Thursday, September 29, 2011

வானவில் : பிறைசூடன்:ரௌத்ரம்: குருநானக் கல்லூரி

பார்த்த படம் : ரௌத்ரம்

இந்த வருடம் ஜீவா காட்டில் மழை. ஒன்பது மாதங்களில் சிங்கம் புலி, கோ, ரௌத்ரம், வந்தான் வென்றான் என நான்கு படங்கள் ரிலீஸ் ஆகி விட்டன. ரௌத்ரம் படம் நல்லா இருக்கு என்று கூகிள் பஸ்ஸில் மணிஜி சொன்னார். அதை நம்ப்ப்பி பார்த்து நொந்து போயிட்டேன். (மணிஜி. அடுத்த தடவை நேரில் பார்க்கும் போது இருக்கு ஓய்...) கெட்டதை தட்டி கேட்கும் இளைஞன் என்கிற "சத்யா" காலத்து கதை.

பல தடங்கலுக்கு பின் தங்கை கல்யாண நிச்சய தார்த்தம் நடக்கும் நேரம், வெளியே சென்று மாப்பிள்ளை தந்தையை கூட்டி வர போகும் ஹீரோ, அவரை கூப்பிடாமல் வழியில் சண்டையில் இறங்கி கத்தி தூக்குவதெல்லாம் டூ மச். நகைச்சுவைக்கு ஆள் இல்லாமல் படம் "ராவாக" உள்ளது. இத்தகைய ரவுடி ஹீரோவை எப்படி பெண்கள் விரும்புவதாக காட்டுகிறார்களோ? பாடல்களும் தேற வில்லை. கடைசியில் ஸ்ரேயாவை கொன்று படத்தை முடிக்கிறார்கள். (இந்த முடிவு தற்போது மாற்ற பட்டு விட்டதாக அறிகிறேன்) கொடுமைடா சாமி ! தப்பி தவறி பார்த்துடாதீங்க !


ஆனந்த் எஸ். எம்.எஸ்.  கார்னர் 

3 Cardinal Rules of life:


1. Make peace with your past so that it wont disturb your present.
2. What other people think of you is none of your business.
3. Time heals almost everything. Just give time.

டிவி பக்கம் : பிறைசூடன் நினைவுகள்

ஜெயா டிவியில் தினம் இரவு பத்து முதல் பத்தரை வரை திரை உலகை சார்ந்த யாரேனும் ஒருவர் தங்கள் அனுபவங்களை பகிர்கிறார்கள். எப்போதாவது தான் பார்ப்பேன். ஆனால் பார்த்த பல முறை நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் !! எஸ். பி. முத்துராமன், எம். எஸ். வி. இப்படி பலர் பேசும் போதும் அந்த காலத்து ஈகோ, சண்டை என நிறைய கேள்விப்படாத விஷயம் அறிய முடியும்.இந்த வாரம் கவிஞர் பிறை சூடன் இப்படி பல சம்பவங்கள் பகிர்ந்தார். உதாரணத்திற்கு ஒன்று: பொம்முக்குட்டி அம்மா படத்தின் ஒரு பாடலுக்கு இளைய ராஜா மெட்டு போட்டு, கேசட்டில் தந்து விட்டாராம். பிறை சூடனிடம் டேப் ரிக்கார்டர் இல்லை. அக்கம் பக்கம் வீடுகளில் கேட்க, யாரும் டேப் இல்லை என்றோ, ரிப்பேர் என்றோ கூறி விட்டனராம். பின் அவர் மனைவி யாரிடமோ கெஞ்சி கேட்க, " வீட்டினுள் வைத்து Tape போடுகிறோம். வெளியில் நின்று கேட்டு கொள்ளுங்கள்" என சொல்லி விட, அப்படி ஒரு முறை மட்டும் கேட்டு அந்த பாட்டை எழுதினாராம் பிறை சூடன். பின் டேப் ரிக்கார்டர் இல்லாமல் பிழைப்பு நடத்த முடியாது என இருக்கும் பணம் முழுதும் சேர்த்து ஒரு டேப் வாங்கி வந்திருக்கிறார்.

அன்று அந்த பாடலுக்கு பணம் வாங்க செல்ல, டைரக்டர் பாசில் "நீ டேப் இல்லாமல் கஷ்டபடுறே போலிருக்கே, அதான் உனக்கு டேப் வாங்கினேன்" என டேப் கொடுத்திருக்கிறார். சரி சம்பளத்திற்கு பதில் டேப் குடுத்து விட்டார்கள் என வருத்ததோடு வீடு வந்திருக்கிறார். தான் டேப் வாங்கிய கடையில் சென்று அதை எடுத்து கொண்டு பணம் தர சொல்லி கேட்க அவர்கள் மறுத்து விட்டனர். பின் பாசில் அந்த பாடலுக்கான பணமும் தனியாக தந்து விட்டாராம் !

நம்மை மகிழ்விக்கும் பாடலாசிரியர்கள் வாழ்க்கை எத்தனை கொடுமையாக உள்ளது !

விவாதம் கிளப்பிய பதிவு 

சூப்பர் சிங்கர் பைனல் குறித்த பதிவு நிறைய எதிர் கருத்துகளை எதிர் கொண்டது. வாதம், விவாதம், ஆதரவு, என பல்வேறு உணர்வுகளை சந்தித்தது. அந்த பதிவின் பின்னூடங்களை நீங்கள் படிக்கா விடில், ஒரு முறை இங்கு சென்று படித்து பாருங்கள்.நாமளும் எப்ப தான் ரவுடி ஆகறது? இது மாதிரி சில சண்டைகள் இருந்தா தான் வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கும்.

வலை சரத்தில் நமது ப்ளாகை இன்று வித்தியாமான முறையில் அறிமுகம் செய்துள்ளார் மிடில் கிளாஸ் மாதவி. நன்றிங்கோ ! 

சென்னை: ஹால் டிக்கட் வாங்க பெற்றோரை அழைக்கும் கல்லூரி

சென்னை குருநானக் கல்லூரியில் ஹால் டிக்கட்டை மாணவர்களிடம் நேரடியே தருவதில்லை. பெற்றோரை கல்லூரிக்கு வர சொல்லி அவர்கள் முன்பு தான் தருகிறார்கள். ஏன் என விசாரித்த போது, நிறைய மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஸ்கூட் அடித்து விட்டு, ஏன் எழுதலை என்றால், கல்லூரியில் ஹால் டிக்கட் தரலை என வீட்டில் சொல்லி வந்திருக்கிறார்கள். இதனால் தான் இப்படி ஒரு ஏற்பாடு ! அதுக்கும் நம்ம பசங்க பெற்றோர் இல்லாமல், அண்ணன், கசின் என வேறு ஏற்பாடுகளும் பண்ணிக்கிட்டு தான் இருக்காங்க !!

சம்பவம் - அந்த ஒரு ரன்

மனைவி, குழந்தையுடன் எங்கோ வெளியே கிளம்பி செல்லும் போது எங்கள் ஏரியாவில் ஒரு கிரிக்கெட் டோர்ணமன்ட் நடப்பது தெரிந்து சற்று நின்று பார்க்க ஆரம்பித்தோம். கடைசி ஓவர், ஜெயிக்க தேவை ஆறு ரன்கள் என தெரிந்ததும் சற்று சுவாரஸ்யம்! ஒவ்வொரு பந்திலும் ஒவ்வொரு ரன்னாக அடித்து கொண்டிருந்தார்கள். கடைசி இரண்டு பந்தில் இரண்டு ரன் எடுக்கணும். ஐந்தாவது பந்தை தூரமாக அடித்து விட்டு ஓடினர். எளிதில் இரண்டு எடுத்து ஜெயித்திருக்கலாம். ஒரு நபர் இரண்டாவது ரன் ஓடாமல் நின்று விட, அடுத்த நபர் மட்டும் இரண்டாம் ரன் ஓடி ரன் அவுட் ஆகிட்டார். கடைசி பந்து ... சோதனையாக புது பேட்ஸ்மேன் எதிர்கொண்டார். ஒரு ரன் எடுத்தால் வெற்றி. ஆனால் கேட்ச் குடுத்து அவுட் ஆக, மேட்ச் டை (Tie) ஆகி விட்டது. கூடியிருந்த அனைவரும் எப்படி ஆடி ஜெயிதிருக்கணும் என்றே பேசி கொண்டிருக்க, நாங்களும் "
ஐந்தாவதுபந்தில் ரெண்டு பேரும் "Two runs ஓடிருக்கணும்" என பேசியவாறு கிளம்பினோம்.

Mrs. அய்யாசாமி அப்டேட்

சென்ற வானவில்லிலேயே எழுத வேண்டியது ...விடுபட்டு விட்டது. அய்யாசாமி ப்ளாக் படிப்பதாக எழுதிய பதிவில் நண்பர்கள் சிலர் " அப்பாடா இனி தலைவி பற்றி எழுதுவது குறையும்" என எழுதி இருந்தனர். இது பற்றி வீட்டில் பேச்சு வந்த போது 

"இனிமே என்னை பத்தி எழுத மாட்டீங்கன்னு சில பேர் சொல்லிருக்காங்க"

" உன்னை பத்தியா? அப்படி யாரும் சொல்லலையே?"

"தலைவி பத்தி எழுத மாட்டீங்கன்னு சொல்லிருக்காங்க??"

"அவங்க தலைவின்னு சொன்னது அனுஷ்காவை"

அனுஷ்கா பாட்டு டிவியில் வந்தாலே அய்யாசாமி வெங்காயம் உரிப்பதை நிறுத்தி விட்டோ, துணி மடிப்பதை விட்டு விட்டோ, வாயில் ஈ போவது தெரியாமல் பார்ப்பது Mrs. அய்யாசாமிக்கு தெரியும் தான். சிறிது நேரம் மௌனம்.

" அப்ப நான் தலைவி இல்லியா? "

" ???? "

" உங்களை தானே கேக்குறேன் . அப்ப நான் தலைவி இல்லியா?"
இதுக்கு அய்யாசாமி என்ன பதில் சொல்லி இருப்பார் என ஊகித்து சொல்லுங்கள் அவர் சொன்னதை பிறகு பின்னூட்டத்தில் சொல்கிறேன்...

Saturday, September 24, 2011

சூப்பர் சிங்கர் இறுதி போட்டி: சில துளிகள்


* மாலை ஆறு -ஆறறை மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி முடிக்க இரவு ஒரு மணிக்கு மேல் ஆகி விட்டது. லைவ் என்று சொல்வதெல்லாம் சுத்த பம்மாத்து. ஒரு முறை பாட்டு பாடும் சாய் சரண் கையில் நேரம் தெளிவாக  9.25 என்று தெரிந்தது. அப்போது நம் வீட்டில் நேரம் 10.45. கிட்டத்தட்ட ஒண்ணரை மணி நேரம் தாமதமாக ஒளி பரப்பி கொண்டிருந்தனர்.

* நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சிவ கார்த்திகேயன் & திவ்யா . சிவ கார்த்திகேயன் வழக்கம் போல் சிரிக்க வைத்து கொண்டிருந்தார். திவ்யா ஒரு ரவுண்ட் எக்ஸ்ட்ரா மேக் அப் போட்டிருந்தாலும் ரோஸ் கலர் புடவையில் நன்றாகவே இருந்தார்.

*அய்யாசாமிக்கு பிடித்த பாடகிகளான மதுமிதா, மாளவிகா, ராகினிஸ்ரீ அனைவரும் சேர்ந்து ஒரு பாட்டு பாட, யாரை பார்ப்பது யாரை விடுவது என தடுமாறி விட்டார் அய்யாசாமி. அந்த பாடலை பத்துக்கும் மேற்பட்டோர் பாடினர். அய்யாசாமிக்கு வேண்டிய ஆட்களை (மேலே சொன்ன மூவர் தான்) கேமராமேன்  அதிக நேரம் காட்டலை என குறை பட்டுக்கொண்டே இருந்தார்.

* உங்க ஓட்டுகளை "அமிச்சு விடுங்க. அமிச்சு விடுங்க" என மறுபடி மறுபடி சொல்லி கொண்டிருந்தார் திவ்யா. இன்றைய ஓட்டுகளில் அல்ல, ஏற்கனவே போட்ட ஓட்டுகள் வைத்தே யார் ஜெயிப்பார்கள் என முடிவாகியிருக்கும் என்று தோன்றியது.

* நடுவர்கள் சுஜாதா, சீனிவாஸ், உன்னி கிருஷ்ணன் ஆகியோர் தங்கள் குழந்தைகளுடன சேர்ந்து பாடியது அருமையாக இருந்தது. குறிப்பாக உன்னி கிருஷ்ணனின் குட்டி பெண் பாடியது கியூட்

* ஏ......கப்பட்ட விளம்பரங்கள் ! விளம்பர நேரத்தில் சி சி எல் கிரிக்கெட்டில் பெங்களூர் vs வாரியர்ஸ் இடையேயான சுவாரஸ்யமான மேட்ச் பார்த்து கொண்டிருந்தேன். கடைசி பந்தில் ரெண்டு ரன் அடித்து வாரியர்ஸ் அணி வென்றது.

* சென்ற சீசன்களில் வெற்றி பெற்ற அஜீஸ், கிருஷ்ணமூர்த்தி, அல்கா ஆகியோர் சேர்ந்து ஆளுக்கு ஒரு பாடல் அடுத்தடுத்து பாடினர்.

* நிகழ்ச்சியில் பாடிய அனைவரிலும் மிக நன்றாக பாடியது சந்தேகமே இன்றி அல்கா தான் !! அவருக்கு அடுத்து தான் பட்டம் வென்ற சாய் சரண் கூட என்று தான் சொல்ல வேண்டும் !

* இந்த வருட போட்டியாளர்கள் பாட ஆரம்பிக்கும் போது மணி ஒன்பது. பதினோரு மணிபோல் அவர்கள் அனைவரும் பாடி முடித்து விட்டனர். அதற்கு பின் சுசித்ரா, ரஞ்சித் போன்றோர் பாடி செமையாக மொக்கை போட்டனர்.

* 12 மணிக்கு மேல் வெறுத்து போய் ஆப் செய்ய நினைத்து ப்ளாக் அல்லது டுவிட்டரில் யாராவது நேரில் பார்த்தவர்கள் யார் ஜெயித்தார் என்ற தகவல் சொல்லியிருப்பார்கள் என தேடினால் யாரும் அதை சொல்லலை. ஆனால் பா.ராகவன், இட்லி வடை போன்ற பெரிய ஆட்கள் பலரும் இதே நிகழ்ச்சி டிவியில் பார்த்து கொண்டு டுவிட்டரில் கமென்ட் அடித்து கொண்டிருந்தார்கள் !

சரி யார் என்ன இடம் பெற்றார்கள் என்பது பற்றியும் அது குறித்து நம் கருத்தும் பார்ப்போம் :

சிறந்த வெளிநாட்டு பாடகர்: பிரவீன்:

இவருக்கு ஹீரோ ஹோண்டா பேஷன் ப்ரோ பைக் பரிசாக தரப்பட்டது (அட என் பைக்கு!) சிறந்த வெளிநாட்டு பாடகர் இவர் தான் என்பதில் சந்தேகமில்லை. அது ஏன் பைக் பரிசாக தரணும்? அவர் அங்கு எடுத்து செல்வதற்கு எவ்வளவு டூட்டி கட்ட வேண்டும்? அநேகமாய் இங்கு யாரிடமாவது குடுத்து விடுவார் என நினைக்கிறேன்

பைனல் வராதவர்களில் சிறப்பு பரிசு : சீனிவாஸ்: 

ஒரு லட்சம் ரூபாய் இவருக்கு பரிசாக கிடைத்தது. உண்மையில் ஒய்ல்ட் கார்டில் மிக மிக சிறப்பாக பாடியது இவர் தான். குறிப்பாக ஆரோமலே பாடல் மறக்க முடியாத rendition. இந்த பரிசு இவருக்கு கிடைத்தது மிக சரியே. 
முதல் பரிசு: சாய் சரண் 

இந்த பரிசுக்கு தகுதியானவர் சாய் சரண். எங்கள் வீட்டில் மூவரும் இவர் தான் வாங்குவார் என சொல்லி கொண்டிருந்தோம். பைனலுக்கு நால்வர் தேர்வான போதே வானவில்லில் "பைனல் சாய் சரண் வெல்வார் " என எழுதி இருந்தது நினைவிருக்கலாம். பைனலில் நால்வரில் நன்கு பாடியது இவர் தான். (அன்று பாடியதை வைத்து முடிவு செய்ய படவில்லை என்றாலும் கூட..) வாழ்த்துகள் சாய் சரண். இனி தலை கனம் வராமல் தன் திரை இசை வாழ்க்கையை துவக்க வேண்டும்.

இரண்டாம் பரிசு: சந்தோஷ் 
மூன்றாம் பரிசு: சத்ய பிரகாஷ் 
நான்காம் இடம்: பூஜா

இந்த வரிசையில் எனக்கு நிச்சயம் உடன்பாடு இல்லை. சந்தோஷ் கூட "சத்யா தான் இரண்டாம் இடம் என நினைத்தேன். நானா இரண்டாம் இடம்?" என 
ம்ப முடியாமல் கேட்டார். (
சந்தோஷுக்கு கார் பரிசாக கிடைத்தது. சத்யாவிற்கு மூன்று லட்சம். பூஜாவிற்கு ஒரு லட்சம் பரிசு தொகை !)  பைனலில் சந்தோஷ் ஆரோமலே பாட்டை மிக சுமாராக பாடினார். அவர் பாடும் போது இதே பாட்டை சீனிவாஸ் அற்புதமாக பாடியது நினைவு நிச்சயம் வந்தது. 

நியாயப்படி பார்த்தால் இரண்டாம் இடம் சத்ய பிரகாஷ்க்கும், மூன்றாம் இடம் பூஜாவிற்கும் நான்காம் இடம் சந்தோஷுக்கும் கிடைத்திருக்க வேண்டும்.

விடுங்கள். எல்லாம் நாம் நினைக்கிற படி நடந்து விடுமா என்ன? இதில் இன்னொரு விஷயம் அவசியம் சொல்ல வேண்டும். மூன்று மற்றும் நான்காம் இடம் பெற்ற சத்யா & பூஜா தான் நடுவர்களால் பைனலுக்கு நேரே தேர்வு செய்யப்பட்டவர்கள். அதாவது சூப்பர் சிங்கின் சிறந்த முதல் இரு பாடகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களால் வெளியேற்றப்பட்ட சாய் சரண் & சந்தோஷ் தான், பைனலில் முதல் இரு இடம் பெற்றனர். இது வேறு எதையும் உணர்த்துகிறதா? 

இறுதியாக சில வார்த்தைகள்: விஜய் டிவி ஒரே நாளில் விளம்பரம் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்க நினைத்து நிகழ்ச்சியை இவ்வளவு தூரம் இழுவை ஆக்குவது பலரையும் வெறுப்படைய வைக்கிறது. சென்ற முறை சூப்பர் சிங்கர் பைனல் இரவு பன்னிரண்டு மணிக்கு முடிந்தது. இந்த முறை இன்னும் ஒரு மணி நேரம் கழித்து ஒண்ணே காலுக்கு முடிந்தது. அடுத்த முறை நள்ளிரவு ரெண்டு மணிக்கு முடிப்பார்களோ? வருகிற பைனல்களில் குறைந்தது பதினோரு மணி போலாவது டிவி ஒளி பரப்பை முடிக்கிற மாதிரி செய்ய வேண்டும் விஜய் டிவி.! 

இல்லா விட்டால்? இல்லா விட்டால்?

வேறென்ன? திட்டி கொண்டே பார்த்து தொலைப்போம் !

Wednesday, September 21, 2011

ஸ்டான்லி கா டப்பா - விமர்சனம்

சிறுவர்கள் குறித்த நல்ல படங்கள் மனதில் எப்போதும் பாதிப்பை ஏற்படுத்தவே செய்கிறது. தமிழில் "பசங்க", இந்தியில், " தாரே ஜமீன் பர் " இவை எனக்கு மிக விருப்பமான படங்கள் . இந்த இரு படங்கள் அளவுக்கு  இல்லா விடினும், பார்த்தவுடன் நம் மனதை "நறுக்"என்று குத்தும் இந்தி படம் "ஸ்டான்லி கா டப்பா"

கதை

ஸ்டான்லி மும்பையின் ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறான். தினமும் காலை முதல் ஆளாக வருகிற அவன், ஜன்னல் வழியாக பள்ளிக்கு வரும் ஒவ்வொருவரையும் பார்த்து கொண்டிருக்கிறான். முதல் வகுப்பெடுக்கும் ரோஸி மிக நல்லவர். அவருக்கு ஸ்டான்லி பிடித்தமானவன். ஆனால் அடுத்து வரும் ஆங்கில ஆசிரியை அவனிடம் தேவையில்லாமல் எரிந்து விழுகிறார்.

ஸ்டான்லி தினம் மதிய உணவு எடுத்து வருவதில்லை. "நான் இரண்டு ரூபாய் வைத்துள்ளேன். அதில் பாவ் பஜ்ஜி சாப்பிடுவேன்" என சொல்லி விட்டு வெளியே போய் வயிறு முட்டும் அளவு தண்ணீர் குடிக்கிறான். அவனது வகுப்பு தோழர்கள் தங்கள் உணவையே பகிர்ந்து தருகிறார்கள். இதற்கும் இந்தி ஆசிரியர் மூலம் வில்லங்கம் வருகிறது. ஸ்டான்லி போலவே சாப்பாடு கொண்டு வராத இவர்,  பசங்களின் சாப்பாட்டை ஓசியில் கேட்டு வாங்கி சாப்பிடுகிறார். இவர் சாப்பாடு கொண்டு வராத ஸ்டான்லியை தனக்கு போட்டி போல் பாவித்து " நீ ஏன் சாப்பாடு கொண்டு வருவதில்லை?" என திட்டுகிறார்.

பையன்கள் இவருக்கு பயந்து தினம் வகுப்புக்கு வெளியே சென்று சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். "எங்கு சென்று சாப்பிடுகிறீர்கள்?" என தினம் கேட்டு நச்சரிக்கிறார் இந்தி ஆசிரியர். பசங்க தினம் ஓர் பொய் சொல்லி அவரை ஏமாற்றுகின்றனர். கடைசியில் ஓர் நாள் மொட்டை மாடியில் அவர்கள் சாப்பிடுவதை கண்டு பிடிக்கும் ஆசிரியருக்கு கோபம் தலைக்கேறுகிறது. ஸ்டான்லிக்கு உணவு தரத்தான் தன்னை தவிர்த்தனர் என அவனிடம் "இனி மதிய சாப்பாடு கொண்டு வந்தால் தான் பள்ளிக்கு வரணும்" என கூறி விடுகிறார். 

மறு நாளிலிருந்து ஸ்டான்லி பள்ளிக்கு வர வில்லை. அவன் பள்ளிக்கு வராதது குறித்து மாணவர்கள் மிக வருந்துகின்றனர். பின் ஒரு நாள் ஸ்டான்லி வித விதமான மதிய உணவுடன் பள்ளிக்கு வருகிறான். நேரே இந்தி ஆசிரியரிடம் சென்று அவற்றை உண்ண சொல்கிறான். ஏற்கனவே ஸ்டான்லியை பள்ளிக்கு வர வேண்டாம் என சொன்னதில் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் அவர் பள்ளியை விட்டே செல்கிறார். 

ஸ்டான்லி ஏன் தினம் உணவு கொண்டு வராமல் இருந்தான்? அவன் பெற்றோர் எங்கே? அவன் பின்னணி என்ன என்கிற கேள்விகளுக்கான பதில்களை வலியுடன் இறுதி காட்சியில்  பகிர்கிறார்கள் ....

படம் கிட்டத்தட்ட 95 சதவீதம் பள்ளிக்குள்ளேயே நடக்கிறது. அதுவும் மிக அதிக பட்சம் வகுப்பறையிலேயே ! ஆனால் சற்றும் போர் அடிக்காமல் செல்கிறது. வகுப்பிற்குள் நடக்கும் பல விஷயங்கள் சுவாரஸ்யம்.

தினம் பெரிய டிபன் பாக்ஸ் கொண்டு வரும் கொழுக் மொழுக் சிறுவன் செம அழகு ! தன் நண்பனுக்கு மகிழ்வுடன் உணவு தரும் இவன், இந்தி ஆசிரியர் அவனிடம் சாப்பாடு கேட்கும் போது வெறுப்புடன் தருவது... ஆசிரியர் மேல் எல்லா பசங்களுக்கும் உள்ள வெறுப்பை அவர்கள் பார்வையிலேயே காண்பிப்பது ..இப்படி பல விஷயங்கள் நுணுக்கமாய் ரசிக்கும் படி உள்ளது.

அழகான, அன்பான ரோஸி மிஸ் கதாநாயகி மாதிரி இருக்கிறார் ! நாம் ஒவ்வொருவரும் இப்படி ஒரு தேவதை  போன்ற மிஸ்ஸை நம் இள வயதில் சந்தித்திருப்போம் தானே? ஸ்டான்லி வகுப்பில் தயார் செய்யும்  ஒரு கருவியை  இவர் வெகுவாக பாராட்ட, ஆங்கில ஆசிரியை மோசமாக திட்டுகிறார் . பார்வை (Perception) எப்படி ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது என்பதை அழகாக காட்டுகிறது

இந்தி ஆசிரியராக வரும் அமோல் குப்தே தான் படத்தின் இயக்குனரும் கூட. ஆரம்பத்தில் இவரை வெறுக்கும் நாம் பசங்க இவரை அலைய விடும் போது மனம் விட்டு சிரிக்கிறோம். ஸ்டான்லி சாப்பாடு கொண்டு வராததற்கு ஒரு காரணம் இருக்கிறது. நிறைய சம்பாதிக்கும் இவர் ஏன் சாப்பாடு கொண்டு வருவதில்லை, பணம் செலவு செய்து வாங்கி சாபிடுவதில்லை என்பதற்கு எந்த காரணமும் சொல்லப்படவில்லை.

ஸ்டான்லி ஆக நடிக்கும் சிறுவன் பார்த்தோ குப்தே இயக்குனரின் மகனே. மிக அற்புதமான நடிப்பு இவனுடையது. படம் நம் மனதில் ஆழமாக பதிய இவன் நடிப்பும் ஒரு காரணம்.

ஸ்டான்லி ஏன் சாப்பாடு கொண்டு வருவதில்லை என்பதற்கு பல காரணம் யோசித்தாலும் அவர்கள் சொன்ன காரணம் யோசிக்கவே இல்லை. ஆனால் இதை விட சரியான காரணம் இருக்கவே முடியாது ! ஒரு டாகுமெண்டரி ஆக வர வேண்டிய விஷயத்தை எவ்வளவு சுவாரஸ்யமான படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் என வியந்தவாறே இருக்கிறேன்.

நண்பர்களிடம் கடன் வாங்கி மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது இந்த படம். பள்ளி செல்லும் குழந்தைகளை வைத்தே, ஒண்ணரை வருடம் சனிக்கிழமைகளில் மட்டும் படம் பிடித்திருக்கிறார் இயக்குனர் ! படத்தை முடித்து விட்டு வெளியிட முடியாமல் சற்று தடுமாறியிருக்கிறார். கரன் ஜோகர் என்கிற புகழ் பெற்ற இந்தி தயாரிப்பாளர்/ இயக்குனர் அவருக்கு பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் (Fox Star Studios) என்கிற நிறுவனத்தை அறிமுகப்படுத்த, அவர்கள் தான் படத்தை ரிலீஸ் செய்ய உதவினர். ஐந்து கோடிக்கு மேல் வசூல் செய்த இந்த படம் நஷ்டம் ஏற்படுத்தவில்லை என்பதோடு, பரவலாக பத்திரிக்கை மற்றும் மீடியாக்களின் பாராட்டை பெற்றது. இந்த வருடம் மே மாதம் தான் வெளியானது என்பதால் விருதுகள் பற்றி வரும் காலங்களில் தான் தெரிய வரும் !

பார்த்து முடித்ததும் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த படத்தை அவசியம் பாருங்கள் !

Monday, September 19, 2011

வானவில்: மங்காத்தா: வடகரை வேலன்:பதிவர் இதழ்

பார்த்த படம்: மங்காத்தா

நிறைய எதிர்பார்ப்போடு பார்த்தேன் மங்காத்தா. ஒரு வேளை அது தான் தவறோ என்னவோ? படம் என்னை மட்டுமல்ல, என் கூட பார்த்த யாருக்குமே அதிகம் பிடிக்க வில்லை. ஹீரோ வழக்கமான நல்லவனாய் இல்லாமல் முழுக்க முழுக்க கெட்டவனாய் இருப்பது வித்யாசம் தான். அஜித் நடிப்பு, சிரிப்பு மற்றும் டான்ஸ் ரசிக்க முடிகிறது. ஆனால் கதை தலை சுற்ற வைக்கிறது. பல விஷயங்கள் புரிய வில்லை. படம் முடியும் போது தான் அவை ஓரளவு புரிகிறது. அதற்குள் தலை வலி வந்து விடுகிறது. இடைவேளைக்கு பின் அஜீத் பேசும் வசங்களில் பாதிக்கு மேல் சென்சார் கட் செய்திருப்பதிலேயே பட குழுவினரின் சமூக அக்கறை தெரிகிறது. படம் நிச்சயம் ஹிட் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் ரிலீஸ் செய்ய தேர்ந்தெடுத்த நேரம் ! ஐந்து நாள் விடுமுறையில் ரிலீஸ் செய்து நல்ல அறுவடை செய்து விட்டார்கள். மேலும் படம் சற்று வித்யாசமாக இருக்கவும் ஹிட் ஆகி விட்டது. விஜய்யின் குருவி, அஜீத்தின் ஆஞ்சேநேயா போன்ற படங்கள் அளவு அறுவை இல்லா விடினும், முழுக்க என்ஜாய் செய்து பார்க்க முடிய வில்லை.

வாசித்த விஷயம் : நண்பர் வடகரை வேலன் பஸ்ஸில் பகிர்ந்தது :

//நேற்றிரவு 10.30 அளவில் அம்மா பாத்ரூமில் தவறி விழுந்து மேல் நெற்றியில் நல்ல அடி. 4 அங்குலநீளத்தில் அரை அங்குலம் ஆழமான காயம். ரத்தம் கொட கொடவென கொட்டியது. அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் ரத்தம் கசிவதைப் பார்த்தவர்கள் “இங்கே ட்ரீட் பண்ண முடியாது ” என்றார்கள்.

மருத்துவமனையில் அட்மிட் செய்து சிகிட்சை செதோம். தையல் போட்டு விட்டு டாக்டர் சொன்னது , “பெரிய அள்வில் பாதிப்பில்லை, இரண்டு நாட்கள் பார்க்கலாம் வீக்கம் ஏதுமில்லை என்றால் ஒண்ணும் பிரச்சினை இருக்காது” ஸ்கேன் செய்து பார்த்ததில் பெரிதாக ஏதும் இல்லை.

நல்லவேளையாக பாத்ரூம் கதவு திறந்திருந்ததால் சரியான நேரத்திற்கு சிகிட்சை அளிக்க முடிந்தது. பூட்டி இருந்திருந்தால் ? நினைக்கவே பயமாக இருக்கு.

முடிந்த வரை பெரியவர்களுக்குத் தனி பாத்ரூம் வசதி செய்து கொடுத்து உள்பக்கம் தாளிட வேண்டாம் எனச் சொல்வது நல்லது. அல்லது பாத்ரூம் கதவு பிவிசியில் போடலாம் எளிதில் உடைத்து உதவ முடியும்.//

கடைசி இரு வரிகள் அனைவரும் அவசியம் அறிய வேண்டியது. இங்கு பகிர காரணமும் அதுவே.

சென்னை ஸ்பெஷல் : அசோக் நகர் ஆஞ்சநேயர் கோயில் 

அசோக் பில்லரில் இருந்து ஐந்து நிமிட நடையில் அடைய முடியும் இந்த கோயிலை. பெரிய உயரத்துக்கு நிறைந்து இருப்பார் ஆஞ்சநேயர். பாச்சிலர் ஆக அசோக் நகரில் இருந்த போது அடிக்கடி செல்வது வழக்கம்.

நல்ல பிரசாதம் இலவசமாய் கிடைக்கும் !! வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி வாய்ந்த அனுமார் என்று கேள்விபட்டுள்ளேன். நீங்களும் ஒரு முறை சென்று பாருங்கள் !!

ஆனந்த் எஸ்.எம்.எஸ் கார்னர்

ஆனந்த் என்று ஒரு நண்பர். என்னோடு பத்து வருடங்களுக்கு முன் பணி புரிந்தவர். இப்போது எனக்கு எக்ஸ்- கொலிக் ஆன போதும், பல ஆண்டுகளாக தினம் காலை ஒரு நல்ல எஸ். எம். எஸ் அனுப்புவார். நம்பிக்கை தரும் விதத்தில் இருக்கும் இந்த எஸ்.எம்.எஸ்ஸில் பலவற்றை டெலிட் செய்ய முடியாமல் மொபைலில் வைத்திருக்கிறேன். சிலவற்றை இங்கு பகிர்கிறேன். ஆனந்த் நிச்சயம் இவற்றை தானாக எழுதுவதில்லை. அவருக்கு இதே போன்ற எஸ். எம். எஸ் அனுப்பும் நண்பர்கள் உள்ளனர். ஆனந்த் என்கிற நல்ல மனிதருக்காக இந்த பகுதிக்கு ஆனந்த் எஸ்.எம்.எஸ் கார்னர் என்றே பெயரிட்டுள்ளேன்

We came to earth with no friends and enemies. Situation only makes people good or bad. Forgive people who hurt you. Nothing is much greater than that in life.

பதிவர் நடத்தும் மாத இதழ் : தென்றல்

பதிவர் குடந்தைமணி தென்றல் என்கிற மாத இதழ் ஒன்றை துவங்கியுள்ளார். இதில் பல்வேறு பதிவர்களின் படைப்புகள் வெளிவந்துள்ளன. அவற்றில் பல அவர்கள் ப்ளாகுகளில் வந்தவை. சம்பந்தப்பட்ட பதிவரிடம் அனுமதி பெற்று வெளியிட்டுள்ளார் குடந்தைமணி. வீடு திரும்பலில் அவ்வப்போது பகிர்ந்த "சட்ட சொல்" பல இந்த ஆகஸ்ட் மாத இதழில் வெளிவந்துள்ளது. ஆனால் கடைசி பக்கத்தில் நமது ப்ளாக் முகவரி தரும் போது சிறு குழப்பம் நிகழ்ந்து விட்டது. நண்பரிடம் போனில் சொன்னதும், அடுத்த முறை சரி செய்து விடுவதாய் சொன்னார். பதிவர் ஒருவர் இத்தனை முயற்சி எடுத்து புத்தகம் கொண்டு வருவது மகிழ்ச்சி தரும் விஷயம். வாழ்த்துக்கள் அன்புமணி. தொடருங்கள் !!

ரசித்த பாடல் :"மாசமா " (எங்கேயும் எப்போதும்) 

"இவ்வளவு சுவாரஸ்யமான காட்சிப்படுத்தல், சமீபத்தில் தமிழில் வேறு பாடலில் பார்க்கவில்லை" என சென்ற பதிவில் தான் "கோவிந்தா" பாடல் குறித்து சொல்லியிருந்தேன். எழுதி அடுத்த சில நாட்களிலேயே அந்த பாட்டை விட, அல்லது அதற்கு சமமான ரசனையுள்ள இன்னொரு பாடலையும் பார்க்க முடிந்தது. மாசமா என்கிற இந்த பாட்டும் கூட எங்கேயும் எப்போதும் படத்தில் இடம் பெற்ற பாடல் தான். படம் வெளியாகும் முன்னே பார்த்த இந்த இரு பாடல்கள் வைத்தே இயக்குனர் மீது மிகுந்த அபிமானம் வந்து விட்டது.
வெறும் தலையாட்டலை வைத்தே ஒரு பாடல் முழுதும் ரசிக்க வைக்க முடியுமா? முடியும் !! அது தான் இந்த பாடலில் நடந்துள்ளது. பாடல் பிடிக்க இன்னொரு காரணம்: பாடல் ஐந்தாண்டுகள் நான் கல்லூரியில் படித்த, சுற்றி திரிந்த திருச்சியில் எடுக்க பட்டது. திருச்சி சாலைகளை, ஆர்ச்களை, மலைக்கோட்டைக்கு அருகில் படிக்கட்டுகளுடன் கூடிய சாலைகளை பாடலில் பார்க்க செமையாக உள்ளது !எனக்கு வந்த கனவு

எங்கள் வீட்டில் எனக்கு பெண் பார்க்கிறார்கள். (கனவில் எனக்கு கல்யாணம் ஆகலீங்கோ!!) முதல் முறை பெண்ணை தூரத்திலிருந்து பார்த்து "ஓகே" சொல்லி விடுகிறேன். அடுத்த முறை அதே பெண் என்னை பார்க்க அலுவலகம் வருகிறது. (இத பாருடா!) நான் அப்போது டைடல் பார்க்கில் உள்ள ஒரு அலுலகத்தில் வேலை பார்க்கிறேன். (க்கும்!!) என்னை பார்க்க வந்த பெண்ணை ரிசப்ஷனில் அமர்ந்திருக்கும் போது பார்த்து விட்டு அதிர்ந்து போகிறேன். பெண் செம குண்டாக, கிராமத்து பெண்ணாய் இருக்கார். "தூரத்திலிருந்து பார்த்து சரி என சொன்னது தப்பா போச்சே; கிட்ட இருந்து பார்த்திருக்கணும்" என எண்ணிக் கொண்டு, அந்த பெண்ணை பார்க்காமல் நைசாக நழுவுகிறேன்.

எனது அண்ணன்- அண்ணியை பார்த்து "பெண்ணை எனக்கு பிடிக்கலை" என்கிறேன் "என்ன இப்படி சொல்றே; புடவை எல்லாம் எடுத்தாச்சு" என அண்ணி பட்டு புடவையை காட்டுகிறார். புடவை என்னவோ நல்லா தான் இருக்கு! அப்போது பெண்ணின் அப்பாவும் இருக்கிறார் . அவர் கிராமத்தில் பெரிய ஆள் ! அவரிடம் "கல்யாண வேலைகளை கொஞ்சம் ஸ்டாப் பண்ணுங்க, எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்னு நினைக்கிறேன்" என சொல்ல, அவர் என்ன சொன்னார் என கேட்பதற்குள் முழிப்பு வந்துடுச்சு !! கொஞ்ச நேரம் பயமாகிடுச்சு ! "டேய் உனக்கு கல்யாணம் முடிஞ்சு 13 வருஷம் ஆச்சு. பேசாம தூங்கு" என தனக்கு தானே சொல்லிட்டு மறுபடி "கொர்..கொர்.."

இந்த கனவை காலை எழுந்து, சமைத்தவாறே, ஹவுஸ் பாஸிடம் சொல்ல அவர் சொன்ன கமன்ட்: "பேசாம அந்த பெண்ணையே நீங்க கல்யாணம் பண்ணிருக்கலாம். செம மேட்சா இருந்திருக்கும் " :((

Tuesday, September 13, 2011

வானவில்: எங்கேயும் எப்போதும் - சினிமா ஸ்ட்ரைக்-கேபிள் பதில்

சூப்பர் சிங்கர் அப்டேட்

சூப்பர் சிங்கரில் குறைந்தது இருவராவது பைனல் செல்வார்கள் என எழுதியிருந்தேன். அது நடக்கவே செய்தது. சாய் சரண் & மாளவிகா என எழுதியதில் பாதி தான் நடந்தது. சாய் சரண் & சந்தோஷ் ஒய்ல்ட் கார்ட் மூலம் பைனல் சென்றுள்ளனர். ஓரளவு சரியான முடிவாகவே தெரிகிறது. வெறும் சாய் சரணுடன் நிறுத்தியிருந்தால் ஒய்ல்ட் கார்ட் நடத்தியதில் என்ன பலன்? முதல் மூவர் தானே பைனல் செல்கிறார்கள் என இருந்திருக்கும் அல்லவா? பைனலுக்கு ஏகப்பட்ட பில்ட் அப் தந்து அடுத்த சில வாரத்தில் நடத்துவார்கள். அதுவரை பைனல் சென்ற  பாடகர்கள் மேக் அப்- செய்வது உடைகள் தேர்ந்தெடுப்பது போன்றவை காட்டி ஜல்லி அடிப்பார்கள். பைனலில் வெல்ல சாய் சரணுக்கே வாய்ப்பு என நினைக்கிறேன் ! மிஸ் ஆனால் அடுத்த வாய்ப்பு பூஜாவிற்கு !


பார்த்த படம்: கண்டேன்
ஹீரோ சாந்தனுவை அல்ல, காமெடியன் சந்தானத்தை நம்பி எடுத்த படம் ! அவரும் தன் பங்கிற்கு முடிந்த வரை சிரிக்க வைக்கிறார். சந்தானம் காமெடி,  கவுண்டமணி சற்று refined- ஆக இந்த காலத்து யூத் போல இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி தான் உள்ளது கவனித்துள்ளீகளா? ஆக மொத்தம் கவுண்டர் ஸ்டைல் தான் !!) 

முதல் பாதி ரொம்ப சுமார். பிற்பாதியில் கண் தெரியாமல், ஆனால் தெரிந்த மாதிரி சாந்தனு சமாளிக்கும் காட்சிகள் சற்று சுவாரஸ்யம். ஹீரோவுக்கு தற்காலிகமாக தான் கண் தெரியாது. விரைவில் சரியாகிடும் என முன்பே சொல்லி விடுகிறார்கள். அதனால் ஓவர் செண்டிமெண்டுக்கு வேலை இல்லை.

பாக்கியராஜ் டான்ஸ் எப்போதும் எல்லோராலும் கிண்டல் செய்யப்படுகிற ஒன்று. ஆனால் அவர் மகன் சாந்தனு நன்கு டான்ஸ் ஆடுகிறார் !!

ஆமாம். இந்த படம் இந்த ஞாயிறன்று விஜய் டிவியில் போட்டார்களே! பார்த்தீர்களா?

நாட்டி கார்னர்


நாட்டிக்கு ஏதாவது சில வார்த்தைகளாவது கற்று தந்து விட வேண்டுமென எவ்வளவோ முயன்று வருகிறோம். சின்ன வார்த்தையாக சொல்லி தர வேண்டும் என்றதால் "வா" என்கிற வார்த்தையை பல முறை சொல்லி கொண்டே இருக்கிறோம். நாம் பல முறை "வா" சொன்ன பிறகு நாட்டி நிதானமாய் நம்மை பார்த்து சொல்லும்: "கீ..... . " !

எங்களுக்கு தெரிந்து கிளி வளர்க்கும் ஒருவர் " நிச்சயம் கிளி பேசும். பேசாமல் போகாது" என்கிறார். பார்க்கலாம் !

ரசித்த பாட்டு 

வெகு சில பாடல்களே கேட்பதை விட பார்க்க ரொம்ப அருமையாக இருக்கும். இன்னும் வெளி வராத எங்கேயும் எப்போதும் படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் அந்த வகையை சார்ந்தது. ஒரு சின்ன பாடலில் எவ்வளவு விஷயம் சொல்லி விடுகிறார்கள் !! இவ்வளவு சுவாரஸ்யமான காட்சிப்படுத்தல், சமீபத்தில் தமிழில் வேறு பாடலில் பார்க்கவில்லை. சென்னைக்கு வரும் ஒரு பெண் நகர கலாசாரம், ஆணும் பெண்ணும் இடித்து கொண்டு உட்காரும் ஷேர் ஆட்டோ போன்றவற்றை பார்த்து மிரளுவது தான் கான்செப்ட். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்கும் படி உள்ளது  (நான் முதலில் இதை ஜாக்கி சேகர் பதிவில் தான் பார்த்தேன், நன்றி ஜாக்கி)
 


புழுதிவாக்கம் பள்ளிக்கு கணினி ஆசிரியர் தேவை

சமீபத்தில் புழுதிவாக்கம் பள்ளிக்கு சென்ற போது + 2 விற்கு கணினி ஆசிரியர் (Computer Science ) தேவை என்றும், ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் நிரம்ப சிரமபடுவதாகவும் தலைமை ஆசிரியர் சொன்னார். சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில் பாடம் எடுத்து தந்தால் கூட போதும். இங்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவும் பொருட்டு இலவசமாக எடுத்தாலும் சரி, அல்லது பார்ட் டைம் ஆசிரியர் போல, அதற்கு என்ன அரசு தருமோ அதனை தரவும் பள்ளி தயாராக உள்ளது. கணினி பற்றிய அடிப்படை விளக்கமும் C+ ம் தான் சிலபஸ்ஸில் உள்ளது. மாணவர்களுக்கு உதவ விருப்பம் உள்ளவர்கள் எனக்கு (snehamohankumar@yahoo.co.in) எழுதுங்கள். பள்ளியில் பேசி ஆவண செய்கிறேன்.

பதிவர் கேள்வி பதில்

கேள்வி: சினிமா துறை ஊழியர்கள், சம்பள உயர்வு கோரி, புது படங்கள் பூஜை போட கூடாதென்றும் ஏற்கனவே எடுக்கும் படங்கள் அக்டோபர் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனரே? இதன் பின்னணி என்ன? இதனால் படங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

பதிவர் கேபிள் சங்கர் : ஊழியர்கள் கேட்கும் ஊதிய உயர்வு மிக அதிகமாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் கருதுகிறார்கள். 400 ருபாய் தின சம்பளம் எனில் தற்போது அதனை எண்ணூறு ஆக்குமாறு நூறு சதவீத உயர்வு கேட்கிறார்கள். இது வரை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 20 % ஊதிய உயர்வு போல் தான் தந்து வந்தனர்.  எனவே தற்போது  கேட்கப்படும் ஊதிய உயர்வை  பல தரப்பினர் ஒத்து கொள்ள வில்லை. தமிழ் நாடு பிலிம் ப்ரோடியூசர் கவுன்சில் போன்ற வலுவான குழு ஸ்டிரைக் என சொல்லியிருந்தால் நிச்சயம் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
 
தற்போதைக்கு இது குறித்து நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி வருகிறார்கள். மாத இறுதியில் தான் என்ன நடக்கும் என தெரியும். ஆயினும் இந்த பிரச்சனையால் படங்களின் படப்பிடிப்பிற்கு பெரிய பாதிப்பு வரும் என தோன்ற வில்லை.

முக்கிய அறிவிப்பு- ப்ளாக் வாசிக்கிறார் Mrs . அய்யா சாமி !

ம். தலைப்பிலேயே முழு கதையும் சொல்லியாச்சே ! அதே தான்! உங்களில் பலர் ஆவலுடன் கேட்டது போல, Mrs . அய்யா சாமி தினம் பத்து நிமிடம் செலவு செய்து, தன் அலுவலகத்திலிருந்தே "வீடு திரும்பல்" ப்ளாகை வாசிக்க ஆரம்பித்துள்ளார். (நாட்டியின் வீடியோக்கள் மற்றும் நாட்டி கார்னரின் விளைவாக இருக்குமோ?) ப்ளாகை படித்து விட்டு "பெண் பார்த்த அனுபவம்", " சட்னி ரெசிப்பி" பதிவுகள் குறித்து பல கேள்வி கணைகளை தொடுத்துள்ளார். இந்த திடீர் திருப்பத்தால் அய்யா சாமி நடுநடுங்கி போய் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Monday, September 12, 2011

விஜய் டிவி சூப்பர் சிங்கர் : பைனல் செல்ல போவது யார்?

விஜய் டிவி சூப்பர் சிங்கரில் கடந்த ரெண்டு வாரங்களாக ஒய்ல்ட் கார்ட் ரவுண்ட் என எட்டு பாடகர்கள் பாடினார்கள். "இவர்களில் பைனல் செல்ல போகும் அந்த ஒரு அதிஷ்ட சாலி யார்?" என மறுபடி, மறுபடி சொன்னாலும், இந்த எட்டு பேரில் குறைந்தது இருவர் அல்லது மூன்று பேராவது பைனலுக்கு தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள் என பட்சி சொல்கிறது. யாருக்கு பைனல் செல்லும் வாய்ப்பு உள்ளது என்பது குறித்த ஒரு அலசல் இதோ:

தன்யஸ்ரீ

மிக வித்யாசமான குரல் இவருடையது. சிறந்த குரலுக்கு பரிசு தர வேண்டுமெனில் அது இவருக்கு தான் !! ரொம்ப சின்ன பெண். பள்ளியில் படிக்கிறார். ஏனோ இவரது performance போக போக சற்று டல் ஆகி விட்டது. பைனல் வாய்ப்பு குறைவு என்பதே என் கருத்து. 

ஹரிஹரசுதன் 

இவர் எப்படி டாப் டென்னிற்குள் வந்தார் என்பது அந்த ஹரிஹரசுதனுக்கே வெளிச்சம் ! பைனல் வாய்ப்பெல்லாம் நிச்சயம் இல்லை. நெக்ஸ்ட் ?

ஸ்ரீனிவாஸ் 

ஆரம்பத்தில் இவர் பாடலை மிக ரசித்துள்ளேன். பின் ஏனோ இவர் பெர்பார்மன்ஸ் குறைந்தது. (கல்யாணம்??) ஒய்ல்ட் கார்ட் ரவுண்டில் சில பாடல்கள் அற்புதமாக பாடினார். குறிப்பாக ஆரோமலே பாட்டுக்கு உயிரை குடுத்து பாடினார். (அவருக்கு குரல் தானே உயிர்? ).பைனல் வர வாய்ப்பு சற்று குறைவு தான். அதிசயமாக ஒரு சர்ப்ரைஸ் என்ட்ரி ஆக இவர் இருந்தால் சற்று ஆச்சரியத்துடன் வரவேற்போம்.
சந்தோஷ் 
சந்தோஷ் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வர கூடியது, நடக்க முடியாத அவர் அம்மாவை ஒரு முறை அரங்கிற்கு அழைத்து வந்து அதன் காட்சிகளை வாரம் முழுதும் காண்பித்து மக்களை "கண் கலங்க" வைத்தது தான். 
சந்தோஷ் ஓரளவு நன்றாக பாட கூடியவர் எனினும், எல்லா வகை பாடல்களையும் பாட முடியும் என சொல்லி விட முடியாது. வெஸ்டர்ன் நன்கு பாடுவார். 

எனக்கு சந்தோஷிடம் பிடித்தது ஒரு விஷயம் தான். யார் நன்றாக பாடினாலும் சந்தோஷ் நிஜமாக அதனை மிக மிக ரசிப்பார். அவரை பாராட்டவும் செய்வார். இது சாய் சரண் போன்ற சிலரிடம் இருக்காது. சாய் சரண் யாரையாவது பாராட்டினால், அவர் அவுட் ஆகி போகும் போது தான் இருக்கும். இந்த விஷயத்தில் மற்ற சிலர், பிறர் பாடல்களை ரசிப்பார்கள் என்றாலும் சந்தோஷ் அளவு பிறரை மனம் விட்டு ரசிப்பதும், பாராட்டுவதும் யாரும் இல்லை எனலாம். 

பைனலுக்கு சந்தோஷ்? டவுட் தான் ! நான்கு அல்லது ஐந்து பேர் பைனலில் பாடினால், சந்தோஷ் செலக்ட் ஆக வாய்ப்புண்டு.
சாய் சரண் 

பூஜா மற்றும் சத்ய பிரகாஷை விட எந்த விதத்திலும் குறைந்த பாடகர் இல்லை. அரை மார்க் குறைவு என சொல்லி சாய் சரணை பைனலுக்கு தேர்வு செய்யாமல் விட்டதே தவறு. பூஜா மற்றும் சத்யபிரகாஷ் உடன் சாய் சரணும் நேரே பைனல் சென்றிருக்க வேண்டும். மக்களின் இந்த sympathy அவருக்கு நிறைய ஓட்டு வாங்கி தந்து, பைனல் கொண்டு சென்று விடும் என நினைக்கிறேன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் ஒய்ல்ட் கார்ட் ரவுண்டில் சாய் சரண் பாடியதை விட மிக நன்றாக முன்பே பாடியிருக்கிறார்.எப்படி இருந்தாலும் பைனலுக்கு ஒரு நிச்சய டிக்கெட் ஆக தான் சாய் சரண் தெரிகிறார் 

பிரவீன் 

பிரவீனை ஆரம்பத்தில் அவர் அரங்கில் செய்கிற ஸ்டைலுக்காக ரசித்திருக்கிறேன். மற்றபடி International Contestants-க்கு ஒரு representative ஆக தான் அவர் டாப் டென்னில் வந்துள்ளாரே தவிர, பைனல் வருவதற்க்கேல்லாம் அவருக்கு வாய்ப்பு இருக்கிற மாதிரி தெரியவில்லை.

கௌஷிக் 

ஏனோ எனக்கு கௌஷிக்கை அதிகம் பிடிப்பதில்லை (அவர் பாடும் போதெல்லாம், அடிக்கடி க்ளோஸ் அப்பில் வயதுக்கு மீறிய மேக் அப் மற்றும் உடையுடன் காண்பிக்கும் அந்த பெண்மணியும் ஒரு காரணம்)ஆனால் கௌஷிக் ரொம்ப நன்றாக பாடுவதாக வீட்டில் அனைவரும் சொல்கின்றனர். ஜட்ஜஸ் கூட நிறைய பாராட்டுகின்றனர். இவரும் பைனலுக்கு ஒரு சர்ப்ரைஸ் என்ட்ரி ஆக இருக்கலாம் !

மாளவிகா: 
எஸ். மதுமிதா போன பின் நான் ஆதரிக்கும் நபர் மாளவிகா என்பது இந்த ப்ளாகை நீங்கள் தொடர்ந்து வாசிப்பவர் எனில் நிச்சயம் தெரிந்திருக்கும். பாடலை நன்கு என்ஜாய் செய்து பாடுவது இவர் ஸ்பெஷாலிட்டி. பல வித பாடல்களும் பாடுகிறார். சாய் சரணுடன் இவரும் பைனல் வருவார் என நம்புகிறேன். பைனலில் சற்று கிளாமர் கோஷன்ட் மீடியா மக்களுக்கு தேவை. வெறும் பூஜா என்கிற பெண்ணுடன் நிறுத்தினால் கிளாமர் கோஷன்ட் சற்று குறைவாக இருக்கும். இதனாலேயே இன்னொரு பெண் (மாளவிகா) வருவார் என நினைக்கிறேன். 

மொத்தத்தில்:

நிச்சயம் பைனல் வர வாய்ப்புள்ளவர்கள்: சாய் சரண் & மாளவிகா 
 
சீனிவாஸ், கௌஷிக் மற்றும் சந்தோஷ் இவர்களில் யாரேனும் ஒருவர் சர்ப்ரைஸ் ஆக உள்ளே நுழைந்தாலும் நுழையலாம்!

இந்த வாரம் நாலு நாள் ஏதேதோ கதை பேசிட்டு கடைசி ஐந்து நிமிடத்தில் தான், பைனல் வருவது யார் என அறிவிப்பார்கள். அப்போது மட்டும் சேனலை மாற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஆமாம் ..யார் பைனல் வருவாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க? 

Wednesday, September 7, 2011

ஐ யாம் சாம் விமர்சனம்ஐ யாம் சாம் பட டிவிடி கேட்ட போது கடைக்காரர் " இன்னிக்கு மட்டும் பதினெஞ்சு போச்சு. மிச்சம் இருக்கான்னு தெரியலை" என சொல்லிவிட்டு "ஒண்ணு இருக்கு" என்று சொல்லி குடுத்தார். தெய்வ திருமகள் படம் வந்ததால் தமிழ் நாட்டு மக்களிடம் ஐ யாம் சாமுக்கு நிறைய மவுசு வந்து விட்டது !

தெய்வ திருமகளுக்கே கதை சொல்லாதவன். ஐ யாம் சாம் கதையை சொல்கிறேன். கேளுங்கள் 

சாம் ஒரு சாக்கலேட்  நிறுவனத்தில் வெயிட்டர் ஆக வேலை பார்க்கிறான். முதல் காட்சியில் கடையிலிருந்து அவசரமாக ஆஸ்பத்திரி செல்கிறான். அங்கு அவன் மனைவிக்கு பிரசவம் ஆகிறது. பெண் குழந்தை. லூசி என்று பெயரிடுகிறான். ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறும் போதே சாமையும் குழந்தையையும் விட்டு சொல்லாமல் பிரிந்து செல்கிறாள் மனைவி. குழந்தையை கஷ்டப்பட்டு வளர்க்கிறான். பக்கத்து வீட்டு பெண் குழந்தையை வளர்க்க உதவுகிறாள். சாம்க்கு அவனை போலவே சற்று மன நிலை சரியில்லாத நான்கு நண்பர்கள். 

குழந்தை வளர்கிறாள். தந்தையை விட அவள் புத்திசாலியாக இருக்கிறாள். தன் தந்தை நார்மல் இல்லை என்பதும் அவளுக்கு புரிகிறது. குழந்தை சாமிடம் வளர்ந்தால் அவள் மனநிலை பாதிக்கப்படும் என குழந்தை நல நிறுவனம், சாமிடிமிருந்து லூசியை பிரிக்கிறது. சாம் ஒரு பிரபல பெண் வழக்கறிஞரை நாடுகிறான். (தமிழ் போல கத்துக்குட்டி வக்கீல் அல்ல). முதலில் மறுக்கும் அவள், பின் ஒரு சந்தர்ப்பத்தில் " அவன் என் கிளையைன்ட்; அவனுக்கு இலவசமாக நான் வாதாடுகிறேன்" என தோழிகளிடம் பொய் சொல்ல, அதை காப்பாற்ற வேண்டி அவனுக்காக வாதாடுகிறாள். லூசி குழந்தை இல்லாத,  ஒரு வளர்ப்பு பெற்றோரிடம் வளர்கிறாள். (தமிழில் சொந்த தாத்தா & சித்தி). 

பெண் வழக்கறிஞர் வாழ்விலும் துயரங்கள். வேலை, வேலை என அவளால் தன் பையனை கவனிக்க முடியவில்லை. இதனால் அவள் பையன் தாயிடம் ஒட்டுதல் இன்றி இருக்கிறான். கணவனை பிரியும் இவள், சாமிடம் நெருக்கமாகிறாள்.

வழக்கில் பல கட்டங்கள் சாம்க்கு எதிராகவே உள்ளது. அவனுக்கு ஆதரவாக சாட்சி சொல்லும் ஒரே நபர் அவன் வீட்டுக்கருகில் இருக்கும், குழந்தை வளர்க்க உதவும் பெண் தான். சாம் குழந்தையை பார்க்க வாரத்துக்கு மூன்று முறை அனுமதி தரப்படுகிறது (தமிழில் கடைசி காட்சியில் தான் சந்திப்பார்கள்).

சாம் அடிக்கடி அவளை பார்க்க வசதியாக, அவள் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே குடி வருகிறான்.தான் நிறைய சம்பாதித்தால் தான் பெண்ணை நன்கு வளர்க்க முடியும் என நிறைய வேலை பார்க்கிறான். சாமின் மகள் பல நாட்கள் இரவில் தூக்கம் வரவில்லை என சாம் இருக்கும் வீட்டுக்கு வந்து விடுகிறாள். படத்தின் இறுதி காட்சியில் வளர்ப்பு தாய் "இவள் உன்னிடம் இருப்பது தான் சரி என தூங்கும் பெண்ணை சாமிடம் வந்து தந்து விட்டு செல்கிறாள்.சாம் அவளிடம் "இவளுக்கு உன்னை போன்ற ஒரு அம்மா தேவை தான்" என்கிறான். கண்ணீருடன் விடை பெறுகிறாள் அவள். குழந்தை சாமின் தோள்களில் உறங்குகிறாள்.. 
***
இனி ஒற்றுமை வேற்றுமை உள்ளிட்ட மற்ற விஷயங்களுக்கு வருவோம்.

கதை மட்டுமின்றி பல இடங்கள் அப்படியே எடுத்து கையாண்டுள்ளனர்.
விக்ரமின் மன நிலை சரியில்லாத நான்கு நண்பர்கள்; பெண்ணுக்கு ஷூ வாங்கும் போது அவர்கள் பணம் தந்து உதவுவது; ஷூ வாங்கி விட்டு மீதி காசுக்கு பலூன் வாங்கி கொண்டு அனைவரும் செல்வது; பெண் தந்தையிடம் கேட்கும் சராமரி கேள்விகள், பெண்ணை பார்க்க ஓடி வரும் தந்தை ஓரிரு நிமிடம் மட்டுமே இருக்கும் போது நீதி மன்ற படிக்கட்டில் வழுக்கி விழுவது, விக்ரமை முதல் முறை சந்திக்கும் வக்கீல் வேறு கேஸ் பேசியவாறே வேகமாய் நடப்பது, அப்போது அவரிடம் விக்ரம் பேசி பேசி கொல்வது ..இப்படி நேரே சுட்ட காட்சிகளை சொல்லி கொண்டே போகலாம்.

மிக வருத்தமான விஷயம் விக்ரம் தலைமுடி, உடல் மொழி, நடை இவையெல்லாம் கூட அப்படியே எடுத்தது தான். சீன் பென் நடிப்பு விக்ரம் நடிப்பை விட பல மடங்கு உயர்ந்தது !! மிக மிக இயல்பான நடிப்பு இவருடையது. தமிழ் படத்தில் இடைவேளைக்கு பின் விக்ரம் மற்றும் குழந்தைக்கு வேலை குறைவாகவும் கோர்ட் சீன்கள் அதிகமாகவும் இருக்கும். சொல்ல போனால் இடை வேளைக்கு பின் ரெண்டு படத்து திரைக்கதையும் பெருமளவு வேறுபட்டது.

ஐ யாம் சாம், தெய்வ திருமகளை விட பிடிக்க முக்கிய காரணம் சொல்ல வருகிற விஷயத்தை விட்டு எங்கும் விலகாமல் நூல் பிடித்த மாதிரி செல்வது தான். தந்தை -மகள் அன்பும், புரிதலும் இதில் இன்னும் பல காட்சிகளிலும் நம் மனதை தைக்கிற படியும் காண்பித்துள்ளனர். மேலும் ஒரிஜினல், ஒரிஜினல் தானே !!

கதை மன நிலை சரியில்லாத நபர், ஒரு பெண் குழந்தையை வளர்ப்பதில் உள்ள சிக்கல்களை அக்குவேறு ஆணி வேறாக அலசுகிறது.   உதாரணமாக கோர்ட்டில் வழக்கறிஞர் "இவள் பெரிய மனுஷி ஆனதும் அந்த சிரமங்களை சாம் எப்படி புரிந்து கொள்வான்" என கேட்க, அதற்கு வரும் பதில் அருமை! ஹீரோயின் மிச்சேல் நடிப்பும் நிஜமாய் அட்டகாசம் ! என்ன ஒரு ஸ்டைல் மற்றும் கம்பீரம் !! சாமுடன் இவர் சேர்வது மட்டும் சினிமாட்டிக் ஆக உள்ளது.

படம் மிக ஜாலியாக நம்பிக்கை தருகிற விதத்தில் முடிகிறது. "ஒரு தந்தையாக இருக்க மிக முக்கிய தேவை அன்பு தான். மற்றவை எல்லாம் ரெண்டாம் பட்சம் தான்" என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது படம்.

ஐ யாம் சாம் : உங்கள் வீட்டுக்கருகில் உள்ள கடையில் டிவிடி காலியாகாமல் இருந்தால் அவசியம் வாங்கி பாருங்கள் !!

Monday, September 5, 2011

வானவில்: அனுஷ்கா பாட்டு - போட்டா போட்டி

பார்த்த படம்: போட்டா போட்டி

கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் ஹீரோவாக நடித்த படம். முன்பே சந்தோஷ் சுப்ரமணியத்தில் ஹீரோவின் அண்ணனாக எந்த முக பாவமும் காட்டாமல் நடித்தவர் தான் ரமேஷ். அதிலிருந்து சற்று முன்னேற்றம் இந்த படத்தில். முக பாவங்கள் கொஞ்சமாவது வருகிறது.

லகான் படம், ஆங்கிலேயர்- இந்தியர் இடையே நடக்கும் கிரிக்கெட் மேட்ச், அதில் இந்தியர் வென்றால் வரி கட்ட வேண்டாம் என்று சுதந்திர போராட்டத்தை பின்புலமாக வைத்து எடுத்தனர். அதையே இங்கு லோக்கலாக மாற்றி விட்டனர். (ஆனால் பட இயக்குனர் சொல்கிறார்: " நான் லகான் படமே பார்த்ததில்லை. எனக்கு ஹிந்தி தெரியாது" . அப்படிங்களா? நல்லதுங்கன்னா. பல காட்சிகள் பார்க்கும் போது நீங்க லகான் பாத்தீங்களா இல்லியான்னு நல்லா தெரியுது !!)

ஆங்காங்கு சிரிக்க வைக்கும் மிக லைட்டான கதை. ஹீரோயின் தான் பெரிய ஏமாற்றம். இந்த பொண்ணுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்?

ஜாலியாக பார்த்து சிரிக்க ஒரு முறை படம் பார்க்கலாம்.

அய்யாசாமியின் சமையல் குறிப்பு


அலோ இந்த வாரம் நான் சட்னி செய்ய கத்துகிட்டேன் தெரியுமில்ல? சட்னி செய்றது ரொம்ப ஈசி. ஐந்தே ஸ்டெப் தான்.

1 . தேங்காயை திருகிக்குங்க . அல்லது கத்தி வைத்து துண்டு, துண்டா கீறிக்குங்க.

2.பச்சை மிளகாய் ஒண்ணு கீறி போடுங்க . காய்ந்த மிளகாய் எனில் தோசை கல்லில் சற்று காய வைத்து பின் போடுங்க.

3.தேவைப்பட்டால் பொட்டு கடலை, இஞ்சி இவற்றில் ஏதேனும் சேர்க்கலாம். இல்லாட்டி சாய்ஸில் விட்டுடலாம். 

4.உப்பு சேர்க்கணும். இதன் அளவு சரியாக புரிந்து கொண்டால் நீங்க கில்லாடி. இந்த வேலையை மட்டும் வீட்டம்மாவே செய்வாங்க. இதை கத்துகிட்டா நாம் "Independent " ஆகிடுவோம் என. இந்த தடையை தாண்டி தொழில் ரகசியம் கத்துக்கணும் !!

5. பின் மிக்சியில் மேலே சொன்ன அனைத்தும் போட்டு அரைக்கணும். ஓரளவு அரைத்த பின் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மறுபடி அரைச்சா சட்னி ரெடி !

இது தேங்காய் சட்னி ! தேங்காயுடன் கொத்தமல்லி அல்லது பொதினா சேர்த்து செய்தால் அது கொத்தமல்லி or பொதினா சட்னி. ஓகே? செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க.

ரசித்த SMS:

Some one asked Buddha " What is Poison?". He gave a great answer: " Everything excess in life is poison".

ரசித்த பாடல் 

தினத்தந்தியில் "இந்த கார்ட்டூனுக்கு விளக்கம் தேவையில்லை" என போடுவார்கள். அதுபோல இந்த பாடல் எனக்கு ஏன் பிடிக்கும் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. இருந்தாலும் முதலில் பாடலை பாருங்கள் பின் சிறு விளக்கமும் உண்டு. ஆம். தலைவிக்காக தான் பாட்டு பிடிக்கும். இந்த பாட்டில் எல்லாமே பிடிக்கும் என்றாலும் பிடிக்காத ஒரே விஷயம் தலைவி வண்டி ஓட்டும் போது பின் சீட்டிலிருந்து ஒரு தலை எட்டி, எட்டி பார்ப்பது தான் ! பின்னே அது அய்யா சாமி உட்கார வேண்டிய இடம் அல்லவா? ஏய் .. ஹூ இஸ் தட் டிஸ்டபன்ஸ்?

பதிவர் பக்கம் 

சமீபத்தில் வாசித்த பதிவுகளில் பிடித்த பதிவு இது.
இன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்


நிச்சயம் இதில் குறிப்பிட்டுள்ள கேள்விகளில் பெரும்பாலானவை எந்த வகை இன்டர்வியூகளிலும் கேட்கப்படுகின்றன. இவற்றிற்கு பதில் யோசித்து வைத்து கொள்வது இன்டர்வியூவை நன்கு அட்டென்ட் செய்ய நிச்சயம் உதவும். வாழ்த்துக்கள் இந்திரா மேடம். தொடர்ந்து இது போல் பிறருக்கு பயன்படும் பதிவுகளை எழுதுங்கள்.

சென்னை ஸ்பெஷல்: மா நரக பேருந்துகள்

சென்னை மாநகர பேருந்து சிலருக்கு நரக பேருந்தாக மாறி வருவது அனைவரும் அறிந்ததே. அதன் புள்ளி விவரங்கள் படிக்க நேர்ந்தது. வருடத்துக்கு சுமார் 150 பேர் சென்னை மாநகர பேருந்தில் இடிபட்டு இறக்கின்றனர். இறப்பவர்கள் மட்டுமே இந்த அளவு எனில் கை, கால் இழந்தவர்கள், காயம் பட்டவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்! அதிகாலை நேரம் மற்றும் இரவு நேரங்களே அதிகம் விபத்துகள் நடக்கின்றன. அதிகம் இறப்போர் ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடப்போர் !! சாலையில் நிரம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மீண்டும் நினைவூட்டுகிறது இந்த புள்ளி விபரமும் தகவலும்.

ரசித்த கவிதை

விடைபெறல் அவ்வளவு
எளிதாய் நிகழ்வதில்லை.
ஒரு கையசைப்பு போதும்
கடைசி வரை உள்ளிருக்க

                             -நிலா ரசிகன்


Thursday, September 1, 2011

விநாயகர் சதுர்த்தி: வீட்டில் எடுத்த வீடியோ & படங்கள்

விநாயகர் சிறு வயது முதலே மிக விருப்பமான கடவுள். கல்லூரி காலத்தில் என்னோடு மிக நெருக்கமானார். (இது பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்)

வருடா வருடம் பிள்ளையாருக்கு அபிஷேகம், அம்மா- பொண்ணு பாடும் பாடல்களுடன் நடக்கும். இம்முறை எடுத்த படங்களும் வீடியோவும் இதோ :

மண் பிள்ளையார் மட்டும் புதிதாய் வாங்கியது. மற்றவை வீட்டில் உள்ளது..

குளிப்பதற்கு தயாராகிறார் பிள்ளையார்....( அபிஷேகத்திற்கு முன்பு .. )


சரி.. பிள்ளையாருக்கு அபிஷேகம் பார்க்கலாமா? செய்தது என மகள் ! எருக்கம் பிள்ளையாரை சாய்த்து சாய்த்து உரிமையாய் குளிப்பாட்டுகிறாள் :))சாப்பாடு தயார் ! எங்க தோட்டத்து இலை ரொம்பவே பெருசு! அதான் நிறைய இடம் காலியா தெரியுது !
பிள்ளையாருக்கு சமைத்த/ படைத்த உணவுகள்.. பச்சை மிளகாய் சாம்பார், கொழுக்கட்டை -ரெண்டு வகை, சுண்டல், வாழைக்காய் வறுவல், பாயசம், அப்பளம்,  வாழைப்பழ அப்பம் & எள் உருண்டை  ! 


குளித்து முடித்து பூஜைக்கு ரெடி ..


பூஜை ..சில வினாடிகள் மட்டும் ...


என் பெண் விநாயகருக்கு தனது மாலை அணிவித்து அழகு பார்த்தாள்..அனைவருக்கும் சதுர்த்தி தின வாழ்த்துகள் !

(பண்டிகை நாளில் டிவி மட்டுமே பார்ப்பதில்லை என்பதை இனியாவது நம்புங்கப்பா.)

மங்காத்தா விமர்சனங்கள் பற்றிய விமர்சனம்

மங்காத்தா படம் வந்தாலும் வந்தது. பதிவர்களுக்கு கொண்டாட்டம் தான். முதல் நாள் படம் பார்த்து விட்டு பதிவெழுதினோர் இருபதுக்கும் மேல். நான் வாசித்த சில விமர்சனங்களும் அது பற்றிய விமர்சனமும் இங்கே. அனைத்து விமர்சனகளுக்கான லிங்க் ஆங்காங்கு தலைப்பிலேயே உள்ளது !

முன்னாலேயே மூணு விஷயம் சொல்லிடுறேன்.

1. எனக்கு அஜித் பிடிக்கும். ஆனாலும் அவர்  Fan அல்ல. 
2. பெரும்பாலான விமர்சனங்கள் பற்றி என் கருத்தும் சுருக்கமாய் கொடுத்துள்ளேன்  
3. இது ஒரு பரிசோதனை பதிவு !

அனைத்திலிருந்தும் ஓரிரு வரிகள் தந்திருப்பதால், இதுவே ஒரு விமர்சனம் வாசித்த எண்ணத்தை ஒருவேளை தரக்கூடும் !


அஜித் show stealer

MSK / Saravana

நிறைய தோல்விகள் தந்தாலும் அஜித்தின் ஒப்பனிங் எப்போதும் போல செம. வீட்டு பக்கம் இருக்கும் ஒரு காம்ப்ளெக்ஸ் தியேட்டரின் இன்றைய இருபத்தியெட்டு ஷோக்களும் ஹவுஸ்புல், புக்கிங் தொடங்கிய சில மணிகளில். காலை ஐந்து மணிக்கு அப்படியொரு கூட்டம் அப்படியொரு ஆரவாரம்.


மங்காத்தா - விதிகளை உடைத்த அஜித்


வலைமனை சுகுமார்

மிக சுருக்கமான விமர்சனம் தந்தாலும் படம் நல்லாருக்கு என சொல்லி விட்டார் சுகுமார்

"தமிழ் சினிமா ஹீரோக்கள் இதையெல்லாம் பண்ணக்கூடாது என இலக்கணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாஸ் ஹீரோக்கள் அந்த இலக்கணங்களை கடைப்பிடிப்பது அவசியம். கதாநாயகியை ஏமாற்றாதது, கெட்ட வார்த்தைகளை தவிர்ப்பது, உண்மையான வயதை மறைப்பது என மாஸ் ஹீரோக்களுக்குண்டான அத்தனை இலக்கண விதிகளையும் துணிச்சலாக உடைத்து மங்காத்தா விளையாடி இருக்கிறார் அஜித்".


மங்காத்தா – வை ராஜா வை


கேபிள் சங்கர்

படம் நல்லாருக்கு; நிச்சயம் ஓடும் என சொல்லி விட்டார் (இவர் இப்படி சொல்வது rare-தான்)

"டூயட் பாடவில்லை, ஏழை குழந்தைகளை தூக்கி வைத்து, ஆயாக்களை கட்டிக் கொண்டு பாடவில்லை. நான் வளர்ந்ததே உன்னால்தான் என்று பார்வையாளர்களை பார்த்து பாடவில்லை. ஆனால் இதுவெல்லாம் இல்லாமல் அஜித் ஒரு அஜித் படம். பல சமயங்களில் ஓவர் பில்டப் சொதப்பிவிடும். ஆனால் அதே சமயம் ஓவர் பில்டப் சும்மா எகிறி அடித்து தூள் பரத்தவும் செய்யும். மங்காத்தா ரெண்டாவது வகை. சும்மா அடித்து தூள் பரத்தியிருக்கிறார்கள்".

மங்காத்தா ஹாட் விமர்சனம் 

பதிவர் சார்: உங்க பேர் என்னங்க? ப்ளாக் பார்த்தா தெரியலை!

"ஹீரோயின் த்ரிஷாவுக்கு வேலையெ இல்லை எனலாம், அஜித்தை உண்மையாக‌ காதலிக்கும் த்ரிஷாவுக்கு காதல் ரசமெ வரவில்லை. ஆன்ட்ரியா, அஞ்சலியை வீணடித்திருக்கிறார்கள்.

குறைகளை அனைத்தையும் தவிர்த்தால், ரசிர்களுக்காக‌ ஆடிய‌
மங்காத்தா ஆட்டத்தில் அஜீத்தும் இயக்குநர் வெங்கட் பிரபுவும் வென்றிருக்கிறார்கள்.."

CP பிரவீன்

"இந்த படத்துக்கு அஜித் வாய்க்குள்ளேயே சென்சார் போர்டு உறுப்பினர்கள் ஒக்காந்து இருந்தாங்க போல. அவர் வாயை திறந்தார்னாலே வெறும் பீப்… பீப்.. சத்தம் தான். அவ்வளவு மோசமான கெட்ட வார்த்தைகள்."

தல-க்காக முதல்நாள் முதல் ஷோ

நாஞ்சில் பிரதாப்

எந்தெந்த படங்களிலிருந்து உருவினார்கள் என்ற விவரத்துடன் பிரதாப் விமர்சனம் சுவாரஸ்யம் !

"எல்லாப்படங்களிலும் "ஹேக்" செய்ய ஐஐடி ட்ராப் அவுட், ஐஐடி கோல்ட் மெடலிஸ்ட்டை கூப்பிடுவதை பார்த்தால் ஐஐடி-யில் "ஹேக்" செய்வது எப்படி என்பதற்கு தனியாக க்ளாஸ் வைத்து சொல்லிக்கொடுக்கிறார்களா என சந்தேகமாக இருக்கிறது. ஐ.டி.ஐ க்கு கூட போகாத நம்ம கேப்டனை இந்த டெக்னாலஜீ விசயத்துல அடிச்சுக் முடியாது. பவர்பாயிண்ட் பிரசன்டேஷனை வைத்து வாசிம்கானின் இருப்பிடத்தையும், நெட்வொர்க்கையும் கண்டுபிடிக்கும் அளவுக்கு தமிழ்சினிமாவில் யாருக்கும் டெக்னாலஜீ பத்தி தெரியவில்லை."


கவிதை வீதி சௌந்தர்

ரொம்ப சீக்கிரம் பதிவு போட்டவர்களுள் ஒருவர். அஜீத் பேன் என சொல்லி விட்டார். எனவே அவருக்கு இந்த படம் பிடிப்பது இயல்பு தான் .

"இசையால் அத்தனைப்பாடல்களையும் அசத்தியிருக்கிறார் யுவன். விளையாடு மங்காத்தா, பல்லேலக்கா, மற்றும் இவன் அம்பானி பரம்பரைடா பாடல்கள் தியாட்டரை கலக்குகிறது. ஆடாமல் ஜெயிச்சோமடா என்று அஜித் ஆடும் போது ரசிகர்களால் அமைதிகாக்க முடியவில்லை."

பிரபாகரனின் தத்துபித்துவங்கள் 

இவரது ப்ளாக் நீண்ட நாளாகவே உள்ளே போக முடியலை. இன்றும் அப்படியே. கிளிக் செய்தாலே இப்படி தான் மெசேஜ் வருகிறது.

Something went wrong while displaying the webpage ! To continue reload or go to another page

எந்த கம்பியூட்டரில் இருந்து பார்த்தாலும் இதே நிலை தான் !!
என்னென்னு கொஞ்சம் பாருங்க பிரபா!

மங்காத்தா- நீண்ட நாட்களுக்கு பின் அஜித்தின் ஹிட்


ஜெயந்தனின் தர்பார்


படத்தின்ட ஹை லைட்டே படம் முடிஞ்சதும் எழுத்தோட்டத்தோடு வரும் ஷூட்டிங் ஸ்போட் சீன்கள் தான்... செம காமெடி...

மொத்தத்தில் தொடர் தோல்விக்கு பிறகு விஜய்க்கு எப்படி காவலன் அமைந்ததோ அதே போல் அஜித்துக்கு மங்காத்தா.

மங்காத்தா "மச்சி ஓபன் தி பாட்டல்"

Suresh Kumar

தயாநிதி அழகிரி தயாரிப்பில் கலாநிதி மாறன் வெளியீட்டில் வந்ததாலோ என்னவோ தவறு செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களே பணத்தை அமுக்கி கொள்வது போல் படம் அமையுது. வெங்கட் பிரபு 2Gயை நினத்து தான் ..............எடுத்தாரோ ?

CP . செந்தில் குமார்

இவர் சளைக்காமல் எல்லா படத்துக்கும் வசங்களை நோட் பண்ணி எழுதுவார். ஆனால் நான் அவற்றை எப்போதும் வாசிக்க மாட்டேன். சாய்ஸில் விட்டுடுவேன் ! இயக்குனரிடம் கேட்கும் கேள்விகள் மட்டும் சுவாரஸ்யம் !


யுவக்ரிஷ்ணா

சுருக்கமான, லக்கி பாணி கிண்டலுடன் கூடிய விமர்சனம்

"ஒரு படத்தில் அதிகபட்சம் நான்கைந்து ட்விஸ்ட் இருக்கும். மாஸ்ராஜா ரவிதேஜாவின் படமென்றால் இருபது இருபத்தைந்து ட்விட்ஸ்ட். மங்காத்தா முழுக்க முழுக்க ட்விஸ்ட்டுதான். படம் முடிந்ததும் தலையெல்லாம் கிறுகிறுத்து விடுகிறது. இரண்டரை மணி நேர படத்துக்கு எழுபத்தைந்து சீன்கள். இந்தப் படத்தில் ஒரு இருநூறு சீன் இருக்குமோ?"


ஜெட்லி

நண்பர் ஜெட்லி அதிகாலை அஞ்சு மணிக்கு படம் பார்த்து விட்டு கொட்டாவியுடன் எழுதிய விமர்சனம்

அஜித் அர்ஜுனை அக்சன் கிங் என்று அழைக்கும் போது தியேட்டரில் பயங்கர விசில். அதே போல் அர்ஜுனும் தல என்று சொல்வார்...அட அட என்னா விசில்... விசில் கூட ஒரு படத்தின் வெற்றியை முடிவு பண்ணும்.

மங்காத்தா இரண்டாவது பில்லாவா -விமர்சனம்இளைய சிங்கம் 

"படத்தில் எத்தனை கேரக்டர் என்று எண்ணுவதற்கே தனி போட்டி வைக்கலாம் அவர்கள் அத்தனை பேரையும் அறிமுக படுத்தவே 45 நிமிடம் காலி மொத்தத்தில் இரண்டாவது பில்லாவா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்"


இட்லி வடை

ஹீரோயின் த்ரிஷா பற்றி சொன்னது ரசித்தேன்.

"த்ரிஷா தான் படத்தில் ஹீரோயின். ஏன் என்றால் அவர் தான் தலயுடன் ஒரு டூயட் பாடுகிறார்!. ஐபிஎல் சூதாட்டம் என்று வருவதாலோ என்னவோ, (தோனி புகழ்) லட்சுமிராயும் படத்தில் வந்துவிடுகிறார். சொல்ல மறந்துவிட்டேன் ஆண்டரியா சில காட்சிகளில் வருகிறார்.

இட்லிவடை மார்க் 50/100 ! ( தலயின் ஐம்பதாவது படம் என்பதால் இந்த மார்க் )"

***
வேறு ஏதேனும் விமர்சனங்கள் தவற விட்டிருந்தால் லிங்க் குடுங்கள் நண்பர்களே !
Related Posts Plugin for WordPress, Blogger...