Friday, October 28, 2016

கொடி : சினிமா விமர்சனம்

தனுஷுக்கு கடந்த சில வருடங்களில் வேலை இல்லா பட்டதாரி தான் மாஸ் ஹிட்; மாரி  போட்ட பணத்தை எடுத்ததால் சுமாரான ஹிட் என்று கேள்வி. (படம் மற்றும் பொதுவான ரிவியூ மிக மோசம் !)

கொடியாவது கை  கொடுத்ததா?

கதை 

இரட்டை பிறவிகள் தனுஷ்.. ஒருவர் நேர்மையான அரசியல் வாதி.. தம்பி கல்லூரி ஆசிரியர்.. த்ரிஷா மற்றும் அனுபமா இருவருக்கும் காதலிகள்..

தனுஷ் மற்றும் அவரது காதலி த்ரிஷா தேர்தலில் எதிர் எதிரே போட்டியிடும் சூழல்.. இதற்கு பின் நிகழும் விஷயங்கள் நிச்சயம் திடுக்கிட வைப்பவை  !

தனுஷ் - த்ரிஷா 

படத்தை அசால்ட்டாக சுமப்பது தனுஷ்.. 2 பாத்திரத்துக்கு நல்ல வித்யாசம் காட்டுகிறார்.

த்ரிஷா - பாத்திரம் செம வித்யாசம் ! நீலாம்பரியை மனதில் வைத்து - அந்த அளவு வரணும் என நினைத்து  செய்துள்ளனர். நீலாம்பரி அளவு இல்லா விடினும் - நிறைய சர்ப்ரைஸ் இருக்கு இவர் பாத்திரத்தில்

மற்றொரு நாயகி அனுபமா ப்ரேமம் படத்தில் நடித்தவர். அழகு + நடிப்பு இரண்டிலும் அருமை; தமிழில் நிறைய நடிங்க மேடம் !

Image result for kodi film

கதை மற்றும் இயக்கம் 

அரசியல் மற்றும் தேர்தல் என வித்தியாச கதை களம் .. தேவையற்ற காட்சிகள் அநேகமாய் இல்லை (சில சண்டை அல்லது பாடல் காட்சிகள் தவிர்த்து ) கதை எடுத்து கொண்ட விஷயத்தில் சரியே பயணிக்கிறது.

நேர்மையான அரசியல் வாதி (தனுஷ்) Vs நேர்மையற்ற அரசியல் வாதி (த்ரிஷா) என இரண்டு பாத்திரங்களை அமைக்கும் போதே சுவாரஸ்ய காட்சிகளுக்கு பேஸ் அமைந்து விடுகிறது !

இரண்டாம் பகுதியில் பல சின்ன சின்ன சர்ப்ரைஸ் உள்ளது; கதை தெரியாமல் பார்த்தால் அவற்றை ரசிக்கலாம்.

Image result for kodi film

மண்ணாசை பெண்ணாசை இந்த இரண்டையும் விட மோசமானது பதவி ஆசை என்பார்கள். படம் இந்த கருத்தை சுற்றியே தான் சுழல்கிறது .

மொத்தத்தில் 

படம் எங்களுக்கு நிரம்ப பிடித்திருந்தது; ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்சும் தியேட்டரில் நன்றாகவே இருந்தது; (நான்கைந்து குட்டி பசங்க படம் முடிந்து வரும் போது " செமையா இருந்துச்சு படம்" என பேசிக்கொண்டு போனது ஸோ சுவீட்)

 இருப்பினும் தேர்தல் - அரசியல் போன்ற விஷயங்கள் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகம் பிடிக்காமல் போகவும் செய்யலாம் !

கொடி - நிச்சயம் ஒரு முறை காண வேண்டிய படம்  !

***********
அண்மை பதிவு : 

காஷ்மோரா சினிமா விமர்சனம்

காஷ்மோரா : சினிமா விமர்சனம்

காஷ்மோரா பார்க்க 2 காரணங்கள்: முதலில் ட்ரைலர் - நிச்சயம் இது வித்தியாச படம் என சொல்லியது; இரண்டாவது இயக்குனர் கோகுல். இவரின் இதற்கு தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட காமெடி எனக்கு மிக பிடித்தமான ஒன்று; விஜய் டிவியில் இப்படம் அடிக்கடி போட்டாலும் அலுக்காமல் பார்த்து சிரிப்பேன்.

அதனை விட வித்தியாச genre -ல் இப்படம்.. எப்படி இருக்கிறது காஷ்மோரா?

கதை 

பேய் விரட்டுபவர் என சொல்லி ஊரை ஏமாற்றும் கூட்டம் கார்த்திக்- விவேக்குடைய குடும்பம்.

இவர்களை குடும்பத்தோடு யாரோ எதற்கோ கடத்தி செல்கிறார்கள்.. எதற்கு கடத்தப்பட்டார்.. தப்பித்தாரா என்பதை வெண் திரையில் காண்க

Kaashmora (aka) Kasmora #4

பிளஸ் 

கோகுல் காமெடியில் அசால்ட்டாக விளையாடுவார் என்பது தெரிந்த விஷயம்; இங்கும் கூட காமெடி தான் படத்தை ரசிக்க வைக்கிறது

கார்த்திக்கு கிட்டத்தட்ட சிறுத்தை படத்து திருடன் மாதிரி செம காமெடி காரெக்டர்.. மனுஷன் அழகாக செய்துள்ளார். உடன் விவேக்கும் முடிந்த வரை ஸ்கொர் செயகிறார்.. இவர்களின் சில கூத்துகள் "மேல்மருவத்தூர் " குரூப்பை நினைவு படுத்துகிறது.

நயன்தாரா இடைவேளைக்கு பின் வந்தாலும் - நினைவில் நிற்கிறார். மாற்றாக ஸ்ரீ திவ்யாவிற்கு ஏனோ தானோ பாத்திரம். ஹீரோவே அவரை அடிக்கடி லூசு என்றே அழைக்கிறார் (நயன் - ஸ்ரீ திவ்யா இருவருமே - கார்த்திக்கு ஜோடி இல்லை.. ரொம்ப ஆச்சரியமான விஷயம் தான் இது )
Image result for kashmora heroine

ஹீரோ மட்டுமல்ல - வில்லனும் கார்த்தி தான்.இதனால் மனிதருக்கு செம ஸ்கொப்

மைனஸ் 

ட்ரைலரில் ராஜா, போர் என நிறைய எதிர் பார்க்க வைத்து விட்டார்கள்.  அந்த பகுதி முக்கால் வாசி படம் தாண்டிய பின் தான் வருகிறது, ஆனால் அது மனதை பாதிக்கும் வண்ணம் இல்லை; உண்மையில் அந்த பகுதியை விட கார்த்தி- விவேக் ஏமாற்றும் நிகழ் காலமே ரசிக்கும் வண்ணம் உள்ளது; பிளாஷ் பேக்  பன்ச் ஆக இல்லாமல் போனது தான் படத்தின் பெரும் மைனஸ்

பிளாஷ் பேக் போரில் ஒரு படையையே - கார்த்தி ஒரே ஆளாய் வெட்டி கொள்வதெல்லாம்.. காதுல பூ

கம்பியூட்டர் கிராபிக்ஸ் வேலை ரொம்ப ரொம்ப சுமார்

இறுதி அனாலிசிஸ்

பேய், காமெடி காட்சிகள் நிச்சயம் குழந்தைகளை கவரும்.

வித்தியாச கதை காளன்  மற்றும் காமெடிக்காக ஒரு முறை காணலாம்.

காஷ்மோரா: Good. Could have been better !

***********

கொடி  : சினிமா விமர்சனம்

வானவில்: ரெக்கை- ஏறுமாறான கேஸ் சிலிண்டர் விலை-தீபாவளி படங்கள்

பார்த்த படம் : ரெக்கை 

விஜய் சேதுபதிக்கு மாஸாய் ஒரு படம் நடிக்க ஆசை; அதில் ஒன்றும் தப்பில்லை; ஆனால் கதையில் ஒரிஜினாலிட்டி மற்றும் சுவாரஸ்யம் இருந்திருக்க வேண்டும் !

கில்லி படத்தில் இருந்து inspire ஆன கதை என நினைக்கிறேன். கில்லியில் பாடல்கள், காமெடி இரண்டுமே ரசிக்கும்படி இருக்கும். இங்கு இரண்டும் படுத்து விட்டது.

போதாக்குறைக்கு ஹீரோயின்... !! தமிழ் சினிமாவில் ஹீரோயினை லூசு பெண்ணாய் காட்டுவதில் ஆச்சரியமே இல்லை;  "இதுவரை வந்த எல்லா லூசு ஹீரோயினுக்கும் ராணியாக இருக்கிறார்- இந்த பட ஹீரோயின் " என ஹிந்து பத்திரிக்கை மிக சரியாக எழுதியது.

லூசுத்தனம் ஒரு புறம் என்றால்- ஏழெட்டு ரவுண்டு அதிகமாய் போட்ட மேக் அப் வேறு பயமுறுத்துகிறது. கிட்டத்தட்ட ஒயிட் வாஷ் செய்த மாதிரி தான் இருக்கிறார் லட்சுமி மேனன் (அவரது நிஜ கலரை கும்கியில் பார்த்திருக்கோமே!)

சண்டைகளில் - ஹீரோ அடித்தால் எல்லாரும் அந்தரத்தில் பறக்கிறார்கள். படத்தின் பட்ஜெட்டில் ஹீரோவிற்கு அடுத்த அதிக செலவு - சண்டையில் ரோப் கட்டி பறக்க வைத்தமைக்கு தான் இருக்க வேண்டும்.

50 பேராக வந்து ஹீரோவோடு சண்டை போடுகிறார்கள். 50 பேரையும் ஹீரோ பறக்க விடுகிறார். ஒவ்வொருவராய் மட்டுமே வந்து அடி வாங்குகிறார்கள். கொடுமை !

ரெக்க - மொக்க !

அழகு கார்னர் 

ஸ்ரீ திவ்யா 
கேஸ் சிலிண்டர் விலை 

கேஸ் சிலிண்டர் விலை முன்பெல்லாம் ஒரே நிலையில் இருக்கும்; சற்று விலை ஏற்றம் நிகழ்ந்தால் பெரும் சத்தம் எழும். ஆனால் சமீப காலத்தில் கேஸ்  விலை ஒவ்வொரு மாதமும் மாறி கொண்டே இருக்கிறது.. ஆனால் எந்த சத்தமும் காணும் !

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம்; எல்லா நேரமும் விலை ஏற்றம் மட்டுமே நிகழவில்லை; சில நேரம் குறையவும் செய்கிறது ! ஒன்றாம் தேதி மாறும் விலை - அந்த மாதம் முழுதும் நீடிக்கிறது.

இருக்கட்டும்.. சிலிண்டர் போடும் பசங்க செய்யும் அநியாயம் மட்டும் மாறவே இல்லை; 40 ரூபாய்க்கு ஒரு ரூபாய் கம்மியாய் தந்தாலும் கன்னா பின்னாவென்று கத்துகிறார்கள் ! தருவதோ டிப்ஸ் ! இதில் நாமாய் பார்த்து தருவதை - வாங்கி கொள்ளாமல் அவங்க போடுற சவுண்ட் ஓவராய் இருக்குது மை லார்ட் !

ஜீ தமிழில் Fat VS Fit நிகழ்ச்சி

தமிழ் தொலை காட்சியில் 100 கிலோவிற்கு மேல் இருக்கும் ஆண்/ பெண் 8 பேரை வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சி Fat VS Fit. கொஞ்ச நாள் முன்பு தான் விஜய் டிவியில் ஒல்லி பெல்லி என இது போல ஒரு நிகழ்ச்சி வந்தது.

ஒவ்வொருவரையும் அழைத்து "குண்டா இருக்கறதுக்கு நீங்க வருத்தப்படுறீங்களா ? (பின்னே சந்தோஷப்படுவாங்களா?) எப்ப ரொம்ப பீல் பண்ணீங்க " என ஒரே மாதிரி கேள்விகள்.

குறிப்பிட்ட காலத்தில் யார் அதிக எடை குறைக்கிறார்கள் என்பது தான் போட்டி. சென்னையை சேர்ந்த கலர்ஸ் என்கிற நிறுவனம் இதனை  நடத்துகிறது; எனவே நிகழ்ச்சி நடக்கும்போதே திரையில் அவர்கள் நிறுவனம் குறித்த விளம்பரங்கள் ஓடி கொண்டே இருப்பது பெரும் இடைஞ்சல்.

என்ன கொடுமை சார் இது !

தென்காசி அருகே சர்க்கரை நோய்க்கு புதிதாக - தானே தயாரித்து மருந்து  கண்டு பிடித்தேன் என ஒரு டாக்டர் (??) அறிவித்து, அந்த மருந்தை நோயாளிகள் சிலருக்கு (அனைவரும் 40 வயதை ஒட்டியவர்கள்)  தந்திருக்கிறார். மூவர் உடனே  மயங்கி  விழ, மருந்தில் ஒன்னும் பிரச்சனை இல்லை என  நிரூபிக்க தானும் குடித்து  காட்டியுள்ளார்.சில நிமிடங்களில் நோயாளிகள் மூவர் மட்டுமல்ல, மருத்துவரும் இறந்து விட்டார் !

மருத்துவர் என சொல்லி கொண்டு இருக்கும் Quack களை எப்போது தான் முழுவதுமாக ஒழிக்க போகிறோமோ?

கிரிக்கெட் கார்னர்

டெஸ்ட் மேட்ச்களில் வழிந்து கட்டிய நியூசிலாந்து ஒன் டே மேட்ச்களில் நன்றாகவே ஆடுகிறது. இருப்பினும் இந்தியா தோற்ற 2 மேட்ச்களும் ஜெயித்திருக்க வேண்டியவை ! 240-260 ரன்களை இந்த 2 மேட்ச்களிலும் அடிக்காமல் இந்தியா தோற்றது அநியாயம் ! இரண்டு மேட்சிலும் கோலி சீக்கிரம் அவுட் என்பது கவனிக்க படவேண்டிய  விஷயம்.ஒரு காலத்தில் சச்சினை நம்பியிருந்தது போல் இப்போது கோலியை தான் இந்திய அணி பெரிதும்  நம்புகிறது.இத்தகைய Over dependency அணிக்கு நிச்சயம் நல்லதல்ல !

பேட்டிங்கில்  கோலி  தவிர,தோனி தான் ஓரளவுக்கு அடிக்கிறார். ரோஹித் மற்றும் ரஹானே ஒரு மேட்சிலும் நல்ல ஓப்பனிங் தரவில்லை; நல்ல 2 வீரர்கள் இவர்கள் இருவரும்.. அனுபவம் வாய்ந்தவர்களும் கூட.. இந்திய பிட்சில் கூட அடிக்கா விட்டால் என்ன சொல்வது !

மிடில் ஆர்டரும் மிக புதியவர்கள் .. மனிஷ் பாண்டே மற்றும் கேதார் ஜாதவ்.. இருவரும் சொல்லி கொள்கிற மாதிரி இதுவரை ஸ்கொர் செய்யவில்லை (பாண்டே முன்பு ஆஸ்திரேலியாவில் ஒரு செஞ்சுரி அடித்தவர் !)

யுவ்ராஜிற்கு ஏன் வாய்ப்பு தவறவில்லை என்பது புரியாத புதிர் !

தீபாவளி படங்கள்

காஷ்மோரா மற்றும் கொடி என தீபாவளிக்கு வெளியாகும் 2 படங்களுக்கும் டிக்கெட் போட்டாச்சு. இன்று இரவு/ நாளை 2 பட விமர்சனமும் வீடுதிரும்பலில் வெளியாகும் !

அண்மை பதிவுகள்  : 

காஷ்மோரா சினிமா விமர்சனம்

கொடி  : சினிமா விமர்சனம்

Thursday, October 27, 2016

ஜெயமோகனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?

ணையத்தில் ஒரு வீடியோ சில நாட்களாக சுற்றி  வந்தது;வங்கியில் பணி புரியும் ஒரு பெண்மணி மிக மெதுவாக  பணத்தை எண்ணி தருவதை காட்டும் வீடியோ அது.



இதனை யாரோ ஒருவர் ஜெயமோகனுக்கு அனுப்பி  வைக்க,அந்த பெண்மணி ஒரு தேவாங்கு, அடித்து வெளியே துரத்தணும்; வீட்டில் போய் கீரை ஆய்ந்தால் கூட நன்றாக செய்வாரா என  எழுதியிருந்தார்.


ஜெயமோகன் எழுதியது:

தேவாங்கு
“நியாயப்படி இந்தக்கிழவியை அப்படியே கப்பென்று கழுத்தோடு பிடித்து வெளியே தள்ளி மிச்ச காசைக்கொடுத்து அனுப்பவேண்டும். வீட்டில் கீரை ஆய்வதைக்கூட இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்யும்போல.

இது திறமையின்மை மட்டும் அல்ல. நெடுங்காலமாக மூளையை எதற்குமே பயன்படுத்தாமல் வைத்திருக்கும்போது ஏற்படும் சோம்பல். அதைவிட முக்கியமாக எதிரே நிற்பவர்களைப்பற்றிய பரிபூர்ணமான அலட்சியம்.

எனக்கு இரு தேசியவங்கிகளில் கணக்கு இருக்கிறது. கனரா வங்கியிலும் ஸ்டேட் வங்கியிரும் இதே அனுபவம் பலமுறை ஏற்பட்டிருக்கிறது. நேற்றுகூட. இவைகளை அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது, சோஷலிசம்!”.
**********************
ந்நிலையில் இந்த பெண்மணி பற்றி வந்திருக்கும் இந்த தகவலை பாருங்கள்




மீண்டும் ஜெயமோகனுக்கு வருவோம்; தான் யார்.. எந்த உயரத்தில் இருக்கிறோம் என்பது புரியாமல், இணையத்திற்கு புதிதாய் வந்து சலம்பும் விடலை பையன் போல எந்த ஒரு முதிர்ச்சியும் இல்லாமல் ஜெயமோகன் எழுதியது பெரும் ஏமாற்றம்..

வீடியோவை பார்க்கும் போது நிச்சயம் அந்த பெண்மணி எதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவர் என தெளிவாக தெரிகிறது. உடல்நிலை/ மனநிலை சரியில்லாதவர் என்பதை நிச்சயம் ஊகிக்க முடிகிறது; ஒருவரின் அனுமதி இன்றி அவரை வீடியோ எடுப்பதே  தவறு;குறைந்த பட்சம் முகத்தை மறைத்தாவது அதை வெளியிட  வேண்டும்.

பெண் என்பதால் - கீரை ஆய சொல்லி  சொல்கிறார் பாருங்கள் .. அங்கே  தெரிகிறது ஜெயமோகனின் நிஜ மனது.

இப்போது அந்த பதிவை அகற்றி விட்டார்.. இதிலேயே அவர் செய்தது தப்பு என அவர் ஒத்து கொள்வது புரியும்.. ஆனால் அப்படி எழுதியதற்கு குறைந்த பட்சம் மன்னிப்பாவது அவர் கோர வேண்டும் ! அப்போது தான் அவரை ஆளுமை என்றும், ஆசான் என்றும் சொல்ல தகுதி இருக்கும்.

படிக்கிறது ராமாயணம்; இடிக்கிறது பெருமாள் கோவில் என ஒரு பழமொழி சொல்வார்கள். ஜெயமோகனை வைத்து சொல்லனும்னா : எழுதுறது மஹா பாரதம்; மனசுல இருக்குறது துரியோதனன் தான்  !!

Sunday, October 23, 2016

வானவில்: தேவி- சென்னை மழை- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஓர் அனுபவம்

பார்த்த படம்: தேவி

நீண்ட நாளைக்கு பின் பிரபு தேவா தமிழில் நடித்த படம்- தேவி.

மாடர்ன் பெண்ணை மணக்க நினைக்கும் பிரபு தேவாவிற்கு அக்மார்க் கிராமத்து பெண்ணான தமன்னா மனைவி  ஆகிறார்;திருமணத்துக்கு பின் மும்பை செல்ல - அங்கு தமன்னாவின் நடவடிக்கையில் பெரும் மாற்றம்.. மாடர்ன் பெண்ணாக மாறுகிறார்.. இப்படி இந்த அதிசயம் நடந்தது என்றால் "ஒரு பேய்  தான் காரணம்" என செல்கிறது கதை..

காமெடி படம் நெடுக வருவது பெரும் பலம்; மேலும் வழக்கமாய் பேய் கதைகளில் - பேய் யாரோ ஒருவரை பழி வாங்கும்; இப்படத்தில் அது - நடிகை ஆக வேண்டும் என்கிற தனது  நிறைவேறாத ஆசையை மட்டும் தீர்த்து கொள்கிறது; மற்றபடி எந்த நெகட்டிவ் விஷயம் அல்லது படம் முழுக்க இல்லை !

பாடல்கள் எதுவும் தேறலை; இரு மொழியில் எடுத்ததால் - ஆங்காங்கு சற்று ஹிந்தி வாசம் என சில மைனஸ்கள்..

ஜாலியான டைம் பாஸுக்கு ஒரு முறை காணலாம்.

அழகு கார்னர்


வயசானாலும் ஸ்டைலும், அழகும் இன்னும் குறையவே இல்லை ..அனுஷ்கா  ! 

சென்னையும் மழையும் 

ஐப்பசியில் 10 நாள் கடந்து விட்டது; மழையின் அறிகுறி ஏதும் சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் பல பகுதிகளிலும் காணும் ! ஜூன், ஜுலையில் ஓரளவு மழை பெய்தது; பின் ஆகஸ்ட் துவங்கி இப்போது அக்டோபர் 23 வரை துளி மழை இல்லை. சென்ற வருடம் மழை பெய்து கெடுத்தது; இவ்வருடம் பெய்யாமல் கெடுக்கிறது ! சென்னையில் நீர் தேக்கங்களில் 10 % தண்ணீர் தான் இருக்கிறதாம் ! இன்னும் 3 வாரத்தில் ஏதேனும் மழை பெய்தால் தான் உண்டு.. இல்லையேல் கோடையை நினைத்தால் பயமாய் இருக்கிறது. 

ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்- பெயர் குழப்பம் 

அண்மையில் தஞ்சை சென்றபோது நிகழ்ந்த சம்பவம் இது; இரவு 11..15க்கு நாங்கள் கிளம்பிய சென்னை ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்கிறது; வெளியில் உள்ள போர்டில் இதற்கு சென்னை எக்ஸ்பிரஸ் சென்று பெயர் போட்டு பிளாட்பாரம் எண் எல்லாம் சரியாக குறிப்பிட்டிருந்தனர். 

இதே நேரத்தில் ராமேஸ்வரம் நோக்கி இன்னொரு ரயில் செல்கிறது; இதனை வெளியில் உள்ள போர்டில் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் பிளாட்பாரம் எண் எழுதியிருந்தனர். இது வரை எந்த பிரச்னையும் இல்லை. 

உள்ளே அறிவிப்பு செய்யும் போது இரண்டு ரயில்களை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் என்றே அறிவித்தனர். இதில் பல பயணிகள் குழம்பி, தவறான பிளாட்பாரம்க்கு செல்ல துவங்கி விட்டனர். 

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலை சென்னை எக்ஸ்பிரஸ் என்றும், போலவே ராமேஸ்வரத்தில் நோக்கி செல்லும் ரயிலை ராமேஸ்வரத்தில் எக்ஸ்பிரஸ் என்றும் எப்படி போர்டில் எழுதியிருந்தார்களோ அதே விதமாய் அறிவிப்பும் செய்திருக்கலாம்.. இரண்டையும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் எனும்போது தான் குழப்பம் அதிகரிக்கிறது. 

வயதான கணவன்- மனைவி என்னிடம் சந்தேகம் கேட்க, நான் " இந்த பிளாட் பாரத்தில் தான் வரும்; நேரம் இருக்கு; நான் வெளியில் போய் கேட்டு வருகிறேன் " என்று சென்றேன்; திரும்ப வருவதற்குள் அவர்கள் காத்திராமல் தவறான பிளாட் பார்த்திற்கு செல்ல துவங்கி விட்டனர் !  நல்ல வேலையாக ரயில் கிளம்பும் முன் சரியான இடத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தனர். 

இதில் வருந்த வேண்டிய இன்னொரு விஷயம் நான் வெளியில் சென்று சொன்ன போது ரயில்வே ஊழியர் யாரும் அதை கண்டு கொள்ளவே இல்லை; "இரண்டு ரயிலும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் என்றால் பலர் மாறி போய் நிற்கிறார்கள் " என்றால் அதற்கு நாங்க என்ன செய்ய முடியும் என்கிறார்கள்.. ஹூம் !

QUOTE CORNER


இதில் ஒரு சுவாரஸ்ய முரண் (irony) : இந்த தகவலும் சோஷியல் மீடியாவில் தான் படிக்கிறோம் :)

என்னா பாட்டுடே : உன் மேலே ஒரு கண்ணு 

ரஜினி முருகன் படத்தில் வரும் இந்த பாட்டு கீர்த்தி சுரேஷின் ரீ ஆக்ஷன்களுக்காகவே ரசிக்க கூடிய ஒன்று; கெமிஸ்ட்ரி,  கெமிஸ்ட்ரி என்கிறார்களே.. அது சிவகார்த்திகேயன் -கீர்த்தி சுரேஷிற்கு அட்டகாசமாக ஒர்க் அவுட்  ஆகியிருக்கும் !


டிவி கார்னர் : கல்யாணம் முதல் காதல் வரை

கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மக்கள் மிக அதிகம் காணும் சீரியல்களில் ஒன்றாய் இருக்கும் என நினைக்கிறேன்; இதற்கு முதல் முக்கிய காரணம் ஹீரோயின் ப்ரியா; அடுத்த காரணம் திரைக்கதை: வழக்கமாய் எல்லா சீரியல்களில் வருகிற மாதிரி குடும்பத்தில் ஏதேனும் ஒரு பிரச்சனை.. பின் அது எப்படி சரியானது என்று தான் போகிறது; ஆனால் ஒரு முக்கிய வித்யாசம்; இந்த சீரியலில் ஒவ்வொரு சின்ன சின்ன பிரச்சனை அல்லது எதிர் அணியுடனான சாலஞ்சில் ஹீரோ- ஹீரோயின் அணி தான் எப்பவும் ஜெயிக்கும். இதனால் கண்ணீர்- அழுகை மிக குறைவு. 

ஆனால் இதற்கு நேர் மாறாக கடந்த சில வாரங்களாக இந்த சீரியலும் ஒரே அழுகையாக மாறி கொண்டிருக்கிறது; ஆண்கள்- பெண்கள் என வீட்டில் உள்ள அனைவரும் அழுகிறார்கள். 

பல சீரியல்களிலும் கவனிக்கும் ஒரு விஷயம்: வீட்டில் ஏழெட்டு பேர் இருப்பாங்க; அவர்களில் முக்கால் வாசி பேர் புல் மேக் அப் போட்டு கிட்டு எப்பவும் ஹாலில் நின்னு பேசி கிட்டே இருப்பாங்க.. 

என்னய்யா  விளையாடுகிறீர்களா? எந்த வீட்டில் இப்படி நடக்குது.. !

Thursday, October 20, 2016

ஷெல் பெட்ரோல் பங்க் - வித்யாசமான அனுபவம்

பெட்ரோல் பங்குகளில் நம்மை பல விதமாய் ஏமாற்றுவது பற்றி இந்த கட்டுரையில் எழுதியதை நீங்கள் வாசித்திருக்கலாம். நல்ல பெட்ரோல் பங்க் கிடைப்பதே மிக அதிசயம். அப்படி ஒரு நல்ல பங்க் பற்றியும் அங்கு கிடைக்கும் வித்தியாச அனுபவம் பற்றியும் இப்பதிவு....


##########
ஷெல் பெட்ரோல் பங்குக்கு சென்றுள்ளீர்களா? இங்கு கிடைக்கும் அனுபவம் மற்ற பெட்ரோல் பங்கிலிருந்து முற்றிலும் வேறாய் இருக்கும். வாங்க ஷெல் பெட்ரோல் பங்கிற்குள் நுழைவோம்.

எல்லா பெட்ரோல் பங்கிலும் இரண்டு புறமும் நுழையலாம். இங்கு குறிப்பிட்ட ஒரு பக்கம் மட்டும் தான் நுழைய முடியும். நுழைகிற இடத்தில் ஸ்பீட் பிரேக்கர் போட்டு வேகமாய் வண்டி ஓட்டி வர முடியாத படி செய்துள்ளனர்.

இங்கு ஆண், பெண் ஊழியர் அனைவரும் சிகப்பு சட்டை நீல பேன்ட் அணிந்து "சட்டையை இன்" செய்து கொண்டு தலையில் தொப்பியுடன் தான் இருப்பர். இதில் மாறுதலே இருக்காது. 

பெட்ரோல் நிலையத்துக்குள் நுழைந்த பின் யாருக்கும் செல்போன் பேசவோ, உபயோகிக்கவோ அனுமதி இல்லை. நீங்கள் பேசினால், ஒரு சில நொடிகளில் உங்களை ஒருவர் அணுகி, " செல்போன் பேசாதீர்கள், அணைத்து விடுங்கள் " என்பார்.

பெட்ரோல் போட நெருங்கியதும், பெட்ரோல் போடும் நபர் உங்களுக்கு இரு கையும் கூப்பி " வணக்கம் சார்" என சொல்வார். பின் நீங்கள் வண்டி மீது அமர்ந்திருந்தால், உங்களை வண்டியை விட்டு இறங்க சொல்லுவார். வண்டியில் அமர்ந்த படியே யாருக்கும் பெட்ரோல் போடவே மாட்டார்கள். அடுத்து " டேன்க் பில் பண்ணிடலாமா?" என்பார். இருந்தாலும் விடாமல் இதே கேள்வி கேட்கிறார்கள். அவங்க கேட்பதால் நாம் டேன்க் பில் பண்ணிட போறாமா என்ன? இருக்க காசுக்கு தானே போட முடியும்? .

அடுத்தது தான் முக்கிய கட்டம். நான் தொடர்ந்து ஷெல் போக அதுவே காரணம். பல கடைகளில் பெட்ரோல் போட ஆரம்பித்ததும் "0 " விலிருந்து முதல் ஜம்பே இருபது அல்லது முப்பது ரூபாய்க்கு இருக்கும் (அளவில் 0. 20 அல்லது 0. 30 லிட்டராவது சாபிட்டுருவாங்க). இங்கு மீட்டர் "0 " விலிருந்து தொடர்ந்து ஜம்ப் ஆகாமல் ஓடுவதை காணலாம். மற்ற பெட்ரோல் பங்குகளை விட இங்கு போடும்போது மயிலேஜ் அதிகம் வருவதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்

பெட்ரோல் போடுவதற்கு முன்  நீங்கள்  பணம்  குடுத்தால் வாங்கி கொள்ளவே மாட்டார்கள். பெட்ரோல் போட்டு முடித்த பின் மட்டுமே பணம் வாங்குவர். மீண்டும் உங்களுக்கு ஒரு கும்பிடு போட்டு " ப்ரீ ஏர் செக் அப் பண்ணிக்குங்க சார்" என்று சொல்லி அனுப்பி வைப்பார்கள். 

உண்மையிலே இங்கு ப்ரீ ஏர் செக் அப் தான். காற்றடிக்க எந்த பணமும் வாங்குவதில்லை. இதனாலேயே அங்கு சற்று கூட்டம் அதிகமாய் இருக்கும். சில நேரம் இங்கு காற்றடிப்பேன். கூட்டம் அதிகமெனில் சென்று விடுவேன்.

செல்போன் பேச விடாமல் தடுப்பது, வண்டியிலிருந்து இறங்கிய பின் தான் பெட்ரோல் போடுவோம் என்பது போன்றவை சிலருக்கு எரிச்சல் தரும் எனினும், நானும் முன்பு ஒரு பெட்ரோல் நிறுவனத்தின் லீகல் டீமில் இருந்ததால், இது ஏன் செய்கிறார்கள் என தெரியும். " பாதுகாப்பு உணர்வு" தான் ( Safety ) இத்தகைய முன் ஜாக்கிரதை செயல்கள் செய்ய ஒரே காரணம். இவை நமக்கும் நல்லதே !

துவக்கத்தில் தொடர்ந்து ஷெல் மட்டுமே சென்று வந்த நான், பின் மற்ற இடங்களை விட இங்கு லிட்டருக்கு ஏழெட்டு ரூபாய் விலை அதிகமான பின் செல்வதில்லை. ஆனால் இப்போது பெட்ரோல் விலை மிகவும் ஏறிய பின், வெளி மார்கெட்டில் என்ன விலையோ அதே விலைக்கு (same price no change )  ஷெல்லில் பெட்ரோல் கிடைக்கிறது. இதற்காக வெளி மார்கெட் விலை; எங்கள் விலை என இரண்டையும் எழுதி; வெளியிலும் இங்கும் பெட்ரோல் ஒரே விலையே என்ற பெரிய போர்டு எல்லா ஷெல் ஷோ ரூமிலும் வைத்துள்ளனர். ஆனாலும் மக்களுக்கு  ஷெல்லில் பெட்ரோல் விலை அதிகம் என்று எண்ணம் உள்ளது. ஷெல் பெட்ரோல் பங்குகளில் அதிக கூட்டம் இல்லாததே இதை சொல்கிறது. 

நல்ல குவாலிட்டி பெட்ரோல், சரியான அளவில் கிடைப்பதால்.. .. ஷெல் பெட்ரோல் பங்கை நிச்சயம் நாடுங்கள் ! மைலேஜ் கவனித்து பார்த்தால், நிச்சயம் எனக்கு நன்றி சொல்வீர்கள் !

Saturday, October 15, 2016

வானவில்: காஷ்மோரா- அரசு பேருந்து ஒரு அனுபவம்

சீசன் டிக்கெட் - ஒரு அப்டேட் 

சென்னை ரயில்களில்  பலரும் மாதாந்திர அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை சீசன் டிக்கெட் வாங்குவர். சரியாக அது முடிந்ததும் - முதல் நாள் கியூவில் நிற்பர்; காலை நேரம் கூட்டம் வேறு அதிகமாய் இருக்கும். வாங்கி விட்டு தான் ட்ரெயின் ஏறணும் - தாமதமாகும் டென்சன்...

ஆனால் நமது சீசன் டிக்கெட் எப்போது முடிகிறதோ- அதற்கு ஒரு வாரம் முன்பிலிருந்தே நாம்  புதுப்பிக்கலாம் ! என்றைக்கு வரை நமது சீசன் உள்ளதோ - அதற்கு மறு  நாளில் இருந்து புதிதாய் தருவார்கள். எனவே - காலை நேரம் என்றில்லாமல் - அலுவலகம் விட்டு வரும் மாலை நேரம் - சற்று கூட்டம் இல்லாத போது   சீசன் டிக்கெட் வாங்கி கொள்வது வசதியான முறை..

இப்படி ஒரு வசதி இருப்பது எனக்கே இந்த வாரம் தான் தெரியும். இன்னும் அறியாத நண்பர்களுக்காக பகிர்கிறேன்.

அழகு கார்னர் 


எதிர்பார்ப்பில்: காஷ்மோரா

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற அட்டகாச படம் இயக்கிய கோகுல் - அதற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத genre -ல் இயக்கியிருக்கும் படம் காஷ்மோரா; கார்த்தி,  நயன்தாரா,ஸ்ரீ திவ்யா நடிப்பில் தீபாவளிக்கு வருகிறது.

ட்ரைலர் நிச்சயம் எதிர் பார்பை தூண்டுகிறது.. இத்தகைய வித்தியாச படங்களை தியேட்டரில் தான் பார்க்கணும் !



அரசு பேருந்து- ஒரு அனுபவம் 

அண்மையில் எங்கள் ஊர் மடிப்பாக்கத்தில் ஒரு முக்கிய சாலையில் செல்லும்போது சற்று டிராபிக்  ஜாம். திருப்பத்தில் அரசு பேருந்து வளைந்து செல்கிறது. ஒரு தனியார் நிறுவன பேருந்து ஊழியர்களை ஏற்றி கொண்டு செல்வது ஓரமாய் நின்று கொண்டிருந்தது. அதற்கு எதிர் திசையில் செல்லும் அரசு பேருந்து நன்றாக பின் பக்கத்தில் மோதி விட்டு கண்டு கொள்ளாமல் திருப்பத்தில் திரும்பி விரைவாக சென்று விட்டது..

ஒரு தவறும் செய்யாமல் - டிராபிக்கில் ஓரமாய் நின்ற அலுவலக பஸ்சுக்கு இந்த நிலை.. பாவம் அந்த ட்ரைவர் என்ன பதில் சொல்வாரோ !

என்னா பாட்டுடே : ஓ பட்டர்பிளை

மெலடி என்ற வார்த்தைக்கு அர்த்தம் - இந்த பாட்டு.. அந்த காலத்தில் ராஜாவால் மட்டுமே இவ்வளவு மெதுவான பாடலை ஹிட் அடிக்க வைக்க முடியும் (பின் ரகுமான் மெதுவான பல பாடல்களில் ஜொலித்தார்)

இப்படம் - இந்த பாடலால் பெரும் எதிர் பார்ப்புக்குள்ளானது; கதை சரியில்லை- எனவே ஓடாமல் போனது

இப்பாடலுக்கு PC ஸ்ரீராமின் ஒளிப்பதிவு கணினியை விட பெரிய திரையில் பார்க்கும் போது   மனதை கொள்ளை கொள்ளும்..




ஹெல்த் கார்னர்

* ஒரு லிட்டர் குடி நீரில் எவ்வளவு கலோரி இருக்கிறது தெரியுமா?

0 !! ஆம்  பூஜ்யம்.எவ்வளவு வேணும்னாலும் தண்ணீர் குடிக்கலாம்..  தப்பே இல்லை !

*  கேரட், வெள்ளேரி - இவை இரண்டும் கலோரி அளவில் மிக மிக  குறைந்தவை;ஆனால் நிறைய  சத்துள்ளவை;பல நன்மைகள் பயப்பவை; இவற்றை நமது உணவில் நிறைவே சேர்த்து கொள்ளலாம்; குறிப்பாக மாலை ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை விட இவற்றை சாப்பிட்டால் சர்வ நிச்சயமாக வெயிட் போடாது !

Tuesday, October 11, 2016

சுஜாதாவின் மீண்டும் தூண்டில் கதைகள்: ஒரு பார்வை

மீண்டும் தூண்டில் கதைகள் 1995-ல் ஆனந்த விகடனில் வெளிவந்த சுஜாதாவின் சிறுகதை தொகுப்பு. ஒவ்வொரு வாரமும் அதன் பக்கங்களை கத்தரித்து, பத்திரமாய் எடுத்து வைத்து இன்னும் பாதுகாப்பாய் என்னிடம் பத்திரமாய் உள்ளது. சமீபத்தில் அதை மீண்டும் எடுத்து தலைவரின் மாஜிக்கை முழுமையாய் அனுபவித்தேன்.

மிக பிரசித்தி பெற்ற முதல் கதை (" கருப்பு குதிரை") - மேட்ச் பிக்சிங் பற்றியது. ஒரு அம்பயரின் பார்வையில் சொல்லப்படும் கதை ( அந்த அம்பயர் நம் வெங்கட் ராகவனை கண் முன் கொண்டு வருகிறார்). ஒரு மேட்சில் ஜெயிக்க அந்த அம்பயரை அணுக ( 50000௦௦௦ US டாலர்), அவர் மறுக்கிறார். ஆனால் இறுதியில் அங்கு விளையாடிய எதிர் அணி கேப்டன் மூலம் அதை போல இரு மடங்கு பணம் கொடுத்து மேட்ச் பிக்சிங் நடந்தது இறுதியில் தெரிகிறது ! இதன் பிறகு மேட்ச் பிக்சிங் பற்றி வேறு சில கதைகள் வந்திருக்கலாம். ஆனால் தம்ழில் இவ்வகை கதைகளுக்கு இது முன்னோடி என்று சொல்லலாம்


பெரியவர்கள் உலகம் என்கிற கதை ஒரு பள்ளி செல்லும் மாணவனின் பார்வையில் சொல்லப்படுகிறது. நல்ல தலைமை ஆசிரியர் மாற்றலாகி வேறு ஊருக்கு செல்ல போவதாக தெரிய வரும் மாணவர்கள் மிக அப்செட் ஆகிறார்கள்.  தலைமை ஆசிரியர் மனைவிக்கு மற்றொரு ஆசிரியருடன் உறவு இருப்பது அந்த சிறுவனுக்கு தெரிய வருகிறது. தலைமை ஆசிரியர் மாற்றலாகி போவதே இந்த தவறான உறவிலிருந்து பிரிக்கத்தான் என்றும் புரிகிறது அவனுக்கு ! இந்த விஷயம் கேள்வி பட்டதும் திடீர் பெரியவனாகி " நான் படிக்கணும்" என தான் டாவ் அடிக்கும் பெண்ணிடம் சொல்வதாக சொல்வது மட்டும் சற்று உறுத்துகிறது ! மாறுதல்கள் அவ்வளவு சீக்கிரமாய் நடக்குமா?

கார்பெட்டில் ரத்தம் முகத்தில் புன்னகை : இதுவும் கூட கணவன் இருக்கையில் இன்னொரு ஆணுடன் தொடர்பு வைத்திருக்கும் ஒரு பெண்ணின் கதை. ஒரு மரணம் நிகழ்கிறது, அது கொலையா தற்கொலையா என்பது தான் கதை.

"எல்லாமே இப்பொழுதே" - கதை செம சுவாரஸ்யம் ! சாதாரண வேலையில் இருக்கும் ஒருவன் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவனது பணக்கார பாசும் அந்த பெண்ணை காதலிக்க, காதலன் விட்டு கொடுக்கிறான். ஒரு பணக்காரன் - ஒரு ஏழை எனும்போது அந்த பெண் பணக்காரனை தான் தேர்ந்தெடுப்பாள் என்பது யூகிக்க முடிந்தாலும் கதையின் இறுதியில் வரும் டுவிஸ்ட் அதிர வைக்கிறது. அங்கு கூட விஷயத்தை சுஜாதா முழுசாய் சொல்லாமல் நம் ஊகத்துக்கு விட்டு செல்வது அட்டகாசம் !

2887-ல் சில விலாசங்கள் என்கிற வருங்காலம் குறித்த கதை ஒன்று. செக்ஸ் என்பதே தடை செய்யப்பட காலம். ஒரு பையன் ஒரு பெண்ணின் விலாசம் தேடி போகிறான். எல்லாம் முடிகிறது. கடைசியில் தான் தெரிகிறது. அந்த பெண் கால் கேர்ள் அல்ல, வந்த பயன் தான் கால் பாய் என்பது ! இப்போதே இந்த "கால் பாய்" கலாசாரம் சென்னைக்கு வந்து விட்டது நடப்பதை சென்னையில் உள்ள பலரும் அறிவர் !

பை நிறைய பணம் - பேங்க்கில் நடக்கும் ஒரு கொள்ளையை துல்லியமாய் கண் முன் கொண்டு வருகிறது. அந்த கொள்ளையர்களை போலிஸ் மிக சீக்கிரம் பிடிக்கிறது. பிடித்த போலிஸ் ஆபிசர் பாங்க் மானேஜரிடம் " அவர்கள் திருடியதாய் சொல்லி நாம் கொஞ்சம் எடுத்தால் யாருக்கும் தெரியவா போகிறது ? " என்று கேட்க,  மேனேஜர் ஒப்பு கொண்டாரா என்பதுடன் கதை முடிகிறது. சரியான கதை ! செம நேரேஷன் !
சொல்லும் விதம் நகைச்சுவையாய் இருந்தாலும் பல கதைகளில் முடிவில் சோகம் இழையோடுகிறது.

மொத்தத்தில்:
கையில் எடுத்தால் முடித்து விட்டு தான் வைக்கிற மாதிரியான சுஜாதா ஸ்பெஷல். இதுவரை வாசிக்கா விடில் அவசியம் வாசியுங்கள் !

Sunday, October 9, 2016

முதல் மாரத்தான் அனுபவங்கள்..

முதலில் நல்ல விஷயம்: கடந்த 4 வாரங்களாக ஒரு நாள் விடாமல் நடந்து அல்லது ஓடி கொண்டிருக்கிறேன்.

முகநூலில் உள்ளத்தனைய உடல் என ஒரு குழுமம். உடற் பயிற்சி செயபவர்களுக்காக நடத்தப்படுகிறது. எந்த செயலையும் 21 நாள் செய்தால்- பின் தொடர்வது எளிது என்கிற அடிப்படையில் இது இயங்குகிறது.

தினம் தாங்கள் எவ்வளவு தூரம் நடந்தோம் அல்லது ஓடினோம் என பலரும்பகிர்வார்கள். அதில் இணைந்த பின் - தினமும் நடப்பது/ ஓடுவது அதனை அங்கு பகிர்வது என - இழந்த உடற் பயிற்சியை மீண்டும் பெற்றேன்.

கடந்த 28 நாளில் ஆவரேஜ் ஆக 10 கிலோ மீட்டர் என 280 கிலோ மீட்டராவாது நடந்திருப்பேன்...(75% நடை ; 25 % ஓட்டம் )



குழுமத்தில்  சில நண்பர்கள் மாரத்தான் கலந்து கொண்டு பகிர, நாமும் கலந்து கொண்டால் என்ன என தோன்றியது; விளைவு- முதன் முறை அலர்ட் தான் என்கிற தொண்டு நிறுவனம் நடத்திய 10 கிலோ மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டேன்

மாரத்தானில் கலந்து கொள்ளும்போது முதல் நாளே சென்று அவர்கள் தரும் பனியன் மற்றும் நமக்கான எண் உள்ள சீட்டை வாங்க வேண்டும். அப்படி சென்ற போது நிகழ்ச்சியை நடத்தும் அலர்ட் தான் நிறுவனம் சில தகவல்கள் கூறினார்கள் :

சாலை விபத்துகளில் அல்லது வீட்டில் திடீரென மயக்கம் ஆகுவோருக்கு முதல் உதவி தந்து - அவரை விரைவில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்க பயிற்சி தரும் தொண்டு நிறுவனம் தான் இது. கடந்த 10 வருடமாக இந்த சேவை செயகிறார்கள். மேலும் விப்ரோ சென்னை மாரத்தான் போன்ற பெரும்  மாரத்தானில் இவர்கள் குழு வாலன்டியர் ஆக உதவுகிறார்கள் !

பெங்களூரிலிருந்து வந்த கண்ணன் என்கிற மாரத்தான் வீரர் தனது அனுபவம் பகிர்ந்து கொண்டார்; சில மாதங்களுக்கு முன் விபத்தொன்றை நேரில் கண்ட அவர் - முதன் முறை ஒரு உயிரை காப்பாற்றி உள்ளார். பின் இந்த விழிப்புணர்வு பலருக்கும் வர வேண்டுமென பெங்களூரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் - வெவ்வேறு ஏரியாவில் 42 கிலோ மீட்டர் ஓடுகிறார். அச்சமயம் அனைவரிடமும் விபத்தில் சிக்கியோரை காப்பாற்ற சொல்லி துண்டு பிரசுரங்கள் தருகிறார். இதனை 42 வாரம் செய்ய இருப்பதாக கூறும் இவரது தற்போதைய வயது 42 !
*****
மராத்தான் நாளுக்கு வருவோம்.

எல்லா மாரத்தானும் அதிகாலை துவங்குகிறார்கள். அநேகமாய் ஞாயிறு தான் !

நேரத்தில் தூங்க சென்று, விடிகாலை எழுந்து - பழனியப்பனும் நானும் மாரத்தான் துவங்கிய ஜெயின் கல்லூரியை அடைந்தோம்.

 ஜூம்பா டான்ஸ் குழுவினர் சற்று வார்ம் அப் சொல்லி தந்தனர்.

Warm up dance !

நிறைய ஆட வைக்கிறார்கள் .. எனர்ஜி போயிடுமோ என சற்று பயம்.. (நல்ல வேளை அப்படி நடக்கலை !)

5.45 க்கு கொடியசைத்து ஓட்டம் துவங்கியது. பலருடன் சேர்ந்து ஓடுவதே செம வித்தியாச அனுபவம். வழியெங்கும் நின்று கை தட்டி ஊக்குவிக்கிறார்கள். தண்ணீர் - பிஸ்கட்- சாக்கலேட் போன்றவை தருகிறார்கள். நாங்கள் ஓடியது OM R சாலையில். காலை நேரம் டிராபிக் குறைவு.. ஆனால் சிற்சில பஸ்கள் மற்றும் கார்கள் சென்று கொண்டிருந்தன. எனவே போலீஸ் வண்டிகள் ஆங்காங்கு நின்று ஓடுவோர் சென்ற பின் வாகனங்கள் செல்ல உதவி கொண்டிருந்தனர். அந்த போலீசில் சிலரும் கை தட்டி " நல்லா ஒடுங்க" என ஊக்குவித்தது நெகிழ்வாக இருந்தது.

எப்பவும் அரை கிலோ மீட்டர் அளவு ஓடுவேன். பின் 200 மீட்டர் நடை பின் மீண்டும் ஓட்டம் என்று தான் செல்வேன். மாராத்தானில் பலரும் ஓடும்போது இடை இடையே நடந்தாலும் - நடந்த நேரம் குறைவு.. ஓடிய நேரமே அதிகம்..

ஓட துவங்கும் முன் - இடமிருந்து- நான், பழனியப்பன், திருலோக் 

10 கிலோ மீட்டர் 70 நிமிடத்தில் ஓட நினைத்தேன். முதல் 2-3 கிலோ மீட்டர் - ஒவ்வொன்றும் ஆறரை நிமிடத்தில் ஓடி கொண்டிருந்தேன். பின் ஒரு கிலோ மீட்டருக்கு ஏழு நிமிடம்  ஆனது. கடைசி 2 கிலோ மீட்டர் இருக்கும் போது - 70 நிமிடத்துக்கு 14 நிமிடம் இருந்தது. சற்று தம் கட்டி ஓடி சரியே 70 நிமிடத்தில் முடித்தேன்.

முதன் முறை ஓடுவோர் நேரத்தை கண்டு கொள்ள கூடாது; முடிப்பது தான் முக்கியம். நான் ஓரளவு ஓடியவன் என்பதால் - ஆர்வ கோளாறில் நிமிடங்களும் டார்கெட்டில் சேர்த்து கொண்டேன்.

முடித்தபின் ஓரிரு நிமிடம் சிரமமாக இருந்தது; ஆனால் இரண்டே நிமிடத்தில் சரியாகி விட்டது.

ஓடுவதற்கு ரொம்ப நேரம் முன் நன்கு தண்ணீர் குடிக்கவேண்டும். இப்படி குறைந்த அளவு தூரம் ஓடும்போது நடுவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது; நடுவில் நான் தண்ணீர் குடித்து அதுவே - கொஞ்சம் சிரமமாய் இருந்தது. நண்பர் பழனிக்கு துவங்கும் முன் குடித்த தண்ணீர் வயிறை சற்று சிரமப்படுத்தியதாம்.

அனைத்தும் முடிந்ததும் புகைப்படம் எடுத்து கொண்டோம்.. இங்கு மட்டும் மக்களிடம் செம போட்டா போட்டி.. !



அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. ஏராள கல்லூரி மாணவிகள் 5 கிலோ மீட்டர் ஓடிவிட்டு வந்திருப்பதை காண முடிந்தது

முடித்து விட்டு கிளம்பு போது பயங்கர சந்தோசம்.. நிம்மதி. எதையோ சாதித்த உணர்வு..

இந்த மாரத்தானுக்கு பிறகு - டிசம்பரில் வரும் விப்ரோ மாரத்தானில் 10 கிலோ மீட்டாரா, 21  கிலோ மீட்டாரா என முடிவு செய்ய நினைத்திருந்தோம்.. இப்போதைக்கு கொஞ்ச நாள் 10 கிலோ மீட்டார் ஓடலாம். 21 கிலோ மீட்டர் பின்னர் பார்க்கலாம் என பழனியும் நானும் முடிவு செய்தோம்.

உள்ளதனைய உடல் குழுமத்திற்கும் உடன் வந்த பழனி மற்றும் திரிலோக் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி.. உங்களின் சப்போர்ட் இல்லாவிடில் நிச்சயம் இது சாத்தியம் ஆகியிருக்காது !
அடுத்து டிசம்பரில் - சென்னையின் மிக பெரிய விப்ரோ மாரத்தான்.. ! அதிலே சந்திக்கலாம்..   !
***********
தொடர்புடைய பதிவுகள்

உடல் எடை குறைப்பு: உணவாலா? உடற் பயிற்சியாலா: ஒரு நேரடி அனுபவம்

சென்னையின் மாபெரும் - விப்ரோ மாரத்தான்.. சில பாசிட்டிவ் & நெகட்டிவ்

பாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்


Saturday, October 8, 2016

ரெமோ- சினிமா விமர்சனம்

ரெமோ

கதை

பெண்களை கண்டாலே ஒதுங்கி/ ஓடி போகும் சிவகார்த்திகேயனுக்கு - கீர்த்தியை கண்டதும் காதல்  வருகிறது; நிச்சயம் முடிந்த பெண்ணான அவருடன் இருக்க நர்ஸ் வேஷம் போடுகிறார்; பின் அவரை எப்படி கைப்பிடித்தார் என்பது ரெண்டரை மணி நேர கதை

Image result for remo images

ப்ளஸ்

சந்தேகமென்ன.. சிவா தான் ! குறிப்பாக நர்ஸ் கேரக்டர் மட்டும் தான் படத்தை இறுதி வரை எழுந்து வராமல் உட்கார்ந்து பார்க்க வைக்கிறது; சர்வ நிச்சயமா நாமே சைட் அடிக்கிற அளவு அட்டகாசமா காட்டிருக்காங்க. அதிலும் சிவா நர்ஸ் வேஷத்தில் இருக்கும் போது அருகில் கீர்த்தியின் அழகு சுத்தமாய் ஈடுபடலை !

இந்த பாத்திரத்தில் ஹியூமரும் பிச்சு உதறுறாங்க. யோகி பாபு - நர்ஸ் பின்னாடி அலையும் காட்சிகள் அவ்வை ஷண்முகி மணிவண்ணனின் உல்ட்டா என்றாலும் - சிரிக்க முடிகிறது


கீர்த்தி அழகு + நடிப்பு இரண்டும் ஓகே; பெரிதாய் சிரித்தால் வாய் காது வரை நீள்கிறது; அளவோடு சிரித்து வளமோடு வாழ்ந்தால் மிக ரசிக்கும்படி இருப்பார்.

பாடல்கள் ஓரிரண்டு ஓகே ; பின்னணி இசை நிச்சயம் ரசிக்கும் படி செய்துள்ளார் அனிருத்

ஒளிப்பதிவு ஸ்ரீ ராம் - ஹீரோ - ஹீரோயின் இருவரையும் அழகாய் காட்டுவதும் சரி - சென்னையை ரொமான்டிக் நகரமாய் காட்டுவதிலும் சரி மின்னுகிறார்

Image result for remo keerthi suresh

மைனஸ்

ஒரிஜினாலிட்டி இல்லாத கதை- திரைக்கதை தான் பெரிய மைனஸ் ; அவ்வை ஷண்முகி- காதல் மன்னன் போன்ற படங்களின் கதை மனதில் வந்து வந்து போகிறது..

கடைசி அரை மணி நேரம் ஏன் அப்படி ஜவ்வு மாதிரி இழுக்கணுமோ தெரியலை; அப்பாடா கிளைமாக்ஸ் வந்துடுச்சு என நினைக்கும் நேரம்- பாட்டு வருது; அப்புறம் 4 கிளைமாக்ஸ் வருது !

இரண்டாம் பாதியில் நர்ஸ் சம்பந்தமான காட்சிகள் குறைவு; படம் சீரியஸ் காதல் காட்சிகளுக்கு நகரும்போது - கொட்டாவி வருகிறது !

லாஜிக் ஓட்டைகள்- நிறைய..

திருமணம் நிச்சயம் ஆன டாக்டர் - பத்தாம் வகுப்பு பெயில் ஆன - 27 வயது வரை வேலைக்கே போகாத ஒருவனை - பேர் என்ன- எங்கு  வேலை பார்க்கிறான் என தெரியாமலே லவ் பண்ணுவாரா?

இந்த அடிப்படை ஓட்டை தான் படத்துடன் ஒன்ற முடியாமல் செயகிறது

இறுதி அனாலிசிஸ் 

remo-rating

நர்ஸ் காட்சிகள் + ஹியூமர் அதிக படுத்தியிருந்தால் படம் பெரும் வெற்றி பெற்றிருக்கும்

இப்போதும் மிக மிக சரியான டைமிங்கில் நல்ல மார்க்கெட்டிங் செய்து வெளியிடுவதால் கையை கடிக்காமல் தப்பி விடும் (வரும் புதன் வரை பலருக்கு விடுமுறை; வியாழன்-வெள்ளி தாண்டினால் அடுத்த வீக் எண்டு வந்து விடுகிறது - எனவே 10 நாள் நல்ல ஓட்டம் உறுதி )

ரெமோ- சிவாவிற்கு இது எதிர் நீச்சல் அல்ல- காக்கி சட்டை அல்லது மான் கராத்தே.. அவ்வளவே !

நர்ஸ் பாத்திரம் + காமெடிக்காக ஒரு முறை பார்க்கலாம் ! 

Tuesday, October 4, 2016

வானவில் :தொடரி-டிவியில் சீட்டாட்ட விளம்பரம்-எதிர்பார்ப்பில் ரெமோ

தொடரி

சம்பூர்ண ராமாயணம் என்று ஒரு பழைய காலப் படம்-  இராமாயண கதை தான்- சுமார் 4 மணி நேரம் ஓடும்.. ! இரண்டு இடைவேளை விடலாமா என்றெல்லாம் குழம்பினர் அப்படத்துக்கு..

அப்படி 4 மணி நேர படம் பார்த்த மாதிரி ஒரு அனுபவம் - தொடரி பார்த்த போது..  இத்தனைக்கும் படம் ரெண்டே கால் மணி நேரம் தான்..



ஆரம்பிக்கும் போது தம்பி ராமையா- கருணாகரன் காமெடிஎன  நல்லா தான் போச்சு; ஆனால் இடைவேளைக்கு பின் இழுத்துட்டாங்க ! இரண்டாம் பகுதியில் சுவாரஸ்யமான விஷயம் மீடியாக்களை துவைத்து காயப்போட்டது தான் !

டிரைவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட - தறி கெட்டு ஓடும் ரயில்.. ரயில்வே நிர்வாகத்தின் பல்வேறு முயற்சிகள் பலனளிக்காமல் கடைசியில் ஹீரோ தனுஷ் எப்படி ரயிலை காப்பாற்றினார் என்பதே கதை..

இடையில் தனுஷ்- கீர்த்தி சுரேஷ் காதல்...

முதல் நாள் பார்த்த பெண்ணை -  மறு -நாளே  "அவள் தான் உயிர் - அவ இல்லாம நான் இல்லை; செத்தாலும் அவளோடு தான் சாவேன்" என சொல்வதெல்லாம் இந்திய திரை உலகில் - பிரபு சாலமன் படத்தில் மட்டும் தான் நடக்கும் !

பிற்பகுதியில் தனுஷுக்கு வேலை அதிகமில்லை; திடீரென ஓரிரு சண்டை போடுறார். ரயில் முழுக்க மேலே நடக்கிறார்; தாவி குதிக்கிறார்.. ஆனா எஞ்சின் உள்ள இடத்துக்கு மட்டும் தாவி குதிக்க மாட்டேன் என்கிறார் ! என்ன லாஜிக்கோ ?

வித்தியாச கதை களன்.. கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் - நல்ல படமாய் வந்திருக்கும்,  ஹூம் :(

டிவியில்  சீட்டாட்ட விளம்பரம்

அண்மை காலமாக சீட்டாடும் நிறுவனம் ரம்மி. காம் பேப்பர், புத்தகம் டிவி இவற்றில் விளம்பரம் செய்கிறார்கள்.

எனக்கு தெரிந்து எந்த சூதாட்ட நிகழ்வுக்கும் இப்படி விளம்பரங்கள் வருவதில்லை; அது எப்படி இவர்களை மட்டும் அனுமதிக்கிறார்களோ தெரிய வில்லை; நிச்சயம் தடை செய்ய படவேண்டிய விளம்பரம் இது !

கிரிக்கெட் பக்கம் 

நியூசிலாந்து அணியை முதல் 2 டெஸ்டிலும் இந்தியா எளிதில்  வென்றுள்ளது ; அஸ்வின் 200 விக்கெட்டுகளை கடந்து - 300ஐ நோக்கி செல்கிறார்.. அடுத்த வருடம் அதனை  அடையும் போது அவருக்கு முன்னே கும்ப்ளே, கபில் மற்றும் ஹர்பஜன் மட்டுமே இருப்பர்; இந்தியா கண்டெடுத்த சிறந்த 5 பவுலர்களில் ஒருவராக அஸ்வின் வர இருப்பது பெரும் மகிழ்ச்சி.

தோணி ரிட்டையர் மென்ட் க்கு பிறகு இன்னொரு CSK  வீரரான- சாஹா அட்டகாசமாக கீப்பிங் + பேட்டிங் செய்கிறார்;  புவனேஸ்வர், முகமது சமி, ஜடேஜா என எல்லா பவுலர்களும் அசத்துகிறார்கள்.

கோலியின் பாட்டிங் தான் சற்று  ஏமாற்றம்.விரைவில் அவரும் பார்முக்கு வந்தால் இந்தியா தற்போது அடைந்துள்ள முதல் இடத்தை தொடர்ந்து காப்பாற்றும் !

எதிர்பார்ப்பில் : ரெமோ

வருகிற வாரம் - ஆயுத பூஜையை முன்னிட்டு -லாங் வீக் எண்டு.. எனவே ரெமோ, ரெக்க போன்ற படங்கள்  வெளியாகிறது. மகள் சிவகார்த்திகேயன் விசிறி- எனவே - நிச்சயம் முதல் நாளே ரெமோ பார்க்க வேண்டுமென சொல்லி வருகிறாள்... வெள்ளி -தவறினால்  சனிக்கிழமையாவது பார்த்து விடுவோம்.. விரைவில் வீடுதிரும்பலில் ரெமோ விமர்சனம் வாசிக்கலாம் !

போஸ்டர் கார்னர்



டை-யும் , கோட்டும் 

முகநூலில் என்னுடன் நண்பர்களாய் இருக்கும் பலருக்கு ACS இன்ஸ்டிடியூட்- மீட்டிங் குறித்த புகைப்படங்கள் பகிர்வது தெரியும். அதிலும் அடிக்கடி நான் டை கட்டி படங்கள் பகிர்கிறேன் என நண்பர்கள் கிண்டல்  செய்வதுண்டு.

 நிற்க. ACS இன்ஸ்டிடியூட்டை  நாம் ரெப்ரெசென்ட்  செய்கிறோம் என்பதால் - மீட்டிங்களில் டை + கோட் இரண்டும் அணிந்தால் தான் கண்ணியமாக இருப்பதாக பல CS நண்பர்கள்  கூறுகிறார்கள்.

இங்கு சொல்ல வந்தது வேறு ஒரு  விஷயம்.

டை-யும் , கோட்டும் அணிவதில் சில வரைமுறைகள் இருக்கிறது; எனக்கு ரொம்ப தாமதமாக தான் இது  தெரிந்தது.

டை-யை பொறுத்தவரை - அது உங்கள் பேண்ட் பெல்ட்டுக்கு நேராகவோ அல்லது அதற்கு சற்று பெரிதாகவோ இருக்க வேண்டும்.

பேண்ட்- பெல்ட்டிற்கு மேல் - அதாவது வயிற்றின் பாதியிலேயே டை முடிந்து விடுவது தவறான பயன்பாடு !

கோட்- இதை பொறுத்தவரை நீங்கள் அமரும்போது நிச்சயம் கோட் பட்டனை கழற்றி விட வேண்டும். எந்த கோட் பட்டனும் அமர்ந்திருக்கும்போது  போட்டிருக்க கூடாது ! நிற்கும் போதோ, நடக்கும் போதோ அவசியம் கோட் பட்டன் போட்டிருக்க வேண்டும்; குறைந்தது கடைசி பட்டன் மட்டுமாவது !

டை மற்றும் கோட் - விஷயத்தில் இவை அவசியம் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் !

Sunday, October 2, 2016

MS தோனி -சினிமா விமர்சனம்

தோனி 

ஸ்பெஷல் 26 என்ற அதி அற்புத படமெடுத்த இயக்குனர்.. கிரிக்கெட் குறித்து அதிலும் நம்ம தல தோனி குறித்து எனவே எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கம்

Image result for ms dhoni movie

கதை 

ராஞ்சி என்கிற சிறு நகரில் பிறந்து - கோல் கீப்பர் ஆக வாழ்க்கை துவக்கி, பள்ளி அணியில் விக்கெட் கீப்பர் இல்லாததால் - கிரிக்கெட்டில் நுழைந்து- அப்பாவின் ஆசைக்காக ரயில்வேயில் சேர்ந்து - பின் இந்திய அணியில் புகுந்து புயல் போல் கலக்கிய தோனி - அநேகமாய் கிரிக்கெட் தெரிந்த அனைவருக்கும்  தெரிந்த கதை !

பாசிட்டிவ் 

முதல் பகுதி.. மிக அட்டகாசம் ! உலக கோப்பை பைனலில் - 3 விக்கெட் விழுந்து விட - தோனி களமிறங்குவதில் துவங்கும் முதல் காட்சியே கலக்கல்.

பிளாஷ் பேக்கில் செல்லும்  தோனியின் இளமை கால வாழ்க்கையுடன் இயல்பாய் பொருந்த முடிகிறது.

1983 மலையாள படம் போல் மிக இயல்பாய் செல்கிறது கதை.. கிட்டத்தட்ட அன்லக்கி என்று சொல்லி விடுமளவு அவ்வளவு வாய்ப்புகள் கைக்கருகில் வந்து தப்பி செல்கிறது; அணிக்குள் வந்த பின்னும் முதல் 3-4 மேட்ச்கள் சொதப்பல். இந்த பாகிஸ்தான் டூர் தான் தோனிக்கு ஒரு திருப்புமுனை; அவர்களுக்கு எதிராக அவர் அதிரடியாய் அடித்த   145 ரன்கள்.. அப்புறம் நோ லுக்கிங் பேக் ...

வாழ்க்கையில் நல்ல வேலைக்கு போகணும் என மட்டுமே சிந்திக்கும் தோனியின் தந்தை; தோழி போன்ற அக்கா; தோணிக்காக எப்போதும் பிரார்த்தனை  செய்யும் அம்மா - அவருக்காக எந்த அளவும் இறங்கி உதவும் நண்பர்கள் என மனதில் பதியும் பாத்திரங்கள்

தோனியாக நடிப்பவர் துல்லியம்.. ! அதிலும் கிரிக்கெட் மேட்ச்களில் நிஜமாய் நடந்த மேட்ச் க்ளிப்பிங் அற்புதமாக பயன்படுத்தியுள்ளனர். கம்பியூட்டர் கிராபிக்ஸ்க்கு நிச்சயம் பாராட்டு !

Image result for ms dhoni movie

மைனஸ் 

முதல் பகுதி எந்த அளவு ரசிக்க வைக்கிறதோ - அதற்கு நேர் எதிராய் இரண்டாம் பகுதி.. அவரது காதல் பற்றி அவ்ளோ டீடைலிங் மற்றும் பாட்டுகள் தேவையா? கதை அதள பாதாளத்தில் விழுவது இங்கு தான்.

கிரிக்கெட் மேட்ச்கள் ஹைலைட் பேக்கேஜ் போல் மட்டுமே காட்டப்படுகிறது

முதல் பகுதியில் இருந்த சின்சியாரிட்டி மற்றும் அழகு இரண்டாம் பகுதியில் இருந்தால் படம் லகான் அடைந்த புகழில் பாதியாவது அடைந்திருக்கும்


இறுதி வெர்டிக்ட் 

கிரிக்கெட் அல்லது தோனி ரசிகர்.. இரண்டில் எந்த ஒரு வகையில் நீங்கள் வந்தாலும் நிச்சயம் ஒரு முறை கண்டு மகிழலாம்.. இரண்டாம் பகுதியை பொறுத்தருள்க !

Saturday, October 1, 2016

வானவில்: இன்கம் டேக்ஸ் ரீபண்ட் அனுபவம்-ஓடாதே-விஜய் டிவி ஸ்பெஷல்

வாசித்த நாவல் : சுஜாதாவின் "ஓடாதே"

புதிதாய் திருமணமான ஒரு ஜோடி - ஏனோ தொடர்ந்து துரத்தப்படுகிறார்கள். முன்பின் தெரியாதவர்கள் - அப்புறம் போலீஸ் என தொடர் ஓட்டம்...

கணேஷ் - வசந்த் யார் இவர்களை துரத்துகிறார்கள் என துப்பறிய - ஒரு பெரிய அரசியல் வாதி கொலைக்கும்  விஷயத்துக்கும்   சம்பந்தம் இருப்பது  தெரிகிறது;கணேஷ் சாமர்த்தியத்தால் அவர்  கொல்லப்படாமல்  தப்புகிறார்.

இறுதியில் - அவர் எதிர் -கட்சிக்காரர்  -அவரை கொல்ல முயன்றதே மத்திய அரசு  தான் என்கிற திடுக்கிடும் செய்தியுடன் நாவலை நிறைவு  செய்கிறார்.

புது மண தம்பதிகள் ஓடி கொண்டே இருப்பது நமக்கு அயர்ச்சியை தருகிறது. வசந்த் வந்த பின் தான் கதை சுவாரஸ்யம் ஆகிறது. இறுதி பகுதி - பக்கா சுஜாதா ஸ்டைல் முத்திரை

ஓடாதே - சுஜாதா அதி தீவிர ரசிகர்களுக்கு மட்டும் !

அழகு கார்னர் 



ஹெல்த் கார்னர் 

நடக்கும் போது நாம் எரிக்கும் கலோரிகள் அதிகமாக ஒரு எளிய வழி... நடக்கும் வேகத்தை சற்றேனும் மாற்றுவது; முதலில் மிதமாகவும், பின் வேகத்தை சற்று கூட்டி நடந்தாலே - காலுக்கு வேலை அதிகமாகி நிச்சயம் அதிக கலோரிகள் (குறைந்தது 20 % அதிகமாக!!) எரிப்போம் என்று கூறுகிறார்கள்.

நடை பயிற்சி செய்பவர்கள் எனில் உங்கள் கவனத்துக்கு இந்த செய்தி !


என்னா பாட்டுடே : இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன 

மேனேஜ்மென்ட் வல்லுநர்கள் மீண்டும் மீண்டும் சொல்கிற ஒரு விஷயம்:கீப் இட் சிம்பிள்; எந்த விஷயத்தையும் எளிமையாக வைத்து கொள்ளுங்கள். அதிக காம்ப்ளக்ஸ் ஆக்கி கொள்ள கூடாது என்பது தான் அவர்கள் சொல்லும் செய்தி.
அது இந்த பாட்டுக்கு எத்தனை பொருந்துகிறது !

எளிமையான வரிகள், சிம்பிள் மெட்டு, குறைவான இசை கருவிகள் (இங்கு ஆர்கெஸ்டராவில் ஏராள வயலின்கள் வாசிப்பது ஆச்சரியமாக உள்ளது! பாடல் கேட்கும் போது தெரியவே இல்லை )

திரையில் -இப்பாடலில் கொஞ்சம் அடல்ட்ஸ் ஒன்லி காட்சிகள் வரும் என்பதால் - ரகுமான் இசை அமைத்த நிகழ்ச்சியில் இருந்து - இந்த பாடலின் ஒளிவடிவம் பகிர்கிறேன்

விஜய் பிரகாஷ் மற்றும் ஸ்வேதா அசத்தும் பாட்டு.. கேட்டு ரசியுங்கள் !



இன்கம் டேக்ஸ் ரீபண்ட் அனுபவம் 

சென்ற ஆண்டு எனக்கு இன்கம் டேக்ஸ் அதிகமாக பிடித்து விட்டனர். கணிசமான தொகை என்பதால் - ஆடிட்டர் நண்பர் ஒருவரை அணுகி ரீபண்ட்க்கு விண்ணப்பித்தேன். ஏனோ அரசு எந்திரம் என்பது - யானை  வாய்க்குள்  சென்று கரும்பு  போலவே எண்ணம்.. பணம் திரும்ப வருவது சிரமம் என நினைத்தேன். ஆனால் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் சில வாரங்களில் ரீ பண்ட் வந்து விட்டது !

சில படிப்பினைகள் :

நிறுவனத்தில் வரி பிடிக்கும் போது கவனமாய் சரியாய் தான் பிடிக்கிறார்களா என கவனிப்பது மிக அவசியம்; அதிகம் பிடித்தால் - உடன்  அணுகினால் தான்   அடுத்த மாதத்தில் சரி செய்ய முடியும். தவற விட்டால் ரீ பண்ட்  தான் சென்றாக வேண்டும்

ரீ பண்ட் அதிக தொகை எனில் ஆடிட்டர் மூலம் செல்வது நல்லது; அவர்கள் அறிவுரையால் தான் நான் தைரியமாக விண்ணப்பித்தேன்.

தொல்லை காட்சி : விஜய் டிவி ஸ்பெஷல்

* கிங்ஸ் ஆப் டான்ஸ் இறுதி - போட்டிக்கு வழக்கம் போல் பிரபு தேவா நடுவராக வந்திருந்தார்.சில டீம்கள் அசத்தின. இம்முறை 2 டீமுக்கு (ஒன்று குட்டீஸ் டீம்) சேர்ந்து வின்னர் பட்டம் கொடுத்தனர். அறிவித்த பரிசு தொகை 5 லட்சம். இறுதியில் ஜெயித்த 2 டீமுக்கும் ஆளுக்கு 5 லட்சம் என கூறினர் !

* நீயா நானா நேரத்தை ரொம்ம்ப்ப வருஷம் கழிச்சு மாத்திருக்காங்க ! ஞாயிறு இரவு 8.30க்கெல்லாம் வந்துடுது !! சொல்லவே இல்ல!!

* சிரிப்புடா என ஒரு நிகழ்ச்சி தினம் இரவு 9.30க்கு வருது; அதற்கு பேர் வெறுப்புடா என வைத்திருக்கலாம் ! தாங்க முடியாத அறுவை .. சீக்கிரம் இந்த நிகழ்ச்சியை மாத்தி தொலைங்கப்பா ! சே !
Related Posts Plugin for WordPress, Blogger...