Tuesday, September 4, 2012

சூப்பர் சிங்கர் ஜூனியர்: ஜட்ஜுகளை Judge பண்ணுவோமா?

சூப்பர் சிங்கர் ஜூனியர் அவ்வப்போது திட்டினாலும் தொடர்ந்து பார்த்து தான் வருகிறோம். குடும்பத்தோடு இரவு அமர்ந்து சாப்பிடும் நேரம், லைட் ஆக ஒரு நிகழ்ச்சி என்கிற வகையில் இது வீட்டில் அனைவரும் பார்க்க கூடிய  நிகழ்ச்சியாக உள்ளது



இந்த முறை சூப்பர் சிங்கர் ஜூனியருக்கு ஜட்ஜுகளாக தொடர்ந்து வருவது மனோ, சித்ரா மற்றும் மால்குடி சுபா ஆகிய மூவர் தான். அவ்வப்போது புஷ்பவனம் குப்புசாமி, கரநாடக சங்கீத பாடகி சௌமியா போன்றோர் வருகிறார்கள். இவர்கள் ஜட்ஜுமென்ட் எப்படி இருக்கு என ஒரு அலசல் இதோ:

மனோ 

என்னத்த சொல்ல ! ஒரு ஜோக்கர் மாதிரி கூத்தடிக்கிறார் மனோ ! இருந்துட்டு போகட்டும். அங்கு அமரும் பெண்களும் சிறு குழந்தைகளும் இவர் செய்யும் சேட்டைகளை பார்த்து சிரிக்கிறார்கள். ஆனால் நமக்கு தான் சிரிப்பு வருவதில்லை.

அந்த வாரம் யார் அவுட் ஆனார்கள் என்கிற முடிவாகட்டும், ஸ்பாட் செலக்டட் ஆன தகவலை சொல்வதாகட்டும் இப்படி முக்கிய முடிவை பெரும்பாலும் மனோ தான் அறிவிப்பார் .. அது தான் அவர் செய்யும் உருப்படியான செயல்.

சுபா

இருக்கிற மூன்று ஜட்ஜுகளில் சுத்த மோசம் என்றால் சந்தேகமே இன்றி அது இவர் தான் ! சங்கீத ஞானத்தில் மனோவை விஞ்சி விடுவார் இவர் ! குழந்தைகளை பாராட்ட வேண்டும். அப்போது தான் மூட் அவுட் ஆக மாட்டார்கள், அவர்களுக்கு encouraging ஆக இருக்கும் என்பதெல்லாம் சரி தான். ஆனால் அவர்கள் முன்னேற்றத்துக்கு தேவையான ஒரு உருப்படியான பாயிண்ட்டும் எப்போதும் இவர் சொல்வதில்லை ! " நல்லா பாடினே கண்ணா. தேன்க் யூ வெரி வெரி மச்" என்பது தான் இவர் எல்லாருக்கும் பேசும் ஒரே டயாலக். இதை ஒரு டேப் ரிகார்டரில் இவர் குரலில் ரிக்கார்ட் செய்து எல்லார் பாடிய பின்னும் போட்டு விடலாம்.

சித்ரா

சூப்பர் சிங்கர் ஜூனியரில் மூன்று ஜட்ஜ் இருக்கிறார்கள் என்று சொல்வதே தவறு ! இருப்பது ஒரே ஜட்ஜ் ! அது இவர் தான் ! ஒரு ஜட்ஜ் எப்படி இருக்கணும் என்பதற்கு உதாரணம் சித்ரா தான். என்ன ஒரு அறிவு ! மிக மிக சின்சியர் ஆன ஒரு ஜட்ஜ். எப்படி பாடினாலும் பசங்களை ஓரிரு வரி பாராட்டிட்டு அப்புறமா ஒவ்வொரு குறையா சொல்லுவார். அது யார் மனதையும் புண்படுத்தும் விதத்திலோ, biased-ஆகவோ இருக்காது. இவர் சொல்வதை மாற்றி கொண்டால் சின்ன பசங்க ரொம்ப நல்லா பாடலாம் என்று நிச்சயம் சொல்லலாம். அப்படி இவர் சொல்வதை சரியே எடுத்து கொண்டு நன்கு பாட ஆரம்பித்தவர்களும் நிச்சயம் உள்ளனர்.

எப்போதோ வரும் ஜட்ஜ்களில் :

புஷ்பவனம் குப்புசாமி 

இந்த நிகழ்ச்சியில் இவர் எப்போதாவது மைக் பிடிச்சு பேசினாலே உடனே சேனல் மாற்றிடுவேன். பாடிய குழந்தைகளை பற்றி கவிதை படிக்கிறேன் என சூர மொக்கை போடுவார். அது கவிதையா என்பதும், அது ரசிக்கிற மாதிரி இருக்கிறதா என்பதும் சேனல் நடத்துபவர்களுக்கு புரியாமலா இருக்கிறது? ஹும் :(

பாடகி சௌமியா

பாடல்கள் பற்றி நல்ல அறிவு உள்ளவர். குழந்தைகள் வருத்தப்படாமல் சில பாயிண்டுகள் சொல்வார். ஆனால் எப்போதோ ஒரு முறை வருவதால், முழு flow-வில் பேசாமல், எதையோ கொஞ்சம் முழுங்கி முழுங்கி பேசுற மாதிரி இருக்கும். தொடர்ந்து வந்தால் இவர் ஒரு நல்ல ஜட்ஜ் ஆக இருப்பார்.

இனி சூப்பர் சிங்கரில் நடந்த சில ஷாகிங் விஷயங்கள்.

நன்கு பாடுகிற இருவர் வெளியேற்றப்பட்டது செம ஷாக். இவர்களை விட சுமாராக பாடும் பலர் இன்னும் இருக்க, இவர்களை எப்படி வெளியேற்றினர் என்பது புரியவே இல்லை !

ரக்ஷிதா : நிச்சயம் பைனல் போவார் என நான் நினைத்த பாடகி. அதுக்கு சில காரணங்கள் உண்டு. ஒன்று இவர் தமிழ் நாட்டு பெண். சென்ற முறை மலையாள பெண்ணான அல்காவுக்கு பரிசு தந்ததில் நிறைய சர்ச்சை இருந்தது. சுகன்யா மற்றும் இவர் தான் நன்கு பாடுபவர்களாக தெரிந்தனர். அதில் சுகன்யா மலையாளி. எனவே இவருக்கு வாய்ப்பு அதிகம் என நினைதேன். ஆனால் மிக சீக்கிரமே, இவரை விட மிக சுமாராய் பாடும் எத்தனையோ பேர் இருக்கும் போது அவுட் செய்து விட்டனர்.

வொயில்டு கார்ட் ரவுண்ட்டில் பங்கேற்கவே இப்ப ஒரு செலக்ஷன் நடக்குது. அதில் பாடி ஒய்ல்ட் கார்டுக்கு செலக்ட் ஆகியிருக்கார் ரக்ஷனா. அதிலும் வென்று மீண்டும் முக்கிய நிகழ்வின் உள்ளே வருவார் என நம்புவோம் !

ஆஜிஷ்: குட்டி பையன், ரொம்ப நல்லா பாடுவான். செம ஸ்டைல் வேற ! பல முறை ஸ்பாட் செலக்ட் ஆனவன். சில வாரம் முன்பு இவன் வெண்ணிலவே வெண்ணிலவே பாடிய போது நான் அசந்து போனேன். ஆண் பாடகர்களே குறைவாக உள்ள நிலையில் இவன் பைனல் செல்ல வாய்ப்பு அதிகம் என நினைத்திருந்தேன். எல்லா வாரமும் இவனை பாராட்டி விட்டு, திடீரென ஒரு வாரம் சரியா பாடலை என அனுப்பி விட்டனர் !
****
சரி ஒரே குறையா சொல்றோம் ..இங்கு நடந்த ஒரு நல்ல விஷயத்தையும் பகிர்ந்திடலாம். கெளதம் பாடிய உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் அனைவரையும் நெகிழ்த்தி விட்டது. அந்த பாடலும், அதன் சூழலும், மெட்டுமே நம்மை அழ வைத்து விடும். அதை கெளதம் சரியாக பாட, ஸ்டூடியோவில் இருந்தொருக்கும் பார்த்த பலருக்கும் கண்ணில் நீர் திவலைகள் உருண்டோடின !

 

*********
நிகழ்ச்சி பல லட்சம் பேரால் பார்க்கப்படுகிறது என்பதை உணர்ந்து விஜய் டிவி பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்வதும், அடுத்த முறையாவது குழந்தைகளை மதிப்பிட நல்ல சங்கீத அறிவு உள்ள ஜட்ஜுகளை நியமிப்பதும் தான் நமது எதிர்பார்ப்பு !

47 comments:

  1. நேற்றுதான் நண்பரின் வீட்டில் இரண்டு நிமிடம் பார்க்க கிடைத்தது
    அந்தப் பெண் அறிவிப்பாளர் சொந்தக் குரலில் பேசுகிறாரா

    அல்லது முந்தைய நிகழ்வில் அறிவிப்பாளராக வந்த திவ்யா தான்
    குரல் கொடுக்கிறாரா

    ReplyDelete
  2. ஒவ்வொருத்தரையும் பற்றி நல்லதொரு அலசல்...

    எப்படி இவ்வளவு உன்னிப்பாக கவனித்து எழுதி உள்ளீர்கள்... ? (வீட்டிலும் Help...?)

    ReplyDelete
  3. எப்படியோ...ஜட்ஜ் களையும் விமர்சனம் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா..?
    உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடிய சிறுவன் நெஞ்சை கவர்ந்து விட்டான்.

    ReplyDelete
  4. நல்லாத்தான் பாடினான். ஆனா இப்படி ரவுண்டு கட்டி ஒப்பாரி வைக்கறது செயற்கையா இருக்கு மோகன். இந்த ப்ரோக்ராம் பாக்கறத நிறுத்தி ரொம்ப மாசமாச்சு. இதை விட நல்ல ப்ரோக்ராம்லாம் இருக்கு

    ReplyDelete
  5. Anonymous8:02:00 AM

    நன்கு பாடுகிற இருவர் வெளியேற்றப்பட்டது செம ஷாக். இவர்களை விட சுமாராக பாடும் பலர் இன்னும் இருக்க, இவர்களை எப்படி வெளியேற்றினர் என்பது புரியவே இல்லை/// முதல் சீசனில் இருந்தே அது புரியாத புதிராகத்தான் இருந்தது! ஆனால், என்னுடைய தோழமைகள் சிலர் அங்கு சென்று வந்த பின்னர்தான் அங்கே நடக்கின்ற சில விதமான அரசியல் பற்றி எல்லாம் கேள்விப்பட நேரிட்டது! ... திறமை இருப்பவர்களைக் காட்டிலும் பணம் படைத்தவர், அழகுள்ளவர் என்றால் போதும் அவர்களை முன்னேற்றத்தான் அங்கே முன்னுரிமை! !

    ReplyDelete
  6. நல்ல அலசல்.

    இப்பல்லாம் பார்க்கறதே இல்லை மோகன்.

    கௌதம் பாடியதன் மறு ஒளிபரப்பு நண்பர் வீட்டில் பார்த்தேன்...கௌதம் நன்றாகப் பாடினார். ஆனா மத்தவர்களெல்லாம் அழுது ஆர்ப்பாட்டம் செய்தது கொஞ்சம் ஓவரா ட்ராமாத்தனமா இருந்தது.....

    ReplyDelete
  7. மோகங்குமார் சார்,

    திறமையான குழந்தைகள் பலரை முன்னமே துரத்தி விட்டார்கள்..

    சுபா பற்றி நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை!

    ஆஜித்தின் வெளியேற்றம்தான் இந்த போட்டியின் மிக மோசமான முடிவு..கடந்த முறை சிறிகாந்த என்ற பையனுக்கு கொடுத்த பில்டப்பை பார்க்கையில் இவனின் திறமை எவ்வளவோ மேல்..ஆஜித் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட்..(உயிரே உயிரே,போ நீ போ, அனுபவம் புதுமை)

    அவன் நன்றாக பாடவில்லையென வெளியேற்றவில்லை பாடல்வரிகளை மறந்ததற்காகவே! மற்றையது அவனுக்கு கர்நாடக சங்கீத அறிவில்லையாம.. கர்நாடக சங்கீதம் படித்த ஐய்யர் வீட்டுபிள்ளைகளுக்குத்தான் இங்கு முதலிடம்..

    மற்றையது ஆந்திரப்பையன் ஜெயந்த எப்போதோ வெளியேறிருக்க வேண்டியவன்..காரணம் அவன் பாடும் பாடல்களின் வரிகள் நிறைய பிழையாகவே இருக்கும்.. ஒரு சில பாடல்களை நன்றாக பாடியிருப்பான (தேன்மொழி எந்தன் தேன்மொழி)

    //திறமை இருப்பவர்களைக் காட்டிலும் பணம் படைத்தவர், அழகுள்ளவர் என்றால் போதும் அவர்களை முன்னேற்றத்தான் அங்கே முன்னுரிமை! !// மிகச்சரியான கருத்து அந்த வகையில் இந்தமுறை பணம்படைத்த அழகான ஐயர் வீட்டுபெண் பிரகதிதான் டைட்டில் வின்னர்.. காரணம் அவர் அப்பாதான் விஜய் டீவியின் அமெரிக்க ஒளிபரப்பு நிர்வகிப்பவர்..பிரகதி ஆரம்பத்திலிருந்து கலந்து கொண்டவரும் அல்ல இடையில் இன்னொருவர் விலகிக்கொள்ள இவரை சேர்த்துக்கொண்டார்கள்.!!

    ReplyDelete
  8. ஜட்ஜா மனோ உங்களுக்கு பிடிக்காம இருக்கலாம் மோகன். ஆனால் இசை அளவில் அவர் நல்ல திறமை வாய்ந்தவரே.

    'செண்பகமே செண்பகமே' பாடல் கேட்டு பாருங்கள். சரணத்தில் வரும் 'உன் பாதை போகும் பாதை நானும் போக வந்தேனே'வில் ஆரம்பித்து, அந்த பாடல் முழுதும் அசத்தியிருப்பார் மனோ!

    அழுவதற்கு தயாராக இருப்பவர்கள் வரை, அழவைப்பதற்கும் தயாராகத்தான் இருக்கும் விஜய் டிவி!

    ReplyDelete
  9. பாடிய குழந்தைகளை பற்றி கவிதை படிக்கிறேன் என சூர மொக்கை போடுவார். //ஹ ஹா உண்மை உண்மை நானும் சேனலை மாற்றி விடுவேன்

    ReplyDelete
  10. இன்னுமொன்று சொல்ல மறந்துட்டேன்..மனோ பற்றி நீங்க கூறியதில் எனக்கு உடன்பாடில்லை.. அவரின் ஜட்ஸ்மெண்ட் திருப்தியில்லாமல் இருக்கலாம்!! ஆனால் அவர் ஒரு சிறந்த பாடகர் மறக்க முடியாத பல பாடல்களை பாடியிருக்கிறார்.. தேடி கேட்டுப்பாருங்கள்.. 80/90 களில் வந்த பல பாடல்கள் பாடியது இவரா அல்லது SPB யா என்ற சந்தேகம் வரும்.. 80 களுக்குப்பின் வந்த பாடகர்களில் SPB,ஜேசுதாஸ்,மலேசியா வாசுதேவன் வரிசையில் மனோவுக்கும் தனியிடம் உண்டு!!

    ReplyDelete
  11. //பணம் படைத்தவர், அழகுள்ளவர் என்றால் போதும் அவர்களை முன்னேற்றத்தான் அங்கே முன்னுரிமை//

    நான் அப்பவே சொன்னேன்ல பிரகதி ஸ்பான்சர் ஒருவரட மகளாதான் இருப்பா என்று ஹி ஹி

    //என்னத்த சொல்ல ! ஒரு ஜோக்கர் மாதிரி கூத்தடிக்கிறார் மனோ ! இருந்துட்டு போகட்டும்.//

    ஏன் இப்படி ஒரு பெரிய பாடகரை கூறினீர்கள் என்று தெரியவில்லை.. மற்ற படி நான் பார்த்த வரை எனக்கு அப்படி படவில்லை.. (சீசன் 1,2 ) ..

    //ரக்ஷிதா, ஆஜிஷ்// ஏற்கனவே கூறி விட்டேன்

    //நல்லாத்தான் பாடினான். ஆனா இப்படி ரவுண்டு கட்டி ஒப்பாரி வைக்கறது செயற்கையா இருக்கு மோகன். இந்த ப்ரோக்ராம் பாக்கறத நிறுத்தி ரொம்ப மாசமாச்சு. இதை விட நல்ல ப்ரோக்ராம்லாம் இருக்கு //

    REALITY SHOW.LA இதெலாம் சகஜம் அப்பா.. அதுலயும் அவங்க அப்பா அம்மா உணர்ச்சி பொங்க கதைத்தது தான் மெகா சொதப்பல்

    ReplyDelete
  12. ரகு/ Rizi : மனோ சிறந்த பாடகர் என்பதில் எனக்கும் எந்த மாற்று கருத்தும் இல்லை. எனக்கும் அவர் பிடித்த பாடகரே. இந்த நிகழ்ச்சியில் ஒரு ஜட்ஜ் ஆக அவர் எந்த அளவு நேர்மையுடனும் திறமையுடனும் நடந்து கொண்டார் என்பது மட்டுமே என் கேள்வி. இது என் தனிப்பட்ட
    கருத்தே. பொது கருத்து அல்ல

    தங்கள் கருத்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  13. ராம்ஜி யாகூ : உங்கள் சந்தேகம் எனக்கும் உண்டு. ஆனால் அவர் சொந்த குரலில் தான் பேசுறார் என நினைக்கிறேன். ரெண்டு குரலும் ஒரே மாதிரி இருக்கோ என்னவோ !

    ReplyDelete
  14. நல்ல அலசல் மோகன்குமார்.

    ReplyDelete
  15. அண்ணே நீங்க மானாட மயிலாடவுலாம் பார்க்கறதில்லையா?

    ReplyDelete
  16. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அண்ணே நீங்க மானாட மயிலாடவுலாம் பார்க்கறதில்லையா?
    **
    இல்லீங்கண்ணே முதல் சீசன் மட்டும் தான் பார்த்தேன். அப்புறம் பாக்குறதில்லை

    வேண்ணா சொல்லுங்க. உங்களுக்காக பாத்துட்டு விமர்சனம் எழுதிடலாம்

    ReplyDelete
  17. ////மோகன் குமார் said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அண்ணே நீங்க மானாட மயிலாடவுலாம் பார்க்கறதில்லையா?
    **
    இல்லீங்கண்ணே முதல் சீசன் மட்டும் தான் பார்த்தேன். அப்புறம் பாக்குறதில்லை

    வேண்ணா சொல்லுங்க. உங்களுக்காக பாத்துட்டு விமர்சனம் எழுதிடலாம் ////

    வேணாம்ணே, அப்புறம் 18+ போடவேண்டி இருக்கும், பிரபல பதிவர்கள்லாம் + விடுவாங்க எதுக்கு வம்பு......!

    ReplyDelete
  18. //இதை ஒரு டேப் ரிகார்டரில் இவர் குரலில் ரிக்கார்ட் செய்து எல்லார் பாடிய பின்னும் போட்டு விடலாம். //

    நல்ல யோசனை!

    சித்ரா இதில் மட்டும் சின்சியர் இல்லை, மேடைகளில் பாடும்போது கூடப் பாருங்கள் எஸ் பி பி உட்பட எல்லோரும் ஏதேதோ புது சேஷ்டைகளுடன் பாட, இவர் எப்போது மேடையில் பாடினாலும் ஒரிஜினலில் பாடிய அதே பாவத்துடன் பாடுவார். மாற்றிப் பாட மாட்டார். அனாவசிய இழுப்பு எல்லாம் இழுக்க மாட்டார்.

    ReplyDelete
  19. மாற்று மொழியை தாய் மொழியாகக் கொண்டு தமிழ்நாட்டில் வாழ்பவர்களில் மிகச் சிறப்பாக நான் கருதும் சிலர்.

    எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    சித்ரா
    பிரகாஷ்ராஜ்.

    அதுவும் சித்ரா இல்லாவிட்டால் இதுவொருநிகழ்ச்சியே அல்ல. மற்றவர்களைப் பார்க்கும் போது, அவர்கள் பேசுவதை கேட்கும் போது வரும் கொதிப்புகளை நமக்கு அடக்க பயிற்சி வேண்டும்.

    ReplyDelete
  20. சித்ராவை சிரிக்க வைப்பதால் எனக்கு மனோ செய்யும் சேட்டைகள் பிடிக்கும்.

    ReplyDelete
  21. இந்த நிகழ்ச்சி பார்க்கிறது இல்லை சார்.. எப்பவாவது பார்க்கிறது.. அப்ப கூட யாரவது பாடினா மட்டும் பார்பேன்...

    ReplyDelete
  22. TRP எனும் வெங்காயதிர்காக விஜய் டிவி செய்யும் கசமுசாக்கள்தான் இந்த அதிரடி முடிவுகள், மனோவின் கோமாளித்தனங்கள், ஒப்பாரி படலங்கள்.... டிவி போட்டாலே, பேசாம ஆதித்யா போட்டு பழைய கவுண்டர் காமெடி பார்க்க ஆரம்பிச்சுடுவேன்...:)

    ReplyDelete
  23. சார்வாள் இதைக்கூட மன்னிக்கலாம் மானாட மயிலாட பாத்திருக்கிறீங்களா ஒரு சில விளம்பரங்களைத்தான் நான் பார்த்திருக்கின்றேன் அதில் கலா மாஸ்ரர் என்பவர் ஜட்ஜ்ஜாக வருவார் அவர் பெரிய நடன ஆசிரியர் என்றுகேள்விப்பட்டேன் ஆனால் நமீதா ரம்பா அவ இவ என்று நடிகைகளை அழைக்கிறார்களே அவர்களுக்கு என்ன தெரியும்? விளக்கவும்

    ReplyDelete
  24. சூப்பர் சிங்கர் பற்றிய சிறப்பான அலசல்! சித்ராவை தவிர மற்ற ஜட்ஜ்கள் மோசம்தான்! நல்லா பாடுபவரையும் ஆடுபவரையும் என்றைக்கு விஜய் டீவி தேர்ந்தெடுத்துள்ளது! இது ஒரு மோசடி நிகழ்ச்சியாகத்தான் தோன்றுகிறது!

    இன்று என் தளத்தில்
    பேய்கள்ஓய்வதில்லை!பகுதி7
    http://thalirssb.blogspot.in/2012/09/7.html

    ReplyDelete
  25. ராம்ஜி_யாஹூ said...
    அந்தப் பெண் அறிவிப்பாளர் சொந்தக் குரலில் பேசுகிறாரா அல்லது முந்தைய நிகழ்வில் அறிவிப்பாளராக வந்த திவ்யா தான்
    குரல் கொடுக்கிறாரா

    ***

    இன்று மறுபடி கேட்க நீங்க சொல்வது சீரியஸ் டவுட்டு தான் என தோன்றியது. காரணம் இதே பெண் அறிவிப்பாளர் வரும் பீச் கேள்ஸ் எனும் நிகழ்ச்சி ராஜில் அதே நேரம் வருது. அதில் குரல் முழுக்க வேறு மாதிரி இருக்கு

    ReplyDelete
  26. தனபாலன் சார்: நன்றி ; ஆம் அவர்கள் கருத்தும் சில நேரம் இங்கு வரும்

    ReplyDelete
  27. நன்றி கோவை நேரம்

    ReplyDelete

  28. LK : விஜய்யில் அழ ஆரம்பிச்சா நிறுத்தாதீங்க. வீ வான்ட் மோர் எமோஷன் என்பார்கள்.

    ReplyDelete
  29. சாமுண்டீஸ்வரி

    //என்னுடைய தோழமைகள் சிலர் அங்கு சென்று வந்த பின்னர்தான் அங்கே நடக்கின்ற சில விதமான அரசியல் பற்றி எல்லாம் கேள்விப்பட நேரிட்டது! ... திறமை இருப்பவர்களைக் காட்டிலும் பணம் படைத்தவர், அழகுள்ளவர் என்றால் போதும் அவர்களை முன்னேற்றத்தான் அங்கே முன்னுரிமை! !//

    கொடுமை !

    ReplyDelete
  30. வெங்கட்: நன்றி

    ReplyDelete

  31. பிரேம்குமார் : நன்றி

    ReplyDelete
  32. ஹாரி பாட்டர்: ரைட்டு

    ReplyDelete

  33. நன்றி முரளி கண்ணன்

    ReplyDelete
  34. ஸ்ரீராம். said...

    சித்ரா இதில் மட்டும் சின்சியர் இல்லை, மேடைகளில் பாடும்போது கூடப் பாருங்கள் எஸ் பி பி உட்பட எல்லோரும் ஏதேதோ புது சேஷ்டைகளுடன் பாட, இவர் எப்போது மேடையில் பாடினாலும் ஒரிஜினலில் பாடிய அதே பாவத்துடன் பாடுவார்
    *******
    உண்மை. பாட்டை நாம் கேட்ட படி கேட்க தான் எனக்கும் பிடிக்கும். இதனாலேயே SPB மேடையில் பாடுவது அதிகம் பிடிக்காது நிறைய மாத்தி மாத்தி பாடுவார்

    ReplyDelete
  35. நண்டு : ரைட்டுக்கு ரைட்டுண்ணே

    ReplyDelete

  36. ஜோதிஜி: அழகா சொன்னீங்க

    ReplyDelete
  37. அமுதா: நீங்க சொல்ற கருத்தும் ஒத்துக்குற மாதிரி இருக்கு நன்றி

    ReplyDelete
  38. சீனு: நன்றி

    ReplyDelete
  39. மயிலன் said...

    டிவி போட்டாலே, பேசாம ஆதித்யா போட்டு பழைய கவுண்டர் காமெடி பார்க்க ஆரம்பிச்சுடுவேன்...:)

    *******
    நானும் அதிகம் காமெடி நிகழ்ச்சி தான் பார்ப்பது வழக்கம்

    ReplyDelete
  40. கிருதிகன்: நான் மானாட பாக்கலை சார் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  41. நன்றி சுரேஷ்

    ReplyDelete
  42. தொகுப்பாலினியின் ஆடை பல சமயங்களில் மோசம்.

    ReplyDelete
  43. நீங்க ஜட்ஜுகளை ஜட்ஜ் பண்றது, நான் நீங்க பதிவு எப்படி போடுறீங்கன்னு ஜட்ஜ் பண்றா மாதிரி இருக்கு.............

    ReplyDelete
  44. நன்றி முரளி சார்

    ReplyDelete

  45. நித்ய அஜால்: :))

    ReplyDelete
  46. சித்ரா - நல்ல அமைதியான மனுஷி. பார்த்ததும் மனதை ஈர்க்கும்படியாக எப்போதும் சாந்தமான புன்னகைத்த முகம். சோகத்தில் இருந்து அவர் மீண்டு வந்ததே பெரிது.

    மற்றபடி, இந்த நிகழ்ச்சியைப் பற்றி, ஐ டோண்ட் க்நோ எனிதிங்!! :-))))))

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...