Sunday, August 5, 2012

உணவகம் விமர்சனம்: அடையார் ஆனந்த பவன்

பொதுவாக இந்த பகுதியின் பெயர்  "உணவகம் அறிமுகம்" இம்முறை மட்டும் உணவகம் விமர்சனம் என்று பெயரிட்டுள்ளேன். அடையார் ஆனந்த பவனை தெரியாதோர் இருப்பார்களா? எனவே தான் இம்முறை மட்டும்  அறிமுகம் அல்ல விமர்சனம் !

********

ரவண பவன் ஹோட்டல் பல இடங்களில் ஏராள பிரான்ச்களுடன் ஒரு காலத்தில் கோலோச்சியது. இன்று அதனை பின்னுக்கு தள்ளி விட்டு அதன் இடத்தை பிடித்து கொண்டது அடையார் ஆனந்த பவன்.

ஒரு சின்ன சம்பவம் சொல்கிறேன்.

ஈரோடு பதிவர் சந்திப்புக்கு சென்று விட்டு சென்னைக்கு நண்பர்கள் அன்பழகன், ஜெயராஜ், காவேரி கணேஷ், உண்மை தமிழன் ஆகியோருடன் காரில் வந்து கொண்டிருந்தோம். வழியில் எங்கு காபி அல்லது உணவு சாப்பிட வேண்டுமென்றாலும், ஆங்காங்கு இருக்கும் அடையார் ஆனந்த பவனில் மட்டும் தான் வண்டியை நிறுத்தி கொண்டிருந்தார் ஜெயராஜ். உண்மை தமிழன் " என்னங்க இந்த கடையை மட்டும் பாத்து நிறுத்துறீங்க? இது என்ன உங்க மாமனார் கடையா?" என்று கிண்டல் செய்தார்.

பல வித ரசனை உடைய நண்பர்கள் ஒன்றாய் இருக்கும் போது அவர்களின் ரசனைக்கேற்ற வெரைட்டி இங்கு உள்ளது..அது தான் ஜெயராஜ் இதே ஹோட்டலில் அன்று வண்டியை நிறுத்த காரணமாய் இருக்கலாம் !
*********
குடும்பத்தோடும் சரி, வீட்டுக்கு பார்சல் வாங்கவும் சரி மிக அதிகம் செல்வதென்றால் அது வேளச்சேரி அடையார் ஆனந்தபவன் தான் !

ஹோட்டல் வெளியில் குழந்தைகள் விளையாட சில கார் போன்ற சமாச்சாரங்கள் உள்ளன. (சரவண பவனிலும் இருக்கும். நியாபகம் இருக்கா?)

நீங்களே உங்களுக்கு வேண்டிய உணவை ஆர்டர் செய்து வாங்கி, உங்கள் இடத்துக்கு கொண்டு வந்தும் சாப்பிடலாம். அல்லது சர்வர் மூலம் ஆர்டர் செய்து சாப்பிடலாம். ஆர்டர் செய்து சாப்பிடுவதில் ஒரு பிரச்சனை: வேலை செய்யும் ஆட்கள் பெரும்பாலும் வெளி மாநிலத்தவர்கள். எனவே நீங்கள் ஒன்று ஆர்டர் செய்ய, அவர்கள் வேறு ஒன்றை புரிந்து கொண்டு, எடுத்து வருவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. நிர்வாகம் இதனால் வாடிக்கையாளருக்கு வரும் கஷ்டத்தை கண்டு கொள்கிற மாதிரியே தெரியலை.

பல உணவுகள் இங்கு அருமை எனினும் சிலவற்றை பற்றி சொல்ல வேண்டும்.

Value for Money என்றால் : அது இங்கு கிடைக்கும் மினி டிபன் அல்லது மினி மீல்ஸ் தான். ஒரு அகலமான பாக்ஸில் நான்கைந்து உணவு வகைகள் கொஞ்சம் கொஞ்சம் (ஒரு இட்லி, கொஞ்சம் பொங்கல், குட்டி மசால் தோசை, இனிப்பு எல்லாம் சேர்த்து) 55 ரூபாய்க்கு தருவார்கள். (பார்சல் எனில் அறுபது) நிச்சயம் நாலைந்து வகை உணவை இவ்வளவு கம்மி விலையில் நாம் சாப்பிட முடியாது. இதனை சாப்பிட்டால் வயிறும் நிரம்பி விடும் (பெண்கள் இதையே முழுசாய் சாப்பிடாமல் மிச்சம் வைத்து விடுவார்கள் !)

இந்த மினி டிபனில் வழக்கமாய் கேசரியை தான் இனிப்பென்று வைப்பார்கள். கடந்த வாரம் வாங்கிய போது கேசரிக்கு பதில் திரட்டிப் பால் போல (மாடு கன்று போட்டதும் அந்த பாலில் சமைப்பார்களே !) ஒரு இனிப்பு வைத்திருந்தார்கள். மனைவி, பெண், நான் மூவருமே கிளீன் பவுல்ட் ஆகி விட்டோம். சான்சே இல்லை ! மறக்க முடியாத சுவை ! ஹும்.. திரட்டிப் பால் எப்பவோ வைப்பது தான். இன்னொரு முறை மினி டிபனுடன் இது கிடைப்பது சந்தேகமே !

அடுத்து இங்கு கிடைக்கும் ஸ்பெஷல் விஷயம் ... கோதுமை பரோட்டா !! ஆம் பரோட்டா பலரும் தவிர்க்க காரணம் மைதா மாவு மற்றும் நிறைய எண்ணெய் என்பதாக இருக்கும் அல்லவா? இவை இரண்டையும் தவிர்த்து கோதுமையில் செய்த பரோட்டா அட்டகாசம்! மிஸ் பண்ணிடாதீங்க !!

வெளியில் அடை சுட சுட போடுவார்கள். வெல்ல கட்டி வைத்து சாப்பிட்டால் அருமையா இருக்கும் !

மேலும் இடியாப்பம், தேங்காய் பால் உள்ளிட்ட சில நல்ல உணவு வகைகள் உண்டு.

இங்கேயே சுவீட் ஸ்டாலும் இருக்கிறது. காரம், இனிப்பு மட்டுமல்லாது பேக்கரி ஐட்டங்களும் கூட கிடைக்கிறது

பிறந்த நாள் பார்ட்டி கொண்டாட ஹாலும் உள்ளது. என்ன சார்ஜ் செய்கிறார்கள் என்ற விபரம் தெரிய வில்லை.

பதிவர் சந்திப்புகள் பல நடக்குமிடமாக உள்ளது அடையார் ஆனந்த பவன். வெளியூர் நண்பர்கள் சென்னை வந்தால் " மாலை ஏழு மணிக்கு அடையார் ஆனந்த பவன்லே மீட் பண்ணுவோம்" என்று தான் பேசி கொள்வோம்.

இங்கு எடுத்த சிறு வீடியோ :



மேலதிக தகவல்கள் :

எங்கே: வேளச்சேரி விஜய நகர் பஸ் டெர்மினஸ்சில் இருந்து இரு நிமிட நடை. வேளச்சேரி ரயில் நிலையத்திலிருந்து வந்தாலும் சில நிமிடங்களில் அடையலாம். சென்னையில் பல இடங்களில் உள்ளது அடையார் ஆனந்த பவன்

எதற்காக போகணும்? மிக மிக பெரிய அளவு இடம். வீக் எண்ட் கூட வெயிட் செய்யாமல் உட்கார்ந்து சாப்பிடலாம். கார் மற்றும் டூ வீலர் பார்க்கிங்கும் நிறையவே உள்ளது.

****************
வீடுதிரும்பல் பரிந்துரை: சிற்சில குறைகள் (குறிப்பாய் சர்வீசில்) இருந்தாலும், அடிக்கடி போக தூண்டும் ஹோட்டல் இது !
****************
அனைவருக்கும்  நண்பர்கள் தின வாழ்த்துகள் !
****************
தமிழ் மணத்தில் இது தொடர்ந்து எட்டாவது வாரம்... உங்களால் மட்டுமே இது சாத்தியம் ஆனது. நன்றி !!

தமிழின் முன்னணி வலைப்பதிவுகள்
RSS feed -



      புதுப்பிக்கப்பட்ட நாள் : 2012-08-05      
வலைப்பதிவுகளின் முன்னணி பட்டியில் ஒவ்வொரு ஞாயிறும் வெளியிடப்படும். கடந்த ஏழு நாட்களில் வலைப்பதிவுகள் வாசகர்களிடம் பெற்ற பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாக கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் ஒரு காரணியாக இருக்கும்

58 comments:

  1. தொடர்ந்து முதலாவது இடத்தில் தொடர்வதற்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்
    இது உங்க்கள் கடின உழைப்பால்தான்
    சாத்தியமானது
    பத்வும் முதலிடமும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. A2B அடையார் ஆன்ந்த பவன் கடலூரிலும் உள்ளது, வள்ளிவிலாஸ் மருத்துவ மனைக்கு அருகில் உள்ளது.

    மேலும் ஆனந்த பவன் என்ற பெயர் ஜெனிரிக் பெயர் என்பதால் "A2B அடையார் ஆனந்த பவன்" என்று சொன்னால் தான் வித்தியாசம் புரியும்.

    கடலூரில் ஏற்கனவெ ஒரு ஆனந்த பவன் உணவகம் உண்டு.

    ஆனந்தப்பவனில் பார்டி ஹால் இலவசம் எண்னிக்கை கூட இருக்க வேண்டும்.

    ReplyDelete
  3. தொடர்ந்து தமிழ்மணம் முதலிடம்... வாழ்த்துகள் மோகன். உங்கள் இடைவிடா உழைப்பு தெரிகிறது வெற்றியில்.

    நான் சென்னை வந்த போதுகூட உங்களை A2B-இன் ஒரு கிளையில் தான் சந்தித்தோம். இனிய சந்திப்பு....

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்.... (த.ம. 7)

    அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. தினமும் பதிவிடுவது கடின உழைப்பின்றி சாத்தியம் இல்லை!

    வாழ்த்துக்கள் சார் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதற்கு!

    ReplyDelete
  6. அடையார் ஆனந்த பவன் ஸ்வீட் கர வகைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் நிறைய வாங்கியிருக்கிறேன் ஹோட்டல் சென்றது கிடையாது இனி சென்று பார்க்க வேண்டியது தான் நீங்கள் சொன்ன கோதுமை சப்பாத்தி கண்டிப்பாக சாப்பிட வேண்டும்

    முன்னிலையில் இருப்பதற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. திருப்பூர்ல இருக்கு இதுவரை போனதில்லை ஸ்வீட் பொறுத்தவரை நாங்க ஹோம் மேக்தான்....!

    ReplyDelete
  8. தினமும் பதிவுடுவது மட்டும் இல்லை, தமிழ்மணத்தில் முதலிடம் பெற்று வருவதற்கும் வாழ்த்துகள். மறுபடியும் ஒரு சுவையான பதிவு. உங்கள் ஏரியாவிலேயே நீங்கள் அறிமுகப் படுத்தும் இரண்டாவது ஹோட்டல் இது என்று நினைக்கிறேன். பேக்கரி கணக்கில் சேர்க்காமல்!

    ReplyDelete
  9. சிறப்பான உணவகம் பற்றி சிறப்பான விமரிசனம்! தமிழ் மண முதலிடத்திற்கும் நண்பர்கள் தினத்திற்கும் வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில் ஆன்றோர்மொழிகள்
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  10. அந்த ஸ்வீட் பேரு ரசமலாய்.....திருப்பூரில் a2b நல்லா இருக்கும்.....

    ReplyDelete
  11. கோதுமை சப்பாத்தின்னு கேட்கணுமா அல்லது அங்கு கோதுமை சப்பாத்திதான் கிடைக்குமா?

    தமிழ்மனத்தில் முதலிடத்திற்கு வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  12. சரவணன்/ அமைதி அப்பா: சப்பாத்தி எப்பவும் எங்கும் கோதுமையில் தானே செய்வார்கள். இங்கு கிடைப்பது கோதுமை பரோட்டா ! நான் பதிவிலும் அப்படி தான் சொல்லியிருக்கிறேன் என நினைக்கிறேன். ஒரு முறை இங்கு கோதுமை பரோட்டா முயன்று பாருங்கள் நன்றி

    ReplyDelete
  13. கோதுமை என்றதும் சப்பாத்திதான் நினைவுக்கு வருகிறது. நான் பரோட்டாவிற்கு பதில் சப்பாத்தி என்று தவறாகக் குறிப்பிட்டுவிட்டேன் என்று நினைத்து மீண்டும் வந்தால் அதற்குள் பதில் கொடுத்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  14. சூப்பர் ஸ்டார் மோகன்குமாருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  15. தமிழ் மணத்தில் முதல் இடத்தில் இந்த இடுகை

    வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட இடுகைகள்
    சூடான இடுகைகள்

    இன்று
    உணவகம் விமர்சனம்: அடையார் ஆனந்த பவன்
    மோகன் குமார்

    ReplyDelete
  16. தொடர்ந்து தமிழ்மணம் முதலிடம் வாழ்த்துகள்.

    சாப்பாட்டுக் கடைகளைப் போட்டுப்போட்டே ஆவலைத் தூண்டுகிறீர்கள். :))

    தமிழ் நாட்டுக்கு வரவேண்டும் போல இருக்கின்றது.

    ReplyDelete
  17. தொடர்ந்த முதலாவது இடத்திற்கு வாழ்த்துக்கள்.

    நேரமிருந்தால், வாய்ப்பு அமையும்போது காஞ்சிபுரம் a2b யில் சாப்பிட்டு பார்க்கவும். நானறிந்தவரையில் சுவையில் அடையாரிலிருக்கும் அடையார் ஆனந்தபவனைவிட காஞ்சி a2b சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  18. Anonymous7:59:00 PM

    அருமையான விமர்சனம் உங்கள் சரளமான நடையில். உங்களை ஜூனியர் அசோகமித்திரன் என்று அழைக்கலாம். தொடர்ந்து முதலாவது இடத்தில் தொடர்வதற்கு வாழ்த்துக்கள்!!

    த.ம.16

    எப்போதும் 70 பதிவுகள் (சொக்கா!! கண்ணைக் கட்டுதே... :-)
    உங்கள் draft-ல் இருக்கும் ரகசியத்தையும் முடிந்தால் எங்களுடன் பகிருங்களேன் :-)

    ReplyDelete
  19. பெங்களூர் இந்திரா நகரில் உள்ள A2B, யில் ஒரு நாள் மதியம் உணவருந்தப் போனோம், அங்கே மீல்ஸ் என்று எதுவுமே இல்லை. மினி மீல்ஸ் என்று வாங்கினால், வெரைட்டி சாதம், தயிர் சாதம் தலா ஒரு டேபிள் ஸ்பூன், ஒரு சப்பாத்தி [சைஸ் சொல்லிக் கொள்ளும்படி இல்லை], பொறித்த சிப்ஸ் கொஞ்சம், கொஞ்சம் ஊறுகாய். இதற்க்கு பில் ரூ.55/-. நன்றாக சாப்பிடுபவர்களுக்கு இதெல்லாம் பள்ளிலேயே ஒட்டிக் கொள்ளும். இதே உணவுக்கு சென்னை சென்றல் ரயில் நிலையத்தில் உள்ள சரவணபவன் கடையில் ரூ.75/-. வாங்குகிறார்கள், கொஞ்சம் சாம்பார், சாதம், போரியல், சப்பாத்தி, தயிர் வேண்டுமானால் பில் ரூ.125/- ஐ எகிறி விடும். கொஞ்சமா காசு குடுத்து வயிறு நிறைய சாப்பிட்ட காலம் போய், இப்போ A2B, சரவணபவன் போன்ற கடைகளில் பை நிறைய காசு குடுத்தாலும், வயிறார உன்ன முடிவதில்லையே? :((.

    ReplyDelete
  20. அஜால் குஜாலானந்தா,

    யாருப்பா இது , உண்மையை போட்டு உடைக்கிறார், இதை நான் சொல்லலாம்னு பார்த்தேன் , தீனிப்பண்டாரம்னு சொல்லிடுவாரோனு சொல்லவில்லை :-))

    உண்மையில் சென்னை உணவகங்களில் அளவு விஷயம் ரொம்ப மோசம், ஹாட் சிப்ஸ் கொஞ்சம் தாரளமா இருக்கு.

    கை ஏந்திபவன்கள் தான் வயிற்றை நிறைக்க உதவும், சரவணபவன் வகையறாக்கள் எல்லாம் சுகர் பேஷண்ட்களுக்கு தான் ஏற்றது :-))

    ரயில் நிலைய கேண்டீன்களில் இரண்டு இட்லி எத்தனை கிராம் ,பொங்கல்,உப்புமா எத்தனைக்கிராம் என உணவுக்கு அளவும் போட்டு இருப்பாங்க, அதே போல எல்லா உணவகங்களும் எடை அளவு உண்டு ,குறைவா கொடுத்தால் வழக்கு போடலாம், ஆனால் வழக்கறிஞரே பேசாமல் சாப்பிட்டு வரும் போது நாம என்ன செய்ய :-))

    ஒருப்படத்தில் விசு ஹோட்டலுக்கு தராசு எடுத்துப்போய் இட்லி எடை சரியா இருக்கான்னு செக் செய்வார் , டீ.வில முன்னர் பார்த்தேன் படம் பேர் மறந்துபோச்சு.

    ReplyDelete
  21. இங்கு ஓரிரு முறை போயிருக்கிறேன். நிஜமாகவே பெரிய இடத்தை பிடித்திருக்கிறார்கள். நான் ஆச்சரியப்பட்ட விஷயம், பார்க்கிங்கிற்கும் தேவையான அளவு இடத்தை ஒதுக்கியிருப்பது.

    ஆனாலும் எனக்கு சரவண பவனை விட்டுக்கொடுக்க மனம் வரவில்லை. என்ன சாப்பிட்டாலும், வயிறை பதம் பார்க்காது. பர்ஸை மட்டுமே :)

    //கேசரிக்கு பதில் திரட்டிப் பால் //

    திரட்டிப் பால்னா என்னது மோகன்? பாசந்தியா?

    முதலிடத்திற்கு வாழ்த்துக்கள் மோகன்....நான் ஏற்கனவே சொன்னதுபோல் you deserve it!

    ReplyDelete
  22. //உண்மையில் சென்னை உணவகங்களில் அளவு விஷயம் ரொம்ப மோசம், ஹாட் சிப்ஸ் கொஞ்சம் தாரளமா இருக்கு.//

    திருவான்மியூர் ஹாட் சிப்ஸில் என்னவோ நாம் அன்னதானம் சாப்பிட வந்தா மாதிரி கேவலமாக நடத்துவார்கள். ஒருநாள் ஆர்டர் வர லேட்டதானால் அங்குள்ள புகார் புத்தகத்தை படித்தேன். படு காமெடியாக இருந்தது. ஒருவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த புகாருக்கு ஹாட்சிப்ஸ்காரனுகளின் பதில் - "உன்னோட இங்கிலிஷ் தப்புத்தப்பா இருக்குது. அத மெதல்ல சரிபண்ணு அப்புறம் புகார் எழுது'. பிரிட்டீஷ்காரன் மட்டும்தான் புகார் தரலாமுன்னு நினைக்கிறான்களோ என்னமோ தெரியல. ஏசி அறையில் சாப்பிட்டால் சர்வரிடம்தான் பணம் தரவேண்டும். பலர் டிப்ஸ் தர விரும்பாமல் (சர்வீஸ் படுகேவலம்), தானே பில்லு தருவதாக சண்டை பிடிப்பார்கள்! ஜெயந்தி தியேட்டர் அருகே உள்ள உருப்படியான சைவ கடை அதான் என்பதால் வேறுவழியில்லாம் பலர் அங்கு போவார்கள். (சில ஆண்டுகளுக்கு முந்தய நிலமை இது).

    ReplyDelete
  23. நன்றி ரமணி சார். உங்களை போன்ற பெரியவர்களின் ஆசியும் ஆதரவும் தான் காரணம்

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. வவ்வால் said

    ஆனந்தப்பவனில் பார்டி ஹால் இலவசம் எண்னிக்கை கூட இருக்க வேண்டும்.

    அப்படியா? புது தகவல் நன்றி

    ReplyDelete
  26. வெங்கட் நாகராஜ் said...
    நான் சென்னை வந்த போதுகூட உங்களை A2B-இன் ஒரு கிளையில் தான் சந்தித்தோம். இனிய சந்திப்பு....

    **

    ஆம் வெங்கட் நன்றி

    ReplyDelete
  27. நன்றி தனபாலன் சார்

    ReplyDelete
  28. வரலாற்று சுவடுகள் said...
    தினமும் பதிவிடுவது கடின உழைப்பின்றி சாத்தியம் இல்லை!

    **

    உண்மைதான் நண்பா, தங்கள் அன்பிற்கு நெகிழ்வான நன்றி

    ReplyDelete
  29. வீடு சுரேஸ்குமார் said...
    திருப்பூர்ல இருக்கு இதுவரை போனதில்லை ஸ்வீட் பொறுத்தவரை நாங்க ஹோம் மேக்தான்....!

    *****

    அப்படியா? வீட்டுலேயே சுவீட் பண்ணிடுவீங்களா? நல்ல விஷயம் !

    ReplyDelete
  30. ஸ்ரீராம். said...
    உங்கள் ஏரியாவிலேயே நீங்கள் அறிமுகப் படுத்தும் இரண்டாவது ஹோட்டல் இது என்று நினைக்கிறேன். பேக்கரி கணக்கில் சேர்க்காமல்!

    ***

    ஆம் ஸ்ரீராம். அடிக்கடி செல்வது வேளச்சேரிக்கு தானே? அதான் அங்கேயே அடிக்கடி சொல்ல வேண்டி உள்ளது

    ReplyDelete
  31. இளம் பரிதி said...
    அந்த ஸ்வீட் பேரு ரசமலாய்.....திருப்பூரில் a2b நல்லா இருக்கும்....
    ********
    நிஜமாவா? ரசமலாயா அது? ரசமலாய் வேறு இடத்தில் சாப்பிட்டிருக்குமே அது வேறு மாதிரி இருக்கும் என நினைக்கிறேன் அடுத்த முறை பெயர் கேட்கிறேன் நன்றி நண்பரே

    ReplyDelete
  32. நன்றி சுரேஷ்

    ReplyDelete
  33. சென்னை பித்தன் சார்: நான் சாதாரண ஆள். வாரந்திர டாப் 20-ல் மட்டும் தான் நான் முதலிடம் சில வாரங்களாக வருகிறேன். OVerall-ல் நீங்கள் தானே சார் முதலிடம்?

    ReplyDelete
  34. மாதேவி: நன்றி எந்த ஊரில் நீங்கள் இருக்கிறீர்கள்?

    ReplyDelete
  35. iK Way said...

    நேரமிருந்தால், வாய்ப்பு அமையும்போது காஞ்சிபுரம் a2b யில் சாப்பிட்டு பார்க்கவும்.
    ***********

    நிச்சயம் முயல்கிறேன். நன்றி நண்பரே

    ReplyDelete
  36. A2B சுகாதார விஷயத்தில் மோசம். ஒரு முறை மடிப்பாக்கம் A2B யில் பார்சல் வாங்க காத்திருக்கும் போது ஒரு வடக்கத்திய ஊழியர் மூக்கு சிந்திவிட்டு அதே கையில் இட்லி பார்சல் செய்வதை பார்த்து ஓடியவன் தான். இன்று வரை திரும்ப போகவில்லை

    ReplyDelete
  37. balhanuman said...
    எப்போதும் 70 பதிவுகள் (சொக்கா!! கண்ணைக் கட்டுதே... :-)
    உங்கள் draft-ல் இருக்கும் ரகசியத்தையும் முடிந்தால் எங்களுடன் பகிருங்களேன் :-)

    நன்றி பாலஹனுமான் சார்.

    புத்தக விமர்சனம்: படிக்கும் போதே எழுதிடுறேன். வாரம் ஒன்னு ரெண்டாவது படிச்சு எழுதிடுறேன்

    பயண கட்டுரை: சில மாதங்களுக்கு ஒரு முறை சென்று விட்டு வந்தால், அதுவே பத்து, பதினைந்து சேர்ந்து விடுகிறது.

    சாப்பாட்டு கடை: மாதம் ஓரிரண்டு முறை ஹோட்டல்களில் சாப்பிடுகிறோம் தானே? அவையும் எழுதி சேர்ந்து விடுகிறது

    இன்னும் நிறைய இதர விஷயங்கள். தோன்றும் போதெல்லாம் சிறிதாய் குறிப்புகள் மட்டும் ஓரிரு நிமிடத்தில் எழுதி வைத்து விடுவேன். பின் வார இறுதியில் விரிவாய் எழுதுவேன்.


    இப்படி தான் எழுபது ப்ளஸ் பதிவுகள் எப்போதும் உள்ளது. (தற்போதைய கவுன்ட்: 75 )

    தங்கள் அன்பிற்கு நன்றி !

    ReplyDelete
  38. நித்ய அஜால் குஜாலானந்தா : செம பின்னூட்டம் ! உங்களுக்கு அது கஷ்டமாய் இருந்தாலும் படிக்க எங்களுக்கு சிரிப்பாய் இருந்தது. நீங்கள் பெங்களூரில் இருப்பது அறிந்தோம் நன்றி :)

    ReplyDelete
  39. வவ்வால்

    //ஆனால் வழக்கறிஞரே பேசாமல் சாப்பிட்டு வரும் போது நாம என்ன செய்ய :-))

    யாருங்க அது? என்கிட்டே மட்டும் ரகசியமா சொல்லுங்க :)

    ReplyDelete
  40. ரகு said //

    திரட்டிப் பால்னா என்னது மோகன்? பாசந்தியா?
    ***

    ரகு: மாடு கன்று ஈன்ற பின் கிடைக்கும் பால் மிக திக்காக இருக்கும். இந்த பாலை கறந்து அதில் செய்யப்படும் சுவீட் தான் திரட்டிப் பால் செம சூப்பரா இருக்கும்

    ReplyDelete
  41. நந்தவனதான்: எனக்கும் ஹாட் சிப்ஸ் பிடிக்கலை. நான் சொல்வது வேளச்சேரி ஹாட் சிப்ஸ். டேஸ்டே அங்கு பிடிக்கலை. ஏன்னு தெரியலை

    நீங்கள் அவர்கள் பற்றி எழுதியதுடன் முழுதும் ஒத்து போகிறேன். குறிப்பாய் ஆங்கிலம் பற்றி கிண்டலடிக்க இவர்கள் யார்?

    ReplyDelete
  42. vettiblogger said...
    A2B சுகாதார விஷயத்தில் மோசம். ஒரு முறை மடிப்பாக்கம் A2B யில் பார்சல் வாங்க காத்திருக்கும் போது ஒரு வடக்கத்திய ஊழியர் மூக்கு சிந்திவிட்டு அதே கையில் இட்லி பார்சல் செய்வதை பார்த்து ஓடியவன் தான். இன்று வரை திரும்ப போகவில்லை

    ***

    என்னங்க இது பயமுறுத்துறீங்க? நான் இதுவரை அப்படி கண்டதில்லை :((

    ReplyDelete
  43. பணக்கார மோகன்குமார், பணக்கார உணவகத்தைப் பற்றிப் பேசுகிறார்.. நமக்கென்ன..?

    நமக்கு கையேந்தி பவன்தான் பெஸ்ட்டு..!

    ReplyDelete
  44. நான் ஊருக்கு வரும்போது இங்கேயெல்லாம் கூட்டிட்டு போகணும் ஆமா....

    ReplyDelete
  45. \\ரகு: மாடு கன்று ஈன்ற பின் கிடைக்கும் பால் மிக திக்காக இருக்கும். இந்த பாலை கறந்து அதில் செய்யப்படும் சுவீட் தான் திரட்டிப் பால் செம சூப்பரா இருக்கும் \\ சார் அவன் இந்த இனிப்பை ரெகுலரா தரான் என்னும்போதே நாம புரிஞ்சுக்கணும், மாடு தினம் தினமும் கண்ணு போடாது, இவனும் கண்ணு போன்ற மாடு எங்கே இருக்குன்னு தினமும் போய்த் தேடவும் முடியாது. ஆனால், அதே மாதிரி இருக்கும் படி பாலை பிராசசிங் பண்ணி விற்கிறார்கள், அதில் அவன் அந்த இனிப்பைச் செய்யுறான்.

    ReplyDelete
  46. பரோட்டாவிற்கு பதில் சப்பாத்தி என்று தவறாகக் குறிப்பிட்டுவிட்டேன்

    நீங்கள் சொன்ன கோதுமை பரோட்டா சாப்பிட வேண்டும்

    ReplyDelete
  47. தமிழ்மணம் மகுடம்

    கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
    உணவகம் விமர்சனம்: அடையார் ஆனந்த பவன் - 20/20

    மோகன் குமார்

    ReplyDelete
  48. நான் பெங்களூர் சென்ற பொழுது அஆ-வில் (ராஜாஜி நகர்) சாப்பிட்டேன். அங்கு கூட்டம் சற்று அதிகம். ஓஹோ என்று கூற முடியாது என்றாலும் மோசமில்லை.

    ReplyDelete
  49. உண்மைத்தமிழன் said...

    பணக்கார மோகன்குமார், பணக்கார உணவகத்தைப் பற்றிப் பேசுகிறார்.. நமக்கென்ன..?

    **

    ஊனா தானா அண்ணே: நம்ம பக்கம் வர்றதே எப்பவோ ஒரு தடவை. அப்பவும் ஏன் அண்ணே நம்மளை திட்டிட்டு போறீங்க. என் மேலே அப்படி என்ன கோபம்?

    ReplyDelete
  50. மனோ: வாங்க நண்பா போயிடலாம்

    ReplyDelete
  51. தாஸ்: உண்மை தான். அதான் திரட்டி பால் மாதிரி என்று சொன்னேன். அந்த டேஸ்ட் வந்தது; அதுவே அல்ல

    ReplyDelete
  52. சீனி: சென்னைக்கு வாங்க ஒரு முறை நல்ல ஹோட்டல் போகலாம்

    ReplyDelete
  53. என்னோட பேவரைட் மினிஜாங்கிரி. இனிப்பு காரம் தவிர்த்து ஆனந்தபவனில் ஏதும் சாப்பிட்டதில்லை.

    வேளச்சேரி பக்கம் வந்தால் ரத்னா கபேயில் சாம்பார் இட்லி சாப்பிடுவதோடு சரி :)))

    ReplyDelete
  54. அடுத்த முறை போகும்போது கார கொழுக்கொட்டை சாப்ப்பிடுங்க்(ரூ 20 மட்டுமே).சுவையாக இருக்கும்

    ReplyDelete
  55. Service is very very worst in all the their outlets in bangalore. No one is responding and we need to wait long time. The sweet stall employees are very rude particularly in btm lay out branch. The chinnar branch in the housr to krishnagiri highway, the boys are very rude.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...