Saturday, June 29, 2013

உணவகம் அறிமுகம் - கார்த்திஸ் ஹாட் கிட்சன், தாம்பரம்

தாம்பரம் காந்தி ரோடில் இருக்கிறது கார்த்திக் ஹாட் கிட்சன் என்கிற இந்த சிறிய கடை. பிரபு என்கிற 24 வயது இளைஞர் கேட்டரிங் படித்து விட்டு துவங்கியிருக்கிறார். இள ரத்தம்.... புதிதாய் செய்து பார்க்கணும், படித்த நல்ல விஷயங்களை முயற்சிக்கணும் என்கிற ஆர்வம் நிறையவே இருக்கிறது.


ஓபன் கிச்சனில் எந்த உணவாயினும் சொன்ன பின் தான் செய்ய துவங்குகிறார்கள். "எந்த உணவும் 4 மணி நேரத்துக்கு மேல் வச்சிக்க கூடாது சார்; புட் பாய்சன் ஆக வாய்ப்பு இருக்கு அதான் அப்பப்போ தயார் செஞ்சு தர்றோம்" என்கிறார் பிரபு (எவ்வளவு நாள் இந்த வைராக்கியம் தாங்குமோ?)

20 ரூபாய்க்கு அருமையான பூரி - கிழங்கு தருகிறார்கள் .....! பெரிய சைஸ் ஸ்பெஷல் தோசை 25 ரூபாய்.. தேங்காய் சட்னி, கார சட்னி, சாம்பார் முட்டைக்கான மசாலா (இலவசம் பாஸ் !) என வெரைட்டியாக சைட் டிஷ் வைக்கிறார்

பரோட்டா பெரிதாக மிக மென்மையாக இருக்கிறது. " பரோட்டாவில் முட்டை போடணும் சார்; அப்ப தான் சாப்ட்நெஸ் வரும்" என தொழில் ரகசியம் பகிர்கிறார் பிரபு

முட்டைக்கான தொக்கு மற்றும் தேங்காய் சட்னி நன்றாகவே இருந்தது

மதியம் சாப்பாடு - 50 ரூபாய்க்கு அன் லிமிடட் தருகிறார்களாம்.. மீன் குழம்பு, சிக்கன் குழம்பு உட்பட.

விலை குறைவாய், அளவும் அதிகமாய் இருப்பது கடை புதிதாய் துவங்கப்பட்டதாலா என்று தெரியலை இப்போதைக்கு குட் !

மேலதிக தகவல்கள்

கடை: கார்த்திக் பாஸ்ட் புட்
காந்தி ரோடு, தாம்பரம்
வகை: வெஜ் மற்றும் நான் வெஜ்

Friday, June 28, 2013

சமையலில் உள்ள சங்கடங்கள் -நீயா நானா நிகழ்ச்சி- ஒரு பார்வை

நீயா நானா ப்ரோமோ-வில் சமையலில் உள்ள சங்கடங்கள் என்பது தான் தலைப்பு என்று தெரிந்தவுடன் ஹவுஸ் பாஸ் " அவசியம் இந்த நிகழ்ச்சி பார்க்கணும் " என சொல்லி வந்தார்.




























ஒரு பக்கம் - சமையல் செய்வது அவசியமே என சொல்லும் பெண்கள் (இவர்கள் பெரும்பாலும் 40 அல்லது 50 வயதை கடந்தவர்கள்) ; இன்னொரு பக்கம் - வேலைக்கும் சென்று கொண்டு சமையலும் செய்வது ரொம்ப கஷ்டம் என சொல்லும் இளம் பெண்கள் (அந்த அணியிலும் ஓரிரு வயதானவர்கள் இருந்தனர்)

இருவர் சொன்ன கருத்துகளிலும் ஒப்பு கொள்ள தக்க விஷயங்கள் நிறையவே இருந்தன..

ஒரு பெண்மணி சொன்னது :

"ஒவ்வொரு வேளைக்கும் சமைக்கணும் என்பது பெரும் கஷ்டமா இருக்கு. அதிலும் என் வீட்டு காரர் நைட்டு சாப்பாடு வைக்கும் போதே " நாளைக்கு என்ன சாப்பாடு ? " என கேட்பார். செம கடுப்பா வரும். அதை விடிஞ்சதுக்கு அப்புறம் பாத்துக்கலாம் என்பேன். 2 நாள் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு ஊருக்கு போகலாம்னா அப்ப கூட குழம்பு, காய் எல்லாம் தயார் பண்ணி பிரிட்ஜில் வச்சிட்டு போகணும் " ( ஹீ ஹீ ... இந்த ரெண்டும் எப்பவும் அய்யாசாமியும் செய்து வாங்கி கட்டி கொள்வார் )

வேலைக்கு போகும் பெண்மணி ஒருவரின் கருத்து

" சமையலுக்கு ஆள் வச்சிட்டேன். அதனால் எனக்கு நிறைய நேரம் கிடைக்குது. பசங்க கூடவும் கணவர் கூடவும் நேரம் செலவு செய்ய முடியுது. ஒரு காபி குடிச்சிகிட்டு டிவி பார்க்க முடியுது. ஆபிசில் இருந்து வந்த உடனே அப்படியே சோர்வுடன் கிச்சனில் நுழையும் அவசியம் இல்லை. குழந்தை பசியா இருக்குமே என்று கவலை பட வேணாம். சமையல் செய்யும் பெண்மணி ஏதாவது செய்து தந்திருப்பார் "

(இந்த பெண்ணை எதிர் அணியில் பலரும் எதிர்க்க - அவர் இந்த கருத்தை பின் சொன்னார் )

" சமையலுக்கு ஆள் இருப்பதால் ஏழரை எட்டுக்கேல்லாம் வேலை முடிஞ்சிடுது; அதனால் பசங்களை சீக்கிரம் தூங்க வச்சிட்டு கணவரோட நேரம் செலவு செய்ய முடியுது. நாமளே எல்லாம் செஞ்சிட்டு போனா - அவர் "அது வேணும்னு கேட்டா, மனசு உடம்பு ரெண்டும் சோர்வா இருக்கிறதால் நோ -ன்னு சொல்ல கூடும். இப்போ அந்த பிரச்சனை இல்லை "

ரொம்ப காம்ப்ளிகேட் விஷயத்தை பூடகமா - ஆங்கிலத்தில் சொன்னார் அவர்.

எதிரணியில் ஒரு பெண்மணி யோசித்து விட்டு இப்படி பதில் சொன்னார் : " உங்களுக்கு உங்க கணவரை மயக்க ஒரு விஷயம் தான் (உடல் !) இருக்கு. எனக்கு 2 விஷயம் இருக்கு. (சமையல் + உடல் !)

அடேங்கப்பா ! நம்ம அறிவு ஜீவிகள் எல்லாம் இதுக்கு எப்படி வேண்ணா கருத்து சொல்லலாம் ! ஆனா அவர் சொன்னதில் நிச்சயம் ஓரளவு உண்மை இருக்கவே செய்யுது !

பெண்கள் சமையல் அவசிய செய்யணும் என சொன்ன பெண்கள் இப்படி கூறினர் :
## சமையல் கட்டு என்பது நம்ம ராஜ்ஜியம்; கோட்டை. அது நமக்கே நமக்கான இடம்ங்கிற பீலிங் வரும். அதை எப்படி விட்டு கொடுக்க முடியும்?

** சமையல் என்பது ஒரு பெரிய ஸ்ட்ரெஸ் ரிலீப். அது ஒரு கிரியேட்டிவ் அனுபவம்

## நேரத்தை பிளான் பண்ணி செய்தால் சமையலை நிச்சயம் ஈசியா முடிக்கலாம். குறிப்பா காலை நேரம் - ஒரு மணியில் எல்லா சமையல் வேலையும் முடிச்சிடலாம்

** இப்படி சமையல் அவசியம் என்று சொன்ன அதே பெண்களிடம் " உங்கள் மகள்களுக்கு சமையல் சொல்லி தந்து விட்டீர்களா? " என்று கேட்டதற்கு அனைவரும் கற்று தரலை என்றே ஒருமித்து கூறினர் ! " படிக்கிறா; அதுவே பெரிய கஷ்டம். இது வேறயா? "

" சமையல் கட்டுக்கு வந்தா, அங்கேயே உட்கார வச்சிடுவாங்க அவ முன்னேற முடியாது நான் தான் கஷ்டப்பட்டேன் அவளாவது வேலைக்கு போகட்டும்" என்று பேசினர் சமையலை ஆதரித்த அதே பெண்கள் !

****
விருந்தினராக வந்த தமிழ் செல்வனுக்கு ஏனோ உட்கார சீட் தரவே இல்லை. அவர் ஆண்கள் சமைப்பதன் அவசியம் பற்றி ஒரு புத்தகமே எழுதிருக்காராம் ! அவர் சொன்னது :

" சமையல் என்கிற விஷயம் நிச்சயம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது. இருவருமே அதை செய்யணும். ஆனால் முக்கால் வாசி ஆண்கள் அந்த காலம் தொட்டு சமையலில் அதிகம் உதவலை. கணவன் மார்கள் மட்டும் உருப்படியா ஏதும் செய்யாம - சும்மா உலாத்தி வந்திருக்காங்க. "

நான் அப்படித்தான் செய்யுறேன், காலை நேரம் நான் தான் சமைப்பேன். மனைவியை உள்ளே கூட விடுவதில்லை நாங்கள் சார்ந்துள்ள தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் - ஆண்கள் அனைவரும் சமையலில் பெரிதும் உதவ வேண்டும் என்று முடிவெடுத்து செயல் படுத்தியும் வருகிறோம் "

" குழம்பு வைப்பது, காய் செய்வது இவற்றை விட, மேல் வேலைகள் தான் வீட்டில் அதிகம் இருக்கும். அவற்றையும் சேர்த்து பெண்கள் செய்வது மிக மிக கஷ்டமான விஷயம் "

" ஆண் கண்டிப்பா சமைக்கணும். வெறும் உதவி என்று சொல்லி தப்பிக்க கூடாது. பெண்களை கிட்சன் பக்கமே விடாமல் முழுதும் சமைக்கிற அளவு ஆண்கள் கற்று கொள்ளணும் "
****
சரி இதில் நம் கருத்து + வேலைக்கு செல்லும் தம்பதியான நம்ம அனுபவம் எப்படி இருக்கு ?

வருடம் 365 நாளும் - 3 வேளையும் சமைக்கணும் என்பது பெண்கள் மேல் ஏற்றிய சிலுவை மாதிரி தான். (வாரம் ஒரு முறை ஹோட்டலில் வாங்கலாம் ; அது ரொம்ப ரொம்ப சின்ன அளவே; )

பல ஆண்களை சமைக்க தெரியாமலே அம்மாக்கள் வளர்த்து விடுகிறார்கள். எனக்கு திருமணத்தின் போது அடுப்பு பற்ற வைக்க கூட தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டு - ஓரளவு உதவி வருகிறேன்

நாட்கள் போக போக வீட்டு வேலையில் நான் செய்யும் உதவிகள் அதிகமாக தான் ஆகிறது . ஆனாலும் எனது பங்களிப்பு 25 % தான். 75 % மனைவி தான் செய்கிறார். காரணம் எனக்கு முழுதாய் சமைக்க தெரியாததே ! எனக்கு கற்று தரும் பொறுமையும் - வேலைக்கு செல்லும் மனைவிக்கு இல்லை. மிக மெதுவாக கற்று கொள்ளும் என்னை போன்ற ஆளை திட்டினால் " நான் எதுக்கு கத்துக்கணும். நீ திட்டுறே போ " என ஓடி வந்து விடுவேன் !

துணிகள் வாஷிங் மிஷினில் போடுவது காய வைப்பது; மடித்து வைப்பது, அயனுக்கு தந்து வாங்குவது

பெண்ணின் படிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகள் - பாடம் சொல்லி தருவது - பள்ளிக்கு கூப்பிட்டால் செல்வது

வெங்காயம் - பூண்டு போன்றவை உரிப்பது ; கட் செய்வது

காலை சமையல் முடித்து விட்டால் - மூவருக்கும் எடுத்து வைத்து பேக் செய்வது
அவசரத்துக்கு இட்லி, தோசை அல்லது சப்பாத்தி தயார் செய்வது (மாவு ரெடியாய் இருக்கணும் !)

போன்றவையே நான் செய்யும் வேலைகள் !

இது மிக குறைவு தான் ! இன்னும் நிறைய உதவணும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. ம்ம் பார்க்கலாம் ..
**********
நீயா நானாவில் வெற்றி பெறுவோரை " மஞ்ச சட்டை போட்டவருக்கு பரிசு; சிகப்பு புடவை கட்டிய பெண்மணிக்கு பரிசு " என்கிற ரீதியில் சொல்வதேன்.. பெயர் சொல்லி பரிசு தர கூடாதா என ஆதங்கப்பட்டு எழுதியது நினைவிருக்கலாம் ! இந்த எபிசோடில் பரிசு பெறுவோரை பெயர் சொல்லி அழைத்ததை காண ஆச்சரியமாய் இருந்தது ! (பெரும்பாலும் இப்போதெல்லாம் கடைசி வரை பார்ப்பதில்லை மற்ற எபிசோடில் இது தொடர்கிறதா தெரியவில்லை )
**********
இந்த எபிசொட் பார்க்காதவர்கள்க்கு முழுதாக இதோ ....

Thursday, June 27, 2013

வானவில்: அன்னகொடி- No இலவச SMS - அந்தரங்க மனிதர்கள்

வங்கி சேவை - இனி இல்லை இலவச SMS

உங்கள் வங்கி கணக்கில் இருந்து செக் அல்லது ATM மூலம் பணம் எடுத்தாலோ, உங்கள் வங்கி கணக்கிற்கு யாரேனும் பணம் டிரான்ஸ்பர் செய்தாலோ இப்படி என்ன விஷயம் நடந்தாலும் நமக்கு வங்கியிலிருந்து ஒரு SMS வரும் ஆப்ஷன் இருந்தது. இதை வாசிக்கும் உங்களில் பலரும் அதனை பயன்படுத்தியிருப்பீர்கள்

இதுவரை இலவச சேவையாக இதை செய்து வந்த வங்கிகள் இனி இதற்கு - பணம் வசூலிப்பேன் என்று அறிவித்துள்ளது. அதிகமில்லை வருடம் 60 ரூபா தான் !

சரி போகட்டும் என விட்டு விட்டு - சேவையை தொடரத்தான் வேணும் !

மேலும் அறிய இங்கே வாசியுங்கள் !

அழகு கார்னர்



என்னா பாட்டுடே 

பாடலின் முதல் சில வரிகளை கவனியுங்கள் :

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

செண்டிமெண்டுக்கு பெயர் போன தமிழ் சினிமாவில் - சற்று நெகடிவ் ஆன இப்பாட்டு - மிக பிரபலம் ஆகிவிட்டது.

பல இளைஞர்களும், நடிகர்களுக்கும், பாடகர்களும் - தங்களுக்கு பிடித்த பாட்டாக இப்பாடலை சொல்வதை கவனித்துள்ளேன்

மிக மெதுவாய் நகரும் இனிய மெலடி - பாவனாவின் அழகு பாடலை ரசிக்க கூடுதல் போனஸ்



குங்குமம் - அந்தரங்க மனிதர்கள் 

குங்குமம் வார இதழில் புதிதாக " அந்தரங்க மனிதர்கள்" என்ற பகுதி தொடங்கியிருக்கிறது. சானை பிடிப்பவர்கள் போன்ற வித்தியாச விளிம்பு நிலை மனிதர்களை பேட்டி எடுத்து கடந்த சில வாரங்களாக வெளியிடுகிறார்கள்

நம்ம சாதாரண மனிதர்கள் - (அறியாத தகவல்கள் :)) )கான்செப்ட் பார்த்து வந்ததா இல்லை தானாகவே அவர்களுக்கு தோன்றியதா என தெரியலை :))

இந்த வார ரிலீஸ்: அன்னக்கொடி 

ரொம்ப நாள் கழித்து ஒரு பாரதிராஜா படம்.... ஒரு காலத்தில் பாடல்களை படமாக்குவதில் இவரை விட சிறந்த இயக்குனர் கிடையாது ! (இப்படத்தில் பாடல்கள் ரொம்ப சுமார் தான் )

பாரதிராஜாவுக்கு வயது 70 க்கு மேல் ! டிரைலரில் நடித்து காட்டுவதையும் அவர் உடையையும் பாருங்கள். 70 வயது மாதிரி தெரியவே இல்லை. (நிற்க ! மணிவண்ணன் பற்றி அவர் எழுதியதில் எனக்கும் வருத்தமே ! அதை விட அதிக வருத்தம் அவர் இறந்த பின் அவரது இல்லம் கூட சென்று அஞ்சலி செலுத்தாதது )

மாறி போன இன்றைய சூழலில் படம் ஓடும் என எண்ணவில்லை ! பாரதிராஜா படம் என்கிற அளவில் பின்னர் பொறுமையாக பார்க்க கூடும். அவ்வளவே !



பதிவர் பக்கம் - வாங்க ப்ளாகலாம் - அனந்து

வாங்க ப்ளாகலாம் - என்கிற தலைப்பில் எழுதி வருகிறார் சென்னையில் பணிபுரியும் அனந்து. ஆங்காங்கே அரசியல், சிறுகதை கவிதை என தொட்டு பார்த்தாலும் கூட, இவரது ஸ்பெஷாலிட்டி சினிமா விமர்சனங்களே ! புது படங்களை சுட சுட பார்த்துவிட்டு வார இறுதியில் எழுதி விடுகிறார். பதிவின் தலைப்பிலேயே - படம் குறித்த தனது கருத்தை சொல்லி விடுவது இவரது ஸ்டைல். படத்துக்கு விகடன் பாணியில் மார்க்கும் தருகிறார்

அனந்துவின் ப்ளாக் முகவரி : http://pesalamblogalam.blogspot.in/

அய்யாசாமி கார்னர்

தினம் காலை இட்லி தான் உணவு என்பது பெரும்கொடுமை ! இதை இட்லி பொடி வைத்து சற்று சமாளிப்பார் அய்யாசாமி. அருகிலேயே - சேம் நிறத்தில் - அதே போன்ற டப்பாவில் - மிளகு பொடி என ஒரு வஸ்த்துவும் இருக்கும்.

ஒரு நாள் Mrs. அய்யாசாமி இட்லி சாப்பிடும்போது டப்பாவை மாற்றி எடுத்து கொண்டிருப்பதை பார்த்த அய்யாசாமி பொங்கி எழுந்தார்

" ஹல்லோ .. இட்லி பொடின்னு நினைச்சுக்கிட்டு - மிளகு பொடி போட்டுக்கிட்டு இருக்கே - என்னாதிது !"

அவர் சொல்வதை கேட்டு Mrs. அய்யாசாமிக்கு சற்று சந்தேகம் வர, பின் நன்றாக சோதித்து விட்டு தான் எடுத்தது தான் இட்லி பொடி என்று அறிவித்தார்

ஷாக் ஆகி அய்யாசாமி முழித்ததை பார்த்ததும் Mrs. அய்யாசாமிக்கு ஒரு விஷயம் புரிந்து விட்டது

" தினம் காலையில் இட்லி பொடின்னு நினைச்சிக்கிட்டு - மிளகு பொடியை போட்டு சாப்பிடுறீங்களா? சாப்பிடும் போது கூட வித்யாசம் தெரியலையா? நானும் என்னடா - மிளகு பொடி சீக்கிரம் காலியாகுதேன்னு நினைச்சேன் " என்று சொல்ல .....

காதில் விழாத மாதிரி பேப்பரை படிக்கலானார் அய்யாசாமி !
*********
அண்மை பதிவு


ஆலப்புழா எப்போது செல்லலாம்; எங்கு தங்கலாம் FAQ

தொல்லை காட்சி - அகரம் -சூர்யா - ஆபிஸ் சீரியல் - ஹரிதாஸ்

Wednesday, June 26, 2013

தொல்லைகாட்சி- அகரம் சூர்யா- ஆபிஸ் சீரியல் -ஹரிதாஸ்


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

இந்நிகழ்ச்சி சூப்பர் டூப்பர் பிளாப் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் போதும். முன்பெல்லாம் சினிமா நடிகர்கள் எப்போதோ ஒரு முறை தான் நிகழ்ச்சிக்கு வருவர். இப்போது வாரம் ஒரு சினிமா நடிகர் வருகிறார். அதுவும் அந்த நிகழ்ச்சி எப்போது வரும் என்று சொல்லாமல் " இந்த வாரம் 8 மணிக்கு " என்று அரை மணிக்கொரு முறை விளம்பரம் போட்டு - கெஞ்சுகிறார்கள். நடிகர் சூர்யாவிற்கு அடுத்து வர உள்ள சினிமா பிரபலம் ஹன்சிகா !

சூப்பர்ப்... எக்சலண்ட்.. வொண்டர்புல்.. அப்படின்னு பிரகாஷ் ராஜ் அடிக்கடி சொன்னாலும் நிகழ்ச்சி பத்தி அப்படி சொல்ல முடியலை. கொட்டாவி வர வைக்கும் தரத்தில் தான் இருக்கு !

சூர்யாவின் அகரம் செயல்பாடுகள் மற்றும் அதனால் பயனடைந்தோர் பற்றிய பகுதி மட்டும் நெகிழ்ச்சி !

ஐ. சி. சி பைனல்

இங்கிலாந்தில் இம்முறை டோர்னமென்ட் வைத்தது அநியாயம் ! மழையால் பல மேட்ச்கள் பாதிக்கப்பட்டு விட்டன. பைனலை முடித்தே ஆகணும் என எதோ ஒரு விதமாய் முடித்து வைத்தனர்.அடிக்கடி மழை வந்து குறுக்கிட்டதால் வெறுத்து போய் ஆப் செய்து விட்டு தூங்க போயாச்சு. மறுநாள் ஹை லைட்ஸ் பார்த்து தான் தகவல்கள் அறிய முடிந்தது . இனி இங்கிலாந்தில் உலக கோப்பை - அது இதுன்னு பேசட்டும் - ராஸ்கோல்களா !!

சீரியல் பக்கம் - ஆபிஸ்

அண்மையில் ஓரளவு பிரபலமான சீரியல் இது தான் போலிருக்கு. ஆபிசில் வேலை செய்வோர் பலர் நிகழ்ச்சி பார்த்து ஜொள்ளு விடுவதாக நம்பமுடியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன



நான் பார்த்த நிகழ்ச்சியின் சாராம்சம் இது - " ஆபிஸ் டே " கொண்டாடுறாங்க. அதுக்கு ஆண்கள் வேஷ்டியிலும் பெண்கள் புடவையிலும் வர்றாங்க. ஹீரோவோட பெண் மேனேஜர் புடவை கட்டாம வர,  ஹீரோ போயி " ஏன் புடவை கட்டலை?" என கேட்கிறார். " ஒரு பிரச்சனை; அதான் கட்டலை " என்கிறார் பெண் மேனேஜர். பெண்கள் இப்படி சொன்னால் நாம அத்தோட பெண்கள் சமாசாரம் என அதிகம் கேட்காமல் விலகிடுவோம். ஆனா ஹீரோ " என்ன பிரச்சனை என தோண்டி துருவி கேட்கிறார். " அயன் செய்த போது புடவை கிழிஞ்சுடுச்சு என மேனேஜர் சொன்னபோதும் நம்பாமல் " எங்கே புடவையை காட்டு " என்று சொல்ல, அவரும் எடுத்து காட்டுகிறார்

அடுத்து ஹீரோவையே அந்த பெண் " எனக்கு ஒரு புடவை வாங்கி வா " என்று கேட்க, ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிக்கும் ஹீரோ - இந்த அம்மணிக்கு புடவை வாங்கி வர ஓடுகிறார் (" நீயே போகலாமே; ஆபிசில் இருக்கும் பெண்களை போக சொல்லலாமே" என்று கேள்விகள் கேட்க மறக்க வில்லை)

இன்னோர் பக்கம் சேல்ஸ் டீமில் இருப்போர் - கோடு போட்ட அண்ட்ராயர் தெரிகிற மாதிரி வேஷ்டியை தூக்கி கட்டிய படி ஆபிசினுள் நடந்து வர..

ஹலோ.... ஹலோ.. எங்க சார் ஓடுறீங்க !

சூப்பர் சிங்கர் கார்னர்

கிராமத்து திருவிழா என சென்ற வாரம் முழுதும் - நாட்டுபுற பாடல்கள் பாடினர்.

நண்பர் சௌம்யன் கூகிள் பிளஸ்சில் இப்படி சொல்லியிருந்தார் :

" நல்லா பாடுற பசங்களை எல்லாம் குத்தம் சொல்றாங்க. மலையாளிங்க எப்படி பாடினாலும் பாராட்டுறாங்க "

சுஜாதா பேசும் சில நேரம் எனக்கும் இதே விதமாய் தோன்றுகிறது. பார்வதி போன்ற சிலரை ஆஹோ ஓஹோ என அவர் பாராட்டுவது " நம்ம ஆள் " என்கிற எண்ணம் தான் !

இவர் இப்படி என்றால் - இன்னும் சில ஜட்ஜ்களும் கூட " நம்ம ஆள் " என்று பாராட்டும் நிலை இருக்கவே செய்கிறது (யார் என்று சொல்லாமல் உங்கள் ஊகத்திற்கு விடுகிறேன். பெரும்பாலும் நீதிபதிகளா அவங்க தான் வர்றாங்க )

மார்க் போடும் ஆட்கள் இப்படி பாரபட்சமாய் இருந்தால் அது கொடுமையான சூழ்நிலை தான் !

டிவி யில் பார்த்த படம் - ஹரிதாஸ்

ஜீ தமிழ் டிவியில் ஒரு சாதாரண ஞாயிறின் மாலையில் - எந்த பெரிய அதிரடி விளம்பரங்களும் இல்லாமல் - அண்மையில் வெளியான ஹரிதாஸ் படம் ஒளிபரப்பினர்.

படம் வெளியான போதே பார்த்திருந்த போதும் மீண்டும் ஒரு முறை பார்க்க வைத்தது - அருமையான கதையும், கிஷோர் மற்றும் சிறுவனின் நடிப்பும். நீங்கள் இதுவரை பார்க்காவிடில் இனி அடிக்கடி ஜீ தமிழ் டிவியில் போடுவார்கள். பாருங்கள்

இதே டிவியில் இன்னும் சில வெற்றி பெற்ற தமிழ் படங்களும் ஒளிபரப்பாக உள்ளது - அவர்கள் போடும் ப்ரோமோவில் தெரிந்தது !

எங்கிருந்தாலும் வாழ்க

ஸ்ரீதர் இயக்கத்தில் வந்த நெஞ்சில் ஒரு ஆலயத்தில் இடம் பெற்ற மறக்க முடியாத பாடல் " எங்கிருந்தாலும் வாழ்க ".

இதே பெயரில் - இசை அருவியில் சற்றே சோகமான காதல் பாடல்கள் ஒளி பரப்புகின்றனர். ஒரு நாள் பார்க்க ஆரம்பித்து சானல் மாற்ற முடியாமல் தொடர்ந்து பார்த்தேன்

மன்னிப்பாயா - விண்ணை தாண்டி வருவாயா
எப்போ புள்ள சொல்ல போறே - கும்கி
போ போ போ - மனம் கொத்தி பறவை

இவையெல்லாம் அடுத்தடுத்து அவர்கள் ஒளிபரப்பிய பாடல்கள் !

இனி எப்பவாவது இந்த நிகழ்ச்சி வந்தால் பார்க்க வேண்டும் என எண்ண வைத்து விட்டது !

****
அண்மை பதிவு

ஆலப்புழா எப்போது செல்லலாம்; எங்கு தங்கலாம் FAQ

Monday, June 24, 2013

ICC உலக கோப்பை இந்தியா வெற்றி - வீடியோ + விமர்சனம்

கிரிக்கெட்டில் இந்தியா கோப்பையை வெல்வது எப்போதேனும் தான் நடக்கிறது ! அப்படி ஒரு அறிய தருணத்தை - அதன் ஹைலைட்சை இங்கு பகிர்ந்து வைப்போம் !



மேட்ச்சின் முக்கிய தருணங்கள் 4 பகுதிகளாக இதில் உள்ளது ; ஐந்தாவது கடைசி பகுதி வென்ற பிறகு இந்திய வீரர்கள் வெற்றியை கொண்டாடியது !

பிக்சிங் போன்ற செய்திகளை முழுதும் புறக்கணித்து இந்தியா விளையாடும் மேட்ச்களில் அரங்கை நிறைத்தனர் இங்கிலாந்து வாழ் இந்தியர்கள்.

நேற்று மேட்ச்சில் - இங்கிலாந்து சப்போர்ட்டர்கள் வெறும் 10 % - நம்ம மக்கள் தான் 90 %

மேட்ச் மழையால் 20 ஓவர் ஆனபின் இந்தியா ஆடிய போது - 3 முறை மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து ஆடியபோது எந்த தடையும் இல்லை. ஸ்கோர் எளிதில் எடுக்க கூடிய 130 என்பது அவர்களுக்கு முன்பே தெரிந்தும் இருந்தது. அவர்கள் நாட்டு மழை, கிளைமேட், பிட்ச் அவர்களுக்கு பழக்கமான ஒன்று. எனவே இங்கிலாந்து வெல்லவே வாய்ப்புகள் மிக அதிகம். இவற்றை மீறி அவ்வளவு சின்ன ஸ்கோரை இந்தியா defend செய்தது பெரிய விஷயம் தான் !

Part I




தவான் & ரோஹித் ஷர்மா பல மேட்ச்களில் நல்ல அடித்தளம் தந்தனர். தினேஷ் கார்த்திக் தோனி மற்றும் ரைனா பேட்டிங்கில் சீரிஸ் முழுக்க பிரகாசிக்கலை !

Part II




ஜடேஜா சீரிஸ் முழுக்க அசத்தி விட்டார் ! இந்த மேட்சில் அவர் அடித்த ரன்கள் வெற்றிக்கு மிக மிக முக்கியமாய் அமைந்தது


Part III



முதல் கேட்ச் ஸ்லிப்பில் தாவி பிடித்தது அஷ்வின் தானா? ஆச்சரியமாய் இருக்கு ! பீல்டிங்கில் இஷாந்த் போன்ற ஒரு சிலர் தவிர்த்து மற்ற எல்லோரும் செம ஷார்ப்.

 Part IV

 

இஷாந்த் போட்ட அந்த 18 வது ஓவர் அடடா ! ஒரு சிக்ஸ் மற்றும் ஒயிட் போனதும் 16 பந்தில் 20 ரன் - கையில் ஆறு விக்கெட் என்ற எளிய இலக்கு வந்தது. அடுத்தடுத்த பந்தில் செட்டில் ஆன வீரர்கள் மார்கன் மற்றும் போபாரா அவுட் !

பைனலில் - அதுவும் பாஸ்ட் பவுலிங்கிற்கு பெயர் போன இங்கிலாந்தில் கடைசி 2 ஓவர் வீசியது - ஜடேஜா மற்றும் அஷ்வின் என்ற 2 ஸ்பின்னர்கள் ! என்னா கேப்டன்சி ! சான்சே இல்லை ! அஷ்வின் பொறுமையாய் , தைரியமாய் கடைசி ஓவர் வீசியது அமர்க்களம் !

பைனல் ஜெயித்தும் தோனியின் மகிழ்ச்சி மும்பையில் உலக கோப்பை வென்ற போது கூட காட்டலை !

Part V  Celebration Time



*********
என்னா செலிபரேஷன் ! கோப்பையை கையில் வாங்கியதும் - அடுத்த நொடி சக வீரர்களிடம் தந்து விட்டு பின்னே சென்று விடும் தோனியை கவனித்தீர்களா?




Well done Team India !

***********
அண்மை பதிவுகள் 

லப்புழா எப்போது செல்லலாம்; எங்கு தங்கலாம் FAQ

திங்க கிழமை - தீயா வேலை செய்யணும் - விமர்சனம் 

திங்க கிழமை - தீயா வேலை செய்யணும் :) - விமர்சனம்

கே ஓகே பாணியில் - மண்டையை உடைத்து கொள்ளாமல் ஜாலியாய் ஒரு படம் .....! இன்றைக்கு மார்க்கெட் உள்ள சந்தானம் மற்றும் ஹன்சிகா ...கூடவே போனால் போகிறது என ஹீரோவாக - சித்தார்த். திரையரங்கம் வருவது இளைஞர்கள் தான் என்பதால் ஐ .டி ஆபிஸ் பின்னணி - காதலிக்கிறார்கள் - சண்டை போடுகிறார்கள் - கடைசியில் சேர்கிறார்கள் என்கிற இதுவரை கேள்விப்படாத புதுமையான கதை ..



சுந்தர் சி - வந்தபோது தமிழில் இருந்த பல இயக்குனர்கள் பலரும் காணாமல் போயிருந்தாலும் - மனிதர் மீண்டும் ஒரு முறை திரைக்கதையில் நின்று ஆடியிருக்கிறார்.

படத்தின் மிக பெரும் பலம் - ஆம் ! சந்தானமே தான் ! ஹீரோ மாதிரி இன்ட்ரோ - இவருக்கு.  நினைத்து நினைத்து சிரிக்கிற காமெடி அல்ல - பார்க்கும் போது நிச்சயம் சிரிக்க வைக்கிறார். பாதிக்கு மேல் வில்லத்தனம் எட்டி பார்த்தாலும் அப்போதும் - சிரிக்க தவறவில்லை. தானே எழுதும் டயலாக்கில் காதலை -லூஸ் மோஷன் & யூரின் உடன் ஒப்பிடுவதை மட்டும் தவிர்த்திருக்கலாம் !

சித்தார்த் - டான்ஸ் ஆடுகிறார். முகத்தை பாவமாய் வைத்து கொள்கிறார். நிஜ காதலி சமந்தாவுடன் சில நிமிடங்கள் வரும்போது நமக்கு பெருமூச்சு எழுகிறது !

ஹன்சிகாவை பொதுவாய் அதிகம் பிடிக்காது. சற்று பருமன்; வாய் அசைவுக்கும் முக பாவத்துக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால் இப்படத்தில் நல்ல முன்னேற்றம். செமையாய் இளைத்ததுடன் ஓரளவு நடிக்க ஆரம்பித்துள்ளார். ஹீரோயினை - கனவு கன்னி போல காட்டும் பாட்டில் வசீகரிக்கிறார்.



ரேடியோவில் தூள் கிளப்பும் RJ பாலாஜி - எதிர் நீச்சலில் மிக சிறிய பாத்திரத்தில் வந்தார். இதில் படம் துவங்கும்போது பின்னணியில் பேசுவதில் துவங்கி - ஹீரோவின் நண்பராக சற்றே பெரிய பாத்திரத்தில் வருகிறார். போக போக நடிக்கவும் ஆரம்பிப்பார் என்று நம்புவோம் !

பாடல்கள் ஓகே ரகம். சண்டைகள் எதுவும் இல்லாதது பெரிய ஆறுதல்

சில சினிமாட்டிக் விஷயங்கள் உறுத்துகிறது எந்த ஆபிசில் முதல் நாள் ஒரு பெண் வரும்போது வாசலில் இருந்து இப்படி ஜொள்ளு விடுவார்களோ தெரியவில்லை. போலவே தங்கை என தெரியாமலே (அந்த பெயரே சற்று வித்யாசமான ஒன்று தான் !) ஐடியா தருகிறார் என்பதும் !

தீயா வேலை செய்யணும் - டைம் பாஸ் !
****
*********
அண்மை பதிவு:




Sunday, June 23, 2013

தில்லு முல்லு : ஒரிஜினல் Vs நகல் - விமர்சனம்

ரிஜினல் "தில்லு முல்லு"வை மறக்கவே முடியாது. கல்யாணத்திற்கு சற்று முன்பு ஒரு சின்ன "தில்லு முல்லு" செய்திருந்தேன். விஷயம் இரண்டு வீட்டுக்கும் தெரியாது.. ஹவுஸ் பாஸிடம் மட்டும் முன்பே சொல்லியிருந்தேன். திருமணமான அன்று இரவு 10 மணிக்கு - சன் டிவியில் போட்ட படம் - தில்லு முல்லு ! கீழே பெரிய சொந்த காரர் கூட்டமே உட்கார்ந்து படம் பார்த்து கொண்டிருந்தது ! நானும் அரை மணி நேரம் அமர்ந்து பார்த்தேன். உள்ளுக்குள் நமட்டு சிரிப்பு " நம்ம தில்லு முல்லு வேலை தெரிஞ்சால் கொன்னு புடுவானுகளே !"

அதென்ன தில்லு முல்லு என மண்டையை உடைத்து கொள்ள வேண்டாம்... நிச்சயம் ஆன போது வேலையில் இருந்த நான் - திருமணத்திற்கு சற்று முன்பு வேலையை ரிசைன் செய்திருந்தேன். வேலையில் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட உண்மை தான் இரு குடும்பத்துக்கும் தெரியாது (மனைவி தவிர)

புதிய தில்லு முல்லு விற்கு வருவோம்



மூலக்கதையை அப்படியே எடுத்து கொண்டு  திரைக்கதையை முழுவதும் மாற்றி விட்டனர். அதுவே படத்தை காப்பாற்றி விட்டது. பழைய படத்திலிருந்து அப்படியே எடுத்து உபயோகிக்கும் சில காட்சிகள் - நமக்கு சிரிப்பை வரவழைக்காமல் Flat - ஆக இருக்கின்றன.

உதாரணத்துக்கு ஹீரோவின் தம்பி - முதல் முறை - பாஸ் வீட்டுக்கு வரும்போது அவர் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச " என்னடா வேலைக்காரா" என்று கூப்பிடும் காட்சியை இங்கு பார்க்கும்போது சின்ன சிரிப்பு கூட வர மாட்டேன் என்கிறது ! பழைய காட்சியை அப்படியே சுட்ட பல இடத்திலும் இதே நிலை தான் !



ஆனால் 90 % திரைக்கதை மாற்றப்பட்டு, சிவாவிற்கு ஏற்றார் போல் செய்துள்ளதால், பல இடங்கள் சிரிப்பு அள்ளுது !

ரஜினி - தேங்காய் மறந்து விட்டு பார்த்தால் சிவா- பிரகாஷ் ராஜ் கெமிஸ்ட்ரி போக போக செமையாய் பிக் அப் ஆகிடுது (இந்த படத்தில் ஹீரோயினுடன் அல்ல - பிரகாஷ் ராஜுடன் உள்ள கெமிஸ்ட்ரி தானே ரொம்ப முக்கியம்?)

ரெட்டை வேட ஹீரோக்களை ஆராய ஒரு டிடெக்டிவ் வருகிறார்.. அவர் பெயர் - கணேஷ் வசந்த் ! ஹோட்டலில் பிரகாஷ் ராஜ் கணக்கில் கணேஷ் வசந்த் - சாப்பிட்டு விட்டு தன் குடும்பத்துக்கு பார்சல் வாங்கி செல்வதை காண - நல்லவேளை சுஜாதா உயிருடன் இல்லை !



புது பாடல்கள் எதுவும் சற்றும் கவராமல் போகிறது. ரீ மேக் செய்த 2 பாட்டுமே ஓகே ! இசை ஒரு சொதப்பல் என்றால் - மிகபெரிய சொதப்பல் ஹீரோயின் தான் ! வாயில் நுழையாத பெயர் கொண்ட அந்த வெள்ளை பெண்ணை எப்படி இப்பாத்திரதுக்கு தேர்ந்தெடுத்தனரோ ? உருப்படியான ஹீரோயின் இருந்தால் படம் இன்னும் நாலு நாள் கூட ஓடிருக்கும் ! (இப்ப ஹிட் படமே 3 வாரம் தானே ஓடுது !)

மாதவி - என்ன ஒரு அழகு ! நடிப்பில் முக்கால் வாசி வேலையை அந்த அழகான கண்களே செய்து விடும் !



பதிவராய் இருந்து தொலைப்பதால் - படம் பார்த்து விமர்சனம் எழுதணும் என்ற கடமை உணர்ச்சியில் - லாஜிக் குறைகள் தெரிந்து கொண்டே இருக்கின்றன..

** கராத்தே மாஸ்டர் - ஜிம் போனாலும், ஹோட்டல் போனாலும் கராத்தே டிரெஸில் மட்டும் தான் போவாரா? (நல்லவேளை துபாய்- க்கு மப்டியில் போனார் )

** சாராயம் விற்று (செமையாய்) சம்பாதிக்கும் கோவை சரளா - வேலை காரியாய் இருக்க வேண்டிய அவசியம் என்ன ?

** மார்கெட்டிங் மேனேஜரை " பேன்க் போய் - 7 லட்சம் பணம் எடுத்து வா" என்று சொல்ல, அவர் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்டா என்ன ?

சரி விடுங்க !

மெயின் படத்தில் ஹீரோவின் தில்லு முல்லு வேலை தெரிந்து அடுத்த 5 நிமிடத்தில் படம் முடிஞ்சிடும் இங்கு அப்ப தான் சந்தானம் என்ட்ரி ! அடுத்த 10 நிமிஷத்துக்கு சந்தானம் - சந்தானமாகவே கலக்குகிறார் !

தில்லு முல்லு - ஜாலியா ஒரு முறை பார்த்து சிரிங்க சார் !
*********
அண்மை பதிவு: உணவகம் அறிமுகம் - திண்டுக்கல் வேலு பிரியாணி

Saturday, June 22, 2013

உணவகம் அறிமுகம் - திண்டுக்கல் வேலு பிரியாணி

வேளச்சேரியில் ஷாப்பிங் முடித்து இரவு பத்து மணியளவில் டின்னர் சாப்பிட கடை தேடினோம். ஒரு வழியாக திண்டுக்கல் வேலு பிரியாணி கடைக்கு வந்து சேர்ந்தோம்.

                                    

வேளச்சேரி ரயில் நிலையம் மிக அருகே உள்ளது திண்டுக்கல் வேலு பிரியாணி கடை. மேம்பாலத்திலிருந்து பார்த்தாலே கடையின் போர்டு பெரிதாக தெரியும்.

டேஸ்டுக்காக ஒரு பிரியாணியும், பெண் சாப்பிடும் விதம் வேறு சில உணவுகளும் ஆர்டர் செய்தோம்

வேலு பிரியாணி என்று பெயர் உள்ளதே தவிர மற்ற வகை உணவுகள் தான் நிறையவே உள்ளது.

நாங்கள் சாப்பிட்டவை

சிக்கன் பிரியாணி -1
எக் பிரைட் ரைஸ்
சிக்கன் கொத்து பரோட்டா
எக் நூடுல்ஸ்

பரோட்டா, சப்பாத்தி போன்ற எதற்கும் குருமா தர மாட்டார்களாம் ! சைட் டிஷ் தனியாக ஆர்டர் செய்ய வேண்டும் என்றனர். சைட் டிஷ் ஒவ்வொன்றும் 150 முதல் 200 வரை விலை !

சீக்கிரமே உணவுகளை தந்து விட்டனர்

பிரியாணி ரொம்ப சுமார் தான். எக் பிரைட் ரைஸ் மற்றும் கொத்து பரோட்டா தான் நன்றாக இருந்தது. நூடுல்ஸ் ஜஸ்ட் ஓகே

ஒவ்வொரு ஐட்டமும் 120 முதல் 150 ரூபாய் ரேஞ்சில் இருக்கிறது (நான், ரொட்டி தவிர்த்து ). விலை சற்று அதிகம் தான். விலைக்கேற்ற தரம் இருக்கிறது என்று சொல்ல முடியாது

ஹோட்டல் தூரத்தில் இருந்து பார்க்கும்போது மெயின் இடத்தில் இருக்கிற மாதிரி தெரிந்தாலும், அருகில் போனால் சூழல் சற்று சரியில்லை. அருகிலேயே கால்வாய் ஓடுகிறது. (மினி கூவம் !! )

ஒரு இடத்தின் சுத்தத்தை அறிய அங்கு டாய்லெட் எப்படி வைத்துள்ளனர் என்பதை வைத்து அறியலாம் ! ஹோட்டலில் சாப்பிடும் அரை நீட்டாக இருந்தாலும், டாய்லெட் மோசமாக வைத்துள்ளனர். மாடியில் ஹோட்டல்- டாய்லெட் கீழே தரை தளத்தில் மட்டுமே; அதுவும் மோசமான நிலையில் :(

வேலு பிரியாணி - Value for money அல்ல !

Friday, June 21, 2013

ஒரு வெளம்பரம் ..!

ஒரு வெளம்பரம் ..!



அனுமதி இலவசம் ! ஆர்வமுள்ள எவரும் கலந்து கொள்ளலாம் !

Thursday, June 20, 2013

போஸ்ட் ஆபிசில் பணிபுரிந்த பதிவரின் தந்தி அனுபவம் !

பதிவர் துளசி கோபால்

கிணு கிணு என்று சைக்கிள் மணியை ஒலிக்கவிட்டு தந்தி ன்னு குரல் வந்தாப்போதும் வீட்டு ஆளுங்க எல்லோரும் வாசலுக்குப் பாய்வாங்க. அக்கம்பக்கத்து சனமும் கைவேலையைப் போட்டுட்டு அப்படியே பாயும். தெருவிலே சாதாரணமா அந்த வீட்டுப்பக்கம் நடந்து போற ஆட்களும் இதுலே சேர்த்தி. சேதி என்ன ஏதுன்னு தெரியுமுன்பே வீட்டு ஆளுங்க கண்ணுலே மளமளன்னு கண்ணீர் ஊற்று பெருக்கெடுக்கும். கிழங்கட்டைகள் இருக்கும் வீடுன்னா அம்புட்டுதான்....மாரடிச்சுக்கிட்டு ஒப்பாரியை ஆரம்பிச்சுருவாங்க.

ஏன்?

தந்தி கொண்டுவரும் தபால்துறை பணியாளர் நேரடியா எமனிடம் இருந்து வர்றார் என்பது அந்தக் கால ஐ...!தீகம். சனங்களையும் சும்மாச் சொல்ல முடியாது.வர்ற தந்தி எல்லாம் போயிட்ட கேஸ்களைப் பற்றித்தான் பெரும்பாலும். ஒன்னு ரெண்டு வேணுமுன்னா..... ஃபாதர் சீரியஸ். ஸ்டார்ட் இம்மீடியட்லி. அப்படியும் இவுங்க அடிச்சுப்புடிச்சுப் புறப்பட்டு பஸ்ஸோ ரெயிலோ புடிச்சுப்போய்ச் சேரும்போது ஸோ அண்ட் ஸோ போய்ச் சேர்ந்துருப்பார்.

பல ஊர்களிலும் கிராமங்களிலும் தந்தி கொண்டுவரும் பணியாளரையே அதைப்பிரிச்சுப் படிச்சு விவரம் சொல்லக் கேப்பாங்க. ஆத்தாடி..... இங்கிலீசுலெல்ல எழுதி இருக்கு!

தந்தியில் வாழ்த்து அனுப்புவதெல்லாம் பிற்காலத்தில் ஆரம்பிச்சதுதான். அப்படியே மணி ஆர்டர் அனுப்பும்போதும் விரைவில் பணம்போய்ச் சேரணுமுன்னா தந்தி மணிஆர்டர்தான். இதுலேயும் பாருங்க...... பணம் 'போய்ச் சேரணுமுன்னா'...... தந்தி:-)))

துளசி டீச்சர் மணி விழாவில் 

சின்னப் பிள்ளையா வீட்டுலே கரஸ்பாண்டென்ஸ் பார்த்துக்கறது நாந்தான். ஓடிப்போய் ஒரு கார்டு வாங்கியா, இன்லேண்ட் லெட்டர் வாங்கியா, ஸ்டாம்ப் வாங்கியான்னு என்னைத்தான் விரட்டுவாங்க. தபால் ஆஃபீஸுக்குப்போனால் சட்னு வரமாட்டேன். ஒரு மூலையில் கட்டுக்கடகட... தட்டுத் தடதடன்னு சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும் பாருங்க அங்கே போய் ஒருபத்து நிமிசமாவது நின்னு அந்த தனி ஆவர்தனத்தைக் கேட்டுட்டுத்தான் வருவேன். உள்ளூர் ஆஸ்பத்திரி டாக்டரம்மா வீட்டு வாரிசு என்பதால் எல்லா இடங்களிலும் நமக்கு சலுகை கொஞ்சம் அதிகம்தான். ஊர் சின்னதுதானே....

அப்போ அது மோர்ஸ் கோட் என்ற பெரிய விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது கேட்டோ:-) அதைக் கவனிச்சுக்கேக்குற அண்ணன் ஒரு ஃபாரத்துலே மடமடன்னு இங்கிலீசுலே என்னவோ எழுதுவார். ஒருமாதிரி ரோஸ் கலர் காகிதமாவும் இருந்துச்சுன்னு நினைப்பு. அதைக்கொண்டுபோய் போஸ்ட்மாஸ்டரிடம் காமிச்சுக் கையெழுத்து வாங்குனதும் தந்தி ப்யூனைக் கூப்பிட்டுக் கொடுத்தவுடன் அவர் சைக்கிளை எடுத்துக்கிட்டு ஓடுவார். சின்ன ஊருன்னா எல்லாரையும் எல்லாருக்கும் தெரியுமே... யாருக்கு என்ன சமாச்சாரம் தந்தியில் வந்துருக்குன்னு அவுங்க பேசறதைக் கேட்டால் போதும்.... வீட்டுக்கு மின்னலாட்டம் ஓடிவருவேன், சோக சமாச்சாரம் நம்ம வீட்டாளுங்களுக்கு ஒலிபரப்ப! ப்ரைவஸியா ஒன்னா அந்தக் காலத்துலே! அப்படின்னா என்னன்னு கூடத் தெரியாது!

நம்ம வீட்டுக்கும் தந்தி சிலமுறை வந்துருக்கு. ஜானகி(ராமன்)மாமா போனதுக்கு வந்த தந்தி எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அம்மா, 'அண்ணா'ன்ற கதறலோடு தலையில் கைவச்சுக்கிட்டு தடாலுன்னு தரையில் அப்படியே உக்கார்ந்துட்டாங்க. பெரியக்காவும் அண்ணனும் ஓடிப்போய் அம்மாவைத் தாங்கித் தண்ணி கொண்டுவந்து கொடுத்து கூடவே புலம்புனாங்க.நான்? ஆ ன்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு நின்னேன். பட்ணம் போக (சென்னைப்பட்டினம்) திடுதிடுன்னு தயார் ஆகுது வீடு. அண்ணனுக்கும் அக்காவுக்கும் பள்ளிக்கூடப் பரிட்சை நேரம். அம்மா தனியாப் போயிடப்போறாங்களேன்ற பதட்டத்தில் நான். ரொம்பக் கவலைப்படவிடாமல் பையில் என்னோட கவுன்களைத் திணிச்சதைப் பார்த்ததும் சமாதானமானேன். அதெல்லாம் ஒரு தனிக்கதை..... போகட்டும்.

கால ஓட்டத்தில் நானும் வளர்ந்து, படிச்சு வேலைக்குப்போக ஆரம்பிச்சேன். சொன்னா நம்ப மாட்டீங்க! தபாலாபீஸுலே வேலை! அதுலேயும் தந்திப்பிரிவு! ஃபோனோக்ராமுன்னு ஒன்னு அப்போ இருந்துச்சு. வீட்டுலே டெலிஃபோன் வச்சுருக்கும் மக்கள் ஹாயா வீட்டுலே இருந்துக்கிட்டே தந்தி அனுப்பலாம். அவுங்க இந்த சேவைக்குன்னு இருந்த 186 எண்ணைக் கூப்பிட்டதும் நம்ம ஆஃபீஸ்லே வரிசையா இருக்கும் கேபின்களில் எந்த லைன் ஃப்ரீயோ அங்கே அந்த கால் லேண்ட் ஆகும். தொலைபேசி நம்பரை மட்டும் எடுத்துக்கிட்டு அவுங்களை ஃபோனைக் கட் பண்ணச் சொல்லிட்டு, நாங்க அவுங்க எண்ணைக் கூப்பிட்டு தந்தி சமாச்சாரத்தைக் கேட்டு எழுதிக்குவோம். கொஞ்சநாள் அவுங்க நேரடியா சமாச்சாரம் முதலிலேயே சொல்ல அதை அப்படியே எழுதிக்கிட்டு இருந்தோம். அப்புறம் சில விஷமிகள் சும்மானாச்சுக்கும் நம்ம நம்பரைக்கூப்பிட்டு பொய்த்தந்தி கொடுக்கறதும், பொண்ணுங்க குரலைக்கேட்டு வீண் அரட்டை அடிக்கறது, விதண்டாவாதம் பேசறதுன்னு அட்டூழியம் செஞ்சதால்தான் நாங்களே கூப்பிட்டு சமாச்சாரம் வாங்கும் முறை வந்துச்சு.

தந்தி மேட்டரை எழுதி முடிச்சவுடன் ( ரெண்டு கார்பன் பேப்பர் வச்சு மூணு காப்பி) கடை நிலை ஊழியர் ஒருத்தர் மூணு காப்பிகளுக்கும் டேட் ஸ்டாப் அடிச்சதும் முதல் காப்பியை டெலிப்ரிண்டர் செக்‌ஷனுக்கு அனுப்பிருவோம். மாடியில் நம்ம செக்‌ஷன் நேர் கீழே தரைத்தளத்தில் டெலிப்ரிண்டர் செக்‌ஷன்னு இருந்துச்சு அப்போ. படி இறங்கிப்போய் கொடுப்பதைவிட வேகமா அனுப்பணும் என்பதற்காக தரையில் சதுரமா வெட்டி மரத்தடுப்புகள் வச்சு பெட்டிபோல செஞ்சுருப்பாங்க. அது வழியா கீழேஅனுப்பறதுதான் வழக்கம். (கீழே வரை அந்தப் பெட்டி நீண்டுபோய் ஒரு மேஜைக்கு மேலே ஒரு ரெண்டடி உசரத்தில் முடியும். சின்ன மேன் ஹோல் மாதிரி. அதுக்குச் சரியான பெயர் எனக்குத் தெரியலை)

அங்கேயும் ஒரு க்ளாஸ் ஃபோர் ஊழியர் இருப்பார். அவர் அதைக்கொண்டுபோய் டெலிப்ரிண்டரில் வேலை செய்பவரிடம் கொடுத்ததும் தட்டச்சு செஞ்சு சமாச்சாரம் போகவேண்டிய ஊருக்குப் போயிரும். பெரிய ஊர்களில் கட்டுக்கடகட எல்லாம் அப்போ டெலிப்ரிண்டரா மாறி இருந்துச்சு.
மற்ற இரண்டு காப்பிகளில் ஒன்னு ஆஃபீஸ் ரெகார்டுக்கும் இன்னொன்னு தந்தி கொடுத்த வாடிக்கையாளருக்கும் அனுப்பப்படும்.

சாவு சமாச்சாரம், ஆபத்தான நிலையில் உயிர் ஊசலாடுதுன்ற மேட்டர் எல்லாம் ரொம்ப வராது. அப்படி வந்துட்டால் அது ட்ரிபிள் எக்ஸ் மேட்டர். உடனே சேதியை மரப்பெட்டி வழியா அனுப்பிட்டு தடதடன்னு தட்டுவோம். எமர்ஜென்ஸியாச்சே! கீழே இருக்கும் ஊழியர் கவனக்குறைவா இருந்துட்டாருன்னா வம்பில்லையோ? அதுவுமில்லாம மற்ற தந்திகள் எல்லாம் பத்து, பதினைஞ்சுன்னு கட்டுக்கட்டா சுருட்டிப்போடும்போது அவை 'தட்'ன்னு கனத்தோடு கீழே போயிரும். இது ஒத்தைப் பேப்பராச்சா..... சிலசமயம் நடுவழியிலே மாட்டிக்கிட்டு நிக்கும்! பென்சில், பேனா, டேட் ஸ்டாம்பு இப்படி எதையாவது எறிஞ்சு அதைக் கீழே தள்ளுவோம். அப்புறம் ஒரு சின்ன மூங்கில் குச்சிகூட கொண்டு வந்து வச்சுருந்தோம் எங்க செக்‌ஷனில் என்றால் பாருங்க.

வியாபாரிகள் லோடு வரலை அது இதுன்னு ஏராளமா தந்திகள் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. வார்த்தைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி காசு என்பதால் அவுங்க சிக்கனமா சேதி சொல்வாங்க. நமக்குத்தான் தலையும் வாலும் புரியாது. ஊருக்கு இந்த ரயிலில் கிளம்பி வரேன், ஸ்டேஷனுக்கு வா , பெண் குழந்தை பிறந்துருக்கு! பையன் பொறந்துட்டான், அரைவ்டு சேஃப்லி இப்படி சிலபல சோஸியல் சமாச்சாரங்களும் இடைக்கிடைக்கு வரும். எது வந்தா நமக்கென்ன? எழுதி அனுப்புவதோடு நம்ம வேலை முடிஞ்சது!

அடிக்கடி தந்தி கொடுக்கும் சில நபர்களின் குரல் அடையாளம் தெரியக்கூடச் செஞ்சது. அதேபோல வாடிக்கையாளர்களுக்கும் நம்ம குரல் அத்துபடி ஆச்சுன்னு வையுங்க.

ஒரு சமயம் ஒருத்தர் தந்தி சமாச்சாரம் சொல்லி முடிச்சுட்டு அனுப்புபவர் பெயர் கிருஷ்ணன் என்று சொன்னார். அப்படியே எழுதிட்டு அதை வாசிச்சுக் காமிச்சப்ப...... வெறும் கிருஷ்ணன்னா போட்டீங்கன்னார். பின்னே? வெல்லம் போட்ட கிருஷ்ணன்னு போடணுமான்னு கேட்டுட்டேன். (என்னா வாய்டீ அம்மா!) அவருக்கும் சிரிப்பு வந்துருச்சு. டென்னிஸ் கிருஷ்ணன்னு போடும்மான்னார். ஹைய்யோ!!! பிரபலத்திடமா வாயாடிட்டோமுன்னு எனக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை:-)))

வேலை செய்யும் எல்லோருமே லேடீஸ் என்பதால் நட்புக்கும் அரட்டைகளுக்கும் பஞ்சமே இல்லை! ஜாலியாத்தான் இருந்துச்சு. காலை 7 மணிமுதல் இரவு 9 வரை ரெண்டு ஷிஃப்ட் லேடீஸ் வேலை செய்யுமிடத்தில் இரவு 9 முதல் காலை 7 வரை நைட் ஷிஃப்ட் மட்டும் ஆண்கள் வந்து பொறுப்பேத்துக்குவாங்க.

ஒரு ஒன்னரை வருசம் கழிச்சு அப்போ தபால் தந்தி தொலைபேசித்துறைன்னு எல்லாம் ஒன்னா இருந்ததில் இருந்து தொலைபேசித்துறை தனியா பிரிஞ்சது. எங்களுக்கு தந்தியா, தொலைபேசியா எது வேணுமுன்னு ஒரு சாய்ஸ் கொடுத்தாங்க. என்னவோ ஒரு தோணல்..... எங்க செக்‌ஷனில் அஞ்சுபேர் மட்டும் தொலைபேசிக்குப் போறோமுன்னு சொல்லிட்டாங்க. அதிலே நானும் ஒருத்தி. குளத்தில் இருந்த மீனைக் கடலில் போட்டது போல! கூட்டத்தில் இருந்து பிரிஞ்சது முதலில் கஷ்டமா இருந்தாலும் அப்புறம் பழகிப்போச்சுன்னு வையுங்க.
செல்ஃபோன் காலத்தில் தந்தி அனுப்புவது குறைஞ்சுபோகத்தானே செய்யும்? அதுவும் செல் இல்லாதவன் புல் என்ற புதுமொழிக்கேற்ப எல்லோர் கையிலும் செல். குழந்தைக்கு முதல் விளையாட்டுச் சாமான் கிலுகிலுப்பையா இருந்த காலம் போயே போயிந்தி.

அரசியல் வியாதிகள்தான் தந்தி அனுப்பும் போராட்டம் என்று சொல்லி மறைமுகமா தந்தித்துறையை இதுவரை வளர்த்துக்கிட்டு இருந்தாங்க. இனி அவுங்க புதுப்போராட்டம் ஒன்னைக் கண்டுபிடிக்கணும். அதெல்லாம் உக்கார்ந்து யோசிச்சுருவாங்க தானே?

எது எப்படியோ..... காலப்போக்கில் காணாமல்போகும் சமாச்சாரங்களில் தந்தியும் ஒன்னாகிப் போச்சு. இனி தந்தின்னா..... அது தினத்தந்திதான் போல !

************
அந்த ஒரு தந்தி : உமா

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த என்னுடைய பெயர் உமா, என் ஆச்சி அடிக்கடி சொல்வார் ’நீ பட்டிக்காட்டுல பொறந்தே,,உனக்கு பெயர் பட்டணத்துல இருந்து தந்தியில பறந்து வந்துச்சு’-ன்னு! சித்தப்பா (அப்பாவின் தம்பி) தந்தி மூலம் ’குழந்தைக்கு உமா எனறு பெயர் வைக்கவும் “ என ஆசைப்பட ஃபிளாரன்ஸாகவோ, மேரியாகவோ அழைக்கப்பட இருந்த நான் உமா ஆகி விட்டேன்.

ஆனால் எனக்கு நினைவு தெரிந்தபின் எங்கள் வீட்டுக்கு இரண்டே தந்திதான் வ்ந்தது ஒன்று வழக்கமான் த்ந்திகளைப்போல் மாமா தவறிய செய்தியுடன் வந்த தந்தி.. அடுத்ததுதான் வாழ்க்கையில் புது அத்தியாயத்தை அதிர்ச்சி குலுக்கலோடுஆரம்பித்து வைத்த தந்தி!

நிறைந்த செல்வத்துடன் ஒரே மகளாக பிறந்த என் அம்மாவுக்கு அழகான கணவராக அப்பா, வீட்டோடு மாப்பிள்ளை! நாங்கள் 4 பெண்குழந்தைகள், கெட்டகுணமெதுவும் இல்லாத அப்பா மிகப் பெரிய வள்ளல்! பணத்தை தண்ணீராய் செலவளித்து, வியாபாரத்தில் நஷ்டம், நகைகள் அம்பேல்..கொஞ்ச்ம் கடனாகிவிட ஒருநாள் திடீரென வீட்டிலிருந்து மாயமாகிவிட்டார் கிராமத்தில் அப்பா காணவில்லை என்றால் என்ன களேபரமாகும் என்பதை சொல்லத்தேவையில்லை ஆளாளுக்குத் தேடியலைய, அம்மா ஒரு வார்த்தை பேச்வில்லை, அழவில்லை.ஆச்சி கூட அப்போது ”புள்ளை பெத்துக்கும்போதுகூட அம்மான்னு கத்தமாட்டாளே ” அப்படீன்னு அம்மாவை விமர்சித்தார்.

சரியாக 5 நாட்கள் கழித்து தேவதூதன் போலொரு தபால் ஊழியர் தந்தி கொண்டுவந்தார், வீட்டின் முன் 15, 20 மனித்ர்க்ள் கூடிவிட அம்மாவிடம் கையெழுத்து வாங்கி அவரே தந்தி வாசகத்தை மொழிபெயர்த்தார், ”நான் மெட்ராஸ் ரெட்ஹில்ஸில் இருக்கிறேன் கடித்ம் தொடர்கிறது_செல்லப்பா”
அவ்வளவுதான்,,, வீட்டுனுள் சென்ற அம்மாவை முதன்முறையாக கண்ணில் கண்ணீருடன் பார்த்தேன் சத்தமேயில்லாமல் குனிந்து அழுதுகொண்டிருந்தார்கள். 5 நாட்கள் அடக்கி வைத்திருந்த கண்ணீர்!!!!அது ஆனந்த கண்ணீரா, ஆதங்கத்தினால் வந்த கண்ணீரா, வரிசையாக 16,14, 12, 8 வ்யதில் 4 பெண்குழந்தைகளுடன் எப்படி சமாளிப்போம் எனற ஆற்றாமையால் வந்தகண்ணீரா, இன்றுவரை பகுத்தறியத்தெரியவில்லை,எனக்கு மட்டுமல்ல, அம்மாவுக்கும்தான் !

ஆனால் அதன்பின் அடிக்கடி அப்பா வீட்டுக்கு வந்துபோனாலும் அவரிடமிருந்து எந்த உதவியையும் எதிர்பாராமல் பள்ளி ஆசிரியையாக வேலைபார்த்துக்கொண்டு 4 பெண்களையும் நன்கு படிக்க வைத்து, தனிமனுஷியாக அனைவருக்கும் திருமணமும் செய்து வைத்தார் .

அதுவரை கிராமத்தில் வீட்டைவிட்டு வெளியே செல்லாத அம்மாவை வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடித்து கரையேற ஒரு உத்வேகம் கொடுத்த அந்த தந்தி.அப்பா சென்னையை விட்டு தனது 62 வது வயதில் வீடு திரும்பும்வரை அம்மாவின் பழைய மர அலமாரியில் பத்திரமாக இருந்தது..!

Wednesday, June 19, 2013

வானவில்: கலைஞர் - சென்னையின் வளர்ச்சி - சமந்தா

சென்னையின் வளர்ச்சி

சமீபத்தில் நண்பர் ஒருவர் பேசும்போது சொன்னதை இங்கு பகிர்கிறேன் :

" சென்னையின் ரியல் எஸ்டேட் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. தென் மாநிலங்களில் சென்னை அளவு ரியல் எஸ்டேட் விலையேற்றம் - கடந்த 5 வருடங்களில் எங்கும் நிகழலை. குறிப்பா ஹைதராபாத்தில் 5 வருடமா எந்த நிலமும் கொஞ்சம் கூட விலை ஏறலை. ஆனா சென்னையில் வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் flat விலை கூட கடந்த 5 வருடத்தில் மூணு மடங்காகிடுச்சு.

கம்பனிகள் பலவும் சென்னையை சுற்றியே தான் வருகின்றன. இது சென்னைக்கு மிக பெரிய பலம். தெலுங்கானா பிரச்சனையால் யாரும் ஹைதராபாத் பக்கம் செல்வதில்லை. பெங்களூரு தான் முதலில் எல்லாருக்கும் பிடித்த இடமாய் இருந்தாலும், பெரிதாய் வளர வாய்ப்பில்லாததால் சென்னை அளவுக்கு அதன் தொழில் வளர்ச்சி இப்போது இல்லை.

சென்னை இப்படி மிக வேகமாக தொழில் துறை மற்றும் ரியல் எஸ்டேட்டில் வளர்ந்தாலும் Infrastructure development -ல் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தை விட மிக மோசமான நிலையில் உள்ளது. டிரைனேஜ், குடி தண்ணீர் உள்ளிட்ட சிவிக் விஷயங்களில் அரசாங்கத்தின் செயல்பாடு மற்ற மாநிலங்கள் அளவுக்கு சுத்தமாய் இல்லை.Infrastructure இவ்வளவு சுமாராய் இருக்கும்போதே - ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் வளர்ச்சி இவ்வளவு நன்றாய் இருக்கிறது என்றால், ஹைதராபாத் மற்றும் பெங்களூரு போல - அவற்றில் நல்ல வளர்ச்சி அடைந்தால், சென்னை எங்கேயோ போயிடும் !"

அழகு கார்னர்


இரு செய்திகள் 

செய்தி 1: வட இந்தியாவில் வெள்ளம் - ஏராள பாதிப்பு .

சென்னையில் வெய்யில் சுட்டெரிக்க - தண்ணீர் பஞ்சம் மீண்டும் எட்டி பார்க்கிறது இன்னொரு புறம், அதே நேரத்தில் - வட இந்தியாவில் - எவ்வளவோ நீர் வீணாகிறது. நதிநீர் இணைப்பு விஷயத்தில் ஏன் தீவிரமாக செயல்பட முடியாமல் போகிறது !!

செய்தி 2: ஹிந்தி நடிகை ஜியா கான் தற்கொலை விஷயத்தில் - அவரது காதலர் கைது செய்யப்பட்டார். இது பற்றி எழுதிய டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை - ஆண்கள் காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டால் - அவரது காதலி என எந்த பெண்ணும் கைது செய்யப்படுவதில்லை என எழுதியிருந்தது. யோசிக்க வேண்டிய விஷயம் தான் இது !

என்னா பாட்டுடே 

என் இனிய பொன் நிலாவே .....இந்த பாடலை பிடிக்காதவர் யாரும் இருக்க முடியுமா ....

ஜேசுதாசின் குரல் தனித்துவமானது. கிட்டார் உள்ளிட்ட வாத்தியங்களில் - ராஜா- ராஜாங்கம் செய்திருப்பார். பாலு மகேந்திரா ஒளிப்பதிவில் ஷோபாவை காணும்போது தான் மனம் என்னவோ போல் .ஆகிறது . எவ்வளவு அற்புத நடிகை ......ஹூம் !



நீங்க - நான் - ராஜா சார்

சரவணன் மீனாட்சி சீரியலின் - ஹீரோ செந்தில் - அந்த கதையில் வருவது போல நிஜ வாழ்க்கையில் ஒரு ரேடியோ ஜாக்கி ! அந்த சீரியல் துவங்கும் அதே இரவு 9 மணி துவங்கி -நள்ளிரவு 1 மணி - வரை "நீங்க - நான் - ராஜா சார்" என்கிற தலைப்பில் ரேடியோ மிர்ச்சியில் இளைய ராஜா பாடல்களை ஒலிபரப்புகிறார். இரவு 10 முதல் பத்தரை வரை ரேடியோவில் - இந்நிகழ்ச்சி கேட்டுவிட்டு தூங்க செல்வது வழக்கமாகி விட்டது.

அண்மையில் இளையராஜா பிறந்த நாள் வந்தபோது அவரிடம் ஜாலியாக பேட்டி எடுத்து ஒலிபரப்பினர். " உங்க லவ் அனுபவங்கள் பத்தி சொல்லுங்க" " உங்க பாட்டு கேட்டுட்டு நாங்க டான்ஸ் ஆடுறோமே; நீங்க எப்பவாவது டான்ஸ் ஆடிருக்கீங்களா?" " உங்களுக்கு பிடிச்ச நடிகை யார் ?" போன்ற எல்லா கேள்விக்கும் ராஜா ஜாலியான மூடில் பதில் சொன்னார். அவரது பேவரைட் நடிகை பானுமதியாம் !

பதிவர் பக்கம் - கடல் பயணங்கள் சுரேஷ் குமார் 

சுரேஷ் குமார் ப்ளாக் துவங்கி ஓராண்டு ஆகிறது. விடாமல் தொடர்ந்து எழுதுகிறார். மாதம் 20 முதல் 30 பதிவுகள் எழுதி விடுகிறார் இந்த பெங்களூர் வாழ் இளைஞர் ! 

பல்வேறு இடங்களுக்கு பயணம், சாப்பாட்டு கடை மற்றும் அந்தந்த ஊர் ஸ்பெஷல் எழுதுவது இவரின் விருப்ப பதிவுகளாக இருக்கிறது

பயண கட்டுரைகள் மற்றும் ஊர் ஸ்பெஷல் பல நேரங்களில் ரசிக்க வைக்கிறது 

ராஜபாளையம் நாய்கள் பற்றிய விரிவான கட்டுரை அசத்துகிறது
மாலத்தீவில் - தண்ணீரில் இறங்கும் விமானம் பற்றிய சுவாரஸ்ய கட்டுரை - இங்கு

தொடர்ந்து எழுதுங்கள் சுரேஷ்குமார் ! வாழ்த்துகள் !

டாக்டர் விகடனில் கலைஞர் 

டாக்டர் விகடன் பத்திரிகையில் - வாரம் ஒரு பிரபலம் - தனது உடல்நலனை எப்படி பாதுகாக்கிறார் என்பது பற்றி எழுதுவார்கள் இந்த இதழில் கலைஞர் கருணாநிதி குறித்து எழுதியிருந்தனர். 4 மணிக்கு எழுவார் முன்பெல்லாம் வாக்கிங் போவார்; இப்போது செல்வதில்லை என பெரும்பாலும் எல்லாருக்கும் தெரிந்த தகவல் என்றாலும் ஒரு செய்தி மட்டும் ஆச்சரியப்படுத்தியது

கலைஞருக்கு இதுவரை சர்க்கரை நோய் அல்லது ரத்த கொதிப்பு (B. P ) இல்லையாம் ! இந்த இரு நோய்களும் டென்ஷன் ஆன வாழ்க்கை வாழும் எவருக்கும் பெரும்பாலும் வந்து விடும். அதிலும் சற்று வயதானால் வருவதற்கு வாய்ப்புகள் இன்னும் அதிகம்.

நடை பயிற்சி சாப்பாட்டில் அதீத எச்சரிக்கை என இருக்கும் வைரமுத்துவிற்கு கூட சர்க்கரை நோய் வந்து விட்டது. இதன் காரணம் கேட்ட போது "தொழிலில் உள்ள டென்ஷன் தான் " என்று கூறியிருந்தார் (அவரது முக்கிய டென்ஷன்- எழுதிய பாடலுக்கு தயாரிப்பாளரிடம் இருந்து பணம் ஒழுங்காய் வராததே !)

90 வயது வரை - கலைஞர் எத்தனை பிரச்சனைகளை சந்தித்து விட்டார் ! எப்படி அவர் தன் மனதை - பிரச்சனைகள் பாதிக்கா வண்ணம் வைத்துள்ளார் (டென்ஷனை மனதுக்குள் -விட்டிருந்தால் மேற்படி நோய்கள் இரண்டும் நிச்சயம் வந்திருக்கும் ) - இது நிச்சயம் ஆச்சரியமாகவே உள்ளது.

அநேகமாய் கலைஞர் சென்ச்சுரி அடித்து விடுவார் !

Tuesday, June 18, 2013

பதிவர்களின் "சார் தந்தீ...." அனுபவங்கள்...

ஜூலை 15 ஆம் தேதியுடன் தந்தி சேவை நிறுத்தப்படுகிறது என்று படித்தவுடன் -மனது என்னவோ போல் ஆனது. தந்தி குறித்தான அனுபவங்கள் மனதில் ஓடின

பதிவர் நண்பர்கள் தங்கள் தந்தி அனுபவங்களை இங்கு பகிர்கிறார்கள்.

"தபால் -துறையில் தந்தி அலுவலகத்தில்" பணியாற்றிய ஒரு பதிவரின் அனுபவம் - நிறையவே உள்ளதால் வியாழன் அன்று தனி பதிவாக வெளிவருகிறது


ஸ்ரீராம் (எங்கள் ப்ளாக்)

"ஸார்... தந்தி!" இந்தக் குரல் எழுப்பும் திகில் அந்தக் காலத்தில் மிக அதிகம். அகாலத்தில் வீட்டு வாசலில் அடிக்கும் சைக்கிள்மணி பெரும்பாலும் தந்தி சேவர்கர்களுடயதே என்பதால் அந்தச் சத்தமும் சிலீர் என்று அடிவயிற்றில் இறங்கும்.

"யாரோ தெரியலையே ..." இது முதல் திகில்.

பெரும்பாலும் தந்தியின் தந்தியின் வாசகங்கள் 'ஸ்டார்ட் இம்மீடியட்லி... ஸோ அன்ட் ஸோ சீரியஸ்' தான்! இப்போதெல்லாம் நம்முடைய அலைபேசியில் ஒரு எஸ் எம் எஸ் போதும். ஏன், பேசவே செய்து விடலாம். அந்தக் காலத்தில் லேண்ட் லைன் தொலைபேசி கூட மிகச் சில வீட்டில்தானே இருந்தன?

அப்படி உதவிய ஒரு சேவை, தற்சமயம் டெக்னாலஜி ,முன்னேற்றத்தால் விடைபெற்றுச் செல்வது இயற்கைதான். நன்றி சொல்லி விடை கொடுப்போம். சில நாட்களுக்கு முன்னால் பழைய மாடல் புகைவண்டி எஞ்சின் விடை பெற்றதே, அது போல! இவைகள் காலத்தின் கட்டாயம்!

இப்போதெல்லாம் நாடு இரவில் அலைபேசி அடித்தால் பயமாகத்தான் இருக்கிறது.

எங்கள் ப்ளாக்கில் கூட எங்கள் அலுவலக அனுபவங்கள் தொடரில் ஒரு தந்தி அனுபவம் பகிர்ந்திருக்கிறோம்! தலைப்பு 'சார் தந்தி' தான்!

எனக்கு இண்டர்வியூவுக்கு சென்னை வரச் சொன்ன செய்தியும், வேலை கிடைத்த செய்தியும் தந்தி மூலம்தான் வந்தது!

எங்கள் தாத்தா-அப்பா காலத்தில் நடந்த ஒரு சிறு தந்திச் சம்பவம் பற்றி...

ஒரு தீபாவளி காலையின் பட்சண, வாண வேடிக்கைக் கனவுகளைச் சிதைக்க வந்தது ஒரு தந்தி. சம்பந்தி காலமாகி விட்ட செய்தி. சம்பந்தியாச்சே...! உடனே 'கடனை-உடனை' வாங்கி ஊருக்குக் கிளம்பியிருக்கிறார் தாத்தா.

மறுநாள் ஒரு தந்தி. தாத்தா கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக வந்த தந்தி பீதியூட்டியது. சாவுக்குப் புறப்பட்டுச் சென்றவருக்கு என்ன ஆயிற்றோ... தொலைபேச வேண்டுமென்றால் கூட அலுவலகத்துக்குத்தான் பேச முடியும். அலுவலகம் அன்றும் அதற்கு மறுநாளும் விடுமுறை. கவலை, மற்றும் குழப்பங்களுக்கிடையே நேரம் செல்ல, அடுத்த தந்தி வந்தபோது எல்லார் இதயமும் துடிக்க மறந்தது. ஆனால் இந்த தந்தி நல்ல வேளையாக தாத்தா உடல்நலம் தேறி வீடு திரும்பிய கதையைச் சொன்னது.

இங்கு இந்தக் கதை என்றால், இதே சம்பவத்தில், தாத்தாவின் பெரிய மகன் வெளியூரில் - குன்னூரில் - வேலை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு, 'இப்போது தேவலாம், தாத்தா உடல்நிலை முன்னேற்றம், இரண்டொரு நாளில் வீடு திரும்பி விடுவார்' என்ற தந்தி (முதலில்) அவரை அடைய, அவர் அடைந்த குழப்பத்துக்கு அளவே இல்லை. முன்னர் வர வேண்டிய தந்தி எல்லாம் அப்புறம் ஒவ்வொன்றாக பின்னால் வந்து சேர்ந்தபின்தான் அவர் குழப்பம் தீர்ந்திருக்கிறது!

இன்னொரு மாமாவுக்கு ஜப்பானில் ஒரு பயிற்சி எடுக்க கொஞ்சம் (அந்தக் காலத்தில்) பெரிய தொகை தேவையாய் இருக்க, சகோதரர்களுக்கு தந்தி அடித்து உதவி கேட்டிருக்கிறார். அவர்களும் உறவு வட்டத்தில் கலந்து பேசி ஓகே சொல்லித் தந்தி அடித்தது, பயிற்சிக்கு சம்மதம் சொல்ல வேண்டிய நேரம் கடந்து கிடைத்து வெறுப்பேற்றியது!

ஒரு நேரத்தில் அரசியல்வாதிகள் தங்கள் அரசியலுக்கு எல்லோரையும் கும்பல் கும்பலாக தந்தி கொடுக்கச் சொல்லி தந்தி ஆபீஸ் கிளர்க்குகளை வெறுப்பில் ஆழ வைத்த நேரங்கள் உண்டு.

இத்தனை எழுத்துக்கு இவ்வளவு பைசா என்ற கணக்கால் நிறைய வார்த்தைகளைச் சுருக்கி தந்தி அடிப்பது வழக்கம். அதுவும் கூடக் கொஞ்சம் குழப்பம் கொடுக்கும்.

சாதாரண தபால்காரர்கள் தீபாவளி, பொங்கலுக்கு இனாம் வாங்க வருவார்கள். தந்தி அலுவலரால்தான் இப்படி வர முடியாது! ஆனால் இவர்கள் மிகவும் வாழ்த்தப் பட வேண்டியவர்கள். செய்தியின் முக்கியத்துவம் கருதி, இரவு நேரங்களில் கூட, மழை புயல் என்று பார்க்காமல் ஒரு காலத்தில் பாதை இல்லாத ஊர்களுக்கெல்ல்லாம் கூட மிதி வண்டியில் தந்தியைச் சேர்ப்பித்தவர்கள் உண்டு.

உழவன்’ நவநீத கிருஷ்ணன்

இன்னும் சில வாரங்களில் ஜெயா தொலைக்காட்சி ஆரம்பிக்கப் பட்டுவிடும் என்ற மகிழ்ச்சியில் இருந்த நேரம் அது. காரணம் நான் தமிழ் செய்தி வாசிப்பாளனாக தேர்ந்த்தெடுக்கப் பட்டிருந்தேன். தினமும் செய்தி வாசிக்க பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

                                               

அப்போது வந்தது ஒரு சோதனை. நான் வேலை பார்த்துக்கொண்டிருந்த அலுவலகத்தின் மேலாளர் என்னை உடனடியாக டெல்லி அலுவலகத்திற்கு செல்லுமாறு கட்டளையிட்டார். என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்த வேலைதான் சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தது.

நான் என்னுடைய நிலைமையை அவரிடம் எடுத்துக் கூறினேன். ஆனால் அவரோ “மூன்று மாதமாவது நீ அங்கு வேலை பார்த்தாக வேண்டும். மூன்று மாதம் கழித்து வந்து சேர்ந்து கொள்கிறேன் எனச் சொல்லிவிட்டு போ” என கூலாக சொல்லிவிட்டுப் போய்விட்டார். என்னால் அதனை மறுக்க முடியவில்லை. சரி என்று சொல்லிவிட்டு, அதற்குப் பின்னர் யோசிக்க ஆரம்பித்தேன்.

நன் போட்ட திட்டம் என்னவென்றால், டெல்லி சென்று ஒரு பத்து நாள்கள் ஆனபின்பு, என்னுடைய வீட்டிலிருந்தே, யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை; உடனே கிளம்பி வா என தந்தி அடிக்கச் சொல்லிவிட வேண்டியதுதான் என்பதுதான்.

டெல்லி போயாச்சு. தாத்தாவுக்கு சீரியஸ்; பாட்டிக்கு சீரியஸ் எனத் தந்தி வந்தால், இதனை பொய் என நினைத்துவிடுவார்களோ என்ற சந்தேகம் வேறு. அதனால் “அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை; உடனே வா” என்றே தந்தி அடிக்க சொல்லிவிட்டேன்.

திட்டம் போட்ட படி, தந்தி வந்தது. அழுது புலம்புவது போல் நடித்து, தட்கலில் டிக்கெட் எடுத்து சென்னைக்கு வந்தேன்.

தொலைக்காட்சி ஆரம்பித்த முதல் நாளில் செய்தி வாசிக்கும் வாய்ப்பும் கிட்டியது.

தந்தி சேவையை வருகிற ஜூலை 15ம் தேதியோடு நிறுத்தப் போகிறார்கள் என்ற செய்தியை அறிந்தவுடன், இந்த தந்தி ஞாபகம் நினைவிற்கு வந்துவிட்டது.

ரத்னவேல் நடராசன் (ஸ்ரீ வில்லி புத்தூர் )

[-H.JPG]

நான் 1965லிருந்து தீப்பெட்டி தொழிற்சாலையில் பணி புரிகிறேன். அந்த தொழிற்சாலை வட மாநிலங்களுடன் தொடர்புடையது. அதன் வியாபாரத் தொடர்புகள் எல்லாம் தந்தி அடிப்படையில் தான்.

எங்களுக்கு பணம் வருவது தந்தி மூலம் தான் (T/T – Telegraphic Transfer). தந்தி வந்ததிலிருந்து பணம் வங்கிக்கணக்கில் வரவேண்டியது வரை தொடர்ந்து கொண்டிருப்போம். வங்கிக்கு தந்தி வரவில்லையெனில் தபால் அலுவலகத்தில் காத்திருந்து தந்தி சேவகரை தாஜா செய்து வங்கியில் சேர்ப்பது வரை செய்வோம். சில நேரம் தந்தியில் code tally ஆகாமல் போகும். திரும்ப வங்கியில் உள்ள அதிகாரிகளை பதில் கொடுக்க சொல்லி வங்கி பியூன்களை சரிக்கட்டி தந்தி உடனே ஏற்பாடு செய்வோம். Trunk Call போட்டு சென்னை தாண்டி பேசியதில்லை.

லாரி போக்குவரத்து தந்தியை நம்பித் தான். Jalgaon (Maharashtra) லிருந்து லாரி கிளம்பியவுடன் எங்கள் அலுவலகத்திற்கும், லாரி முதலாளிக்கும் தந்தி கொடுத்து விடுவார்கள். எப்போது வரும் என்ற அனுமானத்தில் லோடு தயார் செய்து வைப்போம். சில நேரம் போன் போட்டு கிடைக்காமல் திருமங்கலத்திலிருந்து ஒரு கண்டக்டர் கிளம்பி வந்து விடுவார். தந்தியும் கொடுத்து விடுவார்.

எல்லா ஊர்களிலும் எங்கு தந்தி அலுவலகம் இருக்கிறது என்பது ஒரு முக்கியமான விஷயம். பகல் நேரங்களில் தான் தந்தி கொடுக்க முடியும்; மிகவும் பெரிய ஊர்களில் இரவுப் பணிக்கு ஆட்கள் இருப்பார்கள்.

10.8.85 இரவு ஒரு பங்குதாரர் இறந்து விட்டார். 11.8.85 காலை 5 மணிக்கு எல்லோருக்கும் போன் செய்ய வேண்டும். எங்கள் அலுவலகத்திலும், பங்குதாரர் வீட்டிலும் மின்சாரமும், போனும் போய் விட்டது. அபசகுனம் என்பார்களே – இது தான். எல்லோருக்கும் தந்தி கொடுக்க முடிவானது. தந்தி அலுவலகம் காலையில் சென்றேன். தந்தி கொடுத்து விட்டேன். தொலைபேசி அலுவலகம் (Telephone Exchange) பூட்டியிருந்தது. (தூங்கி விட்டார்கள்). தந்தி அலுவலகத்திலிருந்து தொலைபேசி அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். எங்கள் அலுவலக கணக்கில் தொலைபேசி அலுவலகத்திலிருந்து பேசலாமா என்று கேட்டேன். நல்ல மனிதர் – துயரத்தை கேட்டு ஒத்துக் கொண்டார். அங்கு சென்று எங்கள் கணக்கில் – சிவகாசி, சாத்தூர், தூத்துக்குடிக்கு போன் செய்தேன். 10 நிமிடங்களில் தொடர்பு கிடைத்தது. இது என்னைப் பொறுத்த வரை பெரிய சாதனை. அந்த நண்பருக்கு நன்றி சொல்லி, அந்த சாதனைக்காக கிட்டத்தட்ட 25 வருடங்கள் புதுவருட வாழ்த்து சொல்லி டைரி கொடுத்துக் கொண்டிருந்தேன். மிக்க நெருங்கிய நட்புடன் இருந்தேன்.

தொலைத் தொடர்பு –இப்போது உள்ள மக்களுக்கு கைபேசி இருப்பதால் முன்பு நாம் பட்ட துயரங்கள் தெரியாது. சாவுச் செய்திகள் தந்தி மூலம் தான். ஏனென்றால் தெருவுக்கு ஒரு வீட்டில் போன் இருந்தால் அதிசயம். அதனால் trunk call போட தபால் தந்தி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்; பணம் கட்டி காத்திருக்க வேண்டும். கிடைக்கலாம், அல்லது கிடைக்காமல் போகலாம். தந்தி போய்க் கொண்டாவது இருக்கும்.

மதுரைக்கு காலையில் தந்தி கொடுத்தால் 3 மணி நேரங்கள் கழித்து கிடைக்கும். அவர்கள் அது பார்த்து கிளம்பி வந்து எடுக்க மறு நாள் ஆகி விடும். இப்போது உயிர் பிரியும் போது எல்லோருக்கும் தகவல் போய் விடுகிறது. எனவே இறுதிச் சடங்குகள் சீக்கிரம் முடிந்து விடுகிறது.

கிராமங்களுக்கு தந்தி செல்ல படி கட்ட வேண்டும்; விடுமுறையென்றால் டெலிவரி ஆகாது.

எங்கள் வியாபார அனுபவத்தில் தந்தி முக்கிய பங்கு வகித்தது. New technology overtakes previous one. It”s Ok. தொலைபேசித் தொடர்புகளும் எளிதில் கிடைக்காது. எங்கள் மேனேஜர் லாரி ஏற்பாடு செய்வதற்காக காலை 9 மணிக்கு சிவகாசி கிளம்புவார் (20 KM). நாங்கள் 10 மணிக்கு Trunk Call சிவகாசிக்கு போடுவோம். அவர் 11 மணிக்குள் ஏற்பாடு செய்தால் லாரி விபரம் தெரிந்து கொள்ள. சில நேரம் கிடைக்கும், சில நேரம் கிடைக்காது. அவர் 1 மணிக்கு வந்து விடுவார்; வந்த உடன் call ஐ cancel செய்து விடுவோம்.

எங்கள் குஜராத் பார்டி வருவார். கன்யாகுமரி செல்வதற்கு முன் call போடுவார். அவர் வர 3 நாட்கள் ஆகும். அப்பவும் கிடைக்காது. கான்சல் செய்து விடுவார். இப்போது இருப்பவர்களிடம் சொன்னால் நம்ப மாட்டார்கள்.

ரிஷபன்

‘ஸார் தந்தி’ என்றாலே தந்தி அடிக்கிற சுபாவம் தான் பெரும்பாலும் அந்த நாட்களில். நல்ல விஷயத்திற்கு தந்தி வராது என்றே முடிவு கட்டிய புத்தியும் பக்கத்து வீட்டுக்காரர்களும் நிரம்பிய சூழல்.

சிறுகதைப் போட்டியில் பரிசு என்று எனக்கு வந்ததற்கே .. தந்தியைப் பிரித்து படிப்பதற்குள்.. தற்கால சீரிய்ல பெண்மணிகள் போல.. மாலை மாலையாய் கண்ணீர் விட்டுக் கொண்டு (அது ஏன் மாலை.. மாலையாய்.. ஈவ்னிங் சீரியல் என்பதாலா !) கும்மியடித்தவ்ரகள் அது பரிசுதான் என்று தெரிந்ததும் இன்னும் சோகமாய் அழுதது வேறு கதை !

பெயர்க் குழப்பத்தில் (சாவுத் தந்தி) வேறு யாரையோ நினைத்துக் கொண்டு அங்கே போய்ப் பார்த்தால் அன்னார் உயிரோடு இருந்ததில்.. ‘அப்போ நீ போகலியா’ என்று அசடு வழிந்த தருணங்களும் உண்டு.

’ஸ்டார்ட் இம்மீடியட்லி’ என்கிற தந்தி வராத வீடுகள் உண்டோ ?! நம்மை பரபரப்பாக்குகிற மாய வார்த்தைகளின் சொந்தக்காரர் தந்திக்காரர் அல்லவா..

தந்தி வார்த்தைகளைத் தப்பாகப் புரிந்து கொண்டு.. பின்னர் சரியான அர்த்தம் கிடைக்கும்போது வருகிற நிம்மதி.. பக்கத்து வீட்டு பாட்டியம்மாவிடம் தந்திக்காரர் மாட்டி விழித்ததையும்.. ‘எனக்கு என்ன தெரியும் பாட்டியம்மா.. அவங்க அனுப்பினதை படிக்கிறேன்..’ ‘கட்டேல போறவனே.. ஒழுங்கா படிடா’ இன்னபிற சணடைகள் அப்புறம் ஓய்ந்து வந்தவருக்கு பக்‌ஷீஷும் மோரும் கொடுத்து அனுப்பி.. தபால்.. தந்தி துறையும் மக்களும் உறவு முறையில் இருந்த பொற்காலம் !

’நாளை வருகிறேன்’ ‘தேர்வில் பாஸ்’ ‘கல்யாணம் செட்டில்டு’ இப்படி பல சுப செய்திகள் தாங்கிய தந்திகள் வந்திருந்தாலும் அடிமனதில் தந்திக்கு கொடுத்த இடம் ‘இன்னார் காலமானார்’ தான்.. இன்று தந்தியே காலமாகிறது.. தந்தி அடிக்க முடியவில்லை அதைச் சொல்ல !

Monday, June 17, 2013

தொல்லை காட்சி- SPB - அறிவாளி வேடம் -மீனாட்சி அப்டேட்

ராக மாலிகாவில் SPB 

ஜெயா டிவி நடத்தும் பாட்டு நிகழ்ச்சி ராக மாலிகா. 500- வது நிகழ்ச்சியில் ஸ்பெஷல் கெஸ்ட் ஆக வந்த SPB - என்ன சத்தம் இந்த நேரம், எனக்கொரு காதலி இருக்கின்றாள், காதலின் தீபம் ஒன்று - என பல அட்டகாச பாடல்களை பாடி மகிழ்வித்தார். என்ன ஒன்று - இப்போதைய நிலையில் - சோக பாட்டு தான் அவரால் ஒன்றி பாட முடியுது (சொந்த வாழ்க்கை எபக்ட் போலும் !) மகிழ்ச்சி பாட்டை பாடும் போது அதன் சோக வெர்ஷனை அவர் பாடுற மாதிர்யிருக்கு !



இதுவரை 37,000 முதல் 40,000 பாடல்களுக்குள் பாடியிருப்பதாகவும் இன்னும் 2 வருடம் -பாடினால், பாட வந்து 50 வருடம் ஆகிடும்; அத்துடன் ரிட்டயர் ஆகிடுவேன் என்றும் சொன்னார் SPB !

சரவணன் மீனாட்சி அப்டேட்

வீட்டுக்கு வந்து சேரும் நேரம்- இந்த கருமம் ஓடுவதால் - சற்று பார்த்து தொலைக்க வேண்டியிருக்கு.

வேலைக்கு போகும் மீனாட்சியை சந்தேகப்படுகிறார் ஹீரோ. முக நூலில் வேறு பெயரில் வந்து சாட்டிங் செய்து நேரில் சந்திக்கலாமா என்று கேட்கிறார். விஷயம் தெரிந்த மீனாட்சி " என்னை எப்படி சந்தேகப்படலாம்" என கடந்த சில பல மாதங்களாக பேசாமல் இருக்கிறார்



(பொண்டாட்டி கூட மாச கணக்கில் பேசாம இருக்க முடியுமா என்ன ? கணவன் - மனைவி சண்டை முடிவது எங்கு தெரியுமா ? சரி வேணாம் விடுங்க .. நிறைய சின்ன பசங்க நம்ம ப்ளாக் படிக்குறாங்க )

சரவணன் காணாமல் போயி திரும்ப வர்றார் அப்பவும் மீனாட்சி பேசலை;

இந்த மீனாட்சி பொண்ணு இருக்கே - புருஷனையும் - வாடா போடான்னுது ; பரவால்லை உரிமைன்னு நினைச்சா, ஆபிசில் தன்னோட மேனேஜரையும் வாடா போடான்னுது. ஒரே குயப்பமா இருக்கு !

கிரிக்கெட் கார்னர் 

இங்கிலாந்தில் நடக்கும் ஐ சி சி - கிரிக்கெட் மேட்ச்சில் பல மேட்சுகள் மழையால் பாதிக்கப்படுகின்றன. " ஏங்கடா இந்த நேரத்தில் இங்கிலாந்தில் மேட்ச்கள் வச்சீங்க? " என கேட்கலாம்னு பார்த்தால் , இது தான் இங்கிலாந்தின் கோடை காலமாம் ! அட பாவிகளா !

மிக எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் மழையால் - அரை மணிக்கொரு முறை நிறுத்தி நிறுத்தி ஆடினாங்க. இதனால் மேட்ச் பிசுபிசுத்து போச்சு .

மழையால் மிக பாதிக்கப்பட்டது மேற்கு இந்திய தீவு தான். தென் ஆப்ரிக்காவுடன் அழகாய் ஜெயிக்க வேண்டிய மேட்ச் மழையால் "டை " ஆக, ரன் ரேட் அடிப்படையில் தென் ஆப்ரிக்கா செமி பைனல் உள்ளே நுழைஞ்சுடுச்சு. மேற்கு இந்திய தீவை நினைச்சால் பாவமா !இருக்கு !

நல்ல -நிகழ்ச்சி பொதிகையில் ஸ்போர்ட்ஸ் குவிஸ் 

பொதிகை டிவி- யில் ஒரு மாமா - கால் மேல் கால் போட்ட படி - ஸ்போர்ட்ஸ் குவிஸ் நடத்துகிறார். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து வரும் நிகழ்ச்சி இது. நிகழ்ச்சி நடத்துபவருக்கு எல்லா விளையாட்டிலும் செம அறிவு ! (நம்ம அறிவெல்லாம் கிரிக்கெட் உடன் முடிஞ்சுடும்!) போன் செய்து - கேள்விக்கு பதில் சொல்லும் முறையை - தமிழில் ஆரம்பித்தது இவர்களாக தான் இருக்கும் என நினைக்கிறேன்

ஒரு மணி நேர நிகழ்ச்சி என்றாலும் அரக்க பறக்க - கிடு கிடுவென நிகழ்ச்சி தொகுப்பாளர் பேசுவது செம காமெடியாய் இருக்கும்.

டிவியில் பார்த்த படம் - அமராவதி

அமராவதி படத்தின் முக்கிய சிறப்பு (!!??) என்ன தெரியுமா? தல அஜீத் மற்றும் - நடிகை சங்கவி அறிமுகமான படம் இது தான் ! ஏனோ இப்படம் இதுவரை முழுதும் பார்த்ததே இல்லை

ராஜ் டிவியில் இம்முறை போட்ட போதும் அரை மணி நேரம் தான் காண  முடிந்தது. மிக மிக ஒல்லியான அஜீத்தை பார்க்க செம சிரிப்பாய் இருந்தது. எக்ஸ்பிரஷனே இல்லாமல் - முடியை விரித்து முகத்தில் போட்ட படி பேசும் சங்கவி - இன்னொரு காமெடி.

படத்தில் வரும் புத்தம் புது மலரே என்ற அற்புத பாட்டு என்றும் எனக்கு பிடித்த லிஸ்ட்டில் இருக்கிறது. பாடலில் அந்த கால அஜீத்தை கண்டு களியுங்கள்


ஜோடி சீசன் - காமெடி ரவுண்ட்

நடிகைகள் ராதா மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் நடுவர்களாய் இருக்க - இந்த வாரம் காமெடி ரவுண்ட் நடத்தினர். பார்த்த நமக்கு பல இடங்களில் சிரிப்பு வந்தாலும் நடுவர்கள் " நல்லா இல்லை; சிரிப்பு வரலை " என்றே சொல்லி கொண்டிருந்தனர்

கலந்து கொண்ட அத்தனை டீமும் - காமெடி என்கிற பேரில் கடைசியில் "பாம்" போட்டு நாற்றம் அடிக்கிற மாதிரி செய்தது தான் கொடுமையாய் இருந்தது !

இப்போல்லாம் ஒரு வார நிகழ்ச்சியையே - 2 வாரம் இழுத்துடுறாங்க. ... இருக்கிறது ஏழெட்டு ஜோடி.. ஒவ்வொரு ஜோடி ஒவ்வொரு வாரம் அவுட் ஆனா - ஏழு வாரத்தில் - ப்ரோக்ராம் முழுக்க முடிஞ்சுடுமே... அதனால் ஒரு முறை நடந்த போட்டியை இழு இழுன்னு இழுத்து 2 வாரம் ஒளிபரப்புறாங்க .. !

நீயா நானா - அறிவாளி வேடம்

இந்த வார நீயா நானாவில் அறிவாளி வேடம் போடுவதன் அவசியம் என்ன என்று அலசினார்கள். பொதுவாய் இரண்டு பக்கமும் எதிரெதிராய் பேசுவார்கள் இங்கோ இரண்டு பக்கமும் அறிவாளி வேடம் அவசியமே என்று பேசினர்.

தெரிந்த முகங்களாக பதிவர் கார்க்கி மற்றும் தீபாவை காண முடிந்தது

தலைப்புக்கு பஞ்சமா என்று தெரியலை. நிகழ்ச்சி அதிகம் களை கட்டலை. ரசிக்க முடிந்த ஒரே ரவுண்ட் - நீயா நானாவில் என்ன அறிவாளி வேடம் போடுகிறார்கள் என - கிண்டலடித்த ரவுண்ட் தான் !

Saturday, June 15, 2013

உணவகம் அறிமுகம் - வேளச்சேரி 25 ரூபா உணவு கடை

உடுப்பி கிருஷ்ணா போளி ஸ்டால் என்பது அந்த கடை பெயர். வேளச்சேரி விஜய நகர் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது.



பெயரில் தான் போளி ஸ்டாலே ஒழிய - சுற்று வட்டம் முழுக்க டிபன் மற்றும் வெரைட்டி ரைஸ் வகைகளுக்கு தான் இக்கடை மிக பிரபலம் ! கூட்டம் எப்போதும் இருக்கும் கடை இது !


கடையின் சிறப்பே 25 ரூபாயில் - சப்பாத்தி , பரோட்டா, ஸ்பெஷல் தோசை துவங்கி - மதியம் பல வெரைட்டி ரைஸ் வகைகளும் வழங்குவது தான்.

சின்ன கடை என்றாலும் - ஏராளமான உணவு வகைகள் இங்கு இருக்கும். பொங்கல், பூரி, கிச்சடி, ஏழெட்டு வகை தோசைகள் (ஆனியன் தோசை, பொடி தோசை, etc ), இட்லி, கேசரி - என சுவர் முழுதும் வரிசை வரிசையாக - இங்கு கிடைக்கும் உணவுகளை லிஸ்ட் செய்துள்ளனர்

வேளச்சேரி சுற்றி ஏராள ஐ. டி மற்றும் BPO நிறுவனங்கள் உள்ளன இங்கு பணிபுரியும் பேச்சிலர்களுக்கு இந்த கடை செம அட்ராக்ஷன். இங்கு உட்கார்ந்து சாப்பிடும் வசதி கிடையாது.



கடையின் இரண்டு பக்கமும் தட்டை மேலே வைத்து விட்டு நின்று கொண்டே சாப்பிடும் படி ஏற்பாடு செய்துள்ளனர். மக்களும் எந்த கம்பிலேயிண்ட்டும் இன்றி நின்றவாறு சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள்

காலை டிபன் - 6.30 முதல் 10.30 வரை
லஞ்ச் - மதியம் 12 முதல் 3 வரை
மாலை 4 to 6.30 ஸ்நாக்ஸ் (வடை, போண்டா வகையறாக்கள் )
7 முதல் 10 வரை இரவு உணவு

- என காலை ஆறு முதல் - இரவு 10.30 வரை நான் ஸ்டாபாக இயங்கும் கடை இது !

என்ன ஒன்று - சுற்றுப்புற சுத்தம் மட்டும் இன்னும் சற்று improve செய்யலாம் !

இங்கு வெவ்வேறு தருணங்களில் - பொங்கல் (நெய் !!!) , தோசை, கிச்சடி ( காய்கறிகள் நிறைய) , சாம்பார் சாதம், வடை, போண்டா உள்ளிட்டவை சாப்பிட்டுள்ளேன். கொடுத்த காசுக்கு வயிறும் மனதும் நிறையும் !

மேலதிக தகவல்கள் :

உடுப்பி கிருஷ்ணா போளி ஸ்டால்
17, டான்சி நகர் , இரண்டாவது தெரு
தரமணி லிங்க் ரோடு , வேளச்சேரி
(விஜய நகர் பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் )

Thursday, June 13, 2013

ஜிம் டிரைனர் வாழ்க்கை - அறியாத தகவல்கள் Part II

ஜிம் டிரைனர் வாழ்க்கை அறியாத தகவல்கள் - முதல் பகுதி - இங்கு
***
நண்பர் மோகனுடனான நமது பேட்டி தொடர்கிறது
***
ஆணழகன் போட்டியெல்லாம் நடக்குதே.. அது பத்தி கொஞ்சம் சொல்லுங்க 

இயற்கையா உடல் பயிற்சி மட்டும் செஞ்சு எந்த ஆணழகன் போட்டியிலும் ஜெயிக்க முடியாது. சப்ளிமென்ட் உணவு சாப்பிட்டால் மட்டும் தான் ஜெயிக்க முடியும்.

ஒரு காம்பெடிஷனில் கலந்துக்கணும்னா, அதுக்கு ஆறு மாசம் தயாராகணும். அந்த 6 மாசம் சாப்பாடு, சப்ளிமென்ட் உள்ளிட்ட விஷயங்களுக்கு மட்டும் குறைஞ்சது 15,000 செலவு செய்யணும்.அந்த போட்டியில் நமக்கு பெருசா பணம் ஒண்ணும் கிடைச்சிடாது. வெறும் ஷீல்ட் மட்டும் தான் கிடைக்கும். ஆனா சர்க்கிளில் நாம ரொம்ப பிரபலம் ஆகிடுவோம். இது மாதிரி போட்டியில் ஜெயிச்சா ICF மாதிரி அரசாங்க வேலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

ஸ்போர்ட்ஸ் கோட்டான்னு சொல்றாங்களே.. அதில் ஜிம்மையும் எடுத்துக்குறாங்களா ?

ஆமா. நிச்சயம் சேர்த்துக்குறாங்க. என் கூட இருந்த 2 பசங்க இப்படி தான் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஜேப்பியார் காலேஜ்ஜில் ஒருத்தனும் செயின்ட் ஜோசப் கல்லூரியில் இன்னொருத்தனும் இஞ்சினியரிங்க் சேர்ந்து படிச்சாங்க

இன்னொரு விஷயம். இந்த ஜிம் வேலைக்கு வர்ற என்னை மாதிரி ஆட்களை பார்த்தீங்கன்னா அவங்க ஸ்கூல் காலேஜில் சரியா படிக்காதவங்களா இருப்பாங்க. படிப்பு சரியா வராம தானே, இதுலேயாவது ஷைன் பண்ணுவோம்னு வந்துடுறோம் !


உங்களுக்கு இந்த வேலையாலேயே லவ் Proposal வந்திருக்கா ?

வந்திருக்கு. என் மனைவியே கூட என் உடம்பை பார்த்து தான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டா

சில பேர் பழகுற விதத்தில் அவங்க மனசுல அப்படி ஒரு எண்ணம் இருக்குன்னு நமக்கு தெரியும். ஆனா நம்ம குடும்ப சூழல் அது மாதிரி விஷயத்தில் ஈடுபடாமலே முதலில் இருந்து வச்சிடுச்சு.

இந்த தொழிலில் பொம்பளையை தொட்டான்.. அத்தோட அவன் கெட்டான். எனக்கு தெரிஞ்சு ஒரு டிரைனர் ஓஹோன்னு வந்துகிட்டு இருந்தார். அப்புறம் பொண்ணுங்க சகவாசம் வந்தது. பேரு சுத்தமா கெட்டு போச்சு. இப்ப சாப்பாட்டுக்கு வழியில்லாமல் உட்கார்ந்திருக்கார். ஒருத்தரும் வேலை குடுக்கலை.

தண்ணி, தம்மு இந்த மாதிரி பழக்கங்கள்?

யாரு சார் தண்ணி அடிக்காம இருக்கா? என்ன என்னை மாதிரி ஆளுங்க கண்ணு மண்ணு தெரியாம குடிக்க மாட்டோம். எப்பயோ பிரண்ட்ஸ் செட்டு சேர்ந்தா ஜாலியா குடிப்போம்.

நான் தம்மடிக்க மாட்டேன் சார். எனக்கு தெரிஞ்ச பெரும்பாலான ஜிம் டிரைனருங்க தண்ணி அடிப்பாங்களே ஒழிய தம் அடிக்கிற ஆட்கள் ரொம்ப ரொம்ப குறைவு

எங்களுக்கு பெரிய அடிக்ஷன் ஜிம் தான். மைண்ட் எப்பவும் இதை சுத்தி தான் இருக்கும். இதை விட பெரிய அடிக்ஷன் வேணுமா ?

ஜிம் டிரைனர் வேலையில் ஏதாவது கஷ்டங்கள்? அல்லது இதனால் நீங்க இழந்தது ஏதாவது?

(நீண்ட நேரம் யோசித்து விட்டு) எதுவுமே தோணலை .. நாங்க இதனாலே இழந்தது எதுவுமே இல்லை

உங்க குடும்பத்தில் யாரும் இதுக்கு முன்னாடி இந்த வேலை செஞ்சிருக்காங்களா?

இல்லை; நான் தான் எங்க குடும்பத்தில் முதல் ஆள். எனக்கு இப்ப ஒரே ஒரு பையன். அவனை ஜிம்முக்கு அனுப்புறேனோ இல்லையோ, நிச்சயம் ஏதாவது ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டியில் ஈடுபடனும்னு சொல்லுவேன். கராத்தே, குங்க்பூ, ஜிம் இப்படி அவனுக்கு விருப்பம் இருக்க எதோ ஒண்ணு ..

ஒரு ஜிம் ஆரம்பிக்கனும்னா எவ்ளோ செலவு ஆகும்? அதுக்கு லைசன்ஸ் எதுவும் வாங்கணுமா?

ரெண்டு விதமான ஜிம் இருக்கு. சாதாரண ஜிம் வைக்கணும்னா 6 முதல் 8 லட்சம் செலவில் வைக்கலாம். இங்கே உள்ள மிஷின்ஸ் - எலக்ட்ரானிக் பொருட்கள் இல்லாம, நிறைய மேனுவலா செய்ற மாதிரி இருக்கும். மிடில் கிளாஸ் மக்கள் மாசம் 250 ரூபா மாதிரி கட்டி இந்த ஜிம்முக்கு வருவாங்க. இவங்க யாரும் வருடாந்திர பணம்னு கட்ட மாட்டாங்க. இங்கே என்ன கான்செப்ட்னா, கம்மியான மாச பணத்தில் நிறைய மக்கள் ஜிம்முக்கு வந்து செய்ற மாதிரி வச்சிருப்பாங்க. இந்த வகையான ஜிம்முக்கு லைசன்ஸ் எதுவும் தேவையில்லை

இன்னொரு விதமான ஜிம் - பிட்நெஸ் செண்டர்ன்னு சொல்வாங்க. டிரெட்மில் துவங்கி பலவும் எலக்ட்ரானிக் பொருட்களா இருக்கும். இதை வைக்க 60 லட்சம் போல் செலவாகும். இதுக்கு கண்டிப்பா கவர்ன்மெண்ட் லைசன்ஸ் வாங்கணும். இங்கே நிறைய பேர் வருடாந்திர பணம் கட்டுவாங்க. அதில் கால் வாசி பேராவது வருடம் முழக்க வராம நின்னுடுவாங்க ஆனா முழு பணமும் முதல்லேயே வந்துடுதே

எத்தனை வயசு வரைக்கும் ஜிம் டிரைனரா இருக்கலாம்?

அனேகமா - 40 அல்லது 45 வயசு வரைக்கும் மட்டும் தான் இருக்க முடியும். வர்றவங்களும் யூத்தான ஆள் தான் டிரைனரா இருக்கணும்னு விரும்புவாங்க. சம்பளமும்,  கம்மி வயசா இருந்தா தான் கட்டுபடி ஆகும்.

இதே லைனில் தான் இருக்க போறோம்னு முடிவு பண்ணிட்டாங்கன்னா, 35 வயசிலேயே தனி ஜிம் வச்சி,  பசங்களை வேலைக்கு வச்சு செட்டில் ஆகிடுவாங்க.

நான் போலிஸ் வேலைக்கு போகணும்னு தான் ஜிம் போக ஆரம்பிச்சேன். அங்கே எங்க மாஸ்டர் தெரிய வந்து அவர் மூலமா பார்ட் டைமா இந்த வேலை செய்ய ஆரம்பிச்சேன்.



ஜிம்முக்கு நிறைய நேரம், பணம் செலவு பண்றது பத்தி வீட்டில் ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?

யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டங்க. எல்லாருக்கும் அவங்கவங்க பையன் உடம்பு மேலே அக்கறை இருக்க தானே செய்யும்? அதை நல்லா பார்த்துகிட்டா, பையன் பார்க்க ஜம்முன்னு இருந்தா எல்லாருக்கும் சந்தோஷம் தானே?

சிக்ஸ் பேக் சில பேர் வைக்கிறாங்களே ; அது எப்படி சாத்தியமாகுது?

காம்பெடிஷனுக்கு சொன்ன மாதிரி சிக்ஸ் பேக்கிற்கும் சப்ப்ளிமென்ட் இல்லாமல் காரியம் ஆகாது.

சிக்ஸ் பேக் வைக்க குறைஞ்சது 3 மாசம் டிரைனிங் எடுக்கணும். தினம் காலை 5 கிலோ மீட்டர் ஜாக்கிங் செய்யணும். (மாலையும் அதே போல் 5 கி மீ ஜாக்கிங்) . சாப்பாட்டு விஷயத்தில் நிறைய கெடுபிடி இருக்கு. தண்ணி, தம் ரெண்டும் தொட கூடாது.

குறிப்பிட்ட அளவு தான் தண்ணி குடிக்கணும். உடம்பில் உள்ள fat குறையணும். அது தான் இதில் முக்கியமான வேலை

ஒரு தடவை சிக்ஸ் பேக் வந்தா - அதிக பட்சம் 2 முதல் 3 மாசம் வரை வைக்கலாம். தொடர்ந்து எப்பவும் வச்சிக்க முடியாது

சப்ளிமென்ட் சாப்பிடும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. சில பேருக்கு அது ஒத்துக்காம - இறக்கும் அளவு கூட கொண்டு போய் விட்டுருக்கு. எல்லா சப்லிமெண்ட்டும் , எல்லாருக்கும் ஒத்துக்காது. சரியான கைடன்ஸ் உடன் தான் சப்ளிமென்ட் எடுத்துக்கணும்


ஜிம் கொஞ்ச வருஷம் போயிட்டு, அப்புறம் போகாம விட்டுட்டா வெயிட் போட்டுடும்னு சொல்றாங்களே உண்மையா?

ஆமா. ஜிம் போகும் போது தசைகள் எல்லாம் டைட்டா இருக்கும். நீங்க ஜிம் போறதை விட்டவுடன் தசை எல்லாம் லூஸ் ஆகிடும். அதனால் கண்டிப்பா வெயிட் போடும். பார்க்கும்போதும் குண்டா தெரிவாங்க. உடம்பு வெயிட் போட்டா கூட கையெல்லாம் பார்த்தா ஜம்ம்னுன்னு இருக்கும்

ஜிம் டிரைனர்களுக்குள்ள எப்படி பிரன்ட்ஷிப் இருக்கும்?

பொதுவா எங்களுக்குள் நல்ல பிரன்ட்ஷிப் இருக்கும். எங்க பீல்டில் என்ன நடக்குது, புதுசா என்ன வந்திருக்கு, எங்கே காம்பெடிஷன், இப்போ யாரு கலக்கிகிட்டு இருக்காங்க இது மாதிரி விஷயங்கள் மத்த டிரைனர்கள் மூலம் தான் தெரிய வரும். இது மாதிரி விஷயங்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா ஷேர் செஞ்சுப்போம்.

என்ன ஒண்ணு .. எங்களில் சிலர் சினிமா ஆளுங்க கிட்டேயோ, அரசியல் வாதிங்க கிட்டேயோ சேர்ந்து நல்லா சம்பாதிப்பாங்க அவங்களை பார்த்தா கொஞ்சம் பொறாமையா இருக்கும். ஆனா நேரில் நல்லா தான் பேசிப்போம்

எங்களை தள்ளி இருந்து பார்த்தா ரப் (Rough )ஆன ஆளுங்க மாதிரி தெரியும். கிட்டே வந்து பழகி பார்த்தா தான் எவ்ளோ பிரண்ட்லி ஆன ஆட்கள் நாங்கன்னு தெரியும்

இதற்குள் ஜிம்மில் ஒரு சிலர் அவர் உதவிக்காக காத்திருக்க, " கிளம்பட்டுமா சார் ? வெயிட் பண்றாங்க" என்று விடை பெற்றார் டிரைனர் மோகன் .
****
பேட்டியின் முதல் பகுதி - இங்கு
****

Wednesday, June 12, 2013

வானவில் - நேரம் -மீரா ஜாஸ்மின் -ஷீகர் தவன்

பார்த்த படம் - நேரம்

இளைஞர்கள் கைவண்ணத்தில் இன்னொரு வித்யாச படம்; ஒரே நாளில் நடக்கும் கதை - தொய்வின்றி விறுவிறுப்பாய் நகர்கிறது. ஹீரோ - புதுமுகம் எனினும் இயல்பான நடிப்பு. நஸ்ரியா - நஸ்ரியா என நமது மக்கள் ஜொள்ளு விட்டனர் . ஆனால் ஹீரோயினுக்கு ரொம்ப சின்ன ரோல் தான். கெட்ட நேரம் என ஒன்றிருந்தால் - அடுத்து நல்ல நேரமும் வந்தே தீரும் என்று சொல்லி ஜாலியாய் படத்தை முடிக்கின்றனர்.

ஒரு முறை பார்க்க தக்க படம் !

தியேட்டரில் குற்றவாளியை தேடும் சென்னை போலிஸ்

அண்மையில் தியேட்டரில் படம் பார்க்க சென்ற போது காட்டிய ஒரு விளம்பர ஸ்லைடு ஆச்சரியமாக இருந்தது. வழக்கமாய் கடைகளுக்கு தான் விளம்பர ஸ்லைடு போடுவார்கள். அல்லது எச்சில் துப்பாதீர் என தியேட்டர் காரர்களே ஸ்லைடு போடுவர்.

ஆனால் " சதீஷ் குமார்" என்கிற குற்றவாளியை காணவில்லை; கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் தரப்படும் என்று சென்னை போலிஸ் விளம்பரம் செய்துள்ளது ! எத்தனை பேர் இதனை கவனிப்பார்கள் என்று தெரியலை. மேலும் அவர்கள் ஒரு ஸ்லைடுக்குள் ஏராள விஷயங்கள் போட்டிருப்பதால் அதை முழுமையாய் படிக்க முடியாமல் போகிறது. "தேடப்படும் குற்றவாளி; கண்டுபிடித்தால் சன்மானம் " என்ற வரிகளோடு முடிக்காமல், ரெண்டு பக்க கட்டுரை அளவில் செய்தி போட்டால் சில நொடிகளில் எப்படி படிக்க முடியும்?

அழகு கார்னர்            

   

இந்த வார ரிலீஸ்கள் - தில்லு முல்லு & தீயா வேலை செய்யணும் குமாரு

வரும் வெள்ளியன்று இவ்விரு காமெடி படங்களும் ரிலீஸ் ஆகின்றன. ஒரு வார இடைவெளியில் வெளிவராமல் - ஏன் ஒன்றாக ரிலீஸ் செய்யணுமோ தெரியவில்லை

ஒரிஜினல் தில்லு முல்லு - ஒரு கிளாசிக் படம். அது தந்த திருப்தியை / சந்தோஷத்தை புது படம் தருமா என்பது சந்தேகமே.

தீயா வேலை செய்யணும் - சந்தானம் இருந்தும் கூட அவர்கள் ஒளிபரப்பும் எந்த காட்சியும் ஈர்க்கவில்லை

எனக்கென்னவோ ரெண்டு படமும் ஊத்திக்கும் என தோன்றுகிறது. ஊகம் தவறினால் மகிழ்ச்சியே !

கிரிக்கெட் கார்னர்

மினி உலக கோப்பையில் இந்திய அணி அதிசயமாக நன்கு ஆடி வருகிறது அதிசயமாக என குறிப்பிட காரணம்- வழக்கமாய் ஐ பி எல் லுக்கு அடுத்து - உடனே வரும் டோர்ணமேன்ட்டுகளில் சற்று சொதப்புவது இந்தியாவின் வழக்கம்.

ஷீகர் தவன் கிடைக்கிற கேப்பில் எல்லாம் தூள் கிளப்புறார் (இவரை பற்றி ஒரு தகவல் தெரியுமா ? ஏற்கனவே திருமணமாகி - விவாகரத்தான ஒரு பெண்ணை இவர் மணந்துள்ளார். முதல் திருமணம் மூலம் அப்பெண்ணுக்கு இரு குழந்தைகளும் உண்டு; அந்த இரு பெண் குழந்தைகளும் இப்போது எனக்கு தோழிகள் என்று கூறியுள்ளார் ஷீகர் தவன் )

இன்னொரு பக்கம் ஜடேஜாவும் அசத்தி வருகிறார். இளைஞர்கள் அதிகம் இருப்பதால் பீல்டிங் அட்டகாசமாய் இருக்கு ! பவுலிங் தான் சற்று வீக்

இந்தியாவின் எழுச்சி - தற்காலிகமாக இல்லாமல் செமி பைனலிலும் பைனலிலும் இதே போல ஆடினால் நன்றாயிருக்கும் !

என்னா பாட்டுடே

என்னை முதன் முதலாக கவர்ந்த பாடல் என்றால் - அது இளைய நிலா தான் !

பள்ளியில் படித்த காலம் அது -

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால். அழுதிடுமோ அது மழையோ ?

என்ற வரிகள் ரொம்பவே பிடித்து  விட்டது. என்னமா யோசிச்சிருக்காரு பாட்டு எழுதியவர் என நினைத்து நினைத்து வியந்தேன்.

எங்கள் ஊர் நீடாமங்கலத்தில் பார்த்தபோது - படமும் கூட ரொம்பவே ஈர்த்தது. பயணங்கள் முடிவதில்லையில் அத்தனை பாடல்களும் அட்டகாசம் எனினும், இன்றும் - எனது விருப்ப பாடலாக இருக்கும் இளைய நிலா இதோ உங்களுக்கு



ஜூனில் ஒரு மழை காலம்

அண்மையில் மிக மகிழ வைத்த விஷயம் ஜூனில் நான்கைந்து நாள் சென்னையில் மழை பெய்தது தான் ! சென்ற வருடம் முழுதும் மழை குறைவு என்பதால் - எங்கள் ஏரியா உட்பட பல இடங்களில் போர்வெல் வற்றி விட்டது. பஞ்சாயத்து விடும் தண்ணீரும் குறைந்து விட்டது. பலரும் உபயோகதிற்கே தண்ணீர் வாங்கும் நிலை. ஒவ்வொரு முறையும் தண்ணீர் லாரி வாடகை வேறு ஏற்றி கொண்டே போயினர். ஜூனில் பெய்த இம்மழை - போர்வெல்களுக்கு மீண்டும் உயிர் தந்துள்ளது- பஞ்சாயத்து தண்ணீரும் வர துவங்கியுள்ளது

சென்னையில் பீச் இருப்பதாலோ என்னவோ - அடிக்கடி டிப்ரஷன் உருவாகி ஓரளவு மழை பெய்து காப்பாற்றி விடுகிறது !

Monday, June 10, 2013

தொல்லை காட்சி - ஜோடி சீசன்- லிங்குசாமி- சூப்பர் சிங்கர்

விஜய் டிவி - ஜோடி சீசன் - 6

விஜய் டிவியில் நடக்கும் டான்ஸ் நிகழ்ச்சி - ஜோடி சீசன் -6. பொதுவாக இத்தகைய சூப்பர் சிங்கர் அல்லது ஜோடி சீசன் எல்லாம்- புது முகங்கள் தங்கள் திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக தான் பயன்படுத்துவர். ஆனால் ஏற்கனவே பல படங்களில் நடித்த - பிரபு தேவா தம்பி - நாகேந்திர பிரசாத் - ஆனந்தி என்கிற பெண்ணுடன் (அம்மணி அழகு ஹீ ஹீ ) டான்ஸ் ஆடுகிறார். மற்ற புது முகங்களுடன் நன்கு எஸ்டாப்ளிஷ் ஆன நடிகர் போட்டியிடுவது எப்படி சரியாகுமோ தெரியலை !



இவ்வாரம் ரொமான்ஸ் ரவுண்ட் என ஆள் ஆளுக்கு - பின்னி பிணைந்து சூட்டை கிளப்பிட்டாங்க. நாகேந்திர பிரசாத் ஜோடியான ஆனந்தி,  தான் இந்த போட்டியில் ஆடும் ஒருவரை காதலிப்பதாகவும் அவர் பெயரையும் சொல்ல, அந்த நபர் வந்து நிற்க, அப்புறம் " ஏய் ஏமாந்தியா ?" என பல்பு கொடுத்தார் ! விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோவில் டிராமா நடப்பது தவிர்க்க முடியாமல் போய் விட்டது !

லிங்குசாமியின் ஓவியங்கள் + கவிதை புத்தகம்

கலைஞர் செய்திகளில் "கனவு தொழிற்சாலை" என சினிமா செய்திகள் தாங்கிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் இயக்குனர் லிங்குசாமியின் கவிதை புத்தக வெளியீடு பற்றி சிறு பகுதி வந்தது. லிங்குசாமி கவிதைகள் மட்டுமல்ல- ஓவியமும் நன்கு வரைவாராம் - கதாசிரியர்- இயக்குனர்- தயாரிப்பாளர் - இவை தாண்டி - கவிஞர் மற்றும் ஓவியராக அவரால் எப்படி இருக்க முடிகிறது ! அதிலும் தயாரிப்பாளர் - இயக்குனர்- இரண்டுமே டென்ஷன் ஆன வேலைகள் ! இதற்கான பதிலை இப்படி சொன்னார் லிங்கு சாமி "நமக்கு எந்தெந்த விஷயம் எல்லாம் பிடிக்குதோ, அது எல்லாத்திலும் நம்ம எனர்ஜியை முழுசா செலுத்திட்டா போதும், நேரம் - மத்த பிரச்சனை எல்லாம் விஷயமே இல்லை "

டிவி விளம்பரம் 

ஏர் இந்தியாவின் சர்விஸ் என்னவோ கிண்டலடிக்கிற அளவில் தான் இருக்கிறது. ஆனால் தந்தை- மகள் பற்றிய அதன் விளம்பரம் சற்று ரசிக்கும் படி உள்ளது




நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் - 50 லட்சம் 

போலிஸ் துறையில் பணியாற்றும் வசந்த குமார் என்பவர் - நீ. வெ .ஒ. கோ- வில் 50 லட்சம் வென்றார். பிக்சிங் உண்டா - எம்புட்டு பணம் கைக்கு கிடைச்சிருக்கும் போன்ற சந்தேகங்கள் அரித்து கொண்டே தான் இருந்தன

அவர் ஒரு கோடி ஜெயித்த மாதிரி நாலைஞ்சு நாளா ஒரே சீனை போட்டு - நம்மை நிகழ்ச்சி பார்க்க வைத்து விட்டனர் விஜய் டிவி மக்கள் !

எளிய குடும்பம்- கூலி வேலையில் கஷ்டபட்ட தந்தை என பரிதாப பேக் க்ரவுண்ட் - அரசு வேலையில் (போலிஸ்!) இருக்கும் வசந்த குமார் - கடைசி கேள்வி -வரும்போது 2 லைப் லைன் மீதம் இருந்தது. அவற்றை பயன்படுத்தியும் கூட, தூர்தர்ஷன் டைட்டில் மியூசிக் இசையமைத்தவர் யாரென்று சொல்லாமல் விலகினார்

இந்த நிகழ்ச்சி என்றில்லை - எல்லாவற்றிலும் பிரகாஷ் ராஜ் தவறாமல் சொல்லும் வார்த்தைகள் (செல்லம் தவிர) - சூப்பர், எக்சலண்ட் - தயவு செஞ்சு வேற சில வார்த்தைகள் கத்து குடுங்கப்பா சானலிலே !

டிவியில் பார்த்த படம் - அழகே உன்னை ஆராதிக்கிறேன்

இந்த படத்தில் வரும் " நானே நானா யாரோ தானா" என்கிற அற்புத பாட்டு - 30 ஆண்டுக்கு மேலாக எனக்கு பிடித்த பாட்டு. ஆனால் படம் பற்றியோ, கதை பற்றியோ துளி கூட தெரியாது .எதேச்சையாய் ஒரு நாள் இரவு ராஜ் டிவியில் - காண, கடைசி வரை - விழித்திருந்து  பார்த்தேன்

இயக்குனர் ஸ்ரீதர் இயக்கம்; 30 ஆண்டுக்கு முன் வந்த கதையில் - துவங்கும் போது அவ்வளவு முற்போக்கு -சிந்தனைகள் - ஆனால் முடிக்கும்போது சற்று சொதப்பி விட்டார்

பெண்களிடம் பழகி ஏமாற்றும் - ஆசாமி ஜெய் கணேஷ் - அவரிடம் ஏமாறுகிறார் லதா - இது தெரிந்தும் லதாவை உருகி, உருகி காதலிக்கிறார் விஜய குமார்.

லதா வாழ்விற்குள் மீண்டும் வரும் ஜெய் கணேஷ் - இப்போது அவரது அண்ணன் மகளை கெடுக்க முயல, லதா அவரை கொன்று விட்டு தானும் (இயற்கை!!) மரணம் எய்துகிறார் !

நடிகை - லதா பீல்ட் அவுட் ஆகும் நேரத்தில் வந்த படமாய் இருக்கணும். ராஜா மட்டும் - அட்டகாச பாடல்களை வாரி வழங்கிய படம் !

ஒரு வார்த்தை ஒரு லட்சம் பைனல்

சில மாதங்களாக நடந்து வந்த ஒரு வார்த்தை ஒரு லட்சம் ஜூனியர் நிகழ்வின் பைனல் நேற்று ஒளிபரப்பானது. பாண்டிச்சேரி ஆதித்யா பள்ளி மாணவிகள் இருவர் தலா ஒரு லட்சம் வென்றனர். திருச்சி மாணவிகள் இரண்டாம் இடம். சென்னை பள்ளிகள் எதுவும் இறுதி போட்டிக்கு வரவில்லை என்பதோடு - ஆண்களிலும் ஒருவர் கூட இறுதி போட்டிக்கு வரலை !

இறுதி போட்டியில் - மிக கடினமான சொற்கள் - நேரமும் வழக்கத்தை விட குறைவு - மாணவிகள் சற்று திணறி தான் போயினர்.

பரிசு வழங்க வந்தது பாடலாசிரியர் நா முத்து குமார்

வெற்றி பெற்றதும் நன்றியும் மகிழ்ச்சியும் - சொல்ல ஆங்கிலம் தான் 90 % உபயோகித்தனர் மாணவிகள் :)

சூப்பர் சிங்கர் கார்னர் 

2013-ன் முதல் சில மாதங்களில் தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த   TMS , PB ஸ்ரீநிவாஸ், ராமமூர்த்தி ஆகியோர் அடுத்துடுத்து மரணமடைந்து விட்டனர்.அஞ்சலி செலுத்தும் விதத்தில் இவர்களின் பாடல்கள் மட்டுமே இவ்வாரம் முழுக்க சூப்பர் சிங்கரில் ஒலிக்க உள்ளது.

TMS மற்றும் ஸ்ரீனிவாசின் அற்புத பாடல்கள் பிடிக்கும் என்றால் - இவ்வார நிகழ்ச்சியை காணுங்கள் !
*****
அண்மை பதிவுகள் 

குட்டிப்புலி - பெரிய சைஸ் கரடி ! 

ஆலப்புழா.. Boat House பயணம் -ஸ்பெஷல் படங்கள்

ஜிம் டிரைனர் வாழ்க்கை - அறியாத தகவல்கள் 

Saturday, June 8, 2013

குட்டிப்புலி = பெரிய சைஸ் கரடி- விமர்சனம்

ரளவு மதிக்கத்தக்க/ விரும்பத்தக்க அளவில் தான் இதுவரை சசிகுமார் நடித்து வந்தார்; திடீரென்று ஏன் ரஜினி ஆகும் ஆசை அவருக்கு வந்தது ? பார்க்கும் நமக்கு - தாடி வைத்த டி. ராஜேந்தர் தான் நினைவுக்கு வருகிறார் ! முடியல !


இளிச்சவாய மக்கள்- எப்படி நடிச்சாலும் பாப்பாங்க-
வாங்க நாம இன்னொரு படம் சேர்ந்து நடிக்கலாம்


கதை

தங்கள் கிராமத்து பெண்ணை கிண்டல் செய்ததற்காக ஒருவனை கொலை செய்கிறார் ஹீரோவின் தந்தை - பின் வெட்டுப்பட்டு சாகிறார்

அவருக்கு பிறந்த மகனும் (ஹீரோ சசிகுமார்) - ரவுடியாக திரிகிறார். அம்மா சரண்யா மகனுக்கு ஒரு திருமணம் முடித்து வைத்து அவரை "காப்பாற்ற " நினைக்கிறார். அது நடந்ததா என்பதை - தைரியம் இருந்தால் - சன் டிவியில் - பண்டிகை தினத்தில் - ரத்தம் தெறிக்க கண்டு மகிழுங்கள் !

*********
படம் எடுத்து முடித்தவுடன், அதை பார்த்து விட்டு தானே சன் டிவி காரர்கள் - உள்ளே வந்தனர்? அவர்கள் ரசனை ஏன் இப்படி ஆகி போனது ? இந்த படத்தில் என்ன இருக்கிறது என்று வாங்கினர் ? 80 களில் வெளியாக வேண்டிய கதை- சிரிப்பை வர வைக்க முயன்று முழுமையாய் தோற்கும் திரைக்கதை- நாக்கை கடித்த படி க்ளோஸ் அப்பில் மிரட்டும் ஹீரோ - ஒரு காட்சி கூட உருப்படியாய் இல்லாத ஒரு படம் - ஹூம் !

படம் முடிந்து வரும்போது நம் நிலை

இந்த லட்சணத்தில் இந்த படம் ஹிட்டு என்று சொல்கிறார்கள்- படம் தமிழ் மக்களுக்கு பிடிக்கிறது என்றால் - அவர்கள் ரசனையை நினைத்து வருந்தத்தான் முடியும் !

சம்மர் லீவில் வியாழக்கிழமை - சோலோ ரிலீஸ் - ரஜினி படம் போல எக்கச்சக்க தியேட்டர்கள். வியாழன் டு ஞாயிறு - நாளே நாளில் - படம் எப்படி என்கிற விபரம் பெரிதாய் பரவும் முன்னே - போட்ட காசை எடுத்து தப்பித்து விட்டனர்.

படத்தில் சிரிப்பை வர வைத்த ஒரே இடம் - சரண்யா தன மகனுக்கு உடை வாங்கும்போது கடையில் ஷாரூக் படத்தை பார்த்து விட்டு என் பையன் " அந்த மாதிரி இருப்பான்" என்பதும், கூட இருக்கும் கிழவி " நம்ம பையன் அதை விட அழகு" என்பதும் ! (சசி குமாரை தெரிந்தே கிண்டல் அடிச்சிருக்காங்க !)

சைக்கிள் ஓட்ட கற்று தரும் - இயக்குனர் & துணை இயக்குனர் குழு-
கூடவே - ஷேவ் செய்ய கற்று தந்திருக்கலாம் :)


வாகை சூடவா - ஜிப்ரான் - உங்க மேஜிக்கல் டச் என்ன ஆச்சு ?

லட்சுமி மேனன் - இவ்வருடம் எழுதிய டெண்த் பரிட்சையில் மட்டுமல்ல - படத்திலும் பெயில் மார்க் தான் !

தமிழ் சினிமாவில் அருவாள் உபயோகம் செய்ய சீரியஸா தடை செய்யணும். ! முடியல !

உயர் ரக குறியீட்டு படம் இது !

கிளை மாக்சில் இரண்டு கிழவிகள் - கோழி அறுக்கிற மாதிரி வில்லன் கழுத்தை அறுக்கும்போது நமக்கு குமட்டுகிறது !

குட்டிப்புலி - பெரிய சைஸ் கரடி !
*****
அண்மை பதிவுகள் 

ஆலப்புழா.. Boat House பயணம் -ஸ்பெஷல் படங்கள்

ஜிம் டிரைனர் வாழ்க்கை - அறியாத தகவல்கள் 

தொல்லை காட்சி - 60 நொடி கூத்து - விஜய் அவார்ட்ஸ்

Friday, June 7, 2013

ஆலப்புழா.. Boat House பயணம் -ஸ்பெஷல் படங்கள்

லப்புழா .. சென்ற வார இறுதியில் 4 நண்பர்கள் குடும்பத்துடன் சென்று வந்தோம். அப்போது எடுத்த சில புகைப்படங்கள் மட்டும் இப்போதைக்கு. தனி பதிவு விரைவில்.. நிச்சயம் பதிவுகளை (பல வாரம்) இழுத்துடிக்காமல் - தேவையான தகவல்கள் சொல்லி விடுவேன் !
நம்ம (போன) போட்டுதேங் ..


கம்பனி காரர்கள் வந்தால் மீட்டிங் ரூமாய் உபயோகிக்கலாம்; நாங்க சாப்பிடும் அறையாய்  மட்டும்  

நீட்டான படுக்கை அறை 

கிச்சன்  
அவரவர் அறைகளுக்கான வெளியிடத்தில் ஓடியாடும் குட்டீஸ்



பயணம் முழுக்க காணும் காட்சி

எப்படி இருந்த நான் .................

இப்படி ஆகிட்டேன் !


அப்பா தூக்கி போட்டுடுவாரோ என பயம் காட்டும் சின்னியின் முக பாவம் .....

இரவு தங்கிய கிராமத்தில் ஒரு ஈவிநிங் வாக் ....

அதே கிராமம்; அதே தெரு; இப்படி ஒரு மாளிகை


வாசலுக்கு வெளியே வந்து - இந்த நீரில் குளிப்பது; துணி துவைப்பது; பாத்திரம் கழுவது - இப்படி செல்லுது இவர்கள் வாழ்க்கை

வரிசை கட்டி நிற்கும் ஹவுஸ் போட்டுகள்
படகை மரத்தில் கட்டி விட்டு - ஒரு பலகை போட்டு இறங்குகிறார்கள்

தங்கும் அறையிலிருந்து ஒரு வியூ
உங்கள் வயிற்றில் புளியை கரைக்கும் ஒரு போட்டோ..
இவரிடம் தனி பேட்டி  + பதிவு உண்டா ?   Keep Guessing..
************
அண்மை பதிவுகள்


ஜிம் டிரைனர் வாழ்க்கை - அறியாத தகவல்கள்

வானவில்- உதயம் NH 4- நிஜ சுஜாதா பேட்டி - நித்யா மேனன்

தொல்லை காட்சி - 60 நொடி கூத்து - விஜய் அவார்ட்ஸ்
Related Posts Plugin for WordPress, Blogger...