Tuesday, September 25, 2012

தாண்டவம் பாடல்கள் எப்படி? ஒரு அலசல்

விக்ரம், அனுஷ்கா, சந்தானம், எமி ஜாக்சன் நடிப்பில் வெளிவருகிறது தாண்டவம். இதில் அனுஷ்கா & சந்தானம் எனக்கு மட்டுமல்ல,தமிழர்கள் பலரின் favourite ! படம் இந்த வாரம் வெள்ளியன்று ரிலீஸ் !

தாண்டவம் இசை அமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷுக்கு 25 வயதில் 25 ஆவது படமாம். முன்பெல்லாம் நூறாவது இருநூறாவது படத்தை வைத்து தான் ஹைப் கிரியேட் செய்வார்கள். இப்போது பத்தாவது படம், 25 ஆவது படம் என்றெல்லாம் ஹைப் ஏற்றுகிறார்கள் போல !

ஜீ. வி. பிரகாஷ் பொறுத்த வரை நிச்சயம் ஒரு அட்டகாசமான இசை அமைப்பாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. செல்வராகவனுடன் இணைந்து இயங்கிய இரு படங்களிலும் (ஆயிரத்தில் ஒருவன் & மயக்கம் என்ன) ரொம்ப அருமையான இசை தந்திருந்தார். இயக்குனர் விஜய்யின் முந்தைய படங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு சில பாடல்கள் அருமையாய் செய்திருந்தார் ஜீ. வி. பிரகாஷ்.

தாண்டவம் பாடல்கள் எப்படி இருக்கு? வாங்க பார்க்கலாம் !

அனிச்சம் பூவழகி


பாடியவர்கள்: சின்ன பொண்ணு, வேல் முருகன்  , GV  பிரகாஷ் 



ஏற்கனவே டிரைலரில் இந்த பாட்டின் க்ளிப்பிங்க்ஸ் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். தானை தலைவி அனுஷ்காவை " அனிச்சம் பூவழகி" என்று வர்ணித்து பாடும் பாட்டு என்பதால், டிரைலர் பார்த்து பாட்டை கேட்க ரொம்ப ஆர்வமாய் இருந்தேன்.

பாட்டு ஆரம்பிக்கும் போதே பாட்டிகள் பாடுவது அப்படியே " ருக்குமணி ருக்குமணி என்ன சத்தம்" மூடை கொண்டு வருகிறது.

நடு நடுவில் " வாராண்டி .. வாராண்டி " என பாட்டிகள் பாடி கொண்டே இருக்கிறார்கள்.

நடுவில் சரணம் ஒன்று பாடுவதும் பாட்டி குரல் தான். பாட்டு ஆஹோ ஓஹோ எல்லாம் இல்லை. பம்பாய், ராவணன் உள்ளிட்ட படங்களில் உள்ள அதே சூழலில் உள்ள இன்னொரு பாட்டு. ஜஸ்ட் ஓகே !

அதிகாலை பூக்கள்

பாடியவர்: GV  பிரகாஷ் 

ஒரே பல்லவி கொண்ட சின்ன பாட்டு. விஜய் டிவி யில் வந்தபோது விக்ரம் " ஏன் முழு பாட்டா போடலை? " என்று இசை அமைப்பாளரிடம் செல்லமாய் கோபித்து கொண்டார். உண்மை தான் ! முழு பாட்டாய் வந்திருந்தால் இன்னும் அதிக இம்பாக்ட் தந்திருக்க கூடும் !

நல்ல வரிகள். அருமையான மெலடி. ஆனால் சில வரிகளில் - ஒரே நிமிடத்துக்குள் முடிந்து விடுகிறது பாட்டு !

சிவ தாண்டவம்

பாடியவர்: எஸ். பி பாலசுப்ரமணியம் 

உடுக்கை எல்லாம் அடித்து செம ஸ்பீடா போகுது பாட்டு. ஆனா ஒப்புவிக்கிற மாதிரி இருக்கே ஒழிய எந்த விதத்திலும் ஈர்க்க வில்லை. அந்த பாட்டை பற்றி எழுதும் போது சில முறையாவது கேட்கணும் என்கிற ஒரே காரணத்துக்காக மட்டும் கஷ்டப்பட்டு கேட்டேன். படத்தில் ஒரு வேளை முக்கிய கட்டத்தில் மாண்டேஜ் பாட்டாக வர கூடும். ஆனால் தனியாய் ஒரு முறை கூட கேட்க முடியலை. வெரி சாரி !

உயிரின் உயிரே

பாடியவர்: சைந்தவி , சத்ய பிரகாஷ் 

கஜலுடன் துவங்குகிறது பாட்டு. சைந்தவி குரல் உருகி உருகி குழைகிறது. எடுத்தவுடன் அதிகம் கவராத இந்த பாட்டு, 3, 4 முறை கேட்க கேட்க ரொம்ப பிடித்து விட்டது. அருமையான மெலடி. படத்திலும் இந்த பாட்டுக்கு தலைவியே நடித்துள்ளார் !  !

யாரடி நீ மோகினி போலவே

பாடியவர்கள்: ராகுல் நம்பியார், மேகா

மேற்கத்திய பாணியில் (Western) ஒரு ஸ்பீடான பாட்டு. பாடல் வரிகள் ஓரளவு ஈர்க்கிறது. எமி ஜாக்சனை வைத்து எடுக்கப்பட்ட இந்த பாடல் அவ்வப்போது டிவியில் காண்பிக்கிறார்கள். அதில் பார்த்த பின் தான் பாட்டு ஓரளவு பிடித்தது. தனியாய் கேட்க ஜஸ்ட் ஆவேரேஜ் சாங்.

ஒரு பாதி கதவு நீயடி

பாடியவர்கள்: ஹரிசரண், வந்தனா

மிக தாமதமாக தான் (நண்பர்கள் சுட்டி காட்டிய பிறகு) இந்த பாட்டு கேட்டேன். முதல் முறை கேட்கும் போதே கவர கூடிய அருமையான மெலடி. ஹரிசரண் இப்போது கலக்கி கொண்டிருக்கிறார். கும்கியிலும் ஒரு அட்டகாசமான பாட்டு பாடியிருக்கிறார்.

தாண்டவத்தின் ஹிட் பாடல்களில் "ஒரு பாதி கதவு நீயடி" யும் ஒன்று

**************
5 பாட்டும் ஒரு குட்டி பாட்டும் மட்டுமே இருக்கிறது. படம் ஒரு ஆக்ஷன் படம் என்று நினைக்கிறேன். அந்த விதத்தில் நிறைய பாடல்கள் படத்துக்கு ஒரு முட்டு கட்டையாய் இருக்கலாம் என்பதால் இந்த ஏற்பாடு போலும் !

பைனல் ரிசல்ட்: உயிரின் உயிரே  & ஒரு பாதி கதவு நீயடி
: வெரிகுட். யாரடி நீ மோகினி போலவே & அதிகாலை பூக்கள்: கேட்க கேட்க -ஓகே !

24 comments:

  1. அசதிட்டிங்க

    ReplyDelete
  2. Anonymous10:20:00 AM

    This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Anonymous10:24:00 AM

    //ஜீ. வி. பிரகாஷ் பொறுத்த வரை நிச்சயம் ஒரு அட்டகாசமான இசை அமைப்பாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை//

    தெய்வத்திருமகள் படத்தில் வரும் 'ப ப பா பா' பாடலை வெளிநாட்டு பாடலில் இருந்து அப்படியே சுட்ட அறிவுஜீவிதான் நீங்கள் 'அட்டகாசம்' என்று புகழும் இசையமைப்பாளர் ஜீ .வி. டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில் 'திருடியது தவறுதான்' என்று ஒப்புக்கொண்டார் தம்பி. அதுவும் முதலில் பூசி மொழுகியவர் ஆதாரத்தை முன் வைத்த பிறகே ஒப்புக்கொண்டார். இந்த காணொளியைப்பார்க்க:

    http://www.youtube.com/watch?v=B8UF-2_nlzg

    'யார்தான் திருடலை' என்று சொல்லலாம். ஆனால் அட்டகாசமான இசையமைப்பாளர் பட்டம் ரொம்ப ஓவர் என்பது எனது தனிப்பட்ட கருத்து!!

    ReplyDelete
  4. Sir, you have missed the oru pathi kanavu neeyadi song in the track list....Muthu

    ReplyDelete
  5. நல்லது நடந்தால் சரிதான்.........உங்கள் பகிர்வுக்கு நன்றி........

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  6. ம்ம்ம்ம்ம்,, நல்ல எழுத்தாதிக்கம் நிறைந்த பதிவு,,,

    ReplyDelete
  7. இன்னைக்கு கேட்டுற வேண்டியது தான் அண்ணே

    ReplyDelete
  8. - அனுஷ்கா கொஞ்சம் இளைத்த மாதிரி இல்லை?! ப்ளஸ் இந்த போஸில் பழைய நக்மா மாதிரி இருக்கு பார்க்க!

    - யார் பாடினது என்ற விவரங்களும் தந்திருக்கலாமோ? சைந்தவி என்று ஒரு பாட்டுக்கு மட்டும் தந்திருக்கிறீர்கள்.

    - படத்தில் விக்ரம் கண் தெரியாதவராக நடிக்கிறாராம்! (ஏதோ எனக்குத் தெரிந்த தகவல் ஒன்று!)

    ReplyDelete
  9. தமிழ்மணம், தமிழ் 10 லயாவது வோட்டுப் போட்டு விட முடிகிறது! இந்த இன்ட்லில எப்படி போடணும் என்றே தெரிய மாட்டேங்குது! முன்னாடி எல்லாம் ஈசியாத்தான் இருந்தது! எனக்குத்தான் தெரியலை போல!

    :))

    ReplyDelete
  10. இதுவரை தாண்டவம் பாடலை கேட்கலை. கேட்டு பார்க்குறேன்.

    ReplyDelete
  11. ஒரு பாதி கதவு பாடலும் உள்ளது சார் .உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறன்.WILL U BE THERE என்ற பாடல் ஆங்கிலத்தில் தொடங்கி தமிழுக்கு மாறி கேட்கும்படி உள்ளது .

    ReplyDelete
  12. அனிச்சம் பூவழகி பாட்டு நல்லா தானா இருக்கு

    ReplyDelete
  13. நன்றி மோகன்

    ReplyDelete

  14. சிவா: நீங்கள் சொல்வது உண்மையே. தெய்வ திருமகளில் GV Prakash காப்பி அடிச்சிட்டார்

    ReplyDelete
  15. குமார் பொன்னையா : நன்றி அந்த பாட்டு பற்றிய குறிப்பு இப்போது சேர்த்துட்டேன்

    ReplyDelete

  16. தொழிற் களம்: நன்றி நண்பரே

    ReplyDelete
  17. அரசன்: நன்றி நண்பா

    ReplyDelete
  18. ஸ்ரீராம்: நன்றி. பாடியவர்கள் பெயர் இப்போது சேர்த்துட்டேன். இனி நினைவில் வச்சிக்கிறேன்

    இன்ட்லி ஓட்டு: எனக்கும் குழப்பமே :)

    ReplyDelete
  19. ஸ்ரீராம்: நன்றி. பாடியவர்கள் பெயர் இப்போது சேர்த்துட்டேன். இனி நினைவில் வச்சிக்கிறேன்

    இன்ட்லி ஓட்டு: எனக்கும் குழப்பமே :)

    ReplyDelete

  20. சீன் கிரியேட்டர்: நன்றி நண்பா, அந்த பாட்டும் இப்போது சேர்த்துட்டேன்

    ReplyDelete

  21. பிரேம் குமார்: கருத்துக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  22. இன்னும் பாடல்களை கேட்கவில்லை...

    கரண்ட் இருந்தால் தானே...!?

    ReplyDelete
  23. Thala, me toooo...

    "தானை தலைவி அனுஷ்காவை " அனிச்சம் பூவழகி" என்று வர்ணித்து பாடும் பாட்டு என்பதால், டிரைலர் பார்த்து பாட்டை கேட்க ரொம்ப ஆர்வமாய் இருந்தேன்."

    ReplyDelete
  24. படம் பார்த்துவிட்டு கேட்கிறேன் சார்.. படம் மொக்கை என்றால் பாட்டை மட்டும் கேட்க வேண்டியது தான்...
    நீ தானே என் போன் வசந்தம் தான் சமீப காலமாக ஓடிக் கொண்டுள்ளது

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...