றி!
ReplyDeleteஒரு முறை தீபாவளி, பொங்கல் சமயத்தில் மதுரை, திருச்சி வரை வைகை,பல்லவன்,சோழன் ட்ரையின்களில் போய் வந்தால் இது எல்லாம் ஜூஜிபி சார். காரணங்கள் நிறைய உண்டு.1.மக்கள் தொகை பெருக்கம்.2. பஸ்களில் கன்னாபின்னாவென்று டிக்கெட் விலை ஏற்றம்.
ReplyDeleteமுன்பெல்லாம் விழுப்புரம் டிவிஷனில் டிக்கெட் பரிசோதகர்கள் மிகவும் ஸ்டிரிக்டாக இருப்பார்கள்.
கல்கத்தா, பீஹார்.உ.பி போய் வந்த பிறகு நமது தமிழ்நாட்டு கூட்டம் பற்றி எரிச்சல் போயே விட்டது.
A good comment on the railways. I was under the impression, that Southern Railways is the best managed one!
ReplyDeletePlease register the complaints. Anyone who reads this post, please, if you find problems in Railways, immediately give a complaint. It is available on line too.
Unless the no.of complaints are received , they wont take any action.
Please also post a complaint in http://indiarailinfo.com/
Thanks.
Yes, such routes, can have trains without reservation/or Garib raths.But this train had reservation
ReplyDeletefacility.
Mohan Kumar, you have hit the nail. How many people travelled with you. did anyone raise their voice, did anyone bother to complain?
As people, we are irresponsible. Once the journey is over, we simply forget. Is it not our responsibility to see the injustice to the passengers, and ask?
Unless thousands starts questioning, things will not change. Unless people stop accepting these injustices , nothing will change.
Somu Sir, This is the attitude , that has made the railways , complacent. Do not accept this . If the facility has to be made, it will be made. And when it is not made, question.
ReplyDeleteThere may be solutions, which will be decided by the authority. Let them be accountable for this .
Railways and Govt. need to answer this. Crores and crores are in private hands , from the budget allocations. Why not Railways?
Where there is a will there is a way.
It is will power lacking in Govt. So ask, why not?
Rajasundararajan sir,
ReplyDeleteAgree.
Nothing can be done, by enforcing law. facility has to reach people. Then let them run, free trains during peak hours. Let the poor have the transport facility.
But on other trains enforce discipline.
After 60 years,a nd crores of budget, we still have single tracks in most areas.
Why should the politicians only have to ask for facilities. Why not us? keep asking . When thousands ask, how can any admin ignore?
மிகவும் வருத்தமாக உள்ளது. நீங்கள் Southern Railway க்கு இப்பதிவை அனுப்பும் சமயம் அவருக்கு தெரிய வரும்-பதிக்கப் பட்டோர் எண்ணிக்கை. இதற்கான தீர்வு, வடக்கே போல ஒரு TTE உடன் 4/5 Railway Police மேலும் ரயில் நிற்கும் இடங்களில் மக்களை Railway Police பெட்டிகளில் சரி பார்த்து உள்ளே அனுப்புவது தான். Double Decker trainல் இந்த கஷ்டம் இல்லை.
ReplyDelete