Saturday, October 31, 2015

சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் ஒரு அனுபவம்

ஆனந்த விகடனில் சுஜாதா பல ஆண்டுகள் எழுதிய கற்றதும் பெற்றதும் புத்தக வடிவில் வாசிக்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது.

இதன் பல பாகங்கள் வந்துள்ளது; நான் படித்தது குறிப்பிட்ட ஒரு பாகம் மட்டுமே.

இந்த கால கட்டத்தில் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்துள்ளார்.. சில இடங்களில் அரசாங்கத்தை மென்மையாகவும், சுருக் என்றும் விமர்சிக்கும் சுஜாதா வேறு பல இடங்களில் கலைஞர் என்று குறிப்பிட்டு பாராட்டவும் செய்கிறார்..விகடனில் வாரா வாரம் வரும்போதே ஏனோ என்னால் எல்லா பத்தியும் வாசிக்க முடியாது. குறிப்பாக அறிவியல் சார்ந்து விரிவாக அவர் எழுதுவது நமக்கு சம்பந்தமில்லாத விஷயம் என ஜம்ப் செய்து என்று விடுவது வழக்கம். இம்முறையும் அவ்வாறே....

இதனை தாண்டியும் கற்றதும் பெற்றதும் - ஒரு நூலாக படிப்பது - இனிய அனுபவமே தந்தது. இதற்கு முக்கிய காரணம் சுஜாதாவின் நகைச்சுவை.. எதையும் சுவை பட சொல்லும் லாவகம்..

ஒவ்வொரு வாரமும் தனக்கு பிடித்த கவிதை, மேற்கோள், புத்தகம் என தேடித்தேடி அறிமுக படுத்த - இன்னொரு நல்ல மனது கிடைக்குமா? சுஜாதாவின்  மோதிர கையால் குட்டு பட்டாலே அந்த நபர் மேல் தனி வெளிச்சம் விழ துவங்கி விடும்..

சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலி பற்றி சொல்லும் போது உலகம் முழுதும் பாராட்டப்பட்ட அந்த படம் - அதன் நாவலாசிரியருக்கு திருப்தி தர வில்லை என்ற தகவலை சொல்கிறார். கூடவே நீதி: வாழ்வில் எல்லோரையும் திருப்தி படுத்தி விட முடியாது.

போலிஸ் அதிகாரி கார்த்திகேயனுடன் விபசார விடுதிக்கு ஒரு முறை ரைடு சென்றதும், அங்கிருந்த ஒரு தமிழ் பெண் அந்த நேரத்திலும் அவரிடம் வந்து " உங்க புக்கெல்லாம் படிச்சிருக்கேன். ரொம்ப புடிக்கும் " என்பதில் - தான் சற்று அதிர்ந்து போனதையும் சொல்கிறார். மேலும் மறு நாள் கோர்ட்டில் நீதிபதி, அந்த பெண்கள் எல்லாருமே - இதெல்லாம் ரொம்ப சாதாரணம் அடிக்கடி நடப்பது தான் என்கிற தொனியில் பேசி பழகியதை வியப்புடன் பகிர்கிறார்..

காஷ்மீர் பிரச்சனை பற்றி .. இதற்கு ஒரே தீர்வு " எக்கேடு கெட்டு போ" என காஷ்மீரை துறந்து விடுவதே " என்று அவர் எழுத.. ஏராள எதிர்ப்புகள்.. பின் மீண்டும் தனது நிலைக்கு காரணத்தை விரிவாக, பொறுமையாக எடுத்து சொல்கிறார்..

நினைத்தாலே இனிக்கும் சினிமா உருவான நேரம் - கண்ண தாசனுடன் "எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் " பாடல் உருவான விதத்தை சுவை பட சொல்கிறார்...

சுஜாதா அவார்டுகள் என்பவை - எத்தனை எத்தனை தளங்களில் இருந்துள்ளது.. எவ்வளவோ படித்து கொண்டு, எழுதி கொண்டு எப்படி கர்நாடக சங்கீதம் துவங்கி, ரேடியோ, டிவி என அனைத்து துறைகளையும் கவனித்துள்ளார் என்ற வியப்பு மேலிடுகிறது...

கற்றதும், பெற்றதும்.. Recommended For Diehard fans of Sujatha !!

Tuesday, October 27, 2015

வானவில்: கமலின் அபிமானம்- அகம் புறம்- பஜ்ரங்கி பாய்ஜன்

பார்த்த படம் - பஜ்ரங்கி பாய்ஜன்

சல்மான் கான் நடித்த இப்படம் இப்போது தான் கண்டேன். பாகிஸ்தானிலிருந்து தவறி வந்த - பேச முடியா குழந்தையை அவரது பெற்றோரிடம் சல்மான் சேர்த்து வைப்பதே கதை.

நிச்சயம் சல்மான்க்கு இது ஒரு வித்தியாச படம் ! எப்போதும் அடி தடி, டூயட் என இருக்கும் அவருக்கு - முழுக்க அமைதியான பாத்திரம் ( 2 சண்டைகள் இருப்பினும் அவையும் விரைவில் முடிகின்றன )

மனதை கொள்ளை கொள்வது பேச முடியாத அந்த சிறுமி தான்  -  வெள்ளந்தி சிரிப்பு- பேசும் விழிகள் என ரசிக்க வைக்கிறாள்

சல்மான் பாத்திரம் - மகாபாரத தர்மன் போலவும், அரிச்சந்திரன் போலவும் எப்போதும் பொய் சொல்லாதது சில நேரம் எரிச்சல் வர வைத்து விடுகிறது.. யோவ் பொய் சொல்லி தொலையேன் என .. ஆனால் இறுதியில் அவர் எல்லா இடத்திலும் ஒரே விதமாய் பேசியதால் மட்டுமே தப்புகிறார் என காண்பித்து ஜஸ்டிபை செய்கிறார்கள்..

சற்று சினிமாட்டிக் இரண்டாம் பகுதி தான்.. நிஜத்தில் நடக்க வாய்ப்பே இல்லை.. இருப்பினும் நிச்சயம் ரசிக்கவும், சில துளி கண்ணீரும் வர வைக்கும் இப்படத்தை நல்ல சினிமா விரும்புவோர் நிச்சயம் காணலாம் !

கிரிக்கெட் பக்கம்

நல்ல வேளை.. இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையேயான கடைசி ஒரு நாள் மேட்ச்  பார்க்கவில்லை (பயணத்தில் இருந்தேன்)

நெருக்கமாக சில மேட்ச் முடிவுகள் சென்றாலும் கடைசி மேட்ச்சில் மரண அடி.. இந்தியா சொந்த மண்ணில் இப்படி ஒரு நாள் சீரிஸில் தோற்பது அரிதான விஷயம்.. வேர்ல்ட் கப் ஜெயித்த அதே அணிக்கு ஏன் இந்த நிலை?

மிக முக்கிய காரணம் - பவுலிங்; வேக பந்து வீச்சு மற்றும் ஸ்பின் இரண்டிலும் சொதப்பினர். அஷ்வின் இல்லாதது பெரும் இழப்பு என்பதெல்லாம் சும்மா; ஒரு தனி நபரை நம்பியா ஒரு டீம் இருக்கும் ?

பீல்டிங் - தோற்ற மேட்ச்களில் சரியாக சொதப்பியது. தவான்- ரைனா இருவரும்  அனைத்து மேட்ச் ஆடி- ஆளுக்கு ஒரு அரை சதம் மட்டும் அடித்தனர். ரோஹித் ஷர்மா முதல் மேட்சுக்கு பின் அடிக்கவே இல்லை.

சரியான ஆள் ரவுண்டர் இல்லாமல் இந்தியா திணறுகிறது- 5 பவுலர்கள் வைத்து கொண்டு ஆடுவது அணியின் பேலன்சை சீர் குலைக்கிறது.

தோனி- காப்டன்சி விட்டு வெளியே வந்து வெறும் கீப்பர் ஆக ஆடலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

டெஸ்ட் மேட்சிலாவது இந்தியா ஜொலிக்கிறதா என பார்ப்போம்.

கமல் நடிக்கும் போத்தீஸ் விளம்பரம் 

இதுவரை விளம்பரமே நடிக்காத கமலின் முதல் விளம்பரம் என அதீத முஸ்தீபுடன் வெளியான போத்தீஸ் விளம்பரம் செம மொக்கையாய் இருந்தது..

கமல் படம் போல - முழுக்க, முழுக்க கமலை சுற்றியே அபிமானம், அபிமானம் என சுழன்று விட்டு - இப்படியாப்பட்ட மாட்டை இந்த மரத்தில் தான் கட்டுவார்கள் என - கடைசியில் போத்தீஸ் என சொல்லி முடித்தார்கள்.. கொஞ்சம் கூட இம்ப்ரசிவ் ஆக இல்லை.

ஆனால் தீபாவளி ஸ்பெஷல் என வெளியிட்ட கமல் வேட்டியுடன் வரும் விளம்பரம் - ஓரளவு ஓகே. ஒரே ஷாட்டில் எடுத்தது ரசிக்க வைக்கிறது... மேலும் கமல் இங்கு தீபாவளி என்ற பண்டிகை பற்றி தான் பேசுகிறார்- தன்னை பற்றியல்ல.

இரண்டையும் விட கார்த்தி மற்றும் காஜல் நடிக்கும் சென்னை சில்க்ஸ் விளம்பரம் - சுவாரஸ்யம். காஜல் ஒவ்வொரு உடையாய் போட்டு கொண்டு வர, அதற்குள் கார்த்தி வேறு ட்ரெஸ் மாறியிருப்பார் - சென்னை சில்க்ஸில் இவ்வளவு வெரைட்டி கிடைக்கும் என்கிற மெசேஜ் சரியாக சென்று சேர்கிறது.. மேலும் கார்த்தி & காஜல் எப்பவுமே செம காம்பினேஷன்..

அகம் புறம் - குறும்பட விமர்சனம் 

பதிவர் குடந்தையூர் சரவணன் எழுதி இயக்க - பதிவர் நண்பர்கள் பலரும் நடித்திருக்கும் குறும்படம்  - அகம் புறம்.

கதை சற்று ஆர்வத்தை எற்படுத்துகிறது.. முடிவு இன்னும் சற்று தெளிவாகவும் நச்சென்றும் இருந்திருக்கலாம்.

சில நண்பர்கள் நடிப்பு இயல்பு - இன்னும் சிலர் புதிதாய் நடிப்பதால் சற்று செயற்கை தன்மை தெரிகிறது. அடுத்தடுத்து நடிக்க, நடிக்க இந்த பிரச்சனை சரியாகி விடும். .

பதிவர்கள் நட்பு - இப்படி ஒரு கூட்டு முயற்சியாய் வந்திருப்பதை காண மகிழ்ச்சியாய் உள்ளது.

இக்குறும் படத்தை இங்கு காணலாம்:ஹெல்த் பக்கம் 

உடல் எடை கூடுவதற்கு ஒரு மிக முக்கிய காரணம் - வெளியில் சாப்பிடுவது !

உடல் எடை குறைப்பு என்கிற எண்ணம் சற்று தீவிரமான பின், முடிந்த வரை வீட்டில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வது நல்லது. வெளியில் சாப்பிடும் போது - உணவு வகைகள் அதிகம் என்பதாலேயே சற்று அதிகம் சாப்பிடுவது இயல்பான ஒன்று என்கிறது பல்வேறு ஆய்வுகள்.. வீட்டில் அந்த அளவு வெரைட்டி இருக்காது. மேலும் நாம் நிஜமாகவே சீரியஸ் என்றால் - மனைவி அல்லது அம்மா - நம் உடல் எடை கூடாத நல்ல உணவுகளாக  சமைக்க துவங்குவர்..

அழகு கார்னர் டிவி பக்கம் : சூப்பர் சிங்கர்  

இந்த முறை சூப்பர் சிங்கர் சற்று வேகமாய் நடப்பதாய் தோன்றுகிறது. முன்பெல்லாம் ஒரு வாரம் முழுக்க போட்டி, போட்டி என சொல்லி கடைசியில் - இந்த வாரம் நோ எலிமினேஷன் என ஜல்லியடிப்பார்கள்.. இப்போது அப்படி இல்லை. அரிதாக  எலிமினேஷன் இல்லா விடில் அடுத்த வாரம் நிச்சயம் இருவரை வெளியே அனுப்புகிறார்கள். இதனால் இன்னும் 3  மாதத்தில் சூப்பர் சிங்கர் இறுதி கட்டம் எட்டும் என நம்புகிறேன்..

பதக்கம் வெல்வது இம்முறை ஒரு பெண்ணாய் இருக்குமா? வரும் வாரங்களில் பேசுவோம்...
*****
10 எண்றதுக்குள்ளே .. சினிமா விமர்சனம் - இங்கு 

நானும் ரவுடி தான் - சினிமா விமர்சனம் : இங்கு 

Thursday, October 22, 2015

10 எண்றதுக்குள்ளே .. சினிமா விமர்சனம்

விக்ரம், சமந்தா நடிக்கும் ஒரு Road பிலிம்... கோலி சோடா இயக்கிய விஜய் மில்டன் இயக்கம்..டிரைலரை பார்க்கும் போதே லைட்டா ராஜ பாட்டை நியாபகம் தான் வந்தது. இருந்தாலும் பெண் கேட்டால் என்பதால் சென்றோம்...

கதை 

கார் டிரைவர் விக்ரம் - அதிரடியான பேர்வழி; ரிஸ்க் சமாச்சாரங்களை ரஸ்க் சாப்பிடுற மாதிரி 10 என்றதுக்குள் முடிப்பவர்.. சமந்தாவை  வட இந்தியாவிற்கு கடத்தி செல்லும் வேலை இவருக்கு வருகிறது.. எதற்கு கடத்துகிறார்கள்.. சமந்தா தப்பித்தாரா என்பது திரைக்கதை...

படம் எப்படி 

தமிழில் நல்ல ரோட் பிலிம்கள் குறைவே. ஏனோ நம்ம மக்கள் இந்த ஜேனரில் சொதப்பி விடுகிறார்கள் (பையா, அன்பே சிவம் விதி விலக்கு) 

நம்ப முடியாத கதை + காட்சிகள் ; அதீத ஹீரோயிசம் ; கொஞ்சமும் மனதில் ஒட்டாத பாத்திரங்கள்.. காமெடி என்பது சிறிதும் இல்லை (சமந்தா கார் ஓட்ட கற்று கொள்வது நிச்சயம் சிரிப்பை வரவழைக்கலை  !)
படத்தின் இறுதி 30 நிமிடம் தான் படம் - எதை நோக்கி பயணிக்கிறது என்பதே புரிகிறது. உண்மையில் இந்த காட்சிகளில் சில பகுதி முன்பே காட்டியிருக்கலாம். அப்போதாவது சமந்தா அந்த கூட்டத்திடமிருந்து தப்புவாரா என்ற பதை பதைப்பு நம்மிடம் சிறிதேனும் ஒட்டியிருக்கும்.

விக்ரம் - நல்ல பாத்திரங்கள் தேர்ந்தெடுத்து நடிப்பவருக்கு அவ்வப்போது இது போல திருஷ்டி பரிகாரமும் சேர்ந்து விடும்.. இப்படி மோசமான கதை ஜெயிக்கணும் என்றால் - 10 - 20 வருடம் முன்பு ரஜினி நடித்திருந்தால் தான் அது சாத்தியம்; அப்போது தான் அவர் நடித்த சுமாரான  படங்கள் கூட ஓடின..

சமந்தா - ஒரு கண்ணாடி எதற்கு மாட்டி அசிங்கப்படுதினார்களோ தெரியவில்லை. நீதானே என் பொன் வசந்தத்தில் - நடிப்பில் அசத்திய சமந்தாவா இவர்? அநேகமாய் ஒரே வித எக்ஸ்ப்ரஷன் ... கடைசி 15 நிமிடம் இன்னொரு பரிமாணம் மட்டும் ரசிக்க வைக்கிறது

பசுபதி - நீட்.
இசை -  இமான் என டைட்டிலில் போட்டார்கள் !!!!!!!!

படத்தின் முக்கிய விஷயத்துக்கு - இறுதி கட்டத்தில் வரும்போது நாம் - அநேகமாய் ஆர்வம் வற்றி போய் விடுகிறோம்.. இதனால் தான் கதையின் மைய முடிச்சை முன்பே கோடிட்டு காட்டியிருந்தால் படம் லேசாக தப்பித்திருக்க வாய்ப்புண்டு..

10 எண்றதுக்குள்ளே  - Below Average ; Watch it in TV soon !

******

நானும் ரவுடி தான் - சினிமா விமர்சனம் : இங்கு 

Wednesday, October 21, 2015

நானும் ரவுடி தான் - சினிமா விமர்சனம்

போடா போடி என்கிற சுமாரான படம் தந்த விக்னேஷ் சிவனின் இரண்டாவது படைப்பு " நானும் ரவுடி தான்"

விஜய் சேதுபதி, நயன், ராதிகா, பார்த்திபன், RJ பாலாஜி  என நட்சத்திர கூட்டம்.. தனுஷ் தயாரிப்பு; பெரிய அளவு எதிர்பார்ப்பின்றி தான் படத்துக்கு சென்றோம்..கதை

ஹீரோ - விஜய் சேதுபதி ; ஹீரோயின் நயன் இருவருமே போலிஸ் வீட்டு பிள்ளைகள் ...

விஜய் சேதுபதிக்கு ரவுடியாவதே கனவு. நயனுக்கு - தன் தாயை கொன்றவனை கொல்ல வேண்டும் என்பதே லட்சியம். முதல் கனவும் - இரண்டாவது லட்சியமும் ஒன்று சேரும் புள்ளி தான் கதை...

நடிப்பு 

சந்தேகத்திற்கிடமின்றி படத்தை ரசிக்க வைப்பது விஜய் சேதுபதி தான். என்ன ஒரு இயல்பான நடிப்பு !! மிகையின்றி நகைச்சுவை -  நன்கு வெயிட் குறைத்துள்ளது தெரிகிறது. விஜய் சேதுபதியின் அடுத்த படமான மெல்லிசை கூட பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது (மெல்லிசை பாடல்கள்  கேட்டீர்களா? அற்புதம் !)

நயனுக்கு இதுவரை ஏற்றவற்றில் - ஒரு வித்தியாச பாத்திரம்... மொழி ஜோதிகா பாத்திரத்தின் சாயல் லேசாக இருப்பினும் - இங்கு நயன் ஊமையல்ல.. பேசுகிறார்.... நயனுக்கு இருக்கும் உடல் குறைபாடு - கதையில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது.. அழகு + நடிப்பு - இரண்டிலும் குறை வைக்க வில்லை.. 

முதல் சில படங்களில்-  ரேடியோவில் பேசுவது போல் வேகமாய் பேசிய பாலாஜி இம்முறை சரியான மாடுலேஷனில் ! எப்போதும் வேஷ்டியில் வரும் அவர் கெட் அப்-பே  சற்று வித்யாசமாக உள்ளது....தெறிக்க விடலாமா, அட்ராக்ட் பண்ற புலி மாதிரி டைமிங் காமெடிகள் டப்பிங்கில் சேர்த்திருந்தாலும் தியேட்டரில் சவுண்ட் தூள் பறக்கிறது.


கூடவே வரும் நண்பர்கள் கூடத்தில் ராகுல் எனப்படும் பெரியவர் கவனம் ஈர்க்கிறார்... (நான் வாட்ஸ்  அப் செய்றேன் என்பதாகட்டும்.. வில்லன் கூட்டத்தில் இருக்கும் போது தன் இடத்தை கூகிள் மூலம் சொல்வதாகட்டும் இந்த பெரியவர் பாத்திரம் ரசிக்க வைக்கிறது) 

பார்த்திபன் - வில்லன் ரோல்க்கு ஓகே. மற்ற படி பெரிய அளவு ஈர்க்க வில்லை.. 

ஆனந்த் ராஜ் - சிறு பாத்திரம் எனினும் ரசிக்க வைக்கிறார். இசை- இயக்கம் 

அனிருத் இசையில் "தங்கமே " ஹிட். பின்னணி இசை குட் 

இயக்குனர் விக்னேஷ் சிவன் - சற்று வித்யாச கதையை எடுத்து கொண்டு முடிந்த வரை சிரிக்கும் படி திரைக்கதை அமைத்துள்ளார்.. முதல் படத்துக்கு நல்ல இம்ப்ரூவ்மென்ட். வசனங்கள் ரசிக்கும் படி இருப்பினும்- சில இடங்களில் வரும் டபிள் மீனிங் டயலாக் தவிர்த்திருக்கலாம்.

முதல் காட்சியில் போலிஸ் என்பதை ரவுடி என மாற்றி எழுதும் சிறுவன் துவங்கி ஆங்காங்கு இயக்குனர் டச் பளிச்சிடுகிறது. கூடவே இயக்குனர் நயனின் பரம ரசிகர் என்பதும்... 

முதல் பாதி பெருமளவு பாண்டியில் மிக அழகான பின்னணியில் படமெடுத்துள்ளனர்... 

கடைசி 30 நிமிடம் இன்னும் crisp ஆக  இருந்திருக்கலாம்.. குறிப்பாக நயன் - வில்லன் இடத்துக்கு தானாகவே  கிளம்பி செல்வதெல்லாம் டூ மச்..சுத்தமாய் நம்ப முடியாத காட்சி அது.. போலவே.. விஜய் சேதுபதிக்கு தந்தை இருக்கிறாரா ..  இல்லையா-  ஒரு தகவலும் இல்லை !

பைனல் அனலிசிஸ் 

நல்ல கதை- சிரிக்கும் படியான திரைக்கதை - ஹீரோ, ஹீரோயின், காமெடியன் பெர்பாமேன்ஸ் குட்... ..

சிற்சில குறைகளை ஒதுக்கி விட்டு இந்த ரவுடியை ரசிக்கலாம்.. !
********

10 எண்றதுக்குள்ளே .. சினிமா விமர்சனம் - இங்கு 

Monday, October 19, 2015

வானவில் : புலி- நீயா நானா-பசங்க-2-ரேஷ்மி மேனன்

பார்த்த படம் - புலி 

சிம்புதேவன், சிம்புதேவன் என ஒரு இயக்குனர் இருந்தார்... துவக்கத்தில் ஓரளவு வித்யாச, ரசிக்கும் படியான படங்களை இயக்கி வந்தார். ஆனால் விஜய் என்கிற பெரும் நடிகரை வைத்து கொண்டு ஒரு மரண மொக்கை படம் கொடுத்தது பெரும் ஏமாற்றம். எந்த விதத்திலும் துளி கூட ரசிக்க முடியாத, ஈர்க்காத, சிரிப்பை வரவைழைக்காத படம்..

இதில் பாகுபலியுடன் இப்படத்தை ஒப்பிட்டதெல்லாம் டூ மச். விஜய் நடித்த கொடுமையான படங்கள் பட்டியலில் சுராவுக்கு டப் பைட் கொடுக்கும் புலி.

சின்ன பசங்க சுட்டி டிவி யில் இதை விட நல்ல நிகழ்ச்சியை பார்ப்பார்கள் என்றாள் என் மகள்.

அடுத்த பண்டிகைக்கு சன் டிவியில் புலி ஒளிபரப்பாகும் போது- சேனல் மாற்றி விடுவது நலம் !

நீயா நானா 

இந்த வாரம் பெண்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படுகிறதா; அவர்கள் உழைப்பு சுரண்டப்படுகிறதா என்பது குறித்து பேசினர் .. நல்ல தலைப்பு தான். பல இடங்களில் பெண்களுக்கு - ஆண்களுக்கு இணையான சம்பளம் தரப்படுவது இல்லை..

இன்னும் சில தொழில்களில் ஆண்களுக்கும் கூட - அவர்கள் உழைப்புக்கு ஏற்ற சம்பளம் தரப்படுவது இல்லை; அதையும் சேர்த்து இதே தலைப்பில் பேசியிருக்கலாம்...

அடித்தட்டு மக்கள் பலர் கலந்து கொண்டு - 10- 12 மணி நேரம் தாங்கள் உழைப்பதையும் - மிக குறைந்த ஊதியம் பெறுவதையும் பற்றி பேசினர்.  கேட்க சிரமமாக தான் இருந்தது.

நிற்க. நீயா நானா நிகழ்ச்சியில் - அதில் பங்காற்றுவோர் உழைப்பு எவ்வளவு சுரண்டப்படுகிறது தெரியுமா? தினம் 3 ஷூட் என காலை 9 மணி துவங்கி நள்ளிரவு 2 மணி வரை தொடர் ஒளிப்பதிவு - 8 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய கூடாது என்கிற விதியை மீறி - தொடர்ச்சியாக 17 மணி நேரம் வேலை வாங்குகிறார்களே .. இதை எந்த கணக்கில் சேர்ப்பது ?

படித்ததில் பிடித்தது

If you are going on 

a vacation with 

your WIFE, 

it's not a vacation..

It's just 

a change of 

"Location"

எதிர்பார்க்கும் படம்: பசங்க -2

பாண்டிராஜ் இயக்கிய பசங்க - எனக்கு பிடித்ததொரு குழந்தைகள் படம். அது கிராம பின்னணியில் எடுக்கப்பட்ட படம்- இப்போது அவரே குழந்தைகள் படம் ஒன்று பசங்க -2 என எடுத்து வருகிறார். இது நகரத்து மாணவர்கள் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. சூர்யா தயாரித்ததுடன் சிறு   பாத்திரத்தில் நடித்துள்ளார். (சூர்யா நல்ல கருவுள்ள, மெசேஜ் சொல்லும் படங்களை மட்டும் தயாரிப்பதாக தெரிகிறது )

பசங்க முதல் பாகத்தை தாண்டா விடினும், ஏமாற்றமால் இருந்தால் போதும் !

அழகு கார்னர் கலாம்.. சலாம் !

சென்னையில் எங்கே சார் மழை காலம்?

சென்னை வந்து 18 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மிக மோசமான தண்ணீர் பிரச்னையை இந்த வருடம் சென்னை எதிர் கொள்ளும் என நினைக்கிறேன். மழை என்பதே இல்லை.. ஐப்பசி மாதமே வந்து விட்டது. அதிக பட்சம் இன்னும் ஒரு மாதத்திற்குள் ஏதும் மழை பெய்தால் தான் உண்டு ! பின் பனி வந்து விடும்.. மழை இருக்காது.

தனி வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் சர்வ நிச்சயமாக இவ்வருடம் தண்ணீர் வெளியிலிருந்து வாங்க வேண்டியிருக்கும். தொடர்ந்து தண்ணீர் வெளியிலிருந்து கிடைக்குமா என்கிற ஐயமும் கூட உள்ளது...

ஒரே ஒரு நம்பிக்கை.. சென்னை கடற்கரையை ஒட்டி இருப்பதால், மழை காலம் முடிந்த பின்னும் கூட ஏதேனும் ஒரு Depression உருவாகி, மழை அடித்தால் சென்னை ஓரளவு தப்பிக்கலாம் !!

Saturday, October 17, 2015

இசை அமைப்பாளர் இமான் ஒரு பார்வை + டாப் 10 பாடல்கள்

டந்த சில வருடங்களில் இமானின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.

14 வருடங்களுக்கு முன் விஜய் நடித்த "தமிழன்" படத்துக்கு முதன் முறை இசை அமைத்தார் இமான். 2002 ல் அறிமுகம் ஆகியும் - 2010 வரை அவர் இசை அமைத்த எந்த படமும் பெரிய அளவில் செல்லவில்லை..சேனா, விசில், கிரி, தக்க திமி தா, 6.2, கோவை பிரதர்ஸ், தலை நகரம், வாத்தியார், திருவிளையாடல் ஆரம்பம், ரெண்டு, லீ, மருதமலை, நான் அவனில்லை.. இவையெல்லாம் முதல் 8 ஆண்டுகளில் அவர் பணியாற்றிய படங்கள். இவற்றில் மருதமலை,  திருவிளையாடல் ஆரம்பம், தலை நகரம் போன்ற சில படங்கள் ஓரளவு ஓடினாலும் அவற்றில் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் என்று சொல்ல  முடியாது.

2010ல் மைனா படம் தான் பெரும் திருப்புமுனை.   மெலடி ஒரு பக்கம்.. ஜிங்கு சிக்காங் என குத்து பாட்டு மறுபுறம் என இமானை  எல்லோரும் திரும்பி பார்க்க வைத்த படம் இது..ஒரு சில சுமாரான படங்களுக்கு  பின் "மனம் கொத்தி பறவை"யில்  மீண்டும் அசத்தியிருந்தார்.

ஜல் ஜல் ஓசை, ஊரான ஊருக்குள்ளே என பல ஹிட் பாடல்களை கொண்டது இந்த ஆல்பம். இருப்பினும் என்ன சொல்ல எது சொல்ல பாடல் ... செம மெலடி..
அதே 2012 ல் வெளியான கும்கி பாடல்கள் அனைத்து செண்டர் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடிக்க தமிழ் திரை உலகில் - இமானுக்கு தனி இடம் உறுதியானது.

அநேகமாய் அனைத்து பாடல்களும் ஹிட்; நிரம்ப பேருக்கு பிடித்த அய்யய்யோ.. ஆனந்தமே இதோ
பல ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் க்கு ஜில்லாவில் இசை அமைத்தார். பாடல்கள் அட்டகாசம் எனினும் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை

ஜில்லாவில் நான் மிக ரசித்த பாடல்... வெரசா போகையிலே. நிச்சயம் ஒரு வித்தியாச முயற்சி. படமாக்கலும் இனிமை..தேசிங்கு ராஜா, ரம்மி, ஜீவா, கயல் என கமர்ஷியல் வெற்றி பெறாத பல படங்களிலும் சில ரசிக்கத்தக்க பாடல்கள் தந்துள்ளார் இமான்.

ஜீவாவில் "ஒவ்வொன்றாய் திருடுகிறாய்" கேட்க மட்டுமல்ல - பார்க்கவும்  பிடித்த பாடல் (சார்.. ஸ்ரீ திவ்யா சார் !)படம் தோல்வி எனினும், அனைத்து மியூசிக் சானல்களிலும் ரிப்பீட் அடித்த பாட்டு ரம்மியில் இடம் பெற்ற கூடை மேலே கூடை வச்சு..வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் " பாக்காதே பாக்காதே " - இமானின் ஆல் டைம் பெஸ்ட்டில் ஒன்று.. கேட்க மட்டுமல்ல எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத பாடல்..சாட்டை படத்தில் சஹாயனே, சஹாயனே - ஸ்ரேயா கோஷல் குரல் மற்றும் வயலின் இசையால் மனதை சுண்டி இழுக்கும் ...
2015ல் மீண்டும் ஒரு அட்டகாச ஆல்பம்... ரோமியோ ஜூலியட்..

பூவானம் தூவ தூவ என்ன ஒரு அற்புத மெலடி.. ஒரு பாடலுக்கு எது முக்கியம் .. பாடல் வரிகளா? இசையா? பாடுபவர் குரலா?  இவை அனைத்தையும்  விட, பாடலின் மெட்டு தான் - பாடலை அதிகம் ரசிக்க வைக்கிறது.. தூவானம் பாடலிலும் மெட்டை கவனியுங்கள் .. துவங்கும் போது மிக சாதாரணமாக தான் இருக்கும்.. போக போக மெட்டு தன் வேலையை காட்டி - மிக ரசிக்க வைக்கும். இவ்வருடம் வந்த பாடல்களில் அசத்தலான ஒரு பாடல்.. தூவானம்..இதே ரோமியோ ஜூலியட்டில் "எங்க தலை.. எங்க தலை டீ.. ஆரு" தான் படத்துக்கே முதல் விசிட்டிங் கார்டாய் இருந்தது.. ஆனால் அதை விட "அரக்கி" என்கிற இன்னொரு குத்து பாடல் என்னை மிக கவர்ந்த ஒன்று..

வித்தியாச குரல், இசை, டான்ஸ் மூவ்மென்ட் (ஹன்ஷிகா கைலி கட்டி கொண்டு போடும் சின்ன குத்து ஸ்டெப் - என்னோட பேவரைட்  )
இமானின் ஸ்பெஷாலிட்டியே இது தான். ஒரே படத்தில் - மெலடி மற்றும் குத்து பாட்டு இரண்டிலும் அசத்தி விடுகிறார்..

கடந்த 14 வருடங்களாக திரை துறையில் இருக்கும் இமானுக்கு என்ன வயது இருக்கும் என நினைக்கிறீர்கள்? வெறும் 32 தான் ! 18 வயதில் இசை அமைக்க ஆரமபித்து விட்டார் !

தற்போதைய இளம் இசை அமைப்பாளர்களில் அனிருத், இமான் - இந்த இருவருமே வியக்க வைக்கும் வளர்ச்சி பெற்றுள்ளனர்..

இமான் பற்றி எழுத இரண்டு காரணங்கள்.. பாடல்கள் ரசிப்போர் இங்கு பகிர்ந்தவற்றில் சில தங்களுக்கும் பிடித்த பாடல் என மகிழ கூடும் என்பது ஒன்று..

மற்ற முக்கிய காரணம்.. முதலிலேயே சொன்னது தான்..

2002 துவங்கி 2010 வரை நிறைய தோல்விகளை சந்தித்த இமான் - அதன் பின் பெற்று வரும் வெற்றிகளில் நிச்சயம் ஒரு தன்னம்பிக்கை செய்தி உள்ளது !

நமது வேலையை செம்மையாக செய்து கொண்டே இருந்தால், காற்று என்றேனும் ஒரு நாள் நம் பக்கமும் வீசவே செய்யும் !

முயற்சியது கை விடேல் !

**********
அண்மை பதிவு: 

நானும் ரவுடி தான் - விமர்சனம்தொடர்புடைய பதிவுகள் :

2013: சிறந்த பத்து பாடல்கள் 

2012 டாப் 10 பாடல்கள் 

2011: நம்மை அசத்திய  10 பாடல்கள் 

2010: டாப் 10 பாடல்கள் Tuesday, October 13, 2015

வானவில் : பாகுபலி- அனுஷ்கா- தோனி

பார்த்த படம் : பாகுபலி

சற்று தாமதமாக தான் இப்படம் காண முடிந்தது. மிக மெதுவாக துவங்கி பின் செம வேகம் எடுக்கிறது.

மகாபாரத கதை எனக்கு மிக பிடித்தமான ஒன்று. அதிலும் போர் நடக்கும் பொழுதுகள் ... அதில் உள்ள சதி,  துரோகம்,வெற்றி .. இவை மிக நிறைவை தரும். பாகுபலியின் பிற்பகுதி பாரத போர்க்காட்சிகள் தரும் நிறைவை  தந்தது. அழகான கதை, பிரமாண்டம், தேர்ந்த நடிகர்கள்.. என ரசிக்க வைத்தது.

பொதுவாய் - முதல் பாகம் நன்கு ஓடி - பின் ஓரிரு ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் பற்றி யோசிப்பர். இங்கு கதை எழுதும் போதே இரண்டு பாகமாய் எடுப்பது என முடிவெடுத்த ராஜ மவுலியின் தைரியம் .. அடேங்கப்பா !

முதல் பாகத்தை ஒரு முக்கிய கேள்வியுடன் முடித்ததால் - முதல் பாகம் பார்த்த பலரும் இரண்டாம் பாகம் பார்க்க விரும்புவர். மேலும் புதிய மக்களும் கூட தான்.. எனவே இரண்டாம் பாகமும்  நிச்சயம் ஹிட் தான்.

இன்னும் பீனிக்ஸ், சத்யம் திரை அரங்குகளில் தினம் ஒரு காட்சி மட்டும் நடக்கிறது. DVD - ஒரிஜினல் ப்ரிண்ட்டும் கிடைக்கிறது.. அவசியம் கண்டு களியுங்கள் !

ரசித்த ட்விட் :

வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட, வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. - (Tea Kadai)

என்ன ஆச்சு தோனிக்கு?

கிரிக்கெட் மீதுள்ள ஆர்வம் பெருமளவு குறைந்து விட்டது. பெரும்பாலான மேட்ச்கள் பார்ப்பதும் இல்லை; இருந்தும் இவ்வாரம் ஞாயிறு - வேறு வேலை இன்றி இந்தியா Vs தென் ஆப்ரிக்கா மேட்ச் பார்த்து நொந்தேன்.

கிரிக்கெட் பார்ப்பதில் உள்ள கொடுமை அது தான். நாள் முழுதும் நேரம் செலவிட்டு கடைசியில் இந்தியா ஜெயிக்கா விடில் - வெறுப்பு ஒரு பக்கம் - நாள் முழுதும் வீணாக்கி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி மறு புறம் என செம காண்டாய் இருக்கும்.

ரோஹித் ஷர்மா - 150 ரன் அடித்தார். இதற்கு மேல் ஒரு மனிதன் என்ன செய்ய முடியும் ? ரஹானே ஆட்டமும் குறை சொல்லும் விதத்தில் இல்லை; ஆனால் மற்ற யாரும் சரிவர ஆடவில்லை.. தோனி தனது கிரிக்கெட் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் இருப்பது தெளிவாய் தெரிகிறது. தேர்வு குழு தூக்கி எறியும் முன்  அவராகவே விலகி விடலாம். அல்லது கேப்டன்சி - கோலி - இடம் தந்து விட்டு ஆட்ட காராரக மட்டும் நீடிக்கலாம். (அவர் அளவு ஆடும் நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேன் வேறு யாரும் இப்போது இருப்பது போல் தோன்ற வில்லை.. )

அழகு கார்னர் என்னா பாட்டுடே ..!

பசங்க படத்தில் வரும் " ஒரு வெட்கம் வருதே.. வருதே" எப்போது கேட்டாலும் ரசிக்கும் பாடல். கேட்க மட்டுமல்ல, பார்க்கவும் கூடத்தான்.. இந்த ஹீரோயின் (வேகா)  அழகாய் இருந்து, நன்கு நடிக்கவும் செய்த போதும் ஏனோ அதிக பிரபலம் ஆகவே இல்லை !

மருத்துவமும் கடவுளும் குறித்த நீயா நானா 

இந்த நிகழ்ச்சி - ஒளி பரப்பானது சென்ற வாரம் எனினும் நிச்சயம் இது பற்றி சொல்ல வேண்டும்.

இரு புறமும் மருத்துவர்கள்... ஒரு புறம் இருப்போர் மருத்துவர் கையில் தான் நோயாளி சரியாவது உள்ளது என பேச... இன்னொரு பக்கம் இருந்த மருத்துவர்கள்.. சில நேரம் கடவுள் செயலும் உள்ளது என்று பேசினர் ...

நிச்சயம் இரு பக்கமும் பல சுவாரஸ்ய கருத்துகளை கூறினர் ...

இந்தியாவில் மனிதர்கள் சராசரி வாழ்நாள் காலம் - 40 லிருந்து இப்போது 60 ஐ தாண்டி சென்றது மருத்துவ உலகால் தான் என்றது நிச்சயம் ஒப்பு கொள்ள வேண்டிய கருத்து..

கடவுள்  அல்லது நமக்கு மேல் உள்ள சக்தி பற்றி பேசியோர் சில நிஜ சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர்..

முடிவு என எதுவும் சொல்லாமல் போனாலும் - நிச்சயம் ஒரு சுவாரஸ்ய நிகழ்ச்சியாக அது இருந்தது. நேரம் இருப்பின் யூ ய்டியூபில் காண்க !Tuesday, October 6, 2015

குற்றம் கடிதல் - ஆசிரியர்- மாணவர் உறவு குறித்து ஒரு சினிமா !

ரிலீஸ் ஆகும் முன்பே தேசிய விருது உட்பட பல அவார்டுகளை வென்ற படம்... கஷ்டப்பட்டு தான் தியேட்டரை அடைந்துள்ளது.

பள்ளி ஆசிரியை - தவறு செய்யும் மாணவனை அறைகிறார். மயங்கி விழும் அவன் கோமா நிலைக்கு தள்ளப்பட, அடுத்து என்ன ஆகிறது என்ற ஒரு நாள் நிகழ்வே கதை..முதலில் நல்ல விஷயங்கள்..

ஒரு நாளில் நடக்கும் சம்பவம்.. அந்த பையனுக்கு என்ன ஆகும் என்ற பதை பதைப்பு.. இது தான் நம்மை தொடர்ந்து பார்க்க வைக்கிறது (திரைக்கதை சில நேரம் இழுவை என்ற போதும் )

படத்தில் நடித்ததில் எவரும் நமக்கு தெரிந்த முகம் இல்லை; தியேட்டர் ஆர்டிஸ்ட்கள் தான் அநேகம் பேர்.. இது படத்துக்கு ஒரு ரியலிஸ்டிக் பீலிங் தருகிறது. பெரும்பாலானோர் நடிப்பு நன்று..

படத்தில் என்னை மிக கவர்ந்த விஷயம் ஒன்று தான்: ஆசிரியை அடித்து மயக்கமானான் மாணவன் என்பது ஒரு சம்பவம். இதனை மையமாக வைத்து - சுற்றி உள்ள அத்தனை பேரும் எப்படி வெவ்வேறு விதமாய் ரீ ஆக்ட் செய்கிறார்கள் என்பதை சொன்னது தான் இப்படத்தின் ஹை  லைட் மற்றும் ரசிக்கத்தக்க விஷயம்.

குற்ற உணர்ச்சி என்ன செய்யும் என்பதை சற்று அதீத படுத்தி சொன்னாலும், அந்த மன அழுத்தத்தின் பின்னே ஒரு விஷயம் உள்ளது; நமக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை அல்லது கஷ்டம் என்றால் - அது சரியாகும் வரை - மனது திரும்ப  திரும்ப  அதையே தான் நினைக்கும்...படத்தில் அந்த டீச்சருக்கு நிகழ்வதும் அது தான்..

மீடியாவை கிழி கிழி என கிழித்தது கிளாஸ்... ஹிந்தியில் பீப்ளி லைவ் படத்தில் மீடியாவை காட்டிய அதே விதத்தில் இங்கும் காண்பித்துள்ளனர்..இனி நெகடிவ் :

உண்மையை சொல்ல வேண்டுமெனில் இது அரை மணி நேர படமாய் வந்திருக்க வேண்டிய ஒரு கதை. அதனை 2 மணி நேரமாய் இழுத்ததில் 3 மணி நேரம் படம்   பார்க்கும் எபக்ட் ....சில தேவையில்லாத சம்பவங்கள்... (படி முழுதும் ஏறுவதை காட்டும் ஆர்ட் பிலிம் காட்சிகள்), அதீத அழுகை..

அதிகப்படியான பிரசார நெடி.. திரும்ப திரும்ப செக்ஸ் எஜுகேஷன் தேவை என விவாதம் வருகிறது; ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்க கூடாது; பணக்காரன் - ஏழை - கம்மியூநிசம் போன்ற  பிரசார விஷயங்களை இன்னும் அடக்கி வாசித்திருக்கலாம்.

குற்றம் கடிதல்.. நிச்சயம் ஒரு நல்ல படைப்பு.. இரண்டாம் முறை பார்க்க முடியாத படம். நல்ல சினிமா விரும்புவோர் சிற்சில குறைகளை கண்டுகொள்ளாமல் கண்டு ரசிக்கலாம் !
Related Posts Plugin for WordPress, Blogger...