Tuesday, March 5, 2013

சரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்

ரவண பவன் ஓனர் கட்டிய இந்த கோவிலின் கதை சுவாரஸ்யமானது. பல்வேறு வழக்குகளிலும் அண்ணாச்சி சிக்கி தவித்த போது , " உன் சொந்த ஊரில் பெருமாளுக்கு ஒரு கோவில் கட்டு. அங்கு வருவோருக்கு அன்ன தானம் செய் ; அப்போது தான் வழக்குகளிலிருந்து வெளிவருவாய் " என ஜோசியர் ஒருவர் அறிவுரை செய்தாராம். அதன்படி அவரது குல தெய்வம் கோவில் இருந்த இந்த இடத்தில் இந்த கோவில் கட்டியுள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக கோவில் மிக பேமஸ் ஆகி விட்டது. திருநெல்வேலி டு திருச்செந்தூர் செல்லும் வழியில் இருக்கிறது இந்த வனதிருப்பதி.


பணம் செலவு செய்யணும் என்று ஆரம்பித்த இந்த கோவில் இப்போது அவர்களுக்கு இன்னொரு பணம் சம்பாதிக்கும் வழியை கொடுத்து விட்டது. கோவில் மூலம் அவர்கள் ஏதும் சம்பாதிக்க வில்லை. சொல்ல போனால் அங்கு உண்டியலே கிடையாது (உண்டியல் வைத்தால் அரசாங்கமே கோவிலை எடுத்து கொள்ளும் என்றும் அதனால் தான் வைக்கலை என்றும் ஒரு சென்னை நண்பர் சொன்னார் உண்மையா என தெரியலை). பொதுமக்கள் டொனேஷன் செய்ய வேண்டும் எனில் அன்னதானத்துக்கு அரிசி, பருப்பு போன்றவை தரலாம் என்று எழுதி போடப்பட்டுள்ளது.

அவர்களுக்கு வருமானம் கோவிலில் இருந்தல்ல; அங்குள்ள சரவணா பவன் ஹோட்டல் மற்றும் லாட்ஜ்ஜில் இருந்து தான். முதலில் கோவிலும், வந்த கூட்டத்தை பார்த்து பின் ஹோட்டலும் லாட்ஜும் கட்டியுள்ளனர்.

ஜூலை 2009 -ல் கட்டப்பட்ட இந்த கோவில் ஒரு காட்டுக்குள் இருக்கிறது. அந்த ஏரியா முழுவதிலும் யாருமே இல்லாமல் இருக்க, கோவில் அருகில் மட்டும் ஆயிரம் பேரை கூட்டமாய் காண முடிவது ஆச்சரியமாய் இருக்கிறது.



மூல கடவுள் திருப்பதி வெங்கடாசலபதி உருவில் இருக்கிறார். வெளியில் நின்ற படியே பார்க்க முடிகிறது. மதியம் 3 மணி வாக்கில் இந்த இடத்தை அடைந்தோம். அப்பவே 15 நிமிடம் கியூவில் நின்று தான் சாமி பார்க்க வேண்டியிருந்தது.

உள்ளே நுழையும் முன் கால்களை தண்ணீரில் நனைத்து விட்டு போகிற மாதிரி , நடக்கிற பாதையில் , குறிப்பிட்ட இடத்தில் 3 அடி நீளத்துக்கு, முழு அகலத்துக்கு தண்ணீர் விட்டு வைத்துள்ளனர்

பெருமாளை வணங்கி விட்டு வெளியே வந்தால் - ஸ்ரீ பூக்கன் பலவேசம், சப்பாணி முத்து, லாடகு சந்நியாசி, இருளப்பர், நட்டான் பலவேசம், முத்து பாளையம்மன் ஆகிய அண்ணாச்சியின் குல தெய்வ கடவுள்கள் உள்ளன

கோவிலில் உள்ள குருக்கள் அனைவரும் பிராமணர்கள் தான்.

கோவில் உள்ளே நுழையவும், பிரசாதம் வாங்கவும் மட்டும் தான் பெரிய கியூ. ஒவ்வொரு நாளும் புளி சாதம், தயிர் சாதம், கேசரி போன்ற ஏதாவது ஒரு பிரசாதம் வழங்கப்படுகிறது. நாம் வழக்கமாய் சாப்பிடும் உணவில் பாதி அளவு அந்த பிரசாதம் இருக்கிறது. டேஸ்ட் கேட்கணுமா என்ன ! அவ்வளவு கூட்டத்துக்கும் சரவண பவன் உணவக டேஸ்ட்டில் இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

மிக பெரிய அண்டாக்கள், ஏகப்பட்ட ஆட்கள் இதற்கு மட்டும் உழைக்கிறார்கள்.

நாங்கள் சென்ற அன்று வைகுண்ட ஏகாதசி .. எனவே " சொர்க்க வாசல் இன்று மாலை 6 மணிக்கு திறக்கப்படும் " என்று எழுதப்பட்டிருந்தது. பக்கா பெருமாள் கோவில் போல ஒரு விஷயமும் விடுறதில்லை !

இந்த வீடியோவில் கோவில் மற்றும் அதன் சுற்று பகுதிகளை ஒரு விசிட் அடியுங்கள்




திருப்பதி போலவே 35 ரூபாய்க்கு பிரசாத லட்டு விற்பனை ஆகிறது. முடி காணிக்கை ( ரூ 50) காது குத்தல் ( ரூ 100) போன்றவையும் நடந்தேறுகிறது.

உடன் வந்த நண்பர் வேங்கடப்பன் " 3 வருஷமா ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் ஏதாவது ஒரு improvement இருக்கு; இப்போ வெளியில் கூரை புதுசா போட்டிருக்காங்க. கோவிலும் இந்த இடமும் ரொம்ப பாப்புலர் ஆகிட்டிருக்கு " என்றார்.

இந்த ஏரியாவை சுற்றி நவ திருப்பதி என்கிற பெயரில் 9 கோவில்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஒரே நாளில் சுற்றி வணங்கி வருவோர் உண்டு. வன திருப்பதி என்கிற இந்த கோவில் வந்த பின், நவ திருப்பதி கோவில்கள் - ஒன்பதுடன், பத்தாவதாக - இந்த கோவிலையும் மக்கள் வணங்கி வருவதாக சொல்கிறார்கள். சொல்ல போனால் நவ திருப்பதி போலவே - வன திருப்பதி என்று பெயர் வைத்ததும் கூட மக்களை கவர்வதற்காக இருக்கலாம் !

இந்த கோவில் இருக்கும் இடத்தை சுற்றி இன்னமும் சரவண பவன் ஓனருக்கு விவசாய பண்ணை இருக்கிறதாம் !

மதிய சாப்பாடு இங்கிருந்த சரவண பவனில் தான் சாப்பிட்டோம். மதியம் மூணரைக்கு சென்றும் அவ்வளவு கூட்டம் ! காத்திருந்து தான் சாப்பிட வேண்டியதானது. சென்னையை விட அவர்கள் தரும் ரைஸ் அளவு நிச்சயம் அதிகம் ( இங்கிருக்கவங்க நல்லா சா ப்பிடுவாங்க ; சென்னை மாதிரி கொஞ்சமா Quantity கொடுத்தா அவங்களுக்கு பத்தாது - வேங்கடப்பன் ) ஆனால் சென்னை அளவு குவாலிட்டி இல்லை என்று தான் சொல்லணும்.

கோவிலையும் அதை சுற்றி உள்ள இடங்களையும் கிளம்பும் முன் மீண்டும் ஒரு முறை பார்க்கிறேன்:

கோவிலை தவிர அந்த ஏரியா முழுக்க இப்படத்தில் உள்ளது போல் தான் இருக்கும்- தேரி காடு! இப்படம் கோவிலுக்கு நேர் எதிரில் எடுக்க பட்டது


தேரி காடு என்று சொல்ல கூடிய செம்மண் பூமி- காடு - அங்கு இந்த கோவில், ஹோட்டல், லாட்ஜ் மூன்றும் சேர்ந்து தூள் கிளப்புது. எவ்வளவு கார்கள்... தனியார் பேருந்துகள் !

வியாபாரத்தில் சில பேருக்கு மட்டும் தான் இந்த அதிர்ஷ்டம் இருக்கும் போலருக்கு என்று பேசியவாறு அங்கிருந்து கிளம்பினோம்
**********
டிஸ்கி: கன்யாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்ததை இரு பிரிவுகளாக பிரித்து வைத்திருந்தேன். நாகர்கோவில், கன்யாகுமரி அதனை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றி பார்த்தது முதல் பகுதியாகவும், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களை பார்த்தது இரண்டாம் பகுதியாகவும்...

முதல் பகுதியில் (கன்யாகுமரி) சில இடங்கள் எழுத வேண்டும், ஆயினும் , சில காரணங்களால் திருநெல்வேலி குறித்து நடுவிலேயே எழுத வேண்டியுள்ளது. 

அதென்ன சில காரணங்கள்?

1. திருநெல்வேலி டூர் முழுக்க கோவில்கள் விசிட் தான் . அவற்றை மட்டும் தனியே எழுதினால் ஆன்மீக பக்கமாகி நிறைய பேர் ஜெர்க் ஆகி ஓடிடுவார்கள். எனவே அவற்றை இப்போதே கலந்து விட வேண்டியுள்ளது.

2. கன்யாகுமரியின் மற்ற பகுதிகள் பற்றி இன்னும் எழுத வில்லை. நேரமில்லை ! Draft -ல் இருப்பதை மட்டும் வெளியிட வேண்டிய சூழல்.. :))
*********
அண்மை பதிவுகள்

தொல்லை காட்சி- கிச்சன் சூப்பர் ஸ்டார் சரவணன் மீனாட்சி -போக்கிரி

Barfi படமும், தி. ஜானகிராமனின் மரப்பசுவும்

ரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை - அறியாத தகவல்கள் - பேட்டி

39 comments:

  1. என்னதான் ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருந்தாலும், சரவண பவன் மெய்ன்டெய்ன் பண்ணும் குவாலிட்டியே தனிதான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரகு நன்றி

      Delete
  2. பணம் செலவு செய்யணும் என்று ஆரம்பித்த இந்த கோவில் இப்போது அவர்களுக்கு இன்னொரு பணம் சம்பாதிக்கும் வழியை கொடுத்து விட்டது.

    வியப்பளிக்கும் விஷயம் ..!

    அருணாசலம் படத்தில் ரஜினி செலவு செய்ய எடுத்த முயற்சிகள் லாபம் கொட்டிய மாதிரி ..!

    ReplyDelete
    Replies
    1. ராஜ ராஜேஸ்வரி மேடம்: கரக்ட் தான் நன்றி

      Delete
  3. நாங்க முதல் தடவைப் போனப்ப ஜூஸ் கடை மட்டும் போட்ருந்தாங்க.. அப்பவே 50ரூ.. இப்ப கடைசியா போகும்போது ஹோட்டல்,லாட்ஜ் எல்லாம் வந்தாச்சு..

    போற வழில ஒரு சர்ச் /கிருத்துவ சம்பந்தப்பட்ட சபை இருக்கு. நாங்க போன அன்னிக்கு அங்க ஏதோ விஷேசம்.செம கூட்டம்.மிரண்டுட்டேன். தோராயமா 700-800 வண்டியாவது இருக்கும். ரோட்டோரமா பார்க் பண்ணிருந்தாங்க

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் சென்ற அனுபவம் சொன்னதுக்கு நன்றி ees

      Delete
  4. போன வருடம் ஊர் சென்றிக்கும் போது அந்த வழியாய் போகும் போது கவனித்திருக்கிறேன்...இப்போ இவ்வளவு மாறுதலா...விவரமாக எழுதியிருக்கிறீர்கள்...நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க அகிலா மேடம்; அதிசயமா நம்ம பக்கம் எட்டி பாத்துருக்கீங்க நன்றி

      Delete
  5. சில நாட்களுக்கு முன் திருச்செந்தூர் சென்று வரும் வழியில் இக்கோவிலுக்கு சென்றேன் ...பிரமாதம் ...ஆனால் கோவில் அருகிலிருக்கும் கடைகளில் பொருட்களின் விலை அதிகம் ...ஒரு கடைக்காரரிடம் காரணம் கேட்டேன்...இங்கு வாடகை சற்று அதிகம் அதனால்தான் என்றார்...

    ReplyDelete
    Replies
    1. அந்த காட்டில் வாடகை அதிகம் வாங்குறாங்களா? ஹும் !

      Delete
  6. சமீபத்தில் சென்னை சரவணா ஹோட்டல் வாசல்களில், குழந்தை பேறு இல்லையென்றால் வன திருப்பதி கோயில் செல்லுங்கள் என்ற விளம்பரத்தை பார்த்தேன்.ஏதோ ,பழைய கோயில், பரிகார ஸ்தலம் போல என்று நினைத்து, சரவணாபவன் திருப்பணி தான் செய்கிறது என்றும் நினைத்தேன். இப்ப தான் புரியுது!!

    ReplyDelete
    Replies
    1. //சரவணா ஹோட்டல் வாசல்களில், குழந்தை பேறு இல்லையென்றால் வன திருப்பதி கோயில் செல்லுங்கள் என்ற விளம்பரத்தை பார்த்தேன்//

      இது வேறயா? அடேங்கப்பா !

      Delete
  7. என்ன கொடுமை சார் இது?

    ReplyDelete
    Replies
    1. கண்ணை நம்பாதே :))

      Delete
  8. We need to appreciate the business strategy.Though he is staunch bakthar of MURUGAN, he has built the perumal temple.Availabilty of Vaishnava archakas in the nearby area, expected bhaktharhal who visit navathiruppathi.Naturally his business vision makes money for him.
    That is the business secret. Vallavan endrum velvaan.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப அழகா சொன்னீங்க kkk :)

      Delete
  9. சுவாரஸ்யமாக தான் இருக்கிறது. ..

    ReplyDelete
  10. As KKK has almost said, there r Vaishanvite Brahmins available aplenty in the surrounding area. The Pandiyan Kings popularised the Nava Tirupathis, who brought them here. Except temple work, they hav nothing to rely on for livelihood. With the less and less population visiting these 9 temples, the Brahmins r jobless and penniless.

    This Vana Tirupathi, if it becomes famous due to clever business strategy, will hopefully bring some livelihood to this Vaishnavite Brahmins population of Srivaikuntam around which these 9 temples r located.

    God needs money and the money invested in God gets good returns to the man. So, only a money-minded man can help God and the people dependent upon God: the priests, the lodge boys, the juice shop owners, the taxi and auto drivers, the coconut sellers.

    Good returns to Saravana Bhawan owner. At the same time, a good and needy service to the dying population of Srivaikuntam Iyenagaar Brahmins. Lets thank the hotelier.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி குலசேகரன் ; கோவில் இலவசமாக உள்ளதால், அதிக செலவின்றி இங்கு வரும் ஏழைகளுக்கும் மனதளவில் எதோ ஒரு நிம்மதி கிடைக்க கூடும்

      Delete
  11. இங்கேயெல்லாம் நீங்க நேரே போயிப் பார்த்திருக்கீங்க என்பது பாராட்டுதற்குரியது. நவதிருப்பதிகளை நான் கண்டிருக்கிறேன். ஆனால் வனதிருப்பதி காணும் முன்பாக அந்தப் பகுதியைவிட்டு வந்துவிட்டேன். அதுவும் நல்லதற்கே! சரி, அண்ணாச்சி எங்கிருக்கிறார்?

    ReplyDelete
    Replies
    1. சார் நீங்களும் ஒரு எட்டு போய் பார்த்திருக்கலாம் ; அண்ணாச்சி வெளியில் தானே இருக்கிறார்?

      Delete
  12. அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் சமுதாயப் பணி. தங்களின் அனுபவம் இளைஞர்களுக்கு நல் வழிகாட்டுதலாக இருக்கும். இனி வரும் நாட்களில் நம் சந்ததிகள் நல்லவர்களாகவும் மனித நேயம் மிக்கவர்களாகவும் தயாள குணம் படைத்தவர்களாகவும் இருக்க வேண்டுமே அன்றி பணம் பண்ணும் இயந்திரங்களாக இருக்கக் கூடாது என்று கருதும் எண்ணம் கொண்டவர்களில் நானும் ஒருவன். உங்களது சிந்தனைகள் செயலாக்கம் பெற துணையாக இருக்க என்னால் முடியும்.

    ReplyDelete
  13. வனதிருப்பதி கோவில் பற்றிய சுவாரசியமான தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம்வி மகிழ்ச்சி

      Delete
  14. வனதிருப்பதி சென்றதில்லை... முழு தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஒரு முறை அந்த பக்கம் செல்லும்போது சென்று வாருங்கள் நண்பரே

      Delete
  15. மேற் சொன்ன கோவில் அளவு, ஒரு கோவில் கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும் இந்தியப் பணத்தில்.

    லைசென்ஸ் இல்லமால் எந்த அரசாங்க அனுமதியில்லாமல் [நம் சொந்த இடத்தில்] ஆரம்பிக்கக் கூடிய தொழில் இது என்று தெரியும். மற்றபடி marketing, வியாபார உத்தி இது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததே! இதில் பணத்தை விட மக்களின் பக்தி தான் மூலதனம் என்பதை நன்கு அறிந்தவன்.

    மேலும் சில கேள்விகள்.
    வெளிநாட்டு இந்தியர்களுக்கு அனுமதி தேவையா?
    அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப் படுமா?

    ReplyDelete
    Replies
    1. நம்பள்கி: நீங்க கேட்ட கேள்வி எதுக்குமே எனக்கு பதில் தெரியலை; ஜாலியா ஒரு ரவுண்ட் போயி ஒரு பதிவு எழுதிட்டேன். அவ்ளோ தான். அதுக்கு மேலே டீப்பா போகலை. தப்பா நினைச்சிக்காதீங்க

      Delete
  16. Replies
    1. நன்றி முரளி சார்; நலமா? நாம பேசி நாளாச்சு

      Delete
  17. வன திருப்பதி - புதிய தகவல்.....

    ReplyDelete
  18. நானும் பார்த்திருக்கிறேன். முழுக்க முழுக்க வியாபாரம் தான்.

    ReplyDelete
  19. திரு. மோகன் குமார்:
    நான் அந்த கேள்விகளை கேட்டது, வியாபராம் செய்ய அல்ல! என்னால் தாங்க முடியவில்லை பக்தி என்ற பெயரினால் மக்கள் சுரண்டப்படுவதை; அதை இந்தக் கேள்விகள் புரியவைக்குமா என்ற ஒரு நோக்கில் மட்டுமே.

    நீங்களே, பாருங்கள் இன்னும் பத்தே பத்து வருடத்தில்...
    இந்த கோவில் புராணா காலத்தில் இருந்து விளங்கிய ஸ்தலம் என்ற புளுகு மூட்டை அவிழும். இதையே கோவில் அர்ச்சகர்கள் இந்த கோவிலின் ஐதீகம் என்று புளுகுவார்கள்; அதை மக்கள் நம்புவார்கள்; ஊடகங்களில் வரும்; பண போக்குவரத்து இங்கே பிச்சுக்கும்.

    1996 - ல் என் நண்பன் ஒரு நல்ல பிசினஸ் ஏதாவது சொல் என்றும் அதற்க்கு ஒரு ப்ராஜெக்ட் ரிப்போர்ட் கொடுடா என்றான், நான் ப்ராஜெக்ட் ரிப்போர்ட் நன்றாக செய்வேன் என்பதால்.

    எனக்கு எல்லாமே கிண்டல் நக்கல்; ஆகவே, கிண்டலாக, ஒரு கோவில் ப்ராஜெக்ட் ரிப்போர்ட் செய்து என் நண்பனுக்கு கொடுத்தேன். (அவன் குடும்பத்திற்கு நிலபுலன்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் எக்கச்சக்கம்) அவன் அசந்து விட்டான.

    அது கட்டாயம் நூற்றுக்கு நூறு viable project என்றாலும் மக்களை ஏமாற்றக் கூடாது என்று தூக்கி வீசி விட்டான் என் ஆருயிர் நண்பன்...இது உண்மை.

    அது வந்திருந்தால் வன திருப்பததி 11 -வது ஸ்தலமாக இருந்திருக்கும்...
    அப்ப 10- ஸ்தலம்? என் ""நண்பனின்"" புராணா ஸ்தலமாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  20. நானும் போயிருக்கேன்.
    இப்படியும் சம்பாதிக்கலாம் என சரவணபவன் உரிமையாளர் நமக்கு உணர்த்தியிருக்கிறார்.
    திருவிழா சமயங்களில் பக்தர்கள் வருவதற்கு வேன் சர்விஸ் உண்டு.
    பலருக்கும் இலவச உணவு அளிப்பதால் இதை பற்றி அதிக விமர்சனங்கள் செய்ய விரும்பவில்லை.

    ReplyDelete
  21. நான்கூட இப்போ 20 நாட்களுக்குமுன் வனதிருப்பதி போனேன் கூட்டம் அதிகம் என்பதால் வெளியில் நின்றே பார்த்துவந்துவிட்டேன்(என் கணவருக்கு பொறுமை அதிகமில்லை தவிர என்னை அழைத்துச்செல்வதே பெரிய விஷயம் கோவில் கட்டிய புதிதில் குரும்பூரி இருந்து இலவசமாக மக்களை அழைத்து செல்ல காலையும் மாலையும் ப்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்திருந்தார் அண்ணாச்சி. இல்லாவிட்டால் எப்படி அந்தக்காட்டுக்குள் செல்வார்கள் மெதுமெதுவாக கோவில் பிரபலமாகி விட்டது..

    ReplyDelete
  22. வனததிருப்பதியில் சரவணபவன் திறக்குமுன் அன்னதானம் நடக்கும்.இபபோது கிடயாது.எல்லா கோயிலிலும் எத்தனை மணிக்கு என்ன பூஜை என்று விளம்பரம் போடுவார்கள் இங்கு மட்டும் என்ன பிரசாதம் எனறு விளம்பரம் போடுவார்கள். கோவிலுக்கு வரும் வழியில் மோஹன் c லாசரஸ் நடத்தும் யேசு கம்பனியிலும் நல்ல BUSINESS தான்

    ReplyDelete
  23. ஏழையின் சொல் அம்பலம் ஏறாது. பணக்காரன் சொல் (அவன் கொலைகாரனை , கொல்லைகரனாய் , பெண் பொறுக்கியாய் இருந்தாலும்) கட்டாயம் கோவில் கூட கட்டும்.

    ReplyDelete
  24. lovely article .. can we know the map location

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...