சுஜாதாவின் மத்யமர் - எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்பவே ஸ்பெஷல் புத்தகம் ! என்ன ஸ்பெஷல் என்று பிறகு சொல்கிறேன். முதலில் மத்யமர்.
முன்னுரையில் சுஜாதா மத்யமர் என்கிற வர்க்கம் பற்றி இப்படி சொல்கிறார்:
" இவர்கள் இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் அல்லாடுபவர்கள். ஏறக்குறைய நல்லவர்கள், பெரும்பாலும் கோழைகள் " என மிடில் கிளாஸ் மக்களை வர்ணிக்கிறார் சுஜாதா. மொத்தம் 12 கதைகள் இந்த தொகுப்பில் ! சில கதைகள் மட்டும் இங்கு பார்ப்போம்
தர்ட்டி பை பார்ட்டி
பெங்களூரில் இருக்கும் நஞ்சுண்ட ராவ் ஒரு காலி நிலம் வாங்க அல்லாடுகிறார். ஒரு வழியாய் அவருக்கு ஒரு நிலம் கிடைக்கிறது. வக்கீலிடம் கேட்டு விட்டு பணம் தந்து நிலத்தை பதிவு செய்கிறார். அப்புறம் தான் தெரிகிறது. அவருக்கு காட்டிய நிலம் வேறு. பதிவு செய்து தந்த நிலம் வேறு என்று. அவருக்கு கிடைத்த நிலம் சரியான பாறை உள்ள இடம் அங்கு வீடு கட்ட, நிலம் வாங்கிய அளவுக்கு மேல் செலவு செய்தால் தான் தரை மட்டமாக்க முடியும். ஏமாந்து போன நஞ்சுண்ட ராவ் தனக்கு நிலம் விற்றவனை தேடி போக, அவர் ஊருக்கு போனதாக தகவல் கிடைக்கிறது. சில நாட்கள் பித்து பிடித்த மாதிரி அலைகிறார். தனக்கு நிலம் விற்றவனை என்ன செய்கிறேன் பார் என்று சொல்லியபடி இருக்கிறார். ஒரு நாள் கடப்பாரை எடுத்து கொண்டு காணாமல் போக, மனைவி அவர் நிலம் விற்றவனை கொல்ல சென்று விட்டார் என அழுது புலம்புகிறாள்.
ஆனால் கடைசி பாராவில் திரும்பும் நஞ்சுண்ட ராவ் " நம்ம நிலத்துக்கு தான் போனேன். உடைச்சு பார்த்தேன். பாறை பேர்ந்து வருது. நீயும் வா. ரெண்டு பேரும் சேர்ந்து பாறை முழுக்க உடைசிடலாம்" என்கிறார் !
மிடில் கிளாஸ் மக்கள் என்பவர்களின் பல வித வலியை இந்த சின்ன கதையில் சொல்லி போகிறார் சுஜாதா ! இக்கதையின் பின்னால் உள்ள விமர்சன கடிதங்கள் இன்னும் பல பரிணாமத்தை காட்டுகிறது.
ஒருவர் "நிலம் வாங்கும் போதே மனைவி தடுத்தார் பாருங்க பெண்கள் எப்பவும் புத்தி சாலி தான் " என்கிறார். இன்னொருவர் "அவரை ஏமாற்றுபவனும் மத்யமனே; ஆக வில்லனும் மத்யமர் தான் " என்கிறார்.
அறிவுரை

லஞ்சம் வாங்காத ராமலிங்கம் என்கிற அரசு ஊழியர் பற்றி பேசுகிறது. அவர் மனைவியோ கூட வேலை செய்யும் நபரை காட்டி " அவர் உங்களுக்கு சமான பதவி தான். ஆனால் கார் வைத்துள்ளார்; எப்படி?" என கேட்கிறார் " அவன் லஞ்சம் வாங்குறான்மா" என்கிறார் கணவர். " நீங்களும் வாங்குங்க; ஊரே வாங்குது " என்கிறார் மனைவி.
ராமலிங்கத்தின் தந்தையும் ஒரு அரசு ஊழியர். லஞ்சம் வாங்காத அவர், மகனையும் அப்படியே வளர்த்துள்ளார். இம்முறை ராமலிங்கத்துக்கு ஒரு நல்ல பணம் கிடைக்க வாய்ப்பு. அவருக்கும் பணத்தேவை உள்ளது. சரி சேலத்தில் இருக்கும் அப்பாவை சந்தித்து பேசுவோம் என்று செல்கிறார். அவரிடம் இது பற்றி பேச, அப்பா சொல்லும் அறிவுரை அவரை மட்டுமல்ல நம்மையும் திடுக்கிட வைக்கிறது.
இந்த கதை கல்கியில் வெளியான போது கதை குறித்த எனது விமர்சன கடிதம் வெளியானது. பின் நான் சுஜாதாவிற்கு கடிதம் எழுத, அவர் தன் கைப்பட பதில் எழுதினர். மறக்க முடியாத நினைவுகள் ! (புத்தகம் ஸ்பெஷல் என்றது இதற்காகத்தான் !)
சாட்சி

சரளா என்ற பெண் தெருவில் நடக்கும் ஒரு கொலையை நேரில் பார்த்து விடுகிறார். போலிஸ் வந்து இவரை விசாரிக்கும் என அவள் மாமனார், மாமியார் அனைவரும் கொலையை பார்த்ததை சொல்லி விடாதே; கோர்ட் போலிஸ் ஸ்டேஷன் என அலையணும் என்று சொல்ல, இறுதியில் அவள் சொன்னாளா என்பதை சுஜாதா ஸ்டைலில் சொல்கிறார்
நீலப்புடவை ரோஜாப்பூ
நீலப்புடவை ரோஜாப்பூ
இந்த தொகுப்பில் மிக வித்யாசமான கதை. கணவன்- மனைவிக்கு இடையே சரியான உறவில்லை. இதனால் கணவன் வெளியே ஒரு பெண்ணை நாடுகிறான். பேனா நட்பில் ஒரு பெண் தெரிய வருகிறாள். இருவரும் கடிதத்தில் நிறைய பேசுகிறார்கள். இறுதியில்.. இறுதியில்... ஆம் நீங்கள் ஊகித்தது சரி தான்.. அது அவன் மனைவி தான் !
மகளின் சினிமா வாய்ப்புக்காக சோரம் போகும் ஒரு அம்மா - திருமணம் ஆகாமல் கர்பமாகும் மகளை பிரசவம் முடியும் வரை எங்கோ கொண்டு சென்று டெலிவரி பார்க்கும் இன்னொரு தாய் இப்படி சர்ச்சையை கிளப்பிய கதைகளும் உண்டு. இதை விட அதிக சர்ச்சை கிளப்பிய கதை இட ஒதுக்கீட்டை எதிர்த்து எழுதப்பட்ட கதை. உயர் சமூகத்தை சார்ந்த, புத்தி சாலி ஏழைக்கு வேலை கிடைக்காமல், அதே வேலை இட ஒதுக்கீட்டால் சராசரி அறிவுள்ள வசதியான ஒரு பெண்ணுக்கு கிடைப்பதாக ஒரு கதை. இதன் விமர்சனத்தில் பாராட்டை விட கண்டன கணைகள் அதிகம் காண முடிகிறது.
முடிவுரையில் சுஜாதா விமர்சன கடிதங்கள் பற்றி " விமர்சனம் எழுதியவர்கள் நிறைய யோசிக்கிறார்கள். இவ்வளவு சாத்தியக்கூறு எழுதும் போது நான் யோசிப்பதில்லை" என்கிறார். கதைகளில் பலரும் பிராமணர்களாக இருப்பது ஏன் என பலரும் கேட்டதாகவும், தனக்கு பரிச்சயமுள்ள மொழி என்பதால் அதை தேர்ந்தெடுத்ததாகவும், ஆனால் இதே பிரச்சனைகள் எந்த சமூகத்துக்கும் வரலாம் என்கிறார்
மொத்தத்தில் :
சிறுகதைகள - சுஜாதாவுக்கு மிக பிடித்த கிரவுண்ட்- பிச்சு உதறி இருக்கார். வாய்ப்பு கிடைத்தால் அவசியம் வாசியுங்கள் !

நூல் பெயர்: மத்யமர்
வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்: 164
விலை : Rs. 65
திண்ணை ஆகஸ்ட் 5,2012 இதழில் வெளியானது
***
டிஸ்கி : ப்ளாகர் இதனை 501 -ஆவது பதிவு என்கிறது. சும்மா ஞாபகத்துக்கு இத்தகவல் பதிந்து வைக்கிறேன் !
மென்சோகம் இழைந்தோடும் கதைகளை நான் பெரும்பாலும் வாசிக்க விரும்புவதில்லை......கணேஷ் வசந்த் இருந்தாலும், இல்லாவிட்டாலும் த்ரில்லர் கதைகள்தான் என்னுடைய சாய்ஸ்!
ReplyDeleteஏன் ப்ரொஃபைல் ஃபோட்டோ மாத்திட்டீங்க? காரணத்தை சொல்லிடுங்க...இல்லாட்டி, இதுக்கும் ஒரு ப்ளஸ் வந்துடும் ;))
த.ம. 1
ReplyDeleteமத்யமர் கதைகள் - ரசித்துப் படித்தவை. மீண்டும் நினைவு படுத்தி விட்டீர்கள் மோகன்...
ReplyDeleteத.ம. 5
நல்லது..
ReplyDelete501க்கு வாழ்த்துக்கள். எங்கே ஸ்வீட்?
ReplyDeleteநான்இன்னும் புத்தகத்தை வாங்கலை, படிக்கலை. படிக்கலை. எல்லாரும் சுஜாதா பற்றியே எழுதுறீங்களே அறிவுஜீவின்னு காட்டிக்கவா?
ReplyDeleteரகு: ரொம்ப நாளா ஒரே போட்டோ வச்சிருக்கேன். எங்க பெண் தனது பெட் அனிமல் போட்டோ Profile-ல் போடணும் என பல நாளாக சொல்லி வருகிறாள். இந்த சனி, ஞாயிறு சண்டை போட்டு என் கூட உட்கார்ந்து இங்கும், கூகிள் பிளஸ்சிலும் Profile போட்டோ மாற்றி விட்டாள் ; நீங்கள் கேட்டதால் சொல்ல முடிந்தது நன்றி !
ReplyDeleteராஜி said...
ReplyDeleteநான்இன்னும் புத்தகத்தை வாங்கலை, படிக்கலை. படிக்கலை. எல்லாரும் சுஜாதா பற்றியே எழுதுறீங்களே அறிவுஜீவின்னு காட்டிக்கவா?
**
சுஜாதாவை விட எளிமையா, சுவாரஸ்யமா யாரும் எழுத முடியாது. படிக்க இருக்கிற நேரம் குறைவு. அதுக்குள் படிக்க சுஜாதா தான் பெஸ்ட். அதான் அவரை பற்றி நிறைய எழுதுறேன்
சுவீட் சென்னை வந்தால் கிடைக்கும்
நல்ல பகிர்வு.
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப் பின், கல்கியில் தொடராகவும் பின்னர் புத்தகமாகவும் படித்த, சுஜாதாவின் மத்யமர் கதைகளை நினைவூட்டியமைக்கு நன்றிகள்.
ReplyDeleteரொம்பவே ஸ்பெஷல் பதிவில் ஸ்பெஷல் புத்தகத்தை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி சார்...
ReplyDeleteஇட ஒதுக்கீடு இந்தியாவில் கோவில் மாடு மாதிரி ஆகி விட்டது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கஷ்டத்தை வெளியே முணுமுணுத்தால் கூட உயர்சாதித்திமிர் என்பார்கள். சாதி ரீதியில் SC/ST க்கு மட்டும், மற்றவர்களுக்குப் பொருளாதார ரீதியில் என்று ஆக்கி ஒதுக்கீட்டின் அளவை 50% அளவிற்குள் வைத்தால்
ReplyDeleteஅனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஓட்டு வங்கி அரசியல்வாதிகள் எங்கே இதையெல்லாம் செய்யப் போகிறார்கள்? எந்த சமூகத்திற்கு எண்ணிக்கை அதிகமாக உள்ளதோ அவர்களைச் சந்தோஷப்படுத்த இட ஒதுக்கீடு கொடுத்து ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள்.
மத்யமர் கதைகள் வாசித்திருக்கிறேனே...!
ReplyDeleteபுது மோதிரம் சற்றே அதிர்ச்சியாய்....!
முடிவு நமது ஊகத்துக்கு : ராமலிங்கத்தின் மனதில் லஞ்சம் வாங்கலாமா வேண்டாமா என்று ஓர் ஊசலை ஏற்படுத்தி, ராமலிங்கம் லஞ்சம் வாங்குவாரா மாட்டாரா ?' என்ற கேள்வியை நமக்குள் விதைத்து ஒரு மாயமானைத் துரத்திச் செல்லும் சுஜாதா....சொல்ல வருகிற விஷயம் லஞ்சம் பற்றியதல்ல. முதுமையின் வறுமையில் பெற்றோரைச் சரியாகக் கவனித்துக் கொள்ளாத பிள்ளைகளைப் பற்றித்தான். கதையின் முடிவில் ராமலிங்கத்தின் தந்தையின் குரலில் சுஜாதா நமக்கு 'அறிவுரை' சொல்கிறார். வழக்கம்போல சுஜாதா பிரச்னைக்கு முடிவு சொல்லாமல் நமது ஊகத்துக்கு விட்டு விடுகிறார். இருந்தாலும் ராமலிங்கம் லஞ்சம் வாங்கமாட்டாரென்றும் இனி தம் தந்தையை நான்கு கவனித்துக் கொள்வார் என்றும் (அவரது பிள்ளை அவரை நான்கு பார்த்துக் கொள்ள வேண்டுமே) நம்மால் ஊகிக்க முடிகிறது! நீடாமங்கலம் ஆ. மோகன்குமார்!
பொதுவாக சுஜாதாவை நான் சிறந்த கட்டுரை ஆசிரியராகத்தான் பார்க்கிறேன். அவருடைய சிறுகதைகள்/புதினங்கள் பெரும்பாலும் என்னைக் கவர்ந்ததில்லை. மத்யமர் கதைகள் சிறந்த தொகுப்பாகத் தெரிகிறது. படிக்க வேண்டும்.
ReplyDeleteஅவருடைய கட்டுரைகளையும், பிரிவோம் சந்திப்போம் புதினத்தையும் பாராட்டி முன்பு அவருக்கு ஈமெயில் அனுப்பி அவர் அதற்கு நன்றி தெரிவித்து பதில் அனுப்பியிருந்தார். அது ஒரு மகிழ்ச்சியான நினைவு.
நான்இன்னும் படிக்கலை
ReplyDelete501க்கு வாழ்த்துக்கள்
501வது பதிவுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்க விமர்சனம் இந்த புத்தகத்தை படிக்க துண்டுகிறது.
நானொரு சுஜாதா ரசிகன்! அருமையான பகிர்வுக்கு நன்றி! வாய்ப்பு கிடைத்தால் வாங்கி வாசிக்கிறேன்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்!
பாதைகள் மாறாது! சிறுகதை
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html
501க்கு வாழ்த்துகள்.
ReplyDeleteகதை சுருக்கங்கள் கொடுத்து எல்லா கதைகளையும் நினைவு படுத்திவிட்டீர்கள்! எப்போதும் என் பிரியத்திற்கு உள்ளானவை இவை.
ReplyDelete501? சாமி. மனுஷனா மிஷினா? 50-க்கே நாக்கு தள்ளுது! congrats!
501க்கு வாழ்த்துக்கள்..சார்
ReplyDeleteநண்பர்களே
ReplyDeleteபின்னூட்டம் இட்ட ஒவ்வொருவருக்கும், தமிழ் மணத்தில் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி
ஸ்ரீராம் :
மிக மகிழ்ச்சி. சந்தோஷமாய் இருந்தது. புடஹ்கத்தில் வெளியான எனது வரிகளை எடுத்து நீங்கள் அனுப்பியதை பார்க்கும் போது
இது இணையத்தில் கிடைத்ததா ? புக்கை வைத்து நீங்கள் டைப் செய்தீர்களா? எதுவாயினும் சரியான இடத்தில் கடிதம் பகிர்ந்தமைக்கு மிக நன்றி
நன்றி நம்பள்கி
ReplyDeleteவெங்கட்: நன்றி
ReplyDeleteசவுந்தர்: நன்றி
ReplyDeleteமாதேவி: நன்றி
ReplyDeleteசீனி: சரியே சொன்னீர்கள் நன்றி
ReplyDeleteதனபாலன் சார்: நன்றி
ReplyDeleteJagannath said...
ReplyDeleteஅவருடைய கட்டுரைகளையும், பிரிவோம் சந்திப்போம் புதினத்தையும் பாராட்டி முன்பு அவருக்கு ஈமெயில் அனுப்பி அவர் அதற்கு நன்றி தெரிவித்து பதில் அனுப்பியிருந்தார். அது ஒரு மகிழ்ச்சியான நினைவு.
**
மகிழ்ச்சி நன்றி
சரவணன் : நன்றி
ReplyDeleteநன்றி கோவை டு தில்லி
ReplyDeleteசுரேஷ் : நன்றி
ReplyDelete
ReplyDeleteரிஷபன் : நன்றி சார்
bandhu said...
ReplyDelete501? சாமி. மனுஷனா மிஷினா? 50-க்கே நாக்கு தள்ளுது! congrats!
****
இப்படி கூட பாராட்ட முடியுமா? நன்றி bandhu :)
உழவன் ராஜா: நன்றி
ReplyDeleteஇந்த கதை கல்கியில் வெளியான போது கதை குறித்த எனது விமர்சன கடிதம் வெளியானது. பின் நான் சுஜாதாவிற்கு கடிதம் எழுத, அவர் தன் கைப்பட பதில் எழுதினர். மறக்க முடியாத நினைவுகள் !
ReplyDeleteமத்யமர் நேற்று லைப்ரரி இலிருந்து எடுத்து படித்து விட்டேன் இதில் தங்கள்
விமர்சனம் பார்த்து வியந்தேன் வாழ்த்துக்கள்