Wednesday, September 10, 2008

கற்றது தமிழ் - ஒரு தாமதமான விமர்சனம்

சமீபத்தில் TV-யில் கற்றது தமிழ் படம் பார்த்தேன். என் மனதில் உடனே தோன்றிய கேள்வி " ஏன் இந்த படம் ஓடவில்லை? நம் மக்களின் ரசனை என்று தான் மேலாகும்?"

தமிழ் cinema-வில் சில குறிப்பிட்ட formula-க்கள் உண்டு. பழி வாங்கும் கதை; காதலன் - காதலி படம் முழுதும் காதலித்து கடைசி ரீலில் சேரும் கதை.. (எல்லா படமும் கல்யாணம் ஆவதோடு முடிந்து விடும் .. அதன் பிறகு நடப்பதை பேசும் படங்கள் மிக குறைவு.. அலை பாயுதே அப்படி பேசிய ஒரு படம்....)

கற்றது தமிழ் ஒரு formula படம் அல்ல.. இது வரை நாம் பார்த்திராத, யோசித்திராத ஒரு கதை.. தமிழ் படித்த ஒருவன் வாழ்க்கை இன்றைய சூழலில் என்ன ஆகிறது என்பது தான் ஒரு வரி கதை சுருக்கம்..

இயக்குனர் ராம் சுப்பு பாலு மஹேந்திரா -விடம் Assistant Director ஆக இருந்தவராம்.. இயுக்குனர் பாலா, அமீர் படங்களின் ரேஞ்சில் உள்ளது இந்த படம்...ஜீவா, புதுமுகம் அஞ்சலி ( Heroine), கருணாஸ், அழகம் பெருமாள் (இவரும் ஒரு இயக்குனர்) என படத்தில் நம்மை பாதிக்கும் characters- பல உள்ளன..

Surprise packet- Heroine அஞ்சலி -தான். அழகில் ஓகோ என்று இல்லா விட்டாலும் நடிப்பில் அசத்தி விடுகிறார்..ஒவ்வொரு முறை அவர் "நெசமா தான் சொல்றீயா?" என ஜீவா- வை கேட்பதும் அதற்கு ஜீவா தலை ஆட்டும் விதமும் சிறு வயது முதல் ஒரே மாதிரி காட்டி இருப்பது செம அழகு..

ஜீவா பள்ளி மாணவனாக, பின் கல்லூரி மாணவனாக, ஆசிரியராக, psycho- வாக என பல பரிணாமங்களில் வருகிறார்.. கடும் உழைப்பு தெரிகிறது..

வசனம் மிக இயல்பு.. "என்ன பேரு? பிரபாகரனா?" பேரே பிரச்சினையான பேரா இருக்கே?" "நான் பத்து மணிக்கு தூங்கி ரொம்ப நாள் ஆச்சு.. நீ இருக்க தைரியத்தில் இன்னிக்கு தூங்குவேன்.. disturb பண்ணாதே.." (இந்த வசனம் எத்தனை விஷயங்களை புரிய வைக்கிறது.... மன நலன் சரி இல்லாதவர்கள் பெரும்பாலும் இரவுகளில் தூங்குவதில்லை என்பது ஒன்று.. அப்படி பட்டவர்களும் தன்னை நேசிக்கும் ஒரு துணை இருந்தால் சரி ஆக முடியும் என்பது மற்றொன்று.. )

கதை நேராக ஒரே கோட்டில் சொல்ல பட வில்லை... முன்னும் பின்னுமாக .. மாறி மாறி பயணிக்கிறது.. இது சில நேரம் குழப்பம் ஆனாலும், பெரும்பாலும் வித்யாசமாகவே உள்ளது.

படத்தின் எந்த character-ம் பாட வில்லை.. சில நல்ல melodious பாடல்கள் உள்ளன. அவை எல்லாமே பின்னணியில் ஒலிப்பவையாக, கதையை நகர்த்த உதவுகின்றன..

படத்தில் ஆரம்பம் முதல் ஆங்காங்கே வரும் பல சிறு விஷயங்களை கடைசி பதினைந்து நிமிடங்களில் மறு படி இணைப்பது - இயக்குனரின் புத்திசாலி தனத்தை காட்டுகிறது...

Climax - மனதை பிசைகிறது. சோகமான முடிவுதான்.. எப்படியும் பல கொலைகள் செய்த ஒருவன் கடைசியில் இறந்து தான் ஆக வேண்டும் என நாமே தயாராக உள்ளோம்.. .. ஆயினும் சோகமான ஒரு முடிவை கவிதை போல் மாற்றி காட்டி இருப்பது அருமை.. இயக்குனர் மஹேந்திரன் touch தெரிகிறது….

இனி படம் ஏன் ஓடாமல் போனது என்பதற்கு எனக்கு தோன்றிய காரணங்கள்...

1.படம் மெதுவாக செல்கிறது. மேலும் கதை சொல்லும் விதத்தில் உள்ள shifting, சாதாரண பார்வையாளனுக்கு குழப்பம் தந்திருக்கலாம். ரத்தம், வன்முறை, சோகம் பெண்களை தியேட்டர் பக்கம் வராமல் தடுத்திருக்கலாம்...

2. Hero - கொல்வது எல்லாம் சாதாரண மனிதர்கள்.. மிக சிறிய தவறு செய்பவர்களை.. சில நேரம் எந்த தவறும் செய்யாத டாக்டர் போன்றவர்களையும் கொல்கிறார்.. இது அந்த கதா பாத்திரத்துடன் நம்மை ஒன்ற முடியாமல் செய்கிறது..

3. IT employees-ஐ பெரும் குற்றவாளிகள் போல் காட்டியிருப்பது... அவர்களுக்கு அதிக சம்பளம் தரபடுவதன் காரணம் Director-க்கு ஏன் புரிய வில்லை? Atleast 70 % of IT jobs, North America-வில் இருந்து தான் வருகிறது.. அமெரிக்கர்கள் பொதுவாகவே இந்த வகை வேலைகள் செய்வதில் அதிக விருப்பம் இல்லாதவர்கள்.. அப்படி செய்தால் அதற்கு அதிக சம்பளம் கேட்பார்கள்.. ஒரு மணி நேரத்துக்கு சுமார் 60 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 2500 ரூபாய்) .. இதையே ஒரு மாதத்திற்கு கணக்கிட்டு பாருங்கள்.. சில லட்சங்களாவது வரும்.. அதற்கு பதில், அதில் பாதி பணம் இந்திய கம்பெனி-க்கு தர, அவர்கள் Employee-க்கு நல்ல ஒரு சம்பளம் தந்து வேலை வாங்கி விடுகின்றனர்.. Employee- க்கு நல்ல சம்பளம்; கம்பெனி-க்கு profit; American company-க்கும் நிறைய savings; IT employee-க்கு அதிக சம்பளம் தரா விடில், லாபம் அடைய போவது இந்திய கம்பெனி நடத்தும் promoters- தான்..

******************

குறைகள் மிக சில தான்.. அவற்றை தவிர்த்து பார்த்தால், இது ஒரு நல்ல படமே..

உங்களில் எத்தனை பேர் இந்த படம் பார்த்தீர்கள் என அறியேன். ஆனால் TV or CD-யில் ஒரு முறை பாருங்கள்...வித்தியாசமான ஒரு அனுபவத்திற்காக..
Related Posts Plugin for WordPress, Blogger...