Sunday, March 1, 2015

காக்கி சட்டை - சினிமா விமர்சனம்

காக்கி சட்டை

ஒரிஜினல் காக்கி சட்டை - வேலை இல்லாத கமல் போலிஸ் துறையில் சேர நிரம்ப சிரமப்பட - இறுதியில் அவர் எப்பவோ போலிஸ்- வில்லன்களை பிடிக்க மாறுவேஷம் போட்டார் என முடிப்பார்கள்.

சிவகார்த்திகேயன் இன்றைய காக்கி சட்டை - கான்ஸ்டபிள் சிவா இன்ஸ்பெக்டர் ஆக நினைக்க -   பரபரப்பான கேஸ் ஒன்றை துப்பறிந்து அந்த கனவை நிறைவேற்றுகிறார்.

இன்றைக்கு ரிலீஸ் ஆகும் 10 படத்தில்  - 2 ஹிட் ஆனாலே அதிசயம்.  ஆனால் சிவ கார்திகேயனுக்கோ ஏறக்குறைய 100 சதவீத வெற்றி சதவீதம் ! லா ஆவ் ஆவேஜ் படி இப்படம் தோல்வி படமாய் தான் இருக்கும் என்று மகளை வெறுப்பேற்றி கொண்டிருந்தேன்...



சிவா உடல் உறுப்பு கடத்தல் எனும் சீரியஸ் கதை என்றாலும் - காமெடியை கை விட வில்லை. அவர் நம்பிய காமெடி அவரையும் கை விட வில்லை.

ஸ்ரீ திவ்யாவுடன் சேர்ந்து கூலிங் கிளாஸ் விற்கும் காட்சி.. மனோ பாலாவும் அவரும் சின்ன வயது தோஸ்த் ஆக கனவு காணும் காட்சி; மயில் சாமியுடன் சேர்ந்து செய்யும் அலப்பரை, பிரபுவை " நம்பிக்கை.. அதானே எல்லாம்"   .. என அவர் குரலிலேயே பேசி காமெடி செய்வது என சிரிப்பு கொடி உயர பறக்கிறது.

சின்ன பாத்திரம் என்றாலும் கிடைக்கிற கேப்பில் எல்லாம் பவுண்டரி அடிப்பவர் மயில் சாமி. நீதி மன்றத்தில் ஆஜர் ஆகும் இவர் - முக நூல் மூலம் நட்பானவர் வீட்டில் திருடியதுக்கு காரணம் சொல்கிறார் பாருங்கள்.. தியேட்டர்   கலகலக்கிறது



விஜய் டிவி மீது சிவாவிற்குள்ள பாசம் அது இது எது டீமின் சில ஆட்களை பயன்படுத்தியதில் தெரிகிறது...

பிரபு மற்றும் கல்பனா (சின்ன வீடு  ஹீரோயினா இது.. எப்படி இளைத்து விட்டார் !) கேரக்டர் ரோல்களில் நிறைவாய் செய்துள்ளனர்...

அறிமுக வில்லன்  அடக்கமான நடிப்பில்அசத்தியிருக்கிறார்.. .(டப்பிங்கில் லிப் சிங்க் சரியில்லாதது சிறு குறை )

கடைசியாய் நம்ம ஸ்ரீ திவ்யா.. அம்மணி அழகுன்னா அழகு .. அப்படி ஒரு  அழகு !அந்த லிப்ஸ்டிக் மட்டும் 2 கோட் உடன் நிறுத்தியிருக்கலாம்; 4- 5 கோட் அடிச்ச மாதிரி இருக்கு. (என்ன தான் இருந்தாலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திவ்யா - அழகு, ப்ரெஷ்னெஸ், இயல்பான நடிப்பு மறுபடி எந்த படத்திலும் பார்க்க முடியலை என்பது என்னவோ உண்மை !)

முதல் பாட்டு தவிர மற்ற பாடல்கள்   கேட்க இனிமை; படமாக்கல் சுமார்

இன்டர்வெல் ப்ளாக் - கலக்கல். இறுதியில் வில்லனை பழி வாங்கும் விதமும் சினிமாட்டிக் என்றாலும் - இதை விட சரியா பழி வாங்க முடியாது என சொல்ல வைக்கிறது

சரி.. அப்ப படம் சூப்பரா?

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... நெகடிவ் விஷயம் பத்தி பேசவே ஆரம்பிக்கலை பாஸ் !

ஒரு ஆக்ஷன் த்ரில்லருக்கு இருக்க வேண்டிய வேகம் ​+ விறுவிறுப்பு  மிஸ்ஸிங்.ரெண்டரை மணி நேர படம் மூணு மணி நேர படம் போல எண்ண வைக்கிறது

எதிர் நீச்சலில் அசத்திய இயக்குனர் துரை (இப்படத்தில் வில்லன் பெயர் துரை !) - இப்படத்தை இன்னும்  gripping ஆக எடுத்திருக்கலாம் !

ஆங்காங்கு வரும் சுவாரஸ்ய காட்சிகள் - காமெடி- பட்டுகோட்டை பிரபாகரின் பஞ்ச் டயலாக்ஸ் - சிவாவின் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் ஆகியவை படத்தை ரசிக்க வைக்கிறது

நிச்சயம் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய என்ட்டர்டேயினர் ..

காக்கி சட்டை .. நன்று.. எனினும்.. இன்னும் சிறப்பாய் வந்திருக்கலாம்  !
Related Posts Plugin for WordPress, Blogger...