கிரிக்கெட் கார்னர்
நேத்து இந்தியா VS இலங்கை மேட்சில் இந்தியாவின் பேட்டிங் அசத்தல். குறிப்பா விராத் கோலி ! என்னா அடி ! Fantastic ! 40 ஓவருக்குள் 320 ரன் அடிப்பது மிக மிக சிரமம். இதை எவ்வளவு எளிதாக அடித்தார்கள் பாருங்கள் !
நிற்க. கொஞ்ச நாள் கழித்து இந்த மேட்ச் பிக்ஸ் ஆன ஒன்று என செய்தி வந்தால் ஆச்சரிய பட ஒன்றுமில்லை ! BCCI is so powerful !
ஏசியா கப் டீமில் கோலியை வைஸ் கேப்டன் ஆக்கிட்டாங்க. பொதுவா வைஸ் கேப்டனா இருக்கும் போது எல்லாரும் நல்லா ஆடுவாங்க ( உ-தா: அசார் கேப்டன்சியில் சச்சின், கங்குலி கேப்டன்சியில் டிராவிட்) ஆனா கேப்டன் ஆனா தான் ஆட்டம் சொதப்பிடும். கேப்டன் ஆகியும் நன்கு ஆடுவது தோனி தான். எனக்கு தெரிந்து இப்போது உள்ள நபர்களில் தோனியே சரியான கேப்டன் என தோன்றுகிறது.
சினிமாபாடல்கள் பற்றி விகடனில் ராஜு முருகன்
சினிமா பாடல்களை ரசிக்காதோர் யார் உள்ளார் சொல்லுங்கள்? இத்தகைய சினிமா பாடல்கள் பற்றியும் சிறு வயதில் அந்த பாடல்களை தங்கள் வாழ்வோடு சேர்த்து நேசித்த சிலர் குறித்தும் ராஜூ முருகன் விகடனில் ஒரு பகுதி எழுதியிருக்கார் பாருங்கள்... அசத்தல் ! வட்டியும் முதலும் தொடரின் -29ஆவது அத்தியாயத்தில் இந்த பகுதி எழுதி உள்ளார். (விகடன் பிப்ரவரி 29 தேதி இட்ட இதழ்). வாசித்து பாருங்கள் ! ஹும் பதிவு எழுதும் நாமெல்லாம் எழுத்தாளர் என சொல்லி கொள்ளவோ, நினைக்கவோ கூடாது ! சுகா போல, ராஜூ முருகன் போல எழுதுவோர் மட்டும் தான் அப்படி சொல்லி கொள்ளலாம் ! என்னா மாதிரி எழுத்து !
சம்பவம் : ஆம்புலன்ஸ் முன் ஓடிய ஆள்
மாலை நேரம். வேளச்சேரி சிக்னலில் வண்டியில் காத்திருக்கிறேன். ஒரு ஆம்புலன்ஸ் சிக்னலை கடக்கிறது. அப்போது அதற்கு குறுக்கே புகுந்து பஸ் நிறுத்தத்துக்கு ஓடினார் ஒருவர் ! "சிவப்பு விளக்கையும் மதிக்காமல், ஆம்புலன்சையும் மதிக்காமல் ஓடுறியே ! உன் மேலே அந்த ஆம்புலஸ் மோதினா, நீயும் உள்ளே ஏறி போக வேண்டியிருக்கும் தம்பி"
சரி சரி ! நம்மளை மாதிரி ஹவுஸ் பாசுக்கு பயந்த ஆள் போல இருக்கு; அதான் அவசரமா வீட்டுக்கு ஓடுறாரு :))
அம்மாவுக்கு 64- அடி கட் அவுட்
இதுவும் வேளச்சேரி குறித்த செய்தி தான். சென்ற வருடம் "ஜெ" அவர்கள் பிறந்த நாளுக்கு (அப்போ அவர் முதல்வர் இல்லை ) 63 அடியில் கட் அவுட் வைத்திருக்கார் வேளச்சேரி பகுதி மூர்த்தி. வைத்த சில நிமிடங்களில் அது முறிந்து விழுந்து விட்டது. இரவென்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. இரவோடு இரவாக கட் அவுட் அப்புற படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வருடமும் 64- அடி கட் அவுட் வைத்தார் மூர்த்தி. இம்முறை தேவையான பேஸ்மன்ட் தந்து உறுதியாக செய்து விட்டார். என்ன செலவு தான் கொஞ்சம் ஜாஸ்தி ஆகிடுச்சு. வேளச்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கடைகளில் வசூல் ஆளுக்கு 20,000 என்று நம்ப தகுந்த வட்டாரம் மூலம் தகவல் வந்தது.
எஸ். ராவும் நண்பன் தேவ குமாரும்
எஸ். ராவை நண்பன் தேவ குமாரும், நானும் சந்தித்ததை ஏற்கனவே பகிர்ந்திருந்தேன். எஸ். ரா இம்முறை டில்லி சென்றபோது தேவா அவருடன் நீண்ட நேரம் செலவிட்டுள்ளான். மேலும் எஸ். ரா ஒரு நாள் இரவு உணவுக்கு தேவா வீட்டுக்கும் வந்திருந்தாராம் ! இது பற்றி தேவா வீடுதிரும்பலில் ஒரு பதிவு எழுதுவார் என எதிர்பார்க்கிறேன் !
அம்மா
அம்மா டிஸ்சார்ஜ் ஆகி அண்ணன் வீடு வந்து விட்டார். உடல்நிலை சற்று தேவலாம். பிரார்த்தனை என்பது எத்தனை வலிமையானது என்று மீண்டும் ஒரு முறை உணர்கிறேன். பதிவில் அம்மா உடல்நிலை பற்றி எழுதி விட்டு என்னுடன் போனில் பேசிய அனைத்து பதிவர்களும் " அம்மாவுக்கு ஒன்றும் ஆகாது. கவலை படாதீர்கள். நாங்கள் வேண்டி கொள்கிறோம்" என்றனர். என்னுடைய ஆறுதலுக்கு தான் சொல்கிறார்களே தவிர அம்மா பிழைப்பது மிக கடினம் என நினைத்தேன். அமைதி அப்பா போனில் சொன்னது போல் " பிழைக்கவே பிழைக்காது என சொல்வோர் பிழைப்பதும் நடக்கும். சாதாரண கேஸ் இறப்பதும் நடக்கும்" ! அம்மா நலனுக்காக பிரார்த்தனை செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி !
சூப்பர் சிங்கர் ஜூனியர் கார்னர்
சென்ற வாரம் " காதலில் சொதப்புவது எப்படி" டீம் சூப்பர் சிங்கர் ஜூனியரில் வந்தார்கள். அமலா பால், நிகழ்ச்சியை தொகுக்கும் மா. கா. பா ஆனந்தை கட்டி பிடிக்க, "இது எனக்கு பொறாமை ஆக இருக்கு" என்றான் ஒரு பன்னிரண்டு வயது சிறுவன். "உனக்கு கஷ்டமா இருக்கா?" என்று கேட்ட அமலா பால், அவனை கட்டி பிடித்ததுடன் கிஸ்சும் செய்ய, அந்த 12 வயது பையன், மயங்கி விழுகிற எபக்ட் தந்தான். மத்த பசங்களும் அமலா பால் முத்தத்துக்கு ஏங்குற மாதிரி காட்டினாங்க. சிறுவன் என்று அன்போடு கொடுக்கும் முத்தம் வேறு. இரண்டாங் கேட்டான் வயதான 12 வயது பையனுக்கு முத்தம் தந்து, அவன் கிறக்கத்தில் மயங்கி விழுகிற மாதிரி காட்டி சின்ன பசங்களை விஜய் டிவி கெடுக்கணுமா?
ஏங்க.. நான் சரியா தான் பேசுறேனா??