இந்த வருட விருதுகளுக்கு செல்வதற்கு முன் இவ்வருட முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை பார்க்கலாம்
அரசியல்
இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களுக்கு அய்யாவும் பின் அம்மாவும் தமிழகத்தை ஆண்டனர். அய்யாவின் ஆட்சியில் கடைசி சில மாதங்கள், கட்சியினர் மீதான ஊழல் குற்ற சாட்டுகள் மக்களை பெரிதும் வெறுப்படைய செய்ய, ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.
தேர்தல் தொகுதி பங்கீட்டில் தி.மு.க விற்கும் காங்கிரசுக்கும் முட்டி கொண்டது. காங்கிரஸ் அறுபத்தொரு தொகுதி கேட்டது ( இதை விட காமெடி இருக்குமா?) முதலில் முடியவே முடியாது என மறுத்த தி.மு.க பின் ஒத்து கொண்டது. இதே போல அ. தி.மு.க கூட்டணியிலும் தொகுதி பங்கீட்டில் சண்டை வந்து பின் சரியானது.
சென்ற சட்ட மன்ற தேர்தலில் ஒரு சில சீட்டுக்களுக்காக தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறி, தன்னை கைது செய்த " அன்பு சகோதரி" இடம் வந்த வை. கோ இம்முறை சகோதரியிடம் கோபித்து கொண்டு தேர்தலில் போட்டியிட வில்லை என அறிவித்தார் .
வலுவான அ. தி.மு.க கூட்டணி மக்களின் ஆளும் கட்சிக்கெதிரான கடும் எதிர்ப்புணர்வால் பெரும் வெற்றி பெற்றது.
இதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலில் மம்தா வெற்றி பெற்று பல ஆண்டுகளாக அங்கு நடந்த கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முடிவு கட்டினார்.
தமிழக பஞ்சாயத்து தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட இம்முறையும் அ. தி.மு.க பெரும் வெற்றி பெற்றது. சூட்டோடு சூடாக பால், பஸ், மின்சார கட்டண உயர்வை அறிவித்து தற்போது மக்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளது.
முல்லை பெரியார் ஆணை தொடர்பாக வருட இறுதியில் தமிழகம்-கேரளா இடையே பெரும் பிரச்சனை மீண்டும் வெடித்தது. கேரளாவில் இருக்கும் தமிழர்கள் தாக்கப்பட்டனர். உச்ச நீதி மன்றம் தலையிட்டும் கூட வழக்கம் போல் கேரளா செவி சாய்க்க வில்லை.
தமிழகத்தில் பருவ மழை மிக தாமதமாக தொடங்கினாலும் பின் போதும் போதும் என்கிற அளவு கொட்டி தீர்த்தது. சென்னை சாலைகள் மழைக்கு பின் வழக்கம் போல் பல் இளித்தன. இந்த ஆட்சியிலும் சாலைகள் அப்படியே தான் இருக்கும் என்பதை உணர்ந்து மக்கள் பெரு மூச்சுடன் வாழ துவங்கினர். வருட கடைசி வாரத்தில் "தானே புயல்" மீண்டும் பெருமழையை தருவித்தது.
மார்ச் மாதம் நடந்த கடுமையான பூகம்பத்தில் ஜப்பான் நிலை குலைந்தது. 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். ஆயினும் இதிலிருந்து விரைவில் மீண்டு ஜப்பான் தன் பழைய நிலையே எட்டி பிடித்தது. இத்தகைய மோசமான இயற்கை பேரிடரை எப்படி எதிர் கொள்வது என வாழ்ந்து காட்டினர் ஜப்பானியர்கள்.
ஒசாமா பின் லேடன் சுட்டு கொல்ல பட்ட செய்தியை பாரக் ஒபாமா அறிவித்தார். அநேகமாய் அது ஒன்று தான் ஒபாமாவிற்கு இந்த வருடம் நடந்த நல்ல விஷயம். பற்றபடி நிறைய பின்னடைவுகள் தான். வேலை இல்லா திண்டாட்டம் அதிகம் என்கிற குரல் அமெரிக்காவில் தொடர்ந்து ஒலித்தது.
தமிழகத்தில் முல்லை பெரியாறு அணையும், கூடங்குளமும் வருட பின் பகுதியில் பெரும் பிரச்சனைகளாக மாறின. இரண்டு விஷயத்துக்கும் இது வரை எந்த தீர்வும் தெரிய வில்லை.
உயிர் தோழி நீக்கம் நிஜமா, இது நீடிக்குமா என அடுத்த வருட இறுதிக்குள் தெரியலாம்
கிரிக்கெட்
1983-க்கு பிறகு மீண்டும் ஒரு முறை இந்தியா உலக கோப்பை வென்றது கனவு போல் இருக்கிறது. சச்சின் ஒரு முறையேனும் உலக கோப்பை வெல்லும் அணியில் இருந்ததும், தொடர் முழுதும் யுவராஜின் அற்புத ஆட்டமும் மறக்க முடியாதவை. கூடவே இறுதி போட்டியில் தோனியின் ஆட்டமும் அந்த கடைசி சிக்சும் !!
இங்கிலாந்து போய் இந்தியா அடி வாங்க, இங்கு வந்து இங்கிலாந்து அடி வாங்கியது.
சச்சின் நூறாவது செஞ்சுரிக்காக இந்தியா முழுதும் நகம் கடித்து காத்திருக்கிறது.
***
விருதுகள்
மறைந்த எழுத்தாளர் சுஜாதா நினைவாக, அவர் செய்த இந்த செயலை அவர் மானசீக சிஷ்யன் தொடர்கிறேன்.
2010 விருதுகள் வாசிக்க : இங்கே செல்லவும்
2009 விருதுகள் வாசிக்க : இங்கே செல்லவும்
***
2011 - விருதுகள்
சிறந்த படம்: எங்கேயும் எப்போதும்
சிறந்த இயக்குனர் : வெற்றி மாறன் (ஆடுகளம்)
சிறந்த நடிகர் : தனுஷ் ( ஆடு களம்/ மயக்கம் என்ன)
சிறந்த நடிகை: அஞ்சலி
சிறந்த நகைச்சுவை நடிகர் : சந்தானம் (சிறுத்தை)
ரசித்த நடனம் : மாசமா (எங்கேயும் எப்போதும் )
இந்த வருட கனவு கன்னிகள்:
No 1 : அனுஷ்கா
No 2 : அஞ்சலி
No 3 : ஓவியா (களவாணி) ரம்யா நம்பீசன், ப்ரியா ஆனந்த்
சிறந்த கதை: பாஸ்கர் சக்தி (அழகர்சாமியின் குதிரை)
சிறந்த வசனம்: ஞானவேல் (பயணம்)
சிறந்த குணசித்திர நடிகை: லட்சுமி ராமகிருஷ்ணா (யுத்தம் செய்)
சிறந்த குணச்சித்திர நடிகர்: M .S பாஸ்கர் (பயணம்)
சிறந்த இசை அமைப்பாளர் : G.V. பிரகாஷ் குமார் -ஆடுகளம் (தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக)
சிறந்த பாடலாசிரியர் : மதன் கார்க்கி (என்னமோ ஏதோ - கோ ) ;
பா. விஜய் (இன்னும் என்ன தோழா- 7ஆம் அறிவு)
சிறந்த பின்னணி பாடகர்: எஸ்.பி.பி ( அய்யய்யோ நெஞ்சு அலையுதடி ; யம்மா யம்மா காதல் பொன்னம்மா)
சிறந்த பின்னணி பாடகி : சின்மயி ( சார காத்து ; நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ)
மோசமான ஜிராக்ஸ் இயக்குனர் : விஜய் (தெய்வ திருமகள்)
(தான் எடுக்கும் அனைத்து படங்களின் கதையும் வெளி நாட்டில் இருந்து திருடுவதால்)
சிறந்த காமெடி சீக்வன்ஸ் - சிறுத்தை (கல்யாண மண்டப காமெடியும், க்ளைமாக்ஸ் Bomb காமெடியும்)
இந்த க்ளைமாக்ஸ் சீனில் ஒண்ணரை நிமிடம் கழித்து 1 .28-ல் தான் சந்தானம் என்ட்ரி. " ஐ யாம் மம்மூட்டி"
சிறந்த புதுமுக இயக்குனர் : சரவணன் (எங்கேயும் எப்போதும்)
சிறந்த புதுமுக நடிகை : இனியா (வாகை சூடவா)
சிறந்த புது இசை அமைப்பாளர்: சத்யா (எங்கேயும் எப்போதும்)
சிறந்த டிவி தொகுப்பாளர் : சிவ கார்த்திகேயன் ( ஜோடி சீசன் ; சூப்பர் சிங்கர்)
**
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !