இயக்குனர் பாலு மகேந்திராவின் இணைய தளம்
நம் அனைவராலும் பெரிதும் ரசிக்கப்படும், மதிக்கப்படும் இயக்குனர்/ ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா சில வாரங்களுக்கு முன் ஒரு ப்ளாக் துவங்கியிருக்கிறார். உங்களில் சிலருக்கு இது ஏற்கனவே தெரிந்திருந்தாலும், பலருக்கு இன்னும் தெரியாது என்று நினைக்கிறேன். இளையராஜாவுடனான தன் நட்பில் துவங்கி பல விஷயங்கள் பகிர்கிறார்.
மூன்றாம் பிறை என்பது வலைப்பூவின் தலைப்பு. இவரது மிக புகழ் பெற்ற படமே வலைப்பூவின் பெயராகவும் அமைந்தது எவ்வளவு சிறப்பு !
அவரது ப்ளாக் முகவரி: http://filmmakerbalumahendra.blogspot.in/
இதுவரை பார்க்காவிடில் அவசியம் பாருங்கள் இந்த புதையலை !
போக்கிரி பட காமெடிகளில் பல விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிற ஆல் டைம் பேவரைட் !
வடிவேலு காமெடி பார்க்கும் போதெல்லாம் நான் வடிவேலுவை பார்ப்பதில்லை. அந்த நேரத்தில் யார் மீது கோபம் இருக்கோ அவராக தான் நினைத்து கொண்டு பார்ப்பேன். வடிவேலு வாங்கி கட்டி கொள்ளும் போது நமக்கு வேண்டாதவர் வாங்கி கட்டி கொள்கிற மாதிரி நினைத்து சிரித்தால் மனசு லேசாகிடும் :) சில நேரம் வடிவேலுவாக என்னையும் நினைத்து கொள்வதுண்டு. கூகிள் பிளஸ்சில் சூடான சண்டை நடந்த போது டிவியில் இந்த காட்சி பார்க்க, வடிவேலு உருட்டு கட்டையில் வாங்கும் அடி பிளஸ்சில் நான் வாங்குற மாதிரியே இருந்தது !
நீங்களும் பாருங்க: லொஜக் ...பொஜக் ....பச்சக் !
ஆனந்த் கார்னர்
If you can spend an extra hour each day in your chosen field, you will be a national expert in 5 years or less.
காமெடி போஸ்டர்
நடேசன் பார்க்கில் மாபெரும் பதிவர் சந்திப்பு என அழைப்பு விடுத்து கூப்பிட்டார் மெட்ராஸ்பவன் சிவகுமார். ஞாயித்து கிழமை, புரட்டாசி வேறு ஆரம்பிப்பதால் ஏகப்பட்ட கிளீனிங் வேலை ........எல்லாத்தையும் சீக்கிரமா முடிச்சிட்டு நடேசன் பார்க் போனேன்.

காமெடி கார்னர்

பதிவர் KRPயும் பதிவர் சந்திப்பும்
நடேசன் பார்க்கில் மாபெரும் பதிவர் சந்திப்பு என அழைப்பு விடுத்து கூப்பிட்டார் மெட்ராஸ்பவன் சிவகுமார். ஞாயித்து கிழமை, புரட்டாசி வேறு ஆரம்பிப்பதால் ஏகப்பட்ட கிளீனிங் வேலை ........எல்லாத்தையும் சீக்கிரமா முடிச்சிட்டு நடேசன் பார்க் போனேன்.
மதுமதி, பாலகணேஷ், ஜெய், சிவகுமார், KRP செந்தில், சீனு இவங்க எல்லாம் வந்திருந்தாங்க. இரவு 9 மணிக்கு பார்க்கிலே வாட்ச்மேன் விசில் அடிச்சு எல்லாரையும் துரத்தி விடுற வரைக்கும் இலக்கியம், பதிவர் அரசியல், உலக பொருளாதாரம் எல்லாம் பேசினாங்க. அதுக்கப்புறமும் வெளியே வந்து, பூட்டிய கேட் அருகில் நின்னுகிட்டு அரை மணி நேரம் பேசுனாங்க. சரி கிளம்பலாம்ன்னு வண்டி எடுக்க போயிட்டு அங்கே நின்னுகிட்டு 15 நிமிஷம் பேசுறாங்க !
On a serious note, கே. ஆர். பி 35 வயதுக்குள், அறுபது வயது மனிதனுக்கு கிடைக்கும் அனுபவங்கள் கிடைக்க பெற்றுள்ளார் ! என்றேனும் ஒரு நாள் தன் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை கே. ஆர். பி எழுதினால் அதில் நாவல் அளவுக்கு சுவாரஸ்யங்கள் இருக்கும் !
கிரிக்கெட் கார்னர்
உலக கோப்பை T-20௦ துவங்கியிருக்கிறது. மாலை 7.30 மணிக்கு பல ஆட்டங்கள் துவங்குவதால் பார்க்க மிக எளிதாய் இருக்கும் என நினைக்கிறேன். நிச்சயம் மேட்ச்களை பார்ப்பேன். இந்தியா, இலங்கை அல்லது பாகிஸ்தான் - ஆக மொத்தம் ஆசியாவை சேர்ந்த ஒரு அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்பது என் எதிர்பார்ப்பு !
சென்னை ஸ்பெஷல்: நாயுடு ஹால்
நாயுடு ஹால் பெண்களின் ஆடைகள் மட்டுமே விற்பதாக தான் நமக்கு அறிமுகமானது. பின் குழந்தைகள், ஆண்கள் என அனைவருக்கான ஆடைகளும் கிடைக்க ஆரம்பித்தது. இவர்கள் கடை துவக்கப்பட்டது பல ஆண்டுகளுக்கு முன் ஒரு விநாயகர் சதுர்த்தியில் என்பதால், வருடா வருடம் விநாயகர் சதுர்த்தி நேரத்தில் "டிஸ்கவுன்ட் சேல்" நடைபெறும். அனைத்து உடைகளுக்கும் 10 % முதல் 30 % வரை டிஸ்கவுன்ட் இருக்கும். திருமணம் ஆன பிறகு பல ஆண்டுகளாக வருடா வருடம் தவற விடாத சேல் இது. தீபாவளி பர்ச்சேஸ் இந்த நேரத்தில் முடித்து விடுவது வழக்கம். பல முறை விநாயகர் சதுர்த்தி அன்று சாமி கும்பிட்டு விட்டு, உடனே போய் வாங்கியிருக்கோம். இவ்வாறு எங்களை போலவே ரெகுலராக விநாயகர் சதுர்த்தியன்று காலையே அங்கு வரும் பலரை வருடா வருடம் பார்ப்போம். ( முதல் நாளே போனால் ஐட்டம்ஸ் நிறைய இருக்கும், பின் நல்ல ஸ்டாக் தீர்ந்து விடும் என்கிற லாஜிக்கில் செல்கிறவர்கள் இவர்கள்.. நாங்களும் தான் !!)
இது மட்டுமல்லாது பெண்கள் தினம் (மார்ச் மாதம்), குழந்தைகள் தினம் (நவம்பர்) நேரங்களிலும் மட்டும் இத்தகைய டிஸ்கவுன்ட் உண்டு.
சென்ற விநாயகர் சதுர்த்தியின் போது எங்கள் வீட்டில் எடுத்த படம்/ வீடியோ இங்கு பகிர்ந்திருந்தேன். நேரம் இருந்தால் பாருங்கள் !
நாங்க சாமி கும்பிட்டுட்டு நாயுடு ஹால் போகணும்:)) விடு ஜூட் !
col our full வானவில்லுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteஅனைத்தும் அருமை..
ReplyDelete//கே. ஆர். பி 35 வயதுக்குள், அறுபது வயது மனிதனுக்கு கிடைக்கும் அனுபவங்கள் கிடைக்க பெற்றுள்ளார் //
உண்மைதான்..
அந்த காமெடி போஸ்டர் உண்மை உண்மை உண்மைங்கோ
ReplyDeleteபாலு மகேந்திராவின் தளத்தில் அன்றே நானும் இணைத்து கொண்டேன்... நிச்சயமாக பல சுவையான அனுபவங்கள் கிடைக்கப் பெறுவோம்...
ReplyDelete//வடிவேலு உருட்டு கட்டையில் // இது ஒரு பழைய ஜப்பானீஸ் பட காமெடி சார்... படம் பெயர் மறந்து விட்டேன்... மொழி புரியாவிட்டாலும் வடிவேலுவை விட அப்படத்தில் அவர் அருமையாக செய்து இருப்பார்... வடிவேலு காமெடி பல தளங்களில் இருந்து சுடப்பட்டவை தான் என்பதை பின்பு தான் தெரிந்து கொண்டேன்....
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் சார்
எங்கள் அண்ணன் கேஆர்பியாரை பாராட்டி எழுதியமைக்கு நன்றி தெரிவித்து இந்த ஆண்டிற்கான சுஜாதா விருதுக்கு தங்கள் பெயர் கேஆர்பியார் பேரவை சார்பாக பரிந்துரைக்கப்படுகிறது.
ReplyDelete//கே. ஆர். பி 35 வயதுக்குள், அறுபது வயது மனிதனுக்கு கிடைக்கும் அனுபவங்கள் கிடைக்க பெற்றுள்ளார் ! என்றேனும் ஒரு நாள் தன் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை கே. ஆர். பி எழுதினால் அதில் நாவல் அளவுக்கு சுவாரஸ்யங்கள் இருக்கும் ! //
ReplyDeleteதலைவனை பேக் அப் செய்யணும். நமக்கு நாகராஜசோழன் எம்.ஏ. ஆகுற நேரம் வந்துருச்சி மாப்ளைஸ்.
கே.ஆர்.பி: "ஊட்டிக்கு தனியாத்தான் போகனுமாட்ருக்கு"
//உலக கோப்பை T-20௦ துவங்கியிருக்கிறது. //
ReplyDeleteபிரபல பதிவர் என்றாலே எழுத்துப்பிழைகள் ஜகஜம் போல! :))
:-)))
ReplyDeleteபஜக்
ReplyDeleteகஜக்
லஜக்...!
வண்ண மயம்!
ReplyDeleteபதிவர் சந்திப்பு இன்னும் தொடருதா?கேஆர்பி எப்போ வந்தாரு?
tha.ma.8
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி ராஜ ராஜேஸ்வரி
ReplyDelete
ReplyDeleteமதுமதி: நீங்க சொன்னா ரைட்டு கவிஞரே !
ReplyDeleteபிரேம்குமார்: ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பீங்க போல !
சீனு: வடிவேல் பற்றி சொன்னது புது தகவல் நன்றி
ReplyDeleteஆரூர் மூனா: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி (வேறென்ன சொல்றதுன்னு தெரியலை. நோ அரசியல்)
ReplyDeleteசிவகுமார்: சிங்கப்பூர் கூட்டி செல்ல போகும் ஒப்பற்ற ஒரே தலைவர் KRP தான் !
ReplyDelete
ReplyDeleteரகு: ஹி ஹி கவனிக்கலை
ஜெய்: வருகைக்கு நன்றிண்ணே
ReplyDeleteசுரேஷ்: ஜபக் ! கச்சக் !லொடக் !
ReplyDeleteகுட்டன்: அப்பப்போ சின்ன மீட் நடக்கும். நீங்க சென்னையா? உங்கள் மெயில் ஐ. டி தாருங்கள் தொடர்பு கொள்வோம். அடுத்த முறை சந்திக்கலாம். நண்பர்கள் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளனர் நீங்க எழுதும் sensational தலைப்பு பதிவுகளால் :)
ReplyDelete
ReplyDeleteநன்றி ராமலட்சுமி மேடம் உங்களுக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்
எப்ப பாரு பதிவர் சந்திப்பா? இதெல்லாம் நல்லதுக்கில்லை சொல்லிப்புட்டேன் ஆமா...,(பொறாமைல இப்படித்தான் கமெண்ட் போட முடியும்)
ReplyDeleteஎனக்கு விஜய் பிடிக்காது. வடிவேல் காமெடியும் பிடிப்பதில்லை, அதிலயும் போக்கிரி?! ம்ஹூம்...., ஒண்ணும் சொல்றதுக்கில்லை.
ReplyDeleteபாலுமகேந்திரா வலைப் பக்கம் ஆரம்பித்திருப்பது எனக்கு இப்போதுதான் தெரியும். சென்று வந்து விட்டேன்.
ReplyDeleteகாமெடி போஸ்டர் நல்லாயிருக்கு.
T20 மேட்ச்... ஆப்கானிஸ்தான் கிட்ட படாத பாடு பட்டுகிட்டு இருக்கு இந்தியா!
தமிழ்மணத்தின் நம்பர் 1 பதிவருக்கு கமெண்ட் இடுவதில் பெருமையடைகிறேன். :-)
ReplyDeleteகாமெடி போஸ்டர் super mohan sir
ReplyDelete//கே. ஆர். பி 35 வயதுக்குள், அறுபது வயது மனிதனுக்கு கிடைக்கும் அனுபவங்கள் கிடைக்க பெற்றுள்ளார் !
ReplyDeleteநிச்சயமாக அவருக்கு 35 வயசுதான் என்ற செய்தி எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. அனுபவம்தான் பெரிய படிப்பு என்பதற்கு உதாரணம் சகோ.கே. ஆர். பி.