Showing posts with label பதிவுலக நண்பர்கள். Show all posts
Showing posts with label பதிவுலக நண்பர்கள். Show all posts

Sunday, September 1, 2013

அகவொளி பதிப்பக இரு நூல்கள் வெளியீட்டு விழா - படங்கள் ​+ சிறு குறிப்பு

கவொளி பதிப்பகத்தின் இரு புத்தகங்கள் வெளியீட்டு விழா இன்று சைதாபேட்டையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

சதீஷ் சங்கவியின் " இதழில் எழுதிய கவிதைகள்" தொகுப்பை தாமோதர் சந்துரு அவர்கள் வெளியிட - மணிஜி அவர்கள் பெற்று கொண்டார் .

வால் பையன் புத்தகம் பற்றி மிக நகைச்சுவையாக பேசினார் !

அடுத்து " வெற்றிக்கோடு " புத்தகத்தை கேபிள் சங்கர் வெளியிட - ஜாக்கி சேகர் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்

தொடர்ந்து ஜாக்கி சேகர், வழக்கறிஞர் தேவகுமார், கவிஞர் பத்மஜா நாராயணன், நண்பர் அதியமான் ஆகியோர் வெற்றிக்கோடு பற்றி தங்கள் கருத்துகளை விரிவாய் பேசினர்.

அவர்கள் பேசிய கருத்துகளில் நினைவில் உள்ளதை (நேரமிருப்பின்) பின்னர் பகிர்கிறேன்.

தேவாவின் பேச்சு கன்னி பேச்சு போலவே  தெரிய வில்லை ! அசத்தி விட்டான் !

ஜாக்கி மற்றும் பத்மஜா இருவர் குடும்பத்திலும் உடல்நல குறைவான நிலையில் தத்தம் மகள் இருந்த நிலையிலும் ஒரே நாளில் புத்தகத்தை வாசித்து விட்டு - விழாவில் கலந்து கொண்டு புத்தகம் பற்றி மிக மிக விரிவாய் பேசியது மனதை நெகிழ்த்தியது   !

என்ன தவம் செய்தனை .....இத்தகைய நண்பர்களை பெற !

நினைவில் இருந்தவரை வந்திருந்த பதிவர்கள்/ எழுத்தாளர்கள்  :

எழுத்தாளர் வா. மு. கோமு
மணிஜி
தாமோதர் சந்துரு
கேபிள் சங்கர்
ஜாக்கி சேகர்
அதிஷா
அகநாழிகை வாசுதேவன்
பால கணேஷ்
கே. ஆர். பி செந்தில்
பத்மஜா நாராயணன்
கண்ணன் ராமசாமி (கரா)
அதியமான்
ஸ்கூல் பையன்
பட்டிக்காட்டான் ஜெய்
முக நூலில் பதிவெழுதும் அன்பு சிவன்

இதனை தவிர சட்ட கல்லூரியில் என்னுடன் படித்த வழக்கறிஞர் நண்பர்கள் ...

பிரேம்குமார்
பாலமுத்து குமார்
அமுதன்
தேவகுமார்

மற்றும்

ACS இன்ஸ்டியூட்டை சார்ந்த

நாகராஜன்
பாலசுப்ரமணியம்

(அநேகமாய் நான் ஓரிரு பதிவர்கள் பெயரை மறந்திருப்பேன். பின்னூட்டத்தில் தவற விட்ட நண்பர்கள் பெயரை சொல்லுங்கள் நண்பர்களே !)

**********
விழா முடிந்து பேசிக்கொண்டிருக்கும்போது மாலை 7.30 மணிக்கு நமது புத்தகம் அட்டை லே அவுட் செய்த சுகுமார் சுவாமிநாதனிடம் இருந்து ஒரு எஸ். எம். எஸ்.

இன்றைய விழாவில் எடுத்த புகைப்படங்கள் 8 மணிக்குள் பகிர்ந்தால் நாளை - சென்னையில் மட்டும் சர்குலேட் ஆகும் ஒரு செய்தித்தாளில் அதனை பகிர்கிறேன் என சொல்லியிருந்தார்

அகநாழிகை வாசுவிடம் சொன்னதும் உடன் அவர் அனுப்பி வைக்க ...இன்றைய புத்தக வெளியீடு விழா பற்றிய படம் நாளை சென்னை அவினியூ என்ற செய்தி தாளில் சிறு செய்தியாக வருகிறது.



மிக்க நன்றி சுகுமார் !

*********
முகநூலில் நண்பர் திரு அன்பு சிவம் அவர்கள் விழா மற்றும் புத்தகம் பற்றி எழுதியது இதோ:

கவொளிப் பதிப்பகத்தின் இரு புத்தக அறிமுக விழாவிற்குச் சென்றிருந்தேன்.

முதல் புத்தகம் தம்பி சதீஷ் சங்கவியின் இதழில் எழுதிய கவிதைகள். சதீஷ் முத்தத்திற்கு மொத்த குத்தகையாளர் என்பதால் முதல் கவிதைத் தொகுதியின் தலைப்பே இனிக்கும் இதழாய் இருந்ததில் வியப்பில்லை. சற்றே மேலோட்டமாகப் பார்த்த போது கவிதைகளில் தெரியும் நயமும் ரசனையும் நன்கு புரிந்தது.

இரண்டாவது புத்தகம் வீடு திரும்பல் மோகனின் வெற்றிக் கோடு. தமிழில் சுய முன்னேற்றம் குறித்த பல புத்தகங்கள் வந்து விட்டது. இதுவும் இன்னொன்றோ என்ற சந்தேகம் இருந்தது. வாங்கிப் படித்ததும் புரிந்தது இது பத்தோடு பதினொன்றல்ல என்பது. எந்த ஒரு மனிதன் நான் இந்தத் தவறைச் செய்தேன். அதனால் அல்லலுற்றேன். இதை நீயும் செய்யாதே துன்பத்திற்கு ஆளாகாதே என்று கூறுகிறானோ அவனது பாடங்கள் நிச்சயம் பயனுள்ளவையாகவே இருக்கும்.

சமீப காலமாக நான் எழுதி வரும் மீண்டும் மீண்டும சொல்வேனில் நான் சொல்ல நினைத்த சில விஷயங்களை மோகன் குமார் தனது நுாலில் சொல்லிவிட்டார். அத்தகைய விஷயங்களை நீக்கி மீண்டும் மீண்டும் சொல்வேன்.

மோகன் குமாரின் எழுத்து எளிமையானது. ஒரு சாதாரண மனிதனின் வாழ்வில் எது முக்கியம் என்பதை எடுத்துரைக்கிறது. சற்றே எளிமையாகத் தெரியும் சில வாக்கியங்கள் உள்ளே ஒரு கடலை ஒளித்துக் கொண்டிருக்கிறது. உதாரணங்கள்

• நாம் எந்த ஒரு சிறு தவறும் செய்யக்கூடாதெனில், ஏதும் செய்யாமல் பேசாமல் இருந்தால்தான் முடியும்.

• வாழ்வில் வென்ற பல வெற்றியாளர்களும் ஏதோ ஒரு கட்டத்தில் தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.

• கடவுளாலும் மாற்ற முடியாத விஷயம் ஒன்று உண்டு. நடந்ததை மாற்ற அவராலும் முடியாது.

தமிழில் சமீப காலத்தில் வந்திருக்கும் சுய முன்னேற்றப் புத்தகங்களில் வெற்றிக் கோடு நிச்சயம் வித்தியாசமானது. ஏதோ ஒரு மூலையில் வாழும் ஒரு மனிதனுக்கு இது வெற்றியைக் கொடுத்தாலும் போதும். அது மோகனுக்குக் கிடைத்த வெற்றி.

வாழ்த்துக்கள் சதீஷ் !

வாழ்த்துக்கள் மோகன் !
*********



****************
மிக குறுகிய அவகாசத்தில் வாசித்து விட்டு அற்புத கருத்துரை வழங்கிய நண்பர்களுக்கு சிறிய நினைவு பரிசு !  ( பேனா !)
*****************
புத்தகம் குறித்து அருமையாய் பேசினீர்கள் ஜாக்கி ; என் நண்பன் தேவா உங்கள் பேச்சு மிக பிடித்திருந்ததாக போனில் தெரிவித்தான் !

Photo 

************
பதிவர்கள் சிலரை தான் இயக்கம் புது படத்தில் எப்படி களாய்த்துள்ளார் கேபிள் என்ற விபரம் இன்று சொன்னார் ..விபரங்கள் விரைவில்.. தனியே பகிர்கிறேன்



***********
புத்தக வெளியீட்டில் நெகிழ வைத்த தங்கள் பேச்சை நாளைய விழாவிலும் எதிர்பார்க்கிறேன் - பத்மஜா மேடம்; நீங்கள் பேசியதை பின்னர் எழுதி தந்தால் - நிச்சயம் அடுத்த பதிப்பில் - புத்தகத்தில் அது சேர்க்கப்படும் !

Photo: இன்று அகநாழிகை புத்தக உலகில் நடைபெற்ற, மோகன்குமார் எழுதிய வெற்றிக்கோடு புத்தக வெளியீடு

விழா நடந்த ஹால் !

Photo


*********
விழா குறித்து முகநூலில் இன்று நான் பகிர்ந்த  சில விஷயங்கள் :

முதல் முறையாக புத்தகத்தில் பலர் ஆட்டோகிராப் வாங்கியபோது சங்கோஜமாக இருந்தது ! ஆட்டோகிராப் போடும் அளவா வளர்ந்து விட்டோம் ! நம்ப முடிய வில்லை !
*************
Bala Subramanian, a young Company Secretary who attended today " Vetrikkodu :" book release function has posted the following message in his timeline; Do not know how to share from there. Hence copying and sharing it here:

Bala Subramanianposted to Mohan Kumar
15 minutes ago near Chennai ·

Extremely privileged to be present at the book launch ceremony with all the well known writers. Buying the book before it is officially launched tomorrow is like going to a preview show for a Rajnikanth movie on the eve of its release. Thank you Mohan Kumar Sir for giving us the book.

Looking forward to read the book and the feedback will follow soon. — feeling excited.
*************
அற்புதமான நண்பர்கள். நிறைவான விழா. மறக்க முடியாத நாள் !

நெகிழ்ந்த மனதுடன் உறங்க செல்கிறேன். நாளை பதிவர் விழாவில் சந்திப்போம் !

Saturday, August 31, 2013

சுய முன்னேற்ற புத்தகங்கள் அவசியமா ?

சுய முன்னேற்றம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஏன் அத்தியாவசியமாகிறது? சமூகத்தில் தனக்கென ஒரு அந்தஸ்தைத் தேடிக் கொள்ளவும், உலகுக்குத் தன்னை நிரூபிக்கவும்தானா?  ‘இல்லை’ என்கிறார் மோகன் குமார்.  எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட்டு, மாற்றங்களுக்குத் தயாராகி, சவால்களைச் சந்தித்து, நினைத்தும் பார்த்திராத சிகரங்களைத் தொட்டு, நாமே அமைக்கும் புதிய பாதையில் நம் வாழ்க்கைப் பயணம் சீராக ஓடத் தொடங்குவதில் கிடைக்கிற ஆனந்தத்துக்கும் திருப்திக்காவுமே என்கிறார் இந்நூலின் மூலமாக.

‘இல்லாமற் போகுமோ சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் எனக்கு?’

வீடு திரும்பல்’ வலைப்பூவின் முகப்பில் உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள்.  இவரது இந்தக் கேள்வியே இலக்குகளை நோக்கிய வெற்றிக் கோட்டை இழுத்திருந்தாலும்,  ஒவ்வொரு படிக்கட்டிலும் உறுதியுடன் ஏறி உயரம் தொட்ட போது உணர்ந்த உண்மையை, சமூகத்திடமிருந்து தான் பெற்ற நல்லனவற்றை பிறருக்கு உதவுவதன் மூலம் சமூகத்துக்கே திருப்பித் தந்தபோது அடைந்த மன நிறைவை நெகிழ்வோடும் நெஞ்சம் நிமிர்த்தியும் நேர்மையுடன் நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார், ஐந்தாண்டு சட்டப்படிப்பில் கல்லூரியில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, அதன் பிறகு கம்பெனி செக்ரட்டரிஷிப் மற்றும் ICWA படிப்பை முடித்துவிட்டு சட்டம் மற்றும் செக்ரடேரியல் துறை நிர்வகிப்பாளராகப் பணிபுரியும் மோகன் குமார்:

நான் ஒன்றும் மிக உயர்ந்த நிலையை எட்டி விட வில்லை. ஆனால் ஒரு காலத்தில் எந்த பக்கம் செல்வது என்று குழம்பி, என்னுடைய வாழ்க்கையை எப்படி எடுத்து செல்வது என்று புரியாமல், பல்வேறு மன குழப்பங்களுக்கு ஆட்பட்டு வெளி வந்திருக்கிறேன். நான் அன்று இருந்த நிலையிலிருந்து ஒப்பிட்டுப்  பார்த்தால், மிக அதிக குழப்பங்கள் இடையே எதற்கும் உபயோகமில்லாதவன் போல் இருந்தவன், இன்று நான்கு பேர் மதிக்கும் அளவு வந்துள்ளது புரிகிறது. எவ்வளவு தவறுகள், முட்டாள் தனங்கள் செய்துள்ளேன் ! இவ்வளவும் செய்து விட்டு இன்று மீண்டு வர என்னால் முடியும் போது, அது எல்லாருக்கும் முடியும் என்பதால் தான் இந்த தொடர்.

இவரது வலைப்பூவில் வெளிவந்த போதே என்னை ஈர்த்த, பாராட்ட வைத்த தொடர். மேலும் சில அத்தியாயங்களை இணைத்துக் கொண்டு வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தை முழுமையாக வாசிக்கையில் நான் உணர்ந்தது,  சொல்ல முற்படும் செய்தியை வாசகரிடம் மிக இலகுவாகக் கொண்டு சேர்த்து விடுகிறார் தன் எளிமையான, சுவாரஸ்யமான எழுத்து நடையினால். 


(ஊதா நிற அட்டை தான் புத்தகத்தில்பயன்படுத்தப்பட்டது ;
சுகுமாரின் உழைப்பு உங்கள் பார்வையில் படவேண்டி இதனையும் பகிர்கிறேன் )

பல இடங்களில், போகிற போக்கில் சொல்லிச் செல்லுபவை வாழ்வியல் தந்துவங்களாக மிளிருகின்றன:

“பிறரை வெறுப்பதன் மூலம் நம்மை நாமே வெறுக்கிறோம்.”

“தன்னை நேசிக்காதவனால் மற்றவரை நேசிக்க முடியாது!”

“பிறர்   நம் மீது அன்பு செலுத்த வேண்டும் என நாம் ஏன் காத்திருக்க வேண்டும்?”

“கடந்த காலத் தவறுகளை எண்ணி வருந்துவது தவறா? நிச்சயம் தவறில்லை. அது ஒரு அளவோடு இருந்தால் !”  ஏனெனில்,  "கடவுளாலும் முடியாத விஷயம் ஒன்று உண்டு. நடந்ததை மாற்ற அவராலும் முடியாது !" 

மொத்தம் பத்தொன்பது அத்தியாயங்கள். ஒரு சிறந்த ஆளுமையாக நாம் திகழ சந்தோஷமான மனநிலையும், ஆரோக்கியமான உடல் நிலையும் முக்கியம் என்பதை அழகாக அலசுகின்றன.  எடுத்துக் கொண்ட தலைப்பை தனது மற்றும் தெரிந்தவர் வாழ்க்கை அனுபவங்களுடன்,  பொருத்தமான மேற்கோள்களுடன், ஆங்காங்கே சின்னக் கதைகளுடன், கவிதைகளுடன், உலகின் பிறபாகங்களிலிருக்கும்  நடைமுறைகள் குறித்த தகவல்களுடன், நாம் அறிந்த திரைப்படங்களை உதாரணம் காட்டி என.. எங்கும் எதையும் திணிக்காமல் இயல்பாகச் சொல்லிச் சென்ற விதத்தில் அழுத்தமாகப் பதிந்து போகிறது மனதில், “வெற்றிக் கோடு”!

இலக்கை முடிவு செய்வது; தயக்கங்களை வெல்வது; விடா முயற்சியை ஊக்க மருந்தாகக் கொள்வது; தாழ்வு மனப்பான்மையையும் சுயவெறுப்பையும் கை விடுவது; பெரியவர்களை மதிப்பது; அனைவரிடமும் அன்பும் நட்பும் பாராட்டுவது; உடல்நலம் பேணுவது; பயம், அலட்சியம், ஈகோ இவற்றைத் தள்ளி வைப்பது; மற்றவரை மனதாரப் பாராட்டுவது; மனித மனங்களின் மோசமான மறுபக்கங்களான கோபம், பொறாமை ஆகியவற்றை அண்ட விடாதிருப்பது; உயிருக்குக் குழி பறிக்கும் தீய பழக்கங்களில் விழுந்திடாதிருப்பது; நேர மேலாண்மை, நமக்கென ஒரு ரோல் மாடல் வேண்டியதன் அவசியம்; இவற்றோடு வாழ்க்கையை எப்படி ரசித்து வாழ வேண்டும் என்பதையும், பிறருக்கு உதவுவதை நம் இயல்புகளில் ஒன்றாக மாற்றிக் கொள்வதால் வாழ்க்கை எப்படி பூர்ணத்துவம் பெறுகிறது என்பதையும் பகிர்ந்து கொள்கிறது இந்நூல்.

த்தனையோ புத்தகங்களில் இந்த அடிப்படையான கருத்துகளை நாம் வாசித்திருக்கலாம். இவரே சொல்கிறார் தான் வாசித்து மனதில் ஏற்றிக் கொண்ட பல சிந்தனைகள்தாம், ஆனால் எப்படி அவற்றால் தான் பயனுற்றேன் என்பதையே சொல்ல விழைந்திருப்பதாய். அதனாலேயே அவை அறிவுரைகளாய் நில்லாது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளாய் நம்மை மனதார ஏற்றுக் கொள்ள வைக்கின்றன.

ஒரு சில இடங்களில் ஆங்கில மேற்கோள்களைத் தமிழ் படுத்தாமல் விட்டிருப்பது சிறிய குறை. ஆங்கிலம் அறியாத சாதாரண மனிதரும் முழுதாகப் புரிந்து பயனடைய வேண்டிய புத்தகமாயிற்றே.  கூடிய விரைவில் மறுபதிப்பை எதிர்பார்க்கலாம் என்பதால் அந்த சமயத்தில் இது சரி செய்யப்படுமென நம்புகிறேன்.

மொத்தத்தில், இருபது முதல் முப்பது வயதுக்குள்ளாக இருக்கும் இளைய தலைமுறை தம் வாழ்க்கையைச் சரியான சமயத்தில் செதுக்கிக் கொள்ள வேண்டுமென்கிற நோக்கத்துடன் ‘உயர்தலே வாழ்க்கை’ என உரக்கச் சொல்லுகிற இப்புத்தகம்,  ‘நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் என்ன?’ என்கிற தேடலுடைய அனைத்து வயதினருக்கும் விடையாக அமைகிறது என்றால் அது மிகையன்று.

இலக்கை நிர்ணயிக்க இயலாமல் தத்தளிக்கும், தீய வழிகளில் மனதை அலைபாய விட்டுத் திசை திரும்பிக் கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தை நல்வழியில் செலுத்த உதவும் இப்புத்தகம் அனைத்துக் கல்லூரிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களின் நூலகத்தில் அவசியம் இடம்பெற வேண்டிய ஒன்று. “உங்கள் வாழ்க்கையின் சில பகுதிகளை நீங்கள் திரும்பிப் பார்க்கவும், உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான சில விஷயங்களைக் கற்றுத் தரவும் செய்யுமானால், இந்தப் புத்தகம் தன்னுடைய கடமையைச் செய்து விட்டது என்று அர்த்தம்” என்கிறார் நூலாசிரியர். தன் கடமையில் நூல் வென்றிருப்பதாக நான் உணர்ந்தது போல நீங்களும் உணரும் பட்சத்தில் மற்றவருக்குப் பரிந்துரைக்கவும், நீங்கள் நலம் நாடும் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் வாங்கிப் பரிசளிக்கவும் செய்வீர்கள் என நம்புகிறேன்.

திரு. சோம வள்ளியப்பன் அவர்களின் சிறப்பான மதிப்புரையுடன் அகவொளி பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் வெற்றிக்கோடின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ‘வீடு திரும்பல்’ வலைப்பூவை ஆரம்பத்திலிருந்து வாசித்து வரும் வகையில் நண்பரின் எழுத்து புத்தகமாவது கூடுதல் மகிழ்ச்சி.

உயர்தலே வாழ்க்கை!

இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துகள் மோகன் குமார்:)!

*

வெற்றிக் கோடு
பக்கங்கள்: 104; விலை: ரூ. 80;
வெளியீடு: அகவொளி பதிப்பகம்;
கிடைக்கும் இடம்:
அகநாழிகை புத்தக உலகம்,
எண்: 390, அண்ணா சாலை, KTS வளாகம், முதல் தளம்,
சைதாப்பேட்டை, சென்னை - 15.
தபாலில் வாங்கிட:  aganazhigai@gmail.com

நாளை 31 ஆகஸ்ட் 2013 மாலை 5.30 மணிக்கு அகநாழிகை புத்தக உலகில் நடைபெறவிருக்கும் அறிமுக விழாவிலும்; 1 செப்டம்பர் 2013 சென்னை வடபழனி, 297 என்.எஸ். கே சாலையிலுள்ள சினி மியூசிஷியன்ஸ் ஆடிட்டோரியத்தில் நட்புகள் கூடும் சென்னை பதிவர் திருவிழாவில்.., மாலை 3 மணிக்கு நடைபெறவிருக்கும் புத்தக வெளியீட்டு விழாவிலும் ரூ. 50-க்கு கிடைக்க ஏற்பாடாகியுள்ளது.
**
நன்றி : வாழ்வை அர்த்தப்படுத்தும் ‘வெற்றிக் கோடு’ - மோகன் குமாரின் கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை -- ராமலட்சுமி 

 http://tamilamudam.blogspot.com/2013/08/blog-post_30.html   
**
இன்றைய விழாவுக்கு அவசியம் வருக ! அனுமதி இலவசம் !


Wednesday, August 28, 2013

பதிவர் விழா உணவு :சென்ற ஆண்டு Vs இந்த ஆண்டு மெனு ! படங்களுடன்

சென்ற ஆண்டு இதே நாளில் ( 28 ஆகஸ்ட் 2012) சாப்பாட்டு பந்தி குறித்து எழுதிய இப்பதிவு - மிக அதிக நண்பர்களால் விரும்பி வாசிக்கப்பட்டது - அதற்கு முக்கிய காரணம் பின்னூட்டங்களில் ராஜி என்கிற எங்கள் அக்கா (அக்காவா? தங்கையா ?) அடித்த ரகளை.... 

அவர் எழுதிய பின்னூட்டங்களை வாசிக்க மறவாதீர்கள்... அதற்காகவே பழைய பின்னூட்டங்களுடன் சேர்த்து பப்ளிஷ் செய்கிறேன்.....

பதிவின் இறுதியில் இந்த ஆண்டு சாப்பாட்டு மெனுவும் விரிவாக உள்ளது !
*********
2012 சென்னை பதிவர் மாநாட்டில் கலக்கிய பதிவர்கள் சிலரையும், மாநாட்டின் சாப்பாட்டு பந்தியையும் பார்க்கலாம்.

பின்னூட்ட புயல் நீங்களா நானா - திண்டுக்கல் தனபாலன் Vs ரமணி

கேபிள்-சிபி இரு பதிவுலக மலைகளுக்கிடையே   வீடுதிரும்பல் மோகன்
போட்டோ எடுக்கும் வரை சாதாரணமாய் இருக்கும் சிபி, போட்டோ எடுக்கிறார்கள் என்றதும் நொடியில் கூலிங் கண்ணாடி எடுத்து போடுவது பார்க்க ஜாலியா இருக்கு

ஒவ்வொரு பதிவரும் உள்ளே நுழையும் போது வீடியோவில் தன்னை அறிமுகம் செய்த  பின்னரே நுழைந்தார்கள்.
இங்கு பிலாசபி மற்றும் கோவை நேரம் ஜீவா
ரெண்டு மூணு செட் டிரஸ் வைத்து கொண்டு மண்டபத்திலேயே அடிக்கடி கெட் அப் மாற்றினார் கோவை நேரம் ஜீவா !

பிலாசபிக்கு திருமணம் பிக்ஸ் ஆகிடுச்சு. செப்டம்பர் முதல் வாரம் நிச்சயதார்த்தம். அடுத்த வருட மே மாசம் கல்யாணம். சாருக்கு பத்து நிமிஷத்துக்கொரு முறை போன் வரும். ஓரமா போய் நின்னு 15 நிமிஷம் பேசுவார் ! மேடம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு :))

நாய் நக்ஸ், மணிஜி, கோவை நேரம், ஆரூர் மூனா

அநியாய பாசக்காரர் நாய் நக்ஸ் அண்ணே. வீட்டில் செஞ்ச மீன் எடுத்துட்டு வந்து, சாப்பிடாட்டி ஊட்டியேவிடுவாராம் (நான் வெஜ் சாப்பிடுறவங்களுக்கு தான் !)

ஜாக்கி மேடைக்கு சென்ற போது ஒரு வாசகர் செமையா விசில் அடிச்சார். ஜாக்கி புதியவர்கள் எதை வேணா எழுதுங்க; தைரியமா எழுதுங்க என சொல்லிவிட்டு அமர்ந்தார்

ஜாக்கி பேசுவதை புன்னகையுடன் கேட்கிறார் பட்டிக்காட்டான் ஜெய் 

சித்தூர் முருகேசன், கேபிள், ரோஸ்விக், மோகன்குமார் 


இவங்க எல்லாருமே பிரபல பதிவர்கள் தான்.. விழா குழு ..ஒரு பகுதி 

விழா குழு இன்னொரு பகுதி

****
இனி சாப்பாட்டு பந்தியில் எடுத்த படங்கள்  

எனக்கு தெரிந்த வரை இது தான் மெனு; ஏதும் தவறு என்று யாரேனும் சொன்னால் திருத்தி கொள்கிறேன்

தக்காளி சூப்
சாலட்
கோபிமஞ்சூரியன்
சப்பாத்தி, குருமா
வடை
காய்கறி
உருளை கிழங்கு சிப்ஸ்
சாம்பார் சாதம் ( பிசிபெல்லா பாத்)
வெஜிடபிள் பிரியாணி
தயிர் சாதம்
ஊறுகாய்
மைசூர் பாகு ( சூப்பரா இருந்தது. ரெண்டாவது கேட்கலாம் என்ற ஆசையை அடக்கி கொண்டேன்)
ஐஸ்கிரீம்
***
இவை தவிர காபி, டி, பொவண்டோ, போண்டா போன்றவை அவ்வப்போது நிகழ்ச்சி அரங்கிலேயே சப்ளை ஆனது !
LK, பலாபட்டறை ஷங்கர், மக்கள் சந்தை - சீனிவாசன் & அருணேஷ்


முதல் பந்தியில் சாப்பிட்டு முடித்த பின்னும் நண்பர்கள் மிக பெரிய கூட்டமாய் பின்புறம் நின்று அதிக நேரம் பேசி களித்தனர்

தம்பி வடை இன்னும் வரலை- சிவாவிடம் பேசும் சிரிப்பு போலிஸ். அருகில் பெஸ்கி.

கருண், சீனா ஐயா, கணக்காயன் ஐயா

"நிறைய தண்ணி குடிச்சுக்குங்க; மதியம் நிறைய பேச வேண்டியிருக்கும்"
சுரேகாவிடம் சொல்லும் ரோஸ்விக்

ஐயாக்கள் ராமானுசம், சென்னைப்பித்தன், நடனசபாபதி

தானே பரிமாறுகிறார் காடரிங் உரிமையாளர் &  பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி     

(ஆயிரத்தில் ஒருவன் மணி அவர்கள் இன்று நம்மிடையே இல்லை.. அவருக்கு மவுன அஞ்சலி மட்டுமே  2013-விழாவில் நம்மால் செலுத்த முடிகிறது !

சிரித்தபடி கரண்டியும் கையுமாய் இருக்கும் சிராஜுதீனை இன்று தான் முதலில் பார்த்தேன். பம்பரமாய் சுற்றி பந்தியிலும், விழாவிலும் அனைத்து வேலைகளும் செய்தார். மிக மகிழ்ச்சி சிராஜுதீன் !

சீனு மற்றும் அவர் நண்பர்கள், சிராஜுதீன், சிவா, பிலாசபி
ஆரூர் மூனா, மதுமதி, அரசன், ரஹீம் கஸாலி



உணவு ஒரு வேளை பற்றாமல் போனால் என்ன செய்வது என்பதால், விழா குழுவினர் மட்டும், மற்ற அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் தான் சாப்பிட வேண்டும் என பேசி வைத்திருந்தோம். அதன் படி கடைசியாய் சாப்பிடும் விழா குழுவினர் சிலர்..மேலே உள்ள இரு படங்களில் !
 *************************

2013 பதிவர் சந்திப்பில் பப்பே முறையில் வழங்கப்படும் மதிய உணவு வகைகள்
அசைவம்
பைனாப்பிள் கேசரி
கிராண்ட் தாஜ் சிக்கன் பிரியாணி 
தயிர் பச்சடி
கத்திரிக்காய் சட்னி
சிக்கன் டிக்கா
தயிர் சாதம்
ஐஸ்கிரீம் 50 கிராம் கப்
வாழைப்பழம்
பீடா

சைவம்
பைனாப்பிள் கேசரி
வெஜ் சாலட்
கிராண்ட் தாஜ் வெஜ் பிரியாணி
தயிர் பச்சடி
கத்திரிக்காய் சட்னி
பொட்டேட்டோ சிப்ஸ்
தயிர் சாதம்
ஐஸ்கிரீம் 50 கிராம் கப்
வாழைப்பழம்
பீடா

***
அட்ரா சக்க ! அட்ரா சக்க ! அட்ரா சக்க !  சிக்கன் பிரியாணியா !!! ரைட்டு !
***
அண்மை பதிவு :

வீடுதிரும்பல் மோகனின் வெற்றிக்கோடு - புத்தகம் வெளியாகும் கதை 

வெற்றிக்கோடு - புத்தகம் வெளியாகும் கதை !

" வ்வொரு மனிதனின் வாழ்விலும் ஒரு புத்தகம் எழுதும் அளவு செய்தி இருக்கிறது " தலைவர் சுஜாதா இதனை ஒரு முறை Quote செய்திருந்தார்.

இவ்வரிகளின் உண்மையை நண்பன் லட்சுமணன் மறைவுக்கு பின் - அவனது கவிதை தொகுப்பை வெளியிட்ட போது முழுமையாக உணர்ந்தேன். அப்போதே "வாழ்நாளில் நாமும் ஒரு புத்தகம் வெளியிடணும் " என்ற எண்ணம் மிக ஆழமாக பதிந்து விட்டது.

ப்ளாக் எழுத துவங்கி- பல புத்தக வெளியீடுகள் பார்த்த பின் ஒரு புத்தகம் எழுதலாம் என நம்பிக்கை வந்தது. 2010 ல் எழுத துவங்கி - 10 பாகம் வரை வெளியாகி - மிக அதிக பாராட்டு பெற்ற - வாங்க முன்னேறி பார்க்கலாம் தான் - இப்போது வெற்றிக்கோடாக அகவொளி பதிப்பக வெளியீடாக வருகிறது


அவ்வப்போது மனைவியிடம் " வாழ்நாளில்  ஒரு புக் வெளியிட்டு விடுவேன் ; ஒருவேளை நான் வெளியிடா விட்டால் - என்னோட புக்கை நண்பர்கள் மூலம் நீ ரிலீஸ் பண்ணிடு " என சொல்லி கொண்டிருப்பேன்.

நிற்க . மனைவி இப்ப சொல்றார் - " அப்பாடா ! புத்தகம் வெளியிடுற வேலை எனக்கு இல்லை.  " :)) (அவர்களின் கவலையே கவலை !)

புத்தகம் குறித்த சில சுவாரஸ்யங்கள் இங்கு -
**********
சுய முன்னேற்ற புத்தகம் என்றும் இதனை கொள்ளலாம்; மோகன் குமார் என்பவனின் சிறு ஆட்டோ பயோகிராபி என்றும் சொல்லலாம்.

ஒவ்வொரு மனிதனும் முன்னேற பல்வேறு குணங்கள் தேவைப்படுகிறது. சில குணங்கள் / பழக்கங்கள் நம்மை முன்னேற்றும். வேறு சிலவோ - பரம பத - பாம்பு போல நம்மை கீழிழுக்கும்

இப்படி பாசிடிவ் மற்றும் நெகடிவ் குணங்கள் புத்தகத்தில் மாறி மாறி பயணிக்கிறது .
***
சற்றே பெரிய சைசில் (டம்மி சைஸ்) 104 பக்கங்கள் உள்ள இப்புத்தகத்தின் விலை - 80 ரூபாய். வரும் சனி, ஞாயிறு இரு தினங்களுக்கு மட்டும் ரூ. 50 என்கிற விலைக்கு புத்தகம் கிடைக்கும்.

104 பக்கங்கள் உள்ள டம்மி சைஸ் புத்தகம் - 100 ரூபாய் போடலாம் என்று சில நண்பர்கள் சொன்ன போதும் பலருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக விலை குறைக்கப்பட்டது.

குறிப்பாக முதல் 2 நாளுக்கு விலை 50 ரூபாய் என்பது நிச்சயம் ஒரு செமையான ஆபர். தயவு செய்து இதை தவற விடாதீர்கள்.
***
புத்தகத்துக்கான வாழ்த்துரை வழங்கியவர் பல சுய முன்னேற்ற நூல்கள் எழுதிய திரு. சோம வள்ளியப்பன். ஒரே நாளில் புத்தகத்தை படித்து விட்டு, நான் மெயில் அனுப்பிய 24 மணி நேரத்துக்குள் மிக அழகான முன்னுரை எழுதி தந்தார் (அந்த வாழ்த்துரை மட்டும் முடிந்தால் தனி பதிவாக பின்னர் பகிர்கிறேன் )
***

சுகுமார் சுவாமிநாதன் - நம் ரசனைக்கேற்ப அழகாக படம் வரைந்தார். பல முறை சின்ன சின்ன மாறுதல் சொன்ன போதும் சிறிதும் மனம் கோணாமல் வரைந்த தம்பி சுகுமார் இந்த துறையில் அடைய போகும் உயரங்கள் மிக அதிகம் என்பது நிச்சயம் தெரிகிறது !
***

புத்தகத்தின் பதிப்பாளர் நம் நண்பராகவும் இருப்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை ! அதுவும் அகநாழிகை வாசு போல ஒரு மென்மையான மனிதர் இப்புத்தகம் வெளியிடுவது மிக மகிழ்ச்சியாக .உள்ளது. ( மணிஜி உங்களின் பங்களிப்பையும் மறக்க முடியாது !)

ஒற்று பிழைகளை சரி செய்யவே அகநாழிகை வாசுவிற்கு " தாவு " தீர்ந்து விட்டது. கணினியில் எழுதுவதால் ஏராள பிழைகள் வருகிறது. தனது புதிய கடை திறப்பு விழா நடுவிலும் மிக பொறுப்புடனும், பொறுமையுடனும் இதை செய்த தோழர் அகநாழிகை வாசுவிற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்
***
மிக குறைவான நேரத்தில் இதை புத்தகமாக அச்சிட்டு உதவும் பாலகணேஷ் - இந்த விழாவில் வெளியாகும் 3 புத்தகங்களின் அச்சு வேலையும் இவர் பொறுப்பே. அண்ணன் இருக்கிறார் என்பதால் - புத்தகம் எப்போது பிரிண்ட் ஆகும் - சரியான நேரத்தில் வந்து சேருமா போன்ற கவலைகள் இன்றி ஹாயாக இருக்கிறேன்
***
புத்தகத்தை வெளியிடுவது கேபிள் சங்கர். முதல் பிரதி பெற்று கொள்வோர் - ஜாக்கி சேகர் மற்றும் திருமதி. பத்மஜா நாராயணன்

இந்த தொடர் முதன்முதலில் வீடுதிரும்பலில் வரும்போதே - " இது புத்தகமாக போடணும் தலைவரே; சூப்பர் கான்செப்ட்டா இருக்கு ; எல்லாரும் அவர் பெரிய ஆள் ஆனார் - இவர் பெரிய ஆள் ஆனார்னு சொல்லுவாங்க - நீங்க உங்க கதையை சொல்றீங்க பாருங்க - அங்கே தான் இந்த புக்கு நிக்கும் " என்பார். சொன்னதோடு மட்டுமல்லாது அப்போதே அகநாழிகை வாசுவிடம் " இதை புக்கா போடுங்க " என பரிந்துரைத்து விட்டார். அப்படி அவர் சொன்னது கூட வாசு சொல்லித்தான் எனக்கு தெரியும் ! கேபிள் யூ ஆர் கிரேட் !

இந்த புத்தகத்துக்கான விதையை முதலில் தூவிய கேபிள் சங்கர் இப்புத்தகத்தை வெளியிடுவது எத்தனை பொருத்தம் ! இன்று அவர் ஒரு இயக்குனராக மாறியபோதும் - எளிமை மாறாமல் - " தலைவரே - இந்த புக்கு ரிலீசுக்கு எங்கே இருந்தாலும் வந்துடுவேன் " என்று சொல்லி மகிழ வைத்தார்.
***

"கேபிள் சங்கர் வெளியிட ஜாக்கி சேகர் பெற்று கொள்கிறார்" என்பது கேட்கவே அழகாக இருக்கிறது !

ஜாக்கி - மனதில் உள்ளதை அப்படியே எழுதுவதில் வித்தகர். Straight from heart -பேச்சு மற்றும் எழுத்து இவருடையது

ஸ்நேஹமான , எந்த ஒப்பனையுமில்லா எழுத்துக்கு சொந்தக்காரரான ஜாக்கி - மிக எளிய எழுத்தை கொண்ட - இப்புத்தகத்தை பெற்று கொள்கிறார்.
***

பத்மஜா நாராயணன் - கவிஞர் - அனைவரிடமும் மிக ஸ்நேகமானவர். குடும்பம் , வேலை, குழந்தைகள் என அனைத்தையும் பார்த்து கொண்டு - தனது ரசனைக்கும் நேரம் ஒதுக்கும், சென்னையில் நடக்கும் எந்த ஒரு விழாவையும் தவற விடாமல் கலந்து கொள்ளும் இவரை எப்போதும் ஆச்சரியமாக பார்ப்பேன். ஜாக்கியுடன் முதல் பிரதியை பெற்று கொள்பவர் இவர் என்பதில் பெரும் மகிழ்ச்சி !

(இவரது பேரை பரிந்துரைத்த - " இதழில் எழுதிய கவிதைகள்" தொகுப்பை இதே நாளில் வெளியிடும் தம்பி சங்கவிக்கு மனமார்ந்த நன்றி! புத்தகத்தை பலரிடம் சென்று சேர்க்க சங்கவி எடுக்கும் முயற்சிகள் அசத்தல் ரகம் !   )
***

வெற்றிக்கோடு புத்தகம் - முதல் 10 பகுதிகள் மட்டும் தான் ப்ளாகில் வந்தது. அப்போது கிடைத்த வரவேற்பை பார்த்து விட்டு " முழுக்க எழுதிட்டா எல்லாரும் இங்கேயே படிச்சு முடிச்சுடுவாங்க " என மீதத்தை ப்ளாகில் வெளியிடாமல் வைத்து விட்டேன் :))

முதல் 10 பகுதிகள் ப்ளாகில் வாசித்த நண்பர்கள் மீதம் பகுதிகள் புத்தகத்தில் தான் வாசிக்கணும் !
***

முக்கிய விஷயம்: ஒவ்வொரு பதிவரும் மிக விரும்பும் விஷயம் பின்னூட்டம் தான் ! சுவாரஸ்ய பின்னூட்டங்கள் தரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இப்புத்தகத்தின் பகுதிகள் வீடுதிரும்பலில் வெளியான போது நண்பர்கள் இட்ட பல பின்னூட்டங்கள் - அவர்களின் பெயர் மற்றும் வலைத்தள முகவரியுடன் புத்தகத்தின் இறுதியில் வெளியாகிறது ! உங்கள் பெயரும் - வலைத்தளமும் கூட அதில் இருக்கலாம் ! புத்தகத்தில் கண்டு மகிழுங்கள் !
***

புத்தகத்தை இலவசமாய் பெற்றால் - அதன் மதிப்பு தெரியாது - இலவசமாய் வந்த புத்தகத்தை பலர் படிக்காமலும் போகலாம். எனவே முதல் இரு நாட்களில் 50 ரூபாய் மட்டும் தந்து புத்தகம் வாங்கி வாசியுங்கள் ! உங்கள் நண்பனின் வேண்டுகோள் இது !
***

செப் 1 - ஞாயிறு மதியம் 3 மணிக்கு புத்தக வெளியீடும் - அதற்கு முதல் நாள் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அகநாழிகை புத்தக கடையில் நூல் குறித்த விமர்சன கூட்டமும் நடை பெற உள்ளது. இந்த இரு இடங்களிலும் புத்தகம் 50 ரூபாய்க்கு கிடைக்கும்.




நூல் விமர்சன கூட்டம் மற்றும் புத்தக வெளியீடு இரண்டு நிகழ்வுக்குமோ, அல்லது குறைந்தது ஒரு நிகழ்வுக்கேனும் நீங்கள் வரவேண்டும் என்பது உங்கள் நண்பனின் எதிர்பார்ப்பு !
***

பதிவர் திருவிழாவில் புத்தகம் வெளியாகும் விபரங்கள்

தேதி & நேரம் - செப் 1, 2013 ஞாயிறு மாலை 3 மணிக்கு !

முகவரி -

இசை கலைஞர்கள் சங்கம்
கமலா தியேட்டர் அருகில்
வடபழனி, சென்னை

அவசியம் விழாவிற்கு வருக; திரும்ப செல்லும்போது கையில் இப்புத்தகத்தையும், நெஞ்சில் விழா குறித்து ஏராள நினைவுகளையும் எடுத்து செல்வீர்கள் என நம்புகிறேன்..
****
புத்தகத்தின் அட்டை மற்றும் விழா அழைப்பிதழ் இரண்டையும் முக நூல் மற்றும் கூகிள் பிளஸ்சில் பகிர, இரு இடங்களிலும் நண்பர்கள் தரும் உற்சாக வரவேற்பு நான் கனவிலும் நினைக்காத ஒன்று !

எவ்வளவு நண்பர்கள் ! எத்தனை அன்பு !

ஒரு நண்பனின் துயரத்தில் பங்கேற்க, ஆறுதல் சொல்ல எத்தனையோ பேர் கிடைக்கலாம் ஆனால் ஒரு நண்பனின் சிறு முன்னேற்றத்தை கண்டு ஆனந்தம் அடையும் நண்பர்கள் கிடைக்கப் பெற்றோர் பாக்கியவான்கள்

நான் பாக்கியவான் !

Saturday, August 24, 2013

சென்னையில் இன்று 2 முக்கிய விழா ..வாங்க பேசலாம் !

டந்த 2 வாரங்களாக எனது நாளின் பெரும்பாலான நேரத்தை எடுத்து கொண்டது கம்பனி சட்டம் குறித்து இன்று நடக்க உள்ள இந்த விழா தான்.


நிகழ்வில் ஒரு ஆர்கனைசர் என்பதுடன் - புதிய தலைப்பில் பேச வேண்டும் என்ற இரட்டை பொறுப்பு.  ஒழுங்காய்  தூங்கி  கொஞ்ச நாள் ஆச்சு.

எங்கள் குழுவின் உழைப்பிற்கு கிடைத்த மிக பெரும் வெற்றி...விழா துவங்க  4 நாளுக்கு முன்பே, 150 பேர் அமரும்  ஹால் முழுதும் புக் ஆகி விட்டது. அருகிலேயே உள்ள இன்னொரு ஹால் புக் செய்து - அங்கு லைவ் ரிலே செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.  தற்போதைய நிலவரப்படி இந்த ஹாலும் நிரம்பி விட்டது !

ஓரிரு ஆங்கில பத்திரிக்கைகளிலும் - தந்தி டிவி செய்திகளிலும் இந்த விழா குறிப்புகள் நாளை இடம்பெறும் !

**************

மாலை நடக்கும் விழா உங்களுக்கும் தொடர்புள்ள ஒன்று !

அகநாழிகை வாசு மற்றும் மணிஜி துவங்கும் புத்தக கடை திறப்பு விழா இன்று .. மனுஷ்ய புத்திரன், தமிழச்சி தங்கபாண்டியன், பாஸ்கர் சக்தி ஆகியோர் பேசுகிறார்கள்

வாசு மற்றும் மணிஜி இருவருக்குமே நண்பர்கள் மிக அதிகம் . எனவே இன்று மாலை நீங்கள் அகநாழிகை பதிப்பகம் வந்தால் - புத்தகங்களை மட்டுமல்ல சென்னையின் ஏராள பதிவர்களையும்   ஒருங்கே பார்க்கலாம்.


அண்ணா சாலையில் சைதை  - பேருந்து நிலையம் மிக அருகில் உள்ளது இந்த புத்தக கடை !

மாலை அகநாழிகை விழாவில் சந்திப்போம் நண்பர்களே !

Thursday, August 22, 2013

பதிவர்களை களாய்க்கும் ஜாலி புகைப்படங்கள் !

நண்பர்களே !

சென்ற ஆண்டு பதிவர் திருவிழாவில் எடுக்கப்பட்ட படங்கள் இவை

சில ஏற்கனவே வீடுதிரும்பலில் வெளியானது. இன்னும் சில படங்கள் முதல் முறை உங்கள் பார்வைக்கு

படங்களுக்கு - எண்கள் தரப்பட்டுள்ளன !

பின்னூட்டத்தில் பட எண்களை குறிப்பிட்டு ஜாலியாய் கலாயுங்கள் ! என்ஜாய் !!

படம் எண்  -1

படம் எண் -2

படம் எண் -3

படம் எண் -4

படம் எண் -5
படம் எண் -6

படம் எண் -7

படம் எண் -8

படம் எண் -9




செப்டம்பர் 1, பதிவர் திருவிழாவில் கலந்து கொள்வோர் பெயர் பட்டியல் இங்கு உள்ளது. உங்கள் பெயர் அதில் உள்ளதா என சரி பார்க்கவும். கலந்து கொள்ள விருப்பம் உள்ள உங்கள் பெயர் அதில் இல்லையெனில் அங்கேயே பின்னூட்டம் மூலமோ, மெயில் மூலமோ தெரியப்படுத்துங்கள் ! நன்றி !

Tuesday, August 20, 2013

பதிவர் திருவிழா அழைப்பிதழ்..அனைவரும் வருக ! ஆதரவு தருக !

நண்பர்களே,

செப்டம்பர் 1, 2013 - பதிவர் திருவிழாவிற்கான அழைப்பிதழ் இதோ,,,,



புத்தக வெளியீட்டில் நமது புத்தகம் ஒன்றும் இடம் பெற்றிருப்பதை கவனித்திருப்பீர்கள். இது பற்றி தனியே விரிவான பதிவொன்று விரைவில் எழுதுகிறேன்.

விழாவில் பதிவுலக நண்பர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளவும். தங்கள் வருகையை விரைவில் உறுதி படுத்தவும் !
***********

சென்ற ஆண்டைப் போலவே ஒருநாள் முழுவதும் நடக்கவிருக்கும் இவ்விழாவை மிகவும் சிறப்பானதாக எடுத்துச் செல்ல பதிவர்கள் பல குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த பதிவர் சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைவதற்கு ஏதுவாக விருப்பப்படும் பதிவர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கலாம் என கடந்த வார கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.நிர்வாகக் குழுவின் முறையான வங்கிக் கணக்காக பதிவர் அரசன் அவர்களின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி வருகிறோம்.

நன்கொடை கொடுக்க விரும்பும் பதிவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்கணக்கில் பணத்தைச் செலுத்தலாம்.பணத்தை செலுத்திவிட்டு கீழ்க்கண்ட அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பணம் செலுத்திய விபரத்தையும் உங்கள் சுய விபரத்தையும்(வலை முகவரி,மின்னஞ்சல் முகவரி) தெரியப்படுத்துங்கள். பணம் வந்து சேர்ந்ததும் tamilbloggersinfo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து பெற்றுக்கொண்டோம்.. நன்றி.. என்ற தகவல் வந்து சேரும்.

First Name: Raja
Last Name: Sekar
Display Name: RAJA. S
Account Number: 30694397853
Branch Code: 006850
CIF No. : 85462623959
IFS Code : SBIN0006850
MICR Code : 600002047
Branch : SBI Saligramam Branch
Address: 49, Arcot Road, Saligramam , Chennai, City Pin - 600093
Contact :044- 24849775

தொடர்புக்கு

அரசன்(ராஜா) அலைபேசி எண் - 9952967645

நன்றி..

ஒருங்கிணைப்புக்குழு ,
தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்

Saturday, August 3, 2013

பதிவர் திருவிழா - இன்னா நடக்க போகுது நைனா - சில கோரிக்கைகள் !

கொஞ்ச நாட்களாக சற்று போர் அடிக்கிற மாதிரி தோன்றிய பதிவுலகம் மீண்டும் பர பரப்பாகியிருக்கிறது

ஒரே நேரத்தில் 3 தொடர் பதிவுகள் சென்று கொண்டிருக்கின்றன -

கணினி - முதல் அனுபவம்
முதல் பதிவு தந்த மகிழ்ச்சி
தியேட்டரில் காதல் அனுபவம்

...இப்படி பலரும் தொடர் பதிவு எழுதுகிறார்கள்.

இதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று - சென்னையில் செப் 1- நடக்க இருக்கும் பதிவர் திருவிழா என்று தோன்றுகிறது



விழாவுக்கு இன்னும் 1 மாதம் இருக்கும் நிலையில் 100 க்கும் மேற்பட்ட பதிவர்கள் இதுவரை தங்கள் வருகையை உறுதி செய்து விட்டனர். இம்முறை 200 க்கும் மேற்பட்ட நண்பர்கள் கலந்து கொள்வார்கள் என்பது நிச்சயம் ! (இது சென்ற முறையை விட 50 % அதிகம் !)

பதிவர் சந்திப்பு குறித்து சில கோரிக்கைகள் உங்கள் முன்பு வைக்கிறோம்

1. வருகையை உறுதி செய்க !

கடந்த முறை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள், முறையாக தங்களின் வருகையை மின்னஞ்சல் வாயிலாக உறுதி படுத்திய பின்னரே வருகை தருவோரின் பட்டியலில் அவர்களின் பெயரை இணைத்துக்கொண்டோம். அதைப் போலவே இந்த முறையும் பதிவர்கள் தங்களின் வருகையை தயவு கூர்ந்து மின்னஞ்சலில் உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.கடந்த முறை பதிவு செய்தவர்கள் தவிர நிறைய பதிவர்கள் சந்திப்பிற்கு வந்ததால் அவர்களை சரியான முறையில் உபசரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.எனவே வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள். உணவு மற்றும் உபசரிப்பு போன்றவை வருகைப் பதிவு செய்த பதிவர்களை வைத்தே தீர்மானிக்கப் படுவதால் தங்களின் வருகையை அவசியம் மின்னஞ்சல் வாயிலாக உறுதிபடுத்தவும்.கீழ்க்காணும் பதிவர்களை தொடர்பு கொண்டு வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

- ஆரூர் மூனா செந்தில்
· அஞ்சாசிங்கம் செல்வின்
· சிவக்குமார் – மெட்ராஸ்பவன்
· பிரபாகரன் பிலாஸபி(சென்னை)
· தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை
· சதீஷ் சங்கவி – கோவை
· வீடு சுரேஷ்குமார் – திருப்பூர்
· கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி
· தனபாலன் - திண்டுக்கல்

2. விழா சிறக்க தங்களின் பங்களிப்பு .... நன்கொடை வடிவில் :

இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது.சென்றமுறை மக்கள் சந்தை கொஞ்சம் உதவியது.இந்த முறை அப்படியேதும் வாய்ப்பு இல்லை என்றேத் தெரிகிறது.. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பதிவர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்..பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்து தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.

3. பதிவர்கள் நூல் வெளியிடலாம் !

கடந்த ஆண்டு நடந்த பதிவர் சந்திப்பில் பதிவர் சசிகலா அவர்களின் 'தென்றலின் கனவு' கவிதை நூல் வெளியிடப்பட்டது.அதே போல் இந்த வருடமும் பதிவர்கள் தங்களின் நூலை இந்த நிகழ்வில் வெளியிடலாம். அவ்வாறு நூல்வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 05.08.2013 க்குள் 9894124021 இந்த எண்ணிலோ அல்லது kavimadhumathi@gmail.com இந்த மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். குறிப்பிட்ட தேதிக்குள் சொன்னால் மட்டுமே நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படும் என்பதால் விரைவில் உறுதி செய்யுமாறு வேண்டுகிறோம்.

(கோவை நண்பர் சங்கவி அவர்களின் கவிதை நூல் வெளியிடுவது உறுதியாகியிருக்கிறது; இன்னும் சில "பிரபல பதிவர்களின்" புத்தகங்கள் வெளி வர போகிறது. இதற்கான ஏற்பாடுகள் துவங்கி விட்டன. விபரங்கள் விரைவில்.... )

4. பதிவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சி


ஒரு வலைப்பதிவராக மட்டும் நாம் அறியும் பதிவரின் இதர திறமைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில பதிவர்கள் தங்களின் திறமையை நிறைய மேடைகளில் வெளிப்படுத்தி வரலாம்.சில பதிவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்த மேடைகள் இல்லாமல் இருக்கலாம்.எனவே பதிவர்களின் மற்ற திறமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கோடு இந்நிகழ்ச்சி ஏற்பாடு ஆகி வருகிறது.அதாவது பாடும் திறமை, நடிக்கும் திறமை, நடனம் ஆடும் திறமை, பல குரலில் பேசி அசத்தும் திறமை, பதிவர்கள் ஒரு குழுவாக சிறு நாடகம் அமைப்பது என பதிவர்கள், தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருத்தல் நலம்.

இதில் பங்கேற்கும் பதிவர்கள் வரும் 10.08.2013 க்குள் தங்கள் விபரங்களை 9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

***********
நண்பர்களே ... செப் 1, 2013 - உங்கள் ஒவ்வொருவருக்கும் பல புதிய நட்புகள் கிடைக்க போகிற நாள் - வாருங்கள் ! காத்திருக்கிறோம் !

Thursday, August 1, 2013

வலைபதிவர் மாநாடு - சென்ற ஆண்டு Vs இந்த ஆண்டு - விரிவான லிஸ்ட்

செப்டம்பர் 1 - வலைபதிவர் மாநாடுக்கு தொடர்ந்து நண்பர்கள் தங்கள் வருகையை உறுதி செய்த வண்ணம் உள்ளனர் . சென்ற ஆண்டு வருகை தந்த நண்பர்கள் மற்றும் இந்த ஆண்டு இதுவரை உறுதி செய்த நண்பர்கள் பட்டியல் இது

இந்த ஆண்டு விழாவிற்கு வருபவர்கள் விரைவில் தங்கள் வருகையை உறுதி செய்யுமாறு கோருகிறோம் !

சென்ற ஆண்டு  வருகை தந்த நண்பர்கள்



சி.பி.செந்தில்குமார்(அட்ரா சக்க)ஈரோடு 
ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்) 
குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை

மென்பொருள்பிரபு,சென்னை 
ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
ராமு,சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை 
மாடசாமி(வானவில்)சென்னை
அண்ணல் (அண்ணல் பக்கங்கள்)சென்னை
இரா.தெ.முத்து(திசைச்சொல்)சென்னை 
வில்லவன்கோதை(வேர்கள்)சென்னை 

ரமேஷ்(சிரிப்புபோலீஸ்)சென்னை 

குகன்(குகன் பக்கங்கள்)சென்னை 
ஈகைவேந்தன்(என் மனவானில்)சென்னை 
உங்களுள் ஒருவன் (இந்த உலகம் எங்கே செல்கிறது?சென்னை
சுப்புரத்தினம்(தமிழ் மறை தமிழ் நெறி)சென்னை
கிராமத்து காக்கை ,சென்னை
சிவலிங்கம்(போட்டோசாப் பாடம்)சென்னை
சேட்டைக்காரன் ,சென்னை
ருக்மணி சேஷசாயி(பாட்டி சொல்லும் கதைகள்)சென்னை  
மணி(ஆயிரத்தில் ஒருவன்) சென்னை
குருபிரசாத்(இந்தியன் குரல்)சென்னை  
பொன்.வாசுதேவன் (அகநாழிகை)
சினேகன் அசோக்(அசோக்கின் கிறுக்கல்கள்) - ஸ்ரீபெரும்புதூர்

மயில்வாகனா (முல்லைவனம்) - செங்கல்பட்டு

நா.சுரேஸ் குமார்(அறிவுக்கடல்)காஞ்சீபுரம்சௌந்திரராஜன்(சென்னை வானொலியில்)கல்பாக்கம் 
கண்மணிராஜன்(கண்மணி அன்போடு)சிவகாசி 

ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி 
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி




***********
இந்த வருடம் இதுவரை சென்னை பதிவர் சந்திப்பிற்கு வர சம்மதம் தெரிவித்துள்ள பதிவர்கள் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. எண்ணிக்கை கூடும்போது இப்பட்டியல் புதிதாக பகிரப்படும்:

1. ஜோதிஜி திருப்பூர்
2. கவிதைவீதி செளந்தர்
3. சரவணன்(ஸ்கூல் பையன்)
4. ரூபக்ராம்
5. வேடியப்பன்(டிஸ்கவரி புக் பேலஸ்)
6. சசிகலா (தென்றலின் கவிதைகள்)
7. ரஹீம் கஸாலி
8. சிராஜுதீன்
9. காணாமல் போன கனவுகள் ராஜீ
10. கேபிள் சங்கர்
11. தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை
12. கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி
13. தனபாலன் - திண்டுக்கல்
14. வீடு சுரேஷ்
15. சசிமோகன்
16. இரவுவானம் சுரேஷ்
17. நாய் நக்ஸ் நக்கீரன்
18. சின்ன சின்ன சிதறல்கள் அகிலா,
19. நிகழ்காலம் எழில்
20. கலாகுமரன்

21. கோவை ஆவி
22. உலகசினிமா பாஸ்கரன்
23. சுட்டிமலர்
24. கோவை கமல்
25. கோவை சதிஸ்
26. வெண்பா சுஜாதா
27. கோவை நேரம் ஜீவா
28. கோவை சக்தி
29. இப்படிக்கு இளங்கோ
30. ஒட்டக்கூத்தன்

31. வா.மு.முரளி
32. கோவை கோவி
33. சாமக்கோடங்கி பிரகாஷ்
34. கோவை ராமநாதன்
35. சதீஸ் சங்கவி
36. சிபி செந்தில்குமார்
37. வீரகுமார்
38. குருவை மாதேஸ்
39. குணா
40. சேலம் தேவா

41. கோகுலத்தில் சூரியன் வெங்கட்
42.கிராமத்துக் காக்கை
43. விஜயன் துரைராஜ் கடற்கரை
44. கருத்து கந்தசாமி
45. செல்லப்பா (‘இமயத்தலைவன்’) (‘செல்லப்பா தமிழ் டயரி’)
46. முகமது சபி சக்கரக்கட்டி
47. அ.சிவசங்கர்
48. தங்கம் பழனி
49. முனைவர் இரா.குணசீலன்
50. சைதை அஜீஸ்

51. குடந்தையூர் ஆர். வி. சரவணன்
52. முரளிக்கண்ணன் மதுரை
53. பெருங்குளம் ராமகிருஷ்ணன்
54. சசிகலா திருவண்ணாமலை
55. ஜீவன் சுப்பு,
56. சிவகாசிகாரன் ராம் குமார்,
57. சதீஸ் செல்லதுரை
58. கடல் பயணங்கள் சுரேஷ் குமார்
59. சுப்புரத்தினம்
60. ராகவாச்சாரி

61. ரேகா ராகவன்
62. ஆதிமனிதன்
63. சமீரா
64. நம்பி
65. வழிப்போக்கன் ராஜேஷ்
66. ரஞ்சனி நாராயணன்
67. பழனி கந்தசாமி(மன அலைகள்)
68. புலவர் இராமானுஜம்
69. சென்னை பித்தன்
70. கவிஞர் மதுமதி
71. பாலகணேஷ் (மின்னல்வரிகள்)
72. மோகன்குமார்(வீடு திரும்பல்)
73. கவியாழி கண்ணதாசன்
74. பட்டிகாட்டான் ஜெய்
75. டி.என்.முரளிதரன்
76. கே.ஆர்.பி.செந்தில்
77. ஆரூர் மூனா செந்தில்
78. அஞ்சாசிங்கம் செல்வின்
79. அரசன் ( கரைசேரா அலை)
80. சீனு (திடங்கொண்டுபோராடு)

81. பிலாசபி பிரபாகரன்
82. சிவகுமார்(மெட்ராஸ்பவன்)
83தூயா 

*********
அண்மை பதிவுகள் :

வெறும் 6 லட்சம் முதலீட்டில் 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி

வானவில் - கனகா பேட்டி - பூங்காத்து திரும்புமா -சென்னை IIT



தொல்லை காட்சி - கேடி பாய்ஸ் - அல் கேட்ஸ் - சில்லுன்னு ஒரு காதல்
Related Posts Plugin for WordPress, Blogger...