Sunday, September 16, 2012

என் காதல்கள் : கவிதை

முஸ்கி: 1 . இது கவிதையில்லை. வரிகளை உடைத்து போட்டு எழுதிய  எதோ ஒண்ணு. டாக்டர் மயிலன் விருப்பத்துக்கிணங்க & நம் காதல்களின் லிஸ்ட் தெரிய மட்டும் இது உதவும்... !

முஸ்கி: 2 : ஆல் காதல் 25 வயசோடு முடிஞ்சு போச்சு. அதுக்கு பின் இன்று வரை ஹவுஸ் பாஸ் மட்டும் தான் !

************
என் காதல்கள் 

ஏழாவது படிக்கையில்
முதன்முறையாய் வந்த காதல்
'முதல் காதல்' அல்ல...

முதல் காதலுக்கே உரிய
இனிய நினைவுகளும், சோகமும் இல்லை
தில் ..

முதல் ரேங்கிற்கு போட்டியிடும்
வகுப்பு தோழியை
என்னுடன் இணைத்து நண்பர்கள் பேச
வெளியே கோபித்தாலும்
சந்தோஷமாய் தான் இருந்தது -மனசுக்குள்.

எனக்கு மீசை முளைக்கும் முன்
மாற்றல் வந்தது - அவள் தந்தைக்கு
***

பதினைந்து வயதில்
காதலென்றே உணராமல் காதலித்தேன்
நான் நேசித்த பெண் என்னை நேசித்தது
அந்த ஒரு முறை தான்
***
பள்ளிப்பருவம் முடியும் தருவாயில்
வந்த காதலே
கவிதை எழுத வைத்தது

எத்தனை இரவுகள்
அவள் பெயரை மந்திரம் போல்
ஜெபித்திருப்பேன் !

நான் கல்லூரியில் படிக்கையில் நடந்தது
அவள் திருமணம்
***
நான் பார்த்து வளர்ந்த
எதிர் வீட்டு பெண்
அலை கழித்தாள் கொஞ்ச காலம்

'மாமா'விடம் பெண் கேட்கும் யோசனை
கைவிடப்பட்டது -
அதிக வயசு வித்தியாசத்தால் !
**
கல்லூரியில் மலர்ந்த அறிவு பூர்வ நட்பு
அடுத்த கட்டம் போக தூண்டிற்று

இலக்கியமும், தூரத்தில் செல்லும் புகை வண்டியும்
இருவருக்கும் பிடித்தது

பிறர் நம்பாவிடினும் என் மனமறியும்
அவள் நன்மைக்காகவே விலகினேன்
அவளை விட்டு !
***
வேலையும் பணமும் வந்த பின்
தேடியது காதலியை அல்ல
மனைவியை !

சண்டையில் துவங்கி,
உதவிகளில் கனிந்து
தினப்புன்னகைகளில் வளர்ந்த
என் காதலுக்கு
மரண அடி விழுந்தது
அவள் காதலன் பெயர் அறிந்த போது !
***
என்னை புரிந்து கொள்ள
நேசத்தை பிரதிபலிக்க
சக சிநேகிதி கிட்டாததால்
முற்று புள்ளியில்லாமல் போனது
என் காதல்களுக்கு !

நான் அதிகமாய் நேசித்த யாரும்
அதே விதமாய் என்னை நேசித்ததில்லை !
**
கூச்சங்களாலும்
தயக்கங்களாலும்
பெருமூச்சுகளிலும்
கடந்து போனது
இளமையும், எனது காதல்களும் !

*****
ஜூன் 1996-ல் எழுதிய கவிதை (??) ஹவுஸ் பாஸ் இணையம் பக்கம் வராத ஞாயிறு அன்று வெளியிடப்படுகிறது ! நாளை ஒருவேளை அவர் ப(அ) டிக்கலாம் !

65 comments:

  1. ///கல்லூரியில் மலர்ந்த அறிவு பூர்வ நட்பு
    அடுத்த கட்டம் போக தூண்டிற்று ///

    நல்லா கட்டம் கட்டி இருக்கீங்கண்ணே........!

    ReplyDelete
  2. //எத்தனை இரவுகள்
    அவள் பெயரை மந்திரம் போல்
    ஜெபித்திருப்பேன் !//

    பார்றா என்ன பேரு பாஸ்

    ReplyDelete
  3. என் (டெரர்) கவிதையா ?

    ReplyDelete
  4. நல்ல நினைவுகள்...
    எல்லோரும் ஒரு பருவத்தில் அனுபவித்திருப்பார்கள்...
    ///////////////////////
    முதல் ரேங்கிற்கு போட்டியிடும்
    வகுப்பு தோழியை
    என்னுடன் இணைத்து நண்பர்கள் பேச
    வெளியே கோபித்தாலும்
    சந்தோஷமாய் தான் இருந்தது -மனசுக்குள்.

    /////////////////

    ReplyDelete
  5. சண்டையில் துவங்கி,
    உதவிகளில் கனிந்து
    தினப்புன்னகைகளில் வளர்ந்த
    என் காதலுக்கு
    மரண அடி விழுந்தது
    அவள் காதலன் பெயர் அறிந்த போது !

    -------- true lines..... rishvan... http://www.rishvan.com

    ReplyDelete
  6. உண்மைதான்! எல்லோருக்கும் இப்படி சுகமான நினைவுகள் உண்டுதான்! அருமையான பகிர்வு!

    ReplyDelete
  7. //ஆல் காதல் 25 வயசோடு முடிஞ்சு போச்சு. அதுக்கு பின் இன்று வரை ஹவுஸ் பாஸ் மட்டும் தான் !//

    என்னாவொரு முன்னெச்சரிக்கை :))

    // ஹவுஸ் பாஸ் இணையம் பக்கம் வராத ஞாயிறு அன்று வெளியிடப்படுகிறது ! நாளை ஒருவேளை அவர் ப(அ) டிக்கலாம் !//

    "க்கலாம்" என்பது "க்கணும்" என்று மாற இறைவனை மனமார பிரார்த்திக்கிறேன் :)

    ReplyDelete
  8. // ஆல் காதல் 25 வயசோடு முடிஞ்சு போச்சு. //

    எல்லாத்தயும் 25 க்குள்லயே முடிச்சிருக்கீங்க....பெரியாளுதாணே நீங்க..

    ReplyDelete
  9. // காதலென்றே உணராமல் காதலித்தேன் //

    இங்கே பிளசில் கண்டமேனிக்கி ஓட்டுகிறார்கள் என்று தெரியாமலேயே பலி ஆடாகிப்போனேன்.

    ReplyDelete
  10. // கல்லூரியில் மலர்ந்த அறிவு பூர்வ நட்பு
    அடுத்த கட்டம் போக தூண்டிற்று //

    பதிவுலக நட்பு பத்துகம் போட தூண்டிற்று,

    ReplyDelete
  11. // பிறர் நம்பாவிடினும் என் மனமறியும்
    அவள் நன்மைக்காகவே விலகினேன்
    அவளை விட்டு ! //

    இந்த தம்பி நம்புறேன் அண்ணே. கவலை வேண்டாம்.

    ReplyDelete
  12. // நான் அதிகமாய் நேசித்த யாரும்
    அதே விதமாய் என்னை நேசித்ததில்லை ! //

    இந்த வரியை மட்டும் பாரபட்சம் இல்லாம்ஜ எல்லாரும் சொல்றாங்க அண்ணே.

    8 வயசுலேர்ந்து 80 வயசுவரைக்கும் இது எல்லாருக்கும் கச்சித பொருந்துது :-)))

    ReplyDelete
  13. // கூச்சங்களாலும்
    தயக்கங்களாலும்
    பெருமூச்சுகளிலும்
    கடந்து போனது
    இளமையும், எனது காதல்களும் ! //

    என்னண்ணே சொல்றீங்க.... அப்ப நீங்க யூத் லிஸ்ட்ல கிடையாதா?????

    ReplyDelete
  14. //இது கவிதையில்லை. வரிகளை உடைத்து போட்டு எழுதிய எதோ ஒண்ணு. டாக்டர் மயிலன் விருப்பத்துக்கிணங்க & நம் காதல்களின் லிஸ்ட் தெரிய மட்டும் இது உதவும்... ! //

    ஹஹா...
    சொல்லபோனா சமகாலத்தில் யாருமே கவிதை எழுதுறது இல்ல...
    எழுத வராத காரணத்துக்கு புதுக்கவிதை அதுக்கு முகமூடி மாட்டி விட்டுடறோம்...

    அதுவும் காதல் இயற்கையில் அழகானது... தமிழ் அழகுக்கு அழகு சேத்துடும்...
    பதிவர் திருவிழாவில் நான் வாசிச்சது வசனங்கள்தான் ஆயினும் காதல் அதனை கவிதை ஆக்கியது...
    so காதல் கவிதை எழுதுவது ஒரு safeplay :)
    தப்பித்து கொள்ளலாம்..

    உங்கள் கவிதை ரொம்ப நல்லா இருக்கு...
    புடிச்ச வரிகள்...

    // நான் பார்த்து வளர்ந்த
    எதிர் வீட்டு பெண்
    அலை கழித்தாள் கொஞ்ச காலம் //

    //இலக்கியமும், தூரத்தில் செல்லும் புகை வண்டியும்
    இருவருக்கும் பிடித்தது //

    //கூச்சங்களாலும்
    தயக்கங்களாலும்
    பெருமூச்சுகளிலும் //

    ReplyDelete
  15. //ஜூன் 1996-ல் எழுதிய கவிதை (??) ஹவுஸ் பாஸ் இணையம் பக்கம் வராத ஞாயிறு அன்று வெளியிடப்படுகிறது ! நாளை ஒருவேளை அவர் ப(அ) டிக்கலாம் !//

    கவிதையை விட இந்தக் கடைசி வரிக்கவிதை பிடித்தது! :)) என்னா ஒரு கொலவெறி இவனுக்கு என்று திட்டாதீங்க மோகன்... :)) ஜஸ்ட் ஃபார் ஃபன்!

    ReplyDelete
  16. நல்ல முயற்சி. நன்றாயிருந்தன.

    ReplyDelete
  17. நல்லாயிருக்கு தோழரே..எனக்கு ரொம்ப பிடிச்சது..தொடர்ந்து கவிதை எழுதுங்க..

    ReplyDelete
  18. என்னுடன் இணைத்து நண்பர்கள் பேச
    வெளியே கோபித்தாலும்
    சந்தோஷமாய் தான் இருந்தது -மனசுக்குள்.


    அப்படிப்பட்ட பாக்கியமும் எனக்கு கிட்டவில்லை.ஒவ்வொரு வரியிலும் உங்களின் ஏக்கம் அழகாக பதிவாகியிருக்கிறது.

    சொல்லபோனா சமகாலத்தில் யாருமே கவிதை எழுதுறது இல்ல...
    எழுத வராத காரணத்துக்கு புதுக்கவிதை அதுக்கு முகமூடி மாட்டி விட்டுடறோம்...

    @ மயிலன் சொல்வதில் பாதியை ஏற்றுக் கொள்ள முடிகிறது
    நல்ல மரபுக் கவிதையை எழுதும் பலரை நான் சந்தித்துக் கொண்டுத் தானிருக்கிறேன்.
    எனவே யாருமில்லை என்பதைக் காட்டிலும் சிலரே இருக்கிறார்கள் என்று சொல்வது பொருந்தும்

    நீங்கள் வாசித்ததை வசனம் என்று சொல்வதைக் காட்டிலும் வசனக் கவிதை என்று சொல்லலாம்.
    ஏனெனில் இதற்கு முன்னோடி மகாகவி பாரதியார்.


    ReplyDelete
  19. ஏழாங்க்ளாஸ்லேயே லவ்வா.வாழ்க.

    ReplyDelete
  20. ஜெய்: ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க. பரவால்லை. நாலஞ்சு கமன்ட் உங்களிடமிருந்து வந்ததே என மகிழ்கிறேன் :)

    ReplyDelete
  21. ரகு: உங்களுக்கும் சீக்கிரம் கல்யாணம் ஆகும் ஓய் ! அனுஷ்காவை கூட ரசிக்க விட மாட்டாங்க பாத்துக்குங்க !

    ReplyDelete
  22. அருமையான கவிதை மோகன் குமார்

    ReplyDelete
  23. நன்றாக இருக்கிறது கவிதைகள்.

    ReplyDelete
  24. சில கவிதைகளை படிக்கச் ஆரம்பிக்கும் பொழுதே முடிவெடுத்து விடுவேன், மேற்கொண்டு படிக்கலாமா இல்லை அதோடு முடித்துக் கொள்ளலாமா என்று... பல வரிகள் அருமையாய் உள்ளது .. குறிப்பாக ஜெய் குறிப்பிட்ட வரிகள் அனைத்தும்...

    உங்களுக்கு காதல் ரொம்ப கம்மின்னு நினைக்கிறன் பிகாஸ் கவிதை ரொம்ப சின்னதா இருக்கு

    அப்போ நீ அப்படின்னு கேக்க கூடாது

    என்ன நா தான் காதலே பண்ணினது இல்லையே

    குறிப்பு : நான் நல்லவன்
    பின் குறிப்பு : அப்போ காதலிக்றவன் லா என்ன கெட்டவனா

    ReplyDelete


  25. நல்லாயிருக்கு மோகன் கவிதை தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete
  26. தினப்புன்னகைகளில் வளர்ந்த
    என் காதலுக்கு
    மரண அடி விழுந்தது
    அவள் காதலன் பெயர் அறிந்த போது !

    அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. ஒரு மைனஸ் வோட்டு இருக்கே உங்க வீட்டம்மா போட்டதோ? எதுக்கும் ஜாக்கிரதை!

    ReplyDelete
  28. அண்ணே கமண்ட் பாக்ஸ் பாப்பபுல வச்சா இன்னும் நெறைய பேரு கமண்ட் போடுவாங்கண்ணே....


    கவிதை கிட்டத்தட்ட எல்லாரோட வாழ்க்கை கதையும் இதான்னே

    ReplyDelete
  29. ஆல் காதல் 25 வயசோடு முடிஞ்சு போச்சு. அதுக்கு பின் இன்று வரை ஹவுஸ் பாஸ் மட்டும் தான்
    >>>
    இதுக்கே கவிதை வழியா கணக்குல வந்தது 6. கணக்குல வராம இன்னும் எத்தனையோ?!இன்னும் 25 வயசுக்கப்புறம் ஹவுஸ் பாஸ் விட்டிருந்தா?!! அம்மாடியோ இன்ஃபினிட்டிதான் போல...,

    ReplyDelete
  30. தினப்புன்னகைகளில் வளர்ந்த
    என் காதலுக்கு
    மரண அடி விழுந்தது
    அவள் காதலன் பெயர் அறிந்த போது
    >>
    ஒன் சைடு லவ்ன்னு சொல்ல கூச்சப்பட்டுக்கிட்டு எவ்வளவு அழகா சமாளிக்குறீங்க சகோ??!

    ReplyDelete
  31. ஆமா, ஏழாங்கிளாஸ் வரை ஏன் வெயிட் பண்ணீங்க? எதும் சிக்கலியா?!

    ReplyDelete
  32. இனிய நினைவுகளும், சோகமும் இல்லை
    >>>
    தாவணி போனால் சல்வார் உள்ளதடான்னு கமல் பாடி உங்களை என்கரேஜ் செய்வார்ன்னு அப்பவே உங்களுக்கு தெரிஞ்சுடுச்சு போல..

    ReplyDelete
  33. இங்கேயும் ஒரு கவிஞர் ஒளிந்திக்கிறாருங்கோ...

    ReplyDelete
  34. //ஆல் காதல் 25 வயசோடு முடிஞ்சு போச்சு. அதுக்கு பின் இன்று வரை ஹவுஸ் பாஸ் மட்டும் தான் !//

    ரொம்பவே உஷாரா இருக்கீங்க :)))

    ReplyDelete
  35. சொல்லவே இல்லை...நீங்க கவிஞர் அப்படிங்கிறத...
    நன்றாக இருக்கிறது..

    ReplyDelete
  36. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி அப்பாலிக்கா ஒவ்வொருவருக்கும் தனிதனி பதில் சொல்றேன்

    நன்றி ! நன்றி ! நன்றி !

    ReplyDelete
  37. அட!! காதல் கவிதை கூட எழுதறீங்க.. கற்பனை விட அனுபவ கவிதை அருமையாக இருக்கு சார்...இளவயது காதலை கடந்து வராதவங்க இருக்கவே முடியாது நன்றி!!

    ReplyDelete
  38. உங்களின் ஒவ்வொரு காதலிக்கும் நானாக தனித்தனிபெயர் சூட்டிக் கொண்டு படித்தேன் இன்னும் சுவையாக இருந்தது கவிதை..
    என் கணவர் கொஞசம் துரதிர்ஷ்டசாலிதான் 3வயதில் பேபிகிளாசில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னையே 22 வருடங்களாக டாவடித்து காதலித்து கட்டம் கட்டி கண்ணாலமும் கட்டிக்கிட்டார். இந்தக்கவிதையை படித்தால் அவருக்கு வயிறெரியும்? என நினைக்கிறேன்.

    ReplyDelete
  39. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ///கல்லூரியில் மலர்ந்த அறிவு பூர்வ நட்பு
    அடுத்த கட்டம் போக தூண்டிற்று ///
    நல்லா கட்டம் கட்டி இருக்கீங்கண்ணே........!

    *****
    ஐய்யய்யோ ! அப்படி எல்லாம் இல்லீங்க்ணா !

    ReplyDelete
  40. பிரேம் குமார்; பேர் கேட்காதீங்க.வம்பு :))

    ReplyDelete
  41. எல். கே ஆம் என்டரே தான் !

    ReplyDelete
  42. சிட்டு குருவி: சரியா சொன்னீங்க

    ReplyDelete
  43. ரிஷ்வன்: அடடடா கவிஞரே சொல்லிட்டீங்க மகிழ்ச்சி

    ReplyDelete
  44. நன்றி சுரேஷ் !

    ReplyDelete
  45. மயிலன்: உங்கள் பின்னூட்டம் படித்து அய்யாசாமி மிக மகிழ்ந்தார் !!

    ReplyDelete
  46. வெங்கட்: நமக்கு நண்பர்கள் தான்யா "நல்லது" நினைக்கிறாங்க :))

    ReplyDelete
  47. ஸ்ரீராம் : நன்றி சார்

    ReplyDelete
  48. கவிஞர் மதுமதி: நன்றி

    ReplyDelete
  49. தமிழ் ராஜா: நல்ல பின்னூட்டம் நன்றி


    ReplyDelete
  50. அமுதா கிருஷ்ணா: ஹிஹி. அது காதல் இல்லைன்னு சொல்லிருக்கேனுங்க

    ReplyDelete
  51. முரளி கண்ணன்: நன்றிங்கோ

    ReplyDelete
  52. சீனு: உன் வயசில் லவ் பண்ணாட்டி தான் தப்பு. ஆச்சரியமா இருக்கு; லவ் பண்ணா ப்ளாக்கை தலை முழுகிடுவே :))

    ReplyDelete
  53. நன்றி சரவணன். இதனால் வரும் பிரச்சனைகளுக்கு யார் பொறுப்பேற்பது :)

    ReplyDelete
  54. நன்றி ரத்னவேல் ஐயா

    ReplyDelete
  55. TN முரளி :

    //ஒரு மைனஸ் வோட்டு இருக்கே உங்க வீட்டம்மா போட்டதோ? எதுக்கும் ஜாக்கிரதை! //
    ****
    செம பின்னூட்டம் மிக ரசித்தேன்

    ReplyDelete


  56. கேரளாக்காரன் said...

    அண்ணே கமண்ட் பாக்ஸ் பாப்பபுல வச்சா இன்னும் நெறைய பேரு கமண்ட் போடுவாங்கண்ணே....

    *****
    செஞ்சுட்டேன் ! அடுத்த பதிவிலேயே அதன் பலன் தெரியுது. மிக நன்றி நண்பரே

    ReplyDelete




  57. ராஜி said...


    கவிதை வழியா கணக்குல வந்தது 6. கணக்குல வராம இன்னும் எத்தனையோ?!
    ***********

    அடடா ! கரீட்டா கண்டு பிடிச்ச ஒரே ஆள் நீங்க தான் !

    ReplyDelete
  58. சங்கவி: ஒளிந்திருந்தார். இறந்த காலம்

    ReplyDelete
  59. டுபுக்கு: //ரொம்பவே உஷாரா இருக்கீங்க :)))

    ****

    இல்லியா பின்னே? நீங்க உள்ளே வந்தது மிக மகிழ்ச்சி டுபுக்கு



    ReplyDelete
  60. நன்றி கோவை நேரம்.

    ReplyDelete
  61. சமீரா: //இளவயது காதலை கடந்து வராதவங்க இருக்கவே முடியாது //

    ஆமாங்கோ !

    ReplyDelete
  62. உமா: மிக ரசித்தேன் உங்கள் பின்னூட்டத்தை. உங்கள் வீட்டுக்காரர் வாழ்க்கையில் காதலிச்சது ஒரே பொண்ணா ! ஆச்சரியம் தான் !

    ReplyDelete
  63. ரொம்ப ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க..எனக்கே கவிதை புரியுது.. :)

    ReplyDelete
  64. Anonymous2:19:00 AM

    சிரிப்பு வந்தது. காதல்களால். நன்று வாழ்த்து.
    (வலைச்சரம்)
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  65. kavithaikallukku artham therindha purindha nanban

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...