Showing posts with label பாடல் விமர்சனம். Show all posts
Showing posts with label பாடல் விமர்சனம். Show all posts

Friday, January 27, 2023

"கரை வந்த பிறகே பிடிக்குது கடலை" - வாழ மறந்தவனின் வாக்குமூலம்

ரு நல்ல பாட்டு என்னவெல்லாம் செய்யும் ? 

நம்மை அதில் முழுவதுமாய் மூழ்கவைக்கும். ஏனைய சிந்தனைகள் இன்றி வேறொரு உலகிற்கு அழைத்து செல்லும். ஏறக்குறைய தியான நிலை !

பாடலை கேட்கும் எல்லா நேரத்திலும் இத்தைகைய அனுபவம் கிட்டி விடாது; அதற்கான மனநிலை தோதாக இருக்க வேண்டும்

அண்மையில் அத்தகைய மனநிலை வாய்க்கப்பட ஒரு காலை நேரம் இப்பாடலை பார்க்க துவங்கினேன். மனம் என்னவோ போல் ஆகி வீட மீண்டும், மீண்டும் லூப்பில் ஓடியது பாடல்.

எப்படி இந்த பாடலை இத்தனை வருடம் தவற விட்டேன்? 

96- தியேட்டரில் மட்டுமே இரண்டு முறை பார்த்த படம்; டிவியில் போடும்போதும் பார்ப்பதுண்டு. 


எங்கு இந்த பாடல் வித்தியாசப்படுகிறது?

தமிழில் வரும் பாடல்களில் 90 சதவீதம் காதல் பாடல்கள் தான். ஆண் பெண்ணை பற்றி பாடுவான். பெண் ஆணை நினைத்து உருகும் பாடலும் உண்டு. இருவரும் சேர்ந்து பாடும் டூயட் பாடல்களுக்கு கணக்கே இல்லை.

ஆனால் - இந்தப்பாட்டு -  ஒரு மனிதன் தன்னை பற்றியே பாடுகிறான். தனது கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலம் மூன்றையும் பற்றி பாடுகிறான்.

சுய புரிதல் (Self realization ) வகை பாடல்கள் 1970,80- களில் கண்ணதாசன் மற்றும் வாலி நிறைய எழுதியிருக்கின்றனர். இந்த ஜெனரேஷனில் அந்த வகை - அருகி போய் விட்டது

கார்த்திக் நேத்தா - இந்த பெயரை இதுவரை நான் கேள்விப்பட்டதேயில்லை -  இப்பாடலை எழுதியவர் இந்த இளைஞர்தான்!  தமிழில் பத்துக்கும் குறைவான சினிமா பாடல்களே எழுதியுள்ளார். எண்ணிக்கை முக்கியமல்ல - "யாதும் ஊரே யாவரும் கேளீர்" எழுதிய கணியன் பூங்குன்றனார் மிகப் பிரபலம். ஆனால் இந்த ஒரு பாடல் தவிர அவர் எழுதிய வேறு எந்த பாடலும் இன்று நம்மிடம் இல்லை.

ஒரே ஒரு சிறந்த படைப்பு போதும் ஒரு மனிதன் - தான் வாழ்ந்ததை மறக்கவே முடியாமல் பதிவு செய்து விட்டு போக..!

பாடலுக்குள் நுழைவோம்.

அநேகம் பேருக்கு - பள்ளியில் படிக்கும் போது அக்காலம் மிகுந்த சிறப்பாய் இருந்திராது. படி, படி என தொடர் துன்புறுத்தல், தேர்வு எனும் கசப்பு மருந்து - இவை மாணவனை தொடர்ந்து துரத்துகிறது. ஆயினும் பள்ளியில் கடைசி நாள் முடிந்து வெளியே வரும்போது "பல வருடம் எத்தனையோ நினைவுகள் சுமந்த இந்த பள்ளிக்கு நாளை வரமாட்டோம்" என எண்ண, ஒரு துக்கம் தொண்டையை அடைக்கும். பள்ளியின் மீதும், பள்ளி காலத்தின் மீதும் ஒரு பெரும் அன்பு கவிழும்.

ஏன் இது நிகழ்கிறது ?

எனக்கு ஒரு நண்பன். குறைந்தது ஏழெட்டுக்கு நிறுவனத்தில் வேலை செய்திருப்பான். எங்கு வேலை செய்தாலும் சற்று புலம்பிய படியே இருப்பான். ஆயினும் எப்போதும் சொல்வான் " போன கம்பெனி மாதிரி வரவே வராதுடா - அந்த வாழ்க்கை ஒரு சொர்க்கம் !" உடனே நான் சொல்லுவேன் " டேய் - நீ போன கம்பெனியில் வேலை பாத்தப்போ எவ்ளோ புலம்பினேன்னு எனக்கு தாண்டா தெரியும் !" பெரிதாக சிரித்து விட்டு " ஆமாம் அப்டி தான் " என்பான்

நாம் யாருமே நிகழ் காலத்தை, அதன் அழகை, சிறப்பை மதிப்பதே இல்லை. ஒரு காலத்தை கடந்து வந்த பின்பே அதன் மகத்துவத்தை உணர்கிறோம்

கரை வந்த பிறகே
பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே
புரியுது உலகை

நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

After reaching the shore…
I love the sea.
After the hair greys…
I understand the world.
Yesterday’s joys come together…
Today, at this moment, they find meaning.
Today’s joys will come together…
To find their meaning tomorrow.

ஏதோ ஒரு நேரத்தில் - வாழ்க்கையை வாழ தவறி விட்டேன் என்று உணர்ந்த பிறகு வெளிப்படும் வரிகளை கவனியுங்கள்.

வாழா என் வாழ்வை வாழவே
தாளாமல் மேலே போகிறேன்
தீரா உள் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இன்றே இங்கே ஆழ்கிறேன்

To live my life that I never lived.
Unable to bear this, upwards I go…
To kindle my never ending passion.
Here and now, I am coming out of it…
Here and now, I immerse into the depths…

இதில் கடைசி இரு வரிகளும் - இனி மீண்டுவிடுவேன் எனும் நம்பிக்கையை கவித்துவமாய் சொல்வது அழகு !

தன்னை தானே தள்ளி நின்று பார்க்கிறான் அவன் - தியானத்தில் நிகழ்வது போல் ..

யாரோ போல் நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே.. இயல்பாய்.. சுடர் போல் தெளிவாய்

I look at myself as someone else.
Not with any reason, just naturally.
With clarity, like that of a sun ray!

" இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா "

பாடலின் மிக அற்புதமான வரி இது.. 

இதுவரை வாழ தவறியவன்/ வாழ மறந்தவன் என்ன விதமான வாழ்க்கை கேட்கிறான் பாருங்கள்




நடந்து செல்லும்போது உள்ளங்கால்களுக்கு இடையே பூனை வந்து விளையாடிய அனுபவம் கிட்டியிருக்கிறதா ? மிக சிறிய சந்தோஷம் தான் இது. ஆனால் இத்தகைய சின்னச்சின்ன சந்தோஷங்கள் போதாதா - இனிமையான ஒரு வாழ்க்கைக்கு ?

இதே போன்ற ஒரு தருணத்தை மறைந்த எனது நண்பன் இலட்சுமணன் ஒரு கவிதையில் பதிவு செய்திருந்தான் :

பேருந்து பயணத்தில்
யாரோ ஒருவரின் தோளில் இருக்கும்
குழந்தையின் கால்கள்
என்மீது படும்படி
ஆசீர்வதிக்கப்படுவேனாக !

சரி .. இனி எப்படியான வாழ்வை வாழ உத்தேசம்?

நானே நானாய் இருப்பேன்
நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறக்கிறேன்


I will always be myself.
Every day I will live to the fullest,
Will object, a life of conventions.

எதிர்காலம் பற்றிய எந்த கனவுகளும் இல்லாமல், வாழ்க்கையை அது காட்டும் போக்கில் வாழ முடியாதா என்ன ?

காற்றோடு வல்லூறு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய் , நிகழ்வே அதுவாய்
நீரின் ஆழ்த்தில் போகின்ற கல் போலவே
ஓசை எல்லாம் துறந்தே
காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்

With the wind flies the Hawk.
Beautifully, without a path.
It being its own reality.
Like the rock that goes to the depth of the waters…
With a renouncing of sound…
I drown in the sights I see.

மீண்டும் ஒரு முறை அறைகூவல் விடுக்கிறான் - என்ன விதமாய்,  தான் வாழ போகிறேன் என ..

திமிலேறி காலை மேல் தூங்கும் காகமாய்
பூமி மீது நடப்பேன்
புவி போகும் போக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன்

Like the bird that rides on the bull’s hump…
I will live upon the Earth.
I would join hands, and walk along with the Earth.

பாடல் இப்படியாக முடிகிறது..

ஏதோ ஏகம் எழுதே
ஆஹா ஆழம் தருதே
தாய் போல் வாழும் கணமே
ஆரோ பாடுதே - ஆரோ ஆரிரோ

Some kind of ecstasy is flowing…
That provides depth!!!
This moment envelops like a mother…
Singing a lullaby.

கவிஞர் (கார்த்திக் நேத்தா), பாடகர் (பிரதீப்) , இசை (கோவிந்த் வசந்தா) மூவருக்குமே அவர்களின் மிகசிறந்த படைப்பில் ஒன்றாக இது இருக்கும்

படமாக்கம் - மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பு - இரண்டும் அற்புதம் !  

அண்மையில் பிரதீப்பின் லைவ் ஷோவில் இப்பாடலை அவர் பாடியபோது - மக்கள் சேர்ந்து பாடியது அற்புதமான இன்னொரு காட்சி !

இப்பாடல் - 2018ஆம்- வருடத்தின் சிறந்த பாடலாக (கார்த்திக் நேத்தா & பிரதீப்) - ஆனந்த விகடன் துவங்கி, பிலிம்பேர் வரை - பல விருதுகளை வென்றிருக்கிறது

விருதுகள் ஒரு பக்கம் இருக்கட்டும். யூ டியூபில் பாடலின் கீழ் உள்ள கமெண்டுகளை வாசியுங்கள் . எத்தனை பேர் வாழ்வில் இனிமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது !


திரைப்பாடல் ஒன்று இலக்கியமாக மிளிர்வது மிக அரிதான ஒரு தருணம் !

காலத்திற்கும் ரசிக்கும்படி - ஒரு பாடல் தந்த - இயக்குனர் ப்ரேம், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, கவிஞர் கார்த்திக் நேத்தா மற்றும் பாடகர் பிரதீப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் !

Saturday, October 17, 2015

இசை அமைப்பாளர் இமான் ஒரு பார்வை + டாப் 10 பாடல்கள்

டந்த சில வருடங்களில் இமானின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.

14 வருடங்களுக்கு முன் விஜய் நடித்த "தமிழன்" படத்துக்கு முதன் முறை இசை அமைத்தார் இமான். 2002 ல் அறிமுகம் ஆகியும் - 2010 வரை அவர் இசை அமைத்த எந்த படமும் பெரிய அளவில் செல்லவில்லை..



சேனா, விசில், கிரி, தக்க திமி தா, 6.2, கோவை பிரதர்ஸ், தலை நகரம், வாத்தியார், திருவிளையாடல் ஆரம்பம், ரெண்டு, லீ, மருதமலை, நான் அவனில்லை.. இவையெல்லாம் முதல் 8 ஆண்டுகளில் அவர் பணியாற்றிய படங்கள். இவற்றில் மருதமலை,  திருவிளையாடல் ஆரம்பம், தலை நகரம் போன்ற சில படங்கள் ஓரளவு ஓடினாலும் அவற்றில் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் என்று சொல்ல  முடியாது.

2010ல் மைனா படம் தான் பெரும் திருப்புமுனை.   மெலடி ஒரு பக்கம்.. ஜிங்கு சிக்காங் என குத்து பாட்டு மறுபுறம் என இமானை  எல்லோரும் திரும்பி பார்க்க வைத்த படம் இது..



ஒரு சில சுமாரான படங்களுக்கு  பின் "மனம் கொத்தி பறவை"யில்  மீண்டும் அசத்தியிருந்தார்.

ஜல் ஜல் ஓசை, ஊரான ஊருக்குள்ளே என பல ஹிட் பாடல்களை கொண்டது இந்த ஆல்பம். இருப்பினும் என்ன சொல்ல எது சொல்ல பாடல் ... செம மெலடி..




அதே 2012 ல் வெளியான கும்கி பாடல்கள் அனைத்து செண்டர் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடிக்க தமிழ் திரை உலகில் - இமானுக்கு தனி இடம் உறுதியானது.

அநேகமாய் அனைத்து பாடல்களும் ஹிட்; நிரம்ப பேருக்கு பிடித்த அய்யய்யோ.. ஆனந்தமே இதோ




பல ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் க்கு ஜில்லாவில் இசை அமைத்தார். பாடல்கள் அட்டகாசம் எனினும் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை

ஜில்லாவில் நான் மிக ரசித்த பாடல்... வெரசா போகையிலே. நிச்சயம் ஒரு வித்தியாச முயற்சி. படமாக்கலும் இனிமை..



தேசிங்கு ராஜா, ரம்மி, ஜீவா, கயல் என கமர்ஷியல் வெற்றி பெறாத பல படங்களிலும் சில ரசிக்கத்தக்க பாடல்கள் தந்துள்ளார் இமான்.

ஜீவாவில் "ஒவ்வொன்றாய் திருடுகிறாய்" கேட்க மட்டுமல்ல - பார்க்கவும்  பிடித்த பாடல் (சார்.. ஸ்ரீ திவ்யா சார் !)



படம் தோல்வி எனினும், அனைத்து மியூசிக் சானல்களிலும் ரிப்பீட் அடித்த பாட்டு ரம்மியில் இடம் பெற்ற கூடை மேலே கூடை வச்சு..



வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் " பாக்காதே பாக்காதே " - இமானின் ஆல் டைம் பெஸ்ட்டில் ஒன்று.. கேட்க மட்டுமல்ல எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத பாடல்..



சாட்டை படத்தில் சஹாயனே, சஹாயனே - ஸ்ரேயா கோஷல் குரல் மற்றும் வயலின் இசையால் மனதை சுண்டி இழுக்கும் ...




2015ல் மீண்டும் ஒரு அட்டகாச ஆல்பம்... ரோமியோ ஜூலியட்..

பூவானம் தூவ தூவ என்ன ஒரு அற்புத மெலடி.. ஒரு பாடலுக்கு எது முக்கியம் .. பாடல் வரிகளா? இசையா? பாடுபவர் குரலா?  இவை அனைத்தையும்  விட, பாடலின் மெட்டு தான் - பாடலை அதிகம் ரசிக்க வைக்கிறது.. தூவானம் பாடலிலும் மெட்டை கவனியுங்கள் .. துவங்கும் போது மிக சாதாரணமாக தான் இருக்கும்.. போக போக மெட்டு தன் வேலையை காட்டி - மிக ரசிக்க வைக்கும். இவ்வருடம் வந்த பாடல்களில் அசத்தலான ஒரு பாடல்.. தூவானம்..



இதே ரோமியோ ஜூலியட்டில் "எங்க தலை.. எங்க தலை டீ.. ஆரு" தான் படத்துக்கே முதல் விசிட்டிங் கார்டாய் இருந்தது.. ஆனால் அதை விட "அரக்கி" என்கிற இன்னொரு குத்து பாடல் என்னை மிக கவர்ந்த ஒன்று..

வித்தியாச குரல், இசை, டான்ஸ் மூவ்மென்ட் (ஹன்ஷிகா கைலி கட்டி கொண்டு போடும் சின்ன குத்து ஸ்டெப் - என்னோட பேவரைட்  )




இமானின் ஸ்பெஷாலிட்டியே இது தான். ஒரே படத்தில் - மெலடி மற்றும் குத்து பாட்டு இரண்டிலும் அசத்தி விடுகிறார்..

கடந்த 14 வருடங்களாக திரை துறையில் இருக்கும் இமானுக்கு என்ன வயது இருக்கும் என நினைக்கிறீர்கள்? வெறும் 32 தான் ! 18 வயதில் இசை அமைக்க ஆரமபித்து விட்டார் !

தற்போதைய இளம் இசை அமைப்பாளர்களில் அனிருத், இமான் - இந்த இருவருமே வியக்க வைக்கும் வளர்ச்சி பெற்றுள்ளனர்..

இமான் பற்றி எழுத இரண்டு காரணங்கள்.. பாடல்கள் ரசிப்போர் இங்கு பகிர்ந்தவற்றில் சில தங்களுக்கும் பிடித்த பாடல் என மகிழ கூடும் என்பது ஒன்று..

மற்ற முக்கிய காரணம்.. முதலிலேயே சொன்னது தான்..

2002 துவங்கி 2010 வரை நிறைய தோல்விகளை சந்தித்த இமான் - அதன் பின் பெற்று வரும் வெற்றிகளில் நிச்சயம் ஒரு தன்னம்பிக்கை செய்தி உள்ளது !

நமது வேலையை செம்மையாக செய்து கொண்டே இருந்தால், காற்று என்றேனும் ஒரு நாள் நம் பக்கமும் வீசவே செய்யும் !

முயற்சியது கை விடேல் !

**********
அண்மை பதிவு: 

நானும் ரவுடி தான் - விமர்சனம்



தொடர்புடைய பதிவுகள் :

2013: சிறந்த பத்து பாடல்கள் 

2012 டாப் 10 பாடல்கள் 

2011: நம்மை அசத்திய  10 பாடல்கள் 

2010: டாப் 10 பாடல்கள் 



Sunday, May 19, 2013

அன்னக்கொடியும் கொடி வீரனும் - பாடல்கள் தேறுமா?

2008- இறுதியில் வெளியான பொம்மலாட்டதுக்கு பிறகு - 4 வருடம் கழித்து இன்னொரு பாரதி ராஜா படம் ! இம்முறை அவருக்கு நெருக்கமான கிராமத்து களன். கதையில் பார்த்திபன்- அமீர் போன்றோர் உள்ளே வந்தது- வெளியேறியது துவங்கி ஏகப்பட்ட சர்ச்சைகள். அவற்றுக்குள் செல்லாமல் பாடல்கள் எப்படி என்று பார்ப்போம்

விஜய் டிவி சூப்பர் சிங்கரில் வந்த பலரும் இந்த ஆல்பத்தில் பாடியிருக்கிறார்கள். சத்ய பிரகாஷ், சந்தோஷ், பூஜா.... இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் வைரமுத்து மட்டுமன்றி அவரோடு - அறிவுமதி, கங்கை அமரன், ஏகாதசி என பல கவிஞர்கள் பாடல்கள் எழுதியுள்ளனர் (வைரமுத்து எப்பவும் தானே எல்லா பாட்டும் எழுதணும் என்ற கொள்கை உள்ளவர்; இம்முறை தன் நண்பரிடமே அது பலிக்க வில்லை )



ஆவாரங் கூட்டுக்குள்ளே

பாடகர்கள்: சத்திய பிரகாஷ், சின்மயி
இயற்றியவர்: வைரமுத்து

டிபிக்கல் கிராமத்து பாட்டு - கிழக்கு சீமையிலே, கருத்தம்மா என எத்தனையோ படங்களில் இத்தககைய பாட்டுகளை கேட்டிருக்கோம். இது பாரதிராஜா பட பாட்டு என சொல்லிடலாம்.

கேட்டதும் ஓரளவு பிடிக்கிற மாதிரி இருந்தாலும், அப்புறம் பெரிதாய் ஈர்க்காமல் அப்படியே நின்னுடுது. ப்ளூட் இசை மட்டுமே கவர்கிறது

பாடலின் பெரிய குறை - பெண் குரல் - கிராமத்து சாயல் சிறிதும் இல்லை !

அன்னமே

பாடியவர்கள் : ஜி வி பிரகாஷ் குமார்,பூஜா
எழுதியவர்: ஏகாதசி

நம்ம விஜய் டிவி சூப்பர் சிங்கர் பூஜா பாடியிருக்கார் !

மிக மிக மெதுவாக நகர்கிற பாட்டு. தைரியமாக இப்படி ஒரு ஸ்லோ சாங்க் எப்படி வைத்துள்ளனரோ தெரிய வில்லை. ரொம்ப செண்டிமெண்ட்டலாக திரையில் நிச்சயம் க்ளிசரினுக்கு வேலை வைக்கிற பாட்டு. ப்ச் .....

புத்தி வச்ச

பாடியவர்கள் : ஜி வி பிரகாஷ் குமார், பிரசாந்தினி
எழுதியவர்: அறிவுமதி

ஆல்பத்தில் பாரதி ராஜா ஸ்டைல் இல்லாமல் - ஜி வி பிரகாஷ் குமார் ஸ்டைலில் அமைந்த பாட்டு இது. அதனாலேயே கேட்க நன்றாக இருக்கிறது.

துவக்க இசை - அருமை. மிக மெலடியஸ் பாடல். ஓரிரு முறை கேட்ட பின் பிடிக்கிறது. பாடல் வரிகள் புரியாமல் இசை டாமினேட் செய்வதை தடுத்திருக்கலாம்

நரிக உறங்க

பாடகர்கள்: சந்தோஷ், ஹரிணி சுதாகர், பூஜா
இயற்றியவர்: வைரமுத்து

மீண்டும் இசை மட்டுமே ஈர்க்கிறது. பரதேசி படத்தின் சில பாட்டுகளை இப்பாடல் நினைவு படுத்துவது பெரிய மைனஸ்

போறாளே போறாளே

பாடியவர்: S. P. சரண்
இயற்றியவர்: கங்கை அமரன்

கடலோர கவிதைகளில் " போகுதே போகுதே.. என் பைங்கிளி வானிலே " கேட்டிருக்கிறீர்களா? அதே மாதிரி சூழலில் காதலி பிரியும் போது காதலன் சோகத்தில் பாடுகிற பாடல்

மெட்டு, பாடல் வரிகள் இரண்டுமே அதிகம் கவரவில்லை. ஒரு இடத்தில் "ஓ...ஓ " என வரிகளே இன்றி ஜவ்வு மாதிரி திரும்ப திரும்ப பாட வைத்துள்ளது எரிச்சலூட்டுகிறது

அன்னமே

பாடியவர்கள் : மாயா, படையப்பா ஸ்ரீராம், ரைஹானா
எழுதியவர்: ஏகாதசி

ஆல்பத்தின் ஒரே செம ஸ்பீட் பாட்டு. கோவில் திருவிழா அல்லது சாமி பூஜையின் போது நடக்கும் பாட்டாக வருகிறது. கிராமத்து வாத்தியங்கள் ஒலிப்பது ஈர்க்கிறது. மற்றபடி பெரிதாய் சொல்லி கொள்ள ஏதுமில்லை
*****
மொத்தத்தில் -

சோகம் பிழியும் பாடல்களும், மிக மெதுவான - சுவாரஸ்யம் இல்லாத பாடல்களும் ரசிகர்களுக்கு பிடிக்காமல் தான் போகும்.

ஓரிரு பாடல்கள் மட்டும் தான் ரசிக்க முடிகிறது ..பல முறை கேட்ட பின்னும் !

Friday, May 3, 2013

தங்க மீன்கள் - மனதை நெகிழ்த்தும் 2 பாடல்கள் - ஒரு பார்வை

ங்க மீன்கள் - கற்றது தமிழ் இயக்குனர் ராமின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் - கெளதம் மேனன் தயாரிப்பு- இசை - யுவன் சங்கர் ராஜா- பாடல்கள்- நா முத்து குமார்.

2011-ல் ஷூட்டிங் முழுதும் முடித்து விட்டாலும் - பல காரணங்களால் தாமதமாகி,  சமீபத்தில் பாடல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் படமும் வெளியாகி விடும் என்று நம்புவோம் !



**********
அப்பா- மகள் என்கிற உறவு தான் எத்தனை அற்புதமானது ! இப்பட பாடல்கள் முழுக்க முழுக்க இந்த உறவை பற்றி பேசுவதாலேயே - இயல்பான ஈர்ப்பு வந்து விடுகிறது.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்

மிக அழகான மெலடி !

ஒவ்வொரு பாடலிலும் இயக்குனர் ராம் அப்பா- மகள் உறவு குறித்து கவிதை கலந்த வரிகள் சில பேசுகிறார். இப்பாடலுக்கு முன் அவர் சொல்வது :

"மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும். முத்தம் காமத்தில் சேர்த்ததில்லை என்று.. " ..

என்னை போல - பெண்ணை பெற்ற தகப்பன்கள் - பல தருணத்தில் இதனை உணர்ந்திருக்க கூடும்.

மனதை வருடும் மெல்லிய இசையுடன் பாடல் துவங்குகிறது.

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் "

" இளம் காத்தாய் வீசிய " ஸ்ரீராம் பார்த்தசாரதியின் குரல் மெலடிக்கென்றே உருவானது ...

மெட்டு- அழகிய வரிகள் - பாடல நம்மை வேறு எங்கோ ஒரு வெளிக்கு இட்டு செல்கிறது



இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை.. இன்னும் வேண்டுமடி

சில மாதங்களே ஆன ஒரு பெண் குழந்தை- அவளுக்கு நடை பயில சொல்லி தரும் தந்தை என்கிற சித்திரம் இந்த வரிகள் கேட்கும்போதே மனதில் விரிகிறது. கூடவே எனது பெண்ணுக்கு நான் நடக்க சொல்லி தந்த தருணங்களும்...


அபியும் நானுமில் - வைரமுத்து என்றால் இங்கு நா. முத்துகுமார் !

அடி கோவில் எதற்கு தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி

இந்த ஆல்பத்தில் மிக அற்புத பாடல்களில் ஒன்று. கேட்டு பாருங்கள்




****
நதி வெள்ளம் மேலே

மனதை கவ்வும் பாட்டு "நதிவெள்ளம் மேலே ".

பணம் சம்பாதிக்கும் பொருட்டு குடும்பத்தை பிரிந்து வாழும் ஆண்கள் எத்தனை எத்தனை பேர் ! அந்த தந்தைகளின் மன நிலையை சொல்லும் பாட்டு இது.

Thanga Meengal Movie New Stills


நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய -
பொன் நினைவுகள்
நெஞ்சில் நிழலாடும்

முன்னந்தி நிலவில்
நீ ஓடிய
மென் சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்

என் கண்ணின் இரு கருவிழிகள் உன் முகத்தை தேடுதடி
கண்ணீர் துளிகள் காட்சியை மறைக்குதடி

ராகுல் நம்பியாரின் குரலில் முத்துகுமாரின் பாடல் வரிகள் - மனதை என்னவோ செய்கிறது.

அலைந்திடும் மேகம் அதை போல இந்த வாழ்க்கையே ............
காற்றின் வழியில் போகின்றோம்
கலைந்திடும் கோலம் என்ற போதிலும்
அதிகாலையில்
வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்

உயிரே உன்னை பிரிந்தேன்... உடனே நானும் இறந்தேன்
உடல் ...நானங்கு வாழும் நீ தானே
எந்தன் உயிரே ...

ஒவ்வொரு பல்லவிக்கும் இடையிலும் ப்ளூட் மனதை பிசைகிறது. சரணத்தை விட பல்லவி தான் அற்புதமாய் உள்ளது

மலர் ஒன்று வீழ்ந்தால் அதை ஏந்த பலர் ஓடுவார்
இலை வீழ்ந்தால் சருகாகும்
வறியவன் வாழ்க்கை இலை போல
என்றபோதிலும்
சருகுகள் ஒரு நாள் உரமாகும்


பாடலின் முன்பு இயக்குனர் ராமின் குரல் இப்படி சொல்கிறது

"அப்பாக்களை பிரியா மகள்கள் அதிர்ஷ்டசாலிகள்
மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள்
ஆனால் அப்படியெல்லாம் தந்துவிட
வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை "



*****************

இவை தவிர இன்னும் இரு பாடல்களும் இருக்கின்றன துரதிர்ஷ்டவசமாக அவை பெரிய அளவில் கவரவில்லை

"பஸ்ட் - லாஸ்ட் - பாஸ் - பெயில் யாரு கண்டுபிடிச்சா ? " என்கிற பாட்டு ரொம்ப நாள் கழித்து ஒரு குழந்தை பாட்டாக வந்துள்ளது. ஆனால் முழுதும் கோரஸ் பாடுவதாலும், இரைச்சல் இசையாலும் அதிகம் ஈர்ப்பின்றி போகிறது.

Thanga Meengal Movie Stills

யாருக்கும் தோழன் இல்லை என்கிற இன்னொரு பாடல் மிக சிறிய ஒன்று - அதுவும் மகளை பிரிந்து வாடும் தந்தை குறித்தது தான். மிக ஸ்பீட் ஆன பாட்டில் அற்புதமான பாடல் வரிகள் அடிபட்டு போவது வருத்தமே !

***
நதி வெள்ளம் மேலே மற்றும் ஆனந்த யாழை மீட்டுகிறாய் - இரு பாட்டுகளும் போதும் இந்த படத்திற்கு.. !

படம் குறித்து நிச்சயம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டன இந்த இரு பாடல்களும் !

******
அண்மை பதிவுகள்:

சூது கவ்வும்- நிச்சயம் வெல்லும் - விமர்சனம்  

மூணு பேர் மூணு காதல் = ஜவ்வு மிட்டாய் விமர்சனம்  

Sunday, March 17, 2013

எதிர்நீச்சல்- By அனிருத் பாடல்கள் எப்படி ..

ஞ்சை சென்றபோது நம் ப்ளாகை தொடர்ந்து வாசிக்கும் அண்ணன் மகன் சுந்தர் கேட்டான் " சித்தப்பா. ஏன் இன்னும் எதிர்நீச்சல் பாட்டு பத்தி எழுதவே இல்லை? "

" இன்னும் கேட்கலைப்பா "

" கேட்டு பாருங்க; அசத்தலா இருக்கு. பசங்க எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சிருக்கு "

ஊருக்கு வந்த பின் முதல் வேலையாய் டவுன் லோடு செய்து கொண்டு கேட்க ஆரம்பித்தேன். நாலஞ்சு வாரமா அலுக்காம கேட்டுகிட்டே இருக்கேன்

அனிருத் .. நிச்சயம் ஒன் பிலிம் ஒண்டர் அல்ல ! சூப்பரா அசத்திருக்கார் தம்பி !



இந்த ஆல்பம் முழுக்க அனிருத் சில எளிமையான அடிப்படை விஷயங்களை சரியாக செய்திருக்கிறார். ஒரு பாட்டுக்கு அட்டகாசமான மெட்டு, துள்ளல் இசை தான் முக்கியம். அத்தோடு ஒரு செம கேட்ச்சி மியூசிக்கை பிடித்து கொண்டு அதை பாட்டு முழுதும் அடிக்கடி வர வைத்தால் நம்மை அறியாமல் அந்த பகுதியை ரசிக்க ஆரம்பித்து விடுவோம். இதை விடாப்படியாக பிடித்து கொண்டார் அனிருத்.

பாடல் வரிகள் பெரிதாய் கவர வில்லை. (பலவற்றை எழுதியது தனுஷ் அனிருத் & கோ) நா. முத்து குமார் போன்றோரிடம் சென்றிருந்தால் இன்னும் மீனிங் புல் பாட்டுகள் வந்திருக்கும்..

பூமி என்னை சுத்துதே

பாடல்: தனுஷ் 
பாடியது: அனிருத் 

ஆல்பத்தில் எடுத்த எடுப்பில் நம்மை கவரும் பாட்டு இது.

ரவுசு செய்து வாழும் ஹீரோ தன்னை பற்றி பாடும் பாட்டு இப்படி செல்கிறது

டேமேஜான பீசு நானே ;
ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்

என்னோட பேரு சீரானதே
என்னோட பாதை நேரானதே
ஜீரோவும் இப்ப நூறானதே
அட நூறானதே

பாட்டில் வரிகள் எல்லாம் சாதாரணம் தான். ஆனால் அட்டகாசமான பீட்டு ரவுண்டு கட்டி அடிக்கிறது. கால்கள் தாளம் போடுவதை தடுக்கவே முடியாது

ஜாலியாக போகும் சரணத்தில் சற்று நிறுத்தி மெலடிக்கு மாற்றி "எங்கேயோ போகும் காத்து இப்ப என் ஜன்னல் பக்கம் வீசும் " என்று பாடம் இடம் அழகு. உடனேயே ஒரு ப்ளூட் வந்து மனதை கொள்ளை அடிக்கிறது



செம ஜாலியான பாட்டு. பிடிக்காமல் போகாது கேட்டு பாருங்கள்
***
சத்தியமா நீ எனக்கு தேவையில்லை

பாடல்: துரை செந்தில் குமார் 
பாடியது: தனுஷ் 

சத்தியமா நீ எனக்கு தேவையில்லை
பத்து நாளா சரக்கடிச்சேன் போதையே இல்லை..

என பாட்டு பாஸ்ட் பீட் டப்பாங்குத்தாய் ஆரம்பிக்கும் போது அதிகம் கவரா விட்டாலும் சரணத்தில் அசத்தி விடுகிறார் அனிருத்.

காத்துல பறக்கும் பஞ்சு
காதலில் வெடிக்கும் நெஞ்சு
பொண்ணுங்க மனசு நஞ்சு
மொத்தம் எத்தனை ரவுண்டுடா ? அஞ்சு

என்று செல்லும் வரிகள் இளைஞர்களை கவர போவதில் எந்த சந்தேகமும் இல்லை.

சரணத்தை ஒரே மாதிரி இன்றி வெவ்வேறு ஸ்பீடில் திருப்பி திருப்பி கொண்டு போகிறார் அனிருத்.. அட்டகாசம் !



படத்தில் கதை என்ற வஸ்த்துவும், திரை கதையும் நன்றாக இருந்து விட்டால் தியேட்டரில் இந்த பாட்டுக்கு இளைஞர்கள் டான்ஸ் ஆடுவது உறுதி !
***
நிஜமெல்லாம் மறந்து போச்சு

எழுதி பாடியவர்: தனுஷ் 

கொஞ்சம் சுமாரான பாட்டு. இப்போதைக்கு எனக்கு அதிகம் பிடிக்கலை. காதல் வசப்பட்ட ஹீரோ தனியாக பாடும் பாட்டு இது. ஆங்கில பாடலையும் சற்று மிக்ஸ் செய்து வடித்திருக்கிறார் இந்த பாட்டை.



ஏனோ சில இடங்கள் மட்டுமே பிடிக்கிறது. ஒரு வேளை நன்கு படமாக்கப்பட்டிருந்தால் பிடிக்கலாம்
***
எதிர் நீச்சலடி

பாடல்: வாலி 
பாடியவர்கள்: ஹனி சிங், அனிருத் அகிலன், ஹிப் ஹாப் தமிழா 

வாலி எழுதிய பாட்டு

நாளை என்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே
என்றால் கூட போராடு நண்பா

என்று படத்தின் டைட்டில் வரியையும், (எதிர் நீச்சல்) அதன் உள்ளர்த்தத்தையும் (போராடு .. வெற்றி நிச்சயம் ) சொல்லி செல்லும் பாட்டு

சில இடங்கள் நன்றாக இருக்கு. சில இடம் சற்று சுமார்.இளைஞர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்



ஹுசைன் போல்ட், ஒலிம்பிக்ஸ் என்றெல்லாம் செல்லும் பாட்டில், டப்பாங்குத்து தான் மறுபடி ரசிக்க வைக்குது
**********
உன் பார்வையில்

பாடல்: துரை செந்தில் குமார் 
பாடியது: அனிருத் 

ஒண்ணரை நிமிடமே ஒலிக்கும் ரொம்ப சின்ன பாட்டு தான்.



முதல் சில வரிகளை பாடி முடித்ததும் இசை மட்டும் தான் வருகிறது. ஆனால் அந்த இசை.. அடடா. அட்டகாசம் ! ப்ளூட் உடன் கூடிய அந்த இசையை அவசியம், அவசியம், அவசியம்...... கேளுங்கள்.. இந்த சின்ன பையன் சாதாரண ஆள் இல்லை என தெரியும். அசத்தல் !

வெளிச்ச பூவே வா

பாடியவர்கள்: மோஹித் சவுஹான், ஸ்ரேயா கோஷல்
பாடல்: வாலி 




தலைவி ஸ்ரேயா கோஷல்க்கு இன்னொரு சிக்சர் இந்த பாட்டு !

"மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே " என தமிழக நிலையை சொல்லும்படி சற்று சுமாராய் ஆரம்பித்தாலும் போக போக சொல்லி அடிக்கிறார் அனிருத். டூயட் தம்பியின் கோட்டை அல்லவா?



மெலடி + அட்டகாச மெட்டு + அசத்தும் பின்னணி இசை .. என மற்றொரு அசத்தல் பாட்டு 
****
முழுக்க முழுக்க யூத்துக்கான ஆல்பம் இது. ஆல் ஓல்ட் பீபில். டூ ஸ்டேப் பேக் ....!

அனிருத் மேல் ஆண்ட்ரியா விஷயத்தில் நமக்கு சற்று பொறாமை ( !!) இருந்தாலும், எதிர் நீச்சல் பாட்டு கேட்டபின் " பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிடுறான்" என ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியுள்ளது !

இவ்வருடத்தின் சூப்பர் ஹிட் ஆல்பங்களில் ஒன்று எதிர் நீச்சல்.. கேட்டு ரசியுங்கள் !
****
அண்மை பதிவு:

தொல்லை காட்சி - நீயா நானா - பரதேசி படக்குழு - ஷீக்கர் தவன்

பரதேசி - தமிழில் ஒரு உலக படம் - சல்யூட் பாலா !

உணவகம் அறிமுகம் : திருநெல்வேலி வசந்த பவன்

Sunday, March 10, 2013

பாலாவின் பரதேசி பாடல்கள்- எப்படி?

ழக்கமாய் தன் படங்களுக்கு நிறையவே நேரம் எடுத்து கொள்ளும் பாலாவிடமிருந்து சற்று விரைவாகவே ஒரு படம் - இதற்கு முன் அடுத்தடுத்த வருடங்களில் பாலா படம் வந்த மாதிரி நினைவில்லை. சென்ற வருடம் அவன் இவனுக்கு பிறகு - இவ்வருடம் பரதேசி

Bala in Paradesi Movie Stills  - Image 6 of 8

பாலாவின் எல்லா படங்கள் போல இதற்கும் எதிர்ப்பார்ப்பு நிறையவே இருக்கிறது. ஹீரோ அதர்வா, தான் நடித்த ஓரிரு படங்களில் நிச்சயம் நல்ல நடிப்பை தந்திருந்தார். அவருக்குக்காகவும், ஹீரோயின்களில் ஒருவரான தன்ஷிகாவிற்காகவும் தான் இப்படத்தை எதிர்நோக்கியுள்ளேன்

ஜி வி பிரகாஷ் குமார் இசையில் அனைத்து பாடல் களையும் எழுதியது வைரமுத்து

பாடல்கள் வெளிவந்து பல மாதம் ஆகிடுச்சு. பாடல்கள் எப்படி இருக்கன்னு பாக்கலாமா?
*************

யாத்தே (ஓர் மிருகம்)

பாடியவர்: பிரசன்னா, பிரகதி குருப்ரசாத்
பாடல்: வைரமுத்து

பாடியவர்கள் பேரை கவனித்தீர்களா? குறிப்பாக பெண் குரல்.. பிரகதி குருப்ரசாத் .. யார் என்று ஊகிக்க முடிகிறதா? சூப்பர் சிங்கர் ஜூனியரில் இறுதி போட்டி வரை வந்து ரன்னர் ஆனாரே அதே பிரகதி தான்.



பாடல் துவங்குவதே பிரகதியின் ஆலாபனையில் தான்.

"ஓர் மிருகம் - ஓர் மிருகம் தன்னை அடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் - ஓர் அடிமை என்றால் அது மனிதன் செய்யும் வேலை "

என்று கொத்தடிமை வாழ்க்கை பற்றி பேசுகிறது பாட்டு. பிரகதி பாட துவங்கும் போது ஏறக்குறைய அழுத படியே தான் பாடுகிறார்

"வாழ்வே பழுதாச்சே " என்றும் " ஏழை பாடு பார்த்தே காடும் அழுதாச்சே " என்றும் செல்லும் சோகப்பாட்டு. என்றாலும் மெட்டு ஓரளவு கவர்கிறது. இப்போதைக்கு ஓரளவு ஓகே என்னும் அளவில் உள்ள பாட்டு இது !

தன்னை தானே

பாடியவர்: கானா பாலா
பாடல்: வைரமுத்து 

கானா பாலா பாடிய ஜாலியான பாட்டு. ஜீசஸ் பற்றிய பாட்டாக செல்கிறது. இது மாதிரி பாட்டுகள் குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டுமே பிடிக்க கூடும். அதிலும் பாட்டிலேயே " அல்லேலூயா" என்று பாடுவதால் கிறித்துவர்களிலும் கூட அந்த பிரிவினருக்கு மட்டுமே பிடிக்கும் வாய்ப்பு உண்டு

*************
செந்நீர் தானா
பாடியவர்: கங்கை அமரன், பிரியா ஹிமேஷ்
பாடல்: வைரமுத்து

கங்கை அமரன் குரலை கேட்கும் போது இளைய ராஜா குரல் மாதிரியே இருக்கிறது. என்னடா இது - வைரமுத்து பாட்டை ராஜா எப்படி பாடினார் என்று பார்த்தால் - அப்புறம் தான் கங்கை அமரன் என்று தெரிய வருகிறது ( ஆமா - கங்கை அமரனுக்கு வைரமுத்துவுடன் சண்டை இல்லையா? )

பாலா படம் ஒவ்வொன்றிலும் இப்படி ஒரு பாட்டு இருக்கும். சேதுவில் " எங்கே செல்லும் இந்த பாதை" மாதிரி சோகமாகவும் மெதுவாகவும் பயணிக்கும் ஒரு பாட்டு. அனேகமா மாண்டேஜ் பாடலாக வரலாம்.

ஊரெல்லாம் விட்டு நம் இளமை கெட்டு நாம்
வெளியானோம் பூனைக்கு வாழ்க்கைப்பட்டு
பாம்புக்கு பசி வந்ததே - ஒரு சிறு கோழி என்னாகும் கூட்டிலே

வரிகளை உற்று கவனித்தால் ஈழ போராட்டமும், அங்கு வீடிழந்து நிற்கும் மக்களும் நினைவுக்கு வருகிறது !

*************

ஓ செங்காடே

பாடியவர்: மது பால கிருஷ்ணன்
பாடல்: வைரமுத்து

கேட்கும் போது செந்நீர் தானா பாட்டே மறுபடி ஒலிக்கிறதோ என்று தோன்ற வைக்கிறது. கிட்ட தட்ட அதே மாதிரி பாட்டு.

விளையாத காட்டை விட்டு, விளையாண்ட வீட்டை விட்டு
வெள்ளந்தியா வெய்யிலில் ஜனம் வெளியேறுதே 


என வீடிழந்து நிற்கும் மக்கள் துயரத்தை தான் இந்த பாட்டும் பேசுகிறது. சரணம் தான் சற்று வேறு மாதிரி ஒலிக்கிறது. மீண்டும் ஒரே மாதிரி பாட்டு எனும்போது ஈர்க்காமல் போகிறது

*************

அவத்த பையா

பாடியவர்கள்: யாசின், வந்தனா சீனிவாசன்
பாடல்: வைரமுத்து 


ஆல்பத்தில் சோகமான பாடல்களை விடுத்து - ஜாலியான ஒரே டூயட். அதிலும் கூட

வெண்ணி தண்ணி காய வச்சு உன் மேலு காலு ஊத்தவா
காச்சு போன கையில உன் காஞ்ச முகத்த வச்சு தேய்க்கவா

என்று தான் எழுதுகிறார் வைரமுத்து. மற்ற பாடல்களில் நிறைய சோகம் பிழிந்ததால் ஓரளவு ரசிக்க முடிகிறது இப்பாடலை.

***
மொத்தத்தில்: சோகம் ரொம்பவே அதிகம் உள்ள ஆல்பம் பெரிய அளவில் கவராமல் போகிறது. படமாவது தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன் .. பார்ப்போம்.!

****
டிஸ்கி: மார்ச் 16 சனிக்கிழமை மாலை  வீடுதிரும்பலில் பரதேசி சினிமா விமர்சனம் வெளியாகும்

Sunday, February 17, 2013

ஆதிபகவன்- பெரிய சைசில் ஏமாற்றிய யுவன்- பாடல் விமர்சனம்

திபகவன் ....அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளியாக உள்ள படம். சில பல ஆண்டுகளாக ப்ரோடக்ஷனில் இருந்து வருகிற 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்திலேயே மிக ஊறி போனதால் ஜெயம் ரவிக்கு சென்ற ஆண்டு முழுக்க ஒரு படம் கூட ரிலீஸ் ஆகலை.

இதற்கிடையில் இப்படம் குறித்து சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை. ஜெயம் ரவிக்கும் -இயக்குநர்க்கும் முட்டி கொண்டது என ஒரு நியூஸ்; பின் ஆதி பகவன் என தலைப்பு வைத்து இந்து கடவுள்களை அவமதிக்கிறார் என்று விஸ்வரூப பிரச்சனை சமயத்தில் இன்னொரு ரகளை.. மிக சமீபத்தில் படத்திற்கு "A  " சான்றிதழ் கிடைக்க, அதனால் வரிச்சலுகை கிடைக்காது என்பதோடு, டிவிக்களில் காட்டுவதும் பிரச்சனை. நிற்க படத்தின் தயாரிப்பாளர் ஜெ. அன்பழகன்.  - தி.மு.க வின் தற்போதைய MLA !

ஏழெட்டு மாதம் முன்பு வெளிநாட்டில் வைத்து ரிலீஸ் செய்த பாடல்கள் எப்படி? வாங்க பார்க்கலாம்


காற்றிலே மிதந்தேனே

பாடியவர்கள்: உதித் நாராயண் & ஸ்வேதா பண்டிட்
பாடல்: அறிவுமதி

"பிரியமான பெண்ணை ரசிக்கலாம்- தப்பில்லை"; என்ற வரிகளை "பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்; தப்பில்லே " என்று பாடிய உதித் நாராயண் தான் இப்பாட்டையும் பாடியிருக்கிறார்.

கிளாசிக்கல் போல துவங்கும்போது அதிகம் ஈர்ப்பில்லா விடினும், சரணத்தில் பாட்டை முழுதாய் ரசிக்க ஆரம்பித்து விடுகிறோம். ஆண் -பெண் இரு குரலும் இணைந்து ஒலித்தாலும் சோகப்பாட்டு போல ஒரு வலி இந்த பாட்டில் உணர முடிகிறது. இந்த ஆல்பத்தில் ரசிக்க முடிகிற சில பாடல்களுல் ஒன்று.

ஒரு துளி விஷமாய்

பாடியவர்கள் : ஸ்ரேயா கோஷல், ஷரிப் சப்ரி
பாடல்: ஸ்நேஹன்

தலைவி ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல்கள் பெரும்பாலும் சோரம் போவதில்லை. பாட்டு படிப்பது என்பார்களே... பாடலின் பல்லவி அதனை தான் நினைவு படுத்துது ! Literal -ஆக, பாட்டை பேசுகிற பாணியில் படிக்கிறது ஆண்குரல்.

காற்றிலே மிதந்தேனே பாடல் போலவே - டூயட் ஆக இருந்தாலும் கோபம் அல்லது வருத்தத்தில் பாடுகிற ஒரு பாட்டாக தான் இதுவும் தெரிகிறது.

எந்த வகை பாட்டு என்றே வகைப்படுத்த முடியாத இந்த பாட்டு ஷ்ரேயா கோஷல் பாடி ஜெயிக்காத வெகு சில பாடல்களில் ஒன்றாக சேரக்கூடும்.

*******
இஸ்ஸலாமே

பாடியவர்கள்: மானசி, ராகுல் நம்பியார்
பாடல்: சிநேகன்

க்ளப் சாங் போல இருக்கிறது . படத்தின் ஹீரோ ஒரு கேங்க்ஸ்டர் (அல்லது அப்படி நடிப்பவர்) என்பதால் கிளப்பில் பாடுகிற மாதிரி வருகிறது போலும். பாட்டில் ஒரு வரி அல்லது ஒரு வார்த்தை கூட கண்டுபிடிக்க முடியாத படி இருப்பது தான் பாட்டின் சிறப்பம்சமே. பாடல் துவங்கும் முதல் வார்த்தையே புரியாமல் இணையத்தில் தேடி பார்த்து தான் தெரிந்து கொண்டேன். "ஊ ஊ ஊ ஊ " என கோரஸ் பாடும் இடமும் அந்த இடத்து இசையும் மட்டும் தான் கேட்கிற மாதிரி இருக்கு. மற்றபடி முழு சொதப்பல் பாட்டு.

*******
அகடம் பகடம்

பாடியவர்: மொஹிட் சவுஹான்
பாடல்: மனோஜ்

முழுக்க முழுக்க ஒரு ஹிந்தி பாட்டு. வேகமாக போகும் பாட்டு- கதையை ஒட்டி- திரைக்கதையை நகர்த்தி செல்ல உதவ கூடும். ஹிந்தி பாடல் புரிந்தவர்களால் மட்டுமே முழுதும் ரசிக்க முடியும். இப்போதைக்கு சில இடங்களில் இசை மட்டுமே ஈர்க்கிறது. மற்றபடி ஒரு தமிழ் பட ஆல்பத்தில் எதற்கு முழு ஹிந்தி பாட்டு என்ற கேள்வி தான் வருகிறது.


*******
பகவான் - ராப் சாங்

பாடியவர்கள்: சத்யன் , The Prophecy.

போன பாட்டு முழுக்க ஹிந்தி வரிகளை கொண்டது என்றால் இப்பாட்டு முழுக்க ஆங்கில வரிகளை கொண்ட ராப் பாடல். ரொம்ப உற்று கேட்டால் ஹீரோவின் அருமை பெருமைகளை சொல்கிற பாட்டு என்று புரிந்து கொள்ள முடிகிறது

"பகவான் பகவான் " என வருகிற இடமும் அப்போது ஒலிக்கும் இசையும் மட்டுமே ரசிக்கிற விதத்தில் உள்ளது.
*******
யாவும் பொய் தானா

பாடியவர்: மதுஸ்ரீ
பாடல்: சிநேகன்

பில்லா - 2 படத்தில் வரும் பெண் குரல் பாடலான " இதயம்..இதயம் " பாடலை ஏனோ நினைவு படுத்துகிறது இப்பாட்டு.

பொதுவாய் காதல் தான் பொய் என்று பாடுவார்கள். இப்பாட்டிலோ " யாவும் பொய் தானா.. காதல் தவிர? " என்று கேட்கிறார் நாயகி. கேட்க கேட்க ஓரளவு பிடிக்கிறது பாட்டு
***
மொத்தத்தில்:

ஓரிரு பாட்டை தவிர மற்றவை ஈர்க்கவே இல்லை ! யுவன் -அமீர் காம்பினேஷன் பெரும்பாலும் ஜெயிக்கும். இம்முறை கோட்டை விட்டு விட்டனர் என்று தான் வருத்ததோடு சொல்ல வேண்டியுள்ளது :((

Thursday, January 31, 2013

கடல் பாடல்கள்: AR ரகுமானின் மாஸ்டர் பீஸ்.. ஆடியோ + விமர்சனம் !

ணிரத்னத்தின் கடல் நாளைக்கு வெளியாகிறது.

Draft-ல் கொஞ்ச நாள் தூங்கி விட்டு இன்று வெளியாகிறது பாடல் விமர்சனம் !

மொத்தம் 7 பாட்டு இருக்கு. நிச்சயம் 3 அல்லது 4 பாடல்கள் Outstanding!

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்

பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்
இயற்றியவர்: வைரமுத்து

ஆல்பத்தில் முதலில் ரிலீஸ் ஆனது இந்த பாட்டு தான். அனைவரும் இப்பாட்டை ஆஹோ ஓஹோ என சிலாகிக்க, சற்று எதிர்பார்ப்போடு கேட்டதாலோ என்னவோ அதிகம் கவரலை. பின் மற்ற பாடல்களும் வந்து சேர - இப்போ "நெஞ்சுக்குள்ளே " - ஸ்ட்ராங்காய் உள்ளிறங்கி விட்டது.



பொதுவாய் ஆண்களுக்கு, ஆண் குரல்  பாடும் பாடல்களும், பெண்களுக்கு பெண் குரல் பாடும் பாடல்களும் தான் அதிகம் பிடிக்கும் என நினைக்கிறேன். காரணம் காதல் பாடலை நம் மனதுக்கு பிடித்தவரை நினைத்து கொண்டு கேட்கிற பழக்கம் எதோ ஒரு காலத்தில் நம்மிடம் வந்து ஒட்டி கொள்கிறது. எனக்கு மிக பிடித்த பெண் குரல் தனி பாடல்கள் மிக குறைவாக தான் இருக்கும். அந்த லிஸ்ட்டில் இணைகிறது இப்பாடல்.



பாடல் முழுக்க முழுக்க ரகுமான் மேஜிக் தான். மயக்கும் துவக்க இசை, ஊஞ்சலாடும் மெட்டு, அர்த்தமுள்ள வரிகள், இனிய குரல்.. என நெஞ்சை நிறைக்கிறது. கேட்டு பாருங்கள்....!

அன்பின் வாசலிலே

பாடியவர்: ஹரிசரண்
இயற்றியவர்: மதன் கார்க்கி

பம்பாய் உள்ளிட்ட படங்களில் ரகுமான் இசையில் கேட்ட வேறு சில பாடல்களை நினைவு படுத்துது. பெரிதாய் கவரவில்லை என்று தான் சொல்லணும்

எலேய் கீச்சான்

பாடியவர்: AR ரகுமான்
இயற்றியவர்: மதன் கார்க்கி

ரகுமான் இசை அமைத்து பாடியுள்ள இந்த பாட்டு கடல் வாழ்க்கையையும் காதலையும் ஒரு சேர நமக்கு அறிமுகம் செய்கிறது. மீண்டும் ஒரு அட்டகாச மெட்டு ! ரகுமான் ரொம்ப என்ஜாய் செய்து பாடியிருக்கிறார்.



ஆரம்பத்தில் கேட்கையில் பாடல் வரிகள் முழுசாய் புரியவில்லை. இது ஒரு குறை தான். இதை மீறி இப்பாட்டை ரசிக்க ஒரு எளிய வழி உண்டு.

பாட்டை சிஸ்டத்தில் ஓட விட்டு,  காதில் கேட்ட படியே, இந்த லிங்கில் பாடல் வரிகளை ஒரு முறை மட்டும் படித்து பாருங்கள். உங்களை அறியாமல் முகத்தில் சிரிப்பலை பரவும். அடுத்த முறை பாடல் வரிகளை படிக்க வேண்டாம். பாட்டு கேட்கும் போதே ரசிக்கலாம்



"வா..... லே ... கொண்டா .. லே கட்டுமரம் கொண்டா....லே
குண்டு மீனை அள்ளி வர கொண்டா...லே " என கோரஸ் பாடும் இடமும், "

"ஒரு ஒரு தரம் உரசுற; பொசுக்குன்னு உசுரை உசுப்புற " என்று ரகுமான் பாடும் இடமும், மிக மெதுவாய் பாடல் முடிவதும் இப்போதைக்கு பிடித்தமான இடங்கள்.

வந்தாச்சு என்பதை முழுசாய் சொல்லாமல் வந்தாச் என ரகுமான் சொல்லி போவது அழகு :)
*****
மகுடி மகுடி

பாடியவர்கள்: ஆர்யன் தினேஷ் கனகரத்னம், சின்மயி
இயற்றியவர் : ஆர்யன் தினேஷ் கனகரத்னம்

ஸ்பீடாக போகிற வித்யாசமான பாட்டு. மகுடி மகுடி என்கிற வார்த்தைகளே மறுபடி மறுபடி ஒலிக்கிறது. நடுவில் சின்மயி கொஞ்சம் பேசுகிறார் (ஆம் பேசுகிறார்). வித்தியாச பாட்டு என்கிற அளவில் மட்டும் தான் இப்போதைக்கு வைக்க முடிகிறது

மூங்கில் தோட்டம்

பாடியவர்: அபை ஜோத்புரக்கர், ஹரிணி
இயற்றியவர்: வைரமுத்து

நண்பர் ரகுவிடம் சில வாரம் முன் பேசும்போது கேட்டார் " கடல் பாட்டு கேட்டீங்களா? எப்படி இருக்கு? " " நெஞ்சுக்குள்ளே தான் இப்போதைக்கு புடிக்குது" என்று நான் சொல்ல, " என்ன இப்படி சொல்லிட்டீங்க? மத்த பாட்டும் கேளுங்க .. அட்டகாசமா இருக்கு " என்றார். மற்ற பாட்டுகள் நெஞ்சுக்குள்ளே பாட்டை பீட் செய்ய முடியும் என்று அவர் சொன்னதை என்னால் ஏற்கவே முடியவில்லை.. எல்லாம் மூங்கில் தோட்டம் பாட்டு கேட்கும் வரை !

தான் தாண்டும் உயரங்களை, அடுத்தடுத்து அனாயசமாக தாண்டி போகும் ரகுமானை எப்படி பாராட்டுவது என்று தெரியாமல் விழிக்கிறேன்.

மிக மிக மெதுவான பாட்டு. இவ்வளவு ஸ்லோ பாட்டு போட எவ்வளவு துணிச்சல் வேண்டும் ! அதையும் சூப்பர் ஹிட் ஆக்கி நம்மை கிறுகிறுக்க வைக்கிறார்.

மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
நிறைஞ்ச வானம்
நீ பாடும் கீதம்
பவுர்ணமி இரவு
பனி விழும் காடு
ஒத்தையடி பாதை
உன் கூட பொடி நடை
இது போதும் எனக்கு
இ...து போதுமே... !
வேறென்ன வேணும்
நீ போதுமே..!

இரண்டு வார்த்தைகளில் ஒவ்வொரு வரியும் - புது கவிதை போல  இருக்கு. அதை அட்டகாச பாட்டாக மாற்றிய ரகுமான் ... வாட் எ ஜீனியஸ் !

" கொளத்தாங்கரையிலே" போன்ற வார்த்தைகளை கேட்கும் போது கிராமத்தில் வளர்ந்த ஒருவரால் மட்டுமே இத்தகைய வரிகளை எழுத முடியும் என தெளிவாக தெரிகிறது. தேசிய விருதுக்கான களத்தில் வைரமுத்து இந்த முறையும் போட்டியில் இருப்பார். கூடவே இப்பாடலை பாடிய ஹரிணியும்... !

 உங்களுக்கு மெலடி பிடிக்கும் என்றால், நிதானமாய் இந்த பாட்டை கேட்டு பாருங்கள். சான்சே இல்லை ! சிம்ப்ளி சூப்பர்ப் !

ஒரே ஒரு பிரச்சனை. 2- 3 தடவை கேட்டு, பாட்டும் பிடிச்சுட்டா, அப்புறம் தினம் 10 முறை கேட்க வைக்கும் இந்த பாட்டு.. I am literally addicted to this song now !


*****

சித்திரை நிலா

பாடியவர்: விஜய் யேசுதாஸ்
இயற்றியவர்: வைரமுத்து

மிக மெதுவாக துவங்கி பாதிக்கு மேல் வேகம் பிடிக்கிற பாட்டு. மனம் நொந்துள்ள  நாயகனுக்கு ஆறுதலும் ஊக்கமும் சொல்கிறது

"புதைக்கின்ற விதையும்
முயற்சி கொண்டால் தான்
பூமியும் கூட தாழ் திறக்கும் "

"துயரத்தில் இருந்தே காவியம் தோன்றும்
தோல்வியில் இருந்தே ஞானங்கள் தோன்றும் "

என செல்கிறது. ஜேசுதாஸ் பாடவேண்டிய பாட்டு... அவர் மகன் விஜய் ஜேசுதாஸ் பாடியுள்ளார்.
***
அடியே

பாடியவர் சித் ஸ்ரீராம்
இயற்றியவர்: மதன் கார்க்கி
 *******  
இன்னொரு அட்டகாச பாட்டு. கேட்டவுடன் இது ரகுமான் பாட்டு என சொல்லி விடலாம்.



பாடகர் சித் ஸ்ரீராம் யார், வேறு பாட்டு பாடியுள்ளாரா என தெரிய வில்லை. காதலின் கிறுக்கு தனத்தை அழகாய் வரிகளில் கொண்டு வந்துள்ளார் மதன் கார்க்கி.
*********
மொத்தத்தில் : தமிழில் மட்டுமல்ல, இந்திய இசை உலகின் இன்றைய முடிசூடா மன்னன் ரகுமான் என மீண்டும் ஒரு முறை நமக்கு நினைவு படுத்துகிறது இந்த ஆல்பம் !

கடல் பாடல்கள்..... ரகுமானின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று ! அவசியம் கேளுங்கள் !
****
அண்மை பதிவு 

கன்யாகுமரி :சில கசப்பான உண்மைகள் 

Sunday, January 6, 2013

விஸ்வரூபம் பாடல்களில் எத்தனை ஓகே ? பாடல் விமர்சனம்

மிக அதிக எதிர்பார்ப்புகள் மற்றும் சர்ச்சைகளுடன் இவ்வாரம் வெளியாகிறது கமலின் விஸ்வரூபம். ஐந்து பாடல்கள் ஆல்பத்தில் இருந்தாலும் ஒரு பாடல் ரிபீட் ஆகிறது ; ஆக, நான்கே பாடல்கள் தான். ஷங்கர்- இசான்- லாய் இசை ! 

பாடல்கள் எப்படி ? வாங்க பார்க்கலாம் !



யாரென்று புரிகிறதா 

பாடியவர் : சூரஜ் ஜகன் 
பாடல் இயற்றியவர் : வைரமுத்து 

கமலின் (பாத்திர) அருமை பெருமைகளை சொல்வதாக வருகிறது இப்பாட்டு

யாரென்று புரிகிறதா இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை தகர்த்தே சரித்திரம் படைப்பவன் நியாபகம் வருகிறதா

யாருக்கும் அடிமை இல்லை; இவன் யாருக்கும் அரசன் இல்லை
எவன் என்று நினைத்தாய் எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் புது ரூபம்

நெருப்புக்கு பிறந்தான் ....நித்தம் நித்தம் வளர்ந்தான்
வேளை வந்து சேரும்போது வெளிப்படும் சுயரூபம்

கமல் ரசிகர்களுக்கு நிச்சயம் இப்பாட்டு பிடிக்கும் !மற்றவர்களை பொறுத்த வரை பாடல் இப்போதைக்கு மிக சிறிதளவே கவர்கிறது. 


இப்பாடலை பொறுத்த வரை படம் நன்றாக இருந்தால், கதையுடன் ஒன்றி இருந்தால் ரசிக்க முடியும். இல்லாவிடில் நிச்சயம் இப்பாடலை மறந்து கடந்து விடுவோம்.

துப்பாக்கி எங்கள் தோழனே

பாடியவர்கள் : கமல் ஹாசன், பென்னி தயாள்
பாடல் இயற்றியவர் : வைரமுத்து

மிக வேகமான ஒரு பாட்டு. ஆங்கில வரிகள் இடையிடையே கலந்து வருகிறது

"துப்பாக்கி எங்கள் தோழனே " என்று துவங்கும் இப்பாடல் முழுக்க முழுக்க போர் பற்றியே பேசு(பாடு)கிறது.



கமல் கோரஸ் உடன் பாடும் இப்பாடலின் வரிகள் இப்படி உள்ளது:

போர்களை நாங்கள் தேர்ந்தெடுக்க வில்லை.
போர் தான் எம்மை தேர்ந்தெடுத்து கொண்டது
எங்களின் கையில் ஆயதங்கள் இல்லை
ஆயுதங்கள் கையில் எங்கள் உடல் உள்ளது

ஊரை காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்
சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்

துப்பாக்கியை தலையணையாய் வைக்கிறோம் என்றும் டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது என்றும் செல்லும் பாடலில், வரிகள் முழுதும் புரியாமல் இசை மிக அதிகம் டாமினேட் செய்வது வருத்தமே !

அணு விதைத்த பூமியிலே 

பாடியவர்கள் : கமல் ஹாசன்  & நிகில் டிசோசா 
பாடல் இயற்றியவர் : கமல் ஹாசன் 

இந்த பாட்டும் கூட சண்டை மற்றும் போர் பற்றித்தான் ! குறிப்பாய் சொல்லணும் என்றால் அணுகுண்டு பற்றி !.


யார் யார் சிவம் மாதிரி மெதுவான பாட்டு. கமல் பாடியிருக்கார். பெரிதளவில் ஈர்க்க வில்லை.

போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன்தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்

என்று செல்லும் பாடலில் "நம் நோய்க்கு அன்பன்றி வேறு மதம் இல்லை " என்ற வரிகள் யோசிக்க வைக்கிறது

உன்னை காணாத நானும் நானல்ல

பாடியவர்கள் : ஷங்கர் மகாதேவன், கமல் ஹாசன்
பாடல் இயற்றியவர் : கமல் ஹாசன்

                  

கமலின் குரலுடன் வடக்கத்திய பாடல் போல துவங்குகிறது. சில பல புரியாத வரிகள் பாடிய பின், மறுபடி மறுபடி "ஆயர் தம்மாயா நீ வா " என்று கமல் சொல்ல, கோரஸ், மாயா மாயா என்கிறது.

மிக மெதுவாக " உன்னை காணாத நானும் நானல்ல" என துவங்குகிறது ஷங்கர் மகாதேவன் குரல். ஆங்காங்கு கமலும் கோரசும் வந்து இணைந்து கொள்கிறார்கள். இப்போதைக்கு ஆல்பத்தில் பிடித்த பாட்டு என்றால் இது தான் ! இசையில் பெரிய ஞானம் இல்லாவிடினும், இப்பாடலில் எதோ ஒன்று ஈர்ப்பதாகவே உள்ளது


டான்ஸ் மாஸ்டராக வரும் கமல் வெள்ளை உடையுடன் ஆடுவதாக டிரைலரில் காட்டுகிறார்களே.. அது இப்பாடலே !
****
மொத்தத்தில்: தற்போதைக்கு ஈர்ப்பது உன்னை காணாத நானும் பாடல் மட்டும் தான். மற்ற பாடல்கள் படம் வெளியாகி வெற்றி பெற்றால் மட்டுமே, படத்துடன் சேர்த்து ரசிப்போம் என்று நினைக்கிறேன் !

Saturday, December 8, 2012

கும்கி பாடல்கள் - இமான் அடித்த சிக்ஸர்

மீபத்து இசை அமைப்பாளர்களில் இமான் நிச்சயம் கவர்கிறார். ஆரம்பத்தில் பெரிதாய் பேசப்படாத இவருக்கு மைனாவிலிருந்து தான் இரண்டாவது இன்னிங்க்ஸ் துவங்கியது என நினைக்கிறேன். பிரபுசாலமனுடன் இணைந்து இசை அமைக்கும் அவரது படங்கள் பெரும்பாலும் நன்கு வொர்க் அவுட் ஆகிறது. இருவரும் இணைந்து வழங்கும் சமீபத்திய வரவு கும்கி ! டிசம்பர் 14 -வெள்ளியன்று ரிலீசாகிறது.



ஒவ்வொரு பாட்டாய் அலசி விடுவோம். அய்யாசாமியின் கமன்ட்  இறுதியில் !   

நீ எப்போ புள்ள சொல்ல போறே

முதல் முறை கேட்கும் போதே பிடிக்கிற ஒரு பாட்டு. ஆண் குரலில் வரும் ஒரு தனிப் பாடல். காதலியுடன் உள்ள சண்டை- சிறு பிரிவில் பாடும் பாட்டாக உள்ளது. வழக்கமான இமான் டெக்னிக் தான். ஒரு கேட்சி டியூன். மிக சாதாரண, ஆனால் தெளிவாய் புரியும் வரிகள்.. மெட்டுகேற்ற இசை. நிச்சயம் உங்களையும் கவரும் !

இதே பாட்டு வெறும் இசை வடிவிலும் ஒரு முறை வருகிறது (தீம் மியூசிக் போல)

ஐய்யய்யோ ஆனந்தமே

இந்த பாட்டை முதல் முறை கேபிளுடன் அவர் காரில் வரும் போது கேட்டேன். கேபிள் "இது எந்த பாட்டின் காப்பி தெரியுமா? " என கேட்டு விட்டு, " பிரம்மா படத்தில் எங்கிருந்தோ இளம் குயிலின் பாட்டு இருக்கு இல்லியா அதோட காப்பி" என்றார். சில நாள் கழித்து வீட்டில் இதே பாட்டை கணினியில் கேட்டு கொண்டிருக்கும் போது என் பெண் வந்து " என்னப்பா இது " எங்கிருந்தோ இசை குயிலின் பாட்டு மாதிரியே இருக்கு !" என்றாள். அவளுக்கு எங்கிருந்தோ பாட்டு தெரிவதே எனக்கு ஆச்சரியமாய் இருந்தது ! ((நம்ம ரத்தம் என்பதை அப்பப்ப இந்த மாதிரி நேரத்தில் காட்டுவா)

எங்கிருந்தோ இசை குயிலின் சாயல் தெரிந்தால் கூட, இதுவும் ரசிக்கிற மாதிரி தான் இருக்கு. "எங்கிருந்தோ " வந்த புதிதில் எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு. அதுவும் கூட இப்பாடலை பிடிக்க ஒரு காரணமா தெரியலை

சமீபத்தில் நான் அடிக்கடி கேட்கும் பாட்டில் இதுவும் ஒன்று. ஆண் குரல் சற்று புதிதாய் வித்யாசமாய் இருக்கிறது.

பாட்டு முடியும் போது வரும் இசை அட்டகாசம் ! இறுதியில் வயலின் விளையாடும் போது ராஜா நினைவு வருவதை தடுக்க முடியவில்லை. செம பாட்டு !

இந்த பாட்டுக்கும் கூட கரோகே டிராக் ஒன்று (வரிகள் இல்லாமல்) இருக்கிறது. அது ஆரம்பத்தில் சாதரணமாய் துவங்கினாலும் போக போக மிக வசீகரிக்கிறது.

ஒண்ணும் புரியல

துவங்கும் முதல் சில நொடிகள் ராஜாவின் "என் இனிய பொன் நிலா"வை நினைவு படுத்துது. உடனே மாறி மைனாவின் " கையை புடி" பாடல் போல பயணிக்கிறது.

சரணத்தில் தான் பாடலின் ஒரிஜினாளிட்டி தெரிகிறது. மெட்டை லேசாக மாற்றி பீட்டை மாற்றும் போது டிபிகல் இமான் ! சரணம் பாதி தூரம் மிக மெதுவாக போகிறது; திடீரென படபடக்கிறது ! இன்னொரு தனி ஆண் குரல் பாட்டு.

நான்கைந்து முறை கேட்டபின் இந்த பாட்டும் ரொம்பவே பிடித்து போய் விட்டது !

சொய்  சொய் 

ஒரு பக்கா கிராமத்து டப்பாங்குத்து பாட்டு !

படத்தில் துணை/ கவர்ச்சி நடிகை போடும் குத்து டான்சாக இருக்கலாம்.



பெண் தன் காதலன் மீதுள்ள அன்பை சொல்லும் வரிகள் மிக எளிமையாக அழகாக வந்துள்ளது இப்பாடலில் !

சொல்லிட்டாளே அவ காதலை

பெண் காதல் சொன்ன பின் வரும் பாட்டு. ஏனோ இந்த பாட்டின் ஊடாக ஒரு சோகம் இருக்கு. (பிரபு சாலமன் எல்லா படமும் சோகமாக தானே முடிப்பார். இதிலும் தொடருமோ என்ற சந்தேகம் வர வைக்கிறது)

இந்த சீ. டி யில் ஆண் - பெண் பாடும் ஒரே டூயட் இது தான்.

" அம்மா - அப்பா சொன்னாங்க கேட்கலை; நீ சொன்ன பின்தான் கேட்டேன் " என்று காதலன் சொல்லும் அரிய தத்துவங்கள் நிறைந்திருந்தாலும், பாட்டு கேட்க நல்லா தான் இருக்கு. இந்த பாட்டை கேட்டவுடனே இமான் இசை என சொல்லிடலாம்.

எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க

கும்கி பட ஹீரோ யானை பாகன் இல்லையா? அதனால் யானையை வைத்து ஒரு பாட்டாவது வைக்காமல் இருக்க முடியுமா? படத்தின் முதல் பாடலாக இது இருக்கலாம். பாட்டின் இடையே அடிக்கடி ஒரு இசை ஒலிக்கிறது. இந்த இசைக்கு யானை நடப்பதை காட்டுவார்கள் என நினைக்கிறேன்.

இமானும் பென்னி தாளும் பாடிய சின்ன பாட்டு இது. யானை பற்றியும், யானை பாகன் வாழ்க்கையையும் சொல்கிறது. பாட்டு ஜஸ்ட் ஓகே

அய்யாசாமியின் பைனல் பன்ச்:

ஆறில் மூணு பாட்டு எடுத்தவுடனே ஹிட். கொஞ்ச நாள் கேட்டா ஆறு பாட்டுமே நல்லாதான் இருக்கு. இப்படி எல்லா பாட்டும் நல்லா அமையிற ஆல்பம் சமீபத்தில் ரொம்ப கம்மி தான். கொஞ்சம் காப்பி, கொஞ்சம் ரீப்பீட்டு இருந்தாலும் கூட கும்கி பாடல்கள் தான், கூடவே ரிலீஸ் ஆகும் நீதானே என் பொன் வசந்தத்தை விட நல்லாருக்கு !

ராஜாவின்  முப்பதாண்டு  ரசிகனான நான் நீதானேயை விடுத்து, கும்கி பாட்டுகளை தான் கடந்த சில மாதங்களாக திரும்ப திரும்ப கேட்கிறேன். இதை விட வேறு proof வேண்டுமா?

Sunday, November 11, 2012

போடா போடி : பாட்டு எப்புடி?

முதலில் இதை படிச்சு பாருங்க. இது என்னான்னு ஊகிக்க முடியுதா? :

பதினெட்டு வயசு வரைக்கும் நல்லா படிச்சு படிப்பை லவ் பண்ணிட்டேன்
இருபத்தியொரு வயசு வரைக்கும் வேலைக்கு ஒழுங்கா போயி வேலைய லவ் பண்ணிட்டேன்
இப்போ ஒரு பொண்ண லவ் பண்ணலாம்னு தோணுதுங்க
மனசு ஏங்குதுங்க ஏங்குதுங்க
இவ்ளோ நாள் ஜாலியா இருந்துட்டேன் நான்
ஒரு பொண்ணால காலி ஆயிட்டேன் நான்

ஐயோ ...ஐயோ
சோ கன்பியூசனுங்க தலை எல்லாம் சுத்துதுங்க சுத்துதுங்க
அட்வைஸ் சொல்லுங்க கொஞ்சம் அட்வைஸ் சொல்லுங்க
லவ் பண்ணலாமா வேணாமா ? லவ் பண்ணலாமா வேணாமா ?

***

மேலே உள்ளது என்னான்னு சொல்லவா?

நம்புங்க...... இது போடா போடி படத்து பாடல் வரிகள் ! எழுதி, பாடி, ஆடி, நடிப்பது உங்கள் சிம்பு (முடியல)

******

அப்பன் மவனே, லவ் பண்ணலாமா, ஐ யாம் ய குத்து டான்சர் என மூணு பாட்டு சிம்புவே பாடிருக்கார். படத்தின் 2 பாட்டுகளை எழுதியதும் அவரே. படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் பல பாடல்களை எழுதியிருக்கார். (நல்லவேளை கண்ணதாசன், பட்டுக்கோட்டை போன்றோர் இன்று உயிரோடு இல்லை !)
*****
லவ் பண்ணலாமா பாட்டு வசன கவிதை (!!??) மாதிரி இருந்தாலும், ஓரளவு ஹிட் ஆகிடுச்சு. சிம்புவின் வழக்கமான "எவண்டி  உன்னை பெத்தான் " டைப் பாட்டு தான் இது. இத்தகைய பாட்டுகள் விட்டில் பூச்சி மாதிரி. கொஞ்ச நாள் பாடிட்டு மறந்துடுவாங்க இளைஞர்கள்.

பாட்டுக்கு சட்டை போடாம மேலுடம்பு காட்டியபடி சிம்பு  ஆடும் நடனத்தை நினைத்தால் பயமாயிருக்கு ! (Trailor-ஏ கண்ணை கட்டுதே !)

*****
"அப்பன் மவனே" பாட்டு பாடல் (வாலி) வரிகளாலும், எளிய முறையில் பாடப்பட்டதாலும் கவர்கிறது. குட்டி பசங்க உள்ள இளம் தந்தைகள் தங்கள் மகனை நோக்கி

" எப்பவுமே நான்தான் உன் பஸ்ட்டு பிரன்டுப்பா; உன் பெஸ்ட் பிரன்டுப்பா"
என்று பாடுவார்கள் என நினைக்கிறேன்.

இப்போதைக்கு இந்த ஆல்பத்தில் எனக்கு ஓரளவு பிடித்த பாட்டு இது.

வாலி கைவண்ணம் என்பதால் சற்று தப்பி பிழைத்து விட்டது என நினைக்கிறேன். (சிம்பு ஒரு குழந்தைக்கு அப்பாவா நடிக்கிறாராமே ! அவர் நடிப்பது இருக்கட்டும். முதல் படத்திலேயே ஹீரோயின் ஒரு குழந்தைக்கு அம்மாவா நடிக்கிறாரா ? ஆச்சரியம் தான் )
******
ஐ யாம் எ குத்து டான்சர் பாட்டு ஷங்கர் மகாதேவன் மற்றும் சிம்பு பாடியிருக்காங்க. சிம்புவின் வீர தீரம் சொல்லுது பாட்டு. " என் ஆசை மைதிலியே", " கலாசலா,கலாசலா", " லூசு பெண்ணே" மாதிரி
சிம்பு நடித்த பாடல் வரிகளை வைத்து தான் பல்லவி எழுதப்பட்டிருக்கு.

சிம்புவை அவர் பழைய பாட்டு வரிகளை வைத்தே ஆஹோ ஓஹோ என பாராட்டும் அளவு பேன் பாலோயிங் அவருக்கு இருக்கா என்ன ! ??

இது ரொம்ப சின்ன பாட்டு என்பது மட்டும் ஆறுதல்.
 ********
"ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா" என்று ஒரு டூயட் பாட்டு. கல்லானாலும், புல்லானாலும் என்னுடைய பாய் பிரன்ட் நீதானே என்றும், "யார் நீ Friend- ஆ? ...........நோ !  Fling-ஆ? .......நோ ! " என்ற உயர்ந்த தத்துவ வரிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கார். இளைய தலைமுறையில் சிலருக்கு ஒருவேளை பாட்டு பிடிக்கலாம்.
*****
படத்தலைப்பையே  பாடல் வரிகளாக கொண்ட "போடா போடி"யை பென்னி தயாள் & ஆண்ட்ரியா பாடியுள்ளனர்.

இந்த பாட்டில் "காதலை காதலி......க்.............கிறேன்" என்று திரும்ப திரும்ப பாடுறாங்க. ........துரை... என்ன சொல்ல வர்றீங்க?

ஆண்ட்ரியாவின் ஐஸ்க்ரீம் குரல் வருகிற இடங்கள் மட்டும் ஓரளவு கவர்கிறது. இன்றைய எந்த முழு நேர பாடகிக்கும் சவால் விடும்படி ஹை பிச்சில் பாடுவது இவரின் ஸ்பெஷாலிட்டி.
இந்த பாடலில் அடிக்கடி வரும் இன்னொரு வரி " ஐயோ ஐயோ நான் செத்து பிழைக்கின்றேன் !"

பாட்டு கேட்கும் நம்ம நிலைமையை இதுக்கு மேலே ஈசியா சொல்ல முடியாது
***
பாடல்களுக்கு இசை தரன். வரிகள் புரியாத பாஸ்ட் பீட் பாட்டுகள் தான் ஒவ்வொன்றும். ஒரு மெலடி கூட இல்லை. விரைவில் இந்த பாஸ்ட் பாடல் மேனியாவிலிருந்து வெளியேறினால் நல்லது.. !

***
இன்றைய இளைய தலைமுறைக்கு இத்தகைய அர்த்தமற்ற வரிகளை கொண்ட, இரைச்சலான பாடல்கள் தான் பிடிக்கிறது என இவர்களாகவே முடிவு கட்டி கொள்கிறார்கள். இதே சிம்பு நடித்த விண்ணை தாண்டி வருவாயா பட பாடல்களை நினைத்து பாருங்கள். என்ன அற்புத வரிகள்.. எவ்வளவு அழகான இசை ! அதை அனைத்து தரப்பினரும் கொண்டாட வில்லையா?

தயவு செய்து இளைஞர்கள் பேரை சொல்லி எங்க காதுகளை டேமேஜ் செய்யாதீங்க ! உங்களுக்கு புண்ணியமா போகும் !

ஆறேழு முறை கேட்டும் ஒரு பாட்டை  தவிர மற்றவை ஈர்க்க  வில்லை என்பதே இந்த ஆல்பம் குறித்த ஒரு வரி கருத்து ! 

Sunday, November 4, 2012

துப்பாக்கி: ஒருவரி கதை + பாடல்கள் எப்படி?

விஜய்யின் தீபாவளி ரிலீஸ் துப்பாக்கி. குங்குமம் பத்திரிக்கையில் இப்படத்தின் கதை என்ன என்று கேட்க, விஜய் இப்படி பதில் சொல்லியிருந்தார். " படத்தில் நான் ஒரு ராணுவ வீரன். விடுமுறையில் சொந்த ஊருக்கு வருகிறேன். நான் திரும்ப ராணுவத்துக்கு போவதற்குள் நடக்கும் சம்பவங்களே துப்பாக்கி படத்தின் கதை".

சரி ...படத்தின் பாடல்கள் எப்படி என்று பார்ப்போம்.
***
பாடல் ஒவ்வொன்றையும் ஐந்து, ஆறு முறை கேட்ட பின் தான் எழுதுகிறேன்.

A.R. முருகதாஸ் பொதுவாய் தன் கதைக்கு முக்கியத்துவம் தந்து அதற்கு தகுந்த படி ஹீரோ பார்ப்பார். இம்முறை விஜய்க்காகவே தான் கதை முதல் பாட்டு வரை வடிவமைத்த மாதிரி தோன்றுகிறது.


குட்டி புலி கூட்டம் டிபிக்கல் விஜய் பாட்டு. இந்த பாட்டை நீங்கள் எப்போது முதன் முறையாக கேட்டாலும் " இது விஜய் படத்து பாட்டு" என்று எளிதாய் சொல்லி விடுவீர்கள். வேட்டைக்காரன், கில்லி என எத்தனையோ படங்களில் கேட்ட விஜய் பாடலை நினைவு படுத்துது. காலை மடித்து உட்கார்ந்து, உட்கார்ந்து ஆடும் விஜய்யின் ஸ்பெஷல் டான்சை இந்த பாட்டிற்கு எதிர்பார்க்கலாம்.

துறு துறுன்னு இருந்திடு இருந்திடு துறு பிடிக்காமலே இருந்திட பறந்திடு என மெசேஜ் சொல்லவும் மறக்க வில்லை. விஜய் ரசிகர்கள் தவிர்த்து மற்றவர்கள் திரும்ப திரும்ப கேட்கிற அளவில் இந்த பாட்டு இல்லை என்பது சற்று வருத்தமே !

கூகிள் கூகிள் என்கிற பாட்டு - ஆண்ட்ரியா மற்றும் விஜய் பாடியுள்ளனர். கூகிள், யாகூ, சாட்டிங், யூ டியூப் என முழுக்க முழுக்க இணைய வார்த்தைகளை போட்டு எழுதப்பட்ட பாடல் (மதன் கார்க்கி). பாட்டின் துவக்கம் கேட்சி ஆக இருப்பதால் இந்த பாட்டு ஹிட் ஆகி உள்ளதாக அறிகிறேன்.

பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் கிண்டலடித்து பாடும் பாடல். பிரச்சனை என்னவென்றால் பாடல் வரிகள் புரியாத மாதிரி இசை முழுதும் டாமினேட் செய்து விடுகிறது

கிட்ட வந்து நான் பேசும் போதோ
twitterகுள்ள மூழ்கிடுவான்
இச்சுன்னு ஸ்வீட்டா கன்னத்தில் தந்தா
நச்சுன்னு ட்வீட்டா போட்டுடுவான்

என்றெல்லாம் வரிகள் இருக்கு என்பதை மதன் கார்க்கி தன் தளத்தில் பாடல்களை பகிர்ந்த போது தான் தெரிந்து கொள்ள முடிந்தது. நிச்சயம் பாட்டு கேட்கும் போது இந்த வரிகள் புரியவே இல்லை.

போய் வரவா என்பது மிக மிக மெதுவான மெலடி. உறவுகள் பிரிவதை அடிப்படையாய் வைத்து வருகிற பாட்டு. கொஞ்சம் முயன்றிருந்தால் முஸ்தபா முஸ்தபா போல கல்லூரி கடைசி நாட்களில் ஒலிக்கும் பாடலாய் வந்திருக்கலாம். மிக மெதுவான பாடல் என்பதால் அதற்கு சற்று வாய்ப்பில்லை என்றே சொல்லணும். கேட்க கேட்க இந்த பாட்டு ஓரளவு பிடிக்கலாம்

"வெண்ணிலவே " என்கிற பாட்டு "ஆஜா ஆஜா " என ஹிந்தியில் துவங்குகிறது. பின் அப்படியே ஒரு பல்டி அடித்து

வெண்ணிலவே தரையில் உதித்தாள்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாள்

என்று மெலடியாய் போகிறது. ஹரிஹரன் மற்றும் பம்பாய் ஜெயஸ்ரீ பாடிய இந்த பாட்டு மிக மெதுவாய் போனாலும் ரசிக்க கூடிய மெலடி. இந்த பாட்டு மழையில் ஒலிக்குமோ என்னவோ ! நடு நடுவே ஒற்றை மழைத்துளி கொட்டும் சத்தம் வந்து கொண்டே இருக்கிறது.

இவை தவிர அலைக்கா லைக்கா என்கிற பாட்டும் அண்டார்டிகா என்கிற பாட்டும் கூட ஆல்பத்தில் உள்ளன. இவை இரண்டும் நான்கைந்து முறை கேட்டும் ஈர்க்க வில்லை. படம் பார்த்த பின் எண்ணம் மாறுமோ என்னவோ தெரியலை.

பட விமர்சனம் எழுதும் போது முடிக்கிற மாதிரி தான் இந்த பாடல் விமர்சனத்தையும் முடிக்க வேண்டியிருக்கிறது.

துப்பாக்கி பாடல்கள்.. "Strictly for Vijay Fans " !

Tuesday, October 23, 2012

நீர்ப்பறவை -மனதை கவ்வும் பாடல்கள் - விமர்சனம்

மீபத்தில் வெளியான பாடல்களில் நம் மனதை பெரிதும் கவர்ந்து போவது நீர் பறவை பட பாடல்கள் தான். தென் மேற்கு பருவகாற்றுக்கு இசை அமைத்த ரகுநந்தன் இசை ! பல பாடல்கள் மிக மென்மையாய் மனதை வருடி போகிறது.

சார்.........சுனைனா சார் !
பற பற பறவை ஒன்று என்கிற பாடல் மூன்று முறை ஒலிக்கிறது. பாடல் வரிகளில் சிற்சில மாற்றங்கள் இருந்தாலும் மெட்டு மற்றும் இசை மூன்று பாட்டிலும் அப்படியே இருக்கு ! பெண் குரலில் ஒலிக்கும் பாடல்களை சின்மயி ஒரு முறையும், ஸ்ரேயா கோஷல் இன்னொரு முறையும் பாடி உள்ளனர்.

பற பற-வில் உயர பறப்பது  சின்மயியின் குரலே ! ஸ்ரேயா கோஷல் தான் எனக்கு அதிகம் பிடிக்கும் என்றாலும், சின்மயி பாட்டின் உணர்வை/ அர்த்தத்தை மிக நன்கு உணர்ந்து பாடி உள்ளது அந்த பாட்டை  சிறக்க  வைக்கிறது.

கடலுக்குள் சென்ற காதலனுக்காக பெண் பாடும் வரிகளை பாருங்கள் :  

ஊரெங்கும் மழையும் இல்லை.
வேறெங்கும் புயலும் இல்லை
என்றாலும் நெஞ்சில் இடி இடிக்குதே

நீரின் மகன் எந்தன் காதலன்
நீரின் கருணையில் வாழுவான்
இன்று நாளைக்குள் மீளுவான்
எனது பெண்மையை ஆளுவான்

இயக்குனர் சீனு ராமசாமி,  GV பிரகாஷ், இசை அமைப்பாளர் ரகுநந்தன்  

ஜி. வி பிரகாஷ் - ஆண் குரலில் வரும் அதே பாட்டில் மிக அதிக கிறித்துவ வார்த்தைகள் பயன்படுத்தபட்டுள்ளது. ஊழியம், ஆசீர்வாதம், விவிலியம், ஸ்தோத்திரம், பரிசுத்தம் என ரொம்பவே அதிகமா போயிட்டார் கவிஞர் வைரமுத்து !

(இப்போது கிருத்துவர்கள் எதிர்ப்பால் இந்த வரிகளில் சில மாற்றப்பட உள்ளதாக செய்திகள் சொல்கின்றன).

ஆண் குரல் பாடலில் "பெட்ரோல் மீது தீயை போல உந்தன் மீது பற பரவென பரவுது மனசு " என்கிற வரிகளும் அதை பாடி முடித்த பின் வருகிற வயலினும் சரி மனதை கொள்ளை அடிக்கிறது. வயலின் மற்றும் பிளூட் பாடல் முழுதும் அசத்துவது பழைய இளையராஜா பாட்டை கேட்கும் பீலிங் அப்படியே தருது.

மீனுக்கு சிறு மீனுக்கு என்னும் பாடல்  (விஜய் பிரகாஷ், ஹரிணி) அழகான டூயட். இப்பாடலின் மிக அழகான பகுதி சரணத்தில் "அடடா முத்தம் பறிக்கிற வழி.. இது தான் குறுக்கு வழி" என்று பாடும் போது மெட்டை முழுவதுமாய் மாற்றி Beat-டையும் மாற்றி அடிக்கும் இடம் தான். இந்த பாடலிலும் விவிலியம், திருமறை  உள்ளிட்ட வார்த்தைகளை கவிஞர் விடவில்லை :((

தேவன் மகளே (பிரசன்னா, சைந்தவி) மற்றொரு டூயட். காதல் மலர்ந்தவுடன் வருகிற பாட்டு என நினைக்கிறேன். வயலினின் உபயோகம் மிக நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் இசை அமைப்பாளர்.

ஹரிஷ் ராகவேந்திரா பாடும் ரத்த கண்ணீர் என்னும் பாட்டு மாண்டேஜ் பாடலாக கதையை ஒட்டி வரக்கூடும். சுய பச்சாதாபம் அதிகமாய் ஒலிக்கும் இப்பாட்டு இப்போதைக்கு அதிகம் ஈர்க்க வில்லை.

அம்மா செண்டிமெண்ட் பாடலான "யார் வீட்டு முகமும்" ஒரு மெலடி.  வரிகள் புரிகிற மாதிரி பாடியுள்ளார் அனந்த் அரவிந்த்.

மொத்தத்தில்:    பற பற, மீனுக்கு சிறு மீனுக்கு, தேவன் மகளே  ஆகிய பாடல்களால் இந்த ஆல்பத்தை நன்கு ரசிக்க முடிகிறது.

ரகுநந்தன்: உங்க கிட்டே நாங்க நிறைய எதிர்பார்க்கிறோம் ! அடிச்சு ஆடுங்க சார் !
****
அனைவருக்கும் இனிய நவராத்திரி மற்றும் பூஜா வாழ்த்துகள் !

Thursday, October 11, 2012

மாற்றான் பாடல்கள் எப்படி? ஒரு அலசல்



ந்த வருடத்தில் செம எதிர்பார்ப்போடு இருக்கும் ஒரு படம்: மாற்றான். தான் இயக்கிய அனைத்து படங்களையும் ஹிட் ஆக்கிய கே. வி. ஆனந்த் தான் முதல் அட்ராக்ஷன்.

இந்த விமர்சனம் எழுதி ரொம்ப நாளாகி விட்டது. அப்படி இப்படி என தாமதமாகி, நாளை படம் ரிலீஸ் ஆவதால், இதற்கு
மேல் தாமதம் கூடாது என இப்போது இப்பதிவு வெளியாகிறது.

இப்பட பாடல்களை கடந்த ஒரு மாதமாக கேட்டு வருகிறேன். ஆரம்பத்தில் கேட்டபோது எழுதிய விமர்சனம் முதலிலும், பல முறை கேட்டபின் இப்போது உள்ள உணர்வை மஞ்சளிலும் தந்துள்ளேன்

பாடல்களின் ஆடியோ வடிவமும் இணைக்கப்பட்டுள்ளது !


கால் முளைத்த பூவே

பாடியது:ஜாவேத் அலி, மகாலட்சுமி ஐயர்

அட்டகாசமான பல்லவி. இரண்டு சரணத்திலும் முதல் பகுதி வேகமாய் பாடுகிறேன் பேர்வழி என ஒப்பிக்கிற மாதிரி உள்ளது மட்டும் உறுத்துகிறது.



பாட்டு..செம ஸ்பீட்.  முதலில் ஹிட் ஆனது இந்த பாட்டு என்று தான் நினைக்கிறேன். ஜாலியான சூரியா பாத்திரத்தை எஸ்டாப்ளிஷ் செய்ய உதவும் பாலே டான்ஸ் ஆக இருக்கலாம். நிச்சயம் படத்தில் பார்க்க ஒரு விஷுவல் ட்ரீட் காத்திருக்கு !

***
கேட்க கேட்க ரொம்ப பிடிச்சு போயிடுச்சு இந்த பாட்டு. அடிக்கடி கேட்கும் இப்போதைய விருப்ப லிஸ்ட்டில் இந்த பாட்டும் இருக்கிறது !

#####
யாரோ யாரோ நான் யாரோ

பாடியது: கார்த்திக், ப்ரியா ஹிமேஷ்

ஏழாம் அறிவின் சோக பாட்டை (யம்மா யம்மா காதல் பொன்னம்மா) நினைவு படுத்துது ! மெட்டு, குரல் ஹாரிஸ் இசை இவை இரண்டு படத்திலும் ஒரே மாதிரி இருக்கு. எப்படி இயக்குனருக்கு தோணாமல் போனது என தெரியலை. பாட்டு கேட்கும் போது ஏழாம் அறிவு சூரியா யம்மா யம்மா பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது அப்படியே கண்ணில் வந்து போகுது.



மிக மெதுவாய் போகும் பாட்டு. ஹிட் ஆவது கடினம் என்றே நினைக்கிறேன். இந்த ஆல்பத்தின் ஒரே சொதப்பல் இப்பாடல் தான்
***
அதிக முறை இந்த பாட்டை கேட்கவே இல்லை. படத்தின் பாடல்களை பாடவிடும் போது இந்த பாட்டை மட்டும் தவிர்த்து விடுவேன்.ஏனோ சுத்தமாய் கவரவில்லை இந்த பாட்டு

######
தீயே தீயே

பாடியவர்கள்: ஆலாப் ராஜூ, சத்யன், பிரான்க்கோ, சுசித்ரா.

கொஞ்சம் வித்யாசமான ஒரு பார்ட்டி சாங் போல் தான் இருக்கிறது. பாட்டில் இசை ஈர்க்கிறது. முதல் சரணம் முழுக்க பெண்ணின் உதடு பற்றியும், முத்தம் பற்றியுமே பேசுகிறது



மெலடியா, பார்ட்டி சாங்கா என்று பிரிக்க முடியாதது சிறு குறை. ஓகே ரக சாங். ஓஹோ அல்ல
****
நிறைய முறை கேட்டும் கூட பெரிய அளவில் ஈர்க்க வில்லை. படமாக்கியதில் ஏதாவது வித்யாசமா இருந்தால் ஒழிய பாட்டு நம் மனதில் தங்காமல் போக வாய்ப்புகள் அதிகம் !

#########

ரெட்டை கதிரே

பாடியவர்கள்: கிரிஷ் மிலி ,பாலாஜி   நிதானமாய் ஆரம்பித்து பின் ஸ்பீட் எடுக்கும் ஒரு பாட்டு.

பாடல் வரிகள் மிக அருமை.

புயலடித்தும் வாழுதே இரு பறவை ஒரு கூட்டில்
மெது மெதுவாய் பூக்கட்டும் இந்த பூக்கள் எதிர் காற்றில்

என்ற வரிகளை கேட்கையில் இரட்டை சூர்யா பாடும் பாட்டு என்பது புரிகிறது.நடுவில் ஆங்கில வரிகளும் பெண் குரலில் ஒலிக்கிறது (பாரின் லொகேஷன்??)



இரண்டாவது சரணத்துக்கு முன் வயலின் அருமையாய் இழைகிறது. இரண்டு பாத்திரத்தில் உள்ள வெவ்வேறு குணங்களை காட்டும்படி உள்ளது இப்பாட்டு. நிச்சயம் குட்டி பசங்க வரை இந்த பாட்டு ரீச் ஆகி, " தீரே..தீரே" என்று பாடத்தான் போகிறார்கள் ! 
########
நாணி கோணி 
Pick of the Album. பின்னே பாடியது தலைவி ஸ்ரேயா கோஷல் ஆச்சே? எப்படி தான் ஹிட் ஆகும் பாட்டு மட்டும் சரியா தேர்ந்தெடுத்து பாடுறாரோ! கூட விஜய் பிரகாஷ் வேறு ! சர்ரியான டூயட்.



தலைவி அனாயாசமாக ஹை பிச்சில் பாடிட்டு கீழ் ஸ்தாயியிலும் பாடுறார். வாட் எ வாய்ஸ் !!

கே. வி ஆனந்தின் அட்டகாசமான படமாக்கலை பார்க்க வெயிட்டிங்.
***
கேட்க கேட்க இனிக்கிற குரல் ஸ்ரேயா கோஷலுக்கு சொந்தம். பாட்டில் அவர் பாடுகிற ஹை பிட்ச்சும் சரி ஆண் குரல் கடைசியில் சில வரிகளை வேறு மாதிரி பாடுவதும் சரி மிக ரசிக்க வைக்கின்றன. அட்டகாசமான டூயட்.  

****
மொத்தத்தில் மூணு பாட்டு சூப்பர். ஒன்று ஜஸ்ட் ஓகே. ஒன்று சொதப்பல்.

சூர்யா - ஹாரிஸ் ஜெயராஜ் கெமிஸ்ட்ரி மீண்டும் ஒரு முறை வொர்க் அவுட் ஆகியிருக்கு !

Tuesday, September 25, 2012

தாண்டவம் பாடல்கள் எப்படி? ஒரு அலசல்

விக்ரம், அனுஷ்கா, சந்தானம், எமி ஜாக்சன் நடிப்பில் வெளிவருகிறது தாண்டவம். இதில் அனுஷ்கா & சந்தானம் எனக்கு மட்டுமல்ல,தமிழர்கள் பலரின் favourite ! படம் இந்த வாரம் வெள்ளியன்று ரிலீஸ் !

தாண்டவம் இசை அமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷுக்கு 25 வயதில் 25 ஆவது படமாம். முன்பெல்லாம் நூறாவது இருநூறாவது படத்தை வைத்து தான் ஹைப் கிரியேட் செய்வார்கள். இப்போது பத்தாவது படம், 25 ஆவது படம் என்றெல்லாம் ஹைப் ஏற்றுகிறார்கள் போல !

ஜீ. வி. பிரகாஷ் பொறுத்த வரை நிச்சயம் ஒரு அட்டகாசமான இசை அமைப்பாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. செல்வராகவனுடன் இணைந்து இயங்கிய இரு படங்களிலும் (ஆயிரத்தில் ஒருவன் & மயக்கம் என்ன) ரொம்ப அருமையான இசை தந்திருந்தார். இயக்குனர் விஜய்யின் முந்தைய படங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு சில பாடல்கள் அருமையாய் செய்திருந்தார் ஜீ. வி. பிரகாஷ்.

தாண்டவம் பாடல்கள் எப்படி இருக்கு? வாங்க பார்க்கலாம் !

அனிச்சம் பூவழகி


பாடியவர்கள்: சின்ன பொண்ணு, வேல் முருகன்  , GV  பிரகாஷ் 



ஏற்கனவே டிரைலரில் இந்த பாட்டின் க்ளிப்பிங்க்ஸ் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். தானை தலைவி அனுஷ்காவை " அனிச்சம் பூவழகி" என்று வர்ணித்து பாடும் பாட்டு என்பதால், டிரைலர் பார்த்து பாட்டை கேட்க ரொம்ப ஆர்வமாய் இருந்தேன்.

பாட்டு ஆரம்பிக்கும் போதே பாட்டிகள் பாடுவது அப்படியே " ருக்குமணி ருக்குமணி என்ன சத்தம்" மூடை கொண்டு வருகிறது.

நடு நடுவில் " வாராண்டி .. வாராண்டி " என பாட்டிகள் பாடி கொண்டே இருக்கிறார்கள்.

நடுவில் சரணம் ஒன்று பாடுவதும் பாட்டி குரல் தான். பாட்டு ஆஹோ ஓஹோ எல்லாம் இல்லை. பம்பாய், ராவணன் உள்ளிட்ட படங்களில் உள்ள அதே சூழலில் உள்ள இன்னொரு பாட்டு. ஜஸ்ட் ஓகே !

அதிகாலை பூக்கள்

பாடியவர்: GV  பிரகாஷ் 

ஒரே பல்லவி கொண்ட சின்ன பாட்டு. விஜய் டிவி யில் வந்தபோது விக்ரம் " ஏன் முழு பாட்டா போடலை? " என்று இசை அமைப்பாளரிடம் செல்லமாய் கோபித்து கொண்டார். உண்மை தான் ! முழு பாட்டாய் வந்திருந்தால் இன்னும் அதிக இம்பாக்ட் தந்திருக்க கூடும் !

நல்ல வரிகள். அருமையான மெலடி. ஆனால் சில வரிகளில் - ஒரே நிமிடத்துக்குள் முடிந்து விடுகிறது பாட்டு !

சிவ தாண்டவம்

பாடியவர்: எஸ். பி பாலசுப்ரமணியம் 

உடுக்கை எல்லாம் அடித்து செம ஸ்பீடா போகுது பாட்டு. ஆனா ஒப்புவிக்கிற மாதிரி இருக்கே ஒழிய எந்த விதத்திலும் ஈர்க்க வில்லை. அந்த பாட்டை பற்றி எழுதும் போது சில முறையாவது கேட்கணும் என்கிற ஒரே காரணத்துக்காக மட்டும் கஷ்டப்பட்டு கேட்டேன். படத்தில் ஒரு வேளை முக்கிய கட்டத்தில் மாண்டேஜ் பாட்டாக வர கூடும். ஆனால் தனியாய் ஒரு முறை கூட கேட்க முடியலை. வெரி சாரி !

உயிரின் உயிரே

பாடியவர்: சைந்தவி , சத்ய பிரகாஷ் 

கஜலுடன் துவங்குகிறது பாட்டு. சைந்தவி குரல் உருகி உருகி குழைகிறது. எடுத்தவுடன் அதிகம் கவராத இந்த பாட்டு, 3, 4 முறை கேட்க கேட்க ரொம்ப பிடித்து விட்டது. அருமையான மெலடி. படத்திலும் இந்த பாட்டுக்கு தலைவியே நடித்துள்ளார் !  !

யாரடி நீ மோகினி போலவே

பாடியவர்கள்: ராகுல் நம்பியார், மேகா

மேற்கத்திய பாணியில் (Western) ஒரு ஸ்பீடான பாட்டு. பாடல் வரிகள் ஓரளவு ஈர்க்கிறது. எமி ஜாக்சனை வைத்து எடுக்கப்பட்ட இந்த பாடல் அவ்வப்போது டிவியில் காண்பிக்கிறார்கள். அதில் பார்த்த பின் தான் பாட்டு ஓரளவு பிடித்தது. தனியாய் கேட்க ஜஸ்ட் ஆவேரேஜ் சாங்.

ஒரு பாதி கதவு நீயடி

பாடியவர்கள்: ஹரிசரண், வந்தனா

மிக தாமதமாக தான் (நண்பர்கள் சுட்டி காட்டிய பிறகு) இந்த பாட்டு கேட்டேன். முதல் முறை கேட்கும் போதே கவர கூடிய அருமையான மெலடி. ஹரிசரண் இப்போது கலக்கி கொண்டிருக்கிறார். கும்கியிலும் ஒரு அட்டகாசமான பாட்டு பாடியிருக்கிறார்.

தாண்டவத்தின் ஹிட் பாடல்களில் "ஒரு பாதி கதவு நீயடி" யும் ஒன்று

**************
5 பாட்டும் ஒரு குட்டி பாட்டும் மட்டுமே இருக்கிறது. படம் ஒரு ஆக்ஷன் படம் என்று நினைக்கிறேன். அந்த விதத்தில் நிறைய பாடல்கள் படத்துக்கு ஒரு முட்டு கட்டையாய் இருக்கலாம் என்பதால் இந்த ஏற்பாடு போலும் !

பைனல் ரிசல்ட்: உயிரின் உயிரே  & ஒரு பாதி கதவு நீயடி
: வெரிகுட். யாரடி நீ மோகினி போலவே & அதிகாலை பூக்கள்: கேட்க கேட்க -ஓகே !

Saturday, September 8, 2012

இளையராஜா - நீதானே என் பொன்வசந்தம் !

ராஜா கடைசியாய் எந்த படம் நன்கு இசை அமைத்தார் ? நந்தலாலா, அழகர்சாமியின் குதிரை என்று சொல்லாதீர்கள். நான் சமீபத்தில் அவர் இசை அமைத்த படங்கள் பெயர் கேட்கலை. நன்கு இசை அமைத்த படங்கள் கேட்டேன். ராஜா standard-க்கு பாடல்கள் கொண்ட படங்கள் ! மேற்சொன்ன இரு படத்திலும் பின்னணி இசையில் அதே ராஜா தான் ! ஆனால் பாடல்கள் ஹும் !

நீதானே என் பொன் வசந்தம் - நிச்சயம் சூப்பர் டூப்பர் எல்லாம் இல்லை. ஆனால் கடந்த சில வருடங்களில் ராஜா இசை அமைத்த படங்களில் இப்பட பாடல்கள் ஓரளவு ஓகே.

பாடல்கள் பற்றி பொதுவான சில கருத்துகள் :

சில பாடல்கள் 80-களை நினைவு படுத்துது (படிக்கல மாமு) சில இந்த காலத்துக்கு ஏற்றபடி இருக்கு. யுவன் நிறைய பாடல்கள் பாடியதாலோ என்னவோ ஆங்காங்கு இசை யுவனோ என்கிற மயக்கம் வருகிறது

பாடல் வரிகள் புரிகிற மாதிரி இருப்பதும், இசை பாடல் வரிகளை dominate-செய்யாவிடினும் இனிமையாய் இருப்பதும் ராஜா ஸ்பெஷல் !

ராஜாவின் பாடல்களில் பொதுவாய் வயலின் மற்றும் பிளூட் இணைந்து கலக்கும். இப்பட பாடல்களில் வயலின் ஆங்காங்கு கேட்டாலும் பிளூட் மிக அரிதாகவே உள்ளது 

இனி ஒவ்வொரு பாட்டாய் அலசுவோம்   




1 .சாய்ந்து சாய்ந்து...

பாடியவர்:  : யுவன்ஷங்கர் ராஜா / ரம்யா.என்.எஸ்.கே

அருமையான மெலடி. முதல் முறை கேட்கும் போதே பிடிக்கிற மாதிரி ஒரு பாட்டு. யுவன் மற்றும் ரம்யா குரல்கள் ஈர்க்கிறது. Very attractive !!

தாயை போல ஒரு பெண் தேடினேன் என ஆண் சொல்ல, தந்தை மற்றும் தோழனாக உனை பார்க்கிறேன் என பெண் சொல்ல, மெட்டு, இசை வரிகள் என எல்லா பக்கதிலும் கவரும் பாட்டு இது !

2. சற்று முன்பு ...
பாடியவர்:  ரம்யா என்.எஸ்.கே

பெண் குரலில் ஒலிக்கும் செம மெலடி. ஆனால் பாடல் துவக்கத்தில் ஏன் அப்படி ஒரு மிரட்டும் இசை? போக போக பாடல் நம்மை ஈர்த்து விடுகிறது. மிக மிக மெதுவாய் செல்லும் பாட்டு படமாக்க challenging ஆக இருந்திருக்கும்.சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்சிகளில் இப்பாடல் வரும் காலங்களில் நிச்சயம் பாடப்படும் !

3. என்னோடு வா வா ...

பாடியவர்:  கார்த்திக் 


நண்பர் ஒருவர் முக நூலில் சொன்ன மாதிரி கிறித்துவ மத பிரசங்க பாட்டு மாதிரி இருக்கு பல்லவி.  சரணம் நிச்சயம் ஓகே

4. வானம் மெல்ல ...
பாடியவர்:  இளையராஜா / பெலா செண்டே

இளையராஜா இந்த ஆல்பத்தில் பாடிய ஒரே பாட்டு. அவரே பாடிய வேறு எதோ பாடல்களை ஞாபகம் தந்தாலும் கேட்க கேட்க நிச்சயம் பிடிக்கிறது இந்த பாட்டை  !

5. முதல் முறை ...
பாடியவர்: சுனிதி சௌஹான்

பழைய காலத்து சூர சம்ஹாரம் பட பார்ட்டி சாங் மாதிரி இருந்தாலும் இந்த பாட்டில் என்னமோ இருக்கு ! எதோ ஒன்று கவரவே செய்யுது !

6. பெண்கள் என்றால் ...

பாடியவர்: யுவன்ஷங்கர் ராஜா

பெண்களை திட்டி வரும் சற்றே சோகப்பாட்டு. ஏனோ நான்கைந்து முறை கேட்டும் என்னை கவரவே இல்லை. பாடலில் கிட்டார் இசை மட்டுமே கவர்கிறது. படத்தில் நல்லதோர் இடத்தில் பாடல் அமைந்தால், நமக்கு பிடிக்க சற்று வாய்ப்பு இருக்கு. இப்போதைக்கு எனது விருப்ப பாடலில் நிச்சயம் இது இல்லை

7. படிக்கல மாமு ...
பாடியவர்: சுராஜ் ஜகன் / கார்த்திக்

காலேஜ் கேம்பஸில் பாடும் பாட்டு. பழைய பாட்டை கேட்கிற மாதிரி இருக்கு. ஈர்க்கவே இல்லை.

8. காற்றை கொஞ்சம் ...

பாடியவர்: கார்த்திக்


இதுவும் கூட சில முறை கேட்ட பிறகு தான் பிடிக்கும் பாடல் . சரணத்தில் கார்த்திக் ஒரு வரி பாட, உடனே அவர் பாடியதை பியானா போன்ற மறுபடி வாசிப்பது மிக இனிமையாய் இருக்கு. ஆனால் சரணம் இரண்டு வரி பாடிய பின், அவர் பாடும் போது சேர்ந்து அதே instrument வாசிக்க ஆரம்பிக்கும் போது அந்த அளவு அருமையாய் இல்லை.

ஹீரோ - ஹீரோயினுக்குள் காதல் துவங்கிய நேரம் வருகிற பாடல் : நிச்சயம் கெளதம் மிக அழகாய் காட்சி படுத்தியிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாடலை திரையில் காண வெயிட்டிங் !
****
நிறைவாக: காதலுக்கு மரியாதை போல கேட்க கேட்க பாடல்கள் எல்லாம் பிடிக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. ராஜாவிடம் நல்ல பாடல்கள் வாங்கிய கெளதமுக்கு ஸ்பெஷல் நன்றிகள் !
Related Posts Plugin for WordPress, Blogger...