கோடம்பாக்கம்-நுங்கம்பாக்கம் கொலைகள்
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற இளம் பெண் கொடூரமாக கொல்லப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது; சுவாதி மீது ஏற்படும் பரிதாபம் ஒரு புறம்.. இன்னொரு பக்கம் நம் குடும்ப பெண் யாருக்காவது இப்படி ஆனால் என்ன செய்வது என்கிற பயம் தான் நம்மில் பலரையும் ஆக்கிரமிக்கிறது; நிச்சயம் அவன் ஒரு சைக்கோ அல்லது கூலிப்படை ஆளாய் இருந்திருக்க வேண்டும்.
நம் வீட்டு பெண்களிடம் யாரேனும் தவறாக நடக்க முயன்றால் தயங்காமல் பெற்றோரிடம் சொல்ல சொல்லி கூறலாம்.பல நேரம் ஏதேதோ காரணங்களால் அவர்கள் சொல்வதில்லை என்பதே கசப்பான உண்மை; நண்பர்களிடம் வெளிப்படையாக பேசுகிற மாதிரி பெற்றோரிடம் பேசுவது இல்லை;நாம் நட்பாகவே பழகினாலும் கூட..
சில வாரங்கள் முன் கோடம்பாக்கத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனைவி- மற்றும் அவள் கள்ள காதலனால் கூலிப்படை ஏவி கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. இறந்த வக்கீல் இரண்டொரு முறை தன்னை கொல்ல யாரோ முயல்கிறார்கள் என சந்தேகித்து தப்பித்துள்ளார்.. ஆனால் கடைசியில் மனைவி கொடுத்த தகவலின் பேரிலேயே ஒரு அப்பார்ட்மெண்ட் செல்லும் போது பட்ட பகலில் தெருவில் வைத்து கொல்லப்பட்டார்.
இதில் என்னை ரொம்ப தொந்தரவு செய்த விஷயம் ஒன்று தான்: அந்த வக்கீலை கொல்ல கூலிப்படை வாங்கிய பணம் 3 லட்சமாம் ! 3 லட்சமும் கூலிப்படையை அணுகும் வழியும் தெரிந்தால் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்கிற விஷயம் சில்லிட வைக்கிறது !
அண்மையில் சட்ட சபையில் முதல்வர் கூலிப்படை என்பது தமிழகத்தில் இல்லவே இல்லை; அவர்களை முற்றிலும் ஒழித்து விட்டோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது :)
ரசித்த கவிதை
ஷோபனா பாப்பா
ஒரு ரோஜாப் பூவை
நினைத்துக் கொண்டாள்
கோலமாவில்
ஒரு ரோஜாப் பூவை வரைந்தாள்
வெள்ளை வண்ணமாக
அவளது ரோஜாப்பூ
வாசலில் மலர்ந்து கிடந்தது
ஒரு வெள்ளை ரோஜாவை
அடையாளம் தெரியாமல்
இது என்ன இது என்ன
எனக் கேட்கும்
முட்டாள் மனிதர்களுக்காக
அருகிலேயே
ROSE
என்றும் எழுதி வைத்தாள்
நந்தன் ஸ்ரீதரன்
அழகு கார்னர்
என்னா பாட்டுடே : கோடை கால காற்றே
இளையராஜாவின் மிக சிறந்த பாடல்களில் ஒன்று...
மலேசியா வாசுதேவன் மென்மையான குரலில், அற்புதமான இசைக் கோர்வைகளும் இணைந்து மனதை வருடும்.. !
மெலடி என்றால் - அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த பாட்டு.
பன்னீர் புஷ்பங்கள் என்கிற இந்த படமும் கூட அற்புதமான ஒன்று தான். ஒரே நேரத்தில் 2 படங்கள் பள்ளி பருவ காதலை ஒட்டி வந்தன.. அலைகள் ஓய்வதில்லை.. பள்ளி மாணவன்- மாணவி கடைசி காட்சியில் ஊரை விட்டு ஓடி போய் கல்யாணம் செய்து கொண்டனர்..மாபெரும் வெற்றி.. !! பன்னீர் புஷ்பங்களிலும் ஏறக்குறைய அதே மாதிரி ஊரை விட்டு ஓட எத்தனிக்கிறார்கள்.. ஆனால் அவர்கள் வாத்தியார் வந்து " இவளை கூட்டிட்டு போய் நீ எப்படி குடும்பம் நடத்துவே? எப்படி சம்பாதிப்பே? இப்போ படிச்சு வேலைக்கு போங்க; அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம் " என அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்புவார்..
சோகம் என்னன்னா - சரியான முடிவை சொன்ன இந்த படம் தோல்வி !!
இப்படத்தின் பல பாடல்கள் அட்டகாசம்.. அதிலும் இப்பாடல் ராஜாவின் எனது ஆல் டைம் பாவரைட்டில் ஒன்று..
இதே பாடலின் அழகான இன்ஸ்ட்ருமென்ட் வெர்ஷன் இது :
ஓ.எம்.ஆரில் கொடி கட்டி பறக்கும் வீட்டு உரிமையாளர்கள்
சென்னை ஓ.எம்.ஆரில் மிக நெருங்கிய உறவினர் பெண் வேலைக்கு சேர்ந்தார். ஹாஸ்டல்கள் பற்றி விசாரித்த போது பல இடங்கள் சாப்பாடு சரியில்லை- வேலைக்கு செல்லும் பெண்களாக சேர்ந்து வீடு எடுத்து தங்குவது சிறந்தது என்று - மேலும் விசாரிக்க நல்ல, பாதுகாப்பான இடம் என ஒரு குடியிருப்பை பரிந்துரைத்தனர்.
3 பெட் ரூம் அடங்கிய இந்த வீட்டில் ஒவ்வொரு ரூமிலும் 3 பெண்கள் தங்குகிறார்கள். ஒவ்வொருவருக்கும் வெளியில் ஒரு மெஸ்ஸில் இருந்து வீட்டு ஓனரே சாப்பாடு அரேன்ஜ் செய்து விடுகிறார். ஒருவர் தருவது 8000 ரூபாய் ! மெஸ்ஸுக்கு அநேகமாய் 2000 ரூபாய் தந்தால் அதிகம் ! 6000 ரூபாய் ஒருவருக்கு - ஒரு வீட்டில் ஒன்பது பேர்.. கணக்கு போட்டு பாருங்கள்.. உட்கார்ந்த இடத்தில் சம்பாதிக்கிறார்கள்.
ஓ.எம்.ஆரில் 2-3 பிளாட்கள் இருந்தால் இது போல வாடகைக்கு விட்டு விட்டு ரிட்டயர்டு லைப் மாதிரி வாழலாம் என பேசிக்கொண்டோம். பிளாட்டின் இன்றைய விலை 80 லட்சம்...
ஆயினும் அதே ஓ.எம்.ஆரில் ஏராள பிளாட்கள் காலியாய் இருப்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும் !
ஆதார் அப்டேட்
ஆதார் கார்டுக்கு ஒரு வழியாய் புகைப்படம் எடுத்தது குறித்து அண்மையில் எழுதியது நினைவிருக்கலாம்.
எனக்கும் ஹவுஸ் பாசுக்கும் புகைப்படம் ஒன்றாய் எடுத்தோம். ஒரு வாரம் முன்பு ஹவுஸ் பாஸுக்கு உங்கள் ஆதார் கார்ட் தயார் என மெசேஜ் வந்து விட்டது;எனக்கு இன்னும் காணும். கஜினி முகமது மாதிரி எனது ஆதார் புகைப்பட அனுபவம் தொடரும் என்று நினைக்கிறேன்..