Saturday, January 30, 2010

தமிழ் படம் - விமர்சனம் - சிரிப்புக்கு கேரன்டீ

வலை உலகில் மட்டுமின்றி வெளி உலகிலும் அதிகம் எதிர் பார்க்கப்பட்ட "தமிழ் படம் " எதிர் பார்ப்புகளை பூர்த்தி செய்ததா?

சினிமா பட்டி என்ற கிராமத்தில் பிறக்கும் ஆண்களை தொடர்ந்து கொல்கிறார்கள்.. அவர்கள் வளர்ந்து சினிமாவில் நடிக்க போவதால்!! இதில் தப்பி பறவை முனியம்மாவால் வளர்க்கபடுகிறார் ஹீரோ சிவா. பெரியவராகி, மர்மமான முறையில் பலரை கொலை செய்கிறார். தன் "இளம்" நண்பர்களுடன் சுற்றுகிறார்.. இறுதியில் அவர் கொலை செய்தது ஏன், வில்லன்களுக்கெல்லாம் வில்லனாக இருந்தது யார் என்ற கேள்விகளுக்கு சிரிப்போடு பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்..

படம் மீது நமது எதிர் பார்ப்பு நன்கு சிரிக்க வைப்பார்கள் என்பதே. அதற்கு வஞ்சனை இல்லாமல் செய்துள்ளனர். தியேட்டர் சிரிப்பு சத்தத்தில் இப்படி நிறைந்து நெடு நாளாகிறது. சில நேரம் வசனம் ஆரம்பித்ததும் சிரிப்பு சத்தம் ஆரம்பிக்க, மீதம் வசனம் கேட்க முடிய வில்லை.

ரன், சிவாஜி, மொழி, காக்க காக்க என பல காட்சிகளில் இருந்து ஒவ்வொரு சீனும் உருவி உள்ளனர். ஆனால் தொடர்ந்து செல்லும் flow-வில் ஒட்டு போல் இல்லாமல், சரளமாய் செல்வது ஆச்சரியம்!! இங்கு தான் இயக்குனர் ஜெயிக்கிறார்.

ஹீரோவின் இளம் நண்பர்கள் வெண்ணிற ஆடை மூர்த்தி, MS பாஸ்கர், மனோ பாலா!! இவர்கள் பெயர் பரத். சித்தார்த் இப்படி போகிறது !!

ஹீரோ சிவா இந்த கேரக்டரக்கு மிக சரியாக பொருந்துகிறார். அவரது body language & மேனரிசம் very apt!! ஹீரோ introduction scene - சிரித்து முடியலை. ஹீரோ காலை தூக்கி கொண்டு நிற்க, கேமரா முழுதும் சுற்றி முடிக்கிறது. பின் பக்கம் பார்த்தால் ஹீரோ பேன்ட் கிழிந்திருக்கிறது !!

ஹீரோயின் ஓரளவு அழகு. தமிழ் படங்களில் normal என்ன பங்கிருக்குமோ அதே..

ஆரம்பத்தில் வரும் மம்மூட்டி போன்ற வில்லன் காட்சிகள் கலக்கல். அதை விட தியேட்டர் அதிருவது டெல்லி கணேஷ் கொலை செய்யப்படும் அபூர்வ சகோதரர்கள் type காட்சியில்! மேலும் பல காட்சிகள் குறிப்பிடலாம். ஆனால் சொன்னால் நீங்கள் பார்க்கும் போது ரசிக்க முடியாது என்பதால் குறிப்பிடாமல் விடுகிறேன்.

முடியும் முன் கொஞ்சம் தொய்வடைவது போல் தெரிகிறது; ஆனாலும் தியேட்டர் சிரிப்பு சத்தம் non stop தான் !!

பாடல்கள் ஜாலியாக பார்க்க முடிகிறது. இசை அறிமுகம் கண்ணன்.

இயக்குனர் மிக வித்யாசமான concept தேர்வால் நிச்சயம் இந்த படம் success ஆகி விடும். அடுத்து எந்த வித கதை செய்ய போகிறார் என்ற கேள்வி எழுகிறது. சுஜாதா சொல்வது போல் எல்லா இயக்குனருக்கும் நிஜ டெஸ்ட் ரெண்டாம் படம் தான்!!

இந்த அளவு கிண்டல் செய்ய தைரியமும் கூட தயாரிப்பு வலுவான background உள்ள மக்களாய் இருப்பதால் தான் சாத்தியம். இது போல தமிழில் இன்னொரு spoof படம் வருமா தெரிய வில்லை.

கதை, நடிப்பு இப்படி ஏதும் எதிர் பார்க்காதீர்கள், சிரிப்பு மட்டுமே ஒரே எண்ணத்துடன் சென்றால் நன்றாக சிரித்து விட்டு வர ஓர் படம் தமிழ் படம் !!

Wednesday, January 27, 2010

வானவில் - ஐநாக்சும், அய்யாசாமியும்

நாட்டு நடப்பு

டேங்கர் பவுண்டேஷன் பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா? கிட்னி failure ஆன நோயாளிகளுக்கு ஆபரேஷனுக்கு பண உதவி தரும் அமைப்பு. இவர்கள் சமீபத்தில் சென்னையில் நடத்திய விழாவில் Dr ராபின் கலந்து கொண்டு பேசியுள்ளார். இவர் தனது 21 வயதில் கிட்னி failure ஆல் பாதிக்கப்பட்டவராம். தற்போது வயது 69 ! கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேல் கிட்னி failure உடன் வாழும் இவர் மூலம் இந்த நோய் பற்றிய பயம் ஒரளவு குறையட்டும்!! மேல் விபரங்களுக்கு ஜனவரி 26 - Times of India பேப்பர், முடிந்தால் வாசிக்கவும்.

வாரம் ஒரு சட்ட சொல் - இந்த வாரம் Contempt of Court

Contempt of Court என்றால் கோர்ட்டை அவமதித்த குற்றம் என்று பொருள். கோர்ட் பிறப்பித்த உத்தரவை மீறுதல் இதற்கு ஒரு முக்கிய உதாரணம். சில வழக்குகளில் கோர்ட்டின் உத்தரவை சிலர் obey செய்யாமல் இருப்பார். அப்போது Contempt of Court, file செய்து வழக்கை துரித படுத்துவர்.தவிர கோர்ட் நடக்கும் போது அங்கு அமர்ந்திருப்போர் அருகில் அல்லது செல் போனில் பேசுவது போன்றவையும் Contempt of Court -ல் அடங்கும்.

அய்யா சாமி

அய்யா சாமிக்கு எப்பவும் ஏதாவது கவலை லைவா இருக்கணும். கவலை உண்மையா இல்லாட்டி தானே கவலையை கற்பனை பண்ணிப்பார் !! உக்காந்து யோசிச்சு பார்த்ததில் நிஜ கவலையை விட " தானே கற்பனை" செய்து கொண்ட கவலைகளே அதிகம் என உணர்ந்தார். ஆனால் அதுக்காகவெல்லாம் கவலை படுவதை மாத்திக்கலை !!

சென்னை ஸ்பெஷல்

சிட்டி சென்டரின் உள்ளே இருக்கும் ஐநாக்ஸ் தியேட்டர் சென்றுள்ளீர்களா? அருமையான தியேட்டர் இது!! டிக்கட் விலை கொஞ்சம் தான் அதிகம். (ரூ. 120). Cleanliness, seats & Effects என எல்லாமே அற்புதம். ஒரு நல்ல படமாக சென்று பாருங்கள். என்ன…. ஸ்நேகேஸ் தான் விலை ரொம்ப அதிகம். நாம் வெளியிலிருந்தும் உள்ளே எடுத்து போக முடியாது. அதே போல் கார் பார்க்கிங் ஒரு மணிக்கு என்று சார்ஜ் செய்கிறார்கள். மூன்று மணி நேர படத்துக்கு அறுபது ருபாய் போல் கட்ட நேரலாம் !! ஒரு முறை நிச்சயம் செல்ல வேண்டிய இடங்களுள் இதுவும் ஒன்று..

ரசித்த SMS

நாம் எப்போது தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மை என்பது பற்றிய ஒரு SMS (இப்படி பட்ட SMS-ம் வரத்தான் செய்கிறது!!)

* சாப்பிடும் முன் ரெண்டு டம்ளர் நீர் குடிப்பது ஜீரணத்துக்கு உதவுகிறது.
* தூங்கி எழுந்ததும் ஒரு டம்ளர் நீர் உள் உறுப்புகள் -active ஆக உதவுகிறது.
* தூங்கும் முன் ஒரு டம்ளர் நீர் ஸ்ட்ரோக் வராமல் தடுக்க உதவுகிறது
* குளித்து முடித்தபின் ஒரு டம்ளர் நீர் ரத்தஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது

கிசு கிசு

வெளி நாட்டிலிருந்து பதிவர்கள் சென்னை வந்தால் " பாட்டிலுடன்" தான் வரணும் என்பது எழுத படாத விதி. அதிசயமாய் அப்படி வாங்காமல், சமீபத்தில் சென்னை வந்த ஒரு பதிவரை லோக்கல் சரக்கு வாங்கி குடுத்து மட்டையாக வைத்துள்ளனர். பின் அவர், “என்னங்க…சரக்கு சரியில்லை” என்று சொல்ல, " இதுக்கு தான் அங்கேயே வாங்கிட்டு வரணும்" என குமுறி விட்டனர் குமுறி..

ஒரு விளக்கம்

அலுவலகத்திலும் வீட்டிலும் ஆணி அதிகம். எனவே தான் பதிவுகளும், பிற blog புகுதலும் சற்று குறைவு. என்றாலும் கடமை உணர்ச்சியுடன் வானவில் மட்டும் நேரத்துக்கு வந்து விட்டது...

Wednesday, January 20, 2010

வானவில் - தமிழ் படமும், பதிவர் "சகா" கல்யாணமும்

நாட்டு நடப்பு

அமரர் ஜோதி பாசு இறந்த பின் தன் கண்களையும் உடலையும் தானம் செய்தது அவர் மேல் பெரும் மரியாதை வர செய்கிறது. இவ்வளவு பெரிய தலைவர் இவ்வாறு செய்ததன் மூலம் இன்னும் பலருக்கு இவ்வாறு செய்ய எண்ணம் நிச்சயம் வரும்.

தமிழ் படம்

டிவிக்களில் தமிழ் படம் ட்ரைலர் பட்டையை கிளப்பிக்கிட்டிருக்கு. அன்பு செல்வன் (காக்க காக்க) & ரஜினி ஸ்டைலில் மிர்ச்சி சிவா அடிக்கும் லூட்டி சிரிக்க வைக்கிறது. எனக்கு ஒரே ஒரு சந்தேகம். " இருக்கும் best காமெடி சீனையெல்லாம் இப்படி காட்டிட்டா அப்புறம் படம் பாக்கும் போது நமக்கு ஆச்சரியம் இல்லாமலும், போரும் அடிச்சிடுமோ?" எனது சந்தேகம் பொய்யானால் மகிழ்ச்சியே..

சென்னை ஸ்பெஷல்

சென்னையில் துணி வாங்க ஒரு நல்ல கடை சொல்கிறேன்: நல்லி சில்க்ஸ். பழம் பெரும் கடை. பனகல் பார்க் அருகே உள்ளது. ஆடி மாதத்தில் ஒரு முறை ஹவுஸ் பாஸ் ஒரு கடையில் ஒரு குறிப்பிட்ட புடவை பார்த்தார். டிஸ்கவுன்ட் போக ஒரு குறிப்பிட்ட அமௌன்ட் வந்தது. பின் நல்லிக்கு வந்தோம். அதே புடவை டிஸ்கவுன்ட் ஏதும் இன்றி அதை விட மிக குறைந்த விலை.. சமீபத்தில் எனது பெண்ணுக்கு கூட அதே போல் ஒரு நிகழ்வு..

T.நகரில் அதிசயமாய் கார் மட்டும் டூ வீலர் பார்க்கிங் உள்ள கடை!! பொதுவாய் தரம் நல்லா இருக்கும். ரேட்டும் reasonable. உங்களுக்கு இந்த கடை சென்ற அனுபவம் இருந்தால் பின்னூட்டத்தில் பகிருங்கள்

வாரம் ஒரு சட்ட சொல் இந்த வாரம்: Accomplice

Accomplice என்றால் “Companion in evil deeds” என்று பொருள். ஒரு கொலை நடக்கிறது. அதில் சிலர் வெவ்வேறு விதமாய் உதவி இருக்கலாம். உதாரணமாய் ஒளிந்திருந்து அந்த நபர் வருகிறாரா என பார்த்து சைகை செய்திருக்கலாம். அவரை கொலை செய்தவர் வெட்டும் போது அவர் திமிராத படி பிடித்திருக்கலாம்.. இப்படி குற்றத்திற்கு உதவியவர்களை Accomplice என்று கூறுவார்கள். இவர்கள் குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப தண்டனை (கொலை செய்தவரை விட பெரும்பாலும் சற்று குறைவாக) கிடைக்கும்

ரசித்த SMS :

Hard words can’t touch any soft heart. But soft words can touch any hard heart. Speak in a soft way. You can win many hearts.

அய்யாசாமி

அய்யாசாமி பேங்க்குக்கோ, EB போன்ற இடங்களுக்கு பணம் கட்டவோ சென்றால், எல்லா வரிசையும் பார்த்து விட்டு எது சீக்கிரம் நகரும் என ஒரு முடிவெடுத்துட்டு தான் நிற்பார். ஆனால் இன்று வரை இவர் நின்ற வரிசைதான் மெதுவாக நகர்கிறது .. எப்போதும் இவருக்கு பின் வந்தவர்கள் கூட பக்கத்துக்கு வரிசையில் நின்று முன்பே செல்ல ஐயாசாமி ரொம்ப லேட்டா தான் போவார்..

கிசு கிசு

நாலு சக்கர வாகனம் ஒன்றை தன் பெயரின் முன் பகுதியிலும், அதன் சாவியை பெயரின் பின் பகுதியிலும் வைத்திருக்கும் சகாவுக்கு தீவிரமாக பெண் தேடுகிறார்களாம். கூடிய சீக்கிரம் டும் டும் தானாம்... சகா அப்ப அவங்க?

Friday, January 15, 2010

ஆயிரத்தில் ஒருவன் - வலியுடன் ஒரு விமர்சனம்

முதல் நாள் தியேட்டருக்கு போகாத என்னை போன்ற ஆட்களை கூட போக வைக்கும் அளவு படத்துக்கு expectations. அவை பூர்த்தி ஆனதா?


முழு கதையும் சொல்லாமல் outline மட்டும் சொல்கிறேன். சோழ அரசில் அனைவரும் அழியும் போது ஒரு குழந்தை மட்டும் தப்பிக்கிறது. அதன் பின் பல நூறு ஆண்டுகள் ஆகியும் சோழ அரசு பற்றி தகவல் இல்லை. இதை கண்டு பிடிக்க போன தொல் பொருள் ஆராய்ச்சியாளர் ஆன பிரதாப் போத்தன் காணாமல் போகிறார். அவரையும் அந்த அரசையும் தேடி கார்த்தி, ரீமா, ஆண்ட்ரியா கூட்டணி பயணிக்கிறது. இந்த பயணமே கதை.

செல்வ ராகவனை முதலில் சில விஷயங்குளுக்காக பாராட்டி விடலாம்:

1. தமிழில் ஒரு வித்யாசமான படம் - 5 பாட்டு, 5 பைட்டு பார்முலாவில் இல்லாமல் எடுத்ததுக்காக.

2 . கதையும் தமிழில் இது வரை தொடாத முயற்சி தான். அதற்காக.

3 . முக்கிய கேரக்டர்களிடம் நன்கு வேலை வாங்கியமைக்காக.

4. Heroism இல்லாமல் படம் எடுத்தமைக்காக (படம் நெடுகிலும் ஹீரோ கை பிள்ளையை விட மோசமாக அடி வாங்குகிறார்;கடைசி இரு சண்டைகள் தவிர )

நிற்க. அவரை சில விஷயங்களுக்காக கோபித்தும் தீர வேண்டும்.

1. வித்தியாச கதை என்பதால் லாஜிக் நாங்கள் எதிர் பார்க்க கூடாதா என்ன? திடீர் திடீர் என சிலருக்கு மந்திர சக்தி வருகிறது. சாதாரண மனிதர்களுக்கும் திடிரென எப்படி அது வருகிறது? அதற்கு விளக்கமும் இல்லை. Consistency- ம் இல்லை.

2. பின் பாதி முழுதும் பெரும்பாலும் யாரோ யாரையோ torture செய்து கொண்டே உள்ளனர். இது மிக அயர்ச்சியாக உள்ளது. சாதாரண மனிதர்கள் சினிமா செல்வது என்ஜாய் செய்ய. இந்த அளவு ரத்தம், இருட்டு, நெகடிவ் சமாச்சாரங்கள் நிச்சயம் average ரசிகன் ரசிப்பதில்லை.

3. செல்வா படத்தை குழந்தை, மனைவி உடன் பார்க்க முடிவதில்லை. இந்த படம் உட்பட.

4. பின் பாதியில் வரும் தமிழ் யாருக்கும் புரிய வில்லை.; தமிழ் முதுகலை படித்தவர்களுக்கே புரிந்திருக்குமா தெரிய வில்லை..

5. மேகனஸ் கோல்ட் உள்ளிட்ட பல படங்களின் தாக்கம் தெரிகிறது. ஏன் நம் டைரக்டர்கள் பிரம்மாண்டம் என்றாலே பிற நாட்டு படங்களையே நம்புகிறார்களோ?

சரி தனித்தனி performance -க்கு வருவோம்.

முதல் இடம் ரீமா சென். அசத்தி விட்டார்..அசத்தி. முதல் பாதியில் இவரது ஸ்டைல் & domination ரசித்து கொண்டிருந்தேன்.. பின் பாதியில் completely வேறு shade ..இதை விட சிறந்த கேரக்டர் ரீமா சென்னுக்கு கிடைக்க போவதில்லை. (ரீமா சென் பொதுவாக எனக்கு அதிகம் பிடிக்காது!! Still அவரை நான் ரசித்தேன்) .

கார்த்தி... முதல் பாதி அமர்க்களம். குறிப்பாய் B & C Centre மக்கள் முதல் பாதி கார்த்தியை மிக ரசிப்பார்கள். இடைவேளைக்கு பின் இவர் வேலை மிக குறைவு. அதுவும் இடைவேளைக்கு பின் 45 நிமிஷத்தில் கார்த்தி வருவது சில நிமிடம் இருந்தால் பெரிது.. கார்த்தி நல்ல நடிகர், நிலைக்க போகிறார் என்பது உறதியாக தெரிகிறது. ஆனால் second half-ல் இவருக்கு இருக்கும் scope பார்த்த போது இவர் இந்த படத்துக்காக இத்தனை வருடம் செலவிட்டாரே என வருத்தமாக இருந்தது.

ஆண்ட்ரியா.. ம்ம் நான் படம் பார்க்க ஒரு முக்கிய காரணம். முதல் பாதி ஓகே. ரெண்டாவது பாதியில் அவ்வபோது கூட்டத்தில் நின்று பரிதாபமாக பார்க்கிறார். அவ்வளவே.

பார்த்திபன் : Face expression & body language அருமை. இவர் பேசுவதையே, அவற்றை வைத்து தான் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

பாடல்கள்: அனைத்தும் ஏற்கனவே செம ஹிட். உன் மேல ஆச தான் பாட்டு முதல் பெஞ்ச் மக்கள் ரசிக்கும் படி படமாக்க பட்டுள்ளது. ஈசா பாட்டில் ஆண்ட்ரியாவை திடீர் திடிரென பேய் போல காட்டுகிறார்கள் (ஏனோ?) மாலை நேரம் பாடல் படத்தில் இல்லை. பின்னணி இசை சில நேரம் நன்று. பல நேரம் இரைச்சல் மிக அதிகம்..

நிறைய பாராட்ட வேண்டியவர்கள் ஒளிப்பதிவாளர் ராம்ஜி & ஆர்ட் டைரக்டர் சந்தானம். கடும் உழைப்பு தெரிகிறது .....

இவர்கள் மட்டுமல்ல படம் முழுதும் உழைப்பு நிறையவே தெரிகிறது. ஆனால் செல்வா பின் பகுதியை புரிகிற மாதிரியும் சற்று லாஜிக் உடனும் எடுக்காததால் அந்த உழைப்பு முழு பலன் பெறாமல் போகிறது.

படம் ஓடுமா??

இந்த ஞாயிறு வரை எப்படியும் கூட்டம் இருக்கும்; அதன் பின் என்ன ஆகும்? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி தான்.. டிக்கட் வாங்க நின்ற போது தியட்டரில் இருந்து முதல் ஷோ பார்த்து விட்டு வந்தவர்கள் " போய்டாதீங்க; முடியல.. புரியல.." என எங்களை பார்த்து சொல்லியவாரே சென்றனர். இத்தனை இவர்கள் தமக்கு தெரிந்தவர்களிடமும் சொல்ல கூடும். நாங்கள் பார்க்கும் போதும் second half-லும், முடிந்து வெளியில் வரும் போதும் மோசமான கமேண்டுகளே வந்தன..

எனது ஊகம்: .. தயாரிப்பாளர் நல்ல விலைக்கு விற்றிருப்பார்.. அவருக்கு லாஸ் இருக்காது..ஆனால் படம் distributor-களுக்கு கையை கடிக்க போகிறது..

நல்ல கருவை இன்னும் சுவாரஸ்யமாய், புரிகிற விதம் கையாண்டிருக்கலாமே செல்வா?

Wednesday, January 13, 2010

வானவில் - கிராமத்து பொங்கலில் ஒரு Affidavit

கிராமத்து பொங்கல் நினைவுகள்

நான் பிறந்த தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படும். எங்க ஊரான நீடாமங்கலத்துக்கு தான் சுத்தியிருக்கும் பதினெட்டு பட்டி (!!!) மக்களும் பொங்கல் பொருட்கள் வாங்க வருவார்கள். அதென்னவோ ஏழைகள் தீபாவளி ஆகட்டும், பொங்கல் ஆகட்டும் முதல் நாள் தான் துணி மற்றும் முக்கிய பொருட்கள் வாங்குகிறார்கள். Interior கிராமங்களில் பொங்கல் வைப்பது தெருவிலேயே நடக்கும். பொங்கலன்று எங்க ஊர் அம்சவல்லி மற்றும் காவேரி தியேட்டரில் மூணு ஷோ சினிமா நடக்கும். கரும்பு, பொங்கல் மற்றும் வாழை பழங்களுடன் தியேட்டர் சென்று படம் பார்ப்பார்கள். படம் முடிந்ததும் கரும்பு சக்கை தியேட்டர் முழுதும் கொட்டி கிடக்கும். இதை சுத்தம் செய்து அடுத்த காட்சி ஆரம்பிக்க தாமதமாகும். போன வருட பொங்கல் or தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆன படங்கள் இப்போது தான் எங்க தியேட்டருக்கு வரும்.

காணும் பொங்கலன்று தெருவில் பலரும் ஒன்றாக சேர்ந்து மாட்டு வண்டி, டிராக்டர் மற்றும் கிடைத்த வாகனங்களில் கூட்டமாக அருகில் உள்ள மூணாம் தலைப்பு என்னும் இடத்துக்கு செல்வார்கள். எங்கள் ஊருக்கு அருகில் உள்ள பிக்னிக்  spot அது தான் . மூன்று ஆறுகள் ஒன்றாய் கூடுமிடம்... ஒரு Mini dam  போல... சுற்றி நிறைய மரங்களும், காலி இடமும் இருக்கும். கட்டு சோறு கட்டி சென்று நாள் முழுதும் அங்கு விளையாடி விட்டு வருவார்கள். சில வருடங்கள் முன்பு ஒரு காணும் பொங்கலன்று அக்கா, அண்ணன் குழந்தைகளுடன் அந்த இடம் சென்றேன். இப்போது முன்பு போல் அதிக கூட்டமில்லை. மக்கள் இந்திய தொலை காட்சிகளில் முதல் முறையாக படங்களை காண தத்தம் வீடுகளிலேயே சரணடைந்து விட்டார்கள். நமது நல்ல பழக்க வழக்கங்களில் சிலவற்றை நாம் இழந்து வருகிறோமோ என சற்று வருத்தமாக இருந்தது.

ஐயோ பாவம் அய்யாசாமி

அய்யாசாமி ஒரு சராசரி மனிதன். அவன் சந்திக்கும் பிரச்சனைகள் நீங்களும் சந்தித்திருக்கலாம். "வான வில்லில்" அவ்வபோது இவன் தோன்றுவான்.

அய்யாசாமி காய்கறி கடை சென்றால், அவன் பக்கத்தில் நிற்போருக்கே நல்ல வெங்காயமும் நல்ல தக்காளியும் கிடைக்கிறது. ஒரே நேரத்தில் பக்கத்தில் நிற்பவர்களுக்கு மட்டும் நல்ல நல்ல பீசாக கிடைக்க நம்ம ஆள் அவர்கள் வேகத்துக்கு ஈடு குடுக்க முடியாமல் தடுமாறுவான். அவர்கள் எடுத்த பின் நல்ல வெங்காயம் எல்லாம் அவங்களே எடுதிட்டாங்களே என்ற ரீதியில் முழிப்பான். எப்போதும் அவன் எடுத்து செல்லும் காய்கறிகளுக்காக வீட்டம்மாவிடம் "எங்கிருந்து தான் உங்களுக்குன்னு இப்படி கிடைக்குமோ?"  என வாங்கி கட்டி கொள்வான்...


படித்ததில் பிடித்தது

" வாழ்க்கை சில கேள்விகளுக்கு பதில் தருவதே இல்லை. ஒரு குரூரமான ஜோக் போல பல கேள்விகளுக்கு அது பதில் தராமலே இருந்து விடுகிறது"

- சிறு கதை ஒன்றில் கார்த்திகா ராஜ்குமார்

இந்த வரி படித்து 20 வருடங்களுக்கும் மேலாகிறது. அப்படியே மனதில் தங்கி விட்டது. பதில் இல்லாத சில துயரமான நிகழ்வை சந்திக்கும் போதெல்லாம், இந்த வரி என் நினைவுக்கு வந்து ஆறுதலாக இருந்திருக்கிறது. படிப்பது நிச்சயம் உதவவே செய்கிறது. இல்லையா?

ஒரு பகிர்வு

பொதுவாக நான் Forward-களை ப்ளாகில் எழுதுவதில்லை. ஆனால் வாசித்த சுவாரசயமான ஒரு விஷயம் உங்களுக்கும் சிரிப்பை வரவழைக்கும் என்பதால் பகிர்கிறேன்:

இந்த விஷயம் ஐ. நா சபையில் நடந்ததாக அந்த மெயில் கூறுகிறது:
இந்திய தூதுவர் தன் பேச்சை இவ்வாறு துவக்கினார்:

"ரிஷி காஷ்யாப் என்ற காஷ்மீரை கண்டு பிடித்த மனிதர் காஷ்மிரில் ஒரு பாறையை வெட்டினார் . அதிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்க தனது துணிகளை கழட்டி வைத்து விட்டு குளித்தார். குளித்து முடித்து விட்டு வந்து பார்த்தால் அவர் உடைகளை காண வில்லை. அதை ஒரு பாகிஸ்தானி திருடி சென்று விட்டார்"....

அவர் பேசுவதை இடை மறித்த பாகிஸ்தான் தூதுவர், " இது சுத்த பொய். அப்போது பாகிஸ்தானிகள் அங்கு இல்லவே இல்லை" என்றாராம்.

நமது தூதுவர், " உண்மையை ஒத்து கொண்டதற்கு நன்றி. எனக்கு தேவை அது தான்" என தொடர்ந்தாராம் !!!..

வாரம் ஒரு சட்ட சொல் : இந்த வாரம் Affidavit

மிக எளிமையாக ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் "Declaration". Declaration செய்பவர் தன்னை பற்றியோ, தனக்கு தெரிந்த சில தகவல்கள் உண்மை என்றோ எழுத்தில் தருவது தான் Affidavit . சில Affidavit நோட்டரி பப்ளிக் முன்பு தான் கையெழுத்திடவேண்டும். " நான் இந்த Affidavit தரலை; இது என் கையெழுத்து அல்ல " என பின்னர் நீங்கள் பின் வாங்காமல், Affidavit -க்கு ஓர் authenticity தரவே இந்த ஏற்பாடு.


Affidavit-களின் பயன் பாடு என்னவெனில்-வாயால் சொல்லிய ஒரு விஷயத்தை பின்னர் நீங்கள் சொல்லலை என சொல்லி விடலாம். ஆனால் எழுத்தில் நீங்கள் சொல்வது என்றைக்கும் உங்கள் மீது binding ஆகும். நீதி மன்றங்களிலும், அரசாங்க விஷயங்களில் பல இடங்களிலும் Affidavit தரவேண்டியிருக்கும்.

ஒரு சம்பவம்

சமீபத்தில் ஒரு நாள் காலை அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தேன். வேளசேரி பாலம் மீது ஒரு பெரிய கல் செல்லும் வழியில் கிடக்கிறது. வாகனங்கள் அனைத்தும் அந்த இடத்தை தவிர்த்து வளைந்து செல்கின்றன. நானும் கூட அவ்வாறே எண்ணி கொண்டு செல்லும் போது அந்த கல்லை தாண்டி போன ஒரு பெரியவர் ( 45 to 50 வயதிருக்கும்) தனது -TVS 50ஐ நிறுத்தி விட்டு அந்த கல் அருகில் வந்தார். நான் அவரை தாண்டி சென்ற பின் என் மனது பல கேள்வி எழுப்பியது. அவர் அந்த கல்லை எடுத்து போட தான் வந்தாரா? நான் ஏன் அப்படி செய்ய வில்லை? சற்று யோசித்த போது, சோம்பேறி தனம் ஒரு காரணம். மேலும் வண்டியை நிறுத்தி விட்டு நாம் எடுத்து போட்டால் எல்லோரும் நம்மையே பார்ப்பார்கள். அந்த கொஞ்ச நேரம் நம் மீது spot light அடித்து பார்ப்பது போல் கூச்சமாய் இருக்கும் என் தோன்றியது. கூடவே என் பெண் சைக்கிள் விட கற்று கொண்ட போது மட்டும் தெருவில் இருந்த அனைத்து கல் மற்றும் முள்ளை தனி ஆளாக எடுத்து போட்டு, அதற்கு மட்டும் ஒரு மணி நேரம் செலவிட்டது நினைவுக்கு வந்து இம்சை செய்தது. அப்போது மற்றவர்கள் பார்ப்பார்கள் என கொஞ்சம் கூட யோசிக்கலையே?? ஏன்??

கிசு கிசு

இணைய உலகத்துக்கு புதிதான குறும்பான பதிவர் கோடி ரூபாய் குடுத்தாலும் சனி கிழமையில் அலுவல் வேலையோ இணைய வேலையோ செய்ய மாட்டாராம். மட்டுமல்ல சனி ஞாயிறுகளில் மனிதர் காணாமல் போய் விடுகிறாராம்.. இவர் இந்த இரு நாள் எங்கே போகிறார் என கண்டறிய தனி படை அமைக்கப்பட்டுள்ளது...

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

Monday, January 11, 2010

ராஜாராமின் கருவேல நிழல்- புத்தக விமர்சனம்

கவிஞர் ராஜா ராமின் "கருவேல நிழல்" கவிதை தொகுப்பு நண்பர் பொன். வாசுதேவன் மூலம் கிடைக்க பெற்றேன். நேசமித்ரனின் அடர்த்தியான முன்னுரையுடன் வந்துள்ளது தொகுப்பு.


பெரும்பாலான கவிதைகள் இணையத்தில் நாம் வாசித்தது தான், எனினும் மொத்தமாய் படிக்கும் போது வேறு உணர்வை தருகிறது.
நமக்கு நன்கு அறிமுகமான தகப்பனாய் இருப்பது கவிதையுடன் புத்தகம் துவங்குகிறது. (“கடன்காரனாக இருப்பதையும் விட கொடுமையானது சில நேரம்... தகப்பனாய் இருப்பது.”)


அம்மா, அப்பா, மகள், மகன், ஆத்தா, அண்ணன், அத்தை என அனைத்து உறவுகளும் கவிதைகளில் ஆஜர். மிகவும் குடும்பம் சார்ந்த மனிதராக கவிஞர் தெரிகிறார். குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பதாலேயே கவிதைகள் அன்பும் பிரிவும் பேசுகிறதா என தெரிய வில்லை

 ஒரு மாஜி காதலி அவ்வப்போது சில கவிதைகளில் எட்டி பார்த்து கொண்டே இருக்கிறார்.


உன் பிரசவ
வேதனை
எனக்கு என்
கவிதைகள்.


உன் மகனுக்காக
வேண்டுகிறேன்
அவனாவது
கவிதை
கிறுக்காதிருக்கட்டும்.

மேலும் ஞாபகங்கள் என்று ஒரு கவிதை.. இதுவும் பழைய காதலி பற்றியே.. இது ஒரு சிறு கதை போல் சுவாரஸ்யமாய் உள்ளது

** தொகுப்பாய் வரும் போது சுய இரக்கம் மிக அதிகம் தெரியும் சில கவிதைகளை தவிர்த்திருக்கலாம் ..

** ஆற்றங்கரையில் எடுத்த கல், தச்சன், மஞ்சு விரட்டு, முடி வெட்டுபவர் என பாடு பொருள்கள் பல இருக்கின்றன கவிதைகளில்.. ஆனாலும் அன்பும், பிரிவும் தான் பல கவிதைகளில் திரும்ப திரும்ப எதிரொலிக்கிறது.


"நீ இல்லாமல் போய்ட்டியே
அப்படி ஒரு மழைடா"
மூவாயிரம் மைலை
நனைக்கிறது
மொபைல்…”

**********
" புகைவண்டி நாதம்
தேய்ந்து மறைகிற தருணம்
விடை தந்த மனிதர்களின்
கண்களை ஊதினால்
உதிரும்
உண்மையும் அன்பும்!

இலையுதிர்காலம் என்று ஒரு கவிதை எனக்கு ரொம்ப பிடித்தது .. வெளி நாடு சென்று விட்டு திரும்பும் போது, ஊர் எப்படி எல்லாம் மாறி போய் விட்டது என வரிசையாய் சொல்லி சென்று இப்படி முடிக்கிறார்:

அவ்வளவையும் காரணமாக்கி
சாராயத்தில் குளிக்கிறோம்
சவுதியிலிருந்து திரும்பும்
நாங்கள்.


**அப்பத்தா பற்றிய கவிதையில்,


"அப்பத்தா செத்த போது
எடுத்துப்போட்டோம். .
சும்மா
எடுத்துப்போட்டோம்".

இதில் சும்மா என்ற வார்த்தை பிரயோகம் அதிர வைக்கிறது.

எனக்கு பிடித்த கவிதைகளை இங்கு குறிப்பிட்டுள்ளேன். அவரவர்க்கு தம் அனுபவம், வாழ்க்கை பொறுத்து சிற்சில கவிதைகள் பிடிக்க கூடும்.
ராஜாராமின் கவிதைகளையும், அவரையும் காட்டும் விதமான ஒரு கவிதை வரிகளுடன் நிறைவு செய்கிறேன்:


நடுவழி மைல் கல்
சொல்கிறதெப்போதும்...
புறப்பட்ட தூரத்தை
போகும் தொலைவை
இனம் புரியாதொரு
அனாதரவை.

Friday, January 8, 2010

வானவில் - சாதா கொலை Vs ஸ்பெஷல் கொலை

ரசித்த போட்டோ

எந்திரனின் அதிகார பூர்வ படங்கள் சில வெளியாகி உள்ளது. எனக்கு பிடித்தது இந்த படம் தான்.
ரஜினியின் சிரிப்பை பாருங்கள். எவ்வளவு இயற்கையாக எடுக்கப்பட்ட போட்டோ இது!! முழு நீள நெகடிவ் கேரக்டரில் ஒரு ரஜினி... நிச்சயம் அமர்களமாக இருக்க போகிறது

வாரம் ஒரு சட்ட சொல் - இந்த வாரம் Mensrea

Mensrea என்ற வார்த்தைக்கு வரும் முன் இரண்டு கொலைகளை பார்ப்போம். முதலாவது ஒரு பேருந்தில் இருவர் முதல் முறை சந்திக்கின்றனர். வெவ்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். தம் தலைவர்களை பற்றி விவாதம் வருகிறது. தன் தலைவரை பற்றி தர குறைவாக பேசியதால் கோபமான ஒருவர் மற்றவரை ஓடும் பேருந்திலிருந்து தள்ளியோ, கத்தியால் குத்தியோ கொல்கிறார். இது முதல் கொலை.

அடுத்தது: இரு அடுத்தடுத்த வீட்டில் வசிப்போர் இடையே பகைமை நீண்ட நாளாக இருந்து வருகிறது.... இதில் ஒருவர் மற்றவரை கொல்கிறார்.

மேலே கண்ட இரண்டும் கொலை தான். ஆனால் இரண்டிற்கும் ஒரே அளவு தண்டனை கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா?

கொஞ்சம் யோசித்தால், நீங்களே முதல் கொலைக்கு சற்று குறைவான தண்டனையும், இரண்டாவது கொலைக்கு சற்று பெரிய தண்டனையும் கிடைக்கும் என்றும் கூறுவீர்கள்.

முதல் கொலை திடிரென நடந்தது. Out of sudden provocation . அதில் preplanning இல்லை. ஆனால் இரண்டாவது plan செய்து நடந்த கொலை. பக்கத்துக்கு வீட்டு காரனை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் அந்த மனிதனுக்கு ரொம்ப நாள் இருந்திருக்கிறது. கோபம் குறையாமல் அதை அதிக படுத்தி, கொல்லும் அளவுக்கு சென்றுள்ளான். எனவே தண்டனை அதிகமே. இதனை தான் Mensrea என்கின்றனர். Mensrea என்றால் guilty intention என்று பொருள். குற்ற வழக்குகளில் நீதி மன்றங்கள் தீர்ப்பு தரும் முன் இந்த Mensrea இருந்ததா என பார்ப்பது வழக்கம்.

கிசு கிசு

சென்னையை சேர்ந்த இரண்டு மூத்த பதிவர்கள் ஒரே பெண்ணை காதலிக்கிறார்களாம்!! லவ்வுன்னா லவ்வு .. மண்ணெண்ணெய் ஸ்டவ்வு என்ற ரீதியில் காதல் தீவிரமாக போகிறதாம். சென்ற வாரம் ஒரு நாள் பின்னிரவு தொலை பேசியில் இது குறித்து வாக்கு வாதம் நீண்டு விட்டதாம். இதற்கு மத்திசம் பேச வெளியூரிலிருக்கும் ஓட காரரை conference call -ல் கூப்பிட்டுள்ளனர். அவரை லைனில் வைத்து கொண்டே சண்டை நீண்டு, தொடர்ந்திருக்கிறது. சற்று நேரத்தில் ஓட காரர் " கொர்.. கொர்.. "..

Quote:

Dedication to duty is not a sacrifice. It is a justification of ones own existence - Gandhiji.


சென்னை ஸ்பெஷல்

புதிதாக சென்னை வருபவர்களோ, சென்னையில் வாசிப்பவர்களோ, ஒரு முறை பறக்கும் ரயிலில் பயணம் செய்து பாருங்கள். தற்சமயம் வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரை செல்கிறது. டைடல் பார்க், மவுன்ட் ரோடு, லஸ் என பஸ் போகும் பல ரோடுகளில், தரைக்கு மேல் ரயில் செல்வது குஷியான அனுபவம். குறிப்பாய் சின்ன பசங்களை அழைத்து போகவும்.. ரொம்ப என்ஜாய் பண்ணுவாங்க. நான் guest வரும் போது, குட்டி பசங்களை ஒரு round அழைத்து போவது வழக்கம்.


டிவி பக்கம்

விஜய் டிவியில் Boys Vs Girls முடிந்து விட்டது. நான் தொடர்ந்து பார்க்கா விட்டாலும் அவ்வபோது பார்த்தேன்.

ப்ரியா (என்னா அருமையான சிரிப்பு!!),
ஐஸ்வர்யா (செம tall - செம அழகு),
ஹேமா (Excellent expression),
சான்ரா (என்னமோ ஒரு சொல்ல முடியாத அழகு)
கவிதா (நமக்கு தெரிந்த ஒரு பெண் முக சாயலில் இருப்பதால்)

என ஐந்து அழகுகளுக்காக தான் பார்த்தேன். Finals-ல் பாய்ஸ் வென்றது கொடுமை!! அந்த அணியின் தலைவர் (??) பாலாஜி ஆடவே தெரியாதவர். மேலும் பல வீக் ஆட்கள் உண்டு. சென்ற சீசனில் கேர்ள்ஸ் வென்றதால், இம்முறை பாய்ஸ் ஜெயிக்கணும் என்ற முடிவோடு செயல் பட்ட மாதிரி தெரிகிறது!!

இந்த முறை டீலா நோ டீலாவில் ஒரு பெண் 25 லட்சம் வென்றார் !! கையில கிடைக்கும்குறீங்க??

ஒரு சம்பவம்

என் பெண் ஒரு பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்று வந்தாள். வந்தவள் ஒரு சம்பவத்தை சொன்னாள். " அப்பா அந்த வீட்டில் வேற ஒரு சொந்த கார பையன் இருக்கான். . அங்கே தங்கி படிக்கிறான். அவன் ஏழை போலிருக்கு. " எல்லாரும் நல்லா டிரஸ் பண்ணிருக்காங்க இவன் மட்டும் ஏன் பழைய ட்ரெஸ் போட்டிருக்கான்"னு பர்த்டே பாய் கேட்டான். அதுக்காக அந்த வீட்டில எல்லாரும் அவனை திட்டிட்டாங்க. அவனை எந்த போட்டோவிலும் நிக்க விடலை. பாவம்பா அவன்.. அழுதுகிட்டே இருந்தான்" இதை கேட்டதும் என் மனம் கனத்து போனது.

நான் சென்றிருந்தால் நிச்சயம் அவர்களிடம் ஏதாவது பேசி அந்த பையனை சரி செய்திருப்பேன். இப்போது அவர்களிடம் இந்த டாபிக்கை ஓபன் செய்து பேச முடியாது. I felt helpless.

நம்மை விட powerful மனிதர்களை (அலுவலகத்தில் பாஸ் மற்றும் சூப்பர் பாஸ்) நாம் மதிப்பது பெரிதில்லை. அவர்களை மதித்து தான் ஆகணும். ஆனால் நம்மை விட எளியவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதை பொறுத்து தான் நமது character தெரிய வரும்.

மனிதர்கள் அனைவரும் சமமே. எல்லோருக்கும் சில உணர்ச்சிகள் பொது தான். இது ஏனோ சிலருக்கு விளங்குவதில்லை!!

Wednesday, January 6, 2010

ஹவுஸ் பாசும் நானும் உயிர் தப்பிய கதை

ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறார் சின்ன அம்மணி. சாலைகளில் நமக்கு கிடைத்த அனுபவங்கள் அதன் மூலம் கற்றவை இவை பற்றி பகிர...

5 வருடங்களுக்கு முன் தாம்பரத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் பைக்கில் நான், ஹவுஸ் பாஸ் மற்றும் என் பெண் வந்து கொண்டிருந்தோம். ஏர் போர்ட் தாண்டி சிகப்பு சிக்னல் போட்டு விட்டனர். சிக்னலுக்கு சற்று முன் என்பதால் எங்கள் வண்டி சிக்னலை நோக்கி சென்று கொண்டிருந்தது. திடிரென பின்னாலிருந்து வந்து ஒரு பைக் எங்க வண்டியை மோதி தள்ளி விட்டு சிக்னலில் நிற்காமல் பறந்து விட்டது. வண்டியோடு நான் கீழே விழ மனைவியும் , குழந்தையும் தள்ளி போய் விழுந்தனர். சற்று தள்ளி நடை பதை மேடை. அதில் தலை பட்டிருந்தால் உடனே உயிர் போயிருக்கும். ஞாயிறு மாலை நேரம் என்பதால் பின்னால் பெரும் வாகனங்கள் வரா வில்லை. இல்லா விடில் பஸ் போன்ற பெரும் வாகனங்கள் மேலே ஏறி இருக்கலாம்.

அப்படி என்ன அவசரம் அந்த பைக் மனிதருக்கு? என் பெண் அப்போது சிறியவள்.. அடுத்த சில நாள் அந்த பயம் அவளை ஆட்டியது.. இந்த விஷயத்தில் என் மேல் உள்ள தவறு எனில் கணவன், மனைவி, சிறு குழந்தை என மூவராக போனது தான்..

எனக்கு தெரிந்த ஒரு புரோகிதர் எப்போதும் பைக்கில் செல்வார். ஜாதகம், கடவுள் என பல விஷயங்கள் ஆக பேசுவார். அவரிடம் ஓர் முறை வண்டிகளில் செல்லும் போது நிகழும் விபத்துகள் பற்றி கேட்ட போது அவர் எப்படி சொன்னார்:

" நாம பார்த்து ஜாக்கிரதையா போகணும்; நாம வேகமாவோ, தப்பாவோ வண்டி ஓட்ட கூடாது. அது மட்டும் தான் நம்ம கையில்.. மத்த ஏதும் நம்ம கையில் இல்லை"

உண்மை தான் !!

********

குறிப்பாய் நாங்கள் வாழும் சென்னை போன்ற நகரங்களில் ரோட் சென்ஸ் மிக குறைவு. உதாரணத்துக்கு சில :

• எதிர் திசையில் (wrong side ) மிக வேகமாய் டூ வீலர் அல்லது ஆட்டோ வரும்.
• மழை பெய்தால் மனிதர்கள் நடு ரோட்டில் நடக்க ஆரம்பித்து விடுவார்கள்..
• குழந்தைகள் பள்ளிக்கு ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் ஓவர் crowded ஆக இருக்கும்
• அரசியல்வாதிகள் கார்களுக்காய் பல மணி நேரம் நடு ரோட்டில் நிற்க நேரும்!

இத்தனையும் இருந்தாலும் வண்ண நிலவன் ஒரு கவிதையில் சொன்னாரே

இந்த உலகை
நான் பெரிதும் நேசிக்கிறேன்
அதன் அழகோடும்
குரூரத்தோடும்


என.. அவ்வாறே நானும் சென்னையை அதன் அழகோடும் குரூரத்தோடும் நேசிக்கிறேன்..

*********
நானும் ஹவுஸ் பாசும் சேர்ந்து தான் கார் ஓட்ட கற்று கொண்டோம். சென்ற கம்பெனியில் கார் இருந்தால் அதனால் ஒரு Tax benefit இருந்தது. அதற்காக நண்பன் தந்தையின் பழைய மாருதி வாங்கி கற்று கொண்டோம். ஒரு முறை வெளியே சென்று விட்டு இரவு திரும்பும் போது ஆள் அரவமற்ற சாலையில் வண்டி பழுதாகி விட்டது. நானோ வண்டி ஓட்டுவதில் அப்போது கற்று குட்டி. அன்று இரவு வீடு வந்து சேருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அதன் பின் காரை எடுக்கவே இல்லை. பின் வேறு ஓர் நண்பனுக்கு காரை தந்து விட்டேன். இப்போது நாங்கள் மூவர் சென்றாலோ, guests வந்தாலோ வீட்டுக்கு அருகிலிருக்கும் வாடகை கார் எடுக்கிறோம். இது எனக்கு மிக சௌகரியமாக இருக்கிறது. Travel-ஐ முழுதாக என்ஜாய் செய்ய முடிகிறது. பார்கிங் தொந்தரவு, maintenance செலவுகள் இல்லை. நான் கார் ஓட்டாததால் சென்னையில் இரண்டு கால் மற்றும் நான்கு கால் ஜீவன்கள் பலர் தப்பித்தனர் :))


*********

என் அனுபவத்தில் தெரிந்த சில சாலை பாது காப்பு டிப்ஸ்:

1 . வேகமாக வண்டி ஓட்டுவதை நாம் தவிர்க்க வேண்டும். மெதுவாக வண்டி ஒட்டுவதால் விபத்து நடக்க வாய்ப்பு குறைவு. மேலும் அவ்வாறு நடந்தாலும் அதன் impact சற்று குறைவாக இருக்கும்.

2. செல் போன் பேசியவாறு எக்காரணம் கொண்டும் வண்டி ஓட்ட வேண்டாம். மனம் ஒரு நேரத்தில் ஒன்று தான் யோசிக்கும். ரெண்டு சிந்தனைகள் வர முடியாது. மறு முனையில் இருப்பவருக்கு நீங்கள் வண்டி ஓட்டுவது தெரியாது. நீங்கள் சொன்னால் தான் தெரியும். ஒன்று அந்த call எடுக்காமல் இருக்க வேண்டும் அல்லது எடுத்தவுடன் வண்டி ஓட்டுவதை சொல்லி பின் பேசுவதாக சொல்ல வேண்டும்.

3. நெடுந்தூர பயணங்களில் டிரைவர் வைத்து செல்தல் நல்லது. முக்கியமாக இரவில் நீங்களே டிரைவ் செய்வதை தவிர்க்கவும் (நண்பர் ஈரோடு கதிர் குடும்பத்துடன் சமீபத்தில் இவ்வாறு அவதிப்பட்டதை எழுதி இருந்தார். முடிந்தால் வாசிக்க)

4. குழந்தைகள் முன் புறம் அமர்ந்து வண்டி ஓட்டுபவருக்கு தொந்தரவாக பேசாமல் பார்த்து கொள்ளுதல் நலம்.

5 . குழந்தைகள் ஜன்னல் ஓரம் அமர்ந்தால் டோர் (door ) நன்றாக சாத்த பட்டுள்ளதா என பார்க்கவும். சில வருடங்களுக்கு முன் ஒரு சிறு குழந்தை door சரியே மூடாமல் விழுந்து இறந்து போனது.

6. முடியும் பொழுது ரயில் மற்றும் பஸ்சில் செல்லலாம். சாதாரண மனிதர்களை நாம் பார்க்க இது ஒரு நல்ல வாய்ப்பும் கூட.

பொதுவாக கவனமான driving மிக முக்கியம். ஒரு நிமிடத்தில், சில நேரங்களில் ஒரு நொடியில் வாழ்க்கை மாறி போகலாம். முடிவுக்கும் வரலாம். You might have already heard this: “It is better to be late than Late Mr.”

உங்களுக்கு ஏதும் வேறு பாய்ண்டுகள் தோன்றினால் பின்னூட்டத்தில் பகிருங்கள்..

Be safe.. There is a family waiting for you at home!!

Tuesday, January 5, 2010

வெளிநாடு வாழ் இந்தியர்களின் துன்பங்கள்

வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் படும் துன்பங்கள் தான் எத்தனை? எத்தனை?

எனது நெருங்கிய நண்பன் வெளி நாட்டில் வசிக்கிறான். லீவுக்கு இங்கு வரும் போது ஒவ்வொரு முறையும் இன்னும் மிச்சம் எத்தனை நாள் இருக்கு என எண்ணி கொண்டே இருப்பான். "இங்கே இருக்கும் போதாவது இந்த சந்தோசத்தை என்ஜாய் பண்ணு"ன்னா, "அப்படி தோணுதுடா .. சொல்றேன்..என்ன பண்ண சொல்றே" என்பான். "மச்சி.. கூட பொறந்ததுங்க இவன் என்ன வாங்கிட்டு வருவான்னு தான் பாக்குதுங்க. சொந்த காரனுங்களும் கேமரா, செண்டு இப்படி ஏதாவது லிஸ்ட் குடுதுடுறாங்க. நான் அங்க இருக்கிறதில் என்ன தவிர மத்தவங்க ரொம்ப ஹாப்பிடா" என்பான். " டேய்.. எல்லாரும் நான் கொண்டு வர காசை தான் பாக்குறாங்க; அதுக்கு நான் படுற அவஸ்தையை யாரும் பாக்கல. நான் பேருக்கு தாண்டா இஞ்சினீர். என்ன கேவலமான வேலையெல்லாம் செய்ரேன்னு வெளியே சொல்ல முடியாதுடா " என புலம்புவான்.

இந்த கஷ்டங்கள் வெளி நாட்டில் குடும்பத்தை விட்டு வாழும் அனைவரும் உணர்வார்கள் என நினைக்கிறேன்.

இதை விட கொடுமையான சில நிகழ்வுகள் வெளி நாடு வாழ் இந்தியருக்கு நடந்தேறுகின்றன.

சமீபத்தில் உ. பி யை சேர்ந்த ஹபிப் ஹுசைன் எனும் தொழிலாளி விமான கழிப்பறையில் ஒளிந்து சவூதியிலிருந்து தப்பி வந்த கதை வாசித்தீர்களா?

தனக்கு இருந்த கொஞ்ச நிலத்தையும் விற்று ஒரு லட்சம் ருபாய் தந்து வெளி நாடு சென்றிருக்கிறார் இவர். மாத சம்பளம் 10000 முதல் 15000 ருபாய் என்று பேச்சு..ஆனால் நடந்தது வேறு.. இவரது passport -ஐ வாங்கி வைத்து கொண்டு அடிமை போல் நடத்தியிருக்கிறார்கள். மிக மிக குறைவான அளவே சாப்பாடு தந்துள்ளனர். பணம் தந்த பாடில்லை. ஊருக்கு phone பேசி அவர்கள் எப்படி உள்ளனர் என்று கூட தெரிய முடியாத சூழல்..விமான டாய்லட்டில் ஒளிந்து தப்பி வந்த ஹபிப் ஹுசைன்

இவர் தனது passport தந்து விடும் படி பல முறை கெஞ்சியிருக்கிறார். ஆனால் இவரை ஒருவர் மற்றவருக்கு விற்பது தொடர்ந்தவாறு இருந்திருக்கிறது. கடைசியாய் சவுதி ஏர் போர்ட்டில் வேலை செய்தவர், திருட்டு தனமாக விமானத்தில் ஏறி ஒளிந்து கொண்டுள்ளார். பறக்க ஆரம்பித்து அரை மணி ஆன பின் இது தெரிய வர, அவருக்கு சீட் தந்து உணவும் தந்துள்ளனர். ஆனால் இந்தியாவிற்கு தகவல் தரப்பட்டு இறங்கியதும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.

தன்னை போல் ஆயிரக்கணக்கானோர் உ. பி மற்றும் பீகாரில் இருந்து இவ்வாறு அடிமை வாழ்க்கை வாழ்வதாக கூறியுள்ளார் இவர்.

இவ்வாறு கொத்தடிமை வாழ்க்கை வாழ்வோரை விடுவிக்க இந்திய அரசாங்கம் ஏதும் செய்ய முடியுமா என தெரிய வில்லை. சென்றவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தில் சென்றனர். ஆனாலும் அவர்கள் தற்போது படும் துயரம் நிஜம். அரசாங்கம் தலையிட்டு ஏதேனும் நல்லது நடந்தால் அந்த குடும்பங்கள் பெருமூச்சு விடும்.

இது ஒரு புறமிருக்க ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. தற்போது நிதின் கார்க் எனும் 21 வயது மாணவர் கொல்ல பட்டுள்ளார்.சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் கொல்ல பட்ட நிதின் கார்க்


பல முறை இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடந்தும் இந்திய அரசு போதுமான நடவடிக்கை எடுக்க வில்லை. ஆஸ்திரேலியாவிற்கு பெரும் நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். இந்தியா உடனான கிரிக்கட் மேட்சை நிறுத்துவது உட்பட.. ஆனால் இவை ஏதும் செய்ய பட வில்லை. வழக்கம் தயாராக இருக்கும் கண்டன அறிக்கை மட்டுமே அரசாங்க தரப்பிலிருந்து வரும் ஒரே நடவடிக்கை.

வெளி நாட்டு இந்தியர்கள் அனுப்பும் அந்நிய செலவாணி மட்டும் இந்திய அரசுக்கு வேண்டும். ஆனால் அவர்கள் என்ன ஆனால் என்ன என்ற மனோ பாவம் வருத்தமளிக்கிறது.

இந்த துயரங்கள் தீர என்ன செய்யலாம்? உங்களுக்கு ஏதும் தோன்றினால் நீங்களே சொல்லுங்கள்..
Related Posts Plugin for WordPress, Blogger...