அத்தியாயம் - 1: கதை
ஸ்பாஸ்டிக் குழந்தை ஒன்றை தந்தை மம்மூட்டி தனியாக வளர்க்கும் பேரன்பே கதை !
அத்தியாயம் - 2: நடிப்பு
மம்மூட்டி நன்றாக நடித்தார் என்பது விராட் கோலி நன்றாக ஆடினார் என்பதை போல... இரண்டும் நடக்காவிடில் தான் ஆச்சரியம்.
படம் முழுவதும் மம்மூட்டி கதை சொல்வதாகவே - நாவல் பாணியில் நகர்கிறது
வழக்கம்போல் மிகையில்லாத நடிப்பு.. அற்புத பாத்திரமாக கொண்டு செல்லும் இறுதி காட்சிக்கு முன் மம்மூட்டி செய்ய இருக்கும் காரியம் நம் மனது பதைத்து விடுகிறது
சோகமான முடிவாக இருக்குமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்க, மிக அழகாக படத்தை நிறைவு செய்கிறார்கள்.
மகளாக வரும் சாதனாவிற்கு தேசிய விருதுக்கு வாய்ப்புகள் அதிகம். ஸ்பாஸ்டிக் பெண்ணாகவே பார்க்கும் வண்ணம் நிறைவு !
சிறு சிறு பாத்திரங்கள் பல அசத்துகின்றன. குறிப்பாக ஸ்பெஷல் ஸ்கூலில் வரும் பையன் ஒருவன் பாத்திரம் .. அற்புதம் !
அஞ்சலி பாத்திரம் மிக புதிரானது. மிக மெதுவாக (தூக்கம் வரும் வாய்ப்பு அதிகம்) துவங்கும் அரை மணிக்கு பின் அஞ்சலி வந்ததும் தான் கதை சுவாரஸ்யமாகிறது
பாபுவை வீட்டிற்கு அழைத்து வரும் மம்மூட்டி அவரிடம் அஞ்சலி பற்றி தொடர்ந்து பேசுவதும், அவர் உம் கொட்டி கொண்டே இருப்பதும்... தியேட்டர் கலகலக்கிறது

அத்தியாயம் - 3: ஒளிப்பதிவு, இசை இன்ன பிற
முதல் பாதியில் ஒளிப்பதிவு நின்று பேசுகிறது. பாடல்கள் நன்று எனினும் - ராம் படத்தில் நா. முத்துக்குமார் இல்லாத வெறுமை மனதை என்னவோ செய்கிறது.
அத்தியாயம் - 4: ராம்
இப்படிப்பட்ட கதை எடுக்க நினைத்த தைரியம் பாராட்டுக்குரியது
இரண்டாம் பாதி - மனதை கனக்க செய்துவிடும். மனதில் பாரத்தை ஏற்றிகொண்டே சென்று இறுதியில் இரண்டே நிமிடத்தில் ஒரு தீர்வு சொல்லி நம்மை ரிலாக்ஸ் ஆக்குகிறார் ராம்
படம் கமர்சியல் ஹிட் ஆகுமா என்பது சந்தேகமே. விருதுகளை வாங்குவது மட்டும் நிச்சயம் !
பேரன்பு .. நல்ல/ வித்தியாச சினிமாவை விரும்புவோருக்கு மட்டும் !