Monday, October 26, 2009

பேராண்மை சினிமா விமர்சனம்


இயக்குனர் ஜன நாதன் இயற்கை போன்ற படங்கள் தந்தவர். science fiction படங்கள் தமிழில் தரும் ஆர்வமுள்ள இயக்குனர். இவரது 3 வது படம் பேராண்மை.

கதை

Tribal family -யில் இருந்து வரும் ஹீரோ (ஜெயம் ரவி) தனது பணியில் நிறைய அவமானங்களை சந்திக்கிறார். NCC trip வரும் பெண்கள் குழுவில் ஐவருடன் இவர் காட்டுக்குள் ஒரு நாள் சென்று வரும் ப்ராஜெக்டில் செல்கிறார். அப்போது எதேச்சையாக வெளி நாட்டு கும்பல் ஒன்று இந்தியாவிற்கு எதிராக சதி செய்வது அறிந்து அதை அந்த பெண்கள் உதவி உடன் மிக குறைவான resources உடன் எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை

* ஜெயம் ரவி மிக கடுமையாக உழைத்திருக்கிறார். உடலை குறைத்து, மேலும் action காட்சிகளுக்கு ரொம்ப கஷ்டபட்டிருக்கிறார். பொதுவாக ஸ்டண்ட் சீன் என்றால் நான் அதிகம் ஆர்வம் காட்ட மாட்டேன். ஆனால் இதில் கொரில்லா டைப் சண்டைகள் என்பதால் பெரும்பாலான fights பார்க்க முடிந்தது.

* 5 பெண்கள் பொதுவாய் ரொம்ப mischievous ஆக காண்பித்துள்ளனர். மற்ற படி பெரிய identity அவர்களுக்கு தர பட வில்லை. (நாடோடிகள், பசங்க போன்ற படங்களில் ஒவ்வொரு character -க்கும் தனி details தந்தது எவ்வளவு நன்றாக இருந்தது !!)

வில்லனாகவே வரும் பொன் வண்ணன் கடைசியில் "விருது" வாங்குவது செம நக்கல்.

இயக்குனர் ஒரு கம்யூனிஸ்ட் என்பதை மீண்டும், மீண்டும் காட்டுகிறார். நோ கமெண்ட்ஸ்!!

பாடல்கள் சொதப்பல். வடிவேலுவை கேரக்டர் artist போல் உபயோகம் செய்துள்ளனர். அவருக்கு காமெடிக்கு அதிக scope இல்லை.


சிலர் பேராண்மை படத்தை அர்ஜுனின் தேச பக்தி படங்களுடன் compare செய்து விமர்சனம் எழுகின்றனர். ஜன நாதனை இதை விட பெரிய அளவில் அவமான படுத்த முடியாது.

படம் "ஓஹோ" என்று இல்லாவிடினும், கொரில்லா போரையும், tribal வாழ்கையும் சொன்ன விதம் மனதில் நிற்கிறது. அதற்காகவே ஒரு முறை பார்க்கலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...