Thursday, September 13, 2012

சிம்லா பயணம்: சிம்லா அரண்மனையும் மால் ரோடும்


சிம்லாவில் நாங்கள் சென்ற அரண்மனையை பார்ப்பதற்கு முன் ஒரு சின்ன சிம்லா லோக்கல் ரவுண்ட் அடித்து விடலாம்

சிம்லாவில் இறங்கி எங்கள் அறைக்கு மாலை ஐந்து மணிக்கு சென்றவுடன் ரயிலில் வந்த களைப்பில் மனைவியும் மகளும் சாய்ந்து விட்டனர். கலைஞனுக்கு ஏது ஓய்வு? (டேய் அடங்க மாட்டியா?) அவர்களை அறையில் விட்டவுடன் ஜாலியாக சிம்லாவை அன்று மாலை ஒரு ரவுண்ட் சுற்றி வந்தேன். அப்போது கண்ட சில விஷயங்கள்/ அனுபவங்கள்:

மால் ரோடு

சென்னையில் தி. நகர் மாதிரி மால் ரோடு சிம்லாவின் கமர்ஷியல் ஏரியா. முழுக்க கடைகள்.. கடைகள்.. கடைகள். ஆங்காங்கு சில லாட்ஜுகளும் உண்டு.

மால் ரோடில் சிம்லா போஸ்ட் ஆபிஸ்- பழங்கால பில்டிங்
மால் ரோடு அருகே கார் அனுமதி இல்லை. ஒரு கிலோ மீட்டர் தள்ளி கார்கள் நிறுத்தப்பட்டு விடும். அதன் பின் ஏறுவது முழுக்க மலை வேறு. மலையில் ஒரு கிலோ மீட்டர் ஏறுவது மிக கடினம். இதற்காக ஒரு நல்ல வழி வைத்துள்ளனர். அது தான் லிப்ட்.

எந்த இடத்துக்கு மேல் கார் செல்வதில்லையோ அங்கிருந்து அரசாங்கமே லிப்ட் இயக்குகிறது. இதற்கு தனியே காசு கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டும். டிக்கெட் எடுக்க கியூ, பின் இரண்டு தளத்துக்கு லிப்ட் ! முதலில் ஒரு லிப்டுக்கு கியூவில் நின்று பின் அதிலிருந்து மாறி இன்னொரு லிப்ட் ஏறி செல்லனும்,. ஆனால் கூட்டம் சீக்கிரம் move ஆகிடுது. நீங்கள் மால் ரோடிலேயே தங்காமல் வேறு இடத்தில் தங்கினால், மால் ரோடு செல்ல சிறந்த வழி லிப்ட் உபயோகிப்பது தான்.





மால் ரோடில் சில ஓட்டல்களும் உள்ளன. சிலர் இங்கேயே தங்கி விடுகின்றனர். இவர்களுக்கு பர்ச்சேஸ் செய்வது சிரமமில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் கீழே வர லிப்ட் மூலம் வருவார்கள். குறிப்பாய் ரூம் காலி செய்து விட்டு கிளம்பும் போது லிப்ட்டை தான் நாடவேண்டும். நிறைய கூட்டத்திற்கிடையே உங்கள் லக்கேஜ் எடுத்து போகணும்

குகைக்குள் புகுந்து இன்னொரு தெருவிற்கு செல்கிறார்கள்

இங்குள்ள கடைகள் பெரும்பாலும் இரவு ஒன்பது மணி அளவில் பூட்ட துவங்கி விடுகின்றனர். சில கடைகள் பத்து மணி வரை இருக்கும். கடைசி லிப்ட் பத்து மணி அளவில் இருக்கும். அதை மிஸ் செய்தால் நடந்து தான் கீழே போகணும்.

சில கடைகளில் பார்கயின் செய்வதை ஒப்பு கொள்வதே இல்லை. என்கிறார்கள். பல கடைகளில் பார்கயின் உண்டு. உங்கள் சாமர்த்தியம்.. எவ்வளவு விலை குறைக்க முடியும் என்பது !
பர்ச்சேஸ் அட் மால் ரோடு
இணையம் பார்க்க வேண்டும் எனில் மால் ரோடு தான் போகணும். தலை நகரம் என்று சொல்லி விட்டு இன்டர்நெட் கபே கூட எங்கோ ஒன்று தான் உள்ளது நெருடுகிறது.

மல்டி பின் பிளக் எடுத்து செல்வது நல்லது. சில ஹோட்டல்களில் ஒரு பிளக் மட்டுமே உள்ளது. ரூமில் இருக்கும் குறைந்த நேரத்துக்குள் எல்லார் மொபைலும் சார்ஜ் செய்யணுமே !

சென்னை சூப்பர் கிங்க்ஸ் டி ஷர்ட் அணிந்து தனியே சுற்றி கொண்டிருந்தேன். யாரிடம் வழி கேட்டாலும் டி ஷர்ட்டை பார்த்து விட்டு நன்கு சிரித்தனர். "மெட்ராசா ?" என கேட்டு விட்டு கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலத்தில் வழி கூறினர்.

செம கூட்டமாய் இருந்த சுவீட் கடை 

எல்லா ஹோட்டல்களிலும் உணவு ஆர்டர் செய்து அரை மணி கழித்து தான் உண தருகிறார்கள். பெரும்பாலும் நான், ரொட்டி போன்ற உணவு என்பதால், நாம் சொன்ன பின் தான் அவை தயார் செய்வார்கள் போலும் !

சிம்லா வர நவம்பர், டிசம்பர் சிறந்த மாதங்கள். குளிர் பிரதேசம் எனில் நாம் ஊட்டி, கோடை காணலே பார்த்து விடலாமே ! நாம் விரும்புவது ஸ்னோ பார்ப்பதை தானே? டிசம்பர் போன்ற மாதங்களில் தான் ஸ்னோ இங்கு தரையிலேயே இருக்குமாம். அப்போது கூட்டம் நிரம்பி வழியுமாம்.

ஸ்வஸ்திக் என்கிற கடையில் பெண்களுக்கு தேவையான நிறைய பொருட்கள் நல்ல விலையில் கிடைக்கிறது. Adidas போன்ற பிராண்டட் கடைகளும் இங்குள்ளது

மால் ரோடில் வாங்க கூடிய பொருட்கள்

ஷால்
செருப்பு
டீ ஷர்ட்
ஸ்டோல் (Ladies shawl/ dupatta kind of dress)
சுடிதார் மெட்டீரியல்
தோடு, செயின் வளையல்கள்
****
ஒரு கடைக்குள் தனி தனி பார்டிஷன் இன்றி நிறைய சிறு கடைகள் - பார்த்தால் ஒரே கடை யில் ஏழெட்டு சேல்ஸ் மேன் இருப்பது போல் தெரியும் ஆனால் ஒவ்வொருவரும் ஒரு கடை ஓனர்கள் !

வெகு சிலர் மட்டும் பிக்சட் பிரைஸ் என விலை குறைப்பதில்லை மற்றவர்கள் குறைக்கிறார்கள் 
****
டுத்து நாங்கள் சென்ற பேலஸ். இதனை செயில் பேலஸ் என்கிறார்கள். ராஜாக்கள் இருந்த அரண்மனை. இப்போது தங்கும் விடுதி ஆக்கி விட்டனர். ஒரு நாள் டூரில் இந்த இடம் அழைத்து சென்றதால் மதிய சாப்பாடு இங்கு சாப்பிட்டாக வேண்டிய நிலை. விலையெல்லாம் தாஜ் ஹோட்டல் ரேஞ்சில் இருந்தது. நம்மெல்லாம் யாரு? வீட்டம்ம்மா சில பல பொடிகள் ஊரிலிருந்து தயார் செய்து கொண்டு வந்திருந்தார். அது உபயோகம் ஆன ஒரே இடம் இது தான். வேறு அரிசியும் முட்டை போல் எதோ ஒன்றும் வாங்கி கொண்டு, நாங்கள் வைத்திருந்த பொடி போட்டு சாப்பிட்டோம். வெறும் வெள்ளை அரிசி ஒரு பிளேட் + முட்டைக்கே ஐநூறு ரூபாய் வாங்கினார்கள் (நல்லாருங்கடே !)
இவரு பெரிய இளைய ராஜா. போஸ் குடுக்கிறதை பாரு

பேலஸில் எடுத்த வீடியோ





அழகழகான ஓவியங்கள், பெரிய விளக்குகள், பியானோ, சிறுவர் விளையாட நல்ல வீடியோ கேம் , தோட்டம் இப்படி சற்று பொழுது போக்கும் இடமாக இருக்கிறது இந்த பேலஸ்



இங்குள்ள தோட்டத்தில் எடுத்த வீடியோ: 




குட்டீஸ் கார்னர்






வீடுதிரும்பல் பரிந்துரை:

ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள பேலஸ் பார்த்திருந்தால் இதை பேலஸ் என்றே சொல்ல மாட்டோம் !சிம்லாவிலிருந்து மிக தொலைவில் உள்ளது. அவ்வளவு தூரம் மலையில் வாந்தி எடுத்து பயணம் செய்து பார்க்கிற அளவு அங்கு உருப்படியாய் ஏதுமில்லை :(

மால் ரோடு அவசியம் சுற்றி பாருங்கள். மிக குறைவாய் பர்ச்சேஸ் செய்தல் நலம் (பாக்கெட்டுக்கு)

40 comments:

  1. //சென்னை சூப்பர் கிங்க்ஸ் டி ஷர்ட் அணிந்து தனியே சுற்றி கொண்டிருந்தேன். யாரிடம் வழி கேட்டாலும் டி ஷர்ட்டை பார்த்து விட்டு நன்கு சிரித்தனர். "மெட்ராசா ?" என கேட்டு விட்டு கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலத்தில் வழி கூறினர்//
    தமிழன் எங்க இருந்தாலும் தனியா தெரிவானே!

    ReplyDelete
  2. இனிய பயணக் கட்டுரை...

    தொடரட்டும் இனிய பயணம்...

    த.ம. 2

    ReplyDelete
  3. பயணக் கட்டுரையை ரசித்தேன் சார்..

    ReplyDelete
  4. பயண அனுபவம் இனிக்கிறது படிக்க. வீடியோக்களும் பகிர்ந்தது சிறப்பு.

    ReplyDelete
  5. இனிய பயணம் தொடரட்டும்

    ReplyDelete
  6. உங்கள் பயணம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்...

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  7. படங்களும் தகவல்களும் அருமை.

    ReplyDelete
  8. 'சென்னை சூப்பர் கிங்க்ஸ் டீ ஷர்ட் போட்டுக் கொண்டு சுற்றினேன்'
    நல்ல ஐடியா...!

    அப்பாடி... சிம்லா பார்த்தாச்சு!

    ReplyDelete
  9. பேலஸில் ‘ராஜ’ மரியாதையா?

    இல்லை

    மரியாதை எப்படி இருந்தால் என்ன விலைதான் ராஜாக்களுக்கு ஏற்றபடி இருக்கிறதே என்கிறீர்களா?

    ReplyDelete


  10. நல்ல தகவல்! படங்களும் அருமை!

    ReplyDelete
  11. 'மால் ரோட்டிலும் சிம்லாவிலும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்துவிட்டதால் - அங்கு சென்னைப் போல குப்பையைக் காண முடிவதில்லை' என்பதை கவனித்தீர்களா? பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தினால் தண்டம் உண்டு என்று எல்லா இடத்திலும் அறிவிப்புகளும் உள்ளன.

    ReplyDelete
  12. நல்லதொரு பயணக்குறிப்புகள். பயனுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
  13. நல்ல பயண கட்டுரை.. இதுல ஹை லைட் - எங்க தங்கறது, பொருட்கள் வாங்கறது சீப்-னு நீங்க தர டிப்ஸ் தான்.. இது அங்கு செல்லும் எல்லோருக்குமே உபயோகமா இருக்கும்.. நன்றிகள் சார்...

    ReplyDelete
  14. பயணக் கட்டுரை..அருமை!

    http://sivaparkavi.wordpress.com/

    ReplyDelete
  15. இனிய பயணம்.

    ReplyDelete
  16. பயண அனுபவம் பகிர்ந்த விதம் சிறப்பு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    ஓல்டு ஜோக்ஸ் 2
    http://thalirssb.blogspot.in/2012/09/2.html


    ReplyDelete
  17. Anonymous11:08:00 PM

    அய்யாசாமி என்ற கலைஞனுக்கு ஏது ஒய்வு ? உண்மைதான்... உங்களுக்கு நகைச்சுவை மிக இயல்பாக வருகிறது... அருமையான பயணக் கட்டுரை..

    ReplyDelete
  18. இனிய பயணத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்...

    ReplyDelete
  19. T.N.MURALIDHARAN said...
    தமிழன் எங்க இருந்தாலும் தனியா தெரிவானே!
    ****
    Yesss சார் !

    ReplyDelete
  20. T.N.MURALIDHARAN said...
    தமிழன் எங்க இருந்தாலும் தனியா தெரிவானே!
    ****
    Yesss சார் !

    ReplyDelete

  21. நன்றி வெங்கட்

    ReplyDelete

  22. சீனு: நன்றி

    ReplyDelete
  23. பாலகணேஷ்: நன்றி

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. சரவணன்: நன்றி

    ReplyDelete

  26. நன்றி ஜெய்

    ReplyDelete

  27. ஸ்ரீராம்: உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி

    ReplyDelete

  28. சீனி: விலை மட்டும் தான் ராஜ விலை. மரியாதை அல்ல :))

    ReplyDelete

  29. நன்றி ராமானுசம் ஐயா

    ReplyDelete
  30. நன்றி அருள். சிம்லா பற்றிய முக்கிய தகவல் சொன்னமைக்கு

    ReplyDelete

  31. நன்றி கோவை டு தில்லி

    ReplyDelete

  32. நன்றி கோவை டு தில்லி

    ReplyDelete
  33. சமீரா : நன்றி நீங்கள் சொன்னது மகிழ்ச்சி

    ReplyDelete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. சிவபார்கவி : நன்றி

    ReplyDelete

  36. மாதேவி : நன்றி

    ReplyDelete
  37. balhanuman said...
    அய்யாசாமி என்ற கலைஞனுக்கு ஏது ஒய்வு ?
    *****
    இப்படி உசுபேத்தி உசுபேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு

    ReplyDelete
  38. நன்றி தனபாலன் சார்

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. wonderful. travelogues. keep it up.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...