அரசு பள்ளிக்கு புதுசாய் வரும் ஒரு ஆசிரியர் அங்குள்ள மாணவர்களுக்கு படிப்பின் முக்கியத்துவத்தையும், ஆசிரியர்களுக்கு மாணவர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதையும் கற்று தந்து விட்டு ஒரே ஆண்டில் விடை பெறுவது தான் சாட்டை (கதை உங்களுக்கு தெரியும் என்றாலும் ஒரு வரியிலாவது சொல்லணும் இல்லை?)
பழிவாங்கும் படலம், காதல் கதை, தாதாயிச ஹீரோ போன்ற வழக்கமான விஷயங்களில் இருந்து ஒரு மாறுதலாக இப்படம் அமைந்ததே முதல் ஆறுதல். இத்தகைய விஷயத்தை தன் முதல் படத்தில் கருவாய் எடுத்தமைக்கு இயக்குனர் அன்பழகனுக்கு பாராட்டு !
அரசு பள்ளிகளுடன் சில விஷயங்களில் இணைந்து செயல்படுபவன் என்ற முறையிலும், நிறைய அரசு பள்ளி ஆசிரியர்களுடன் ரெகுலராக தொடர்பில் உள்ளவன் என்ற முறையிலும் படம் நிச்சயம் என்னை ஈர்த்தது
படத்தில் டைட்டில் போடும்போது வருகிற விஷயங்கள் படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு வர வைக்கிறது. பின்னணியில் ஒலிக்கும் குரல் இன்றைய அரசு பள்ளிகள் பற்றி பல சரியான விஷயங்களை சொல்லி செல்கிறது.
சில சின்ன சின்ன விஷயங்கள் பள்ளி அல்லது கல்லூரியில் நடப்பதை அப்படியே காட்டியுள்ளனர். " வழுக்க போகுது" என்று ஆசிரியரை கிண்டல் செய்வது பல இடத்திலும் நடக்கும்.
போலவே ஒவ்வொரு எழுத்து முன்பும் "க" போட்டு பேசுவது நாங்கள் சின்ன வயதில் செய்தது.. இப்போது யாரும் செய்கிறார்களா தெரிய வில்லை (சாவி என்று சொல்லணும் என்றால் கசா கவி என்று சொல்வது)
"ஒரு ஆசிரியரை பிடித்தால் அவர் நடத்தும் பாடமும் பிடித்து போகும்" என்பார்கள். ஆசிரியர் மீது நல்ல எண்ணமும், அவர் நன்கு நடத்தினால் அந்த பாடம் மீது ஈர்ப்பு வருவது வரை சரி. ஆனால் அவர் நடத்தாத மற்ற பாடங்களிலும் அவரால் எப்படி ஈடுபாடு வர வைக்க முடிகிறது என்ற கேள்வியும் எழவே செய்கிறது.
இறுதியில் ஒரே வருடத்தில் பள்ளியும் ஆசிரியர்களும் முழுவதும் மாறி விட்டதாகவும், இனி நான் மாற்ற வேண்டியது அடுத்த பள்ளியை என்பதும் செம ரீல். ஒரு வருடத்தில் ஒரு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர் அனைவரையும் மாற்றி விட முடியாது. மேலும் ஹீரோவுக்கு ஒவ்வொரு பள்ளியாய் தலை கீழாய் மாற்றுவதே வேலை என்பதெல்லாம் சினிமாவில் தான் சாத்தியம். இத்தகைய பள்ளிகளில் ஒரு சின்ன நல்ல மாற்றம் கொண்டு வந்தால் அதுவே பெரிய விஷயம். அதை தொடரவே போராடவும், நிறைய மேற்பார்வையும் தேவைப்படும் !
சில ஜோக்ஸ் ரொம்ப பழசு. உதாரணமாய் சாக்ஸ் நாறுது என்று சந்தேகம் வர, " இது பாரு புது சாக்ஸ் போட்டிருக்கேன்" என சொல்லிவிட்டு "நீ நம்ப மாட்டேன்னு பழிய சாக்ஸை பாக்கெட்டில் வச்சிருக்கேன்" என எடுத்து காட்டுவது.
திக்குவாய் பெண்ணுக்கு பயிற்சி தந்து பேச வைப்பது, தோப்புகரணத்தை வெளிநாட்டினரே செய்கிறார்கள் என்று செய்ய சொல்வது என சின்ன சின்ன ரசிக்கும் விஷயங்கள் ஏராளம்.
ஒரு காட்சியில் ஆசிரியர் மகன் வேறு பள்ளியில் படிப்பதாக காட்டுவார்கள். அதுவும் அவன் " அப்பா உனக்கு மட்டும் கவர்ன்மென்ட் ஸ்கூல். நீ ஜாலியா இருக்கலாம். நான் பிரைவேட் ஸ்கூல் போய் கஷ்டப்படணுமா?" என்று எழுப்பும் கேள்வி காமெடிக்காக இருந்தாலும் நடக்கிற ஒரு விஷயத்தை தான் இப்படி ஒரே ஷாட்டில் சொல்லி சென்றுள்ளனர்
ஆசிரியர்களிடையே நடக்கும் மீட்டிங்கில் சமுத்திரகனி, அவர் ஏன் சில விஷயங்களை செய்கிறார் என்றும் , தான் வைத்த "புகார் பெட்டி" யில் மாணவர்கள் என்னென்ன எழுதினர் என்றும் பேசுகிறார். மிக நல்ல யோசிக்க வைக்கும் வசனங்கள் உள்ள ஒரு காட்சி இது. ஆனால் மிக கோபமாக, வேகமாக அவர் பேசுவதால் அந்த வசனம் தேவையான இம்பாக்ட் தராமல் கடந்து போகிறது.
AHM ஆக வரும் தம்பி ராமையா பாத்திரம் சுவாரஸ்யமாய் வர வேண்டியது அவரது ஓவர் ஆக்டிங் மற்றும் அலம்பலால் நாசமாகிறது. அந்த பாத்திரத்தில் இருக்கும் பல குணங்கள் நிச்சயம் பல அரசு பள்ளி ஆசிரியர்களிடம் இருக்கும் தான். அதை சரியே காட்டாமல் சினிமாவுக்கென்று நிறைய எக்ஸ்ட்ரா சேர்த்து சற்று கெடுத்து விட்டனர். அதிலும் இறுதி காட்சியில் கத்தியுடன் கலக்டர் மீட்டிங் செல்வதெல்லாம் த்ரீ மச்.
கடைசியில் ஹீரோ எதற்கு தம்பி ராமையா தான் அடுத்த தலைமை ஆசிரியர் ஆகணும் என்று சொல்கிறார் என்றே புரிய வில்லை ! சிறு துளி நல்ல குணம் கூட இருக்கிற ஆளாக தம்பி ராமையா காட்டப்பட வில்லை. அவரிடம் தலைமை பொறுப்பை தந்தால் மறுபடி பள்ளி குட்டி சுவர் ஆகிடாதா?
ஹீரோ பாத்திரம் "அநியாய நல்லவர்" என்பதால் காட்சிக்கு காட்சி அவரை காட்டியிருந்தால் போர் அடித்திருக்கும். புத்திசாலித்தனமாக, ஒரு பக்கம் மாணவர்கள் வியூ பாயின்ட், அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள், இன்னொரு பக்கம் HM , AHM ஆகியோரின் பகுதி என கலந்து செல்வது படத்தை பார்க்க வைக்கிறது.
அதிகம் பாராட்டு சேர வேண்டியது இயக்குனருக்கு. சிறு சிறு குறைகள் இருந்தாலும் நிச்சயம் ஒரு டீசன்ட் படம் தந்தமைக்கு. குறிப்பாக 90% அந்த பள்ளியிலேயே படம் எடுத்தது பாராட்டுக்குரியது. அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மோசம் என்ற விதத்தில் காண்பித்திருக்க வேண்டாம். பாதி ஆசிரியர்கள் நன்கு நடத்தவும், அன்பாய் பழகவும் செய்பவர்கள் தான்.
அடுத்த பாராட்டு சமுத்ரகனிக்கு. அதிகம் பிரபலமாகாத முகம் என்பதால் ஒரு ஆசிரியராக, அந்த பாத்திரமாக எளிதில் நம் மனதில் எஸ்டாப்ளிஷ் ஆகிறார். சினிமாவில் காட்டப்படும் ஹீரோ என்பதால் பாத்திரத்தில் சற்று அதிகப்படி மிகைப்படுத்தல் இருந்தாலும் கூட சமுத்ரகனி பெரும்பாலும் அடக்கியே வாசிக்கிறார். அவர் உருவத்துக்கு நிச்சயம் சில சண்டைகள் இருக்கும் என நினைத்தால் அப்படி எதுவும் இல்லாதது ஆறுதல்
பள்ளி மாணவனாக வரும் செகன்ட் ஹீரோ சுமார். பள்ளி மாணவி ஹீரோயின் ஓரளவு அழகாக உள்ளதுடன் நடிக்கவும் செய்கிறார்.
ஜூனியர் பாலையா மிக அருமையாய் தலைமை ஆசிரியர் பாத்திரத்தை செய்துள்ளார். சின்ன சின்ன பாத்திரங்களில் பலரும் நிறைவாக நடித்துள்ளனர்
நிறைவாக :
சிற்சில குறைகளை தவிர்த்து விட்டு, இந்த சாட்டையை ஒரு முறை பார்க்கலாம் !

பார்க்கத்தூண்டும் விமர்சனம்.
ReplyDeleteதமிழகம் வந்தும் ஒரு படமும் பார்க்கவில்லை :(
நல்ல முயற்சியுடன் தமிழில் அருமையான படங்கள் வெளிவருகின்றன.மகிழ்ச்சி.பார்க்கவேண்டும்
ReplyDeleteநல்ல விமர்சனம் சார்.. பார்பதற்கு முயல்கிறேன்... இயக்குனர் முதல் பாடத்திலேயே பலரிடமும் சபாஷ் வாங்கி இருப்பது சந்தோசமான விஷயம்
ReplyDeleteதிரையரங்கில் வெளியாகியிருக்கும் படமா.... ? எனக்குப் பார்க்கும் தைரியம், பொறுமை இருக்காது!
ReplyDeleteசூப்பர் விமர்சனம் சார்.
ReplyDeleteபடம் பார்க்கும் ஆர்வம் இல்லை எனினும் விமர்சனம் பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது.
ReplyDeleteவிமர்சனத்திற்கு நன்றி படம் பார்க்க முயற்சிக்கிறேன்
ReplyDelete7C சீரியலை சுருக்கி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteநல்ல விமர்சனம்... நன்றி...
ReplyDeleteசிறப்பான விமர்சனம்.....
ReplyDeleteவிமர்சனத்தை வாசிச்சா கட்டாயம் பார்க்கணும்னு தோணுது சார் ... தாண்டவம் எஃபெக்ட் கொஞ்சம் குறையட்டும்...தமிழ்ப் படம் பார்க்கிற ஆசையே குறைஞ்சிட்டு வருது. :(
ReplyDeleteவெங்கட்: நன்றி. (உங்களுக்கு சினிமா ஆர்வம் குறைவு போல )
ReplyDelete
ReplyDeleteநன்றி உமா. பாருங்கள்
ReplyDeleteசீனு: ஆம் நன்றி
ReplyDeleteவருகைக்கு நன்றி ஸ்ரீராம்
ReplyDeleteநன்றி ராஜ்
ReplyDeleteநன்றி ராஜ்
வாங்க சசி நன்றி
ReplyDelete
ReplyDeleteசரவணன்: நன்றி நண்பா
ReplyDeleteமுரளி : வாங்க சார் நன்றி
தனபாலன் : நன்றி சார்
ReplyDelete
ReplyDeleteகோவை டு தில்லி : நன்றிங்க
ReplyDeleteஹாலிவுட் ரசிகன்: மகிழ்ச்சி நண்பா நன்றி