Tuesday, March 11, 2014

நிமிர்ந்து நில் = காதுல பூ - விமர்சனம்

ம்ம இயக்குனர்களுக்கு 2-3 வருடத்துக்கு ஒரு முறை நாட்டில் லஞ்சம் தலை விரித்தாடுவது ஞாபகம் வந்து விடும்.  இதனை கண்டு பொங்கியெழும் ஒரு ஹீரோவை சினிமாவில் படைப்பார்கள். இந்த ஹீரோ டிவி- யிலும் இன்ன பிற இடங்களிலும் பேசுவதை மக்கள் தெருவோர கடைகளின் வெளியே நின்றவாறு டிவி பொட்டியில் கண்டு களிப்பார்கள். ஹீரோ பேசப்பேச பார்த்து கொண்டிருக்கும் மக்களுக்கு உணர்ச்சி ஊற்றெடுக்கும். மக்கள் பொங்கி எழுவார்கள். " இவர் மாதிரி ஆளு தான் நாட்டுக்கு தேவை " என மைக் வைத்த  டிவி காம்பியர்களிடம் பேட்டி தருவார்கள்.

" அவர் சொல்றதது நியாயம் தானுங்களே....

"இவருக்காக நான் என் உயிரையும் தருவேன். அவரு ஜெயிக்கணும்ங்க "

"அவர்க்கு மட்டும் ஒண்ணு ஆகட்டும்.. அப்புறம் தமிழ்நாடு என்ன ஆகுதுன்னு பாருங்க... "

நிற்க. இந்த படங்களின் ரிலீசின் போதும் முதல் சில நாட்கள் தியேட்டரின் வெளியே ப்ளாக் டிக்கெட் விற்பார்கள். லஞ்சம், ஊழல், நேர்மை என்று பேசும் இயக்குனர்கள் இதை கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

(லஞ்சம் பற்றி பேசிய இந்தியன் மற்றும் அந்நியன் பார்க்கும் போது தியேட்டரின் வெளியே ப்ளாக் டிக்கெட் விற்பதை கண்ணால் கண்ட அனுபவம்... இப்படம் பார்த்தது திங்கள் என்பதால், அந்த அனுபவம் கிட்ட வில்லை )

******************************



சிட்டிசன், ரமணா, இந்தியன் வகை படங்களின் லேட்டஸ்ட் வெர்ஷன் தான் நிமிர்ந்து நில்.

சினிமா என்பது என்ட்டர்டெயின்மென்ட் என்ற வகையில் ரொம்ப யோசிக்காமல் பார்த்தால் முதல் பாதி ஓரளவு ஓகே என சொல்ல வைக்கிறது (பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் )

ஆனால் இரண்டாம் பாதி..

முடியல !

முழுக்க முழுக்க காதுல பூ ! வேற ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

******************************

பல லாஜிக் ஓட்டைகள் பப்பரப்பா என பல் இளிக்கிறது..

பெரும்பாலான ட்ராபிக் போலிஸ் காரர்கள் மாமூல் வாங்குகிறார்கள் என்பது சரி தான். இருந்தாலும்,  ட்ராபிக் ரூல் Violation என்றாலோ, கையில் லைசன்ஸ் உள்ளிட்ட documents இல்லை என்றாலோ தான் காசு வாங்குவார்கள்.



படத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் துவக்கமாய் இருக்கும் காட்சியில் ஹீரோ எந்த ட்ராபிக் வயலேஷனும் செய்ய வில்லை. அனைத்து டாக்குமெண்ட்சும்  இருக்கிறது. இருந்தும் 100 ரூபாய் கேட்டு - அது தராததால் டார்ச்சர் செய்கிறார்களாம் !

20 வருடமாய் சென்னையில் வண்டி ஒட்டுகிறேன். டாக்குமெண்ட்ஸ் ஒழுங்காய் இருந்த எந்த நேரமும் - எல்லா போலிசும் மேலே கேள்வி கேட்டதே இல்லை... அனுப்பி விடுவார்கள்...

இந்த சம்பவம் தான் படத்துக்கே அடிப்படை என்பது தான் பிரச்சனையே..

 அரசியல் வாதிகள் மேல் தப்பு இல்லை - அரசு அதிகாரிகள் மேல் தான் தவறு என்பது இயக்குனர் லாஜிக். ஒவ்வொரு அரசு துறையிலும் அரசியல் வாதிகள் பிக்ஸ் செய்யும் "கலக்ஷன் டார்கெட்" பற்றி அன்னாருக்கு தெரிய வில்லையா ?

முன்னே பின்னே தெரியாத அம்மாஞ்சி ஹீரோ- வை 6 மாசம் பின் தொடர்ந்து ஹீரோயின் காதலிக்க  ஒரு காரணமும் ஒழுங்காய் இல்லை.

இரண்டாவது ஜெயம் ரவி... எல்லா பெண்களையும் மானா வாரியாக கட்டி பிடிக்கிறார்.. கேட்டால் அனாதைகளின் பாதுகாவலராம்  !

இடைவேளை முடிந்து படம் துவங்கியதுமே - படு ஸ்லோவான பாட்டை போட்டு - அங்கே தொபுக்கடீர் என விழுகிற படம்... அப்புறம் எழுவதும், வீழுவதுமாய் தொடர்கிறது..

படத்தில் உருப்படியான விஷயங்கள்

வேகமாய் செல்லும் முன்பாதி. ஜெயம் ரவி உழைப்பு. ஞானசம்பந்தம் நடிப்பு

ஹீரோ ஜெயம் ரவி ஹிட் கொடுத்து ரொம்ப நாளாச்ச்சு.. இன்னொரு வெற்றி இப்படத்தில் சாத்தியம் ஆகலை..

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் - சமுத்ரக்கனி & ஜெயம் ரவி

Tuesday, March 4, 2014

தெகிடி & பண்ணையாரும், பத்மினியும் -விமர்சனம்

தெகிடி

ரத்தம் கொப்பளிக்க வில்லை... பேய் இல்லை ...யாரும் பயத்தில் அலற வில்லை ..இருப்பினும் விறுவிறுப்புக்கு குறைவில்லை..  (ஆமாம் .. ஏன் அந்த தலைப்பு?)

மிக நல்ல ஆப்செர்வேஷன் கொண்ட ஹீரோ - டிடெக்டிவ் வேலையில் சேர்கிறான். அவன் யாரைப் பின் தொடர்ந்து ரிப்போர்ட் தருகிறானோ அவர்கள் ஒவ்வொருவராய் இறக்க, அதனை துப்பறிகிறான் . கொலைக்கான காரணமும், படத்தின் முடிவும் அசத்தல்.



வில்லா -2 வில் மிக சுமாராக நடித்த அசோக் செல்வன் - இப்படத்தில் நடிக்க துவங்கி விட்டார். ..நன்றாகவே ! டிடெக்டிவ் பாத்திரத் துக்கு  - தேவையான பொறுமை, புத்திசாலித்தனம், டென்ஷன் போன்றவற்றை நன்கு பிரதிபலித்துள்ளார்.

ஜனனிக்கு சிறிய (ஆனால் முக்கிய)  பாத்திரம். காதல் போர்ஷன் - படத்தின் சுமாரான பகுதிகளில் ஒன்று. அப்பகுதி எப்படா முடியும் என்று தான் இருக்கிறது.

பின்னணி இசை சில நேரம் ஈர்த்தாலும், பல நேரம் தேவையின்றி அதிகப்படியாக ஒலிக்கிறது

கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள ரமேஷ் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய இளம் இயக்குனர்; CV  குமார் தயாரிப்பில் பல நல்ல படங்கள் (அட்ட கத்தி, பிஸ்சா, சூது கவ்வும் ) வருவதும் குறிப்பிட தக்கது.

5 பாட்டு, நாலு பைட்டு என பார்த்து பார்த்து நொந்து போன சினிமா ரசிகர்களுக்கு தெகிடி - ஒரு வரவேற்கத்தக்க மாறுதல். 

அவசியம் ஒரு முறை காணலாம் ... தெகிடி - யை !

பண்ணையாரும், பத்மினியும் 

சற்று தாமதமாக தான் இப்படத்தை காண முடிந்தது 

பண்ணையார் - நண்பரிடமிருந்து பெறும் பத்மினி காரை, இழந்து பின் மீட்பதே ஒரு வரி கதை. 

ஜெயப்ரகாஷ் - பண்ணையார். டிரைவர்- விஜய் சேதுபதி.. கூடவே பத்மினி கார் + பீடை என சொல்லும் அல்லக்கை... இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி நன்றாகவே வொர்க் அவுட் ஆகிறது 


வித்தியாச கதைக்களன் எடுத்தமைக்கே முதல் பாராட்டு. (நான் இதன் ஒரிஜினல் ஷார்ட் பிலிம் பார்க்க வில்லை; எனவே அதனோடு ஒப்பிட்டு குழப்பிக்கொள்ளும் துர் பாக்கியம் நிகழ வில்லை ) 

படத்தை ரசிக்க - ஜெயப்ரகாஷ், விஜய் சேதுபதி - இயக்குனர் மூவரும் சரி சம காரணம். 

காரை வைத்து நடக்கும் சில சம்பவங்கள் டிராமா வகை எனினும் ரசிக்க முடிகிறது. குறிப்பாக கார் ஓட்ட கற்று கொள்வதை விலாவாரியாக காண்பித்துள்ளனர்.. ரசிக்கும் விதத்தில் !

செந்தில் ஒரு படத்தில் "லெக் தாதா" வாக நடித்திருப்பார். அவர் கால் வைத்தாலோ " நல்லாயிரு " என்றாலோ - அவர்கள் உருப்படாமல் போய் விடுவர் ...!  அதே போல இங்கு " பீடை " பாத்திரம்; இவருக்கு தந்துள்ள சிச்சுவேஷன்  பலவும் செமையாக சிரிப்பு வர வைக்கிறது. படத்தில் ரொம்பவும் கவரும் பாத்திரங்களில் இதுவும் ஒன்று  

சிற்சில இடறல்கள் இல்லாமல் இல்லை 

பண்ணையாரும் அவர் மனைவியும் அநியாயத்துக்கு நல்லவர்களாக காட்டுவது... 

அவ்வளவு நல்ல மனிதர்களுக்கு வில்லி போன்ற ஒரு மகளை சித்தரிப்பது (இம்புட்டு நல்லவர்களுக்கு இவ்வளவு மோசமான குழந்தைகள் பிறப்பதில்லை ) 

துணை நடிகையாக கூட வர முடியாதவரை ஹீரோயின் ஆக்கியது (பாடல் காட்சிகளில் மட்டும் மேக் அப் மூலம் சமாளிக்கிறார்) 

மேலே சொன்ன சிற்சிறு குறைகள் இருப்பினும் படத்தை ரசிக்கவோ, சிரிக்கவோ அவை பெரும் இடையூறாக இல்லை. 

நல்லதொரு பீல் குட் மூவி.... பண்ணையாரும் பத்மினியும்... !
Related Posts Plugin for WordPress, Blogger...