Sunday, March 31, 2019

சூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்

வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் 4 கதைகள்... ஓரிரு புள்ளிகளில் அவை சந்திக்கின்றன...அதற்கு மேல் கதையை சொல்வது சரியாய் இருக்காது

சாதாரண மனிதர்கள் வாழ்வில் - ஒரே நாளில் நடக்கும் சற்றே அசாதாரணமான சம்பவங்கள் தான் படம்.முதல் பாதி பல இடங்களில் சன்னமாய் சிரிக்க வைத்தது. பாத்திரங்கள் அனைவரும் ஒவ்வோர் பிரச்சனை அல்லது சிக்கலில் இருக்கிறார்கள். ஆனாலும் எல்லா சூழலிலும் புன்னகைக்க வைக்கும் படி பல சம்பவங்கள் நடந்த வண்ணமே உள்ளது

"ஆம்பளைன்னா அப்படி தான் இருப்பான். எப்படி ரெண்டாவது பொண்டாட்டி கட்டிட்டு வந்துட்டான் பாத்தியா ?" என விஜய் சேதுபதி பற்றி (புரியாமல்) உளறும் தாத்தா, மிஷ்கின் மற்றும் அவரின் உதவியாளர் பேசும் பிரார்த்தனை வசனங்கள் (நாங்க சாட்சி )...

பல காட்சிகளில் காட்சிக்கு சம்பந்தம் இல்லாமால் - டிவி அல்லது தெருவில் ஒலிக்கும் ஒலி - மிகுந்த முரணாக சிரிப்பை வரவைக்கிறது.. வயசு பசங்க அடி வாங்கும்போது டிவியில் ஜெமினி கணேசன் " அம்மா எனக்கு வேலை கிடைச்சிருச்சுமா" என சீரியஸாக பேசி கொண்டிருக்கிறார்.. பழைய பட்டு புடவைங்க உங்க வீட்டுக்கே வந்து வாங்கிக்கிறோம் என சீரியஸ் காட்சியில் ஒலிக்கும் குரல்.. என முதல் பாதியில் பல இடங்கள் புன்னகைக்க வைக்கின்றன

இதே பாத்திரங்கள் ... பிற்பகுதியில் பிரச்சனைகள் சந்திக்கும் போது எந்த காமெடியும் இன்றி சீரியஸாக படத்தை தருகிறார் இயக்குனர். இது தான் பெரும் ஏமாற்றத்தையம், வறட்சியையும் தருகிறது

முதல் பகுதி போல் பிற்பகுதியில் ஆங்காங்கு காமெடி - ரசிக்கும்படி வைத்திருந்தால் இப்படம் மறுபடி பார்க்க மாட்டோமோ என எண்ண வைத்திருக்கும்

நல்ல விஷயங்களுக்கு மறுபடி வருவோம்..

விஜய் சேதுபதி, சமந்தா, காயத்ரி, அஸ்வந்த் (சிறுவன்), மிஷ்கின் என பல்வேறு நடிகரின் பாத்திரம் மற்றும்  நடிப்பு ரசிக்க வைக்கிறது

குறிப்பாய் விஜய் சேதுபதி மகனாக வரும் ராசு குட்டி அசத்துகிறான். தந்தையிடம் அவன் கேட்கும் பல கேள்விகள் ஷார்ப்

பாட்டு மற்றும் சண்டை இல்லாமல் 2 மணி நேரம் 50 நிமிட படமெடுக்க எவ்வளவு தைரியம் வேண்டும் !!

நெகட்டிவ் 

காமெடியால் முதல் பாதி போனது தெரியா விட்டாலும் இரண்டாவது பகுதியில் சில காட்சிகள் தேவைக்கும் மேல் நீள்வது அலுப்பை ஊட்டுகிறது

பக்ஸ்  எப்படி ஒரே நேரம் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார்  .. சமந்தாவையும் நாள் முழுதும் பின் தொடர்கிறார்..??

கெட்ட வார்த்தைகள் பாகத் பாசில் உள்ளிட்ட சிலர் சகஜமாக பேசிய வண்ணம் உள்ளனர். குறைத்திருக்கலாம்

கிளைமேக்ஸ் எந்த விதத்திலும் மனதில் பதிய வில்லை. நிச்சயம் பெட்டர் ஆக முடித்திருக்கலாம் 

மொத்தத்தில்

முதல் பாதி அமர்க்களம். இரண்டாம் பாதி ஏமாற்றம் !

Sunday, March 24, 2019

சென்னை சூப்பர் கிங்ஸ் vs RCB பெங்களூரு- IPL - முதல் மேட்ச்: ஒரு அலசல்

சென்னை vs பெங்களூரு .. தோனி vs கோலி ..அதுவும் நம்ம சென்னையில் முதல் மேட்ச் ..இதை விட அட்டகாசமான விஷயம் இருக்க முடியுமா என்ன..

ஆனால் ஏக பில்ட் அப்பிற்கு பின் நடந்தது ஒரு ஒன் சைடட் மேட்ச் ..பெங்களூரு 70 ரன்னிற்கு ஆல் அவுட் ஆக , சென்னை அதனை 17.3 ஓவரில் தூங்கி கொண்டே அடித்து முடித்ததுநவீன திருவள்ளுவர் ஹர்பஜன் சிங் கோலி , டீ வில்லியர்ஸ், மொயின் அலி - 3 விக்கெட் எடுத்ததுமே - பெங்களூரு 100 கூட அடிக்காது என்பதும் சென்னை வெற்றியும் உறுதியாகி விட்டது

பெங்களூரு செய்த தவறுகள் 

வழக்கமான பிட்ச் என நினைத்து 160-180 முயற்சித்து தொடர்ந்து அடித்து ஆடியது தான் தோல்விக்கு பெரும் காரணம். பார்த்தீவ் படேல் உடன் ஒரு ஆட்டக்காரர் நின்று 15 ஓவர் வரை சிங்கிள் சிங்கிளாய் ஆடியிருந்தாலே 120 -130 வரை ஸ்கொர் வந்து - தோனி கடைசி ஓவரில் வந்து - 15 ரன் அடிக்க காட்டு காட்டும் வரை மேட்ச் nail baiting  ஆக சென்றிருக்கும்பெங்களூர் பவுலிங் ரொம்ப சுமார். பாட்டிங்கை இன்னும் வலுப்படுத்தியவர்கள் பவுலிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். இளம் சைனி சரியான பேஸ்  போடுகிறார். போக போக பார்க்கலாம்

சென்னை நல்லதும் கெட்டதும் 

வெற்றியோடு துவக்கியது , ஸ்பின் வைத்து கலக்கியது , பல டைமன்சன் ஆட்டக்காரர்கள் (வாட்சன், பிரேவோ, ஜடேஜா) உடன் டீமை வடிவமைத்தது எல்லாம்  ஓகே

ஆனால் - 70 ரன்னை அடிக்க 17 ஓவர் எடுக்கணுமா? தோனி இறுதி கட்டத்தில் அவசியம் ஏற்பட்டால் ஒழிய ரன் ரேட் பற்றி என்றும் கண்டு கொள்ள மாட்டார் .. ஜெயித்தால் போதும் அவருக்கு

சென்னை டீமில் எத்தனை பவுலர்கள் .. தீபக் சாஹர், தாக்கூர், பிரேவோ, வாட்சன் என மீடியம் பேஸர்கள் ..ஹர்பஜன், தாஹிர், ஜடேஜா, ஜாதவ் என ஸ்பின்னர்கள் ..நேற்று மேட்சில் பிரேவோ மற்றும் தாக்குர் தேவைப்படவே இல்லை.

குறைந்தது ஒரு பேட்ஸ்மேன் கொண்டு வந்திருக்க வேண்டும்..ஒரு பவுலரை குறைத்து விட்டு

போலவே 3 வெளிநாட்டு வீரர்களுடன் மட்டும் ஆடியது என்ன விதமான strategy என்றே புரியவில்லை.

ஜெயித்ததால்   இந்த குறைகள் பேசப்பட வில்லை; தோற்றால் இவை நிச்சயம் பேசப்பட்டிருக்கும்

இயலும் போது ஐ பி எல்  - சென்னை மேட்ச்கள் அல்லது பிற சுவாரஸ்ய மேட்ச்கள் பற்றி எழுத எண்ணம்.. பார்க்கலாம்
*****
தொடர்புடைய பதிவுகள் :

CSK வென்ற லகான் மேட்ச் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சில அனுபவங்கள்


Related Posts Plugin for WordPress, Blogger...