Thursday, January 15, 2015

"ஐ"- விமர்சனம்



ஷங்கரின் படங்களில் ஜென்டில் மேன், இந்தியன், எந்திரன் போன்றவை - "அட்டகாசம்" வகையில் சேரும் என்றால், ஜீன்ஸ்,  பாய்ஸ் போன்றவை அதற்கு நேர் எதிர் கேட்டகரி. இந்த  இரண்டு வகையிலும் சேராத மீடியம் கேட்டகரி படங்கள் சிவாஜி, காதலன்..  இந்த மீடியம் படங்களில் இன்னொரு புது வரவு - ஐ !

இந்த முறை  காதல் +  பழி வாங்கல் என்ற இரண்டு விஷயங்களை வைத்து திரைக்கதை செய்துள்ளார் ஷங்கர்



அந்நியனில் ஹீரோ சாதாரண மக்களை சின்ன சின்ன விஷயத்துக்காக கொலை செய்வார்.. எந்த முன் விரோதமும் இன்றி பெரிய தவறும் செய்யாத மக்களை போய் போட்டு தள்ளுகிறாரே என ஒரு விமர்சனம்  இருந்தது. அதை இம்முறை சரி செய்து விட்டார் ஷங்கர். பழி வாங்கும் ஒவ்வொருவருக்கும் வலுவான காரணம் சொல்லப்பட்டுள்ளது

பிளஸ்

. விக்ரம்...என்னவொரு உழைப்பு,, அர்ப்பணிப்பு.. தமிழில் மட்டுமல்ல.. இந்தியாவில் இந்த  அளவு   மெனெக்கெட எந்த நடிகரையும் நினைக்க .முடியவில்லை. பாடி பில்டராக சிக்ஸ் பேக்கில் முதல் பாதியில் அசத்துகிறார் என்றால் 40 கிலோ எடையுடன் வரும் ஒரு சில காட்சிகள் திக்கென்று இருக்கிறது.. முதுகு வளைந்த பாத்திரம் தான் விக்ரம் என்றே மனம் ஒட்ட முடியாமல் போகிறது...

பழி வாங்கும் விதம் ஒவ்வொன்றும் ஷங்கர் பாணியில் வித்யாசமாய் இருப்பது ரசிக்க வைக்கிறது

பின்னணி இசை மிக நன்று ; பாடல்கள் ஓரிரண்டு மட்டுமே ஓகே

சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் Differennt கான்செப்ட் - சைக்கிள் சண்டை, கண் மற்றும் கையை கட்டிய படி - ஒன்று வெயிட் லிப்டர்கள் உடன் மற்றொன்று - வித்யாசமாக யோசித்துள்ளனர்

நிகழ் காலத்திற்கும் - கடந்த காலத்திற்கும் கதை மாறி மாறி பயணிப்பதால் - ரசிக்க முடிகிறது. இவ்வாறின்றி நேரே சொல்லப்பட்டிருந்தால் ரசித்திருக்க வாய்ப்பே இல்லை

மைனஸ்

நீளம்....நிச்சயம் 10-15 நிமிடம் சுருக்கலாம்

முக்கிய வில்லனை எளிதில் ஊகிக்க முடிகிறது

இந்திய நடிகைகள் நூற்றுக்கணக்கில் இருக்க எமி ஜாக்சன் என்ற வெளி நாட்டவரை தமிழ் பேசும் ஹீரோயின் ஆக்கும் அவசியம் என்ன என்ற உறுத்தல் இருப்பினும் - படம் முடியும் போது அவர் மீது  பெரிய குறை இல்லை

விக்ரம்- எமி காதல் ரொம்ப அழுத்தமாக இல்லை - நம்பும் படியும் தான்

பட்டையை கிளப்பும் பாடல்கள் இல்லை ..பெரும் ஏமாற்றம் ! மெர்சல் ஆயிட்டேன் மட்டுமே மாஸ் ஹிட் ! என்னோடு நீ இருந்தால் - வருகிற இடம் - கதையை இழுக்கவே வைக்கிறது. யோசிக்காமல் படத்தில் அப்பாடலை கட் செய்து விடலாம்

தியேட்டர் கார்னர்

தஞ்சை சாந்தி தியேட்டரில் அண்ணன்- அக்கா என 3 குடும்பங்கள் பார்த்தோம். எங்கள் குடும்ப இளைஞர்கள்- இளைஞிகளுக்கு படம் நிரம்ப ..பிடித்திருந்தது..

5 நாள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆனதால் படம் தப்பி .விடும்..      இன்னொரு முக்கிய காரணம் - அண்மையில் -கடந்த சில  மாதங்களில் வந்த படங்களை விட நிச்சயம் பெட்டர் என்பதால் படம் தியேட்டருக்கு மக்களை வர வைத்து விடும்

இருப்பினும் இந்தியன், ஜென்டில் மேன் லெவலுக்கு எதிர் பார்த்து சென்ற  எனக்கு சற்று ஏமாற்றமே !

மொத்தத்தில் விக்ரம் உழைப்பு + ஷங்கர் திரைக்கதைக்காக ஒரு முறை பார்க்கலாம் !
Related Posts Plugin for WordPress, Blogger...