பார்த்த படம் - வேட்டை
வேட்டை குறித்து இரு வேறு extreme-களில் விமர்சனம் வருகிறது. சிலர் மொக்கை என்று சொல்ல, வேறு சிலரோ "ஜாலியோ போகுது; வெரி நைஸ் " என்கிறார்கள். நிஜம் இந்த இரண்டுக்கும் நடுவில் உள்ளது. வேட்டை ஜஸ்ட் டைம் பாஸ் படம். படத்தின் ஹீரோ ஆர்யா தான் ! அனைத்து பாட்டு + சண்டை ஆர்யாவுக்கு தான். இதனாலேயே மாதவன் கிட்ட தட்ட செகண்ட் ஹீரோ மாதிரி வருகிறார். படத்தின் பெரும் ஆறுதல் அமலா பால் ! பெரும் எரிச்சல் சமீரா ரெட்டி. இந்த ரெட்டி பையனை வைத்து கொண்டு கௌதமும் லிங்குசாமியும் எவ்வளவு நாள் தான் அழுவார்களோ? ஏகப்பட்ட க்ளோஸ் அப்பில் முடியலடா சாமி ! இயக்குனர்களுக்கு பத்திரிக்கை மற்றும் இணையம் படிக்கும் வழக்கமே இல்லையா? அனைத்து ஊடகங்களும் சமீரா ரெட்டி குறித்து ஒரே மாதிரி எழுத, இன்னும் எப்படி அவர் பல படங்களில் இடம் பிடிக்கிறார் என்பது புரியாத புதிரே.
நண்பர்களே காஞ்சி கோயில்கள் குறித்த சென்ற பதிவில் சிறு தவறு நிகழ்ந்து விட்டது. கச்சபேஸ்வரர் கோவில் என சொல்லிவிட்டு வேறு கோயிலின் வீடியோ இணைப்பை தந்து விட்டேன். நண்பர் வெங்கட் நாகராஜ் சொன்ன பின் தான் தவறு தெரிந்து, இப்போது சரியான இணைப்பு தந்துள்ளேன். கச்சபேஸ்வரர் ஆலய வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு...ஒரு நிமிடத்துக்கும் குறைவான அளவு நேர வீடியோ தான் இது.
துவக்கத்தில் நாதஸ்வரம் வாசிக்கும் அந்த கலைஞர், இறுதியில் வாசிப்பை நிறுத்தி விட்டு தீபாராதனை பார்க்க போவது வீடியோ கடைசியில் தெரியும்
ஐயோ !
சொன்னால் மறக்கிறார்கள்
எழுதினால் நிராகரிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள்.
-ஆத்மா நாம்
போட்டோ கார்னர்/ சென்னை ஸ்பெஷல்
சில மாதங்களுக்கு முன் எழுத்தாளர் எஸ். ராம கிருஷ்ணனை சந்தித்தது குறித்து எழுதியது நினைவிருக்கலாம். அவரை சந்திக்க அவசரமாக வண்டியில் செல்லும் போது இந்த சிலையை கண்டேன். கையில் காமிரா இருந்ததால், அந்த அவசரத்திலும் நிறுத்தி புகைப்படம் எடுத்தேன். கோவிலும் சிலையும் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ளது.
சென்னையில் மாடர்ன் அடையாளங்களில் ஒன்றான கத்திபாரா பாலத்திற்கு மிக அருகில், கிராமத்தில் இருப்பது போல் இத்தகைய சிலை இருப்பது எவ்வளவு ஆச்சரியம் பாருங்கள் ! விசாரித்த போது கிராமத்து கோவில் என இதை காண்பித்து அவ்வப்போது சினிமா ஷூட்டிங் நடக்கும் என்றார்கள் !அந்த இடமே இன்னும் நிஜ கிராமம் போல் தான் உள்ளது !
பதிவர் அமைதி அப்பாவுடன் ஒரு சந்திப்பு
குடியரசு தினத்தன்று ACS Institute நடத்தும் ஒரு மீட்டிங்குக்கு குரோம்பேட்டை செல்ல வேண்டியிருந்தது. அமைதி அப்பா நீண்ட நாளாக "எங்கள் வீட்டுக்கு ஒரு முறை வாருங்கள்" என அன்புடன் அழைத்து வந்தார். " இம்முறை வருகிறேன்" என சொல்லியிருந்தேன். மீட்டிங் நடத்தும் நான்கு பேரில் நானும் ஒருவன் என்பதால் கணக்கு வழக்கு பார்த்து விட்டு கிளம்ப மிக தாமதம் ஆகி விட்டது. சொன்ன நேரத்தை விட இரண்டு மணி நேரம் தாமதமாக செல்கிறோமே என குற்ற உணர்வாய் இருந்தது.
அமைதி அப்பா குடும்பத்தினர் தங்கள் அன்பில் திக்கு முக்காட வைத்து விட்டனர். இரவு நேரம் ஆகி விட்டதால், விரைவில் கிளம்பும் எண்ணத்தில் இருந்தேன். இருந்த 15 நிமிடத்தில் சாப்பிட்டவை சுவீட், காராசேவு, வடை, சட்னி மற்றும் காபி !! (இதுக்கே இருபது நிமிஷம் ஆகுமே? )
அம்மா- அப்பா - பையன் என்கிற மாதிரி இல்லாமல் நல்ல நண்பர்கள் மாதிரி அவர்கள் பழகும் அன்னியோனியத்தை சாபிட்டவாரே பார்த்து ரசித்தேன். அமைதி அப்பா எழுதும் பதிவுகள் அவர் மனைவி மற்றும் மகன் படித்து சென்சார் செய்த பின் தான் வெளியாகுமாம். " ப்ளாக் எழுத ஆரம்பிச்ச புதுசுல நைட் பதிவு போட்டுட்டு விடிகாலைல எழுந்து கமன்ட் வந்துருக்கானா பார்ப்பார் " என்றார்கள். " ஏன் சார் இப்படி எல்லாம் பண்றீங்க" என்றேன். நானும் அப்படி செய்த கதையை மறைத்து !
கிளம்பும் போது, எங்கள் வீட்டுக்கு பாதி வழி வரை அவரும் கூடவே பைக் ஓட்டி வந்து வழி காட்டினார். இவ்வளவும் முடித்து விட்டு அடுத்த நாள் மெயில் அனுப்புகிறார்" நீங்கள் வந்து போது நாங்கள் உங்களை சரியாக உபசரிக்க வில்லையோ என கவலையாக உள்ளது !"
இவரை என்ன பண்ணலாம்குறீங்க?
வேட்டை குறித்து இரு வேறு extreme-களில் விமர்சனம் வருகிறது. சிலர் மொக்கை என்று சொல்ல, வேறு சிலரோ "ஜாலியோ போகுது; வெரி நைஸ் " என்கிறார்கள். நிஜம் இந்த இரண்டுக்கும் நடுவில் உள்ளது. வேட்டை ஜஸ்ட் டைம் பாஸ் படம். படத்தின் ஹீரோ ஆர்யா தான் ! அனைத்து பாட்டு + சண்டை ஆர்யாவுக்கு தான். இதனாலேயே மாதவன் கிட்ட தட்ட செகண்ட் ஹீரோ மாதிரி வருகிறார். படத்தின் பெரும் ஆறுதல் அமலா பால் ! பெரும் எரிச்சல் சமீரா ரெட்டி. இந்த ரெட்டி பையனை வைத்து கொண்டு கௌதமும் லிங்குசாமியும் எவ்வளவு நாள் தான் அழுவார்களோ? ஏகப்பட்ட க்ளோஸ் அப்பில் முடியலடா சாமி ! இயக்குனர்களுக்கு பத்திரிக்கை மற்றும் இணையம் படிக்கும் வழக்கமே இல்லையா? அனைத்து ஊடகங்களும் சமீரா ரெட்டி குறித்து ஒரே மாதிரி எழுத, இன்னும் எப்படி அவர் பல படங்களில் இடம் பிடிக்கிறார் என்பது புரியாத புதிரே.
காஞ்சி கோயில் குறித்த பதிவில் சிறு திருத்தம்
நண்பர்களே காஞ்சி கோயில்கள் குறித்த சென்ற பதிவில் சிறு தவறு நிகழ்ந்து விட்டது. கச்சபேஸ்வரர் கோவில் என சொல்லிவிட்டு வேறு கோயிலின் வீடியோ இணைப்பை தந்து விட்டேன். நண்பர் வெங்கட் நாகராஜ் சொன்ன பின் தான் தவறு தெரிந்து, இப்போது சரியான இணைப்பு தந்துள்ளேன். கச்சபேஸ்வரர் ஆலய வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு...ஒரு நிமிடத்துக்கும் குறைவான அளவு நேர வீடியோ தான் இது.
துவக்கத்தில் நாதஸ்வரம் வாசிக்கும் அந்த கலைஞர், இறுதியில் வாசிப்பை நிறுத்தி விட்டு தீபாராதனை பார்க்க போவது வீடியோ கடைசியில் தெரியும்
மனதை பாதித்த மரணம்
சக கம்பனி செகரட்டரி ஒருவரின் மரணம் இந்த வாரம் மனதை மிக பாதித்தது. 72-வயதான பிபின் ஆச்சாரியா என்கிற அந்த பெரியவரை நான் சந்தித்ததே இல்லை. எங்களுக்கென்று தனியே யாகூ குழுமம் உண்டு. அதில் இந்தியா முழுதும் உள்ள கம்பனி செகரட்டரிகள் தினம் உரையாடுவோம். தத்தம் சந்தேகங்களை தெளிவு செய்து கொள்ளுவோம். அதில் இவர் activeஆக இருப்பார். மிக இளையவர்களின் வெகு சாதாரண சந்தேகங்களை கூட தெளிவாய், விரிவாய் விளக்குவார். இத்தனைக்கும் எங்கள் Institue-ல் பெரும் பதவியில் முன்பு இருந்தவர் அவர். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். இருவரும் வேலை, திருமணம் என செட்டில் ஆகி விட்டனர். பாரலிசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட தன் மனைவியை மிக பத்திரமாய் பார்த்து வந்தவர். கம்பனி செகரட்டரிகளுக்கான சில உரிமைகளுக்காக மிக போராடி வந்தவர்.
சினிமா தியேட்டர் சென்று படம் பார்க்கும் போது ஹார்ட் அட்டக் வந்து இறந்து விட்டார். அவர் இறந்த செய்தி அவர் மெயிலில் இருந்தே எங்களுக்கு செய்தியாக வந்தது ! அவர் மகன் தான் அனுப்பி இருந்தார். நேரில் அவரை இதுவரை பார்க்கவிடினும் மிக வருத்தமாய் இருந்தது. அவருடன் Forum-ல் பல முறை விவாதம் செய்யும் என் சென்னை நண்பர் ஒருவர் அழுது ஓய்ந்து பல முறை எனக்கு போன் செய்து மாய்ந்து மாய்ந்து போனார். அவர் இறந்த பிறகு தான் பலரும் அவரை பாராட்டி எழுதினோம். அவர் இருந்த போதே எழுதி இருந்தால் அவராவது படித்து மகிழ்ந்திருப்பார் :((
ரசித்த கவிதை
ஐயோ !
சொன்னால் மறக்கிறார்கள்
எழுதினால் நிராகரிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள்.
-ஆத்மா நாம்
சென்னையில் மாடர்ன் அடையாளங்களில் ஒன்றான கத்திபாரா பாலத்திற்கு மிக அருகில், கிராமத்தில் இருப்பது போல் இத்தகைய சிலை இருப்பது எவ்வளவு ஆச்சரியம் பாருங்கள் ! விசாரித்த போது கிராமத்து கோவில் என இதை காண்பித்து அவ்வப்போது சினிமா ஷூட்டிங் நடக்கும் என்றார்கள் !அந்த இடமே இன்னும் நிஜ கிராமம் போல் தான் உள்ளது !
350- தொடர்வோரும் தமிழ் மணம் டாப் 20-ம்
பதிவெழுதுவதில் அவ்வப்போது சில மகிழ்ச்சிகள் கிட்டவே செய்கின்றன. வீடுதிரும்பலை தொடர்வோர் 350 என்கிற எண்ணிக்கையை தொட்டுள்ளது. இருநூறு தொடர்வோர் சேர்ந்தது சென்ற ஆண்டு ஜனவரியில் - இது அப்போது எழுதிய வானவில் மூலம் தெரிகிறது. சென்ற ஜனவரி முதல் இந்த ஜனவரி வரை ஓராண்டில் 150 பேர் சேர்ந்துள்ளனர். நினைத்தால் மலைப்பாய் தான் உள்ளது. இது தவிர 2011-ல் தான் இன்ட்லியில் தொடர்வோர் வசதி வந்தது. அதிலும் 140க்கும் மேற்பட்ட நண்பர்கள் தொடர்கிறார்கள். மகிழ்ச்சி.
சென்ற வார தமிழ் மணம் டாப் 20-ல் வீடு திரும்பல் 9-ஆம் இடத்தில். இது நீயா நானா என்கிற பதிவு செய்த வேலை. நன்றி நண்பர்களே !