Friday, August 17, 2012

சூப்பர் சிங்கர் ஜூனியர்: இம்முறை டைட்டில் ஜெயிப்பது யார் ?

சூப்பர் சிங்கர் ஜூனியர் தினம் இரவு ஒன்பது மணிக்கு தொடர்ந்து பார்த்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம். வேறு எந்த பக்கம் போனாலும் அந்த நேரம் சீரியல் தான். இருக்கிற கொடுமையில் இது கொஞ்சம் பரவாயில்லை என்ற சூழல் !.

இப்போது இருக்கும் ஏழு போட்டியாளர்கள் பற்றிய சிறு அலசல் இது:

அனு

எங்க ஊருக்கு பக்கத்து ஊரான மன்னார்குடி பொண்ணு ! சுமாராய் பாடும்
இந்த பெண் பைனல்ஸ் வரை செல்வதே கடினம் தான் ! பைனலுக்கு முன்பு அவுட் ஆகும் கடைசி சில பேரில் அனுவும் ஒருவராய் இருக்கலாம் என்பது நம் கணிப்பு.

ஜெயந்த் 

இந்த பையன் பிறந்தது ஆந்திராவில். இவன் நார்மல் பையன் கிடையாது. இதை அவரது அம்மா ஒரு முறை கண்ணீரோடு கூறினார். சிறு வயதில் இவனை தொலைத்து விட்டு, புது ஊரில், எதுவும் சொல்ல தெரியாத இவனை கண்டுபிடிக்க அவர் பட்ட பாட்டை சொன்ன போது ரொம்ப கஷ்டமாக தான் இருந்தது.

ஜெயந்த் நல்லாவே பாடுவான். விஜய் டிவி நடத்திய இன்னொரு சிறுவர் நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்த பையன் இவன் ! பைனல்ஸ் வரை போவான் என நினைக்கிறேன் !

அஞ்சனா 

ஒவ்வொருவராய் அவுட் ஆகும் இந்த மியூசிகல் சேரில் மிக விரைவில் அஞ்சனா வெளியேறக்கூடும் என்பது நம் கணிப்பு.

ஒவ்வொரு ஷோவுக்கும் இவர் அம்மா மற்றும் அப்பா இருவரும் தவறாமல் வந்துடுறாங்க. (அப்பாவும் முழுசா இருப்பது ஆச்சரியம். சொந்த பிசினஸ் பண்றாரோ என்னவோ ? )

யாழினி 

ரொம்ப குட்டி பொண்ணு. பல முறை டேஞ்சர் சோன் வந்து நிற்பார். "இன்னொரு முறை டேஞ்சர் சோன் வந்தால் நீ அவுட் ஆகிடுவே" என்கிற ரீதியில் மனோ பலமுறை சொல்லிருக்காரு.

இன்னும் ஓரிரு ரவுண்டில் இந்த பெண் வெளியேறி விடுவார் என நினைக்கிறேன் 

பிரகதி

ஜட்ஜ்களின் ஹாட் Favourite ! எனக்கு தெரிந்து ஜட்ஜ்கள் பாராட்டுகிற அளவெல்லாம் மிக சிறந்த பாடகி அல்ல. சில நேரம் மட்டுமே நன்கு பாடுவார். பொதுவாய் சூப்பர் சிங்கரில் வெளி நாட்டில் இருந்து வந்து பாடும் ஆட்களுக்கு சற்று lenience உண்டு. அப்படி தான் இவரிடம் lenient ஆக இருக்கிறார்கள் என நினைத்தேன். ஆனால் டாப் 10 வந்த பிறகும், அவரை ஏன் இவ்வளவு பாராட்டுகிறார்கள் என தெரியலை.

இதே ரீதியில் ஜட்ஜ்கள் தொடர்ந்து ஆதரித்தால் இவர் பைனல் செல்வது உறுதி ! அப்புறம் பட்டம் வெல்லவும் வாய்ப்புகள் உண்டு !

ஒன்று மட்டும் சொல்லிக்குறேன்: பிரகதி பாட்டு பாடி கொண்டே நடிக்கிற நடிகையாக தமிழ் திரையில் வருங்காலத்தில் கலக்க கூடும் !

கெளதம் 

இந்த தம்பி எப்படி டாப் 10-ல் வந்தார், அதன் பின்னும் எப்படி இரண்டு ரவுண்ட் அவுட் ஆகமால் இருக்கார் என நிஜமா எனக்கு புரியலை.

மிக சில முறை நன்றாக பாடுவார். பல முறை ரொம்ப சுமார் தான் !

டாப் 10 செலக்ட் செய்யும் போது கடைசியில் மூன்று பேர் டேஞ்சர் சோனில் இருந்தனர். அதில் மிக மோசமாய் பாடியது இவர் தான். ஆனால் மூவரில் நன்கு பாடிய நபரை டாப் 10-லிருந்து வெளியேற்றி விட்டு டாப் 10-க்குள்  இவரை அனுமதித்தனர். தற்போது மீதம் இருக்கும் நபர்களில் ஆண்கள் ஓரிருவர் தான். மீதம் எல்லாம் பெண்கள். எனவே ஆண்களின் representation சற்று இருக்கட்டும் என அனுப்பினரோ என்னவோ ! 

அதே போல் இவரையும்  ஜெயந்தையும்  தவிர இப்போது ஆண் பாடகர்கள் இல்லை. அதிலேயே தம்பி வண்டி ஓட்டிட்டு இருக்கார். பைனல் வரை ஆண்களில் சிலராவது இருக்கணும் என்கிற ஒரே காரணத்துக்காய் இவர் பைனல் வரை கூட ஜட்ஜ்களால் அனுப்பப்பட கூடும் ! 


சுகன்யா                                     

நிஜமாக நன்கு பாட கூடிய பெண். இப்போது பாடி கொண்டிருப்போரில் மட்டும் வைத்து பார்த்தால் சூப்பர் சிங்கர் வெல்ல கூடிய ஆள் என இவரை தான் நினைக்கிறேன் எல்லா வித பாட்டுக்கும் நல்ல ஹார்ட் வொர்க் தந்து, மிக நன்றாக பாடுகிறார். ஒரிஜினல் பாடலை நாம் பல முறை எப்படி கேட்டிருக்கோமோ, அதே போல இருக்கும் இவர் பாடுவது.

இவர் வெல்லாமல் போக ஒரு காரணம் மட்டுமே இருக்கலாம். இவர் ஒரு மலையாளி. ஏற்கனவே சூப்பர் சிங்கர் சீனியரில் ஒரு முறை, ஜூனியரில் ஒரு முறை மலையாளிக்கு பரிசு தந்த போது நிறையவே எதிர்ப்பு கிளம்பியது. அதை மனதில் வைத்து இவருக்கு பரிசு தராமல் போவார்களா, அல்லது கண்டு கொள்ளாமல் எப்போதும் போல ஒரு மலையாளிக்கே பரிசு தருவார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம் !
****

உண்மையை சொல்ல வேண்டுமெனில், பைனல்ஸ் செல்ல தகுதி வாய்ந்த நான்கு பேரை சொல்வதே சிரமமா இருக்குது !

சுகன்யா மற்றும் பிரகதி மட்டும் பைனல் செல்ல கூடியவர்களாகவும் அதில் சுகன்யா டைட்டில் வெல்ல கூடும் என்பதும் என் எதிர்பார்ப்பு ! எப்படியும் இம்முறை சூப்பர் சிங்கர் வெல்ல போவது ஒரு பெண் தான் என நிச்சயம் நினைக்கிறேன் !

பார்க்கலாம். நம் ஊகம் சரியாக இருக்கா என !

ஒன்று மட்டும் நிச்சயம் சொல்ல வேண்டும்: சென்ற முறை வென்ற அல்கா போலவோ (அவரைக்கூட விட்டுடுங்க; அது exceptional திறமை) அப்போது கலந்து கொண்ட நித்யஸ்ரீ, பிரியங்கா, ஸ்ரீகாந்த், ஷ்ரவன் அளவோ பாடும் ஆட்கள் இம்முறை ஒருவர் கூட இல்லை என்பது தான் சோகமான உண்மை !

48 comments:

  1. //ஒன்று மட்டும் நிச்சயம் சொல்ல வேண்டும்: சென்ற முறை வென்ற அல்கா போலவோ (அவரைக்கூட விட்டுடுங்க; அது exceptional திறமை) அப்போது கலந்து கொண்ட நித்யஸ்ரீ, பிரியங்கா அளவோ பாடும் ஆட்கள் இம்முறை ஒருவர் கூட இல்லை என்பது தான் சோகமான உண்மை !//

    மிக மிக உண்மை பாஸ். இம்முறை ஃபைனல்ஸ் மட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த ரேஞ்சில் இருக்கு.

    போனமுறை சூப்பர் சிங்கர் தொடர்ந்து பார்த்தமைக்கு அல்கா அஜித் ஒரு முக்கிய காரணம். இன்றும் யுடியுபில் அடிக்கடி அவரின் பாடல்களை கேட்பது வழக்கம். வாட் எ வாய்ஸ்!!

    ReplyDelete
  2. வணக்கம்..ஓ..இதெல்லாம் கூட பார்க்க டைம் இருக்கு போல..நன்றாக அலசி இருக்கறீர்கள்.பார்ப்போம்..யார் வெற்றி பெறுவார் என்று...

    ReplyDelete
  3. நல்ல அலசல்.

    இதையெல்லாம் பார்க்கறதே இல்லை இந்தியவாசத்தில்கூட:(

    ReplyDelete
  4. கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்கிற்கு சற்றும் சளைத்ததல்ல விஜய் டிவியின் வின்னர் செலக்ஷன். கொஞ்சம் சுமாரா பாடினவங்களுக்கு டைட்டில் கொடுத்துட்டு, கொஞ்ச நாள் இதை பத்தி எல்லாரும் பேசற மாதிரி ஒரு சர்ச்சையை கிளப்பிடுவாங்க பாருங்க.

    ReplyDelete
  5. உங்கள் பதிவின் மூலம் தான் தெரிந்து கொண்டேன்...

    நல்ல அலசல்... பாராட்டுக்கள்... நன்றி... (TM 2)

    ReplyDelete
  6. //பிரகதி// இந்த பொண்ணு உண்மையிலே ஸ்பான்சர் ஒருவரின் மகளாய் இருக்க கூடுமோ என்று கூட நினைத்தேன்.. சில நேரம் மற்ற குட்டிஸ் கூட ஒப்பிடும் போது இவளோட பெர்போமான்ஸ் குறைவாகவே படும்.. ஆனா கலைஞருக்கு பாராட்டு விழா போல சாக்லேட் சவர் எல்லாம் நடக்கும்.. சில இடங்களிலே கவர்ந்தார்..

    //அனு// யாழினி // ஓகே

    //ஜெயந்த்// அதிக இடங்களில் இவன் பெர்போமான்ஸ் சூப்பராய் பட்டது

    //அஞ்சனா // எனக்கு பிடிக்கும் ஆனால் பைனல் வரை போற பொண்ணா தெரியல்ல நீங்க சொல்ற போல

    //சுகன்யா// இவருக்கும் ஜெயந்துக்கும் மட்டுமே இப்போ வரை உண்மை தகுதி உள்ளவர்கள்.. ஆனால் இருவரும் தமிழ் இல்லை.. ஹி ஹி

    பெரும்பாலும் ரக்சிதா, ஆஜித் வைல்ட் கார்ட் ரவுண்டில் மீண்டும் வெற்றி பெற்று வந்தால் நன்றாக இருக்கும்.. (ஏன்னா இவங்க ரெண்டு பெரும் தான் எனக்கு மிக பிடிக்கும் ஹி ஹி )

    //அல்கா போலவோ (அவரைக்கூட விட்டுடுங்க; அது exceptional திறமை) அப்போது கலந்து கொண்ட நித்யஸ்ரீ, பிரியங்கா அளவோ பாடும் ஆட்கள் இம்முறை ஒருவர் கூட இல்லை//


    FACTU FACTU FACTU

    ReplyDelete
  7. நல்ல அலசல்
    எப்படி உங்களுக்கு இப்படி அனைத்திலும்
    கவனம் செலுத்த நேர்ம் கிடைக்கிறது ?

    ReplyDelete
  8. //அல்லது கண்டு கொள்ளாமல் எப்போதும் போல ஒரு மலையாளிக்கே பரிசு தருவார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம்//

    அல்லது கண்டு கொள்ளாமல் ஒரு நல்ல பாடகிக்கே
    பரிசு தருவார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம் !

    சகாதேவன்

    ReplyDelete
  9. ம்.... இந்த நிகழ்ச்சியெல்லாம் பார்ப்பதில்லை. நிறைய மிஸ் செய்கிறேனோ?

    ReplyDelete
  10. தேர்ந்த நடுவரா நீங்கள் ? அருமையாக கணித்து இருக்கிறீர்கள்

    ReplyDelete
  11. ஹாரி பாட்டர் said

    /பெரும்பாலும் ரக்சிதா, ஆஜித் வைல்ட் கார்ட் ரவுண்டில் மீண்டும் வெற்றி பெற்று வந்தால் நன்றாக இருக்கும்.. (ஏன்னா இவங்க ரெண்டு பெரும் தான் எனக்கு மிக பிடிக்கும் ஹி ஹி )//

    ஹாரி பாட்டர். நீங்க சொன்ன ரெண்டு பேரும் எனக்கும் பிடித்தவர்கள். இருவருமே பைனல் செல்வார்கள் என
    நானும் நினைத்திருந்தேன். :(

    ReplyDelete
  12. இந்த முறை சூப்பர் சிங்கர் சரியாக எடுபடவில்லை...நான் அதிகம் பார்ப்பதில்லை...அல்கா,நித்யஸ்ரீ,ஸ்ரீநிஷா,பிரியங்கா இவர்களுக்கு இணையான போட்டியாளர்கள் யாரும் தற்போது இல்லை...

    ReplyDelete
  13. பார்ப்போம் சார் என்ன நடக்குது என்று

    ReplyDelete
  14. Anonymous11:38:00 AM

    அருமையான அலசல். உங்களுக்கு ஒரு கூடுதல் தகவல். பிரகதி எங்கள் பே ஏரியா தான் (San Francisco) சூப்பர் சிங்கரில் கலந்து கொள்வதற்காக தற்காலிக சென்னை வாசம் + சென்னையில் படிப்பைத் தொடர்கிறார்.. இப்போது வெளியாகி இருக்கும் பனித்துளி படத்தில் ஒரு பாடலும் பாடியிருக்கிறார். இந்தப் படத்தைத்தான் கேபிள் ஷங்கர் கிழி கிழியென்று கிழித்திருந்தார். பிரகதியின் அம்மா கனகாவும் திறமை வாய்ந்தவர். இங்கு பல நாடகங்களில் குணச் சித்திர வேடங்களில் கலக்கி இருக்கிறார்...

    ReplyDelete
  15. //ஒன்று மட்டும் நிச்சயம் சொல்ல வேண்டும்: சென்ற முறை வென்ற அல்கா போலவோ (அவரைக்கூட விட்டுடுங்க; அது exceptional திறமை) அப்போது கலந்து கொண்ட நித்யஸ்ரீ, பிரியங்கா, ஸ்ரீகாந்த், ஷ்ரவன் அளவோ பாடும் ஆட்கள் இம்முறை ஒருவர் கூட இல்லை என்பது தான் சோகமான உண்மை !//

    இதனாலேயே இந்த முறை எங்கள் வீட்டில் தொடர்ந்து பார்க்கவில்லை. விஜய் தொ.கா.வும் இதன் நேரத்தை (அல்லது கிழமைகளை) அடிக்கடி மாற்றி வருவதும் ஒரு காரணம்.

    இறுதிப் போட்டிகளில் கலைக்கட்டுமோ என்னவோ. அது அப்பொழுது விஜய் தரும் விளம்பரங்களையும் பொறுத்தது. [btw அழுகாச்சி நாடகங்கள் வேறு இன்னமும் அரங்கேரவில்லை போலிருக்கிறதே?]

    ReplyDelete
  16. ஆனாலும் ஒரு போட்டியை இப்படியா இ..ழு...த்..து..க் ... கொண்டே போவது! அதனால் பார்ப்பதேயில்லை. ‘தங்க்ஸ்’ ஸ்பெஷல்..!

    ReplyDelete
  17. நல்ல அலசல்! என்னால் முழுமையாக இந்த நிகழ்ச்சியை பார்க்க முடிவதில்லை! ஆனால் இதெல்லாம் திறமைசாலிகளுக்கும் மதிப்பு கொடுப்பார்களா தெரியவில்லையே?

    இன்று என் தளத்தில்
    திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
    குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html




    ReplyDelete
  18. என் சாய்ஸ் சுகன்யாதான் மோகன்.

    ஆஜித்தை அநியாயமாக வெளீல தள்ளிட்டாங்க.நல்ல கற்பனை வளமும்,மேடையை லாவகமாப் பயன்படுத்தற விதமும் தெரிந்த நேச்சுரலான பாடகன்.

    ReplyDelete
  19. கடந்த முறை தொடர்ந்து பார்த்தேன்.ஆனால் இம்முறை அவ்வாறு பார்க்கவில்லை.சற்று சுவாரசியம் குறைந்துவிட்டதாகத் தோன்றுகிறது.

    ReplyDelete
  20. Good post... I am not watching this program, so no comments.

    ReplyDelete
  21. அலசல் நல்லதாக இருக்கு டாக்சோ எதும் பார்க்கும் நேரம் கிட்டுவது இல்லை பொறுமையும் இல்லை சகோ!

    ReplyDelete
  22. நல்ல அலசல் . சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 போல் இல்லை என்பது சரிதான் . நன்றி

    ReplyDelete
  23. ஹாலிவுட் ரசிகன்: கிட்டத்தட்ட ஒரே மாதிரி எண்ணம் இருவரும் கொண்டுள்ளோம் கருத்துக்கு நன்றி

    ReplyDelete

  24. நன்றி கோவை நேரம். இரவு 9 மணிக்கு " வீட்டாருடன் நேரம் செலவிழிக்கிறேன்" என டிவி பார்க்குறது வழக்கம்; அப்படி தான் இந்த நிகழ்ச்சியும் பாக்குறது

    ReplyDelete

  25. நன்றி கோவை நேரம். இரவு 9 மணிக்கு " வீட்டாருடன் நேரம் செலவிழிக்கிறேன்" என டிவி பார்க்குறது வழக்கம்; அப்படி தான் இந்த நிகழ்ச்சியும் பாக்குறது

    ReplyDelete
  26. ரகு:
    //கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்கிற்கு சற்றும் சளைத்ததல்ல விஜய் டிவியின் வின்னர் செலக்ஷன். //
    ஹும் நீங்கள் சொல்வது உண்மையாய் இருக்கலாம்

    ReplyDelete
  27. துளசி மேடம் நன்றி

    ReplyDelete
  28. நன்றி தனபாலன் சார்

    ReplyDelete

  29. நன்றி ரமணி சார். ஒரு ஆர்வம் தான் சார்

    ReplyDelete

  30. சகாதேவன்: கரக்டு தான் நீங்க சொல்வது. பாடகி சித்ராவை யாரும் அப்படி நினைப்பதில்லையே?

    ReplyDelete

  31. ஸ்ரீராம். said...
    ம்.... இந்த நிகழ்ச்சியெல்லாம் பார்ப்பதில்லை. நிறைய மிஸ் செய்கிறேனோ?
    **********
    அப்படியெல்லாம் நீங்க எதுவும் மிஸ் செய்யலை ஸ்ரீராம். பொழுது போகாததுக்கு தான் நாங்களே பாக்குறோம்

    ReplyDelete

  32. மகிழ்ச்சி நன்றி சரளா

    ReplyDelete


  33. கூடல் பாலா : ஆம். எனக்கும் நீங்கள் சொல்லும் கருத்து தான் இம்முறை நிகழ்ச்சி பற்றி உள்ளது

    ReplyDelete
  34. நன்றி பாலஹனுமான் சார். பிரகதி இங்கு தான் படிக்கிறார் என்பதும், அவர் தாயார் குறித்து நீங்கள் சொன்னதும் நிச்சயம் புது தகவல்கள்

    ReplyDelete

  35. சீனி: வார இறுதியில் மாற்றியதில் இந்த நிகழ்ச்சி கொஞ்சம் டல் அடிச்சிடுச்சு

    ReplyDelete
  36. நன்றி அமைதி சாரல்

    ReplyDelete

  37. தருமி சார்: வருகைக்கு நன்றி

    ReplyDelete
  38. நன்றி சுரேஷ்

    ReplyDelete

  39. சுந்தர்ஜி: உங்களுக்கும் சுகன்யா தான் பிடிக்கும் என்பது அறிந்து மகிழ்ச்சி

    ReplyDelete
  40. நன்றி முரளி சார்

    ReplyDelete
  41. நன்றி வடிவேலன்

    ReplyDelete

  42. தனி மரம்: நன்றி

    ReplyDelete

  43. முதல் வருகைக்கு நன்றி சேகர்

    ReplyDelete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. my choice
    1. jayanth
    2. pragathi (US CITIZEN?)
    3. suganya

    ReplyDelete
  46. Rakshitha & Aajith should be back!! Both are well eligible for final when compare with the current participants!!

    ReplyDelete
  47. ஆரம்பத்தில் கொஞ்சம் பார்த்தேன். இப்பல்லாம் பார்க்க முடியவில்லை மோஹன்....

    நல்ல அலசல். பார்க்கலாம்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...