Wednesday, September 5, 2012

வானவில்: லியோனி- சச்சின் -சுனைனா ....!

25 கமன்ட்டுகளையும், 15 தமிழ்மண ஓட்டுகளையும் ஒவ்வொரு பதிவுக்கும் வாரி வழங்கி கொண்டிருக்கும் வாசக பெருமக்களுக்கு நன்றி ! நன்றி ! நன்றி! ( நாமென்ன கேபிளா ... பத்து லட்சம் ஹிட்ஸ்க்கு நன்றி சொல்ல. நமக்கு கிடைப்பதைத் தானே நாம சொல்ல முடியும் !)
*******
திவர் மாநாடு பற்றி 15 நாளா எழுதி எழுதி ஓய்ந்து போய் மத்த விஷயம் இப்போ தான் எழுத ஆரம்பிக்கிறேன். நம்ம ஹவுஸ் பாசே "என்ன இதுவே எழுதுறீங்க வேற எழுத ஆரம்பிங்க" என திட்டும் அளவு எழுதியாச்சு.  படங்கள் போட ஆரம்பித்ததும், அப்புறம் எல்லா படமும் இங்கே போட முடிவு செய்ததும் தான் இவ்ளோ பெரிய நீளத்துக்கு காரணம் ! போன வாரம் வானவில் கூட எழுதலைன்னா பாத்துக்குங்களேன் ! (வானவில் ஏன் வரலைன்னு ரெண்டு பேர் கண்டன மெயில் அனுப்பினாங்க. அவர்களுக்கு என் நன்றி:))

இந்த தடவை டெலிபோன் பில் வந்தா, எங்க மேடம் இன்டர்நெட்டை கழட்டி போடவும் வாய்ப்பிருக்கு ! காலை எட்டு மணி வரை மட்டுமே இலவச அப்லோட்; காலை நேரம் நான் கிச்சனை பார்ப்பேனோ. போட்டோ அப்லோட் செய்வேனா? அடுத்த தடவை பதிவர் மாநாடு வச்சா காமிராவே கொண்டு போக கூடாதோன்னு நினைக்கிறேன்.

"இப்படி  எல்லாம்  சொல்லக்கூடாது ! நீங்க அடுத்த முறையும் காமிரா கொண்டு போகணும்" என்று சொல்வோர் எனது இந்த மாத டெலிபோன் பில் கட்ட ஸ்பான்சர் செய்து உதவவும்  :))

அழகு கார்னர்



சுனைனா : வந்த முதல் படத்திலேயே பலரை வீழ்த்திட்டாங்க. கண், மூக்கு, சிரிப்பு என எல்லாமே அட்டகாசம் ! ஆனா ஏன் இன்னும் பெரிதா பாப்புலர் ஆகலைன்னு தெரியலை.

பாலஹனுமான் சென்னை விஜயம்

அமெரிக்காவில் வசிக்கும் பதிவர் பாலஹனுமான் சென்னை வந்திருந்தார்.  அவரை பார்த்தாலும் சரி, பேசினாலும் சரி அமெரிக்க வாழ் இந்தியர் என்றே சொல்ல முடியாது. சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண மனிதர் போல் அவ்வளவு எளிமை. அவர் படித்த புத்தகங்களும், தமிழகத்தில் அவருக்கு தெரிந்த எழுத்தாளர்களும் கேட்டால் கண்ணைக் கட்டுது ! அடுத்த முறை நாம் இங்கே விழா வைக்க வி. ஐ. பி எழுத்தாளர்கள் வேண்டுமானால் அமெரிக்காவில் இருக்கும் பாலஹனுமான் மூலமே யாரையும் சென்னையில் பிடிச்சுடலாம் !



மாலை வேளச்சேரியில் ஒரு ஹோட்டலில் பாலகணேஷும்  நானும் சந்தித்து உரையாடினோம். செம சாப்பாடு ! சரியான அரட்டை ! நம் ப்ளாக்கை சட்ட ஆலோசனை தவிர்த்து (அமெரிக்காவில் இருப்பதால் இந்திய சட்டங்கள் மீது அவருக்கு அதிக ஈடுபாடு இல்லை) -மற்ற அனைத்து பகுதிகளும் விடாது வாசிக்கிறார் என தெரிந்து மிக மகிழ்ச்சி. மீண்டும் ஜனவரியில் அவர் மகள் திருமணத்திற்காக சென்னை வருகிறார் ! சுஜாதாவின் புக்குகள் அதிகம் படித்தவன் என்று எனக்கு இருந்த சிறு இறுமாப்பு இவரை பார்த்ததும் நொறுங்கியது. சுஜாதா நாவல்களில் இருந்து கேள்வி எல்லாம் கேட்டு குவிஸ் வைத்து விட்டார். மூணரை மணி நேரம் பேசியும் பிரிய மனமின்றி தான் பிரிந்தோம் !

டிவி கார்னர் - கே. பி பேட்டி

ஜெயா டிவியில் தினம் இரவு 10 மணி முதல் பத்தரை வரை "திரும்பி பார்க்கிறேன்" என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. சினிமா உலகில் இருந்த பழைய நடிகர்/ நடிகை/ இயக்குனர் பேசும் நிகழ்ச்சி. இதில் செப்டம்பர் 3 முதல் கே. பாலச்சந்தரின் பேட்டி தொடர்ந்து இடம்பெறுகிறது. நூறு படங்களுக்கு மேல் இயக்கியவர் என்பதால் 35 எபிசோடுக்கு இந்த பேட்டி போகும் என அண்ணன் உண்மை தமிழன் தெரிவிக்கிறார்.

கமல், ரஜினி தொடங்கி பலர் பற்றி இதில் சுவாரஸ்யமாய் பேச வாய்ப்பிருக்கிறது முடிந்தால் பாருங்கள் !

அய்யாசாமி கார்னர்

கல்யாண நாள் அன்று ஆபிசில் ஓணம் கொண்டாடியதால் இந்த கோலத்தில் அய்யாசாமி ...
சட்டை என்னவோ புதுசு. கல்யாண வேஷ்டி ..16 வருஷ பழசு !

ஆபிசில் பிறந்த நாள் கொண்டாடுறது ரைட்டு தான். அதுக்குன்னு குடிக்கிற பாட்டில் &பேசுற போனை கூடவா விட்டு வைக்க கூடாது? பாசக்கார பய புள்ளைக பண்ற வேலை !

கவிதை கார்னர்

உன் மனசு எப்படி
அப்படியே உன் வாழ்க்கை
உன் உழைப்பு எங்கனம்
அது கொண்டே உன் வெற்றி
உன் பேச்சு எவ்வாறு
அவ்வாறே உன் கௌரவம்
உன் சிந்தனை எவ்விதம்
அவ்விதமே உன் பயணம் !

(தன் 21 வயதில் இந்த கவிதை எழுதியது அய்யாசாமியே தான். கவிதையோ இல்லையோ கருத்து இன்னிக்கும் பொருந்துது !)

லியோனி பட்டிமன்றம்- இனியவன் காமெடி

லியோனி பட்டிமன்றத்தில் கலக்கும் இனியவனின் சில அருமையான காமெடிகள் இதோ உங்களுக்காக. அண்டங் காக்காய் கொண்டைகாரி பாட்டுக்கும், ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன் பாட்டுக்கும் இவர் கொடுக்கும் விளக்கம் அப்பப்பா .. ஜூப்பரு !



கிரிக்கெட் கார்னர்

இந்தியா Vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி தொடரை எதிர்பார்த்த மாதிரியே இந்தியா வென்றது. சமீப காலமாய் சச்சின் தொடர்ந்து பவுல்ட் ஆகி வருகிறார். வயதானதால் கால்கள் சரியாக நகரவில்லை என்றும் புல் லெங்க்த் பந்துகள் ஆடமுடியாமல் பவுல்ட் ஆவதாகவும் சொல்கிறார் கவாஸ்கர். " விரல்கள் நன்றாயிருக்கையில் வீணையை விற்று விடு" என ஒரு கவிதை இருக்கு. அதை போல சச்சின் ஓரளவு நல்லா ஆடும்போதே ரிட்டையர் ஆகி இளையவர்களுக்கு வழி விடலாம் என்பது பலரின் கருத்து !!

அஷ்வின் இந்திய பிட்சில் நிறைய விக்கெட் எடுத்தாலும் சூப்பர் பவுலர் என சொல்லிட முடியாது. வெளி நாட்டு பிட்சில் டிபன்சிவ் பவுலர் ஆக தான் இருக்க முடியும்.

இப்போதைக்கு இந்திய அணியின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தான் ! நீ ஆடுறா ராசா !

ஆசிரியர் தின வாழ்த்துகள் 
ஆசிரியர் தினமான இன்று பள்ளி, கல்லூரிகளில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் நமக்கு வழிகாட்டியாய் இருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றியையும் வணக்கத்தையும் உரித்தாக்குவோம் !

59 comments:

  1. வித்யாசம் இருக்கு மோகன். வெளிநாட்டு பிட்ச்கள் சுழலாது. ஆனானப்பட்ட முரளிதரனே, ஆஸ்திரேலிய பிட்ச்களில் அதிகம் சாதித்ததில்லை.

    ஒப்பீட்டு அளவில் மூன்று முறை சென்று ஹர்பஜன் சாதித்ததை விட ஒரு முறையில் அஷ்வின் ஆஸ்திரேலியாவில் அதிகம் சாதித்துள்ளார்...

    அய்யாசாமிக்கு சுத்தி போட சொல்லுங்க

    ReplyDelete
  2. அய்யாசாமி ஃபோட்டோ... அட அன்னிக்கு ஃபோன்ல பேசும்போது கேட்டது இன்னிக்கு வெளி வந்துடுச்சு! :)


    லியோனி.... :)

    சுனைனா... - ம்ம்ம்.. நடக்கட்டும்.... நடக்கட்டும்....

    ReplyDelete
  3. // நம்ம ஹவுஸ் பாசே "என்ன இதுவே எழுதுறீங்க வேற எழுத ஆரம்பிங்க" என திட்டும் அளவு எழுதியாச்சு//

    நல்ல வேளை, அவங்க சொன்னங்க...இல்லன்னா இன்னும் ஒரு வாரம் எழுதியிருப்பீங்க போல :)

    // பதிவர் பாலஹனுமான்//

    இவருடைய தளம் சுஜாதா பெட்டகம் என்றே சொல்லலாம்!

    //மாலை வேளச்சேரியில் ஒரு ஹோட்டலில் //

    என்ன ஹோட்டல்? எப்படி இருந்தது சொல்லுங்க? :))

    அடுத்து ஆஸ்ட்ரேலியா, இங்க்லேன்ட் தொடருக்கு பின் சச்சின் ஓய்வு பெற்றுவிடுவார் என்று நினைக்கிறேன்...பார்ப்போம்!

    ReplyDelete
  4. பதிவர் பாலஹனுமான் - தகவல்களின் பொக்கிஷம்...

    இனியவன் அவர்கள் - அட... நம்ம ஊர் பக்கம்...

    மெழுகுவர்த்தி போல் வாழ்ந்த / வாழும் பல பேருக்கு... எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. பத்து லட்சம் இல்லை..55 லட்சம். ரெக்கார்ட்டு.. முக்கியம்.:)

    ReplyDelete


  6. வானவில்லா ,என்னென்று இன்றுதான் கண்டேன்! துண்டுச் செய்திகள! நன்று!

    ReplyDelete
  7. வேஷ்டி சட்டையில் கலக்கல் பாஸ் நீங்க

    ReplyDelete
  8. ஒய் சுனைனாவா?..

    // கல்யாண நாள் அன்று ஆபிசில் ஓணம் கொண்டாடியதால் இந்த கோலத்தில் அய்யாசாமி ...
    சட்டை என்னவோ புதுசு. கல்யாண வேஷ்டி ..16 வருஷ பழசு ! //

    கல்யாண வாழ்க்கையில என்னைவிட 8 வயசு சீனியர், வீட்டம்மாகிட்ட அடிவாங்காம தப்பிக்கிறது எப்படினு, உங்க கிட்ட கேட்டுக்கலாம் போல.

    / (தன் 21 வயதில் இந்த கவிதை எழுதியது அய்யாசாமியே தான். கவிதையோ இல்லையோ கருத்து இன்னிக்கும் பொருந்துது ! //

    21 வயசுலேயே ஒங்க எலக்கிய சேவைய ஆரம்பிசீங்களாண்ணே!!!! :)

    அப்புறம் உங்க வானவிலில்’லுல விப்ஜியாரோட வெள்ளையும் சேர்த்து எட்டு கலர் தெரியுது.

    நல்லாருக்குண்ணே.

    ReplyDelete
  9. Cable சங்கர் said...
    பத்து லட்சம் இல்லை..55 லட்சம். ரெக்கார்ட்டு.. முக்கியம்.:)

    ***
    யோவ் கேபிளு, இங்கன தான் ஒளிஞ்சு நின்னு நடக்கிற எல்லாத்தையும் வேடிக்கை பாக்குறீரா? உம்மை பத்தி தப்பான நம்பர் குடுத்தோன ஓடி வந்தீர் பாருங்க. இது தான்யா பொறி வச்சு பிடிக்கிறது :)

    ReplyDelete
  10. பட்டிகாட்டான் Jey said...

    //21 வயசுலேயே ஒங்க எலக்கிய சேவைய ஆரம்பிசீங்களாண்ணே!!!! :)//


    அதெல்லாம் பன்னெண்டு பதிமூணு வயசில் லவ் பண்ண ஆரம்பிக்கும் போதே ஆரம்பிச்சாச்சு :)

    //அப்புறம் உங்க வானவிலில்’லுல விப்ஜியாரோட வெள்ளையும் சேர்த்து எட்டு கலர் தெரியுது.//

    யாராவது கண்டு பிடிக்கிராங்களான்னு பார்த்தா நீங்க சொல்லிட்டீங்க. அப்பப்போ ஆறு மேட்டரோட கூட நைசா ஓடிடுறது உண்டு :)

    ReplyDelete
  11. ர‌கு said...

    நல்ல வேளை, அவங்க சொன்னங்க...இல்லன்னா இன்னும் ஒரு வாரம் எழுதியிருப்பீங்க போல :)

    ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க போல ர‌கு :))

    //மாலை வேளச்சேரியில் ஒரு ஹோட்டலில் //என்ன ஹோட்டல்? எப்படி இருந்தது சொல்லுங்க? :))

    நாம போன அதே ஹோட்டல் Flamingo ! இந்த ஹோட்டல் பேரு மறந்து மறந்து போயிடுது. அதான் பதிவில் எழுதலை. பால ஹனுமான் உங்களை ரொம்ப விசாரிச்சார் ர‌கு. மாலை நேரம் என்பதால் உங்களை கூப்பிட முடியலை என்றும், மதியம் என்றால் உங்களை அழைத்திருக்கலாம் என்றும் சொன்னேன்

    ReplyDelete
  12. வானவில்லில் சுனைனா அழகு... மற்ற எல்லாம் அருமை...
    பிறந்த நாள் கொண்டாட்டம் அந்த ஆபிஸ் பாசகார புள்ளைங்கள தேடிட்டு இருக்கேன்.... ஹா ஹா ஹா

    ReplyDelete
  13. நீங்க இயக்குனர் மணிரத்ணத்தோட விசிறியா இருக்கலாம். அதுக்காக, எடுக்குற எல்லா படத்தையும் இப்படியா இருட்டுல எடுப்பீங்க?

    ReplyDelete
  14. நம்ம ஹவுஸ் பாசே "என்ன இதுவே எழுதுறீங்க வேற எழுத ஆரம்பிங்க" என திட்டும் அளவு எழுதியாச்சு
    >>>
    எடுத்த போட்டோலாம் போட்டு பதிவை தேத்தியாச்சு. அடுத்து பதிவு போட படங்கள் இல்லைன்னு உண்மைய சொல்லிட்டு போங்களேன், நாங்கலாம் ஒண்ணும் சொல்ல மாட்டோம். அண்ணி மேல ஏன் பழியை போடுறீங்க சகோ.

    ReplyDelete
  15. அட... அய்யாசாமி கவிதை கூட எழுதியிருக்காரே... பலே... பலே... அதுசரி... எல்.கே. அய்யாசாமிக்கு ‘சுத்தி‘ போடச் சொல்றாரே... எவ்வளவு பெரிய சுத்திய அய்யாசாமி தாங்குவாருன்னு சொல்லிட்டா. அவ்வளவு பெரிய சுத்திய கொண்டு வந்து போட்ரலாம், ஹி.,.. ஹி...

    ReplyDelete
  16. ராஜி said...

    நீங்க இயக்குனர் மணிரத்ணத்தோட விசிறியா இருக்கலாம். அதுக்காக, எடுக்குற எல்லா படத்தையும் இப்படியா இருட்டுல எடுப்பீங்க?

    **
    நம்ம வீட்டுலேயே நான்தான் அழகு. அந்த பொறாமையில் இந்த புள்ளை பேசுது. ரைட்டு !

    ReplyDelete
  17. சுனைனா வாழ்க.....ச்சே சுனைனா படம் போட்ட அண்ணன் வாழ்க......! எப்படியாவது சுனைனாவ மேல கொண்டு வர முயற்சி பண்ணுங்கண்ணே....!

    ReplyDelete
  18. ராம்சாமி அண்ணே: சுனைனாவுக்கு இங்கேயே எவ்ளோ போட்டி பாருங்க.

    அந்த பொண்ணுக்கு நடிக்க தெரியலை அண்ணே. அதான் பிரச்சனை. இல்லாட்டி பெரிய ஆளாகியிருக்கும்

    ReplyDelete
  19. /////மோகன் குமார் said...
    ராம்சாமி அண்ணே: சுனைனாவுக்கு இங்கேயே எவ்ளோ போட்டி பாருங்க.

    அந்த பொண்ணுக்கு நடிக்க தெரியலை அண்ணே. அதான் பிரச்சனை. இல்லாட்டி பெரிய ஆளாகியிருக்கும்//////

    என்னது நடிக்கத் தெரியலையா...? நல்லதா போச்சு....... சீக்கிரமே மேல வந்துடும்....!

    ReplyDelete
  20. ஆசிரியர் தின வாழ்த்துகள்

    ReplyDelete
  21. வானவில் அருமை..

    ஒரு பக்கம் கல்யாண நாள் கொண்டாட்டம்; மறுபக்கம் சுனைனா!! ம்ம்ம்... நடக்கட்டம்.

    அஷ்வின் முதல் ஆஸ்த்ரேலிய பயணம் என்பதால் அனுபவக் குறைவும் ஒரு காரணம். மேலும், அவர் ஆஃப் ஸ்பின்னர், அதை (stock delivery என்று கூறுவார்கள்) அதை அதிகம் போடாமல் அவருடைய surprise delivery-யாக இருக்க வேண்டிய கேரம் பந்தை அதிகமாக வீசியதும் (ஆர்வக் கோளாறு அல்லது ஒருநாள்/20-20 போட்டிகளில் இந்த பந்தின் வெற்றிவிகிதம் காரணமாக) அங்கு சிறப்பாகச் செயல் படாமல் இருந்த காரணம் என்பது என் எண்ணம். இப்பொழுது, சற்று ஃப்லைட் செய்கிறார். கும்ளே போலவே accurate என்பது அஷ்வினின் பலம். கும்ளேவை விட variety இருப்பது கூடுதல் சிறப்பு. நன்றாக வருவார் என்று தான் தோன்றுகிறது. ஹர்பஜன் மீண்டும் வருவார் என்ற செய்தி அவரின் போட்டி மனப்பான்மையை மேலும் தூண்டும்!!

    //என்ன ஹோட்டல்? எப்படி இருந்தது சொல்லுங்க? :))//
    ரகு.. அது வேறு தனி பதிவு!!! (சாப்பிட்ட ஹோட்டல்கள் பற்றி தனியாக எழுதுகிறாரே)

    ReplyDelete
  22. // அய்யாசாமி கார்னர் //

    No.. I could see table (kept) @ the Corner

    ReplyDelete
  23. வேஷ்டி சட்டையில் கலக்கலா தான் இருக்கீங்க மோகன் சார்

    ReplyDelete
  24. //ஆபிசில் பிறந்த நாள் கொண்டாடுறது ரைட்டு தான். அதுக்குன்னு குடிக்கிற பாட்டில் &பேசுற போனை கூடவா விட்டு வைக்க கூடாது? //

    அதானே..

    ஆனாலும் பாசக்காரப் புள்ளைகளா இருக்காங்க.

    ReplyDelete
  25. வானவில் வழமை தான் ஆனால் செய்திகள் புதுமை ..அண்ணே ..
    நானும் யாரா இருக்கும் அந்த அய்யா சாமி என்று குழம்பி போயிட்டேன்
    அப்புறம் தான் பட்டு வெட்டி சட்டையில் பாந்தமாய் இருக்கும் நீங்க தான் என்று ..

    அப்புறம் தான் விளங்கிற்று முன்னர் உங்கள் வானவில்லில் படித்த நினைவு ..
    வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  26. // பாலஹனுமான் சென்னை வந்திருந்தார். அவரை பார்த்தாலும் சரி, பேசினாலும் சரி அமெரிக்க வாழ் இந்தியர் என்றே சொல்ல முடியாது. சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண மனிதர் போல் அவ்வளவு எளிமை. //

    மோகன், அமெரிக்கா வந்ததும் எங்களுக்கு கொம்பா முளைக்குது? நாங்களும் உங்களை மாதிரிதாங்க இருப்போம் - பீட்டர் விடும் பார்ட்டிகள் ரொம்ப குறைவு. பெரும்பான்மையான சென்னை வாழ் தமிழர்களை விட நாங்க (தமிழர்களுடன்) பேசும் போது இருக்கும் ஆங்கிலக் கலப்பு கம்மியாவே இருக்கும்

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  27. வானவில் அருமை மோகன் குமார். நிறைய தகவல்கள்.

    ReplyDelete
  28. வண்ணமயமான வானவில்! ரசித்தேன்!

    இன்று என் தளத்தில்
    பழஞ்சோறு! அழகான கிழவி!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html

    ReplyDelete
  29. \\சுனைனா \\ நான் செத்தேன்...........

    ReplyDelete

  30. \\பாலஹனுமான் \\ ரெண்டு பேத்துல அவரு யாரு சார்?

    ReplyDelete
  31. செய்திகள் புதுமை..சார்..

    ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  32. அழகு கார்னரில் ரோஜா அழகாக இருக்கிறது.
    பால்ஹனுமான் கி ஜே!
    பாலச்சந்தர் பேட்டி பார்க்க எனக்கும் ஆசைதான். டைம்தான் ஒத்து வரலை!
    ஓணம் கெட் அப் ஜோர்!
    கவிதை ஓகே.
    பாவம் சச்சின். புஜாரா நிற்பாரா என்று பார்க்க வேண்டும்!
    ஆசிரியர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  33. கலர்ஃபுல் வானவில்..

    ReplyDelete
  34. எல்லாத்தையும் போட்டு ஒரு கலக்கு..

    ReplyDelete
  35. நித்ய அஜால் குஜாலானந்தா said...

    \\பாலஹனுமான் \\ ரெண்டு பேத்துல அவரு யாரு சார்?
    *******
    கை நீட்டி பேசுபவர் பாலகணேஷ். கடைசியாய் உள்ளவர் பாலஹனுமான்

    ReplyDelete
  36. வானவில் - கதம்ப செய்திகள் நன்றாக இருந்தது!

    ***

    அஸ்வின் தொடர்ந்து நன்றாக பிரகாசிப்பார் என நினைக்கிறேன்.. வெளிநாட்டு ஆடுகளங்களில் அவர் எப்படி உருமாறிக் கொள்கிறார் என்பதைப் பொறுத்தே அவரது வெற்றியின் வீச்சு நிர்ணயிக்கப் படும்! பார்ப்போம்!!

    ReplyDelete

  37. எல் கே said...

    ஒப்பீட்டு அளவில் மூன்று முறை சென்று ஹர்பஜன் சாதித்ததை விட ஒரு முறையில் அஷ்வின் ஆஸ்திரேலியாவில் அதிகம் சாதித்துள்ளார்...

    **
    கிரிக்கெட் விமர்சகர் நீங்க புள்ளி விவரத்தோட தான் சொல்லுவீங்க

    ***
    //அய்யாசாமிக்கு சுத்தி போட சொல்லுங்க//
    இது வேறயா? ரைட்டு !

    ReplyDelete
  38. வெங்கட் நாகராஜ் said...
    சுனைனா... - ம்ம்ம்.. நடக்கட்டும்.... நடக்கட்டும்

    நானும் பாத்து கிட்டு தான் வர்றேன். அழகு கார்னரை ரொம்ப ரசிக்கிறீர் நீர்

    ReplyDelete
  39. நன்றி தனபாலன் சார்

    ReplyDelete
  40. மிக்க நன்றி ராமானுசம் ஐயா

    ReplyDelete

  41. நன்றி பிரேம் குமார் மகிழ்ச்சி

    ReplyDelete
  42. சீனு said...
    வானவில்லில் சுனைனா அழகு
    ********
    தம்பி யூ ஆர் எ ஸ்மால் பாய். திஸ் இஸ் அண்ணன் டிப்பார்ட் மென்ட்.

    ReplyDelete
  43. ராஜி said...

    எடுத்த போட்டோலாம் போட்டு பதிவை தேத்தியாச்சு. அடுத்து பதிவு போட படங்கள் இல்லைன்னு உண்மைய சொல்லிட்டு போங்களேன், நாங்கலாம் ஒண்ணும் சொல்ல மாட்டோம். அண்ணி மேல ஏன் பழியை போடுறீங்க சகோ.
    ****
    எல்லா நாத்தனாரும் அண்ணிக்கே சப்போர்ட்டு ! என்ன உலகமடா இது !

    ReplyDelete
  44. பாலகணேஷ்: நோ நோ அய்யாசாமி பாவம்

    ReplyDelete

  45. இராஜராஜேஸ்வரி : நன்றிங்க

    ReplyDelete

  46. சீனி: விரிவான அலசலுக்கு நன்றி

    ReplyDelete
  47. மாதவா : டேய் !

    ReplyDelete

  48. நன்றி சரவணன் சார்

    ReplyDelete
  49. ஆமாங்க இந்திரா

    ReplyDelete
  50. அரசன்: அய்யாசாமியை தெரியாதா? அப்ப போட்டோ போட்டிருக்க கூடாது போல. அப்படியே மெயின் டையின் பண்ணிருக்கணும்

    ReplyDelete

  51. ஸ்ரீராம். உண்மை தான் சிலர் ஆங்கில வார்த்தை உபயோகிப்பதே வேறு விதமாய் இருக்கும். இன்னும் சில வித்யாசமாவது இருக்கும். அது எதுவும் இவரிடம் இல்லை. அதான் சொன்னேன்.
    தவறாய் எண்ண வேண்டாம்

    ReplyDelete

  52. நன்றி அமராபாரதி மகிழ்ச்சி

    ReplyDelete

  53. நன்றி சுரேஷ்

    ReplyDelete

  54. நன்றி உழவன் ராஜா

    ReplyDelete
  55. சுருக்கமான ஆனால் detailed அலசலுக்கு நன்றி ஸ்ரீராம்

    ReplyDelete

  56. நன்றி அமைதி சாரல்

    ReplyDelete

  57. அப்பாதுரை: அதுக்கு தான் வானவில் வசதியா இருக்கு

    ReplyDelete

  58. நன்றி கார்த்தி மகிழ்ச்சி

    ReplyDelete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...