Saturday, April 30, 2011

கோ .. எக்ஸ்பிரஸ் அவிநியூ - விமர்சனம்

இயக்குனர் கே. வி. ஆனந்த் என்னை எப்போதும் கவர்கிறார். முதல் படமான "கனா கண்டேன்" பார்த்து அசந்து போனேன். கந்து வட்டி பிரச்சனையை மனதில் அறைகிற மாதிரி எடுத்திருந்தார். இந்த படத்தில் பிரிதிவிராஜ் கேரக்டர் அட்டகாசம். தனது அலுவலகத்தில், பேசியவாறே ஜன்னல் பக்கம் போய் கை குழந்தையை தூக்கி எறிவதாக மிரட்டுவார் .. பார்க்கும் போது அதிர வைக்கும் காட்சி அது. வில்லன்கள் என்றால், பார்க்க கொடுமையாக இருப்பார்கள் என்பதில் விலகி ஹீரோவை விட அழகாய் வில்லன் பிரிதிவிராஜை காண்பித்தார்.

அயனிலும் மேக்கிங்கில் மிரட்டினார். எனக்கு பிடித்த மற்றொரு ஜாலியான படம் இது.   (அயன் படம் ஊட்டியில் இரவு காட்சி குளிரில் நடுங்கிய படி குடும்பத்துடன் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். நல்ல வேளை அப்போது பதிவெழுத ஆரம்பிக்கலை. இல்லாட்டி அதை பத்தி எழுதி உங்களை கொன்னுருபபேன்)

சரி கோவிற்கு வருவோம். இந்த வருடத்தில் வந்த படங்களில் நிச்சயம் இதுவும் ஒரு நல்ல entertaining படம். படத்தில் பிடித்ததும், பிடிக்காததும் இதோ:

பிடித்தது:


1. தமிழ் சினிமாவில் உள்ள காதல், பழி வாங்கல், மதுரை போன்ற சமாசாரம் இல்லாமல் வித்யாசமான கதை களனுக்கு முதல் பாராட்டு. கதை தேர்வில் கே.வி. ஆனந்த் மூன்றாம் முறையாய் இந்த படத்திலும் அசத்தியுள்ளார்.

2. ஷங்கர் டைப் "Larger than Life" ஹீரோ உள்ள கதை. ஜீவா இந்த பாத்திரத்திற்கு அருமையாக பொருந்துகிறார். நடிக்கிற மாதிரியே தெரிய வில்லை! Very natural ! கே.வி.ஆனந்தின் அனைத்து ஹீரோக்களும் மிக மிக புத்திசாலியாய் இருப்பார்கள். இங்கும் அதுவே தொடர்கிறது.

3. பத்திரிக்கையையும், ரிப்போர்டர் & கேமராமேன் இவர்களை சுற்றி கதை செல்வது சுவாரஸ்யமாக உள்ளது. எடிட்டர், அசோசியட் எடிட்டர் என நாம் அதிகம் பார்க்காத கேரக்டர்கள். ஆன்மிகம் எழுதும் நிருபர், தலைமை போட்டோ எடிட்டர் ஆங்காங்கு பேசுவது செம காமெடியாக உள்ளது. (நிற்க. இப்படிப்பட்ட பத்திரிக்கை ஆபிஸ் பார்க்கவே முடியாது என யுவகிருஷ்ணா எழுதியதை ரசித்தேன். ஆனால் அந்த விமர்சனம் முழுக்கவே ஒரு நிருபரின் பார்வையில் இருந்தது. சாதாரண மனிதனான எனக்கு அந்த ஆபிஸ் பிடிக்கவே செய்தது)

4 . அட்டகாசமான பாடல்கள். ஒரு சில பாடல் தவிர்த்து அதை படமாக்கிய விதமும் லொகேஷனும் ரசிக்கும் படியே இருந்தது.(பாடல்களில் ஹீரோயினை மட்டும் பார்க்காதீர்கள்)

5 . அஜ்மல் பாத்திரம் மிக சுவாரஸ்யம். படம் செல்ல செல்ல இந்த கேரக்டர் மாறி கொண்டே போவது அழகு. இத்தகைய powerful கேரக்டர் இருக்கும் போது அதையும், தானே செய்ய வேண்டும் என தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் கூத்தடிப்பார்கள். நல்ல வேளை இங்கு அப்படி நடக்க வில்லை. 

6. விறுவிறுப்பான திரைக்கதை. ஒரு சில நேரம் தவிர்த்து பெரும்பாலும் படம் செம ஸ்பீடாய் போகிறது. குறிப்பாய் கடைசி ஒரு மணி நேரம், ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் தான். ஆனாலும் விறுவிறுப்பு குறைய வில்லை.

7. பியா தமிழ் சினிமாவின் வழக்கமான லூசு ஹீரோயின் என்றாலும் ரசிக்கும் படி bubbly ஆக உள்ளார்.

இனி பிடிக்காதவை: 

1 . மிக பெரிய ஏமாற்றம் ஹீரோயின் கார்த்திகா. படம் வெளியாகும் முன் போட்டோவில் பார்த்த போதே ஈர்க்க வில்லை. (சிம்பு இந்த படத்தில் நடிக்காததற்கு முக்கிய காரணம் இவரை மாற்ற சொன்னதே என கேள்வி). அபிநயஸ்ரீ என்ற ஒரு நடிகை. பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு மறைந்து மறைந்து கிளி மூலம் தகவல் அனுப்புவாரே. அவரை போலவே கார்த்திகாவும் இருப்பதாக எனக்கு எண்ணம். நீங்களே பாருங்கள்


ஒரே மாதிரி இருக்காங்களோ இல்லையோ, ரெண்டு பேரும் ஹீரோயினாக ஜொலிக்க சான்ஸ் இல்லை.

நிற்க. இந்த கார்த்திகா என்கிற பெயரில் மட்டும் எத்தனை நடிகைகள் தெரியுமா? 

i) பூவிழி வாசலிலே படத்தில் நடித்த (அழகிய பெரிய கண்ணுள்ள) ஹீரோயின் பெயர் கார்த்திகா
ii) தூத்துக்குடி உள்ளிட்ட படங்களில் நடித்த கார்த்திகா(கருவாப்பையா..கருவாப்பையா பாட்டு நியாபகம் இருக்கா?)
iii) திண்டுக்கல் சாரதி பட ஹீரோயின் கார்த்திகா

கடைசி ரெண்டு பேரும் இன்னும் கூட நடித்து கொண்டிருக்கும் போது இப்போது இன்னொரு கார்த்திகா. (போட்டோ எடுத்து பதிவில் போட, தேடும் போது தான் இந்த குழப்பம் தெரிந்தது)

2. அயனில் ஹீரோயினின் அண்ணன் இறந்த அடுத்த காட்சியில் ஹீரோ & ஹீரோயின் " நெஞ்சே நெஞ்சே " என டூயட் பாடுவார்கள். அப்போதே இதனைஅனைவரும் திட்டினர். மீண்டும் இந்த படத்தில் ஜீவா- கார்த்திகா,  பெஸ்ட் பிரன்ட் பியா இறந்து, அடுத்த நிமிஷம் டூயட் பாடுகிறார்கள். ஆனந்த் சார் ஒரு முறை தப்பு செய்தால் சரி.. மறுபடி மறுபடி தப்பு செய்யலாமா?

3. பியாவை ஒரு பத்து வயது சின்ன பையன் ஜொள்ளு விடுற மாதிரி காட்டுவது. ஒரு காட்சி என்றாலும் பரவாயில்லை. மீண்டும் மீண்டும் அப்படி காண்பிக்கிறார்கள் . அதிலும் பியாவை அரைகுறையாய் பார்க்க அவன் அலைவதாய் காண்பிப்பதை தவிர்த்திருக்கலாம். சின்ன பசங்க மனதை அந்த காட்சி நிச்சயம் கெடுக்கும்.

4. இந்த கதைக்கு கிளைமாக்ஸ் உணர்வு பூர்வமாய் இருந்திருக்க வேண்டும். கிளைமாக்ஸ் சண்டையை தவிர்த்திருக்கலாம்.
**
மொத்தத்தில் குறைகள் குறைவாய், நிறைகள் நிறைய உள்ள படம். முடிந்தால் பாருங்கள்
**
எக்ஸ்பிரஸ் அவிநியூ 

முதல் முறை இங்கு செல்கிறோம். எஸ்கேப் என்ற பெயரில் எட்டு தியேட்டர் மூன்றாம் மாடியில் உள்ளது. நல்ல சவுண்ட் சிஸ்டம். முதல் நாள் முதலே ரூபாய் 120 டிக்கெட் விலை சத்யம் மற்றும் அதன் குழுமமான இந்த எஸ்கேப்பிலும் மட்டுமே!  காலை (சிறப்பு) காட்சி சென்றதால் பிஸ்சா போன்ற சமாசாரம் இடைவேளையில் சாப்பிட வேண்டியாதாயிற்று. அவை சற்று காஸ்ட்லி தான். வெளி உணவு எதுவும் ( ஸ்நாக்ஸ் உட்பட) உள்ளே அனுமதி இல்லை (பின்னே அவங்க எப்படி சம்பாதிக்கிறதாம்?)  பார்கிங் சார்ஜ் ஒவ்வொரு மணிக்கும் என கணக்கிட்டு எக்கச்சக்கம் வாங்குகிறார்கள். இதில் சனி, ஞாயிறு என்பதால் இன்னும் அதிக சார்ஜ் !

எக்ஸ்பிரஸ் அவிநியூவில், சாப்பாட்டு கடைகளை தவிர்த்து, துணி, பேக் மற்றும் செருப்பு கடைகள் தான் உள்ளன. விலை செம செம அதிகம் என சொல்லி தெரிய வேண்டியதில்லை. பிக் பஜார் தரை தளத்தில் உள்ளது. இங்கு மட்டும்விலை ஓரளவு கம்மி.

சிட்டி செண்டர் மற்றும் எக்ஸ்பிரஸ் அவிநியூ இரண்டுமே ஒரே மாதிரி தான். சுத்தி பார்த்து ரசிக்கலாமே ஒழிய பொருட்கள் வாங்க லாயக்கில்லை.

ஒரு முறை எஸ்கேப்பில் சினிமாவிற்கு சென்று விட்டு அப்படியே எக்ஸ்பிரஸ் அவிநியூவும் சுத்தி பார்த்து விட்டு வரலாம்...ஒரு வித்தியாச அனுபவத்திற்காக.

Tuesday, April 26, 2011

சத்ய சாய்பாபா - ஒரு பார்வை

எழுதியவர்  தேவகுமார்



ன் அம்மா வீட்டவர்கள் திராவிட கழகத்தை சார்ந்தவர்கள். அவர்களின் தாக்கம் எனக்கு எப்போதும் உண்டு. அப்போது நான் சட்டம் முதல் ஆண்டு, 18 வயது. என் வகுப்பு தோழன், சத்யா சாய் பாபா கைகடிகாரம் ஒன்றை காற்றில் இருந்து வரவழைத்ததை சொன்னபோது, "ஏன் அவர் சுவர் கடிகாரத்தை வரவழைக்கவில்லை" என கேட்டேன். அவன் என் கன்னத்தில் பளார் என அறை விட்டான். ஒரு 18 வயது இளைஞனை சத்ய சாய் பாபா எப்படி இப்படி ஆட்கொண்டார், அவனுக்கு எப்படி கேள்வி கேட்காத நம்பிக்கை வந்தது? நான்கு வருடம் கழித்து அவனே என்னிடம் வந்து கன்னத்தில் அறைந்ததிற்கு மன்னிப்பு கேட்டான். "பாபாவை நான் இப்போ follow பண்றதில்ல, ஏமாந்துட்டேன்" என அவனே சொன்னான். என்ன ஆயிற்று?

டெல்லியில் உள்ள எனது தோழர் ஒருவர் சொன்ன கதை ஆச்சரியம் ஆனது. அவரின் காதல் தோல்வி சத்ய சாய் பாபாவை வைத்து நிகழ்ந்தது. என் நண்பரும் அவரது முன்னால் காதலியும் அவரவர் பெற்றோரிடம் தங்கள் காதலை சொல்ல, பெற்றோர்களும் ஒப்பு கொள்ள, ஒரே சந்தோசம். பெண் வீட்டார் சொன்ன ஒரு கண்டிஷன் என் நண்பருக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அந்த கண்டிஷன், சத்ய சாய் பாபா இந்த திருமணதிற்கு ஒப்பு கொள்ள வேண்டும். பாபா ஏன் மறுப்பு சொல்ல போகிறார், அது ஒரு formality - ஆக தான் இருக்கும் என நினைத்து, புட்டபர்த்திக்கு பெண் வீட்டாரோடு போனார், என் நண்பர். அப்போதுதான் அவருக்கு தெரிந்தது, அவர்கள் கையில் ஒரு கடிதத்தோடு கூட்டத்தில் நிற்க வேண்டும், அந்த கடிதத்தில் திருமணத்தை பற்றி எழுதி இருக்கும். பாபா, அந்த கடிதத்தை கையில் வாங்கினால் அவருக்கு சம்மதம், இல்லை என்றால், அவருக்கு சம்மதம் இல்லை. இவர்களும் ஏழு நாட்கள் வரிசையில் நிற்க, பாபா கடைசிவரை கடிதத்தை வாங்க வில்லை. என் நண்பரின் திருமணமும் அந்த பெண்ணோடு நிகழவில்லை. of course, அதைவிட ஒரு அருமையான தோழியோடு அவருக்கு திருமணம் ஆகியது என்பது, வேறு விஷயம். எப்படி அந்த பெண் குடும்பத்தால் இப்படி கண்மூடி தனமாக பாபாவை நம்ப முடிந்தது, அவர்களை ஆட்படுத்தியது எது?

எப்படி, ஏன், எவ்வாறு என எல்லா கேள்விகளையும் கடந்து நின்றவர், சத்ய சாய் பாபா - அவரை நம்பியவர்களுக்கு. சிலருக்கு - எப்படி, ஏன், எவ்வாறு என எல்லா கேள்விகளாலும் துளைக்கப்பட்ட , பற்பல சிக்கல்களில் மாட்டிய , அவைகளுக்கான எந்த விதமான பதிலையும் தராத ஒரு "வித்தைகாரராகவே" அவர் காலமாகி இருக்கிறார். பலருக்கு - அவர் நல்லவரா இல்ல கெட்டவரா என்கிற குழப்பம்தான்.

என்னை பொறுத்தவரை, அவர் செய்த சமூக சேவை அளவிட முடியாதது. இதய அறுவை சிகிச்சையை இலவசமாக மிக சிறந்த வசதிகளோடு எத்தனை பேரால் கொடுக்கமுடியும்? இத்தனை கல்வி கூடங்களை, இந்த சந்தை சமூகத்தில் எத்தனை பேரால், இலவசமாக நல்ல தரத்தோடு நடத்த முடியும்? இத்தனை அந்நிய செலாவணியை எத்தனை பேரால் சமூக சேவைக்காக இந்தியாவிற்கு கொண்டு வரமுடியும்? அரசாங்க திடங்களுக்காக எத்தனை சமய மடங்கள் பொருளுதவி செய்து இருக்கின்றன? இப்படி யாரும் செய்ததில்லை என்பதல்ல, செய்தவர்கள் குறைவு.

ஒன்றல்ல இரண்டல்ல, நூறல்ல - 750 கிராமத்திற்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்தவர் சாய் பாபா (அந்த திட்டம் பெரிய தோல்வி என்று சொல்பவர்களும் உண்டு). அந்த கிராமங்களில், பெண் பிள்ளைகள் பிறந்தால் சந்தோஷ படுவார்களாம் - தண்ணீர் குடம் தூக்க இன்னொரு தலையும், இடுப்பும் கிடைத்ததே என ! அவர்கள் தண்ணீருக்காக மைல் கணக்கில் நடக்க வேண்டும். 45 ஆண்டு கால பிரச்சனையை ஒரு தனி மனிதரால் தீர்க்க முடிந்தது என்றால், அது அதிசயம் தான். ஒரு வேளை, இந்த பெரிய அதிசயத்தை நிகழ்த்தத்தான் அவர் மோதிரம் வரவழைப்பது, செயின் வரவழைப்பது என சின்ன சின்ன அதிசயங்களை செய்தாரோ? தெரியவில்லை.

இப்போது பாபா 40,000 கோடி சொத்தை விட்டு செல்கிறார், மிகப்பெரிய ஊழலும், வஞ்சகமும் அதை சுற்றி நிகழும். அது, பாபாவை சுற்றியிருந்த மர்மங்களை விட மோசமானதாக இருக்கும் என்பது எவ்வளவு நிச்சயமோ, அதே அளவிற்கு நிச்சயம் - பாபாவை சுற்றியிருந்த மர்மங்களை காலம் மறக்கடிக்கும்; அவர் செய்த காரியங்கள் நல்ல காரியங்கள் என்றால் அவை காலம் கடந்து நிற்கும் - என்பதும்தான்.

பாபாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

Monday, April 25, 2011

வானவில்: சிங்கம் புலி - கறை நல்லது

பார்த்த படம்: சிங்கம் புலி

நல்ல நாட் உள்ள கதை. எங்கு சொதப்பினார்கள் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. அண்ணன்- தம்பி ஒருவன் நல்லவன், மற்றவன் கெட்டவன் என்கிற வாலி மாதிரியான கதை. இதனை நிச்சயம் சுவாரஸ்யமாய் தந்திருக்க முடியும். ஆனால் அறுவையான பாடல்கள், கெட்டவனே பெரும்பாலும் வெல்வது போன்றவை நம்மை படத்துடன் ஒன்ற முடியாமல் செய்கிறது. ஹீரோயின்கள் பெரிய ஏமாற்றம். ஜீவா உடல்/ முகத்தில் எந்த வித மாறுதலும் இன்றியும் இரண்டு கேரக்டர்களுக்கும் வித்யாசம் காட்டுகிறார். "இந்திய தொலை காட்சிகளில் முதல் முறை" சன் அல்லது கலைஞரில் வெளியாகும் போது உங்களுக்கு பொழுது போகாமல் இருந்தால் இந்த படம் பார்க்கலாம்.
 
அய்யாசாமி

காய்கறிகளில் பலவற்றுக்கு இன்னும் அய்யாசாமிக்கு பேர் தெரியாது. இத்தனைக்கும் அவர் தான் காய்கறி கடை சென்று காய் வாங்குகிறார். குறிப்பாய் பரங்கிக்காய், பூசணிக்காய் இவற்றுக்கு வித்தியாசம் தெரியாது. அடிக்கடி சௌ சௌ வாங்கினாலும் திடீரென அந்த பேர் மறந்துடும். சில கடைகளில் காய்கள் உள்ளே இருக்க, கடை காரர் தான், கேட்ட பிறகு ஒவ்வொன்றாய் எடுத்து தருவார். அப்போ தான் அய்யா சாமி பாடு திண்டாட்டமா ஆயிடும். " அந்த காய் குடுங்க; அந்த காய் குடுங்க" என கையை காட்டி சொல்வாரே ஒழிய பேர் சொல்ல மாட்டார். இதனாலேயே இப்போல்லாம் தானே எடுக்கிற மாதிரி உள்ள பெரிய கடைகளில் போய் காய் வாங்குறார்.

QUOTE HANGER

Even if you are on the right track, you will get run over if you just sit there.

ஐ. பி. எல் கார்னர்

என்னை மாதிரி கிரிக்கெட் ரசிகர்களே சற்று விருப்பம் இழந்து தொடர்ந்து மேட்ச் பார்க்காமல் உள்ளதற்கு காரணம் சென்னை சூப்பர் கிங்க்ஸ் சென்ற சில மேட்ச்கள் தோற்றது மற்றும் அதிகப்படியான கிரிக்கெட் ! இதுவரை நடந்த மேட்ச்கள் வைத்து செமி பைனல் செல்ல கூடிய அணியாக மும்பையை மட்டும் தான் நிச்சயமாக சொல்ல முடிகிறது. நிச்சயம் செமி பைனல் போகாத அணிகள் டெக்கான் சார்ஜர்ஸ், டில்லி, மற்றும்...திட்டாதீர்கள்.. சென்னை ! மொத்தம் ஒன்பது மேட்ச்கள் ஜெயித்தால் தான் செமி பைனல் செல்ல முடியும் என்கிறார்கள். சென்னை மீதமுள்ள ஒன்பது மேட்சில் ஏழு ஜெயிக்க வேண்டும். This is possible, but extremely difficult with its current form.


வல்தாட்டி ஆட்டத்தால் பஞ்சாபும், கெயில் வருகையால் பெங்களூரும் சற்று தெம்பு அடைந்துள்ளனர். பஞ்சாப் அணியில் முதல் மூவரை தாண்டி (கில்கிறிஸ்ட், வல்தாட்டி, ஷான் மார்ஷ்) சரியான பேட்டிங் இல்லை. எனவே எவ்வளவு தூரம் செல்ல முடியுமென தெரியலை. புனே நல்ல பேட்டிங் இருந்தும் மிக மோசமான பவுலிங் கொண்ட டீம். டெக்கான் சார்ஜர்ஸ் இதற்கு நேர் எதிராக நல்ல பவுலர்கள் இருந்தாலும் சங்ககாரா தவிர நல்ல பேட்ஸ்மன் இல்லாத அணி. தற்சமயம் கட்சி மாறி மும்பையை சப்போர்ட் செய்து வருகிறேன்.

தொடர்ந்து பார்க்கலை என சொல்லி கொண்டே பத்து அணிகள் பத்தியும் இங்கே பேசியாச்சு. :))

ரசித்த கவிதை (கல்லூரி காலத்தில்)

கூந்தலில் இருட்டு
முகத்தில் சூரியன்
பெண்களே!
உங்களால் தான் எங்களுக்கு
கவிதையும், கண்ணீரும்.

இதழ்களில் அமுதம்
விழிகளில் நஞ்சு
பெண்களே!
உங்களால் தான் எங்களுக்கு
வாழ்வும் மரணமும் !

-அப்துல் ரகுமான்

மனதை பாதித்த செய்தி

இது நடந்து ரொம்ப நாள் ஆகி விட்டது. எழுத ஏனோ சற்று தயக்கம்; இருந்தும் பகிர்கிறேன்.

கேரளாவில் சசீந்திரன் என்கிற கம்பெனி செகரட்டரி மலபார் சிமன்ட் லிமிடட் என்கிற நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். ஜனவரி 24, 2011 அன்று இவர் தன் இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கியுள்ளார். மனைவி வேறு ஊரில் வேலை பார்ப்பவர். இப்போது அவர் மனைவி இந்த விஷயத்தில் உண்மை வெளி வர போராடி வருகிறார். சசீந்திரன் வேலை செய்த நிறுவனத்தில் நடந்த சில ஊழல்களுக்கு துணை போகாததால், மகன்களுடன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நம்பப்படுகிறது. அரசு இதனை அடக்கி வாசிக்க முயல, கேரள உயர் நீதி மன்றம் சி. பி. ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கம்பெனி செகரட்டரிகள் பலர் ஒன்று சேர்ந்து இதனை அனைத்து மட்டத்திலும் கொண்டு சேர்த்துள்ளனர். உண்மை வெளி வந்தால் நல்லது. வருமா என தெரிய வில்லை. :((

இது குறித்த சில செய்திகள் இதோ:

ஐபிஎன்னில் வந்த செய்தி

இந்தியன் எக்ஸ்ப்ரசில் வந்த செய்தி

டிவி பக்கம்


விஜய் டிவியில் "கறை நல்லது" என்கிற சர்ப் எக்சல் (Surf Excel) கான்செப்ட்டை வைத்து சிறுவர்கள் எழுதிய கதையை குறும் படமாய் எடுக்கிறார்கள். முதலில் அந்த சிறுவன், இயக்குனர் முருக தாஸ் & சுகாசினி ஆகியோரிடம் கதை சொல்ல, அவர்கள் அதனை ஓகே செய்ய வேண்டும். அப்புறம் அந்த சிறுவனே ஒரு மினி இயக்குனர் ஆகி மற்றொரு இயக்குனர் & டீமுடன் இணைந்து படமாய் எடுக்கிறார்கள். பின் அந்த படம் ஒளி பரப்பாகிறது. குட்டி பசங்க செய்யும் கான்செப்ட் நன்றாக தான் உள்ளது. இந்நிகழ்ச்சியின் இறுதி போட்டி இந்த வாரம் வெளியானது. இந்த நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு, இளம் வயதிலேயே சினிமா ஆர்வம் வர காரணமாயிருக்கும். இத்தகைய ஆர்வம் அவர்களுக்கு நல்லதா கெட்டதா என்று தான் தெரியலை !

Tuesday, April 19, 2011

சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை


"ஒரு புளிய மரத்தின் கதை" கல்லூரி காலத்தில் படிக்க முயன்று தோற்றிருக்கிறேன். அப்போது வாசிக்க பொறுமை இல்லை. ரொம்ப நாளாக என்னுடன் இருந்த புத்தகம் தற்போது ஒரு பயணத்தின் போது வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. முதல் சில அத்தியாயங்கள் படித்து அசந்து போய் அமர்ந்திருந்தேன். என்ன ஒரு எழுத்து!! "பதிவு எழுதும் நாமெல்லாம் எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ள தகுதி உண்டா? நாம் எழுத்தாளர் என்றால் அப்போது சுந்தர ராமசாமியை எப்படி அழைப்பது?" என்றெல்லாம் மனது கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டது.

துவக்கத்தில் வரும் தாமோதர ஆசான் என்று வயதான மனிதரின் கேரக்டர் அருமை. முதல் மூன்று அத்தியாயத்தையும் முழுமையாய் ஆக்கிரமித்து நம்மை அசத்தும் இவர் அதன் பின் வருவதில்லை. இந்த நேரத்தில் நமக்கு சற்று சோர்வு ஏற்படுகிறது. சில அத்தியாயங்கள் கடந்த பின் மீண்டும் தேர்தல் போன்ற விஷயங்களால் கதை களை கட்ட ஆரம்பித்து விடுகிறது.

கதை என்ன?

ஒரு கிராமத்தில் உள்ள ஓர் புளிய மரம்... இதனை சுற்றி பேருந்து நிறுத்தம், மார்கெட், கடைகள், கீழே படுத்து உறங்கும் மனிதர்கள் என ஒரு உலகமே இயங்குகிறது. சில தனிப்பட்ட லாபங்களுக்காக இந்த புளிய மரத்தை வெட்ட நினைக்கிறது ஒரு கூட்டம். அதை தடுக்கிறது மற்றொரு குழு. "வெட்டப்பட்டு விடும்" " காப்பாற்றப்பட்டு விடும்" என்று மாறி மாறி போகும் கதையில் யாரும் எதிர் பாராத விதத்தில் இறக்கிறது மரம்.

கதையில் மரம் குறித்து வருகிற இடங்கள் குறைவே. கதை அதை சுற்றி வாழும் மனிதர்களை பற்றியது. அவர்களில் சிலரை பார்ப்போம்

தாமோதர ஆசான்

எண்பது வயதுக்கும் மேலான ஆசாமி. மிக அற்புதமாக கதை சொல்ல வல்லவர். ஊரின் சின்ன பசங்கள் கதை கேட்கவே இவர் பின்னால் திரிகின்றனர். இவர் சொல்கிற பல கதைகள் முதல் சில அத்தியாயங்களில் வருகிறது. இவரை பற்றி இரண்டு வரிகளிலேயே அழகாய் சொல்கிறார் சுந்தர ராமசாமி

" எந்த தந்தையும் தாமோதர ஆசானை விரும்ப முடியாது. எந்த இளைஞனும் அவரை வெறுக்கவும் முடியாது"

புளிய மரம் மட்டுமல்லாது அந்த ஊரையும், மனிதர்கள் பற்றியும் கதைகள் மூலம் புரிய வைப்பவராக உள்ளார். இவர் கதை சொல்லும் விதமே அலாதியாக உள்ளது. " ஒரே ஒரு ஊரிலே" என்று அவர் கதைகளை துவங்குவதில்லை. எடுத்த எடுப்பில் கதையின் முக்கிய திருப்பத்தை சொல்லி ஆர்வத்தை கொண்டு வந்து விடுகிறார். கதை சொல்லி கொண்டே சென்று " மீதம் நாளைக்கு" என சில நேரம் சஸ்பென்சாக நிறுத்துவதும் உண்டு. எண்பது வயதுக்கு மேல் உள்ள இவருக்கு ஒரு சின்ன வீடு இருக்கிறது !!

இந்த மனிதரை போலவே இவர் இறுதி காலமும் ஒரு கேள்வி குறியுடனே கதையில் முடிகிறது.

அப்துல் காதர்

நிறைய ஷேட்ஸ் உள்ள அருமையான கேரக்டர். ஒரு துணி கடையில் வேலைக்கு சேர்ந்து அங்கிருந்து கமிஷன் பெற்றே அந்த கடையை வாங்கும் நிலைக்கு வருகிறார். பின் அழகில்லாத மனைவியை சொத்துக்காக மணந்து கொண்டு அவளை அடித்து துன்புறுத்துகிறார். மனைவியின் தந்தை அழகான இன்னொரு பெண்ணை மணக்க காதரின் கோபம் அதிகமாகிறது. வியாபாரத்தில் வென்றாலும் தனி வாழ்க்கையில் தோற்ற்று விட்டேன் என குமுறுகிறார். இவரது பிசினஸ் நொடித்து போகிறது. இறுதி பகுதியில் தன் ஜென்ம விரோதியான தாமுவை எதிர்த்து தேர்தலில் நிற்கிறார்.

தாமு

தாமு சரியான அரசியல் வாதி மட்டுமல்ல சிறந்த வியாபாரியும் கூட !!இவருக்கும் காதருக்குமான வியாபார சண்டை மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது. கிராமத்தில் நாங்களும் வியாபாரம் செய்தோம் என்பதால், ஒரே வியாபாரம் செய்வோரிடையே இருக்கும் விரோதத்தை தெளிவாக உணர முடிகிறது .

தாமு சுதந்திர போராட்டத்திலும் ஆர்வமாக ஈடுபடுகிறார். ஆனால் சுதந்திரம் கிடைக்கும் போது அவரது மன நிலையை மிக அழகாக சொல்கிறார் சுந்தர ராமசாமி. ஒரு எழுத்தாளராக அவர் மிளிரும் தருணங்கள் அவை.

சுதந்திரம் கிடைத்ததில் தாமுவுக்கு சிறிதும் மகிழ்ச்சி இல்லை. இனி தன் மீது வெளிச்சம் விழாது. தான் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க படுவோம் என தாமுவிற்கு மிக வருத்தம் ! இதன் பின் தாமு தேர்தலில் நிற்பதும் காதருடன் உள்ள மோதலும், வியாபாரத்தில் காதரை வீழ்த்தி வளர்வதும் மிக இயல்பாக சொல்ல பட்டுள்ளது .

எசக்கி

எசக்கி ஒரு லோக்கல் பத்திரிக்கை நிருபர். சிறிதளவே வந்தாலும் மிக சுவாரஸ்யமான கேரக்டர் எசக்கியுடையது.

நேரத்திற்கு தகுந்த படி மாறும் பச்சோந்தி எசக்கி ! முதலில் தாமுவையும் பின் காதரையும் ஆதரிக்கிறார் எசக்கி. சொல்ல போனால் எசக்கிக்கென்று கொள்கை ஏதும் இல்லை. பத்திரிக்கை முதலாளி சொல்வதே கொள்கை.

புளிய மரம் வெட்டப்பட்டால், தாமு கடைக்கு நிழல் இருக்காது, அவன் வியாபாரம் பாதிக்கும் என்று ஐடியா தருவதும், காதரை தேர்தலில் நிற்க வைப்பதும் எசக்கி தான்.

கடலை தாத்தா

கடைசி சில அத்தியாயங்களில் மட்டுமே வந்து கதையை முடிக்க உதவுகிறார் இவர். மிக அழகிய கேரக்டர். தெருவில் கடலை விற்கும் ஏழை இசுலாமியர். இவர் தான் காதரையும் தாமுவையும் தேர்தலில் தோற்கடிக்கிறார். இவருக்கு ஆதரவு இவரிடம் கடலை வாங்கி உண்ணும் பள்ளி குழந்தைகளும் அவர்கள் அம்மாக்களும்!

தேர்தலில் வென்றும் உடுக்க கூட நல்ல உடை இன்றி பின் மீண்டும் கடலை வியாபாரத்திற்கு வருகிறார் கடலை தாத்தா. கதை இவருடன் தான் நிறைவுறுகிறது.
****
தத்துவத்தின் பால் சுந்தர ராமசாமிக்கு உள்ள ஈடுபாடு ஆங்காங்கே தெரிந்து கொண்டே இருக்கிறது. உதாரணத்திற்கு சில:

"புகழ் என்பது தான் என்ன? நமக்கு தெரியாதவர்களும் நம்மை தெரிந்து வைத்திருப்பதிலுள்ள சுகம் தானே? அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். அபார சுகம் தான் அது. சந்தேகமே இல்லை. ரோட்டில் நடந்து செல்லும் போது தன்னை சுட்டி காட்டி இன்னார் என குசுகுசுத்து அறிமுகப்படுத்தும் குரல் காதில் விழுந்தும் விழாத பாவனையில் சென்று விடுகிற சுகம் லேசானதா? "

"சொந்த விஷயம் பேசுவது என்றால் எல்லாருக்கும் வெல்லம் தான்!"

" பழைய நண்பர்கள் எல்லாரும் விடல் தேங்காய் மாதிரி ஊர் ஊராக சிதறி போய் விட்டனர். எட்டு திசைகளிலிருந்தும் பிழைப்பின் கொடிய கரங்கள் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து அமுக்கி கொண்டு விட்டன".

"வாழ்வில் இன்பகரமான நாட்கள் மிக குறைந்த நாட்கள் தானே! வேகமாக மறைந்து விடும் நாட்களும் அவை தானே!"

குறைகளே இல்லையா என்றால் முதலில் சொன்னது போல் நடுவில் சற்று வேகம் இழப்பது சிறு குறை. கதை சில நேரம் தன்னிலையில் "நான்" என்கிற மாதிரி சொல்ல படுகிறது. பின் திடீரென மாறுகிறது. பொதுவாய் கதைகள் ஒன்று தன்னிலையில் அல்லது பொது நிலையில் எழுத பட்டிருக்கும். மேலும் ஒரு கேரக்டர் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் எழுத்தாளர், நடுவில் இன்னொரு ஆள் பற்றிய கதைக்கு போய் விட்டு மீண்டும் முக்கிய ஆளுக்கு வருகிறார். இது நமக்கு பழக சற்று நேரம் ஆகிறது.

நிச்சயம் தமிழின் கிளாசிக் நாவல்கள் வரிசையில் இதுவும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அந்த புளிய மரம் என்பது ஒரு குறீயீடு என்பது வாசிக்கும் யாருக்குமே புரியும். அந்த மரம், மனிதர்கள் வாழ்வை தான் பிரதி பலிக்கிறது. ஏற்றம் / தாழ்வு (Ups & Downs) இரண்டும் கலந்து தான் மனிதர் வாழ்வு. கதையில் உள்ள ஒவ்வொரு கேரக்டருக்கும் அது நிகழ்கிறது. அதுவே தான் மரத்திற்கும் இறுதியில் நடக்கிறது.

புளிய மரத்தின் கதை வாசிக்கும் மனிதரின் வயதையும் அனுபவத்தையும் பொறுத்து அவரவருக்கும் வெவ்வேறு உணர்த்த கூடும். வாசித்து பாருங்கள் ஒரு வித்தியாச அனுபவத்திற்காக !

** திண்ணை இணைய இதழில் மார்ச் 20, 2011 அன்று பிரசுரமான கட்டுரை 

Monday, April 18, 2011

வானவில்:எஸ்.ராமகிருஷ்ணன் & சென்னை கிறித்துவ கல்லூரி

சென்னை ஸ்பெஷல்: தாம்பரம் கிறித்துவ கல்லூரி வளாகம்

தாம்பரம் கிறித்துவ கல்லூரி உள்ளே சென்றுள்ளீர்களா? சென்னையிலேயே இருந்தும் இன்னும் நீங்கள் செல்ல வில்லை என்றால், ஒரு வித்தியாச அனுபவத்தை தவற விடுகிறீர்கள். முழுக்க முழுக்க மரங்களும் பசுமையும் விரிந்து கிடக்க, வெய்யில் பெரும்பாலான இடங்களில் தரையை தொடாது. இரு புறமும் மரங்கள் சூழ, பூக்களும் இலைகளும் கொட்டியவாறே இருக்கும் அந்த சாலைகளில் நடப்பது அற்புதமான அனுபவம். செந்தில் குமார் என்கிற என் நண்பர் அங்கு படித்த போது அடிக்கடி செல்வேன். ஒரு முறை இருவரும் நடந்து கொண்டிருந்த போது, திடீரென என் கையை அழுத்தி பிடித்து நிறுத்தினார். அப்புறமாய் தான் காட்டினார்..பாம்பு ஒன்று ஓடி கொண்டிருந்தது.. இதற்கெல்லாம் பயப்படாதீர்கள். ஆயிரக்கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் அங்கு தான் உள்ளனர். அவசியம் ஒரு முறை செல்லுங்கள்.

ஒட்டு போடாத நம் பிரதமர்


நம் பிரதமர் மன்மோகன் சிங் அசாமிலிருந்து மேல் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் அவர் ஓட்டு போடாதது பிரச்னையை கிளப்பி உள்ளது. நம் தமிழ் நாட்டில் ரஜினி தேர்தல் அறிவித்ததும் வெளிநாடு சென்றாலும், தேர்தல் அன்று சரியாக வந்து ஓட்டு போட்டு விடுவார். இம்முறை வைகோ கூட தேர்தலில் போட்டி இல்லை என தெரிந்ததும் அமெரிக்கா சென்று விட்டார். ஆயினும் தேர்தல் அன்று வந்து ஓட்டு போட்டார். நமக்கெல்லாம் முன் மாதிரியாக இருக்க வேண்டிய பிரதமரே ஓட்டு போடாதது வருத்தமாக தான் உள்ளது. (நிற்க. என் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு ஓட்டு போட்டு விட்டேன். அடையாள அட்டை மட்டும் இன்னும் வரலை:((

பார்த்த படம்: கோல்மால் 2


அஜய் தேவ்கன் நடித்து நான் பார்த்த படம் இது ஒன்றே. கதையில் இரண்டு அண்ணன்-தம்பி குரூப் உள்ளனர். இரு குழுவுமே சின்ன சின்ன தில்லுமுல்லுகள் செய்யும் ஆட்கள் தான். இந்த இரண்டு குருப்புக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. அஜய் தேவ்கன் குருப்பில் தோழியாக கரீனா கபூர் உள்ளார் (இவர் தான் ஒரே ஆறுதல்.. நமக்கு!) மனைவி இல்லாத அஜய்யின் தந்தை, கணவர் இல்லாத எதிர் அணியினரின் அம்மாவை மணக்கிறார். இதனால் இரண்டு குழுவும் அண்ணன் தம்பியாக ஒரே வீட்டில் வாழ வேண்டிய சூழல். பிறகென்ன அடிதடி தான். இவர்கள் எப்படி ஒன்றாக ஆனார்கள் என்பதே கதை. சிரிப்பு படமென்று நினைத்து அவர்கள் எடுத்திருந்தாலும் நமக்கு சிரிப்பு வரலை; தூக்கம் தான் வந்தது. A film to avoid !

ஐ. பி. எல் கார்னர்

ஒவ்வொரு ஐ.பி. எல் லும் ஒரு சில புதிய வீரர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. அந்த வகையில் இம்முறை அசத்துபவர் வல்தாட்டி. மும்பையை சேர்ந்த இவர் பஞ்சாபிற்கு துவக்க ஆட்டக்காராக ஆடுகிறார். சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளை உரித்து தள்ளி விட்டார். சேவாக் ஆட்டத்தை நினைவு படுத்துகிற அதிரடி ஆட்டம் இவருடையது. டேல் ஸ்டெயின், இஷாந்த், மார்கல் போன்ற சர்வேதச ஆட்ட கார்ரர்களின் ஒவ்வொரு பந்தையும் பயமின்றி விளாசுகிறார். இதே போல் தொடர்ந்து consitent ஆக விளையாடினால், விரைவில் இந்திய அணியில் எதிர்பார்க்கலாம்.
கொல்கத்தா தற்போது நன்கு விளையாட ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. ஷாரூக் எத்தனை முறை தான் ஏமாறுவார்? செமி பைனலாவது வந்தால் மேற்கு வங்க மக்களுக்கு ஆறுதலாயிருக்கும்.

அனைத்து அணிகளும் ஒரு முறை வென்றும் ஒரு முறை தோற்றும் இருக்கிறார்கள்.சச்சின் 20-20-ல் முதல் செஞ்சுரி அடித்தும் அந்த மேட்சில் மும்பை தோற்றது சற்று வருத்தமே.

சட்ட சொல்: நீதிமன்ற அவமதிப்பு ( Contempt of court)

நீதி மன்ற அவமதிப்பு என்பது பல நேரங்களில் ஒரு கிரிமினல் குற்றமாக கருதப்படும். நீதிமன்றம் போட்ட உத்தரவை கீழ்படியாதது, நீதிமன்றம் நடக்கும் போது அந்த அறையில் அமர்ந்து பேசுவது, மொபைல் போன் அப்போது அலறுவது எல்லாமே இதில் அடங்கும். இதற்கான தண்டனையை சம்பந்தப்பட்ட நீதிபதியே தருவார். சிவில் வழக்குகளில் தங்களுக்கு சாதகமான ஆர்டர் வந்த பின்னும், எதிரணி அதன் படி நடக்கா விடில், நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தே வழிக்கு கொண்டு வருவார்கள்.

எஸ். எம். எஸ். கார்னர்:

If you are able to state a problem, it can be solved.


ரசிக்கும் விஷயம் : எஸ். ராமகிருஷ்ணன் எழுத்து

சுஜாதா இருக்கும் வரை அவர் மேல் இருந்த "கிரேஸ்" குறையவே இல்லை. அவர் மறைவுக்கு பின், வாழும் எழுத்தாளர்களில் என்னை அதிகம் கவர்வது எஸ். ராமகிருஷ்ணன் தான். கட்டுரை, கதை இந்த இரண்டிலுமே மிக மென்மையாகவும் செழுமையாகவும் உள்ளது அவர் எழுத்து. நாம் அனைவரும் சில விஷயங்களில் ஒரே மாதிரி உணர்வுகள் அல்லது அனுபவங்கள் பெறுவோம். ஆனால் சிலர் தான் அந்த உணர்வுகளை எழுத்தில் சரியான முறையில் கொண்டு வருவார்கள். எஸ். ராமகிருஷ்ணன் எழுத்து அத்தகையதே. இவரிடம் ஆச்சரியப்படும் இன்னொரு விஷயம் நன்றாக பேசவும் செய்வது ! சுஜாதா பேச்சு கூட எழுத்து போல சுவாரஸ்யமாக இருக்காது. சிறிது நகைச்சுவை இருந்தாலும் எழுத்தில் இருப்பது போன்ற தாக்கம் அவரது பேச்சில் எதிர் பார்க்க முடியாது. ஆனால் எஸ். ராமகிருஷ்ணன் எழுத்து போலவே தான் பேச்சும் உள்ளது. இது பெரிய விஷயம் என்று தான் சொல்ல வேண்டும் (எழுத்தாளர்கள் நல்ல பேச்சாளர்களாயும் இருப்பது அபூர்வம்) மேலும் இவர் தன் சக எழுத்தாளர்களின் நல்ல எழுத்துக்களை, புத்தகங்களை எப்போதும் பரிந்துரைக்கிறார். முழு நேர எழுத்தாளராகவும் முழுமையான எழுத்தாளராகவும் இருக்கும் எஸ். ரா ...உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம் !

Thursday, April 14, 2011

லியோனி- சீயான்-ஜாக்கி சேகர் :டிவி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒரு பார்வை

பண்டிகை தினங்களில் தொலை காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சி தருவது ஒரு புறமிருக்க அதை பற்றி நான் எழுதுவதும் தொடர்கிறது. நண்பர்கள் சிலர் "எப்படி தான் எல்லாம் பொறுமையா பாக்குரீங்கலோ?" என துக்கம் விசாரித்தாலும் இது தொடர காரணம், நிறைய பேர் விரும்பி வாசிப்பது தான் ! வெளி நாட்டில் உள்ள நண்பர்களுக்கு, இந்த நிகழ்ச்சிகள் பார்க்க முடியாத நிலையில், அது பற்றி வாசிப்பதே மகிழ்ச்சி தருகிறது என நினைக்கிறேன். விடுமுறை நாளில் வெளியிட்டாலும், இந்த பதிவு மட்டும் மிக அதிகம் பேரால் வாசிக்க படுகிறது. சென்ற ஆண்டை போல இந்த ஆண்டும் சில சேனல்கள் "சித்திரை முதல் நாள்" என்றும் சில "தமிழ் புத்தாண்டு" என்றும் சொல்லி கொண்டிருக்கின்றன. அடுத்த ஆண்டு இந்த குழப்பம் இருக்காது என நம்புகிறேன்.

இனி ஒவ்வொரு டிவியும் எப்படி கலை சேவை ஆற்றினார்கள் என பார்ப்போம்.

கலைஞர் டிவி

காலை "பொன்னர்-சங்கர்" பட சிறப்பு நிகழ்ச்சி; படத்தில் உள்ள சில நல்ல காட்சிகள் பார்க்கலாம் என நினைத்தால், பிரசாந்த்தும் தியாகராஜனும் பேசியே (அதுவும் கலைஞரை புகழ்ந்து௦) நேரத்தை ஓட்டுனாங்க. அவ்வப்போது காண்பித்த காட்சிகளும் டிரைலரில் உள்ளது தான். படத்தில் ஒவ்வொரு போர் காட்சியிலும் முப்பதாயிரம் துணை நடிகர்கள் கலந்து கொண்டதாக பிரசாந்த் சொன்ன போது என் காதுகளில் பூக்கூடை சுற்றிய உணர்வு.. அது மூவாயிரமா? முப்பதாயிரமா அண்ணா? கொஞ்சம் நம்புற மாத்ரி ரீல் விடுங்க..

லியோனியின் "நகைச்சுவை என்பது சிரிக்கவா? சிந்திக்கவா" என்ற பட்டிமன்றம் ! லியோனி மட்டுமே ஆங்காங்கு சிரிக்க வைத்தார். மற்றவர்கள் சொன்ன ஆசிரியர் ஜோக்குகள் .......: "உயிரே போனாலும் (மேப்பில்) இந்தியாவை காட்டி தர மாட்டேன்" மற்றும் " பெஞ்ச் மேலே ஏறி நின்னா அந்த நாடு தெரியுமா சார்?" என பழைய ஜோக்குகலாகவே இருந்தது. எப்போதும் சிரிக்க வைக்கும் இனியவன் கூட ஏமாற்றினார்.

கலைஞர் டிவியில் இன்றைய படங்கள்:

"வம்சம்" (அவ்வபோது மட்டும் பார்த்தோம். படத்தில் அசின் என்கிற மாட்டை வைத்து வரும் காமெடி அமர்க்களம்) 

"வாரணம் ஆயிரம்"

இவையாவது பரவாயில்லை. கோரிப்பாளையம் என்றொரு படம். இதில் ஹீரோக்கள் முதல் துணை, இணை நடிகர்கள் வரை படத்தில் நடித்த அனைவரும் அரிவாளால் வெட்டப்பட்டு இறந்து விடுவார்கள். அவ்வளவு மங்கள கரமான படம். இந்த நல்ல நாளில் இப்படத்தை தமிழர்களை பார்க்க சொன்னார்கள் ! மூணு மாசத்துக்கு முன்னாடி பொங்கலுக்கும்  இதே நல்ல படத்தை போட்டதும், அப்போதும் நான் திட்டியதும் நினைவிலிருக்கலாம் . மீண்டும் பல நல்ல இந்து பண்டிகைகள் அன்று இந்த ரத்தம் தோய்ந்த படத்தை இதே டிவியில் எதிர் பார்க்கலாம்.

விக்ரம் மற்றும் அமலா பால் "தெய்வ திருமகன்" பற்றி ஒருவரை ஒருவர் பேட்டி கண்டார்கள். இப்படம் " I am Sam" என்கிற ஆங்கில படத்தின் தழுவல் என்று நண்பர் சரவணகுமார் பதிவு மூலம் ஏற்கனவே அறிந்தேன். பார்க்கலாம்.. படம் எப்படி இருக்குமென. இதே போல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அழகர்சாமியின் குதிரை பற்றியும் ஒரு நிகழ்ச்சி ஒளி பரப்பானது.

ஜெயா டிவி


புதுப்பேட்டை என்ற "புத்தம் புதிய" தமிழ் படம் காண்பித்து தங்கள் பங்கிற்கு மகிழ்ந்தார்கள். சன் மற்றும் கலைஞர் டிவியே கடந்த சில வருடங்களாக எல்லா புது படங்களும் வாங்கியதால் காஞ்சு போயி இருக்காங்க. கவலை படாதீங்க. அடுத்த அஞ்சு வருஷம் (மட்டும்) நீங்களும் அசத்தலாம். இனி தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி உங்களுக்கு தான் பாராட்டு விழா எடுக்கும் !! 


சன் டிவி 

பண்டிகை அன்று கே டிவி போல மூணு ஷோ சினிமா ஓட்டுறாங்க. ஏங்க.. நடிகர் நடிகைகள் சொல்லும் அற்புத தத்துவங்கள்/ பேட்டி இல்லீங்களா? பேராண்மை மற்றும் நாடோடிகள் என்ற ஏற்கனவே போட்ட படங்களும் மாலை "ஆயிரத்தில் ஒருவன்" படமும் போட்டார்கள். வீட்டில் உள்ளோர் "ஆயிரத்தில் ஒருவன்" பார்க்க வில்லை என பார்க்க ஆர்வமாயிருந்தனர். "பாருங்க பாருங்க நல்ல படம்" என்றேன் ("யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்") .

சன்னில் காலை விஷால் மற்றும் ஆர்யா பேட்டி ! விஷால் அவன் இவன் படத்தில் மாறு கண் உள்ளவராக நடித்த அனுபவத்தை பகிர்ந்தார். இது வரை மாறு கண் உள்ளவராக உலக திரைபடங்களிலேயே யாரும் நடித்ததில்லை என்றும் (அப்டிங்களா?) தான் முதன் முதலில் அப்படி நடித்ததால் கண் வலி வந்து துடித்தாகவும் சொன்னார். கிளைமாக்சில் மூவாயிரம் ஆடு மாடு நடுவே இருவரும் சண்டை போட்டதாக சொல்ல, பேட்டி எடுத்த சிட்டி பாபு சீரியசாக கேட்டார்: "அவ்ளோ மாடுகளுக்கு நடுவே உங்களை எப்படி அடையாளம் கண்டு புடிக்கிறது?" 


விஜய் டிவி


காபி வித் அனுவில் வைரமுத்து பேட்டி என்றதும் கொஞ்சம் பார்த்தேன். சற்று நேரத்தில் இசை அமைப்பாளர் தேவாவும் வந்த பின், இனி வைரமுத்து எப்படி பேசுவார் என தெரியுமாதலால் ("தேவா போன்ற இசை அமைப்பாளர் பூவுலகில் இல்லை") அடுத்த சேனல் எகிறினேன்.

மைனா படம் போட்டு தங்கள் கலை தாகத்தை இவர்கள் தீர்த்து கொண்டார்கள்.

மதியம் நீயா நானாவில் (சின்ன திரை நல்லது செய்கிறதா? தீமை செய்கிறதா?௦) நமது ப்ளாகர் நண்பர்களான ஜாக்கி சேகர், தேனம்மை ஆகியோர் பேசினர். ஜாக்கிக்கு கிடைத்த ஓரிரு வாய்ப்பை நன்கு பயன்படுத்தி பேசினார். அவர் பேசியதற்கு சின்ன திரை நட்சத்திரங்களிடம் செம எதிர்ப்பு. (அங்கேயுமா??) கோபிநாத் ஓரளவாவது டிவியால் வரும் பிரச்சனைகளை பேச விட்டார். அவரும் பேசினார். மற்றபடி விஜய் டிவி என்கிற டிவியே "டிவிக்கள் தீமை செய்கின்றன" என்ற முடிவை கொடுப்பார்கள் என நாம் எதிர் பார்க்க முடியாதே!

மாலை சிவகுமார் பேச்சு மிகவும் எதிர் பார்த்தது. ஆயினும் பாரதியின் பாடல்களை மனனம் செய்து பேசி தன் புலமையை வெளி காட்டினாரே தவிர பேச்சு ஏனோ சென்ற முறை மாதிரி மனதை தைக்க வில்லை. இவரின் உழைப்பும், ஞாபக சக்தியும் மட்டும் நிச்சயம் வியப்பூட்டுகிறது.

Tuesday, April 12, 2011

வானவில்: யுத்தம் செய்- மனுஷ்ய புத்திரன் கவிதை

பார்த்த படம்: யுத்தம் செய்

மிஷ்கின் படங்களில் என்னை பெரிதும் கவர்ந்தது அவரது முதல் படமான "சித்திரம் பேசுதடி". அந்த அளவு அதன் பின் வந்த, அவரது எந்த படமும் கவர வில்லை. இளம் பெண்கள் கடத்தலும் அதனால் பெற்றோர் படும் துயரமும் தான் அஞ்சாதேயில் பின்னணியாய் இருந்தது. இப்போது யுத்தம் செய்யிலும் அதுவே ! படம் பார்ப்பவர்களை "இது நமக்கு நடந்தால்?" என்று எண்ணி பயப்பட வைக்கிறார் . பாடல்கள் அதிகம் இன்றி, எந்த காமெடியும் இன்றி நேரே கதை சொல்ல படுகிறது. சேரனுக்கு இது ஒரு வித்யாசமான படம் தான். பின்னணி இசை அசத்துகிறது. மிஷ்கின் பட ஒளிப்பதிவு & வித்யாசமான ஷாட்டுகள் முதலில் நம்மை கவர்ந்தது. இப்போது கால்களில் கேமரா வைக்கும் போது "மறுபடியுமா?" என்று தோன்றுகிறது. படத்தின் மிக பெரும் ஆச்சரியம் ஒய். ஜி. மகேந்திரன் மனைவியாக வரும் லட்சுமி ! என்ன ஒரு கேரக்டரைசேஷன் ! இத்தனைக்கும் இவர் வரும் காட்சிகளும், பேசும் வசனமும் மிக குறைவு. ஆயினும் அசத்துகிறார். தமிழுக்கு இந்த கேரக்டர் நிச்சயம் ஆச்சரியம் தான். மிஷ்கின் அடுத்தடுத்த படங்களிலாவது "டார்க் கதைகள்" தவிர்த்து & வழக்கமான கேமரா கோணங்களை மாற்றினால் நன்றாயிருக்கும்.

அய்யா சாமியும் அஞ்சு ரூபாயும் 

அய்யாசாமி பகலில் நீண்ட தூர ரயில் பயணம் சென்றார். ரயிலில் ஒரு டீ வாங்கி குடிக்க, பத்து ரூபாய் தந்தார். "மீதம் ஐந்து ரூபாய் சில்லறை இல்லை. அப்புறம் தரேன்; என் பேரை பாத்துக்கங்க; மலையன்"  என சொல்லி விட்டு போய் விட்டார் டீ விற்பனையாளர். வாசித்த புத்தகத்திலிருந்து அவ்வபோது தலையை நிமிர்த்தி மலையன் வருகிறாரா என பார்த்து பார்த்து மலைத்து போய் விட்டார் அய்யாசாமி. "ஐந்து ரூபாய்க்காக இவ்வளவு அலட்டிக்கனுமா?" என மனசு ஒரு பக்கம் சொல்ல, மற்றொரு பக்கமோ " அது எப்படி? நானே தந்தால் அது டிப்ஸ்; இது ஏமாத்துற வேலை" என மனதுக்குள் ஒரு பட்டி மன்றம் நடந்தது. ஒரு வழியாய் நான்கு மணி நேரம் கழித்து மலையனை மறுபடி பார்த்தார்.  " ஐந்து ரூபாய் சில்லறை இல்ல சார்" என இப்போதும் அவர் சொல்ல கோபமான அய்யாசாமி சொன்னார் " அப்ப இன்னொரு டீ குடுங்க".

சட்ட சொல்: வாதி/ பிரதி வாதி


சிவில் வழக்குகளில் வழக்கு தொடுப்பவர் " வாதி" (Plaintiff ) என்றும் யார் மேல் வழக்கு தொடுக்கிறாறோ அவர் " பிரதிவாதி" ( Defendant ) என்றும் அழைக்கப்படுவார். கிரிமினல் வழக்குகளில் வழக்கு தொடுப்பவர் பெயர் Complainant. குற்றம் சாட்டப்படும் நபர் "Accused ". குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர் தண்டனை பெற்றால் அவரை " Convict" என்பார்கள் .

ஐ. பி. எல் கார்னர் 

ஐ. பி. எல்லில் அனைத்து அணிகளும் ஒரு முறை விளையாடியுள்ளன. இந்த முறை வலுவான அணியாக தெரிவது முதலில் மும்பை ! சச்சின், மலிங்கா, ஹர்பஜன், போலார்ட் என நல்ல வீரர்களை retain செய்ததுடன், சைமண்ட்ஸ், ரோஹித் ஷர்மா போன்ற சரியான வீரர்களை எடுத்துள்ளனர். மேலும் சச்சின் வெல்லாதது ஐ. பி. எல் கோப்பை மட்டுமே என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது. சென்னை பழைய வீரர்கள் பலரை retain செய்ததால் நல்ல அணியாகவே உள்ளது. இருக்கிறதில் ரொம்ப பாவமான அணி பஞ்சாப். மிக வீக் ஆக தெரிகிறது. டில்லி அணியில் சேவாக் மற்றும் வார்னருக்கு பிறகு சரியான பாட்ஸ்மன் இல்லை. நல்ல வேக பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் ஸ்பின்னர்கள் யாரும் சரியாக இல்லை. எனவே டில்லியும் ஒரு வீக் அணியே. கொல்கத்தா இம்முறை யூசுப் பதான், காலிஸ் உள்ளிட்ட பல ஆள் ரவுண்டர்களை வைத்துள்ளது. பவுலர்கள் தான் சற்று சுமார் ரகம். சென்ற முறையை விட நன்றாக ஆடும் என எதிர் பார்க்கலாம்.

முதல் சில ஆட்டங்கள் மட்டும் டிவியில் பார்த்தாலும் அதன் பின் முழுதும் பார்ப்பதில்லை. இரவு மேட்ச் முடிய பன்னிரண்டு ஆகி விடுகிறது என்பது முக்கிய காரணம்.

ரசித்த எஸ். எம். எஸ்

பசங்க ஏன் லவ் பண்றாங்கன்னா, பிரண்ட்ஸ் இருக்காங்க; எப்படியும் சேத்து வச்சிடுவாங்கன்னு தைரியத்தில தான்

பொண்ணுங்க ஏன் லவ் பண்றாங்கன்னா, பேரண்ட்ஸ் இருக்காங்க; எப்படியும் பிரிச்சு வச்சிடுவாங்கன்னு தைரியத்தில தான்

பாய்ஸ் பீ கேர்புல்.

விகடனில் சுகா எழுதும் மூங்கில் மூச்சு

ஆனந்த விகடனில் சமீப கடந்த பத்து வாரமாக வெளி வரும் சுகாவின் மூங்கில் மூச்சு தொடர் வாசிக்கிறீர்களா? திருநெல்வேலி தமிழில் அற்புதமான, சுகமான எழுத்து !! சுகா தமிழ் சினிமா உலகில் துணை இயக்குனராக உள்ளதாக தெரிகிறது. மேலும் இவர் ஒரு ப்ளாகரும் கூட. இவர் வலைப்பூ பெயர் வேணுவணம். மூங்கில் மூச்சில் பல பகுதிகள் ரசிக்கும் படி இருந்தன. பாலு மகேந்திரா பற்றிய பதிவும், சினிமா காரர்களுக்கு வீடு கிடைப்பதில் உள்ள சிரமமும் நான் மிக ரசித்து சிரித்த பகுதிகள். இது வரை வாசிக்கா விடில், அவசியம் வாசியுங்கள்.

ரசித்த கவிதை 

நவீன தாம்பத்தியம்

அவள்
தன் உடலைக் கொடுத்தாள்
தன் மனதைக் கொடுத்தாள்
தன் தூக்கத்தைக் கொடுத்தாள்
தன் விசுவாசத்தைக் கொடுத்தாள்
தன் உழைப்பைக் கொடுத்தாள்
தன் சம்பாத்தியத்தைக் கொடுத்தாள்
தன் செலவுகளின் கணக்கினைக் கொடுத்தாள்

அவனுக்கு நிறையவே இல்லை
அவள் மின்னஞ்சலின்
கடவுச் சொல்லைக் கொடுக்கும் வரை.
                                                -மனுஷ்ய புத்திரன்

Saturday, April 9, 2011

அன்னா ஹசாரே உண்ணா நோன்பு ஒரு நேரடி அனுபவம்



டில்லியில் இருக்கும் எனது நண்பன் தேவா தனியார் நிறுவனத்தில் சட்ட ஆலோசகர். அன்னா ஹசாரே உண்ணா நோன்பில் கலந்து கொண்ட அவரது நேரடி அனுபவமும், அது குறித்த எண்ணங்களும் இதோ: 

டெல்லியில் இருக்கும் "ஜந்தர் மந்தர்" அந்தக்கால காலம் காட்டும் கருவிகளை கொண்டது. கடந்த நான்கு நாட்களாய் அது இன்றைய கால கட்டம் எதை நோக்கி நகர்கிறது என்பதனை காட்டுகிற இடமாய் மாறிவிட்டது. அது அன்னா ஹசாரே அவர்களால் நிகழ்ந்த அதிசயம். நானும் அந்த அதிசயத்தில் கலந்து கொண்ட மகிழ்ச்சியில் இதை உங்களோடு பகிர்கிறேன்.

ஊழல் சாத்தானின் லஞ்ச பழத்தை இந்தியா விழுங்கும் வேளையில் அதை தொண்டையிலேயே நிறுத்த முயன்ற நீலகண்டனை போல, இன்று அன்னா ஹசாரே! அவர் அதற்கு சொல்லுகிற மருந்து லோக்-பால் சட்டம். அந்த சட்டத்தை எழுத அரசாங்கம் கமிட்டி அமைத்த பின் அன்னா ஹசாரே அவரது நான்கு நாள் உண்ணா விரதத்தை கைவிட்டு இருக்கிறார். இது சர்ச்சில் சொன்னது போல "Now this is not the end. It is not even the beginning of the end. But it is, perhaps, the end of the beginning."

அந்த உண்ணா விரத இடத்தில ஏறக்குறைய 10000 பேராவது, அன்னா ஹசாரே உண்ணா விரதம் முடித்த வேளையில் இருந்திருப்பார்கள். அது ஒரு திருவிழா இடமாய் இருந்தது. ஆங்கங்கே வெவ்வேறு குழுவினர் ஆடி கொண்டும், கோசம் எழுப்பிக்கொண்டும் இருந்தார்கள். ஒரு குழு குப்பை வண்டியை இழுத்துக்கொண்டு சுற்றிவந்தார்கள் - ஊழல்வாதிகளை இதில் போடுங்கள் என்ற கோஷத்துடன்! Eruption against corruption என்ற கோஷம் கவர்வதாய் இருந்தது. அதில் பாதி பேர் கல்லூரி மாணவர்கள். பள்ளி குழந்தைகள் அவர்களது பள்ளி சீருடையில் வந்திருந்தார்கள் (அல்லது அவர்களின் பள்ளி கொடி பிடித்து வந்தார்கள்). அன்னா -விற்காய் jail - இக்கு கூட போவேன் என ஒரு பள்ளிசெல்லும் பாப்பா சொன்னது அனைவரையும் நிமிர செய்தது.

முன்னால் இராணுவத்தினர் வந்த போது கைத்தட்டுகள் அந்த இடத்தில அதிர்ந்தது (இன்னும் நாம் ஊழல் இல்லா இடமாய் நம்புவது ராணுவதினரைதான் போலும்). சில பேர் அவர்களது பிள்ளைகளை கூட்டி வந்து இருந்தார்கள் (நம் பிள்ளைகளின் காலத்திலாவது....?). எல்லா வயதினரும் எல்லா வகுப்பினரும் ஒருமித்து எழுப்பிய குரல் அரசாங்கத்தை drafting committee - ஐ அமைக்க செய்திருக்கிறது.

இதையெல்லாம் பார்க்கையில் தோன்றுவது இதுதான்:

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?

இந்த லோக் பால் சட்டம் வந்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா? இல்லை - அது ஒரு ஆயிரம் மைல் பயணம், இது அதன் முதல் தப்படி. அது தப்பான அடியாய் இல்லாமல் போனதில், அரசாங்கத்தின் கன்னத்தில் விழுந்த அடியாய் ஆனதில், மகிழ்ச்சியே! நாம் இந்த விஷயம் எப்படி பயணிக்க போகிறது என்பதை கவனிப்போம், எழுதுவோம்.

இந்த போராட்டம், முயற்சி வெற்றிபெற நாம் என்ன செய்யலாம்:

1. April 13 - இல் வாக்கு அளிக்கலாம்
2. நீங்களும் உங்கள் ஊரில் நடக்கும் அன்னா ஹசாரே ஊர்வலதிலோ அல்லது உண்ணாவிரத்திலோ கலந்து கொள்ளலாம்.
3. Traffic Light - ஐ jump பண்ணும்போது போலிசுக்கு லஞ்சம் கொடுக்காமல் Fine-ஐ கொடுத்து ரெசிப்ட் வாங்கிகொள்ளலாம்
4. லஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ மாட்டேன் என முடிவுக்கு வந்து விடலாம்.
5. கடைசி நிமிட அல்லாடல் இல்லாமல், சரியாய் திட்டமிட்டு செயல்படலாம். கடைசி நிமிடத்தில் அரசாங்க அதிகாரியிடம் போய் ஏதேனும் உதவியோ/ approval - ஓ கேட்டு போகும்போதுதான் உங்கள் நேரம் இன்மையை பயன்படுத்தி பணம் கேட்க அவர்களால் முடிகிறது (பெரும்பாலான நேரங்களில்)
6. இன்னும் என்ன செயலாம் என இந்த பதிவில் உங்கள் கருத்தை பதியலாம்!

எழுதியவர் : தேவ குமார்

Thursday, April 7, 2011

ஐ.பி. எல் - புது விதிகளும் அணிகளும்

ஐ.பி. எல் இப்போது தான் துவங்கிய மாதிரி இருக்கு. அதற்குள், மூன்று சீசன் முடிந்து, ஐ.பி. எல் - 4 வந்து விட்டது!! இதுவரை எட்டு அணிகள் ஆடின. இப்போது கொச்சின், புனே இவையும் சேர்த்து பத்து அணிகள் !! நாளை முதல் கோலாகலமாக துவங்குகிறது ஐ.பி. எல் - 4 !

உலக கோப்பைக்கு அடுத்து உடனே வருவதால் இண்டரஸ்ட் குறையும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் சிலர். எனக்கு அப்படி தோன்ற வில்லை. இந்தியா தோற்றிருந்தால் ஒரு வேளை விருப்பம் குறைந்திருக்கலாம். ஆனால் இந்தியா உலக கோப்பை வென்றதால் ஆர்வத்துடன் மக்கள் ஐ. பி. எல் பார்ப்பர். மேலும் பள்ளி, கல்லூரி விடுமுறை நேரம் வேறு. இந்த ஐ. பி. எல் பெரிய அளவில் ஹிட் ஆகி விடும் என்றே தோன்றுகிறது !

முன்பு ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் இரு முறை விளையாடின. இம்முறை சற்று மாற்றம். இதை முழுதாய் புரிந்து கொள்வதும், புரிய வைப்பதும் சற்று சிரமம் எனினும், முடிந்த வரை முயல்கிறேன்.
 
இம்முறை அணிகள் இரு குருப்பாக இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன.
 
Group A                                    Group B


Deccan Chargers                      Kolkata Knight Riders

Delhi Daredevils                       Kochi Tuskers Kerala

Kings XI Punjab                       Royal Challengers Bangalore

Mumbai Indians                      Rajasthan Royals

Pune Warriors India                Chennai Super Kings

மேலே உள்ள அட்டவணை படி, ஒவ்வொரு அணியும் அதே குருப்பில் உள்ள மற்ற அணிகளுடன் இருமுறை விளையாடும். அடுத்த குருப்பில் அதற்கு நேர் எதிரே குறிப்பிடப்பட்டுள்ள அணியுடன் மட்டும் இரு முறையும் மற்ற அணிகளுடன் ஒரு முறையும் விளையாடும்.

உதாரணமாய் Deccan chargers அணியை எடுத்து கொண்டால், அதே குருப்பை சேர்ந்த Delhi Daredevils, Kings Xi, Mumbai Indians, Pune Warriors ஆகியற்றுடன் இரு முறை விளையாடும். B Group-ல் நேர் எதிரே குறிப்பிடப்பட்டுள்ள Kolkatta Knight riders உடன் மட்டும் இரு முறையும் , B குருப்பில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறையும் விளையாடும். (ஸ்ஸ்..அப்பா இதுக்கே கண்ணை கட்டுதே!)

இப்படி மொத்தம் 74 மேட்சுகள் நடந்து முடிந்த பின் (அடேங்கப்பா.. ரொம்ப கொஞ்சமா இருக்கு!) செமி பைனல்/ பைனல் "மாதிரி" நாலு மேட்ச் நடக்கும். மேலே உள்ள லீகில் முதல் நாலு இடம் பெற்ற அணிகள் மட்டும் இதற்கு தகுதி பெறும். இவற்றை No 1 , No 2 என்று கொள்வோம் (ஒவ்வொரு குருப்பில் இருந்து இரண்டு அல்ல, முதல் நான்கு என்பதை கவனிக்க)

முதல் மேட்ச்: (கிட்டத்தட்ட செமி பைனல் மாதிரி)

No. 1 அணி Vs No. 2 அணி . இதில் ஜெயிக்கிற அணி பைனல் சென்று விடும்.

இரண்டாம் மேட்ச்: (கால் இறுதி மாதிரி)

No. 3 அணி Vs No. 4 அணி . இதில் தோற்ற அணிக்கு டாட்டா பை பை .. ஜெயித்த அணி அடுத்த மேட்ச் செல்லும்

மூன்றாம் மேட்ச்:

முதல் மேட்சில் தோற்ற அணியும், இரண்டாம் மேட்சில் ஜெயித்த அணியும் விளையாடும். (அடேங்கப்பா !!)

இதில் ஜெயித்த அணி பைனல் செல்லும். தோற்ற அணிக்கு டாட்டா பை பை ..

பைனல் :

முதல் மற்றும் மூன்றாம் மேட்சில் ஜெயித்த அணிகள் மோதும்.

இனி மற்ற (பழைய) விதிகள்:

1. ஒவ்வொரு அணியின் ஸ்குவாடிலும் வெளி நாட்டு வீரர்கள் பத்து பேருக்கு மேல் இருக்க கூடாது. விளையாடும் பதினோரு வீரர்களில் நான்கு பேருக்கு மேல் வெளி நாட்டு வீரர்கள் இருக்க கூடாது.

2. ஒவ்வொரு இன்னிங்க்சிலும் ஒன்பது மற்றும் பதினாறாவது ஓவரின் முடிவில் "டைம் அவுட்" என இரண்டு நிமிடம் பிரேக் தரப்படும்.

3. ஒவ்வொரு அணியும் இருபது ஓவர்களை "இவ்வளவு நேரத்திற்குள்" போட்டு முடிக்க வேண்டுமென எந்த நேர நிபந்தனையும் இல்லை !!

4. இரு முறை விளையாடும் போட்டிகளில் ஒரு  போட்டி  தன் ஊரிலும், மற்ற போட்டி பிற அணியின் ஊரிலும் நடக்கும்.
 
ஐ.பி. எல் லில் எனக்கு பிடிக்காத விஷயம் ஜவ்வு மாதிரி ரொம்பவே இழுப்பது தான். ஆரமபத்தில் சற்று சுவாரஸ்யமாய் பார்ப்போம். பின் போர் அடிச்சிடும். மீண்டும் இறுதி சுற்றுகளின் போது தான் மறுபடி பார்ப்போம். இவ்வளவு மேட்ச் நடத்த அவர்களுக்கு ஒரே காரணம் : அப்போது தான் இத்தனை வீரர்களுக்கு அவ்வளவு பணம் தர முடியும்.  நடத்துபவர்களும் காசு பார்க்க முடியும்.
 
இம்முறை அணிகள் எல்லாம் கண்டபடி மாறிடுச்சு. யார் யார் எந்த அணி என புரிவதே சற்று சிரமம் தான். அணிகள் விவரம் இதோ:

Chennai Super Kings: Dhoni (Captain), Suresh Raina, Murali Vijay, Wriddhiman Saha, Ashwin, S Badrinath, Joginder Sharma, Sudeep Tyagi, Abhinav Mukund, Aniruddha Shrikant, Ganapathi Vignesh, K Vasudevdas, Shadb Jakati, Vijaykumar Yomahesh.

Foreign Players : Albie Morkel, Michael Hussey, Dwayne Bravo, Doug Bollinger, Scott Styris, Ben Hilfenhaus, Nuwan Kulasekera, Suraj Randiv, George Bailey, Faf Du Plessis

Mumbai Indians: Sachin Tendulkar, Harbhajan Singh, Rohit Sharma, Munaf Patel, Abu Nechim Ahmed, Aditya Tare, Ali Murtuza, Ambati Rayudu, Dhawal Kulkarni, Pawan Suyal, Rajagopal Sathish, Surul Kanwar, Surya Kumar Yadav, T Suman, Yazvendra Singh Chahal

Foreign Players: Kieron Pollard, Lasith Malinga, Andrew Symonds, Davy Jacobs, James Franklin, Moises Henriques, Alden Blizzard, Dilhara Fernando

Royal Challengers Bangalore: Virat Kohli, Zaheer Khan, Saurabh Tiwary, Cheteshwar Pujara, Abhimanyu Mithun, Mohammed Kaif, Arun Karthik, CM Gautham, Abrar Kazi, Mayank Agarwal, Bharath Narayan, Raju Bhatkal, Sreenath Aravind, Ryan Ninan, Asad Khan Pathan

Foreign Players: Daniel Vettori (Captain), Tillekratne Dilshan, AB de Villiers, Dirk Nannes, Charl Langeveldt, Luke Pomersbach, Johan van der Wath, Rilee Rossouw, Nuwan Pradeep, Jonathan Vandiar

Team Kochi: VVS Laxman, S Sreesanth, R P Singh, Parthiv Patel, Ravindra Jadeja, Ramesh Powar, R Vinay Kumar, B Akhil, Chandan Madan, Deepak Chowghule, Kedar Jadhav, Raiphi Gomez, Sushant Marathe, Tanmay Srivastava, Y Gnanswara Rao, Yashpal Singh, Prashant Padmanabahan,

Foreign Players: Jayawardene (Captain), Brendon McCullum, Steven Smith, Muralitharan, Brad Hodge, Thisara Perera, Steve O'Keefe, Owais Shah, Michael Klinger, John Hastings

Team Pune: Yuvraj Singh (Captain), Uthappa, Ashish Nehra, Murali Kartik, Abhishek Jhunjhunwala, Bhuvenshwar Kumar, Dheeraj Jadhav, Ekalavya Dwivedi, Ganesh Gaikwad, Harpreet Singh Bhatia, Harshad Khadiwale, Kamran Khan, Manish Pandey, Mithun Manhas, Mohnish Mishra, Rahul Sharma, Sachin Rana, Shrikant Wagh, Shrikant Mundhe, Imtiyaz Ahmed.

Foreign Players: Graeme Smith, Tim Paine, Angelo Mathews, Nathan McCullum, Callum Ferguson, Wayne Parnell, Mitchell Marsh, Jerome Taylor, Alfonso Thomas, Jesse Ryder

King XI Punjab: Dinesh Karthik, Abhishek Nayar, Praveen Kumar, Piyush Chawla, Bhargav Bhatt, Bipul Sharma, Love Ablish, Mandeep Singh, Nitin Saini, Paras Dogra, Paul Valthaty,Shalabh Srivastava, Siddharth Chitnis, Sunny Singh, Vikramjeet Malik, Amit Yadav,

Foreign Players: Adam Gilchrist (Captain), Shaun Marsh, David Hussey, Stuart Broad, Ryan Harris, Dimitri Masceranhas, Nathan Remington.

Kolkara Knight Riders: Gautam Gambhir(Captain), Yusuf Pathan, Manoj Tiwary, L Balaji, Jaidev Unadkat, Iqbal Abdulla, Laxmi Ratan Shukla, Manvinder Singh Bisla, Pradeep Sangwan, Rajat Bhatia, Sarabjit Ladda, Shami Ahmed, Shreevats Goswami,

Foreign Players: Kallis, Brad Haddin, Shakib Al Hassan, Brett Lee, Morgan, Ryan ten Doeschate, James Pattinson

Deccan Chargers: Shikhar Dhawan, Ishant Sharma, Pragyan Ojha, Amit Mishra, Manpreet Gony, Akash Bhandari, Anand Rajan, Ankit Nagendra, Arjun Yadav, Ashish Reddy, Bharat Chipli, DB Ravi Teja, Harmeet Singh Bansal, Ishank Jaggi, Ishan Malhotra, Jaydev Shah, Kedar Devdhar, Sunny Sohal

Foreign Players : Kumar Sangakkara (Captain), Pietersen (Injured), Cameron White, JP Duminy, Dale Steyn, Daniel Christian, Chris Lynn, Juan Theron, Michael Lumb

Delhi Daredevils: Sehwag (Captain), Irfan Pathan, Naman Ojha, Agarkar, Ashok Dinda, Umesh Yadav, Venugopal Rao, Aavishkar Salvi, Prashant Naik, Rajesh Pawar, Robin Bist, S Sriram, Tejashwi , Yadav, Unmukt Chand, Varun Aaron, Vikash Mishra, Vivek Yadav, Yogesh Nagar, Shahbaz, Nadeem

Foreign Players: David Warner, James Hopes, Morne Morkel, Aaron Finch, Mathew Wade, Roloef van der Merwe, Andrew McDonald, Travis Birt, Collin Ingram, Robert Frylinck

Rajasthan Royals: Rahul Dravid, Pankaj Singh, Deepak Chahar, Aakash Chopra, Abhishek Raut, Aditya Dole, Ajinkya Rahane, Amit Paunikar, Ashok Menaria, Deepak Chahar, Dishant Yagnik, Faiz Fazal, Nayan Doshi, Pinal Shah, Samad Fallah, Siddharth Trivedi, Stuart Binny, Amit Singh, Dinesh Salunkhe, Swapnil Asnodkar, Sumit Narwal, Ankeet Chavan

Foreign Players: Shane Warne(Captain), Shane Watson, Ross Taylor, Johan Botha, Collingwood (Injured), Shaun Tait

**
இதுவரை கிரிக்கெட்டில் விருப்பமில்லாத, என்னை கிரிக்கெட் பார்க்க விடாத  என் பெண்ணும் மனைவியும் உலக கோப்பை முதல் கிரிக்கெட் விரும்பிகளாகி விட்டார்கள் ! இப்போது அவர்கள் முழு மேட்சும் பார்க்க, நான் கணினி அல்லது புத்தகத்தில் பாதியும், டிவியில் மீதியுமாய் கழிக்கிறேன். இப்படியும் மாற்றங்கள் நிகழுமென நினைத்ததே இல்லை. 

இம்முறை ஆளுக்கு ஒரு அணி தங்கள் favourite ஆக தேர்ந்தெடுத்துள்ளோம். சுவாரஸ்யதிற்காக தான் ! "என் டீம் தான் சூப்பர்" என பந்தா விடலாம், மற்றவரை கிண்டல் செய்யலாம் ..!  சண்டையில் அய்யாசாமிக்கு அடி விழாமல் இருந்தால் சரி :))

நான் ஏதேனும் விதிகள் தவற விட்டிருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே..!

Tuesday, April 5, 2011

நம்பர் 1 ஆகலாம் : விமர்சனம்

"நம்பர் 1  நீங்களும் ஆகலாம்" என்கிற சுய முன்னேற்ற நூல் எழுதியவர் ரஞ்சன். குமுதத்தில் நிருபராக வேலை செய்கிறார். பிசினஸ் மகாராஜாக்கள் போன்ற புத்தகங்கள் எழுதி உள்ளார். குமுதத்தில் பிரபலங்களின் "பயோடேட்டா" எழுதுபவர் என்றால் எளிதில் புரியும்.

குமுதம் ஆசிரியர் ஜவஹர் பழனியப்பன், அமெரிக்காவில் உள்ளது போல சிறு சிறு அத்தியாயங்களுடன் ஒரு சுய முன்னேற்ற புத்தகம் எழுத வேண்டும் என்று கூறி ரஞ்சனிடம் இந்த புத்தகம் எழுத சொன்னாராம். ரஞ்சன் தன்னுரையில் இந்த தொடர் வெளி வந்த சமயம் நடந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்கிறார். தொலைபேசியில் பேசிய நபர் ஒருவர், இவர் வீடு தேடி வந்து விட்டதாகவும், கிடைக்காமல் போன சில அத்தியாயங்கள் இவரிடம் வாங்கி சென்றதாகவும், தன் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு இந்த புத்தகமே காரணம் எனவும் அந்த நபர் சொன்னாராம் !! புத்தகம் அந்த நபர் சொன்ன அளவு இருந்ததா என்றால், ஓரளவு மட்டுமே என்று தான் சொல்ல வேண்டி உள்ளது.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு குட்டி கதை சொல்லி, அதனை ஒட்டி சில கருத்துகள் சொல்கிறார். உதாரணத்திற்கு ஒரு கதை.

ஒரு பெரிய நதியை நீந்தி கடந்து சாதனை படைக்க முயல்கிறாள் ஒரு பெண். முக்கால் வாசி தூரம் வந்த பிறகு அவள் "முடிய வில்லை; விலகுகிறேன்" என்கிறாள். உடன் படகுகளில் வருபவர்கள் "இன்னும் கொஞ்ச தூரம் தான்" என சொல்லி சொல்லி நீந்த வைக்கிறார்கள். . குறிப்பிட்ட அளவுக்கு மேல் முடியவில்லை என படகில் ஏறி விடுகிறாள். ஏறி சில நிமிடங்களில், கரை வந்து விடுகிறது. "கொஞ்ச நேரம் பொறுத்திருந்தால் வெற்றி கோட்டை தொட்டிருக்கலாமே " என மனம் நோகிறாள் அவள்.

அடுத்த முறை பனி அதிகம், கரை தெரியவே இல்லை; ஆயினும் இம்முறை அவள் அற்புதமாக நீச்சல் அடித்து சாதனை புரிந்தாள். "எப்படி சாத்தியம் ஆனது?".  என்று கேட்டதற்கு "கரையை சரியாக என் மனதில் பதித்து விட்டேன். பனி போன்ற ஏதும் என் இலக்கை தொந்தரவு செய்ய வில்லை" என்கிறாள்.

இலக்கை மனதில் பதித்து கொள்வதன் அவசியத்தை சொல்கிறது இக்கதை. இது போல மேலும் பல கதைகள் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் !

பயம் பற்றி மட்டுமே சில அத்தியாயங்கள் உள்ளன. இதில் ஒரு தகவல் " சராசரி மனிதர்கள் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் குறைந்தது ஐந்து நிமிடம் கவலை படுகிறார்கள்" என ஆய்வில் கண்டு பிடித்துள்ளார்களாம்! பயத்தை வெல்வது எப்படி என சற்று விரிவாகவே அலசுகிறது புத்தகம்.

முன்னேற்றம் பற்றி சொல்லும்போது "வாழ்வில் 1 % மக்களே வெற்றிபெறுகிறார்கள். 99 % மக்கள் வெற்றி பெறுவதில்லை" என்கிறார். இதற்கு முக்கிய காரணம் இவர்களுக்கு முன்னேற ஆசை உள்ளதே ஒழிய, அதற்கான திட்டமும் செயலும் இல்லை என்பதே. ஒரு சதவீத மக்கள் மட்டுமே வெல்கிறார்கள் என்ற தகவல் நம்மை நிச்சயம் சிந்திக்க வைக்கிறது !

ஆங்காங்கு சில நல்ல கதைகளும், கருத்துகளும் தென்பட்டாலும் கூட அவற்றில் பல "மேற்கத்திய" பாணியில் உள்ளது சற்று சலிப்பூட்டவே செய்கிறது. இதனை விடவும் இதே ஆசிரியர் எழுதிய "பிசினஸ் மகாராஜாக்கள்" புத்தகம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று தோன்றுகிறது.  சாதாரணமாய் இருந்து முன்னேறியவர்கள் வாழ்வில் நாம் அறிந்து கொள்ள நிறைய விஷயம் இருக்குமே ! அந்த புத்தகம் வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தந்தது இந்த புத்தகம்.

டிஸ்கி: இந்த நூல் விமர்சனம் திண்ணை இணைய இதழில் மார்ச் 27 அன்று வெளியானது. 

Sunday, April 3, 2011

உலக கோப்பை டைரி குறிப்பு மறக்க முடியாத படங்களுடன்

இந்திய கிரிக்கெட் ரசிகனை திருப்தி படுத்துவது மிக கடினம். ஆட்டத்தை பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒரு பார்வை இருக்கும். "அஷ்வின் ஏன் ஆடலை?" "  இவனை போய் எடுத்தானுங்கலே"  என்றெல்லாம் நம் அணியை நம்மை விட மோசமாக விமர்சனம் செய்வோர் யாரும் இருக்க மாட்டார்கள். நம் வீரர்கள் செய்யும் சிறு தவறுகளையும் நாம் ஒப்பு கொள்வதில்லை. அவர்களும் மனிதர்களே; தவறுதல் இயல்பு என யாரும் உணர்வதில்லை. 

ஆனானப்பட்ட இந்த இந்திய ரசிகனே முழு திருப்தி உடன் உள்ள தருணம் இது. இந்த நாற்பது நாள் சந்தோஷத்தை என்றும் பார்த்து ரசிக்க, மகிழ இதோ ஒரு உலக கோப்பை டைரி குறிப்பு. இந்தியா ஆடிய ஆட்டங்களும், என்ன ஸ்கோர் யார் மேன் ஆப் தி மேட்ச் போன்ற தகவல்களும், சில படங்களுடன் ..

கோப்பையை வென்ற தருணம் 

இந்தியா VS பங்களாதேஷ்

ஸ்கோர் 

இந்தியா : 370 for 4   (Sehwag 175, Kohli 100 Not out)
பங்களாதேஷ் :   283 for 9 (Tamim Iqbal 70, Munaf Patel 4 wickets)



துவக்க நாளன்று..!!  அன்றே கப் அருகில் நின்று விட்டார் தோனி



பங்களாதேஷ் உடன் செஞ்சுரி அடித்த சேவாக & விராத் கோளி

மேன் ஆப் தி மேட்ச் : Sehwag  ( 175 ரன்கள் ) 

இந்தியா VS இங்கிலாந்து

ஸ்கோர் 


இந்தியா : 338  (Sachin 120, Tim Bresnan 5 wickets)
இங்கிலாந்து : 338  (Strauss 158 , Bell 69, Zaheer 3 wickets)
 :   

மேன் ஆப் தி மேட்ச் : ஆண்டிரூ ஸ்ட்ராஸ்   ( 158 ரன்கள் )
சஹீரின் அற்புத பந்து வீச்சு தான் தோல்வியிலிருந்து  நம்மை காப்பாற்றியது


இங்கிலாந்துடன் "டை" ஆனதும் நாம் இந்திய அணியை எவ்வளவு திட்டியிருப்போம்? 

இந்தியா VS அயர்லாந்து

அயர்லாந்து: 207 All out

இந்தியா : 210 for 5  (Yuvraj 50 Not out, Dhoni 34, Pathan 30 Not out) 



















மேன் ஆப் தி மேட்ச் : யுவராஜ்  ( 50 ரன்கள் & 5 விக்கட் )


இந்தியா VS நெதர்லாந்து

ஸ்கோர்:


நெதர்லாந்து: 189 All out (Zaheer 3 wickets)
இந்தியா : 191 for 5  (Yuvraj 51, Shewag 39)


மேன் ஆப் தி மேட்ச் : யுவராஜ்  ( 51 ரன்கள் & 2 விக்கட் )

இந்தியா VS மேற்கிந்திய தீவு 

ஸ்கோர் 

இந்தியா : 268  ஆல் அவுட்  (Yuvraj 113, Kohli 59, Rampaul 5 wickets)

மேற்கிந்திய தீவு  : 188   ஆல் அவுட் (Devon Smith 81, Zaheer 3 wickets)

சென்னையில் நடந்த ஒரே இந்திய மேட்ச் 



                      மேன் ஆப் தி மேட்ச் : யுவராஜ்  (113  ரன்கள் & 2 விக்கட் ) 

கால் இறுதி :  இந்தியா Vs ஆஸ்திரேலியா 

ஸ்கோர்: 


ஆஸ்திரேலியா : 260 for 6 (Ponting 104) 
இந்தியா : 261 for 5  (Yuvraj 57, Sachin 53, Gambhir 50)

டோர்னமெண்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சாகிர் ஆஸ்திரேலியா எதிரிலும் அசத்தினார் 

மேன் ஆப் தி மேட்ச் : யுவராஜ்  ( 57  ரன்கள் &  2 விக்கட் ) 

இந்த மேட்ச் முடிந்து யுவராஜ் இப்படி கத்திய போதே " நாளை பேப்பர்களில் இது தான் முதல் பக்க போட்டோ" என்று பேசி கொண்டோம். 
இந்த மேட்ச் தான் நமக்கு Momentum & confidence  தந்தது. 
World champions Australia were knocked out in Quarter Finals by us !!    

அரை இறுதி இந்தியா Vs பாகிஸ்தான் 

ஸ்கோர்: 

இந்தியா :  260 for 9 ( Sachin 85, Sehwag 38, Raina 36, Wahab Riaz 5 wickets)
பாகிஸ்தான்   : 231ஆல் அவுட் (Misbah 56, All Indian Bowlers took 2 wickets each)

மேன் ஆப் தி மேட்ச் : Sachin  ( 85 ரன்கள் ) 


மிக பொறுப்பாக ஆடிய ரெய்னா


Winning moment against Pakistan 

இறுதி போட்டி இந்தியா Vs இலங்கை 

ஸ்கோர்: 


இலங்கை: 274 for 7 (Jayawardena 103 Not out, Yuvraj & Zaheer 2 wickets each)
இந்தியா : 277 for 5  (Gambhir 97, Dhoni 91 Not out)

Winning shot ! மேன் ஆப் தி மேட்ச்:டோனி( 91 ரன்கள்) What an Innings Sir ji !!


மேன் ஆப் தி சீரீஸ் யுவராஜ்

பைனலில் கம்பிரின் அற்புத ஆட்டத்தை என்றும் மறக்க முடியாது

யுவராஜ், சேவாக், ஹர்பஜன், சச்சின் என அன்று எல்லாரும் ஒரே அழுகாச்சி! 

கும்ப்ளே..நீ நல்லவன்... நீயும் இதை தூக்கி பார் 
சச்சின் 21 ஆண்டுகளாக இந்தியாவின் எதிர்பார்ப்பை தன் தோளில் சுமக்கிறார். நான் இன்று ஒரு நாள் அவரை என் தோளில்சுமந்தேன்" என பேசி நம் மனதில் இடம் பிடித்தார் விராத் கொஹ்லி.   
வீரர்கள் முகத்தில் உள்ள மகிழ்ச்சிக்காக இந்த போட்டோ

வெல்டன் டீம் இந்தியா ! We are proud of You !!
Related Posts Plugin for WordPress, Blogger...