Tuesday, September 11, 2012

உணவகம் அறிமுகம்: மயிலாப்பூர் செந்தில்நாதன் மெஸ்

மீபத்தில் ஐநாக்ஸில் மாலை காட்சி படம் பார்த்து விட்டு வெளியே வந்தோம். மணி இரவு ஒன்பதை தாண்டியிருந்தது. சாப்பிட்டு விட்டு ரயில் வேறு பிடிக்கணும். ஐநாக்ஸ் Food court-ல் சாப்பிடுவதென்றால் சொத்தில் பாதி எழுதி வைக்கணும். நல்ல வேலையாக கண்ணில் பட்டது இந்த செந்தில் நாதன் மெஸ். ஐநாக்சுக்கு அருகில் உள்ள தெருவிலேயே இருக்கிறது இந்த மெஸ்.

மொத்தம் ஆறு பேர் சென்றிருந்தோம்,. மனைவி மற்றும் மகளுக்கு மெஸ் என்றதும் சிறிது தயக்கம் இருந்தது. ஆனால் அங்கு ஏற்கனவே சில குடும்பங்கள் சாப்பிட்டு கொண்டு தான் இருந்தது.



அருமையாய் இலை போட்டு உணவு பரிமாறுகிறார்கள். எப்போது குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் சென்றாலும் ஒவ்வொருவரும் ஓரிரு உணவு வகை தேர்ந்தெடுப்போம். பின் அனைத்தும் அனைவரும் கலந்து சாப்பிடுவோம். இதனால் நிறைய விதமான உணவுகளை ருசி பார்த்துட முடியும்.

இரவு நேரம் என்பதால் பலரும் எளிதில் ஜீரணமாக இட்லி, தோசையை தேர்ந்தெடுத்தனர். நாம பரோட்டாவை விட முடியுமா? வீட்டம்மா அங்கு வந்தும்  சப்பாத்தி கேட்டார்.

இட்லிக்கு சிக்கன் குருமா ஊற்றுகிறார்கள். அருமையா இருந்தது. சுட சுட இட்லி மற்றும் சிக்கன் குருமா சாப்பிட ஏகாந்தமாய் இருந்தது.

தோசை மாவு புளிக்காமல் நன்றாகவே இருந்தது. முட்டை தோசை ஆர்டர் செய்திருந்தோம். இன்னொருவர் ஆனியன் தோசை. எல்லாமே நன்றாக இருந்தது.

பரோட்டா ஒன்றின் விலை பத்து ரூபாய்; ஆனால் குட். நாங்கள் சிக்கன், மட்டன் என வேறு ஏதும் அடிஷனலாய் வாங்காமல் அவர்கள் இலவசமாய் தரும் குருமாக்கள் வைத்தே சாப்பிட்டோம்.

கூட்டம் பிச்சி எடுத்தது ! பெரும்பாலும் பேச்சிலர்ஸ் ! அரிதாய் சில குடும்பங்கள் !



விலையும் நிச்சயம் ரீசனபில் தான் !

இட்லி இரண்டு ஆறு ரூபாய்
பரோட்டா, சப்பாத்தி ஒன்று பத்து ரூபாய்
தோசை - சாதா இருபது ; முட்டை, ஆனியன் போன்றவை முப்பது ரூபாய்




சுவை நன்றாக இருந்தது என்பதோடு மறுநாள் எங்கள் யார் வயிற்றையும் பதம் பார்க்க வில்லை.

கை காமிராவில் படம் எடுத்த சுவாரஸ்யத்தில் ஐநூறு ரூபாய் கொடுத்து விட்டு சில்லறை வாங்காமல் திரும்பி விட்டேன். கடையில் வேலை செய்யும் ஒரு பையனை பின்னாலேயே அனுப்பி மீதி பணம் கொடுத்து விட்டனர் !

மயிலாப்பூர் பக்கமோ, ஐநாக்சோ சென்றால் ஒரு விசிட் அடியுங்கள் இந்த கடைக்கு !

56 comments:

  1. நீங்கள் என்னை அழைத்துப் போக வேண்டிய உணவகங்கள் பட்டியல் ஏறிக்கொண்டே போகிறது மோகன்.... உங்க பர்ஸ்க்கு வேட்டு வைக்கப் போறேன் பார்த்துக்குங்க!

    த.ம. 1

    502-ஆம் பதிவிற்கு வாழ்த்து - நேற்று 300-ஆவது பதிவு வெளியிட்டவரிடமிருந்து!

    ReplyDelete
  2. என்ன சினிமா பார்த்தீங்கன்னு சொல்லலையே?

    இல்லை அது தனி பதிவா வரும்போது சொல்லலாம்னு விட்டுட்டீங்களா?

    ReplyDelete
  3. அடுத்த வாரம் நம்ம ஏரியாவில் ஒரு விசிட் அடிப்போம்.....The Rock போயிருக்கீங்களா? Sutherland எதிரே இருக்கு.

    ReplyDelete
  4. இந்த ஏரியாவில்தான் எதுவும் கிடைக்க மாட்டேங்குது.. எல்லாமே மயிலை பக்கத்திலேயே இருக்கு

    ReplyDelete
  5. ஐநாக்சுக்கு அருகிலேயே இன்னொரு மெஸ் இருக்கு மோகன். ப்ச்...பெயர் பறந்து போச்சு. மதிய சாப்பாடு அவ்வளவு சூப்பரா இருக்கும், வீட்டு சாப்பாடு மாதிரி. என்ன ஒண்ணு, இடம் சின்னதுங்கறதால நாம வெய்ட் பண்ணி சாப்பிடணும். பட், இட்ஸ் வொர்த்!

    கேபிளை கேட்டால் கரெக்டா சொல்லுவார்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. /கை காமிராவில் படம் எடுத்த சுவாரஸ்யத்தில் ஐநூறு ரூபாய் கொடுத்து விட்டு சில்லறை வாங்காமல் /

    சரிதான்:)!

    ReplyDelete
  7. // மறுநாள் எங்கள் யார் வயிற்றையும் பதம் பார்க்க வில்லை. // ஹா ஹா ஹா அது தானே மிக முக்கியம் :-)

    ReplyDelete
  8. நல்ல யோசனை ஐநாக்ஸ் பக்கம் போரவங்களுக்கு.. பகிர்விற்கு நன்றிகள்!!!
    சார் 500 ரூபாயிக்கு மீதம் வாங்காமல் போயிருந்தால் மறுநாள் வயிற்றை பதம் பார்க்கவில்லைன்னு சொன்னீங்க, ஆனால் அன்றைக்கே ஹவுஸ் பாஸ் உங்களை பதம் பார்த்து இருப்பார்.. ஆனாலும் உங்க பதிவு எழுதும் கடமை உணர்ச்சிய பாராட்டாம இருக்க முடியல சார்... பதிவு கண்ணோடதிலையே பார்கறீங்க.. இப்போ எனக்கும் அந்த வியாதி தொத்தி கொண்டது..

    ReplyDelete
  9. பகிர்விற்கு நன்றிகள்..

    //கை காமிராவில் படம் எடுத்த சுவாரஸ்யத்தில் ஐநூறு ரூபாய் கொடுத்து விட்டு சில்லறை வாங்காமல் திரும்பி விட்டேன்.//

    உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?.. வீட்டுக்கு வந்ததும் ஹவுஸ் பாஸ் உங்க முதுகுல டின்னு கட்டினதை சொல்லாம விட்டதைக் கண்டிக்கிறோம்
    :-)))))))))

    ReplyDelete
  10. நெஜமாவே நீங்க நம்ம கேபிள் சங்கருக்கு பலமான போட்டிதான் :-)

    ReplyDelete
  11. ஹோட்டல் பத்தி பதிவா போடுறதுக்கு கோவைநேரம் ஜீவாதான் ராயல்டி வாங்கி வச்சிருக்கார்ன்னு நினைச்சேன். நீங்களும் அதுல ஒரு பார்ட்னரா?!

    ReplyDelete
  12. ஹோட்டலுக்கு போனா அது ஏன் எல்லாரும் பரோட்டாவே ஆர்டர் பண்றோம்?! என் பிள்ளைங்க ஹோட்டல்ன்னு சொல்லும்போதே பரோட்டா இல்லாட்டி சில்லி பரோட்ட்டான்னு ஆர்டர் பண்ணிடுவாங்க.

    ReplyDelete
  13. சுவையான உணவு மலிவான விலையில்? அட்டகாசம்!

    ReplyDelete
  14. நெஜமாவே சாப்பிடனும் போலவே இருக்கின்றது மோகன்!

    ReplyDelete
  15. //கை காமிராவில் படம் எடுத்த சுவாரஸ்யத்தில் ஐநூறு ரூபாய் கொடுத்து விட்டு சில்லறை வாங்காமல் திரும்பி விட்டேன். கடையில் வேலை செய்யும் ஒரு பையனை பின்னாலேயே அனுப்பி மீதி பணம் கொடுத்து விட்டனர் !//


    ரொம்ம்ம்ப நல்லவங்களா இருக்காங்களே..

    ReplyDelete
  16. ஐநூறு ரூபாய்க்கு சில்லறை வாங்காமல் வந்ததை பின்னாலேயே ஆள்விட்டு திருப்பிக் கொடுத்தார்கள்! ரொம்ப நல்லவர்கள்தான்! நல்லதொரு அறிமுகம்! நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
    http://thalirssb.blogspot.in/2012/09/8.html

    ReplyDelete
  17. பதிவு எழுதறத பத்தியே யோச்சிட்டு சில்லறை வாங்காம வந்துட்டீங்க போல.... உங்க கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லையா சார்....

    நல்லவேளை ஹவுஸ்பாஸ் கிட்டேயிருந்து தப்பிச்சிட்டீங்க....:)

    ReplyDelete
  18. மிகவும் அருமையான தகவல் நன்றி தோழரே

    ReplyDelete
  19. கடைசி வரைக்கும் நீங்க சாப்பிட்டத ஒரு போட்டோ கூட எடுக்கலயே...

    ReplyDelete
  20. எப்போதுமே அலுக்காத சப்ஜெக்ட்!
    ஏன் எப்போதுமே பரோட்டவே ஆர்டர் பண்றோம்? ஏன்னா அது எளிதில் வீட்டில் செய்யக் கூடியது இல்லை என்பதால்!
    ஏன் இட்லி தோசை ஆர்டர் பண்றோம்? வீட்ல சாப்டா மிளகாய்ப் பொடிதான் பெரும்பாலும்! ஹோட்டல்ல சாப்டா சட்னி, சாம்பார்னு கலக்க முடியும் இல்லை?
    எதற்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பதில் சொல்ல முடியுது!!!
    ஓகே, நம்ம வழக்கமான கேள்விக்கு வருவோம்... என்னன்னு உங்களுக்கே தெரியுமே மோகன்...! :)))) ஹிஹி...

    ReplyDelete
  21. Anonymous3:54:00 PM

    @யுவகிருஷ்ணா

    பத்த வச்சிட்டியே பரட்ட :-)

    ReplyDelete
  22. @raghu
    அந்த மெஸ் பெயர் விஸ்வநாதன் மெஸ். இப்போது ரெனவேஷனில் இருக்குது. விரைவில் மீண்டும் திறக்க உள்ளார்கள்.

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. சென்னையில் இருப்பவர்களுக்கு ஐநாக்ஸ் தெரியும். என்னைப்போன்ற வெளியூர்வாசிகளுக்கு? செந்தில்நாதன் மெஸ்ஸின் முழு விலாசமும் எழுதுங்கள் மோகன்குமார்!

    ReplyDelete
  25. பகிர்வுக்கு நன்றி... இரவு-புரோட்டா-உடம்பிற்கு நல்லதல்ல...

    ReplyDelete
  26. ஹா...ஹா... இனி கைவீசி சுகமாக நடக்கலாம்:))) இப்போது பர்ஸ் ஹவுஸ்பாஸ் கைக்கு போயிருக்குமே :)))))

    ReplyDelete
  27. @Cable சங்கர்

    அண்ணே விஸ்வநாதன் மெஸ் திறந்து ரெண்டு மாசம் மேல ஆகுது...
    மொத நாளே மீல்ஸ் சாப்பிட்டேன்...

    ReplyDelete
  28. சென்னை பிராட்வே திருவள்ளுவர் பஸ் ஸ்டேன்டில் முட்டை தோசை, இட்லிக்கு சிக்கன் குருமா தருவார்கள். மாலை முழுதும் பட்டினி கிடந்து இரவு பதினொரு மணிக்கு பெங்களூர் பஸ்சைப் பிடிக்குமுன் சாப்பிட்ட நினைவு வருகிறது.

    ReplyDelete
  29. ஐநூறு பதிவுகளா? congratulations!

    ReplyDelete
  30. பின்னூட்டம் இட்ட நண்பர்களுக்கும், தமிழ் மணத்தில் ஓட்டு போட்ட நண்பர்களுக்கும் மிக மிக நன்றி !!

    ReplyDelete
  31. வெங்கட்: இது நான் வெஜ் உணவகம் பட விமர்சனம் முன்பே எழுதியாச்சு பயம் வேண்டாம் :)

    ReplyDelete
  32. ரகு: ராக் போயிருக்கேன். இன்னும் இங்கு எழுதலை இல்லியா? அதுக்காக இன்னொரு முறை போகலாம். உங்க அப்பாயின்ட்மென்ட் தான் கிடைக்க மாட்டேங்குது

    ReplyDelete
  33. ஆம் LK . அதுவும் வெஜ் ஹோட்டல் இங்கு கிடைப்பது கஷ்டம்

    ReplyDelete
  34. ஜெட்லி: அதிசயமா நம்ம பக்கம். விஸ்வநாதன் மெஸ் இன்னும் போகலை போகணும்

    ReplyDelete
  35. ராமலட்சுமி மேடம் ஹிஹி

    ReplyDelete
  36. சீனு: ஆமாம்

    ReplyDelete
  37. சமீரா

    //உங்க பதிவு எழுதும் கடமை உணர்ச்சிய பாராட்டாம இருக்க முடியல சார்... பதிவு கண்ணோடதிலையே பார்கறீங்க.. இப்போ எனக்கும் அந்த வியாதி தொத்தி கொண்டது..//

    மகிழ்ச்சி சமீரா ! வெல்கம் டு ப்ளாகர்ஸ் வேர்ல்ட் !

    ReplyDelete
  38. அமைதிச்சாரல் said...

    //வீட்டுக்கு வந்ததும் ஹவுஸ் பாஸ் உங்க முதுகுல டின்னு கட்டினதை சொல்லாம விட்டதைக் கண்டிக்கிறோம் //

    பப்ளிக்! பப்ளிக் !

    ReplyDelete
  39. ராஜி said...

    ஹோட்டலுக்கு போனா அது ஏன் எல்லாரும் பரோட்டாவே ஆர்டர் பண்றோம்?!
    ****
    வீட்டுல நீங்க செஞ்சா தானே? அதான் !

    ReplyDelete
  40. ஜனா சார் ! ஆம் விலை சீப். உணவு குட்

    ReplyDelete
  41. இந்திரா: ஆமாங்க ரொம்ப நல்லவங்களா இருக்காங்க

    ReplyDelete
  42. சுரேஷ்: நன்றி

    ReplyDelete
  43. கோவை டு தில்லி: பெண்கள் பலர் இதையே சொல்றீங்களே? ஆள் லேடிஸ் இப்படி தானோ?

    ReplyDelete
  44. மோகன்: உங்க பெயர் ஆணாகவும், படம் பெண்ணாகவும் உள்ளது. பெண் தான் இந்த பெயரில் எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன்

    ReplyDelete
  45. கோவை நேரம்: வேற யாரையாவது விட்டு படம் எடுக்க சொல்லனுமா?

    ReplyDelete
  46. ஸ்ரீராம்: செம அலசல் !

    ReplyDelete
  47. பாலஹனுமான் & லக்கி : அண்ணே விட்டுடுங்க மீ பாவம்

    ReplyDelete
  48. கேபிள்: நன்றி

    ReplyDelete
  49. மனோ மேடம் : தெரு பெயர் தெரியலை. இனி முகவரியுடன் தர பார்க்கிறேன் நன்றி

    ReplyDelete
  50. தனபாலன் சார்: தங்கள் அக்கறைக்கு நன்றி

    ReplyDelete
  51. மாதேவி: ஆமாங்க சரியா சொன்னீங்க

    ReplyDelete
  52. அப்பாதுரை இப்போ அந்த இடமே நிறைய மாறிடுச்சு வாழ்த்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  53. //வெங்கட்: இது நான் வெஜ் உணவகம்//

    ஏன், இதில் வெஜ் ஐட்டம் ஒண்ணுமே கிடைக்காதா? :))

    ReplyDelete
  54. நம்ம வழக்கமான கேள்விக்கு வருவோம்னு சொல்லியிருந்தேன்/ கேட்டிருந்தேன் பதிலைக் காணோமே எம்கே!

    ReplyDelete
  55. ஸ்ரீராம்: வழக்கமான கேள்வி நான் தான் உங்களிடம் கேட்பது அதை தான் சொல்கிறீர்கள் என நினைதேன் உங்கள் போன் நம்பர்???

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...