Showing posts with label கிசு கிசு. Show all posts
Showing posts with label கிசு கிசு. Show all posts

Wednesday, January 20, 2010

வானவில் - தமிழ் படமும், பதிவர் "சகா" கல்யாணமும்

நாட்டு நடப்பு

அமரர் ஜோதி பாசு இறந்த பின் தன் கண்களையும் உடலையும் தானம் செய்தது அவர் மேல் பெரும் மரியாதை வர செய்கிறது. இவ்வளவு பெரிய தலைவர் இவ்வாறு செய்ததன் மூலம் இன்னும் பலருக்கு இவ்வாறு செய்ய எண்ணம் நிச்சயம் வரும்.

தமிழ் படம்

டிவிக்களில் தமிழ் படம் ட்ரைலர் பட்டையை கிளப்பிக்கிட்டிருக்கு. அன்பு செல்வன் (காக்க காக்க) & ரஜினி ஸ்டைலில் மிர்ச்சி சிவா அடிக்கும் லூட்டி சிரிக்க வைக்கிறது. எனக்கு ஒரே ஒரு சந்தேகம். " இருக்கும் best காமெடி சீனையெல்லாம் இப்படி காட்டிட்டா அப்புறம் படம் பாக்கும் போது நமக்கு ஆச்சரியம் இல்லாமலும், போரும் அடிச்சிடுமோ?" எனது சந்தேகம் பொய்யானால் மகிழ்ச்சியே..

சென்னை ஸ்பெஷல்

சென்னையில் துணி வாங்க ஒரு நல்ல கடை சொல்கிறேன்: நல்லி சில்க்ஸ். பழம் பெரும் கடை. பனகல் பார்க் அருகே உள்ளது. ஆடி மாதத்தில் ஒரு முறை ஹவுஸ் பாஸ் ஒரு கடையில் ஒரு குறிப்பிட்ட புடவை பார்த்தார். டிஸ்கவுன்ட் போக ஒரு குறிப்பிட்ட அமௌன்ட் வந்தது. பின் நல்லிக்கு வந்தோம். அதே புடவை டிஸ்கவுன்ட் ஏதும் இன்றி அதை விட மிக குறைந்த விலை.. சமீபத்தில் எனது பெண்ணுக்கு கூட அதே போல் ஒரு நிகழ்வு..

T.நகரில் அதிசயமாய் கார் மட்டும் டூ வீலர் பார்க்கிங் உள்ள கடை!! பொதுவாய் தரம் நல்லா இருக்கும். ரேட்டும் reasonable. உங்களுக்கு இந்த கடை சென்ற அனுபவம் இருந்தால் பின்னூட்டத்தில் பகிருங்கள்

வாரம் ஒரு சட்ட சொல் இந்த வாரம்: Accomplice

Accomplice என்றால் “Companion in evil deeds” என்று பொருள். ஒரு கொலை நடக்கிறது. அதில் சிலர் வெவ்வேறு விதமாய் உதவி இருக்கலாம். உதாரணமாய் ஒளிந்திருந்து அந்த நபர் வருகிறாரா என பார்த்து சைகை செய்திருக்கலாம். அவரை கொலை செய்தவர் வெட்டும் போது அவர் திமிராத படி பிடித்திருக்கலாம்.. இப்படி குற்றத்திற்கு உதவியவர்களை Accomplice என்று கூறுவார்கள். இவர்கள் குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப தண்டனை (கொலை செய்தவரை விட பெரும்பாலும் சற்று குறைவாக) கிடைக்கும்

ரசித்த SMS :

Hard words can’t touch any soft heart. But soft words can touch any hard heart. Speak in a soft way. You can win many hearts.

அய்யாசாமி

அய்யாசாமி பேங்க்குக்கோ, EB போன்ற இடங்களுக்கு பணம் கட்டவோ சென்றால், எல்லா வரிசையும் பார்த்து விட்டு எது சீக்கிரம் நகரும் என ஒரு முடிவெடுத்துட்டு தான் நிற்பார். ஆனால் இன்று வரை இவர் நின்ற வரிசைதான் மெதுவாக நகர்கிறது .. எப்போதும் இவருக்கு பின் வந்தவர்கள் கூட பக்கத்துக்கு வரிசையில் நின்று முன்பே செல்ல ஐயாசாமி ரொம்ப லேட்டா தான் போவார்..

கிசு கிசு

நாலு சக்கர வாகனம் ஒன்றை தன் பெயரின் முன் பகுதியிலும், அதன் சாவியை பெயரின் பின் பகுதியிலும் வைத்திருக்கும் சகாவுக்கு தீவிரமாக பெண் தேடுகிறார்களாம். கூடிய சீக்கிரம் டும் டும் தானாம்... சகா அப்ப அவங்க?

Wednesday, January 13, 2010

வானவில் - கிராமத்து பொங்கலில் ஒரு Affidavit

கிராமத்து பொங்கல் நினைவுகள்

நான் பிறந்த தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படும். எங்க ஊரான நீடாமங்கலத்துக்கு தான் சுத்தியிருக்கும் பதினெட்டு பட்டி (!!!) மக்களும் பொங்கல் பொருட்கள் வாங்க வருவார்கள். அதென்னவோ ஏழைகள் தீபாவளி ஆகட்டும், பொங்கல் ஆகட்டும் முதல் நாள் தான் துணி மற்றும் முக்கிய பொருட்கள் வாங்குகிறார்கள். Interior கிராமங்களில் பொங்கல் வைப்பது தெருவிலேயே நடக்கும். பொங்கலன்று எங்க ஊர் அம்சவல்லி மற்றும் காவேரி தியேட்டரில் மூணு ஷோ சினிமா நடக்கும். கரும்பு, பொங்கல் மற்றும் வாழை பழங்களுடன் தியேட்டர் சென்று படம் பார்ப்பார்கள். படம் முடிந்ததும் கரும்பு சக்கை தியேட்டர் முழுதும் கொட்டி கிடக்கும். இதை சுத்தம் செய்து அடுத்த காட்சி ஆரம்பிக்க தாமதமாகும். போன வருட பொங்கல் or தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆன படங்கள் இப்போது தான் எங்க தியேட்டருக்கு வரும்.

காணும் பொங்கலன்று தெருவில் பலரும் ஒன்றாக சேர்ந்து மாட்டு வண்டி, டிராக்டர் மற்றும் கிடைத்த வாகனங்களில் கூட்டமாக அருகில் உள்ள மூணாம் தலைப்பு என்னும் இடத்துக்கு செல்வார்கள். எங்கள் ஊருக்கு அருகில் உள்ள பிக்னிக்  spot அது தான் . மூன்று ஆறுகள் ஒன்றாய் கூடுமிடம்... ஒரு Mini dam  போல... சுற்றி நிறைய மரங்களும், காலி இடமும் இருக்கும். கட்டு சோறு கட்டி சென்று நாள் முழுதும் அங்கு விளையாடி விட்டு வருவார்கள். சில வருடங்கள் முன்பு ஒரு காணும் பொங்கலன்று அக்கா, அண்ணன் குழந்தைகளுடன் அந்த இடம் சென்றேன். இப்போது முன்பு போல் அதிக கூட்டமில்லை. மக்கள் இந்திய தொலை காட்சிகளில் முதல் முறையாக படங்களை காண தத்தம் வீடுகளிலேயே சரணடைந்து விட்டார்கள். நமது நல்ல பழக்க வழக்கங்களில் சிலவற்றை நாம் இழந்து வருகிறோமோ என சற்று வருத்தமாக இருந்தது.

ஐயோ பாவம் அய்யாசாமி

அய்யாசாமி ஒரு சராசரி மனிதன். அவன் சந்திக்கும் பிரச்சனைகள் நீங்களும் சந்தித்திருக்கலாம். "வான வில்லில்" அவ்வபோது இவன் தோன்றுவான்.

அய்யாசாமி காய்கறி கடை சென்றால், அவன் பக்கத்தில் நிற்போருக்கே நல்ல வெங்காயமும் நல்ல தக்காளியும் கிடைக்கிறது. ஒரே நேரத்தில் பக்கத்தில் நிற்பவர்களுக்கு மட்டும் நல்ல நல்ல பீசாக கிடைக்க நம்ம ஆள் அவர்கள் வேகத்துக்கு ஈடு குடுக்க முடியாமல் தடுமாறுவான். அவர்கள் எடுத்த பின் நல்ல வெங்காயம் எல்லாம் அவங்களே எடுதிட்டாங்களே என்ற ரீதியில் முழிப்பான். எப்போதும் அவன் எடுத்து செல்லும் காய்கறிகளுக்காக வீட்டம்மாவிடம் "எங்கிருந்து தான் உங்களுக்குன்னு இப்படி கிடைக்குமோ?"  என வாங்கி கட்டி கொள்வான்...


படித்ததில் பிடித்தது

" வாழ்க்கை சில கேள்விகளுக்கு பதில் தருவதே இல்லை. ஒரு குரூரமான ஜோக் போல பல கேள்விகளுக்கு அது பதில் தராமலே இருந்து விடுகிறது"

- சிறு கதை ஒன்றில் கார்த்திகா ராஜ்குமார்

இந்த வரி படித்து 20 வருடங்களுக்கும் மேலாகிறது. அப்படியே மனதில் தங்கி விட்டது. பதில் இல்லாத சில துயரமான நிகழ்வை சந்திக்கும் போதெல்லாம், இந்த வரி என் நினைவுக்கு வந்து ஆறுதலாக இருந்திருக்கிறது. படிப்பது நிச்சயம் உதவவே செய்கிறது. இல்லையா?

ஒரு பகிர்வு

பொதுவாக நான் Forward-களை ப்ளாகில் எழுதுவதில்லை. ஆனால் வாசித்த சுவாரசயமான ஒரு விஷயம் உங்களுக்கும் சிரிப்பை வரவழைக்கும் என்பதால் பகிர்கிறேன்:

இந்த விஷயம் ஐ. நா சபையில் நடந்ததாக அந்த மெயில் கூறுகிறது:
இந்திய தூதுவர் தன் பேச்சை இவ்வாறு துவக்கினார்:

"ரிஷி காஷ்யாப் என்ற காஷ்மீரை கண்டு பிடித்த மனிதர் காஷ்மிரில் ஒரு பாறையை வெட்டினார் . அதிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்க தனது துணிகளை கழட்டி வைத்து விட்டு குளித்தார். குளித்து முடித்து விட்டு வந்து பார்த்தால் அவர் உடைகளை காண வில்லை. அதை ஒரு பாகிஸ்தானி திருடி சென்று விட்டார்"....

அவர் பேசுவதை இடை மறித்த பாகிஸ்தான் தூதுவர், " இது சுத்த பொய். அப்போது பாகிஸ்தானிகள் அங்கு இல்லவே இல்லை" என்றாராம்.

நமது தூதுவர், " உண்மையை ஒத்து கொண்டதற்கு நன்றி. எனக்கு தேவை அது தான்" என தொடர்ந்தாராம் !!!..

வாரம் ஒரு சட்ட சொல் : இந்த வாரம் Affidavit

மிக எளிமையாக ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் "Declaration". Declaration செய்பவர் தன்னை பற்றியோ, தனக்கு தெரிந்த சில தகவல்கள் உண்மை என்றோ எழுத்தில் தருவது தான் Affidavit . சில Affidavit நோட்டரி பப்ளிக் முன்பு தான் கையெழுத்திடவேண்டும். " நான் இந்த Affidavit தரலை; இது என் கையெழுத்து அல்ல " என பின்னர் நீங்கள் பின் வாங்காமல், Affidavit -க்கு ஓர் authenticity தரவே இந்த ஏற்பாடு.


Affidavit-களின் பயன் பாடு என்னவெனில்-வாயால் சொல்லிய ஒரு விஷயத்தை பின்னர் நீங்கள் சொல்லலை என சொல்லி விடலாம். ஆனால் எழுத்தில் நீங்கள் சொல்வது என்றைக்கும் உங்கள் மீது binding ஆகும். நீதி மன்றங்களிலும், அரசாங்க விஷயங்களில் பல இடங்களிலும் Affidavit தரவேண்டியிருக்கும்.

ஒரு சம்பவம்

சமீபத்தில் ஒரு நாள் காலை அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தேன். வேளசேரி பாலம் மீது ஒரு பெரிய கல் செல்லும் வழியில் கிடக்கிறது. வாகனங்கள் அனைத்தும் அந்த இடத்தை தவிர்த்து வளைந்து செல்கின்றன. நானும் கூட அவ்வாறே எண்ணி கொண்டு செல்லும் போது அந்த கல்லை தாண்டி போன ஒரு பெரியவர் ( 45 to 50 வயதிருக்கும்) தனது -TVS 50ஐ நிறுத்தி விட்டு அந்த கல் அருகில் வந்தார். நான் அவரை தாண்டி சென்ற பின் என் மனது பல கேள்வி எழுப்பியது. அவர் அந்த கல்லை எடுத்து போட தான் வந்தாரா? நான் ஏன் அப்படி செய்ய வில்லை? சற்று யோசித்த போது, சோம்பேறி தனம் ஒரு காரணம். மேலும் வண்டியை நிறுத்தி விட்டு நாம் எடுத்து போட்டால் எல்லோரும் நம்மையே பார்ப்பார்கள். அந்த கொஞ்ச நேரம் நம் மீது spot light அடித்து பார்ப்பது போல் கூச்சமாய் இருக்கும் என் தோன்றியது. கூடவே என் பெண் சைக்கிள் விட கற்று கொண்ட போது மட்டும் தெருவில் இருந்த அனைத்து கல் மற்றும் முள்ளை தனி ஆளாக எடுத்து போட்டு, அதற்கு மட்டும் ஒரு மணி நேரம் செலவிட்டது நினைவுக்கு வந்து இம்சை செய்தது. அப்போது மற்றவர்கள் பார்ப்பார்கள் என கொஞ்சம் கூட யோசிக்கலையே?? ஏன்??

கிசு கிசு

இணைய உலகத்துக்கு புதிதான குறும்பான பதிவர் கோடி ரூபாய் குடுத்தாலும் சனி கிழமையில் அலுவல் வேலையோ இணைய வேலையோ செய்ய மாட்டாராம். மட்டுமல்ல சனி ஞாயிறுகளில் மனிதர் காணாமல் போய் விடுகிறாராம்.. இவர் இந்த இரு நாள் எங்கே போகிறார் என கண்டறிய தனி படை அமைக்கப்பட்டுள்ளது...

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

Friday, January 8, 2010

வானவில் - சாதா கொலை Vs ஸ்பெஷல் கொலை

ரசித்த போட்டோ

எந்திரனின் அதிகார பூர்வ படங்கள் சில வெளியாகி உள்ளது. எனக்கு பிடித்தது இந்த படம் தான்.




ரஜினியின் சிரிப்பை பாருங்கள். எவ்வளவு இயற்கையாக எடுக்கப்பட்ட போட்டோ இது!! முழு நீள நெகடிவ் கேரக்டரில் ஒரு ரஜினி... நிச்சயம் அமர்களமாக இருக்க போகிறது

வாரம் ஒரு சட்ட சொல் - இந்த வாரம் Mensrea

Mensrea என்ற வார்த்தைக்கு வரும் முன் இரண்டு கொலைகளை பார்ப்போம். முதலாவது ஒரு பேருந்தில் இருவர் முதல் முறை சந்திக்கின்றனர். வெவ்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். தம் தலைவர்களை பற்றி விவாதம் வருகிறது. தன் தலைவரை பற்றி தர குறைவாக பேசியதால் கோபமான ஒருவர் மற்றவரை ஓடும் பேருந்திலிருந்து தள்ளியோ, கத்தியால் குத்தியோ கொல்கிறார். இது முதல் கொலை.

அடுத்தது: இரு அடுத்தடுத்த வீட்டில் வசிப்போர் இடையே பகைமை நீண்ட நாளாக இருந்து வருகிறது.... இதில் ஒருவர் மற்றவரை கொல்கிறார்.

மேலே கண்ட இரண்டும் கொலை தான். ஆனால் இரண்டிற்கும் ஒரே அளவு தண்டனை கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா?

கொஞ்சம் யோசித்தால், நீங்களே முதல் கொலைக்கு சற்று குறைவான தண்டனையும், இரண்டாவது கொலைக்கு சற்று பெரிய தண்டனையும் கிடைக்கும் என்றும் கூறுவீர்கள்.

முதல் கொலை திடிரென நடந்தது. Out of sudden provocation . அதில் preplanning இல்லை. ஆனால் இரண்டாவது plan செய்து நடந்த கொலை. பக்கத்துக்கு வீட்டு காரனை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் அந்த மனிதனுக்கு ரொம்ப நாள் இருந்திருக்கிறது. கோபம் குறையாமல் அதை அதிக படுத்தி, கொல்லும் அளவுக்கு சென்றுள்ளான். எனவே தண்டனை அதிகமே. இதனை தான் Mensrea என்கின்றனர். Mensrea என்றால் guilty intention என்று பொருள். குற்ற வழக்குகளில் நீதி மன்றங்கள் தீர்ப்பு தரும் முன் இந்த Mensrea இருந்ததா என பார்ப்பது வழக்கம்.

கிசு கிசு

சென்னையை சேர்ந்த இரண்டு மூத்த பதிவர்கள் ஒரே பெண்ணை காதலிக்கிறார்களாம்!! லவ்வுன்னா லவ்வு .. மண்ணெண்ணெய் ஸ்டவ்வு என்ற ரீதியில் காதல் தீவிரமாக போகிறதாம். சென்ற வாரம் ஒரு நாள் பின்னிரவு தொலை பேசியில் இது குறித்து வாக்கு வாதம் நீண்டு விட்டதாம். இதற்கு மத்திசம் பேச வெளியூரிலிருக்கும் ஓட காரரை conference call -ல் கூப்பிட்டுள்ளனர். அவரை லைனில் வைத்து கொண்டே சண்டை நீண்டு, தொடர்ந்திருக்கிறது. சற்று நேரத்தில் ஓட காரர் " கொர்.. கொர்.. "..

Quote:

Dedication to duty is not a sacrifice. It is a justification of ones own existence - Gandhiji.


சென்னை ஸ்பெஷல்

புதிதாக சென்னை வருபவர்களோ, சென்னையில் வாசிப்பவர்களோ, ஒரு முறை பறக்கும் ரயிலில் பயணம் செய்து பாருங்கள். தற்சமயம் வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரை செல்கிறது. டைடல் பார்க், மவுன்ட் ரோடு, லஸ் என பஸ் போகும் பல ரோடுகளில், தரைக்கு மேல் ரயில் செல்வது குஷியான அனுபவம். குறிப்பாய் சின்ன பசங்களை அழைத்து போகவும்.. ரொம்ப என்ஜாய் பண்ணுவாங்க. நான் guest வரும் போது, குட்டி பசங்களை ஒரு round அழைத்து போவது வழக்கம்.


டிவி பக்கம்

விஜய் டிவியில் Boys Vs Girls முடிந்து விட்டது. நான் தொடர்ந்து பார்க்கா விட்டாலும் அவ்வபோது பார்த்தேன்.

ப்ரியா (என்னா அருமையான சிரிப்பு!!),
ஐஸ்வர்யா (செம tall - செம அழகு),
ஹேமா (Excellent expression),
சான்ரா (என்னமோ ஒரு சொல்ல முடியாத அழகு)
கவிதா (நமக்கு தெரிந்த ஒரு பெண் முக சாயலில் இருப்பதால்)

என ஐந்து அழகுகளுக்காக தான் பார்த்தேன். Finals-ல் பாய்ஸ் வென்றது கொடுமை!! அந்த அணியின் தலைவர் (??) பாலாஜி ஆடவே தெரியாதவர். மேலும் பல வீக் ஆட்கள் உண்டு. சென்ற சீசனில் கேர்ள்ஸ் வென்றதால், இம்முறை பாய்ஸ் ஜெயிக்கணும் என்ற முடிவோடு செயல் பட்ட மாதிரி தெரிகிறது!!

இந்த முறை டீலா நோ டீலாவில் ஒரு பெண் 25 லட்சம் வென்றார் !! கையில கிடைக்கும்குறீங்க??

ஒரு சம்பவம்

என் பெண் ஒரு பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்று வந்தாள். வந்தவள் ஒரு சம்பவத்தை சொன்னாள். " அப்பா அந்த வீட்டில் வேற ஒரு சொந்த கார பையன் இருக்கான். . அங்கே தங்கி படிக்கிறான். அவன் ஏழை போலிருக்கு. " எல்லாரும் நல்லா டிரஸ் பண்ணிருக்காங்க இவன் மட்டும் ஏன் பழைய ட்ரெஸ் போட்டிருக்கான்"னு பர்த்டே பாய் கேட்டான். அதுக்காக அந்த வீட்டில எல்லாரும் அவனை திட்டிட்டாங்க. அவனை எந்த போட்டோவிலும் நிக்க விடலை. பாவம்பா அவன்.. அழுதுகிட்டே இருந்தான்" இதை கேட்டதும் என் மனம் கனத்து போனது.

நான் சென்றிருந்தால் நிச்சயம் அவர்களிடம் ஏதாவது பேசி அந்த பையனை சரி செய்திருப்பேன். இப்போது அவர்களிடம் இந்த டாபிக்கை ஓபன் செய்து பேச முடியாது. I felt helpless.

நம்மை விட powerful மனிதர்களை (அலுவலகத்தில் பாஸ் மற்றும் சூப்பர் பாஸ்) நாம் மதிப்பது பெரிதில்லை. அவர்களை மதித்து தான் ஆகணும். ஆனால் நம்மை விட எளியவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதை பொறுத்து தான் நமது character தெரிய வரும்.

மனிதர்கள் அனைவரும் சமமே. எல்லோருக்கும் சில உணர்ச்சிகள் பொது தான். இது ஏனோ சிலருக்கு விளங்குவதில்லை!!

Wednesday, December 30, 2009

வானவில் - சென்னை பதிவர் சந்திப்பும், N . T திவாரியும்

வானவில் என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் சில எண்ணங்களை உங்களுடன் பகிர உள்ளேன். ஏழு வண்ணங்கள் போல் ஏழு விஷயங்கள்... இதே தலைப்பில் தான் இருக்கும் என்று கட்டாயம் இல்லை. ஏனெனில் " மாறுதல் ஒன்றே மாறாத ஒன்று.."

ஒரு சந்திப்பு

பதிவர் உலகநாதன் சென்னை வந்திருந்தார். மலேசியாவில் பணி புரியும் இவர் முதல் முறை பதிவுலக நண்பர்கள் பலரை சந்தித்தார். நண்பர் தண்டோரா அலுவலகத்தில் சந்திப்பு. கேபிள், தண்டோரா, பொன். வாசுதேவன், பட்டர்பிளை சூரியா, கார்க்கி, அதி பிரதாபன், பைத்திய காரன் முதலானோர் சந்தித்தோம். பலரை நானும் இன்று தான் சந்திதேன்.

கார்க்கி எழுத்தில் இருப்பதற்கு சற்று குறைவான குசும்புடன்.. உலகநாதன் உடல் நலத்துக்கு மட்டும் வாகிங், யோகா என தினம் ரெண்டு மணி நேரம் ஒதுக்குவாராம். பார்த்தாலே தெரிகிறது. (நான் வாகிங் ஆரம்பிப்பது மழை பெய்தால் விடுவது ..வழக்கம் போல்..)

உலக நாதன் அனைவருக்கும் ஓர் சிறு நினைவு பரிசுடன் வந்திருந்தார். அன்பிற்கு நன்றி உலக நாதன்!!

கலக்கலான அரட்டை.. வேட்டைக்காரன் பற்றியும் ஆயிரத்தில் ஒருவன் ட்ரைலர் பற்றியும் பிரித்து மேய்ந்தனர். கார்க்கி , கேபிள் பாட... .. மிக இனிமையாய் மூன்று மணி நேரங்கள் போனது.

சந்திப்பில் எடுத்த புகை படங்கள் நண்பர்கள் யாரேனும் விரைவில் upload செய்வார்கள் என நினைக்கிறேன்.

வாரம் ஒரு சட்ட சொல் – இந்த வாரம்- Caveat

முதலில் ஒரு உதாரணம்: நீங்கள் உங்கள் நிலத்தில் ஒரு அலுவலகம் அல்லது வீடு கட்டுகிறீர்கள். பக்கத்து நிலத்து சொந்த காரருக்கும் உங்களுக்கும் ஏதோ சண்டை. நீங்கள் கட்டடம் கட்டுவதை அவர் எதிர்க்கிறார். இவர் இதற்காக கோர்டுக்கு போய், நீங்கள் கட்டடம் கட்டுவதை நிறுத்த இடை கால உத்தரவு (interim order) பெறலாம் என உங்களுக்கு நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோர்ட்டுகள் பெரும்பாலும் இரு பக்கமும் கேட்டு தான் நீதி வழங்கும். ஆயினும் அவசர நேரத்தில் ஒரு party-யை மட்டும் கேட்டு விட்டு interim order வழங்க வாய்ப்பு உண்டு. நீங்கள் உங்களை பாது காக்க என்ன செய்யலாம்? கோர்ட்டில் நீங்கள் ஒரு caveat file செய்யலாம். இவ்வாறு செய்தால் கோர்ட் உங்களுக்கும் தகவல் தந்து, உங்கள் தரப்பையும் கேட்டு தான் எந்த ஆர்டரும் தர முடியும். ஆங்கிலத்தில் proactive என்பார்களே அதற்க்கு ஒரு சிறந்த உதாரணம் caveat file செய்தல்.

ரசித்த SMS/ QUOTE:

“On no account brood over your errors. Take the learning alone. Rolling over the muck is not the best way of getting clean”.

ஆனந்த் என்று ஒரு நண்பர். முன்பு எனது colleague. தவறாமல் ஒரு நல்ல மெசேஜ் தினம் காலை அனுப்புவார். நன்றி ஆனந்த்

ஒரு தகவல்

குளோபல் வார்மிங் பற்றிய ஒரு Talk show-வில் வசந்த் டிவியில் பேசியுள்ளேன். நிகழ்ச்சி புத்தாண்டு (1/1/2010) அன்று இரவு 8.30 முதல் 9.30 வரை வசந்த் டிவியில் ஒளி பரப்பாகும். இதன் தொடர்ச்சி சனி மற்றும் ஞாயிறு (2/1/2010 & 3/1/2010) இரவு எட்டரைக்கு அரை மணி நிகழ்ச்சியாக வரும். முடிந்தால் காணுங்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேச பல அற்புதமான தகவல்கள் தந்த சக பதிவர் ஜெய மார்தாண்டனுக்கு நன்றிகள் பல.

ரசித்த கவிதை

திறந்த வாயிற்படியில்
ஒரு முகம் தோன்றி
ஏதேனும் உரைக்கட்டும்
பார்க்கும் போது
பூட்டில்லாமல் இருத்தல் வேண்டும்

- மறைந்த நண்பன் லக்ஷ்மணன்

நாட்டு நடப்பு

திவாரி என்ற மனிதர்.. நமக்கு பக்கத்தில் ஆந்திராவில் கவர்னரா இருந்தார். ஊரே தெலுங்கானாவில் பத்தி எரியும் போது மனிதர் பெட் ரூமில் ரெண்டு பெண்களுடன் குஜாலா இருந்திருக்கார். இப்போ பதவி போய் சொந்த ஊர் போய்ட்டார் ..இவருக்கு வயது அதிகமில்லை ஜென்டில் மேன் .. 86 . அவரிடம் இரு கேள்வி:

1. ஏனுங்க இந்த வயசிலுமா??
2. ஆமாம் இந்த வயசில என்ன செய்வீங்க?


கிசு கிசு (100 % பொய்; 0 % நிஜம் )

அவதார பெயர் கொண்ட பதிவரை அவரது கார் கம்பனி மும்பைக்கு இட மாற்றம் செய்துள்ளதாம். மும்பை போனால் அவர் எழுதுவது கூடுமா குறையுமா என இரு பதிவர்கள் சரக்கடித்தவாரே, காரசாரமாக டிஸ்கஸ் செய்துள்ளனர்.

***
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!
Related Posts Plugin for WordPress, Blogger...